ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் - ரோமானியர்கள் சமூதாயங்களில் மக்கள் தொகையில் நான்கில் ஒருபகுதியினர் அடிமைகளாக இருந்திருக்கின்றனர். அடிமைகள் என்பவர்கள் மனிதர்களாக நினைக்க முடியாதவர்களாகவும், பொருட்களை போலவும் கருதப்பட்டனர். அவர்களின் எஜமானர்கள் அடகு வைக்கவும், விற்கவும், வாங்கவும் செய்யலாம். 

 

 

அடிமைகளை கட்டிப்போட்டு வைத்திருப்பது, கொடுரமாக சித்திரவதை செய்து பார்ப்பது { உதாரணமாக அந்த காலக்கட்டங்களில் ஆயுதமாக ஈட்டிகள் செய்யப்பட்ட போது அதன் கூர்மையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு அடிமைகளின் மீது ஈட்டியை பாய்ச்சுவது.....} போன்ற கொடுர சித்திரவதைகளும் செய்யப்பட்டனர். அடிமைகளை என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம். அரசு தலையிடாது. 

 

போர்களில் உயிருடன் பிடிக்கப்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், சமூதாயத்தின் இழிந்த வேலைகளைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டனர். உலகம் முழுவதும் இப்படி  அடிமைகளால் நிரம்பி இருந்தது. இந்தியாவில் ஆதிதிராவிடர், அரிஜனங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தனர். மிகச் சிறுபான்மை இனத்தவர்கள் {பார்ப்பனர்} அடிமைகளாக நடத்தியிருக்கிறார்கள். (இந்தியாவில் மட்டும் ஆங்கிலேயர் ஆட்சி வந்த பின்பும் அடிமைகளில் நிலைமைகளில் எவ்வித மாற்றமும் இல்லாதிருந்திருக்கின்றது) 

 

ஐரோப்பா - அமெரிக்கா - ரஷ்யா சேர்ட் { Sert } என்ற குடியானவர்கள் சுதந்திரக் குடிமக்கள் என்றாலும் அக்காலக்கட்டங்களில் தனக்கென்று சொந்தமாக வீடோ அல்லது பொருட்களோ எதுவும் உடைமையாக வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்திருக்கிறது. மிருகங்கள் அளவிலேயே அவர்களும் நடத்தப்பட்டிருக்கின்றார்கள். மாடு, குதிரை, நாய், பன்றி என வீடுகளில் ஓதுக்குப்புறமாக மிருகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கொட்டைகளில் மிருகங்களுடன் இருந்திருக்கின்றனர். அடிமைகளை இம்முறையில் நடத்திய நிலப்பிரபுத்துவ முறையின் Feudalism எனலாம்.

 

கிரேக்கம் - ரோமானியர்  அடிமைமுறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் காணத் தொடங்கியிருக்கிறது. அடிமைகளுக்கு தயக்கத்தோடு சில உரிமைகள் வழங்கப்பட்டது. அடிமைகள் பணக்காரர்களின் வீடுகளில் வேலையாட்களாகவும், வயல்களில் உழுபவர்களாகவும் உருமாற்றம் அடைந்தார்கள். 

 

அடிமை சமூதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது சமயங்களாலேயோ அல்லது சமயநெறிகளாலோ அல்ல. இவை மனிதனை இன்னும் அதளபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருந்தன. சமயங்களால் நேற்றும், இன்றும் அல்லது என்றுமே சமூகத்திற்கு கேடானதாகவும், மக்களை கூறு போட்டு பிரித்து வைத்திருக்கவும், கலவரங்கள், பிரச்சனைகளை உருவாக்க மட்டுமே முடியுமே தவிர அதனால் சமூகம் எந்த நன்மையையும் அடைந்துவிடாது. 

 

Human Values - என்னும் மானுட மதிப்பீடு 2 - நிலைகளை மனித சமூதாயத்தின் அறநெறிகளாக சொல்லப்படுகின்றது. 

 

* ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சில ஆதார உரிமைகள் உண்டு என்கிறது அறநெறி. மனித உயிருக்கு கண்ணியத்தோடும் வேற்று மனிதனின் {அதாவது ஆதிக்க சிந்தனைக் கொண்டு அடக்க முற்படும் போக்கு} அடக்குமுறைகள் இன்றி சுதந்திரமாக செயல்படவும் உடைமை சமய நம்பிக்கைகள்  கருத்து உரிமை - இவற்றின் சிந்தனைகளுக்கும் செயல்படுதல்* Rule of Law - தமிழில் ´அரசியல் ஒழுக்கம்´ எனலாம். இவை மனிதனுக்குப் பொருளாதாரச் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்கின்றது. ஒரு நாடு வேற்று நாட்டோடு போர் செய்து கொலை செய்வது, கொள்ளை அடிப்பது போன்ற ஒழுக்கமற்ற முறைகளை எதிர்க்கிறது. அரசியல் சட்டம் சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. தனி மனித விருப்பு வெறுப்புக்கு எதிராக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

 

இவையே மனித சமூகத்தை ஓர் ஒழுங்குக் கட்டுப்பாடுகளாக எழுதப்படாத சட்டமாக வழிநடத்திச் சென்றுக் கொண்டிருக்கின்றது. மனித வாழ்வுகளை தொன்று தொட்டு ஆராய்ந்து பார்த்தால் கண்ணியத்தோடு வாழவும், பிறரால் முறையின்றிக் கொடுமைகளுக்கு ஆளாகாமல் சுதந்திரமாக இயங்கவும், உயிர் உடைமை சமய நம்பிக்கைகள் கருத்து உரிமை - இவற்றுக்கு மதிப்பளித்து செயல்படவும், அடிப்படை சுதந்திரத்தை ஒவ்வொரு சமூகமும் நடைமுறைப்படுத்துகின்றது. அப்படி நடைமுறைப்படுத்தாது இன்னொரு சமூகத்தின் நம்பிக்கைகளையோ, சமய நம்பிக்கைகளையோ அல்லது சமூகம் சார்ந்த நம்பிக்கையையோ அடக்குமுறைகளோடு செயல்படுத்த முற்படுவதை அரசியல் அறம் { அல்லது ஒழுங்கு ஆங்கிலத்தில் Rule of Law     என்று குறிப்பிடுவார்கள் }

தமிழச்சி

06/10/2008