06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது அவதூறு

ஐயோ நாங்கள் ஐனநாயகவாதிகள், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் நேர்மை உண்டு என்ற புலியெதிர்ப்பு கும்பல் புலம்புவது வழமை. ஆனால் நடைமுறையில் அதை மருந்துக்குக் கூட காணமுடியாது.

 

 

இந்தக் கும்பல் எனது கருத்துக்களை எதிர்கொள்ள முடியாது திணறுகின்றனர். அவதூறை அள்ளிக் கொட்டுகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட இணையம் தான் நெருப்பு டொட் கொம். புலிக்கு நிதர்சனம் போல், புலியெதிர்ப்புக்கு நெருப்பு. கருணாவின் நெருக்கமான உறவுடன் இது இயங்குகின்றது.

 

புலியெதிர்ப்பு அணியின் பரஸ்பர இணைய இணைப்புக்கு உள்ளானதே இந்த இணையம். இந்த புலியெதிர்ப்பு கும்பல் எனது கருத்துக்கு பதிலளிக்க வக்கு கிடையாது. அதானல் அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனால் அவதூறில் இறங்குகின்றனர்.

 

எனது கருத்தை எதிர்கொள்ள, அவதூறு மட்டும் தான் அவர்களின் ஒரே ஆயுதம். இந்த வகையில் "அண்ணன் றஜாகரனுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்!"(வாசகர்களுக்காக கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது) என்ற ஒரு அவதூற்றை 05.03.2006 இல் நெருப்பில் வெளியிட்டனர்.

 

'அண்ணை கோவியாதைங்கோ அண்ணை! அண்ணை மன்னிச்சுடுங்கோ அண்ணை!"

 

என்று இவ் அவதூற்றுக்கு பதிலாக நான் எழுதிய கட்டுரைக்கு பதிலே இல்லை.

 

இந்த நிலையில் மீண்டும் ஒரு அவதூற்றை 23.12.2006 ஒரு புலிப் பினாமியுடன் சேர்த்து வாரி இறைக்கின்றனர். 'லண்டன் ஒரு பேப்பரும்! அருணாச்சலம் ரவியின் தகிடுதித்தங்கள்!" என்ற அவதூறில் ( இக்கட்டுரையையும் கீழே காண்க ) , என்னையும் சேர்த்து தூற்றுவதையே, அவர்கள் தமது ஜனநாயக அரசியல் என்று பீற்ற முனைகின்றனர்.

 

லண்டன் ஒரு பேப்பர் ரவி ஒரு புலிப்பினாமி. அவர் பற்றி எமது விமர்சனம் ஒன்று

 

'மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்"

 

என்ற தலைப்பில் முன்பே எழுதியிருந்தோம்.

 

எமது விமர்சனங்களை பார்வையிடும் வண்ணமும், புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளின் அவதூற்றை படிக்கும் வண்ணமும், அவை முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

எமது பதில், எமது விவாதம் எதையும் கருத்தில் எடுத்து விவாதிக்கும் எந்த நேர்மையும், இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளுக்கு கிடையாது என்பதையே, நாம் மீண்டும் தெளிவாக பிரகடனம் செய்கின்றோம். அவதூற்றைத் தவிர, வேறு எந்த சமூக கண்ணோட்டமும் இவர்களிடம் கிடையாது.

 

(05.03.2006) நெருப்பின் அவதூறுக்கு எனது பதில்

 

101. அண்ணை கோவியாதைங்கோ! அண்ணை! அண்ணை மன்னிச்சுடுங்கோ! அண்ணை!

 

அருணாச்சலம் ரவி மீதான எனது விமர்சனம்

 

096. மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நெருப்பின் அவதூறுகள் (இது தான் புலியெதிர்பு அணியின் ஜனநாயகம்)

1.'லண்டன் ஒரு பேப்பரும்! அருணாச்சலம் ரவியின் தகிடுதித்தங்கள்! (23.12.2006)

நேற்று!.

இந்தியாவின் கைக்கூலியென கூட்டணிக்குத் துரோகிப் பட்டம்

இன்று!

இந்தியாவிடம் மடிபிச்சையேந்தி கூட்டமைப்பு டெல்லிக்கு ஓட்டம்

நாளை!

லண்டன் ஒரு பேப்பருக்கும் இரவிக்கும் வரப்போகுது பலத்த நட்டம்

 

லண்டனில் இருந்து வெளியாகும் ஓசிப் பத்திரிகையான ஒரு பேப்பர் வெளியிடுபவர்கள் பற்றி திடுக்கிடும் பல தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அதில் சம்பந்தப்பட்ட அனைவரினதும் முக்கியமாக இரவி என்பவரது தகிடுதித்தங்கள் பல எமது கைக்கு வந்துள்ளது. அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து வரும் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்துக்கும் அவரது மனைவியார் மங்கையர்கரசிக்கும் எதிராக எழுதிவருவது கடைத்தெடுத்த அயோக்கியத்தனம்.

 

அமிர்தலிங்கத்துக்கு இலங்கை அரசு முத்திரை வெளியிடுவதாக கத்திக் குளறும் இரவி முதலில் புலிகளிடம் கேட்கவேண்டிய நிறைய கேள்விகளில் ஒன்று, ஏன் கூட்டமைப்பினரை இந்தியாவுக்கு போய் வாகரையில் தமக்கு அடிக்கவேண்டாமென இலங்கைக்கு சொல்லச்சொல்லி அனுப்பியது என்பதாகும்.

 

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு உழைத்த அமிர்தலிங்கம் அவர்களை இந்திய கைகூலியென சொன்ன புலிகள் அவருக்கு தூரோகிப்பட்டமும் மரண தண்டனையும் கொடுத்தனர். இன்று உலக நாடுகளால் புலிகள் அரசியல் துரோகிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டதால் தமது கைக்கூலிகளான கூட்டமைப்பை எந்தவித வெட்கமும் இல்லாமல் இந்தியாவிடம் மடிப்பிச்சை கேட்டு டெல்லிக்கு ஒன்றுக்கு இரண்டு முறை காவடி தூக்கி ஓடச்சொன்னனர். நிலைமை இப்படி இருக்க லண்டனில் புலிகளின் பினாமிகள் தாங்கள்தான் என தம்பட்டம் அடிக்கும் ஒரு வலது குறைந்த கோஸ்டியான ஒரு பேப்பரும் அதில் தான் ஏதோ தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆசீர்வாத செய்தியோடு லண்டன் வந்ததாக கதை அளக்கும் படுமோசமான பொ. பொறுக்கி இரவியின் விசமும் கசமும் நிறைந்த வார்த்தைகள் ஒரு சாதாரண தமிழனாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

 

ஓசிப்பேப்பர் அடிச்சமா.. அதுக்கு அட்வேட் கேட்டமா.. வந்த காசை பங்கு போட்டமா.. என்று இருக்காமல் எங்களுக்கு புலி, தேசம், விடுதலை, தமிழீழம்..துரோகம்.. என்று கதை அளக்காமல் இருந்தால் ஓரு பேப்பரும் நல்லது… இரவிக்கும் நல்லது.. இல்லையேல் கைவசம் எம்மிடம் மருத்து உண்டு.

 

அருணாச்சலம் இரவி என்ற இவர் ஜ.பி.சி. வானொலியுடன் இணைந்து கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்திவந்தவர். இவரும் இவரது நண்பருமான பிரான்ஸில் வசிக்கும் றஜகரன் என்பவரும் இணைந்து தமிழீழ போராட்டத்திலேயே மிகப்பெரிய வங்கிக்கொள்ளையான ஹற்றன் நஷனல் வங்கியில் 5,6 கோடி ரூபாய்களை கொள்ளையிட்டு அதில் 5,6 சதத்தைக்கூட தமிழீழ போராட்டத்திற்கு வழங்காமல் அதனை சுறுட்டிக்கொண்டு லண்டன், பிரான்ஸ் நாடுகளிற்கு தப்பியோடிவந்தவர்கள் ஆவர்."

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

'இந்த வகையில் நெருப்பு கொம் 05.03.2006 அன்று எனக்கு எதிராக அவதூறு ஒன்றைக் கட்டமைத்தது. மாற்றுக் கருத்துக்காக புலம்பியழும் புலியெதிர்ப்பு நடிகர்கள், நியத்தில் எனது கருத்தை மாற்றுக்கருத்தாக ஆய்வு செய்ய முடியாது போகின்றது. எழுதுவதை நிறுத்தக் கோரும் இவர்கள், ~~ஜனநாயக|| வேஷம் வேறு போடுகின்றனர்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"ஜனநாயக" (நாய்) வேஷம் போட்டு வெளியிடும் தமது சொந்த அவதூறில் நெருப்பில் வெளியிடப்பட்ட முன்னைய மற்றுமொரு அவதூறு

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2 "அண்ணன் றஜாகரனுக்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்! (05.03.2006)

 

(முன்னாள் என்.எல்.எப்.ரி உறுப்பினர், சமர் மற்றும் தமிழ்சுற்று இணையத்தள ஆசிரியர்.)

 

அண்ணா! நீங்கள் புலிகள், மற்றும் ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம் பேசுவோர் என உங்கள் விமர்சனத்திற்கு, உங்கள் மொழியில் கூறுவதானால் அம்பலபடுத்தலுக்கு உட்படுத்தப்படாதவாகள், ஐரோப்பாவில் மிகச்சிலரே. நீங்கள் ஒரு சுத்தமான மார்க்சியர் என்பதனடிப்படையில், உங்களைப் பொறுத்தளவில் உங்களுக்கத்தெரிந்த மார்க்சியத்திற்கப்பால் வேறெந்த மனுதர்மமோ, நியாயமே, தத்துவங்களே இருக்க முடியாதுதான். அண்ணா!

 

உங்களைப்போல் சாதி, மத, இன, தத்துவ, அரசியற் சுத்தம் கடைப்பிடித்தோர் அனைவரும் மனிதகுலத்தின் அழிவிற்கே வழி வகுத்தனர். க்pட்லர், பொல்பொட், பிரபாகரன், என மனித குல அழிவிற்கு இட்டுச்சென்றோர் பட்டியல், வரலாற்ரில் தொடர்ந்த வண்ணமுள்ளது.

 

இன்று பிரபாகரனின் இடத்தில் நீங்கள் இருந்தால், அவர் செய்வது போல்தான் நீங்களும் நடந்து கொண்டிருப்பீர்கள். ஓர் வித்தியாசம், அவர் தமிழ்தேசியமென்ற பெயரால் கொடூமையிழைக்கிறார், நீங்கள் தமிழ்தேசியத்துடன் மார்க்சியத்தையும் பயன்படுத்தி உங்கள் கொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப்படுத்துவீர்கள் நியாயப்படுதினீர்கள். (உங்களுக்கு இது ஒன்றும் புதிதல்லவே)

 

இதை நான் ஏன் சொல்லுகிறொனென்றால், அம்பலப்படுத்தல் என்ற பெயரில், ஜனநாயகம், பொண்ணியவாதம், இலக்கியம், மனிதநேயம், பேசும் தனி மனிதர்கள் பலரை கொலை கொள்ளை கடத்தல்காரர்கள், ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், மக்கள்விரோதிகள், ஜனநாயகவிரோதிகள், புலியெதிர்ப்புக்கும்பல் என படுமோசமான முத்திரை குத்தி தீர்ப்பிடுகிறீர்கள். இத் தீர்ப்புகளுக்கு எந்த விதமான ஆதாரங்களையும் நீங்கள் முன் வைப்பதில்லை. உங்களுக்கு இம் மனிதர்கள் மீது, உங்கள் தீர்ப்பை செயற்படுத்தும் வாய்ப்பு மட்டும் இருக்குமானால், இவர்களில் ஒருவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்.

 

ஏந்த வித பொருளாதார, அரசியல் பலமில்லாத தனி மனிதர்களை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்களே, புலிகளின் பினாமிகளான பொருளாதார, அரசியல், உடக மேலாதிக்கத்தைக் கொண்ட எவரையாவது அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறீர்களா? கிடயவேகிடயாது, நீங்கள் வாழும் பிரான்சு நாட்டில் தான் பல நூறு புலிப்பினாமிகள் உள்ளனரே? உங்களால் முடியாது. ஏனெனில் உங்களின் சீவியமே பினாமிகளின் கையிலல்லவா உள்ளது. நீங்கள் வேலை செய்யும் அழுத்தகம் புலிக்குச்சொந்தமாதென்பதுவும், புலிப்பினாமியால் நிருவகிக்கப்பட்டு வருகிறதென்பதும் எனக்கு தெரியும் அண்ணே.. இது மட்டுமல்ல, கற்றன் நசனல் வங்கிக்கொள்ளை அடித்த பணத்திற்கு என்ன ஆனது, நீங்கள் எவரெவரை காட்டிக் கொடுத்து விட்டு புலியின் பிடியிலிருந்து விடுதலை ஆகிPனீர்கள், நீங்கள் காலம்சென்ற மாத்தையாவுடன தனிப்பட்ட முறையிற் செய்து கொண்ட ஒப்பந்தம், நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கேற்ற கொலைகளைப் பற்றியும் எனக்கு மட்டுமல்ல உங்களால் தீர்ப்பிடப்பட்டோர் பலருக்கும் தெரியும் அண்ணே.

 

இன்று வரையும் இதைப்பற்றி ஒருவருக்கும் நாம் பகிரங்கப்படுத்தியது கிடையாது. (உங்கள் உறவினர் காலம் சென்ற நண்பன் கலைச்செல்வனைத் தவிர. அவர் பகிரங்கமாக உங்களை கொலைகாரன் என அழைத்தர் நாம் பலர் கடந்த காலத்தில் பல தவறுகளை இழைத்துள்ளோம், அதனால் இன்று எல்லாம் இழந்து மன அழுத்தத்துடன் அகதிகளாயுள்ளேம். ஏம்மைப் போன்று தான் நீங்களும் எனும் புரிந்துணுர்வில் தான் நாம்மிற் பலர் உங்களை பகிரங்கப்படுத்தியது கிடையாது. அது மட்டுமல்ல எங்களைப்போன்று, உங்களுக்கும் குழந்தைகளும் குடும்பமும் உண்டு என்ற மனிதாபிமானத்தில்தான்.


 

ஆனால் நீங்கள் எதைப் பற்றியும் கவனத்தில் கொண்டது கிடையாது. இனியாவது மனிதவிழுமியங்களையும், மனிதாபிமானத்தையும் கருத்திற் கொண்டு உங்கள் விமர்சனத்தை நாகரீகமான மொழியில் முன்வைக்குமாறு வேண்டுகிறேன். அண்ணே! சாது மிரண்டால் காடு கொள்ளது அண்ணே.

 

புரிந்துணுர்வையும் மனிதாபிமானத்தையும் எதிர்பாற்கும் தம்பி

சுந்தரமூர்த்தி சகாதேவன்(சின்னத்தேவா-ஒட்டி)||


பி.இரயாகரன் - சமர்