09272023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...18.

வஞ்சிக்கப்பட்ட மற்றுமோர் பெண் 22 வயதான சுபியா பானு, தன் தந்தையின் முன்னாலே கற்பழிக்கப்பட்டு எரிக்கப்பட்டாள். அவள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் பலனின்றி இறந்த அரசு மருத்துமனை அவள் மீதான தாக்குதல்களை உறுதி செய்தது. நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு சாட்சியளித்த அவளது தந்தை அப்துல் மஜீத், தனது மகளைக் காப்பற்ற முயன்ற போது, அவர் மிருகத்தானமான முறையில் தடுத்து தாக்கப்பட்டதோடு அவருடைய தாடியும் வெட்டப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.சுபியா பானு தவிர அந்த குடும்பத்தில் மேலும் 6 பேர் கொல்லப்பட்டனர். 3 பையன்கள் - மஹ்முது, அய்யூப் ஹுசைன், இரண்டு சிறுமிகள்- அப்ரின் பானு, சாஹின் பானு இன்னும் இவர்களுடைய தாயார் லாலிபீவி. 22 வயதான சுபியா உடன் பிறந்தவர்களில் மூத்தவள், 7 வயதான ஹுசைனும் 4 வயதான சாஹின் பானுவும் மிகச் சிறியவர்கள்.

காவல்துறை ஆணையாளர் PC பாண்டே நடுஇரவில் சுமார் 1 மணியளவில் நரோடா பாட்டியாவிற்கு வந்தான். அழிவுகளின் கோரத்தை ஆய்வு செய்து விட்டு, ஹல்திகாடி போர்களங்களை விடவும் கோரமாக இந்த இடம் காட்சியளிக்கிறது என்று PC பாண்டே சொன்னதாக, பஜ்ரங்கி கூறினான். படுகொலைகள் நடந்த தினத்தன்று பாஜக சட்டமன்ற உறுப்பினரான மாயாபென் கோட்னானி நரோடாவை சுற்றி வலம் வந்தவளாக, வன்முறையாளர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு முஸ்லிம்களைக் கொல்லுமாறு அவர்களை உற்சாக மூட்டியதாக ரிச்சர்ட் தெஹல்காவிடம் தெரிவித்தான். இதை விட மோசமானது என்னவென்றால், ஒவ்வொரு அடிக்குப் பின்னும் விழுந்த படுகொலைகளின் எண்ணிக்கையை கை தொலைபேசி மூலமாக விஹெச்பி பொதுசெயலாளரான ஜெய்தீப் பட்டேலுக்கு பஜ்ரங்கி தெரிவித்ததாகும். இந்த ரகசியத்தை பஜ்ரங்கியே வெளிப்படுத்தினான். கை தொலைபேசியின் தொடர்பு இழக்கும் வரையிலும், ஒவ்வொரு சமயமும் தற்போதைய நிலவரத்தை 11 தொலைபேசி அழைப்புகள் மூலம் பட்டேலுக்கு அவன் (பஜ்ரங்கி) தெரிவித்தாகவும் கூறினான்.

அதே மாலையில் அப்போதைய உள்துறை ராஜாங்க மந்திரியான கோர்த்தன் ஜடாபியாவை அழைத்து தான் செய்தக் கொலைகள் எத்தனை என்ற விபரத்தை அளித்து விட்டு, இப்போது ஜடாபியா தான் சட்டத்தின் பிரச்சனைகளிலிருந்துத் தன்னை நீக்கி வைக்க வேண்டும் என்று சொன்னதாகவும் பஜ்ரங்கி கூறினான். அன்றிரவு படுக்கைக்கு தான் மஹாராணா பிரதாப் போன்ற உணர்வோடு சென்றதாகவும் கூறினான். நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட அவ்விடங்களை பார்வையிட அன்று மாலை வந்த போது அவனைச் சந்திக்க பஜ்ரங்கி முயலவில்லை. நரோடா பாட்டியாவின் உள்பகுதிகளுக்கு பார்வையிட மோடி செல்லவேயில்லை என்றும் பஜ்ரங்கி கூறினான். "அன்றைய தினம் நரோடா பாட்டியாவில் நுழைய கடவுளுக்குக் கூட சக்தியில்லை" என்று (ஆணவத்தோடு) பஜ்ரங்கி கூறினான்.

காவல் துறையின் பங்கு:

"காவல்துறை மட்டும் மறுபக்கம் திரும்பிக் கொள்ளாமல் (கண்டு கொள்ளாமல்) இருந்திருந்தால், இக்கொலைகளை செய்வது ஒரு போதும் சாத்தியமாகி இருக்காது" என்று உறுதி பட தனது எண்ணத்தை பஜ்ரங்கி கூறினான். சமூக குடியிருப்புகளைப் போல, நரோடா பாட்டியாவிற்கு ஒரேயொரு நுழைவுதான் உண்டு. காவல்துறையினர் சுமார் 50 பேர்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். "எங்களை அவர்கள் வேறு வேறாக கிழித்து எடுத்திருக்க முடியும்" என்றும் அவன் சொன்னான். "ஆனால் அவர்கள்(காவல்துறையினர்) எல்லாவற்றையும் பார்த்தும் கூட தங்களது கண்களையும் வாய்களையும் மூடிக் கொண்டார்கள்". (வன்முறை கும்பலால்) தாக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே காவல்துறையினரும் சுட்டதாக ரிச்சர்ட் கூறினான். இரவின் பின் பகுதியில் வன்முறைகள் கிட்டத்தட்ட ஓய்ந்துவிட்ட நிலையில், பள்ளங்களில் ஒளிந்திருந்த முஸ்லிம்களைக் கொல்லுமாறு சில காவல்துறையினரே ச்சாராக்களிடம் விஷேடமாக கூறினார்கள்.

மூடி மறைக்கபட்டவை:

2002 படுகொலைகளின் போது பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடி வரும் "உதவி நடவடிக்கை (ஆக்ஷன் எய்டு)" என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் அஹ்மதாபாத் பிரிவை சார்ந்த வழக்கறிஞர் சோம்நாத் வாஸ்தா எனபவருடைய ஒததுழைப்போடு தெஹல்கா, நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் படுகொலைகள் பற்றிய காவல்துறையினரின் விசாரணைகள் மற்றும் குற்றபத்திரிக்கைள் ஆகியவைகளின் பதிவுகளை குறித்து மிக நுணுக்கமாக பகுப்பாய்வு செய்தது. குற்றமிழைத்தவர்களை தண்டிக்கவே முடியாத அளவுக்கு மூடி மறைப்பதில் காவல்துறையினர் மிகப்பெரிய அளவில் மூடி மறைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் காண முடிந்தது.

குற்றங்களின் அளவை குறைத்து காண்பிப்பதற்காக பிணங்கள் அப்புறபடுத்தப்பட்டன:

படுகொலைகள் முடிவுற்ற பின், காவல்துறைக்கு முன்னால் இருந்த முதல் கடமை இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாகத் தான் இருந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால், மக்கள் சமூகத்திலிருந்து வரும் கண்டணங்கள் மிக அதிக கூக்குரலுடன் இருக்கும். காவல்துறையினர் நரோடா பாட்டியாவில் சுற்றி வந்து அங்கு கிடந்த உடல்களை எடுத்து நகரம் நெடுகவும் உள்ள பிற பகுதிகளில் தூக்கி வீசினார்கள் என பஜ்ரங்கி விளக்கமாக சொன்னான்.

"அவைகள் டிரக்குகளில் குவிக்கப்பட்டு இருந்தது அதிகமான வண்டிகள் தேவைப்பட்டது. சில போலீஸ் ஜீப்களிலும் கூட நிரப்பப்பட்டது. இரண்டாவது முறையாக உடல்கள் சேகரிக்கபட்டுப் பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது தான், அவைகள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று இடங்களின் விபரம் எல்லாம் பதிவு செய்யப்பட்டது. இந்த முறையில், காவல்துறையினரால் இறந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக குறைக்கபட்டு, 97 எண்ணம் நரோடா பாட்டியாவிலிருந்து என்றும் 8 எண்ணம் நரோடா காவ்னிலிருந்து என்றும் காட்டப்பட்டது. நரோடாவிலிருந்து 105 பிரதேங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப் போது கொண்டு வரப்பட்டது போலவும், இன்னும் சில பிரேதங்கள் படுகொலைகள் நடந்து முடிந்தப் பிறகு நான்கு நாட்களாக கொண்டு வரப்பட்டவை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் காட்டுகின்றது.

41 பிரேதங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தவில்லை:

இவ்வாறாக ஒரு ஆதாரம் அழிக்கபட்ட பின்பு, காவல்துறை அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. கருகிய நிலையிலும், துண்டு துண்டாக வெட்டபட்டதாகவும், குண்டு காயங்கள் உடையதாவும், கூரிய ஆயுத காயங்களின் அடையாளங்கள் உடையதாகவும் இன்னும் கற்பழிக்கப்பட்ட அடையாளங்கள் உடையதாகவும் உள்ள பிரேதங்கள் கொடிய படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்பதன் உறுதியான நிரூபணமாக ஆகுவதோடு, அரசு நிர்வாகத்தினுடைய பங்கெடுப்பையும் காட்டுவதாக அமைந்துவிடும். இவ்வன்முறைகள் தன்னிச்சையான முறையில் நடந்தவைகள் அல்ல மாறாக ஒழுங்காக முறையாய் திட்டமிடப்பட்டு நடத்திய படுகொலைகள் என்பதற்கான மிக வலுவான சாட்சியாகவும் அமைந்துவிடும். எனவே காவல்துறையினர், நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்னிலிருந்து கொண்டு வரப்பட்ட 41 பிரேதங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தவில்லை. இத்தகைய மோசமான அலட்சியப் போக்கிற்கும் புறக்கணிப்பு செய்யபட்டதற்கும் எவ்வித விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை.

இரண்டு சுதந்திரமான சாட்சிகள் அல்லது பண்சாகள் என்பவர்களைக் கொண்டு எங்கிருந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டன?, எத்தகைய காயங்கள் உடலில் காணப்பட்டன? என்பன போன்றவற்றை உறுதிப்படுத்தி, பின்னர் இத்தகவல்கள் எழுதி பதிவு செய்யப்படும் சட்ட நடவடிக்கையான "பண்சாமாக்கள்" எனப்படும் விசாரணை 97 பிரேதங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. இவ்வாறு தங்களது சொந்த பதிவு அறிக்கைகள் படி 97 பிரேதங்கள் நரோடா பாட்டியாவிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விசயம் என்னவென்றால், 58 பிரேதங்களுக்கே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நரோடா காவ்னிலிருந்து எடுக்கப்பட்ட பிரேதங்களில் இரண்டிற்கு பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை.

அன்றைய தினம், காட்டுமிராண்டிதனமாக கொடூரமான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கு மறுக்க முடியாத சான்றுகள் கொடுக்கப்பட்ட பிறகும், நேர்மையான முறையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டிருக்குமானால், கொலைகள் நடத்தப்பட்ட நேரங்கள் அறியப்பட்டிருக்கும். அதன் மூலம் இக்கொடூர படுகொலைகள் மொத்தத்தில் எவ்வளவு நேரத்திற்குள் நிகழ்த்தப்பட்டன என்னும் தகவலை ஓர் அளவுக்கு சரியாகத் தந்திருக்க முடியும். இத்தகைய தகவல்கள் நீதிமன்றத்தில் மிக வலுவான சான்றுகளாக இருந்திருக்கும். ஆனால் இதை தான் காவல்துறை கண்டிப்பாக விரும்பவில்லை.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்