வேறு காரணங்ளும் உண்டு. பர்ஜானியா என்ற திரைப்படம் அஹ்மதாபாத்தில் திரையிடுவதை தனியொரு மனிதனாக நிறுத்தியவன். இப்படம் திரையிடப்பட இருந்த திரையரங்க உரிமையாளர்களை இவன் வெளிப்படையாகவே மிரட்டியும் கூட, அரசு நிர்வாகம் மெளனம் சாதித்தது.

 "இப்படம் ஹிந்துக்களுக்கு எதிரானது" என்னும் காரணம் மட்டுமே இவனுக்கு போதுமானதாக இருந்தது.. ஹிந்துக்களை நேசிப்பதான பஜ்ரங்கியின் வரைவிலக்கணம் என்னவென்றால், முஸ்லிம்களையும் இன்னும் அவர்கள் தொடர்புடைய எல்லாவற்றையும் வெறுப்பதுவே ஆகும். "எனக்கு தூக்குத்தண்டனை கொடுக்கபட்டாலும் கவலைபட மாட்டேன்; எனது கடைசி ஆசை என்னவென்று கேட்டால், நான் இறப்பதற்கு முன், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் வெடிகுண்டுகளை வீசி, ஒரு பத்து பதினைந்தாயிரம் முஸ்லிம்களை கொல்லவே நான் விரும்புவேன்."

 

அவனுடைய (பஜ்ரங்கி) சொந்த நடவடிக்கைகள் தவிர, முஸ்லிம்கள் (இந்தியாவில்) இருப்பதனால் உள்ள "பிரச்சனைக்கு" "தீர்வு" காண, இவனிடம் ஏராளமான யோசனைகள் உள்ளன. "(முஸ்லிம்களை) கொல்வதற்கு டெல்லி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" - மேல்ஜாதிகாரர்களும், பணக்காரர்களும் இதனை செய்ய மாட்டார்கள். ஆனால் குடிசையில் வசிப்பவர்களும் ஏழைகளும் செய்வார்கள். எனவே இவர்களுக்கு (ஏழைகளுக்கு) மட்டுமே உத்தரவிட வேண்டும். இவர்களிடம் கூறவேண்டும், "முஸ்லிம்களிடமிருந்து என்னென்ன வேண்டுமோ, நிலமா?, சொத்துக்களா?, வீடுகளா? எதுவானாலும் அவர்கள் விரும்பியவாறு எடுத்துக் கொள்ளுங்கள் - ஆனால் மூன்று நாட்களுக்குள் இதனை செய்ய வேண்டும்". நாடு முழுவதும் முஸ்லிம்கள் இல்லாது அழித்தொழிக்க மேற் சொன்ன திட்டம் உறுதி செய்யும். முஸ்லிம்கள் ஒரு திருமணம் செய்யவும் இன்னும் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளவும் சட்டம் இயற்றப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு ஓட்டுரிமையை மறுப்பதுவும் சிறந்த ஒரு கருத்தாகவே தெரிகிறது.

 

இனப் படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகள்

சபர்மதி இரயில் தீக்கிரையாக்கப்பட்ட தினமான பிப்ரவரி 27 அன்று பஜ்ரங்கி கோத்ரா செல்கிறான். சபர்மதி இரயில் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த பின்பு , கோத்ராவிற்காக மறுநாளே நரோடா பாட்டியாவிலுள்ள முஸ்லிம்களைப் பழிவாங்க சபதம் எடுத்ததாக தெஹல்காவிடம் அவன் கூறினான். "நான் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விட்டேன் - கோத்ராவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமான பயங்கரத்தை பாட்டியாவில் இருக்குமாறு நான் பார்க்கிறேன்" என முதல் சந்திப்பின் போதே தெஹல்காவிடம் பஜ்ரங்கி சொன்னான். அவன் அஹ்மதாபாத்துக்கு திரும்பி சென்று அன்றிரவே படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். சிறிய ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருக்கும் ஹிந்துகளிடமிருந்து 23 கைத்துப்பாக்கிகள் பெறப்பட்டன, எவர்கள் தங்கள் ஆயுதங்களை தரவிரும்பவில்லையோ, அவர்கள் ஹிந்துக்களாக இருப்பினும் கூட மறுநாள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டார்கள். ஏராளமான அளவு எளிதில் தீப்பற்றக் கூடிய திரவங்களும் தேடி பெறப்பட்டது. ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தின் சொந்தக்காரர் இலவசமாக பெட்ரோல் வழங்கினார். முஸ்லிம்களை உயிரோடு எரிப்பதற்குப் பின்னர் இதனைப் பயன்படுத்தியதாகவும், பஜ்ரங்கி தெஹல்காவிடம் கூறினான்

படுகொலைகள்

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தொ(கு)ண்டர்கள் காலை 10 மணியளவில் நரோடா பாட்டியாவிற்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் முதல் தாக்குதலை நடத்திய போது முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பால் புறமுதுகிட்டு ஓடிவிட்டதாக, நரோடா பாட்டியா படுகொலைகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான சுரேஷ் ரிச்சர்ட் என்பவன் கூறினான். இந்த சந்தர்பத்தில் தான், பஜ்ரங்கியின் ஏராளமான ச்சாரா அடிவருடிகள் காவி கும்பலுடன் சேர்ந்து புது தாக்குதலை தொடர்ந்தனர். 10:30 அளவில் நரோடா பாட்டியாவிலுள்ள நூரானி மஸ்ஜிதிலுள்ள மினாராவை அவர்கள் உடைத்தனர். அதைத் தொடர்ந்து எரிபொருள் முழுமையாக நிரப்பப் பட்ட டேங்கரை மஸ்ஜிதின் கட்டிடத்தின் மீது கொண்டு இடிக்கவே, அது வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. டேங்கரிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் முஸ்லிம்களையும் இன்னும் அவர்களின் வீடுகளை எரிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.

 

முதல் சுற்று கடுமையான தாக்குதல்களுக்குப் பின், தாக்குதல்கள் தீவிரபடுத்தபட்ட பின்பு மாலை 3 மணி வரை முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே ஒழிந்துக் கொண்டனர். அன்று மாலை 5லிருந்து 6 வரை வன்முறை கும்பல்கள் தங்கள் வெறியின் உச்சத்தை அடைந்தனர். அநேக பெண்களும் இன்னும் இளவயது பெண்களும் முதலில் கற்பழிக்கபட்டனர். அதன் பிறகு மண்ணெண்ணை மற்றும் பெட்ரோலால் நன்கு நனைக்கப்பட்டு எரிக்கபட்டார்கள். பக்கத்திலுள்ள மாநில ரிசர்வ் போலீஸ் தங்கியுள்ள முகாமிற்கு, சில டஜன் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் புகலிடம் தேடி ஓடினர். அந்த முகாமிலிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் தலைவரும் ஒரு முஸ்லிமே. அவர் இவர்களுக்குப் புகலிடம் அளித்தார். இல்லையெனில் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.

நரோடா தாக்குதல்களில் பங்குபெற்ற சிலர் காக்கி கால்சட்டை அணிந்திருந்ததோடு, தங்கள் நெற்றியில் காவி கயிற்றையும் கட்டியிருந்தனர். அரசு போக்குவரத்து கழகத்தினுடைய பணிமனையிலிருந்து மண்ணெண்ணை, டீசல் மற்றும் எண்ணெய் ஆகியவை கேன்களில் நிரப்பப்பட்டு அநேகர் தூக்கிச் செல்வதைப் பார்த்தாகச் சாட்சிகள் கூறுகிறனர். (முஸ்லிம்களில்) எவர்கள் இவர்களது (காவி வெறியர்களின்) அருகாமையில் வருகிறாரோ அவர்கள் மீது இந்த திரவ எரிபொருள்களை ஊற்றி, பின்னர் தீ வைத்து கொளுத்தினார்கள். இன்னும் எவர்களை(முஸ்லிம்களை) நெருங்க முடியவில்லையோ அத்தகையோர்கள் மீது எரிபொருளால் நன்கு தோயக்கப்பட்ட துணியைப் பந்து போல் சுற்றி அதில் நெருப்பு வைக்கப்பட்டு அவைகள் வீசப்பட்டன. நரோடாவிலுள்ள ஒரு திறந்த வெளியில் மிகப் பெரிய குழி ஒன்று உள்ளது. அதன் ஒரு புறத்தில் சாய்வான ஒரு தளம் அக்குழிக்குள் கொண்டு செல்லும். மறுபுறமோ மிகச் செங்குத்தானது. இந்தக் குழிக்குள் ஏராளமான முஸ்லிம்கள் பதுங்கியிருந்த போது வன்முறை வெறி கும்பல் அக்குழியை சூழ்ந்துக் கொண்டு, எரிபொருள்களை அதனுள் கொட்டி தீ வைத்தது.

நரோடா பாட்டியாவில் அன்றைய ஒரே நாளில் 97 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டாலும், உயிர் தப்பியவர்கள் கூறும் காணாமல் போன மற்றும் தங்கள் கண்ணெதிரே சாகடிக்கபட்ட உற்றார் உறவினர்களை குறித்து தரும் விளக்கமான பட்டியல்களைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும் போது இறந்தவர்களின் தொகை இதனை விட மிக மிக அதிகமான எண்ணிக்கையாகும் என்பதே உண்மை என்பது புலனாகிறது.

 

கொல்லப்பட்வர்களில் பெரும்பாலானோர் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எரிந்து கருகி போய் இருந்தார்கள் அல்லது உடல் பகுதிகள் சிதைத்து சின்னா பின்னமாக்கபட்டிருந்தனர். "நாங்கள் கண்டம் துண்டமாக வெட்டினோம், எரித்தோம். இது போல ஏராளாமானவர்களை செய்தோம்" என பஜ்ரங்கி கூறினான். "நாங்கள் அவர்களை தீயிட்டு கொளுத்துவதையே சரி என்று கருதினோம். ஏனென்றால், ---மகன்கள் சொல்லுகிறார்கள், இவர்கள் இறந்தவர்களை தகனம் செய்ய மாட்டார்களாம், இவனுங்க பயப்படுறானுங்க; எனவே அது தான் அவனுங்களுக்கு நேர்ந்தது”. உயிர் தப்பியவர்களில் பெரும்பாலானோர் இறந்தவர்களின் உடலை பெறுவதற்காக உரிமை கோரமுடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். பதவியிலிருந்து நீக்கப்பட்ட டஜன் எண்ணிக்கையிலான சாட்சிகள், நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பாக குழந்தைகள் எரிக்கப்பட்டது, இன்னும் பெண்கள் கற்பழிக்கப்பட்டது போன்ற எக்கச்சக்கமான கோர வன்முறை சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். "நாங்கள் அவர்களில் எவரையும் விட்டு வைக்கவில்லை" என பஜ்ரங்கி கூறினான். இவர்களின் (முஸ்லிம்கள்) ஜனத் தொகை பெருகுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. அவர்கள் யாராக இருந்தாலும் சரி, பெண்கள் அல்லது குழந்தைகள் இருப்பினும் கூட ஒன்றும் கவலையில்லை, அவர்களை வெட்டி தள்ளனும், நையப்புடைக்கனும், கண்டம் துண்டமாக வெட்டி சாய்க்கனும், பின் ......மகன்களை எரிக்கனும்" என்று பஜ்ரங்கி கூறினான்.

 

 

கவுஸர் பானு என்ற பெண்மணி அன்றைய தினத்தில் 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுடைய வயிறு கிழித்து எறியப்பட்டது. இன்னும் பிரசவிக்கும் நிலையில் முழு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்த அவளுடைய கருசிசுவானது வெளியே இழுத்தெடுக்கப்பட்டு, பின் வாளின் நுனியில் வைத்து தூக்கப்பட்டு, பின் தரையில் வீசி எறிந்து, இறுதியில் தீயில் வீசப்பட்டது. தான் கவுசர் பானுவின் வயிற்றை கிழித்து வேறாக்கிய விதத்தை பஜ்ரங்கி சிலாகித்து நினைவு கூறினான், "ஒரு கர்ப்பிணி......................."(எழுதக் கைநடுங்குவதால் தவிர்க்கப்படுகிறது). வெறி கொண்ட பகைமையின் அர்த்தத்தை அவன் எவ்விதம் முஸ்லிம்களுக்குக் காட்டியுள்ளான்! "நீங்கள் எங்களுக்கு தீங்கிழைத்தால், எங்களால் தகுந்த பதிலடி தரமுடியும்".

மிகப் பெரிய அளவில் (காவி வெறியர்களால் நிழ்த்தபட்ட) தாக்குதல்களும் இன்னும் அதன் கொடூரங்களும், உயிர் தப்பிய அனைவர்களையும் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து ஓடிப் போகச் செய்தது. ஒவ்வொரு வீடும் கொள்ளையடிக்கப்பட்டது. சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. உயிர் தப்பியவர்களில் அநேகமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், இன்னும் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்தினரை விட்டும் பிரிந்து ஒரு வாரம் 10 நாட்கள் வரை ஒன்றிணைய முடியவில்லை .மேலும் சிலருக்கு இன்னும் அதிக நாட்கள் ஆகியது. ஏராளமான பெண்கள் தங்களது மானத்தை மறைப்பதற்கு கூட துணி எதையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் நிவாரண முகாம் வரையிலும் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஏராளமான கற்பழிப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், அவற்றில் ஒன்றில் தானும் ஈடுபட்டதாகவும் சுரேஷ் ரிச்சர்ட் தெஹல்காவிடம் கூறினான்.

தெஹல்கா: ச்சாராக்களும் கற்பழிப்புகளைச் செய்ததாக கூறப்படுகிறது........

ரிச்சர்ட்: இங்கே பார்..... ஒன்று மட்டும் உண்மை..... ஆயிரக்கணக்கான பசியுடையவர்கள்(காமம்) போகும் போது, சிலர் பழங்களைச்(பெண்களை) சாப்பிடத் தான் செய்வார்கள், மற்றவர்கள் மாட்டார்கள்... எப்படியிருந்தாலும் பழங்கள் கசக்கப்பட்டு வீசி எறியபடப் போகிறது.... பார்! நான் பொய் சொல்லவில்லை... மாதா என் முன்னே இருக்கிறது ( ஒரு சிலையை நோக்கி சைகை காட்டுகிறான்)..... ஏராளமான இளம் வயது முஸ்லிம் பெண்கள் கொல்லப்பட்டு இன்னும் தீயிட்டு சாகடிக்கப்பட்டார்கள், சிலபேர் பழங்களை எடுத்துக் கொண்டு தங்களுக்கே உதவி செய்து கொண்டனர்....

 

தெஹல்கா: கண்டிப்பாக சில கற்பழிப்புகள் நடந்திருக்க வேண்டும்....

 

ரிச்சர்ட்: அதிகமாகவே (கற்பழிப்புகள்) இருந்திருக்க வேண்டும்.... எங்களுடைய சகோதரர்களும், எங்களுடைய ஹிந்து சகோதரர்களும், விஹெச்பியை சார்ந்தவர்கள் மற்றும் RSS யை சார்ந்தவர்களும் இருந்தனர்...... யாரும் தனக்கு தேவையானதை (பெண்களை) எடுத்திருப்பார்கள்....பழங்கள் இருக்கும் போது எடுக்காமல் யார் தான் இருப்பார்கள்?..... அவர்களை(முஸ்லிம்களை) எவ்வளவு அதிகம் துன்பப்படுத்தினாலும் அது குறைவானதே... நான் உண்மையிலேயே அவர்களை வெறுக்கிறேன்.... அவர்களை விட்டு வைக்க விரும்பவில்லை ... பார் என் மனைவி இங்கே தான் அமர்ந்து இருக்கிறாள். ஆனால் நான் ஒன்றை சொல்கிறேன்..... பழம் இருந்தது எனவே அது சாப்பிடப் படவேண்டும்... நான் கூட சாப்பிட்டேன்... ஒரு தடவை சாப்பிட்டேன். (அடத்தூ! மானங்கெட்டக் காட்டுமிராண்டிகளை விடக்கேவலமானவர்களே. உங்களுக்கெல்லாம் சிறிது கூட வெட்கம் என்பது இல்லையா? நிச்சயம் ஒருநாள் வந்தே தீரும். அந்நாள் இதற்கெல்லாம்..... - இறை நேசன்)

 

தெஹல்கா: ஒரு தடவை தானா?

ரிச்சர்ட்: ஒரு தடவை தான்.... பிறகு மீண்டும் கொல்வதற்குப் போகணும்.... (உறவினர் பிரகாஷ் ரத்தோடிடம் திரும்பி அவன் கற்பழித்துக் கொலை செய்த பெண்ணைப் பற்றி சொல்கிறான்).... உபயோகமில்லாதப் பொருட்களை வாங்கும் வியாபாரியின் மகளான நசீமா.... நசீமா குண்டான ஒருத்தி... நான் மேலே......

தெஹல்கா: நீ அவள் மேலே ஏறினாயா?

ரிச்சர்ட்: ஆம், உண்மையாகவே.....

தெஹல்கா: அவள் பிழைத்திருக்கவே மாட்டாள், பிழைத்தாளா?

ரிச்சர்ட்: இல்லை, பிறகு அவளை நான் கூழாக்கினேன்... அவளை ஊறுகாயாய் ஆக்கிவிட்டேன்.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html