ஒரு பொருளை உபயோகப்படுத்திவிட்டு தேவை முடிந்ததும் தூக்கியெறிவதை நாம் பார்க்கிறோம். கம்யூட்டரில் இருந்து கப்பல் வரை.. நாம் பொருட்களை மட்டும் தூக்கிப்போடுவதில்லை. சக மனிதர்களை கூட நாம் வெறும் பொருளாக பயன்படுத்தி தூக்கியெறிகிறோம். அந்த மாதிரி சில மனிதர்கள் தான் பாலீயல் தொழிலாளிகள் என்ற அறிமுகத்துடன் தொடங்குகிறது நளினி ஜமீலாவிடம் ராஜ் தொலைக்காட்சியில் நேர்காணல்!  

நளினி ஜமீலா கேரளத்தைச் சேர்ந்தவர். 32 - வருடங்களாக பாலீயல் தொழிலாளியாக இருப்பவர். பாலீயல் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார். தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், துரோகங்கள், பாலீயல் தொழிலை தேர்ந்தெடுத்த சூழல் என தனக்கு ஏற்பட்ட சம்பவங்களை ‘லைமீக தொழிலாளியினுட ஆத்ம கதா’ என்ற தலைப்பில் மலையாளத்தில் புத்தகமாக எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். 
தமிழிலும் இவருடைய புத்தகத்தை மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பாலீயல் தொழிலாளியின் சுயசரிதை என்னும் தலைப்பு.மிக பரபரப்பாக தமிழக்ததிலும் இப்புத்தகம் விற்பனையானது. ராஜ் தொலைக்காட்சியும் ரோஸ் நிகழ்ச்சியின் மூலம் நளினி ஜமீலாவை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. 
நிகழ்ச்சியைக் காண இந்த இணைப்புக்கு செல்லுங்கள் :
சமீபத்தில் பிரான்சில் நளினி ஜமீலாவின் ‘லைமீக தொழிலாளியினுட ஆத்ம கதா’  புத்தகம் ப்ரெஞ்ச் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.  "இந்திய மண்ணில் இருந்து கொண்டு, ஒரு பாலீயல் தொழிலாளி தன் சுயசரிதையை புத்தகமாக வெளியிடுவதற்கும், சமூகத்தில் நேரடியாக தன்னை பாலீயல் தொழிலாளி என்று சொல்வதற்கும் மிகுந்த துணிவு வேண்டும். அசாதரனமான பெண்மணி நளினி ஜமீலா" என்று புத்தகத்தை அறிமுகப்படுத்திய ப்ரெஞ்ச் நாட்டு பெண் குறிப்பிட்டார். உண்மைதான்! 
பாலீயல் தொழிலை விரும்பி ஏற்றுக் கொண்டீர்களா? என்ற கேள்விக்கு...திருமணம் நடந்த மூன்று வருடங்களுக்கு பிறகு கணவன் இறந்ததாலும், தன்னுடைய 2 - குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூலி வேலைக்கு சென்றதாகவும், மிக குறைந்த கூலியில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் தன்னுடைய தோழி பாலீயல் தொழிலை தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் கூறுகிறார். ஆக கணவன் இறந்த பிறகே கல்வியறிவு இல்லாத முன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நளினி ஜமீலா பாலீயல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். 
அந்த காலக்கட்டத்தில் மற்றொருவருடன் திருமணம் செய்திருக்கிறார். 
12 - வருடங்கள் அவருடன் வாழ்ந்ததாக கூறும் நளினி ஜமீலாவிடம் இடைமறித்து ஓர் கேள்வி கேட்கப்படுகின்றது. 
இரண்டாம் கணவருடன் வாழ்ந்த போது பாலீயல் தொழில் செய்யவில்லையா? 
இல்லை! அவர் என்னிடம் அன்பாகவும், என்னுடைய தேவைகளை அவரே பூர்த்தி செய்யும் போது தான் வேறு ஆணிடம் போக விரும்பவில்லை என்கிறார். (கவனிக்க: பெண்கள் சந்திப்பினர்) இரண்டாம் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு தன்னை விட்டு சென்ற போது மீண்டும் பாலீயல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாக சொல்கிறார்.
தன்னுடைய கதையை புத்தகமாக எழுதும் ஆர்வம் எப்போது ஏற்பட்டது என்ற கேள்வியை எழுப்பிய போது.... தன்னுடைய 24 - வது வயதில் தன்னுடைய வாழ்ககையில் நடந்த சம்பவங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பியதாகவும், அதையே சிறுகுறிப்புகளாக எழுதி வைத்திருந்து 49 - வது வயதில் புத்தகமாக எழுதி முடித்ததாக கூறுகிறார். யதார்த்தமான உண்மைகளைப் பேசும் நளினி ஜமீலா அசாதரமான துணிச்சல் மிக்க நேர்மையான பெண்மணி தான். 
பாலீயல் தொழிலாளி என்று சொல்வதால் சமூகத்தில் தனக்கு எங்கே அங்கீகாரம் கிடைக்காதோ என்ற எண்ணத்தில் எதையும் மறைக்காமல் பேசும் நளினி ஜமீனாவைப் போல் இந்தியாவில் ஏராளமான நளினி ஜமீலாக்கள் இருக்கிறார்கள். கூலித்தொழில் செய்யும் பெண்கள் கூட தங்களுடைய தினசரி வருமானத்தில் துண்டு விழக்கூடாது என்பதற்காக தொழில் செய்யும் இடங்களில் சக ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். வறுமைச் சூழல்களும், இயலாமையும் ஆண்களின் இச்சைக்கு பலியாகிறார்கள். 
கொஞ்சம் நடுத்தர குடும்பப் பெண்கள் தங்களுடைய வசதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கைக்காகவும், தங்களுடைய சுய இச்சைகளை தீர்ப்பதற்கும் ஆண்களிடம் கலவி செய்கிறார்கள். மேல்மட்ட வகையறாக்களும் இப்படியே. நடிகைகள் சினிமா மார்க்கெட் வருவதற்கு போய் வர வேண்டும். அரசியல்வாதி தன் அதிகாரத்தை வைத்து விரும்பும் பெண்களை அனுபவிப்பான். படிக்கும் மாணவிகள் பாய்க்கெட் மணிக்கு போய் வருகிறார்கள். இலக்கியவாதிகளில் புரட்சி சிந்தனையுள்ளவர்கள் சக இலக்கியவாதிகளுடன் கூடுவார்கள். எதுவும் வெளியில் தெரியாது. சினிமா நடிகைகள் மட்டும் "கிசு கிசு" பெயரில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் இன்றைய பெண்கள் வெளியுலக தொடர்புகளும், கல்வியறிவு உடைவர்கள் கூட ஆண்களின் மூலம் தவறான திசைக்கு திருப்பப்படுகின்றனர். 
பாலீயல் பலாத்தாரம் செய்வதும்; தங்களுடைய இச்சைகளை தீர்த்துக் கொள்ள பலவழிகளில் பெண்களிடம் தீர்த்துக் கொள்ள முயலும் பாலீயல் சுரண்டல்களுக்குப் பின் தூக்கியெறிந்து விட்டு அடுத்த பெண்னை நோக்குவதும் பாலீயல் பலாத்தாரம்தான். 
பெண்கள் அழகை எதற்காக பயன்படுத்துகின்றோம்? தங்களுடைய காரியங்களை சாதித்துக் கொள்வதற்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும், தங்களுடைய சுய இன்பங்களுக்காகவும், தங்களுடைய உடல்களை மூலதானமாக வைக்கிறார்கள். நம் சமூகத்தில் இந்நிலை மிக மோசமானதாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட பெண்கள் தங்களுடைய சுய தேவைகளுக்கு இலக்கியம் வழியாகவும், பெண்ணீயம் பேசியும், பெண்ணிலைவாதிகளாகவும் காட்டவே முற்படுகின்றார்கள். 
என்ன காரணத்திற்காக தங்களுடைய செயல்கள் இருக்கின்றதோ அதை ஒட்டு மொத்த பெண்களின் விடியலுக்கான வசனமாக மாற்றபடுகின்றது. 
பெண்கள் சந்திப்பு நடத்துபவர்கள் நிலையும் இப்படியே! இவர்கள் சக பெண்களுக்காக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதில் 27 - வருடங்களாக இன்னும் தடுமாற்றத்திலேயே இருக்கிறார்கள். இதன் அரசியல் பின்னணி மிக ஆபத்தாகவே இருக்கின்றது. பெண்கள் சந்திப்பு நடத்துபவர்கள் பின்னணியில் ஏதோ சில, பல காரணங்களுக்காக ஆணாதிக்கத்தின் பாலீயல் சுரண்டலுக்குள் கட்டுப்பட்டிருக்கின்றது. மறுபுறம் ஈழத்து அரசியல். 
பல கேள்விகளை கேட்டாகி விட்டது. பெண்கள் சந்திப்பு உறுப்பினர்களின் மொத்த அசிங்கங்களும் 27- ஆம் வருட பெண்கள் சந்திப்பில் அம்பலப்பட்டு நிற்கின்றது. இதற்கு மேலும் இப்பெண்கள் சந்திப்பு நிகழ்வு தொடருவது மிக ஆபத்தானது. 
பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் "காட்சி அரசியலில் பெண்ணின் உடல்" 
என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கப்படுகிறது. உள்ளாடைகள் தொங்கவிடப்படுகின்றது. ஆணுறையால் பேணர்கள் அலங்கரிக்கப்படுகின்றன. அறிக்கைகள் பல விடப்படுகின்றன. பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்தவர்ககள் இன்னும் வீடு போய் சேரவில்லை. இலக்கியச்சேவையில் இன்னும் நாடுநாடாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். செலவுகளுக்கு கணக்கு வழக்கு கேட்டுவிடக் கூடாது. பெண்ணீயத்தின் இறுதி தீர்வாக யோனி கட்டுடைப்பில் இருக்கின்றது என்ற புரட்சி வாக்கியம் வெடித்துவிட்டது. தீவிரவாதத்தை இணையம் மூலம் ஊக்குவிக்கிறார்கள் பெண்கள் சந்திப்பு நடத்துபவர்கள்.  
தீவிரவாதத்தையும் பெண்கள் சந்திப்பு பின்னணிகளையும் அம்பலப்படுத்தினால் அசிங்கம் பிடித்த கட்டுரைகள் என்று 74 - பேர் சேர்ந்து அறிக்கை விடுவார்கள். இந்த கட்டுரையையெல்லாம் பொறுக்கி எடுத்து போட்டு "பத்திரிக்கை தர்மத்தை கெடுத்துவிட்டதற்கு மன்னிப்பு கேள்" என்று தேசம் நெற்றிடம் உறும்புவார்கள். 
தனி மனிதர்கள் மிரட்டல்கள், பொறுக்கி கூட்டங்களுடன் பெண்கள் சந்திப்பு உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு சவுண்டு விடுவார்கள். "காட்சி அரசியலில் பெண்ணின் உடல்" என்று குமுறி குமுறி கட்டுரை வாசித்தவர் "ஆண்குறியை உள்நுளைப்பதுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லை. இருவர் கைகள் முட்டுப்படுவது போல்தான் இதுவும். குறியாயிருந்தாலென்ன, மூக்காயிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்" என்று கூட்டுக்கலவிக் கூட்டத்துடன் மூக்கை உள்நுளைத்துக் கொண்டிருப்பார். 
பெண்ணின் உடல், காட்சி அரசியல், ஆணாதிக்கம் மொத்தத்திற்கும் "பெப்பே" காட்டப்படும் பின்னணி! 
சென்ற வருடம் சத்திய கடதாசியில் நளினி ஜமீலா பற்றி "மதிப்பு மறுப்பறிக்கை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் மூன்று பின்னூட்டங்கள். இரு பின்னூட்டங்கள் ஜெயஸ்ரீ என்ற பெயரில் இருக்கும். அதன் கருத்துக்களை நீங்கள் வாசித்து பாருங்கள். யார் இந்த புதிய ஜெயஸ்ரீ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். கொரிய எழுத்து ஆராய்ச்சியாளினியின் இயற்பெயர் தான். கட்டுரையில் கூட ஓரிடத்தில் ஜமீலா ஜெயஸ்ரீயை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். (கேரளத்தை சேர்ந்த அய்யர் வீட்டுப் பெண் ஜெயஸ்ரீயுடன் கூட்டுக்கலவி கூட்டம் கூடும் போது புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏன் உயர்சாதிப் பெண்ணை கட்டினார்? என்று இனி கேள்வி கேட்க கூடாது. கூட்டுக்கலவிக்கு தலீத் பெண்ணை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று இனி யாராவது கேள்வி எழுப்பலாம்)
அரசியல்வாதிகள் ஒருபுறம் மக்களை நாற அடித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் தகாத இலக்கியவாதிகளின் பின்னணி அரசியல், பாலீயல் சுரண்டலிலும் இணைந்த கூடலிலும், அரசியல் பேசுவதும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் நடக்கிறது. 
சமீபத்தில் தினக்குரல் நாளிதழில் 74 - பேர்களின் கையெழுத்து வேட்டை பாரீசில் ஜனநாயக பேச்சுரிமைக்கு, எழுத்துரிமைக்கு விடப்பட்ட மிரட்டல் என்ற செய்தி. 74 - பேர்களையும் தவீர்த்து இருந்தது. காரணம் இலங்கை அரசின் ஆயுதக் கைக்கூலிகளாம் அதில் இருப்பவர்களில் சிலர். பெயரைப் போட்டால் தர்மஅடி! என்ன நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது. எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போக முயன்றாலும் ஏதோ உரிமைக்கு எங்களால் முடிந்த சவுண்டு என்று உதவி இருக்கிறார்கள். 
இந்த தெனாவட்டு தான் நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம். என்ன வேண்டுமானாலும் செய்வோம். இந்தியக் கைக்கூலிகள், ஈழஅரசு கைக்கூலிகளாக நாங்கள் கும்மாலமடிப்போம், கூத்தடிப்போம் என்பார்கள்.  கொலை செய்வார்கள்! கொள்ளை அடிப்பார்கள்! ஜனநாயகம் பேசுவார்கள்! புலியெர்ப்பு என்று எகுறுவார்கள்! பெண்ணீயம் பேசுவார்கள்! 
இந்த தாதாக்களைக் கண்டு ஓட்டம் எடுக்க வேண்டுமா புலம் பெயர்ந்த தமிழர்கள்! 
வல்லமை தாராயோ 
இந்த மானிடம் பயனுற வாழ்வதற்கே...! -
என்று எங்கே போய் வல்லமையை கேட்பது நாம்? 

 

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=426