பயர்பாக்ஸ் வலையுலாவியின் நீட்சி வழியாக இந்த தமிழ் “எழுத்து பிழை நீக்கி” உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் அகராதி ஒப்பன் ஆப்பிஸ் விக்கியிலிருந்து எடுக்கப்பட்டது. இது இப்பொழுது குறைந்த தமிழ் வார்த்தைகளைக்கொண்டுள்ளது. ஆதலால், தற்பொழுது இது பீட்டவில் உள்ளது.

விரைவில் முழுமையான தமிழ் எழுத்து பிழை நீக்கியை வெளியிடுகின்றோம். இதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எங்களுக்கும் அனுப்புங்கள். நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் பங்கேற்று உங்களது கேள்விகளையும் பதில்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

எப்படி பொருத்துவது?

* இந்த தொடுப்பில் சென்று, நீட்சியை இறக்கவும்.
* அதனை இழுத்து பயர்பாக்ஸின் மேல் போடவும். பின்னர் அதன் நிருவுதல் ஆரம்பமாகும்.
* மற்ற பயர்பாக்ஸின் நீட்சி நிருவுதலை போல இதுவும் நிருவப்படும்

 

உதவி/துணை

உங்களுடைய பிரச்சனைகள், குற்றசாட்டுகள், குறைபாடுகள், அம்சங்கள், கேள்விகள் போன்ற வற்றை நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

தொடுப்புகள்
கீழிறக்க http://code.google.com/p/tamilspellchecker/
கருத்தாடல் மன்றம் http://ulagam.net/forum/forum.php?id=5

 

http://ulagam.net/2008/09/16/தமிழ்-எழுத்துப்பிழையை-கண/