Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசியத்தில் உள்ளடகத்துக்கும் வடிவத்துக்கும் உள்ள வேறுபாட்டை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளாமல், ஒரு நாளும் பாட்டாளி வர்க்கம் தேசியத்தை ஆணையில் வைக்க முடியாது.

 



தமிழீழ புதிய சனநாயக கட்சி வெளியிடும் தேசபக்தன் இதழ் 23 இல் "இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" என்ற நூல் மீதான அறிமுகத்துடன் கூடிய, ஒரு கோட்பாட்டு விவாவதத்தை நடத்தியுள்ளனர். தேசியம் தொடர்பான மையமான ஒரு கோட்பாட்டு விவாதத்தை நடத்தியுள்ளனர். எதிர்பராத வகையில் அடிப்படை மார்க்சியத்துக்கு எதிராகவே தேசபக்தனிடம் இருந்து எதிர்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. சுற்றி வளைத்து இன்று எதார்தத்தில் நிலவும் பிற்போக்கான புலித் தேசியத்தை பாதுகாக்க, தம்மால் இயன்ற வரையில் ஒரு கோட்பாட்டை முன்தள்ளியுள்ளனர். கோட்பாட்டு ரீதியான எனது அரசியல் விமர்சனத்தை, ஒரு கோட்பாட்டு (மார்க்சிய) விலகலாக மாற்றிவிட முனைகின்றனர். இதற்காக அவர்கள் நூலுடன் தொடர்பற்ற வகையில் வெளியில் சென்று முன்வைக்கும் வாதத்தின் உள்ளடக்கம், விவாதத்தின் அடிப்படையான கருப்பொருளை மயக்க நிலையில் தள்ளிவிடுகின்றது.



"தேசியம்" என பொதுவாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி, அதில் இருந்தே இந்த விவாவதத்தைக் கட்டமைக்கின்றனர். "அடுத்தாக "தேசியத்தை" தெளிவாக அடையாளப்படுத்துவதிலும் நூலில் குழப்பம் உள்ளது" என்று அடித்துக் கூறுகின்றனர். "..தேசியத்தை, முதலாளி வர்க்கத்தின் எல்லைக்குள் மட்டும் நிறுத்தி வைத்து முற்போக்கு தேசியம் - பிற்போக்கு தேசியம் என பார்க்கிறார், அனுகுகிறார்" எனக் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு எனது முந்திய நூலான "தேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவ கோரிக்கையே.." என்ற நூலை தேசபக்தன் சுட்டிக் காட்டுகின்றனர்.

 


தேசியம் என்பது என்ன? இது தொடர்பான ஒரு அரசியல் விவாவதத்தை சமரில் இவர்களை நோக்கி நடத்தியிருந்த போதும், அவர்கள் அந்த விவாவதத்தை ஒரு தலைப்பட்சமாக தவிர்த்தே வந்தனர். தேசியம் என்பது என்ன? தேசியம் எங்கிருந்து உருவானது? எப்படி உருவாகின்றது? தேசியத்தின் வர்க்க அடிப்படைகள் என்ன?



இதுவே பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையான மையமான விவாவதமாகும். இதில் இருந்தே அனைத்து அரசியல் விலகலும் எற்படுகின்றது. இது குறிப்பாக அதன் வர்க்க அடிப்படையில் இருந்து விலகும் போது, இந்த விலகல் பல்வேறு சமூக நடைமுறையில் பாட்டாளி வாக்கத்துக்கு எதிராகவே மாறிவிடுகின்றது. தேசியம் என்பது பூர்சுவா வர்க்கம் தனது முதலாளித்துவ உற்பத்திமுறை சார்ந்து, உருவான ஒரு சமூகப் போக்கே. இதை தேசபக்தன் மறுக்கின்றது. அதாவது ஒரு நிலத் தொடரில் சொந்த தேசிய பொருளாதார கட்டமைப்பை நிறுவி, அதன் மேல் உருவான பண்பாட்டு கலாச்சார கூறுகளை உள்ளடக்கிய ஒரு உற்பத்தி முறையே தேசியமாகின்றது. இது ஒரு தேசமாக பரிணமிக்கின்றது. தேசம், தேசியம் என்பது எதார்த்தத்தில் இப்படித்தான் இருக்கின்றது. இதை தேசபக்கதன் மறுக்கின்றது. தேசியம் என்பது எப்போதும் எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையாக இருந்தது, இருக்கின்றது. இதை மறுக்கும் அடிப்படையான கோட்பாட்டு உள்ளடக்கம், பல்வேறு திரிபுகளை அடுக்கடுக்காக புகுத்துகின்றது.



நீங்கள் இதை மறுப்பீர்கள் எனின், தேசியம் என்ற சமூக பொருளாதாரக் கூறு என்பது மறுப்புக்கு உள்ளாகின்றது. இது ஒரு முதலாளித்துவ சமூக பொருளாதார கூறு அல்லாவெனின், அது தோன்றிய வடிவத்தில் இருந்து எப்போதும் மாறியது. இது அனைத்து வர்க்க தேசியமாக வர்க்கம் கடந்தது எப்போது? ஏன் மாறியது? இங்கு நான் எழுப்புவது தேசியத்தின் பொருளாதாரக் கூறு பற்றிய மையமான அரசியல் விவாவதத்தையே.



முதலில் உற்பத்தி முறையில் எற்பட்ட மாற்றங்கள் ஊடாக தேசியம் தோன்றி தேசமாக வளர்ந்த நாடுகளே, ஏகாதிபத்தியமாக பின்னால் பரிணமித்தது. அதைத் தொடாந்து உலகைப் பங்கீட எகாதிபத்திய நாடுகளுக்கிடையில் முதலாவது உலக யுத்தம் ஏற்பட்டது. இக் காலத்தில் சோவியத்தில் பட்டாளி வர்க்கப் புரட்சியும் நடந்தது. இதைத் தொடர்ந்து எற்பட்ட சர்வதேச நிலைமையால், பூர்சுவா வர்க்கம் தேசிய புரட்சிக்கு தலைமை தாங்கும் வரலாற்று பாத்திரத்தை இயல்பாக இழந்தது. அதாவது பூர்சுவா ஜனநாயக புரட்சி நடை பெறாத நாடுகளில், தேசிய பூர்சுவா வர்க்கம் சொந்தப் புரட்சியை நடத்த முடியாத நிலைக்கு உலக நிலைமை மாறியது. இந்த நிலை எந்த விதத்திலும் தேசியக் கோரிக்கையை வர்க்கம் கடந்ததாக்கவில்லை. எந்த விதத்திலும் அனைத்து வர்க்க கோரிக்கையாக தேசியம் மாறிவிடவில்லை. தேசியம் என்ற கோரிக்கை தொடர்ந்தும் தேசிய பூர்சுவா கோரிக்கையாகவே எதார்த்தத்தில் இருந்தது. மார்க்ஸ் தேசியத்துக்கு பதில் சர்வதேசியத்தை, பாட்டாளி வர்க்க அடிப்படையாக முன்னிறுத்திய சர்வதேசிய நிலைப்பாட்டில் எந்த மற்றமும் நிகழவில்லை. அது போல் எந்த விதத்திலும் அது பொய்துப் போகவில்லை. தேசியமும் சர்வதேசியமும் உலக அரங்கில் எதிர் எதிர் திசையில் வர்க்க முரண்பாட்டின்; அடிப்படையில் நீடித்தன, நீடிக்கின்றன.



கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் மிகவும் நுட்பமாக வரையறுத்து விளக்கியதை, இன்று மீளக் கூறுவது சலாப் பொருத்தமாகும். "முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லையெனினும் எப்படியும் வடிவத்தில், ஆரம்பத்தில் தேசியப் போராட்டமாகவே இருக்கின்றது." இந்த உண்மையை புரிந்து கொள்ளாத வரை, இரண்டையும் ஒன்றாக போட்டு குழப்புவதில் இருந்தே திசை விலகல் எற்படுகின்றது. உள்ளடகத்தில் அல்ல, வடிவத்தில் தேசிய போராட்டமாக இருக்கின்றது என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குழப்பத்தை மிக துல்லியமாக தெளிவு படுத்துகின்றது. இதை மறுத்து உள்ளடகத்துக்கும் பொருத்தி வடிவத்துக்கு இணைகின்ற போது, இயல்பாகவே மார்க்சியத்துக்கு எதிரான வாதம் உருவாகின்றது. இங்கு உள்ளடக்கம் என எதைக் குறிப்பிடுகின்றனர். தேசியத்துக்கு எப்போதும் எங்கும் இருக்கின்ற முதலாளித்துவ தேசிய அடிப்படையயேயாகும். இதை தேசபக்தன் மறுத்து தேசியத்துக்கு மறு விளக்கம் கொடுக்க முனைகின்றனர்.



மேலும் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் இதை துல்லியமாக அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை. "தொழிலாளர்களுக்குத் தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாத காரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெற்றாக வேண்டும், தேசத்தின் தலைமையான வர்க்கமாய் உயர்ந்தாக வேண்டும், தன்னையே தேசமாக்கி கொண்டாக வேண்டும். அதுவரை பாட்டாளி வர்க்கம் தேசியத் தன்மை கொண்டாக வேண்டும். அதுவரை பாட்டாளி வர்க்கம் தேசியத் தன்மை கொண்டதாகவே இருக்கின்றது. ஆனால் இச் சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில்; அல்ல." மிகவும் நுட்பமாகவே, துல்லியமாகவும் மார்க்சிய அடிப்படையில் விளக்குகின்றனர். ஆனால் தேசபக்கதன் இதை மறுக்கின்றது. ஒரு தொழிலாளி தேசியத் தன்மையை கொள்ள வேண்டும் என்று கூறும்; போது, அதை இச் சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில் இருந்து அல்ல என்பதை துல்லியமாக விளக்குகின்றார். இந்த சொல்லுக்குரிய தேசிய அர்த்தம் முதலாளித்துவமே. தேசியத் தன்மைக்குரிய முதலாளித்துவ அர்த்த்ததில் அல்லாத போக்கில், பாட்டாளி வர்க்கம் தேசிய தன்மை கொள்வது பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே. இந்த தேசியம் என்பது பாட்டாளி வர்க்க நலன்களை முன்வைத்து, அதன் தலைமையில் ஜனநாயகக் கோரிக்கைகளை கோருவதன் மூலம், ஜனநாயகக் கோரிக்கை அல்லாத முதலாளித்துவ கோரிக்கைகளை தனிமைப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதாகும். மக்கள் உழைக்கும் ஒரு கூட்டமாக இருப்பதால், அதற்கு எதிரான முதலாளித்துவத்தைத் தனிமைப்படுத்துவது, பாட்டாளி வர்க்கத்துக்கு இலகுவானதாகும். 18ம் நூற்றாண்டின் நாடுப்பகுதியில் மார்க்ஸ் இதை முன்வைத்த போது, முதலாளித்துவப் புரட்சி நடை பெறாத நாடுகளையும், நடை பெற்ற நாடுகளில் ஜனநாயக கடமையை நிறைவேற்றாத போக்கின் மேல் நின்றே இதை உரைக்கின்றார்.



பாரிஸ் கம்யூன் இந்த சரியான உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளமையால் தான், முற்றாக தவறு இழைத்தனர். இதை லெனின சுட்டிக் காட்டும் போது "1971 பாரிஸ் கம்யூனின் நினைவை எவ்வளவுக்கெவ்வளவு போற்றிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதன் தவறுகளையும் அதனைச் சூழ்ந்திருந்த தனி நிலைமைகளையும் பகுத்தாய்ந்திடாமல் போகிறபோக்கில் மேம்போக்காகக் குறிப்பிடுவது அனுமதிக்கத்தக்கதல்ல." என்றார். மேலும் அவர் "இது (பாரிஸ் கம்யுனை), இந்த அரசாங்கம் ஜனநாயகப் புரட்சியின், சோஷலிஸப் புரட்சியின் அம்சங்களக்கிடையே வேறுபடுத்திப் பார்க்கத் திறனற்றிருந்தது, அந்த அரசாங்கம் குடியரசக்காகப் போராடும் பணிகளை சோஷலிஸத்துக்காகப் போராடும் பணிகளோடு போட்டுக் குழப்பிக் கொண்டது..." "... "கம்யூன்கள்" எவையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமற் போன ஜனநாயகப் புரட்சியையும் சோஷலிஸப் புரட்சியையும் குழப்பிக் கொள்வதை " போன்றே, இன்று தேசபக்தன் தொடாச்சியாக செய்கின்றனர்.



உண்மையில் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேசம் தேசியம் பற்றி எடுத்துரைக்கும் போது, பாட்டாளி வர்க்க அதிகாரத்தை கைப்பற்ற பல படித்தான மக்கள் போராட்டங்களை கையயகப்படுத்த வேண்டியதை உள்ளடக்கியே, பாட்டாளி வர்க்கத்துக்கு அறை கூவலை விடுத்தனர். அதே கம்யூனிச அறிக்கையில் அவர்கள் "முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டியிருக்கும் வௌ;வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், அவர்கள் எப்போதும் எங்கும் இயக்கம் அனைத்துக்குமான நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்." பாட்டாளி வர்க்க நலன்களை சார்ந்து போராட்டத்தின் எல்லா வளர்ச்சிக் கட்டத்திலும் தலையிடுவதையும், பாட்டாளி வர்க்கம் சுறுசுறுப்பாக அவற்றில் செயல்பட வேண்டியதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஆனால் படிநிலை வளர்ச்சிக் கட்டத்தின் உள்ள போராட்டம் உள்ளடக்கிய கோரிக்கைகளும், பாட்டாளி வர்க்க கோரிக்கைகளும் ஒன்றாகி விடுவதில்லை. அது போல் படிநிலை கோரிக்கை, பாட்டாளி வர்க்க கோரிக்கையாகிவிடுவதில்லை. ஏனெனின் ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கங்கள் இங்கு போராட்டத்தை எப்போதும் நடத்துகின்றது. லெனின் "ஜனநாயகப் புரட்சியின் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்தந்திரங்கள்" என்ற நூலில் இதையே "... ஜனநாயகப் புரட்சி (சமுதாய-பொரளாதார உள்ளடக்கத்தில் முதலாளித்துவத் தன்மையுடையது) பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் அக்கறைக்கு உரியதாயிராது என்று இதிலிருந்து தொடர்கிறதில்லை." என்றதன் மூலம், இரண்டு பக்கத்தின் வௌ;வேறு பத்திரங்களை துல்லியமாக வேறுபடுத்திக் காட்டுகின்றார். இது ஒரு முதலாளித்துவக் கோரிக்கை என்பதை நிராகரிக்க முடியாது என்பதையும், இது முதலாளித்துவ கோரிக்கையாக இருப்பதால் இதைப் புறக்கணிப்பது புரட்சிகர கடமையை நிராகரிக்கும் இரட்டைத் தவறையும் சுட்டிக் காட்டுகின்றார். பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் அழுத்த திருத்தமாகவே கூறிச் சென்றுள்ளார். "ஜனநாயகப் புரட்சியின் எல்லாக் குறிக்கோள்களையும் மட்டுமின்றி அதைத் தொடாந்து வரக்கூடிய சோசாலிசப் புரட்சியின் குறிக்கோள்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளபடி செய்கிற முறையில் உங்கள் வர்க்கப் போராட்டத்தின் வரம்பையும் உள்ளடகத்தையும் விரிவாக்க முயற்சிக்க வேண்டும்" இது தான் தேசியத்தின் பால் பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையான கடமையாகும். இதையே திரோஸ்கியம் நிராகரிக்கின்றது. தேசபக்கதன் இந்த வேறுபாட்டை காணமறுத்த தேசிய சேற்றில் வீழ்கின்றனர். லெனின் இதை மேலும் துல்லியமாக எடுத்துரைக்கும் போது "சோஷலிஸத்தின் பிரச்சினைகளிலும் சோஷலிஸத்திற்கான போராட்டத்திலும் ஒற்றுமை இல்லாமை ஜனநாயகத்துவத்தின் பிரச்சினைகளிலும் குடியரசக்கான போராட்டத்திலும் சித்தத்தின் ஒற்றுமையை விலக்கவில்லை. இதை மறப்பது ஜனநாயகப் புரட்சிக்கும் சோஷலிஸப் புரட்சிக்கும் உள்ள தாக்கரீதியான, வரலாற்று வழிப்பட்ட வேற்றுமையை மறப்பதற்குச் சமமாகும்.." என்றார் லெனின். தேசியம் என்பது என்ன? அதன் வர்க்க சராம்சம் என்ன? பாட்டாளி வர்க்கம் எந்த நிலையில், எப்படி இதில் தலையிடல் வேண்டும் என்று துல்லியமாகவே லெனின் அறிவுறுத்திவிடுகின்றார். இதை தேசபக்கதன் காணத் தவறுவதன் மூலம், எமக்கு எதிரான விமர்சனத்தை கட்டமைக்கின்றனர்.

 

இந்த உள்ளடக்கத்தை மிகச் செறிவாக்கிய மாவோ, அதை புதிய ஜனநாயக புரட்சியாக வரையறுக்கின்றார். ஜனநாயக கடமை என்பது உள்ளடகத்தில் முதலாளித்துவக் கூறாக இருப்பதால், வர்க்க ரீதியாக பாட்டாளி வர்க்கம் தனது அதிகாரத்தை தெளிவாக்கவும் வகையில் புதிய ஜனநாயக புரட்சியை முன்வைத்தார். இது சோவியத் புரட்சியின் பின்னலான சர்வதேச நிலைமையை பூர்த்தி செய்வதை உறுதி செய்கின்றது. இங்கு புதிய ஜனநாயகம் என்பது சராம்சத்தில் பாட்டாளி வர்க்க தலைமையில் தேசிய முதலாளிகளை அணிதிரட்டுவதை உறுதி செய்கின்றது. அதாவது இங்கு தேசிய முதலாளித்துவ நலன்களையும் உள்ளடக்கிய அரசியல் திட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சி முன்வைக்கின்றது. இதை தேசபக்தன் மறுதலிப்பதால் தான் வர்க்கமற்ற தேசியம் பற்றி பொதுவாக முன்தள்ளுகின்றனர். புதிய ஜனநாயக கட்சி என்று வர்க்கம் கடந்து பெயரை வைப்பதன் மூலம், வர்க்க உள்ளடகத்தை பற்றிய சரியான மதிப்பிட்டை திரித்துவிடுகின்றனர் ஆனால் மார்க்சியம் இதை துல்லியமாக வேறு பிரித்தறிகின்றது. அதை லெனின் தெளிவுபடுத்தி பாட்டாளி வாக்கத்தின் வர்க்கக் கடமையை புகட்டும் போது "..ஜனநாயகப் புரட்சியின் எல்லைகளை நேரடியாகத் தாண்டிச் செல்லத் திறனற்ற புரட்சியின் மறுக்க முடியாத முதலாளித்துவத் தன்மையை அங்கீகரிக்கிற அதே நேரத்தில், நம் கோஷம் இந்தக் குறிப்பிட்ட புரட்சியை முன்னுக்குக் கொண்டு செல்கிறது, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகவும் அனுகூலமான வடிவங்களை அதற்குக் கொடுக்க முயல்கிறது. எனவே, பாட்டாளி வர்க்கம் மேற்சென்று சோஷலிஸத்துக்காக நடத்தும் போராட்டத்தில் மீகு வெற்றி பெறுவதற்காக ஜனநாயகப் புரட்சியை முற்றாக பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றது" என்று லெனின் தெளிவுபடுத்தியதன் மூலம், தேசிய புரட்சியை பாட்டாளி வர்க்க நலனுக்காக, பாட்டாளி வர்க்கம் பயன்படுத்திக் கொள்கின்றதே ஒழிய, தேசியம் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்ககையல்ல என்பது திட்டவட்டமாக தெளிவாக்கின்றார்.



இனி நாம் தேசியத்தையும் அதன் உள்ளடகத்தையும் மேலும் குறிப்பாக ஆராய்வோம்;. பூர்சுவா புரட்சி நடைபெறாத நாடுகளில், பூர்சுவா வர்க்கம் புரட்சிகரமான பத்திரத்தை வகிக்க முடியாத சர்வதேச நிலைமையாக, 1917 சோவியத் புரட்சி மற்றும் ஏகாதிபத்திய சகாப்த்தமாக உலகம் மாறியது. புரட்சி என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்க சகாப்தமாக மாறியது. ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கூர்மையானதுடன், காலனிய நாடுகளாக இருப்பதை இது மேலும் நுட்பமாக்கியது. ஆனால் குட்டிபூர்சுவா வர்க்கம், தேசிய பூர்சுவா வர்க்கமும் உற்பத்தி வடிவம் சார்ந்து, இயல்பாகவும் தன்னியல்பாகவும் தேசிய கோரிக்கையை எப்போது முன்வைத்தது, முன்வைத்து வருகின்றது.



இங்கு பாட்டாளி வர்க்கம் சொந்த வர்க்கப் புரட்சியை ஏப்படி முன்னெடுப்பது என்ற கேள்வி இங்கு மையமான பொருளாகின்றது. பூர்சுவா வர்க்கம் சொந்த தேசியக் கோரிக்கையை முன்வைத்து போராடும் போது, ஏகாதிபத்தியம் இதை அனுமதிக்காது ஒடுக்கின்றது. இதை ஏகாதிபத்தியம் நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்கும் எல்லாவற்றிலும் தன்னியல்பாக செய்கின்றது. சொந்த காலனியில் நேரடியாகவும், மற்றைய நாடுகளில் அதாவது அரைநிலப்பிரபுத்துவ அரைக்காலனிய மற்றும் நவகாலனிய நாடுகளில் வடிவத்தில் வேறுபட மறைமுகமாக நாட்டுக்கு நாடு வேறுபட்ட வடிவத்தில் ஒடுக்குகின்றது. தேசிய பூர்சுவா வர்க்கம் தேசிய கோரிக்கையை சொந்த நாட்டில் கோருவதை, பொருளாதார ரீதியாக தொடங்கி அனைத்து துறையிலும் ஒடுக்கி அழிக்கின்றது. ப+ர்சுவா வர்க்கம் தனது தலைமையில் பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்ட முடியாத சர்வதேச மற்றும் வர்க்க நிலைமை, பூர்சுவா வர்க்கத்தின் தனித் தன்மையை அழித்து விடுகின்றது. அத்துடன் பூர்சுவா வர்க்கம் முன்னெடுக்கும் தேசிய உற்பத்தியை, எகாதிபத்திய உற்பத்திக்கு முன் போராடிப் பாதுகாக்க முடியாத நெருக்கடியை தொடர்ச்சியாகச் சந்திக்கின்றது. இதனால் எழும் பூர்சுவா போராட்டம் தோல்வி பெறுகின்றது அல்லது சரணடைகின்றது. போராட்டம் ஏகாதிபத்தியத்தின் தொங்கு தசையாக, ஏகாதிபத்திய கைக்கூலி தரகு தேசியமாகின்றது. இது ஒரு சங்கிலித் தொடரான நிகழ்ச்சியாக எதார்த்தத்தில் இருந்து எழுகின்றது.



பூர்சுவா வர்க்க புரட்சி நடைபெறாத நாடுகளில் பாட்டாளி வர்க்கம் சொந்த புரட்சியை நடத்த எத்தனிக்கும் எல்லா நிலைமையிலும், தேசிய பூர்சுவா வர்க்கம் பற்றிய நிலைப்பாட்டுடன் தொடர்புடையாதாக மாறுகின்றது. ப+ர்சுவா வர்க்கம் நியாயமாக நடத்துகின்ற போராட்டத்தை எதிராக நிறுத்தின், பாட்டாளி வர்க்கம் போராட்டம் தோல்வியை தழுவது தவிர்க்க முடியாத நிகழ்சி நிரலாகி விடுகின்றது. தேசிய பூர்சுவா வர்க்கத்தின் வர்க்க கோரிக்கையை பாட்டாளி வர்க்கம் எப்படி அனுகுவது என்பதே, தேசியத்தில் உள்ள மையப் பிரச்சனையாகும். இதையே அன்று மார்க்ஸ் உள்ளடகத்தில் அல்ல, வடிவத்தில் எப்படி தேசியமாக இருப்பது என்பதை முன்வைக்கின்றார். தேசிய ப+ர்சுவா வர்க்கத்தின் ஜனநாயக கோரிக்கைகள், பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுடன் நேரடியாக தொடர்புடையதாக இருப்பதை பாட்டாளி வர்க்கம் அடையாளப்படுத்துகின்றது. பாட்டாளி வர்க்கம் இந்த ஜனநாயகக் கோரிக்கையை ஒரு அரசியல் கோரிக்கையாக முன் நிறுத்துகின்றது. இதன் மூலம் தேசியக் கோரிக்கையை உள்ளடகத்தில் அல்ல, வடிவத்தில் தன்னிலைப்படுத்துகின்றது. தேசிய பூர்சுவா வர்க்கத்தின் ஜனநாயகக் கோரிக்கையை பாட்டாளி வர்க்கம் தனதாக்கும் போது, உள்ளடகத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கையாகவும் வடிவத்தில் பாட்டாளி வர்க்க கோரிக்கையாகவும் நீடிக்கின்றது.



தேசிய புரட்சியின் உயர்ந்தபட்ச எல்லையான ஜனநாயக புரட்சியின் அடிப்படையை பாட்டாளி வர்க்கம் கடந்து செல்வது அவசியமாகின்றது. இதை எப்படிக் கடந்து செல்வது என்பதை லெனின் விளக்கும் போது, எச்சரிக்கையுடன் வர்க்க அடிப்படைகளை தெளிவுபடுத்தி விரிவுபடுத்திக் காட்டுகின்றார். "வெறும் ஜனநாயகப் புரட்சியின் எல்லைகளை நேரடியாகத் தாண்டிச் செல்லத் திறனற்ற புரட்சியின் மறுக்க முடியாத முதலாளித்துவத் தன்மையை அங்கீகரிக்கிற அதே நேரத்தில், நம் கோஷம் இந்த குறிப்பிட்ட புரட்சியை முன்னுக்குக் கொண்டு செல்லுகின்றது, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகவும் அனுகூலமான வடிவங்களை அதற்குக் கொடுக்க முயல்கின்றது. எனவே, பாட்டாளி வர்க்கம் மேற்சென்று சோஷலிஸத்துக்காக நடத்தும் போராட்டத்தில் மிகு வெற்றி பெறுவதற்காக ஜனநாயகப் புரட்சியை முற்றாகப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றது" இங்கு யாரும் தட்டுத்தடுமாற முடியாது. தேசியம் என்றால் என்ன? அதன் வர்க்கப் பாத்திரம் என்ன? அதன் இலட்சியத்தின்  எல்லை என்ன? இதில் இருந்து பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்ன? இதையே எனது நூலான "இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" தெளிவு படுத்தி அணி திரள அழைக்கின்றது.



இதை தெளிவாக புரிந்து கொண்டு தேசிய உற்பத்தியை பாதுக்காக்கவும், தேசிய முதலாளித்துவ அழிவுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் குரல் கொடுத்து அதற்காக போராடுகின்றது. இது உள்ளடகத்தில் எப்போதும் முதலாளித்துவ கோரிக்கையாகவே தேசியம் சார்ந்து உள்ளது. இங்கு தேசிய முதலாளித்துவத்தை ஆதாரித்து பாட்டாளி வர்க்கம் போராடும் போது, பாட்டாளி வர்க்க நலன்களை தேசிய முதலாளித்துவத்திடம் வரையறுத்த அளவில் கோருவதையும் அதைப் பெறுவதையும் கைவிட்டுவிடுவதில்லை. தேசிய சுரண்டலை அனுமதிக்கும் போதும், தேசிய தனிச் சொத்துரிமையை பாட்டாளி வர்க்கம் அங்கிகரிக்கும் போதும், பாட்டாளி வர்க்க நலன்களை சார்ந்து நின்றே தனது புரட்சியை முன்னெடுக்கின்றது. ஆனால் இந்த தேசிய கோரிக்கை கோட்பாட்டு ரீதியாக, முதலாளித்துவ கோரிக்கையாகவே நீடிக்கின்றது. பாட்டாளி வர்க்கம் தேசிய பூர்சுவா வர்க்க நலன்கள் சார்ந்து, தனது புரட்சியை உறுதி செய்யும் ஒரே குறிக்கோலாகவே இதை ஒரு யுத்த தந்திரமாக கையாளுகின்றது. இதனால் ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில், புதிய ஜனநாயகப் புரட்சியாக தேசியத்தை பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கின்றது. லெனின் வார்த்தையில் கூறினால் "...தன்னலம் பேணுகிற பேடித்தனமுள்ள முதலாளி வர்க்கத்தையும் மீறி மக்களோடு சேர்ந்த நாம் புரட்சியை நடத்தி முடிக்க முயற்சிக்க வேண்டும்" உண்மையில் இதை மேலும் தெளிவாக கூறினால் பாட்டாளி வர்க்கமும் தேசிய முதலாளித்துவ வர்க்கமும், புதிய ஜனநாயக புரட்சியில் இணைந்து நிற்கின்றனர். இந்த புதிய ஜனநாயக புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்குகின்றது. புதியஜனநாயகப் புரட்சி சாரம்சத்தில் தேசிய முதலாளிகளும், பாட்டாளி வர்க்கம் ஒரே அணியில் கைகோக்கின்றனர். இங்கு பாட்டாளி வர்க்கமும், தேசிய முதலாளித்துவ சக்திகளும் தத்தம் கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையில் கீழ் இருந்து கட்டபப்படும் ஒரு ஜக்கிய முன்னணியே புதிய ஜனநாயக புரட்சியாகின்றது. 



இங்கு நாம் இதை தெளிவாக புதியஜனநாயக புரட்சி என் வரையறக்கின்றோம் என்றால், தேசிய முதலாளித்துவ சக்திகளை உள்ளடக்கிய வகையில் தேசிய புரட்சியை நடத்துவதால் மட்டுமே. இந்த புரட்சியில் உள்ள தேசிய கோரிக்கை தேசிய பூர்சுவா வர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய கோரிக்கையாக இருப்தால், முதலாளித்துவ கோரிக்கையாகவே இங்கும் தொடர்ந்து நீடிக்கின்றது. இது எந்த விதத்திலும் பண்பியல் மற்றத்தை பெறவில்லை. பாட்டாளி வர்க்கம் இந்த புதிய ஜனநாயக புரட்சியில் தனது வர்க்க நலன்களையும் உள்ளடக்கி உள்ளதால், இறுதியில் எந்த வர்க்கம் வெற்றி பெறும் என்பது முடிவாகிவிடுவதில்லை. புதியஜனநாயகப் புரட்சியில் தேசியம் சார்ந்த இருக்கும் தேசிய முதலாளித்துவ உள்ளடக்கத்தை களையவே, பாட்டாளி வர்க்கம் புதியஜனநாயகப் புரட்சியில் இருந்து சோசலிசத்தை நோக்கிய புரட்சியை நடத்த வேண்டிய வர்க்க முரண்பாடு நீடிக்கின்றது. சோசலிசத்தை நோக்கி நகரும் போது, தேசிய கோரிக்கை படிப்படியாக பல்வேறு வழிகளில் அழிக்கின்றது. உள்நாட்டில் தேசிய கோரிக்கை அர்த்தமற்றதாக பொருளற்றதாக மாறுகின்றது. ஆனால் வடிவத்தில் மற்றயை நாடுகளுடன் தேசிய உள்ளடக்கம் தொடர்ந்தும் நீடிக்கின்றது. எனெனின் மற்றயை நாடுகளில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வாரமையால் இந்த நிலை தொடருகின்றது. அதாவது சர்வதேசியத்துக்கு எதிரான, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான ஒரு வர்க்கப் போராட்டமாக நீடிப்பதால், பாட்டாளி வர்க்க ஆட்சிக்கு வந்த நாடுகள் கூஅ, ஒரு தேசியமாகவே நீடிக்கின்றது. இது சராம்சத்தில் மற்றயை நாட்டு அரசுகளுடனான உறவில் தேசியமாகவும் (இங்கு வேறுபட்ட தன்மை இருந்த போதும், முதலாளித்துவ கண்ணோட்டத்தில் தான்), பாட்டாளி வர்க்கத்துடன் சர்வதேசியமாகவும் தொடருகின்றது.



லெனின் மிக தெளிவாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் கையாண்ட போது "சிறுமுதலாளி வாக்கத்தினர் நடத்தும் போராட்டத்தை ஒரு சோஷலிஸப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டத்துடன் போட்டுக் குழப்பவது சோஷலிஸ்டு அரசியலை திவலாக்கிவிடும்; அபாயத்தை உண்டாக்குகிறது. மார்க்ஸ் விடுத்த  இந்த எச்சரிக்கை முற்றிலும் நியாயமானது" என்றார். அதே நேரம் அவா "... சமூக-ஜனநாயகக் கட்சியால் ஒழுங்கமைக்கப் பெற்ற பாட்டாளி வர்க்கத்தை மட்டுமின்றி எங்களுடன் அக்கம் பக்கமாக வழிநடையிட திறமைபடைத்த இந்தச் சிறுமுதலாளி வர்க்கத்தினரையும் வழிகாட்டி நடத்திச் ..." செல்ல வேண்டும் என்றார். ஆனால் தேசபக்தன் இரண்டக்குமுள்ள வேறுபாட்டை குழப்பி, குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றனர். தேசபக்கதன் தேசியத்துக்கு வர்க்கம் கடந்த இரட்டைப் பண்பு உண்டு என்கின்றனர். அதையும் தெளிவாக சொல்லாது மூடிமறைக்கின்றனர். அதாவது எந்த வர்க்கம் தேசியத்தை பயன்படுத்துகின்றதோ, அந்த வாக்கத்துக்கு இசைவாக தேசிய கோரிக்கை இருப்பதாக கூற முனைகின்றனர். உண்மையில் தேசியத்தின் முதலாளித்துவக் கூறை மறுப்பதால், ஜனநாயகக் கோரிக்கையை பாட்டாளி வர்க்கத்தின் கடமையாக மட்டும் சித்தரிக்கின்றனர். இதை முதலாளித்துவ பிரிவிடம் கோருவது அபத்தம் என்கின்றனர். ஜனநாயக கடமையை தேசிய இயக்கங்களிடம் கோருவது, அதை மையமாக வைத்து விமர்சிப்பது ஆகாது என்கின்றனர். இதில் இருந்N;த அவர்கள் என் நூல் மீதான பலதரப்பட்ட விமர்சனத்தை வைக்கின்றனர்.



லெனின் சுட்டிக் காட்டிய அரசியல் உள்ளடக்கமான "ஜனநாயகத்துவத்தின் எல்லைகளுக்கு அப்பால் பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாயி முதலாளி வர்க்கத்தினருக்கும் ஒற்றைச் சித்தம் இருக்கும் பிரச்சனை இருக்க முடியாது" என்பதை மறுத்து குறிப்பாக தேசபக்கதனின் வாதத்தில் "சிறீலங்கா அரசின் இன ஒடுக்குமுறை யுத்தத்தையும், புலிகளின் இன ஒடுக்குமுறை எதிர்ப்பு யுத்தத்தையும், இந்திய ஆக்கிரமிப்பு யுத்தத்தையும், புலிகளின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு யுத்தத்தையும் "இன யுத்தம்" என வரையறுக்க முடியாது நீதியான யுத்தம் - அநீதியான யுத்தம் பற்றிய பார்வையில் பற்றிய பார்வையில் பாரிய தவறு இருப்பதை காட்டுகின்றது" மேலும் அவர்கள் "நாளை புலிகள், சிறீலங்கா அரசுடன் - இந்தியரசுடன் - ஏகாதிபத்தியங்களுடன் சமரசப்படுவார்கள் என்ற முன் அவதானிப்பில் இருந்து, ஒடுக்கப்படும் - ஆக்கிரமிக்கப்படும் தேசிய இனத்தில் உள்ள தரகு முதலாளி வாக்கம் ஒடுக்கு முறையை - ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்துகின்ற யுத்தம் புரட்சிகர தேசிய விடுதலை யுத்தம் இல்லை. ஆனால் ஒரு போதும் ஒடுக்குமுறை அரசுகளின் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தத்துடன் சமன்படுத்தி பார்க்கக் கூடிய அநீதியான யுத்தமல்ல, இனயுத்தமல்ல, இது யுத்தம் பற்றிய கண்ணோட்ட தவறு மட்டுமல்ல என்பது ஆசிரியரும் வாசகர்களும் புரிந்து கொள்ள வேண்டும்;" என்கின்றனர்.



நாங்கள் எங்கேயாவது இரண்டு யுத்தத்தையும் சமப்படுத்தி காட்டியுள்னோமா? நிச்சயமாக இல்லை. நாம் எதார்த்தத்தில் நிலவும் தேசியம் மீதான விமர்சனத்திலேயே அரசியல் பொருளாதார விளைவுகளையே, எதார்த்தத்தின் மீதே சமப்படுத்தி காட்டியுள்ளோம்;. இங்கு எந்தக் கற்பனையும், ஊகத்தையும் நாம் சார்ந்து இருக்கவில்லை. தேசபக்கதன் கூறுவது போல் இனயுத்தம் எனச் சொல்வதால், இதைச் சமப்படுத்திவிடுவதில்லை அது போல் சமனாகி விடுமா! நீதியானது என சொல்வதன் மூலம் தான், அநீதியானதை வரையறுத்து எதிர் எதிராக நிறுத்த முடியுமா? பாட்டாளி வர்க்க சர்வதேசிய அடிப்படைகளை கைவிட்டு விடுவதன் மூலம், வரட்டுத்தனமாக ஒற்றைப் பரிமாணத்தில் அது அல்லது இது என்ற கேள்வியில் விவாவதத்தை நகர்த்தி விடுகின்றனர்.



இலங்கைக்கு வெளியில் எதார்த்தத்தில் கூர்மையாகிய பிரச்சனைகள் ஒன்றை எடுப்போம்;. குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போது சரி, அமெரிக்கா குவைத்துக்கு ஆதாரவாக நடத்திய தாக்குதலின் போதும் சரி, குவைத் அல்லது ஈராக் அல்லது அமெரிக்கா என எதை ஆதாரிப்பது அல்லது இதில் எது முற்போக்கானது நீதியானது என்ற முடிவை பாட்டாளி வர்க்கம் முன்வைத்து, ஆதாரித்து இருக்க வேண்டுமா? இது போன்று இன்று ஈராக் மீது அமெரிக்கா தலைமையில் ஆக்கிரமிப்பை நடத்த முன்பு நடந்த போராட்டத்தில் ஈராக்கின் போராட்டத்தை முற்போக்கு மற்றும் நீதியான யுத்தம் என்பதா! இது போன்று கொத்வாரில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படையும், அரசுக்கும் கிளர்ச்சி படைக்கும் இடையில் நிற்கும் பிரஞ்சு ஆக்கிரமிப்பை தொடர்ந்து அமெரிக்கா ஆதாரவு ஆர்ப்பட்டங்கள் என அனைத்திலும் ஏது முற்போக்கானது, நீதியானது. இவற்றில் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் நிலை என்ன? இங்கு நாம் யுத்தத்தை சமப்படுத்த முடியாது. ஆனால் இதில் முற்போக்கு பிற்போக்கு நீதியானது என யுத்தத்தின் ஒரு பகுதிக்கு சார்பாக பாட்டாளி வர்க்கம் களத்தில் இறங்க முடியாது. பாட்டாளி வர்க்கம் தனது நலன் சார்ந்து, இந்த போராட்டத்தில் நேரடியாக இவற்றுக்கு வெளியில் சுயற்சையாக தலையிடுகின்றது. இதில் ஏகாதிபத்தியதுக்கு இடையில் மறைமுகமாக நடக்கும் யுத்தத்திலும் சரி, பிற்போக்கு இராணுவம் மற்றும் சர்வாதிகார அரசுகளின் யுத்தத்தில் சரி, பாட்டாளி வர்க்கம் தனது சொந்த நலனில் இருந்தே ஒவ்வொன்றிலும் குறிப்பாக தலையிடுகின்றது. இது ஒரு சர்வதேசிய பொது நிலைமை. உலகு எங்கும் ஒரே விதமாக ஒரே குறிக்கோலுடன் இது வழிகாட்டுகின்றது. நீதி, அநீதி, முற்போக்கு, பிற்போக்கு என அனைத்தையும், தனது சொந்த வர்க்க நிலையில் நின்று தான் பாட்டாளி வர்க்கம் வரையறுத்து அனுகுகின்றது.

 

இலங்கையில் நடப்பது இன யுத்தம் தான். இதைத் தாண்டி புலிகள் சென்று விடவில்லை. குறைந்தபட்சம் தேசிய இருப்பைக் கூட வரைமுறை இன்றி அழிக்கின்றனர். அதாவது தேசிய யுத்தத்தை புலிகள் நடத்தவில்லை. தேசிய யுத்தம் தேசிய நலன்களை (குறைந்த பட்சம் தேசிய முதலாளித்துவ நலன்களை) பாதுகாத்து அதற்காக போராடவேண்டும். இதை தேசபக்தன் பாட்டாளி வர்க்கதின் கடமை என்பதன் மூலம், அதை அடிப்படையாக கொண்டு விமர்சிப்பதை குற்றம் என்கின்றனர். ஆனால் புலிகளின் யுத்தத்தை இன யுத்தம் அல்ல என்று காவடி எடுக்கின்றனர்.



இலங்கையில் நடப்பது குறுந் தேசிய போராட்டமாக நாம் முதலில் கூறிய போது, மிகவும் தயக்கத்துடன் தான் பலர் அதை எற்றுக் கொண்டனர். இதை கோட்பாட்டு ரீதியாக ஏற்றுக் கொள்ளும் வகையில் நாம், பல அடுக்கடுக்கான எதார்த்த நிலைமையை தேசியத்தின் அடிப்படையை சார்ந்து நின்று எதிராக முன்னிறுத்த வேண்டியிருந்தது. ஒரு போராட்டம் குறுந்தேசிய போராட்டம் என்றால், அது சார்ந்து எழுவது இன யுத்தம் தான். இங்கு தேசிய நலன்கள் அதாவது குறைந்த பட்சம் தேசிய முதலாளித்துவ நலன்கள் கூட மறுக்கப்படுகின்றது. தேசிய முதலாளித்துவ நலன்களை குறைந்த பட்சம் முன்னிறுத்ததா போராட்டம் குறுந்தேசியமாவது போல், அதன் யுத்த வடிவமும் இன யுத்தம் தான். இங்கு அரசு சிங்கள இனவாதம் சார்ந்து இனஅழிப்பு யுத்தத்தை நடத்துவது போல், புலிகள் தமிழ் இனம் சார்ந்து இன தற்காப்பு யுத்தத்தை நடத்துகின்றனர். இங்கு தற்காப்பும் சரி அழிப்பும் சரி இனவாதம்; சார்ந்து பரஸ்பரம் நீடிக்கின்றது. சிங்கள இனவாத அரசின் அடிப்படைக் கொள்கையையே, புலிகளும் தமிழ் இனவாதம் சார்ந்து நிற்கின்றனர். இங்கு தேசிய நலன் சார்ந்து தேசிய யுத்தத்தைப் புலிகள் நடத்தவில்லை. தேசிய நலன்கள் குறைந்த பட்சம் தேசிய முதலாளித்துவ எல்லை வரை காணப்படுகின்றது. ஆனால் அதை புலிகள் என்றும் எப்போதும் முன்வைத்ததில்லை. அதை அழிக்கின்றனர். இந்தியா ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தத்தில் கூட ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தமாக இருந்த போதும், இது தேசிய யுத்தமாக மாறிவிடவில்லை. இங்கும் இன தற்காப்பு யுத்தத்தையே நடத்தினர். துல்லியமாக பார்த்தால் புலிகள் தமது சொந்த தற்காப்பு யுத்தத்தை, மக்களின் பெயரில் நடத்தினர். மக்களின் தேசிய அடிப்படை நலனில் இருந்து அல்ல.



இந்த இடத்தில் "நாளை புலிகள், சிறீலங்கா அரசுடன் - இந்தியரசுடன் - ஏகாதிபத்தியங்களுடன் சமரசப்படுவார்கள் என்ற முன் அவதானிப்பில் இருந்து" நாம் செயல்படுவதாக கூறுவது, புலிகள் பற்றிய வர்க்க அடிப்படையை மூடிமறைத்து சந்தர்ப்பவாதமாக செயல்படத் துண்டுவதாகும். இங்கு முன் அவதானிப்பை நாம் கையாளவில்லை. அது அவசியமாக இருந்த போதும், இந்த முடிவுக்கு அவசியமற்றதாக்கின்றது. எதார்த்தத்தில் அவர்களின் வர்க்க அடிப்படையில் நின்றே, விமர்சிக்கின்றோம். தேசிய நலன்களை அனுபவிக்க கூடிய  வர்க்கங்களின் நலன்களை எப்படி புலிகள் அழித்து, எதை முன்னிறுத்தி தேசிய அடிப்படைகளை அழிக்கின்றனர் என்ற எதார்த்தம் சார்ந்த நாம் கருத்துரைக்கின்றோம். இந்த விடையத்தில் முன் அவாதானிப்பு அவசியமற்றதாக்கியுள்ளது. அவர்கள் இந்த யுத்தத்தை "அநீதியான யுத்தமல்ல, இனயுத்தமல்ல" என்றால், இந்த யுத்தம் என்ன எனச் சொல்வதை மூடிமறைக்கின்றனர். இவர்கள் இதை தேசிய யுத்தமாகவும் முற்போக்கு யுத்தமாகவும் மறைமுகமாக சொல்ல முனைகின்றனர். உண்மையில் தேசிய நலன்களை தேசிய வர்க்கங்களின் நலன்களைச் சார்ந்து முன்னெடுக்காத வரை, அது என்ன வகையான யுத்தம்? அந்த வர்க்கங்கள் தேசிய நலன்களை அனுபவிக்காத வரை, இந்த யுத்தத்தத்தின்; நலன்கள் என்ன? இந்த யுத்தம் தேசிய உற்பத்திகளை வளங்களை பாதுகாக்காத வரை, இந்த யுத்தம் என்ன வகையான யுத்தம்? நிச்சயமாக பிற்போக்கான இன யுத்தம் தான். இதை நாம் பாட்டாளி வர்க்க நலன்கள் என்ற நிலையில் நின்று பார்க்கும் போது, இது மேலும் துல்லியமாக தெளிவுபடுத்தும். இந்த இன யுத்தத்ததில் நாம், மக்களின் தற்காப்பு கூறையே ஆதாரித்த நிற்கின்றோம். ஏனெனின் சிங்கள் பேரினவாதம் ஆக்கிரமிக்கும் போது, புலிகளின் தற்காப்பு மக்களின் மேலான அழித்தொழிப்பை தடுக்கின்றது. அதாவது பேரினவாதம் தனது அழித்தொழிப்பை தேசிய அழிப்பாக ஏகாதிபத்திய நலன் சார்ந்த கொள்கை வழியில் நின்ற கையாளும் போது, புலிகளின் சொந்த தற்காப்பு யுத்தம் அதை கொள்கை ரீதியாக எதிர்க்கவில்லை. மக்கள் இயல்பாக வாழ்ந்த வரும் தேசிய வளம் சார்ந்த அடிப்படையை தன்னியல்பாக தற்காக்கின்றது. இதை புலிகள் கோட்பாட்டு ரீதியாக தற்காக்கவில்லை. தன்னியல்பாகவே தற்காக்கின்றது. இதுவும் புலிகள் தமது சொந்த தற்காப்பு கருதி நடத்தும் எதிர் தாக்குதல், தன்னியல்பாகவே மொத்த மக்களை பாதுகாக்கும் பிரமையை உருவாக்கின்றது. மக்களுக்கும் புலிக்கும் இடையிலான உறவு இதை தெளிவாகவே தோலுரிக்கின்றது. புலிகளின் குறுந்தேசிய கொள்கை, தேசிய வளத்தை அழிப்பதில் கவணம் செலுத்துகின்றனர். ஏகாதிபத்திய தலையீடு இதன் அடிப்படையில் ஆழமாக புலிகளுக்குள் ஊடுருவதில், கொள்கை ரீதியான முரண்பாட்டைக் காணவில்லை. இருந்த போதும் புலிகளை அரசு அல்லது ஏகாதிபத்தியங்கள் அல்லது இரண்டும் இணைந்து ஏகாதிபத்திய நலன் சார்ந்து அழிப்பதை, நாம் மக்களின் தேசிய நலன் சார்ந்து நீடிக்கும் புலிகளின் தற்காப்பைச் சார்ந்து நின்று எதிர்க்கின்றோம். பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் விரிவாக சொன்னால் மக்கள் தான் தேசிய நலன் சார்ந்து தற்காப்பை கடந்து, தேசிய யுத்தத்தை முன்னெடுக்கும் மாற்றுத் தலைமையை உருவாக்குவதற்கு உரித்துடையவராவர்.



"நாளை புலிகள், சிறீலங்கா அரசுடன் - இந்தியரசுடன் - ஏகாதிபத்தியங்களுடன் சமரசப்படுவார்கள் என்ற முன் அவதானிப்பில் இருந்து" கருத்துரைப்பதாக கூறுவதன் மூலம், ஆட்சி அமைத்த பின்பு தான் சமரசப்படுவர்கள் என்ற திரிபைப் புகுத்துகின்றனர். இதை அரசை அமைக்க முன்பு, யாருக்கு மேலும் குற்றம் சாட்டமுடியாது என்று பகட்ட விரும்புகின்றனர். எதார்த்தத்தை நடைமுறை சார்ந்து பார்க்க மறுப்பது, அரசியல் ரீதியான சந்தர்ப்பவாத விளக்கமாக எஞ்சிவிடுகின்றது. சமரசப்பட்டு, அவர்களுடன் ஒன்று கூடிய உலகமயமாதலின் போக்கில், புலிகள் நடத்தும் தேசிய பொழிப்புரைகளை, கண் மூடியபடி பால்குடிக்கும் பூணையாட்டம் மூடிமறைக்கும் கோட்டபாட்டு விளக்கங்கள், மக்களின் முதுகில் குத்துவதாகும். உலகாளவில் நடந்த பல போராட்டங்களில் பாட்டாளி வர்க்கத்தின் துரோகம், இதை சரியாக வரையறுக்க மறுத்த சந்தர்ப்பவாதத்தில் இருந்தே காட்டிக் கொடுப்புகள் நடத்தப்பட்டன. "நாளை புலிகள், சிறீலங்கா அரசுடன் - இந்தியரசுடன் - ஏகாதிபத்தியங்களுடன் சமரசப்படுவார்கள் என்ற முன் அவதானிப்பில் இருந்து" என்று கூறுவதன் மூலம், தேசபக்தன் இயல்பாகவே இப்படி இருந்தால், இந்த யுத்தத்தை தேசிய யுத்தமாக, முற்போக்கு யுத்தமாக வரையறுக்க முடியாது என்பதை எற்றுக் கொள்கின்றனர். இந்த அடிப்படையில் இன்று புலிகளின் வர்க்கத் தன்மை என்ன என்பதில் இருந்து, எமது கருத்தை தெளிவுபடவே மீள உறுதி செய்து விடுகின்றது.



அடுத்து தேசியத்தை முற்போக்கு தேசியம் பிற்போக்கு தேசியம் என பிரிக்க முடியுமா? எனின் நிச்சயமாக ஒற்றைப் பரிணமத்தில் இல்லை. மேலே மார்க்ஸ் தேசியத்தின் உள்ளடகத்தின் மேல் கூறியது போல், தேசியம் என்பது கோட்பாட்டு ரீதியாக ஒரு வர்க்கத்தின் கோரிக்கை தான்;. அதை பிற்போக்கு, முற்போக்கு என்று ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கத்தின் அடிப்படையான சித்தாந்தமாக மாற்ற முடியாது. ஆனால் வரலாற்றில் குறிப்பாக அது ஆற்றும் பங்களிப்பைக் கொண்டு மதிப்பீட முடியும்;. தேசியம் ஜரோப்பவில் உருவான போது ஒரு வர்க்கத்தின் நலனையே கொண்டிருந்தது. ஆனால் பல்வேறு வர்க்கங்களின் (குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தின்) நலன்களுக்கு, அதன் புரட்சிகர அதிகாரத்தை வென்று எடுக்கும் பாதையை செப்பனிட சதாகமாக இருந்தது. இதே போன்று தேசியம் (தேசிய முதலாளித்துவம்) திரிபடைந்தும், ஏகாதிபத்தியமாக மாறிய பின்பு, முதலாம் உலக யுத்தத்தில் பிற்போக்கான பத்திரத்தை வகித்தது. இதுவே ஏகாதிபத்திய யுத்தமாக பரிணமித்த நிலையில், இராண்டம் உலக யுத்தத்தில் பாசிசத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணி உருவான பின்பும், இந்த தேசியம் பாசித்துக்கு எதிராக முற்போக்கு பாத்திரத்தை வகித்தது. இங்கு தேசியம் முற்போக்கு பிற்போக்கு என்ற வரையறை பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை (உழைக்கம் மக்களின் நலன்களை), அது எப்படி முன்னேற்றுகின்றது, பாதுகாக்கின்றது என்பதுடன் நேரடியாக தொடர்புடையதாக இருந்தது, இருக்கின்றது. அக்காலத்தில் தேசியத்தின் பெயரில் பாசிசம் உருவான போது, பாசித்துக்கு எதிராக நிலவிய தேசியமும் சராம்சத்தில எதிர்; எதிராக இருந்தது. இது உள்ளடகத்தில் சர்வதேச பாட்டாளி வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டே உருவானது. உழைக்கும் மக்களின் பால் இந்த தேசியத்தின் கொள்கை என்ன என்பதில் இருந்தே, தேசியத்தை உள்ளடகத்தில் அல்ல வடிவத்தில் முன்னிறுத்துவது பற்றிய கொள்கை உருவானது, உருவாகின்றது. இதற்கு வெளியில் அல்ல. தேசியம் பாட்டாளி வர்க்கத்தின் நேரடி நலனை பிரதிபலிக்க விட்டாலும், பாட்டாளி வர்க்கத்தின் எதிரியை அது எதிர்த்து போராடும் போது, அது பாட்டாளி வர்க்கத்துக்கு நன்மை அளிக்கும் போது, அதன் முற்போக்கு தன்மையை நாம் தெளிவாக குறிப்பாக அடையாளம் கண்டு ஆதாரிக்கின்றோம். ஆனால் அதன் ஒட்டு மொத்த தன்மையை அல்ல. குறிப்பாகவே ஆதாரிக்கின்றோம். இதை ஒட்டு மொத்தமாக முற்போக்கு பிற்போக்கு என்ற வரையறுக்க முடியாது. ஆனால் முற்போக்கு தன்மை கூடுதலாக இருந்தால் அது முற்போக்கு என கருத முடியும்;. அல்லது பிற்போக்கையே பிரதிபலிக்கின்றது. லெனின் கூறுவது போல் "முதலாளித்துவச் சமுதாயத்தில் வேலை செய்து வரும் ஒரு சமூக-ஜனநாயகச் கட்சி சில வழக்குகளில் முதலாளித்துவ ஜனநாயகத்துடன் அக்கம் பக்கமாக வழிநடையிடாமல் அரசியலில் கலந்து கொள்ள முடியாது" இதனால் தேசியம் பற்றிய உள்ளடக்கம் மாறிவிடுவதில்லை. இதையே தேசபக்தன் சொந்த நியாயப்படுதலுக்கு ஊடாக கைவிட்டுவிடுகின்றது.



இதை தெளிவாக புரிந்து கொள்ள நாம் நவீன தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி முறையை புரிந்து கொள்வதன் மூலம், தேசியத்தையும் அதே போல் புரிந்து கொள்ள உதவும். நவீன தொழில் நுட்பம் சார்ந்த உற்பத்தி உழைப்பை இலகுவாக்கின்றது. உற்பத்தியின் வேகத்தை அதிகரிக்க வைக்கின்றது. பயன்பாட்டை இலகுவாக்கின்றது. இப்படி பல. இந்த வகையில் நவீன தொழில் நுட்பம் முற்போக்கானவையே. ஆனால் இதன் விளைவு மனித இனத்துக்கும் சரி, இயற்கைக்கும் சரி எதிரானதாகவே உள்ளது. அதனால் இது சமூக கண்ணோட்டத்தில் பிற்போக்காகவே செயல்படுகின்றது. இந்த தொழில் நுட்பம் சார்ந்த உற்முறை முழுமையாக ஆராய்கின்ற போது, உண்மையில் முற்போக்கான பாத்திரத்தை வகிப்பதில்லை. நவீன தொழில் நுட்ப உற்பத்தி புகுத்தப்படும் போது, உழைப்பில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். உழைப்பை இழந்த மனிதன் ஊனமாகி வாழ்விழந்து சீராழிகின்றான்;;. உழைப்பை இழந்த நிலையில் அவன் வாங்கும் சக்தியை தொடர்ச்சியாக இழந்து வருகின்றான். இலகுவான உற்பத்திக்கு பதில் உழைப்பு மிகவும் நுட்ப்பமாகி உழைப்பு மேலும் கடினமாக்கப்படுகின்றது. உடலின் அனைத்து பாகத்தின் மூலழும் உழைப்பை உறிந்தெடுப்பதன் மூலம், உற்பத்தி அதிகாரிக்க வைக்கப்டுகின்றது. உற்பத்தி அபரிதமாக பெருக்கி அதை வாங்கும் திறனை மக்களுக்கு இல்லாதாக்கின்றது. உற்பத்தியில் அபரிதமான பெருக்கம் உழைப்பின் மீதான நுட்பத் திறனை இல்லாதாக்கி ம(மொ)டலாக்கின்றது. உற்பத்தியின் பக்கவிளைவு இயற்கைக்கும் மனித வாழ்வுக்கு எதிரானதாக மாறி வருகின்றது. இயற்கை வளம் என்றுமில்லாத அளவில் சூறையாடப்பட்டு அவை விரையமாக்கப்படுவதுடன் அழிக்கப்படுகின்றது. இதை நாம் தெளிவாக பார்த்தால் நவீன தொழில் நுட்பம், மக்களின் நலன் சார்ந்த செயற்படுவதற்கு பதில் மக்களை சூறையாடும் திசைவழியில் செயல்படுகின்றது. இதன் ஒட்டு மொத்த பாத்திரம் பிற்போக்காக உள்ளது. இதனால் நவீன தொழில் நுட்பம் சார்ந்த பொருட்கள் தொடங்கி, அதன் பண்பாட்டை குறிப்பாக புரிந்து எதிர்த்து போராட வேண்டியதாகின்றது. உதாரணமாக கொக்கோகோல தொடங்கி பல்வேறுதுறைக்கும் இது பொருந்தும்;. நவீன தொழில் நுட்பத்தின் எந்த அறிவியல் அடிப்படையையும், உழைக்கும் மக்கள் நுகர்வதற்கு மறுக்கப்படுகின்றது. அதாவது நவீன தொழில் நுட்பத்தை மட்டுமல்ல, பழைய உற்பத்தி முறை சார்ந்து நுகர்வதும் கூட இதனால் மறுக்கப்படுகின்றது. நுகர்வதற்கு வாங்கும் திறனை இல்லதாக்கின்றது என்பதே எதார்த்தம்;. இதுவே ஒப்பிட்டு அளவில்  தேசியத்தின் பாலான அணுகுமுறையும் கூட.



முற்போக்கு பிற்போக்கு என்ற வரையறையை குறிப்பான வர்க்க அடிப்படையில் இருந்து மட்டும் அனுகிப் பார்க்க முடியாது. மாறாக பல்வேறு வர்க்கங்கள் போராடும் போது, பாட்டாளி வர்க்கம் எப்படி சொந்த விடுதலையை சாதிக்கும் போராட்டத்தில் புரட்சிகரமாக பங்களிக்கின்றது என்பதில் இருந்தே, இது வரையறுக்கப் படுகின்றது. அதாவது லெனின் கூறுவது போல் "முதலாளித்துவப் புரட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கம் விலகி நிற்கக் கூடாது, அதன்பால் அசிரத்தையாயிருக்கக் கூடாது, புரட்சித் தலைமையை முதலாளி வாக்கம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாகப் புரட்சியைச் சாதித்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அதில் தானே சக்திமிக்க பங்காற்ற வேண்டும். முரணற்ற பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துவத்துக்கு மிகுந்த உறுதியுடன் போராட வேண்டும்; என்று பாட்டாளி வர்க்கத்துக்கு மார்க்ஸியம் போதிக்கின்றது" தேசியத்தில் உள்ள முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையை, பாட்டாளி வர்க்க நலன்களுடன் இறுகப் பினைந்து இருப்பதை நிராகரிப்பது, அதை புரிந்து கொள்ளாது பொதுவாக அனைத்தும் தழுவி வகையில் தேசியத்தை அனுகுவது கூட ஒரு தத்துவ விலகல் தான். பாட்டாளி வர்க்கத்தின் தேசியக் கடமை என்பது முரணற்ற ஜனநாயகத்தினை ஆணையில் வைத்து, அதற்கு தலைமை தாங்கி புரட்சியை நடத்துவதுதான். "இழப்பதற்குத் தன்னுடைய விலங்குகளைத் தவிர பாட்டாளி வர்க்கத்திடம் வேறோன்றும் இல்லை, ஆனால் ஜனநாயகத்தினை துணை கொண்டு வெல்வதற்கு உலக முழுவதும் இருக்கின்றது." என்று லெனின் கூறிய பொருளின் ஆழ்ந்த அர்த்தங்கள் கொச்சையாக மார்க்சியத்தை திரிவுபடுத்தி விளக்கிவிட முடியாது.



இங்கு முற்போக்கு தேசியம் என பூர்சுவப் புரட்சி நடை பெறாத நாடுகளில் கோட்பாட்டு ரீதியாக பொதுவாக சொல்வது ஒரு தத்துவ விலகலாகும்;. இங்கு நாம் பிற்போக்கு தேசியத்துக்கு மற்றாக புதிய ஜனநாயக புரட்சியே முன்வைக்கப்படுகினறதே ஒழிய, (முற்போக்கு) தேசியத்தை அல்ல. இது பாட்டாளி வர்க்கத்தின் கோட்பாட்டு ரீதியான அடிப்படையாகும். தேசியம் முதன்மை முரண்பாடாக மாறிய நிலையில், தேசியத்தை இலகுவாக விளக்கும் வகையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் புதிய ஜனநாயக புரட்சியை முற்போக்கு தேசியம் என கூறுவது வேறு. ஆனால் இதை தத்துவார்த்த கோட்பாட்டு விவாவதத்தில் சரி, அமைப்பின் கொள்கை பிரகடனங்களில் முன்வைக்கும் போது, இது ஒரு மார்க்சிய விலகலாகும்;. மார்க்ஸ் தேசியம் பற்றி குறிப்பிட்ட உள்ளடகத்துக்கும் வடிவத்துக்கும் இடையில்லான வேறுபாட்டை மறுத்து விடுகின்றது. தேசியத்தின் முதலாளித்துவக் கூறு சார்ந்த அதன் பிற்போக்கு கூறுகளை நியாயப்படுத்துவதை நோக்கி இது சரிகின்றது. புதிய ஜனநாயக புரட்சியை ஏற்றுக் கொள்ளாத, ஆனால் புதிய ஜனநாயக புரட்சிக்கு ஆதாரவு நிலையை எடுத்த சுயேட்சையான தேசிய குழுக்களை, முற்போக்கு தேசியக் குழுக்களாக கோட்பாட்டு ரீதியாக வரையறுக்க முடியும்;. இது மிகவும் நெருக்கமாக கீழ் இருந்து கட்டும் ஐக்கிய முன்னணிக்கு சமாந்;தரமான கூட்டைக் கட்டமுடியும்;. இங்கும் முற்போக்கு தேசியம் என்பது, புதிய ஜனநாயக புரட்சிக்கு வெளியில் தேசிய முதலாளித்துவ கோரிக்கையாகவே உள்ளது என்பதால் மட்டுமேயாகும். லெனின் இதையே துல்லியமாக முன்வைக்கும் போது "புரட்சிகரமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல, அதன் வளாச்சியில் முதலாளித்துவ அமைப்பு முறையின் அடித்தளங்களை அச்சுறுத்தும் காரணிகளை எதிர்த்தும் போராட வேண்டும்;" இந்த வகையில் நாம் புதிய ஜனநாயக புரட்சிக்கு அக்கம்பக்கமாக முன்னேற முயலும் தேசிய முதலாளித்துவக் கூறுகளை முற்போக்கு பிரிவாக இனம் கண்டு அனைத்துச் செல்ல வேண்டியுள்ளது. என் எனின் பாட்டாளி வர்க்க நலன்களுக்கு இவை அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.



இதை கண்டு கொள்ள மறுக்கும் தேசபத்தன் தனது விமர்சனத்தில் மிக முக்கியமான திசை விலகலை, முதலாளித்துவத்தை குறிப்பாக்கி ஆராய்யத் தவறியதே. பூர்சுவாப் புரட்சி நடைபெறாத நாடுகளில் தேசியத்தை பற்றி ஆராய்வதில், முதலாளித்துவத்தை குறிப்பாக்கி ஆராய்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. முதலாளித்துவத்தை பொதுமைப்படுத்தி காட்டுதன் மூலம், உண்மையில் பிற்போக்கு தேசியத்தை நியாயப்படுத்தப்படுகின்றது. இதையே எதிர்மறையில் ரொட்ஸ்கியம் தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கு கோரிக்கையை நிராகரிக்கின்றது. பூர்சுவாப் புரட்சி நடைபெறாத நாடுகளில் முதலாளித்துவம் என்பது குட்டி பூர்சுவா வர்க்கம், தேசிய முதலாளித்துவ வர்க்கம், தரகு முதலாளித்துவ வர்க்கம் கூறுகள் தத்தம் நலன்கள் சார்ந்து செயல்படுகினறது. இந்த வேறுபட்ட வர்க்க நோக்கங்கள் தேசியத்தில் வௌ;வேறு விதமான பத்திரத்தை வகிக்கின்றன. தேசியத்தை நாம் ஆராய்யும் போது இதை கவணத்தில் கொள்ளாத எந்த ஆய்வுமுறையும், விமர்சனமும் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்துவதற்கே குறிப்பாக பங்காற்றுகின்றது.

புலிகளின் முன்வைக்கும் புலித் தேசியத்தை தரகு முதலாளித்துவமா, தேசிய முதலாளித்துவமா என்று ஆராய்யாது தவிர்ப்பது சந்தாப்பவாதமாகும். அது பற்றி முடிவு எடுக்காது பொதுவாக முதலாளித்துவம் என வரையறுக்கும் போது, எற்படும் திசை விலகல் அரசியல் ரீதியாக அகலமானது. தேசியம் என்ற அடிப்படை கோட்பாடு, இதன் குறிப்பான தன்மையில் முற்றாக எதிர் நிலைக்கு மாறுகின்றது. ஆனால் தேசபக்கதன் தனது கடந்த கால வரலாற்றில் இருந்து இதை மூடி மறைக்கின்றது. உண்மையில் தரகு முதலாளித்துவ தேசியத்தை தேசிய முதலாளித்துவமாக பொதுமைப்படுத்தி குழப்பும் போது, எம் மீதான விமர்சனம் இயல்பாகின்றது. தரகு முதலாளித்துவமா, தேசிய முதலாளித்துவமா என்பதை இன்னமும் சொல்ல முடியாது, என்ற ஒரு மயக்க நிலையை எற்படுத்த முனைகின்றனர். தேசிய முதலாளித்துவ தேசியம் பற்றிய அணுகு முறைக்கும், தரகு முதலாளித்துவ தேசிய அணுகு முறைக்கும் இடையில் அணுகுமுறையில் முற்hறகவே ஒரு எதிர்மறைத் தன்மை உள்ளது. தேசியத்தின் ஜனநாயக பண்புக்கும், பாசிசத்தின் பண்புக்கும் இடையில் கூட எதிர் எதிரான தன்மை குறிப்பாக காணப்படுகின்றது. ஆனால் இதை தேசபக்தன் தெளிவாக வரையறுக்க மறுக்கின்றது. அடுத்து தேசியம் என்பது எப்போதும் பொருளாதாரக் கூறு சார்ந்தது என்பதை தேசபக்தன் காண மறுக்கின்றது. மாறாக இதை வெறும் சிங்கள இன அழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தமாக வரையறுக்க முனைகின்றனர். இதை நாம் அவர்களின் விமர்சனத்தின் ஊடாக மேலும் ஆராய்வோம்.


"தேசிய விடுதலைப் போராட்டத்துள் வர்க்கப் போராட்டம், தேசிய விடுதலைப் போருக்குள் ஒரு வர்க்கப் போர் நடந்து கொண்டே இருக்கும். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் இதை தெரிந்து கொண்டு செயற்படத் தவறியது பாட்டாளி வர்க்க புரட்சியாளர்களின் தவறே ஒழிய - தமிழீழ முதலாளி வர்க்கத்தின் - புலிகளின் தேசிய அடித்தளம் காரணமல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றதன் மூலம் உண்மையில் எதை எமக்கு சொல்ல முனைகின்றனர். புலிகளின் பிற்போக்கு தேசியம் அதிகாரத்துக்கு வர, பாட்டாளி வர்க்கமே காரணம் என்பதை தொடர்ச்சியாக நாம் சுட்டிக் காட்டி வந்துள்ளோம். உதாரணமாக முஸ்லீம் மக்கள் மேலான புலிகளின் ஒடுக்கமுறைக்கு, பாட்டாளி வர்க்கத்தின் கையேலத்தனமே காரணம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்;. நாம் எதார்த்தம் மீதான விமர்சனத்தை வைக்கின்றோம் என்றால், புதிய சமூகத்தை படைபதற்கே. இருக்கின்ற தேசியம் மீதான விமர்சனம், சரியான உண்மையான தேசியம் என்ன என்பதை சொல்வதில் தொடங்கி, அதை முன்னெடுக்கும் ஒரு புரட்சிகரமான பாதையை மாற்றக முன்னிறுத்துகின்றது. நாம் இந்த நூலில் தமிழ் மக்களின் கோரிக்கையாக முன்வைத்ததும் இதன் அடிப்படையில்தான். ஆனால் தேசபக்தன் இதை மூடிமறைத்தபடி விடையத்தை திசை திருப்ப முனைகின்றனர். தேசியம் மீதான பிற்போக்கு அடிப்படையை நாம் கடுமையாக, அதன் ஆதாரத்துடன் விமர்சிப்பதை தடுக்கவே "புரட்சியாளர்களின் தவறே ஒழிய - தமிழீழ முதலாளி வர்க்கத்தின் - புலிகளின் தேசிய அடித்தளம் காரணமல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என முன்வைக்கின்றனர். உண்மையில் தேசியம் மீதான விமர்சனத்தை தடுத்து நிறுத்த கோருகின்றனர். இதையே தேசிய வாதிகளும் வேறுவிதமாக "நீங்கள் (பாட்டாளி வாக்கம்) என்னத்தை செய்தீர்கள்" என்ற பணியில் பலவிதமான கிண்டல்களை முன்வைத்து விமர்சனத்தை தடுக்க முனைகின்றனர். இருக்கின்றதை விமர்சிக்காமல் புதியதை ஒரு நாளும் படைக்க முடியாது. இது ஒரு அடிப்படையான இயங்கியல் விதி. விமர்சிக்காது நீ தனியாக உருவாக்கு (தனிமனிதன் திருந்தினால் உலகம் திருந்தும் என்ற கோட்பாடு) என்ற இயல்பான இந்த சமூக கண்ணோட்டம் சார்ந்து இந்த வாதம், புலி நிலை சார்ந்து தேசபக்தனிடம் எழுகின்றது. இங்கு "...தமிழீழ முதலாளி வர்க்கத்தின் - புலிகளின் தேசிய அடித்தளம்.." என்பதன் மூலம் புலிகளையும் தமிழீழ முதலாளி வர்க்கத்தையும் ஒன்று என்று கூறகின்ற திரிபு உருவாகின்றது. தமிழீழ முதலாளி என்பவன் நிச்சயமாக தேசிய முதலாளியாகவே இருக்க முடியும்;. ஆனால் புலிகள் அப்படி அல்ல. தரகு முதலாளிகளினதும், தேசங்கடந்த பன்னாட்டு முதலாளிகளினதும் பிரதிநிதிகளே.



இரண்டாவது புலிகளின் இனக் குறுந்தேசியம் மக்களுக்கு காலகாலமாக வழங்கிய வாக்குறுதிகளை, நாம் மீளக் கொண்டு வருவதன் மூலம், விமர்சனத்தை அரசியல் மயமாக்கின்றோம். பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டியதை புலிகளிடம் கோரக் கூடாது என்ற தேசபக்தனின் வாதம், நகைப்புக்குரியது. மக்களுக்கு வாழ் அளிப்பதாக வழங்கும் வாக்குறுதிகளை, பாட்டாளி வர்க்கம் தேசியவாதிகளிடம் கோருவது தவறு என்பதன் மூலம், இருக்கின்ற பிற்போக்கு தேசியத்தை வாலாட்டி பாதுகாக்க முனைகின்றனர். தேசிய வரையறைக்குள்ளும், தேசியம் வழங்கிய சோசலிச தமிழீழம் வரையான வாக்குறிதிகளை கோரும் விமர்சனம், புலிக்குள் உள்ள உள் சக்திகளைக் கூட அரசியல் ரீதியான முரண்பாட்டை உருவாக்கின்றது. புதிய அரசியல் சக்திகளை பாட்டாளி வர்க்கம் நோக்கி அணி திரட்டுகின்றது. ஆனால் தேசபக்தன் இதை மறுத்து நிற்கின்றது. ஆனால் லெனின் "... முதலாளித்துவ ஜனநாயகத்தின் "முரணான தன்மையை" விலக்கிவைக்கின்ற கோஷங்களை முயற்சியுடன் உருவாக்கித் தருவதும் வலியுறுத்துவதும் முன்னணிக்குக் கொண்ர்வதும் அவசியம்;." என்றார். இதை நாம் செய்யும் போது, இதை புலிகளை நோக்கி கோரக்கூடாது என்று கூறுவதன் மூலம், பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கே விலங்கிடுகின்றனர்.



அடுத்து இப்படி விலங்கிட்டபடி "முதலாளித்துவ தேசியத்தின் சனநாயக விரோதக் கூறுகளை மிகச் சிறப்பாக அடையாளம் காட்டகிறார், விமர்சிக்கிறார். ஆனால் மற்றாக முற்போக்கு தேசியத்தை புரட்சிகர தேசியத்தை படைப்பதற்கான பாதை அவரின் நூலில் இல்லை." ஆச்சரியகரமான ஒரு விமர்சனம். இந்த நூல் தேசியம் மீதான விமர்சனத்தை வைக்கும் போதே, மாற்றுப் பாதையை தெளிவாக சுட்டிக்காட்டிவிடுகின்றது. சனநாயக விரோதக் கூறுகளை சிறப்பாக விமர்சிக்கும் போதே, சரியான கூறுகளை தெளிவாக முன்வைக்காத விமர்சனம் சாத்தியமில்லை. விமர்சனம் என்பதன் பொருளாடக்கமே, மாற்று வழிமுறை சார்ந்து நின்று விமர்சிப்பதுதான். இதை புரிந்து கொள்ளாத எந்த அரசியல் வழியும், மாற்று அரசியல் போராட்டத்தை ஒரு நாளுமே முன்னெடுக்க முடியாது. ஒன்றின் மீதான விமர்சனம் என்பது மாற்று அரசியல் வழிகள் சார்ந்து நிற்பதில் தொடங்குகின்றது. எனது நூலில் இதை ஆழமாக விமர்சனத்தின் எல்லா அடிப்படைகள் மீதும், தெளிவாக கையாளப்பட்டுள்ளது. இரண்டாவதாக எனது நூலின் உள்ளடகத்துக்குள், மாற்று நடைமுறை அரசியல் என்ன என்பதை இந்த நூலுக்கு அவாசியமற்ற போதும், நூலின் இறுதியில் மையமான கோசமாக கூட எடுத்துக் காட்டியுள்ளேன்;. இது புரட்சிகரமான பாதை படைப்பதற்கு குறைந்த பட்சம் உதவாது என்றால், இவர்கள் எதைத் தான் கோருகின்றனர். புலியின் தேசிய அடிப்படை எல்லைக்குள் நின்று, மாற்றைக் கோருகின்றனரா!. இதை இவர்கள் நேரடியாக சொல்ல முடியாது நின்று, புரட்சிகரமான மாற்று வழி வைக்கவில்லை என்று கூற முனைகின்றனர். அடிப்படையாக வைத்த கோசம் இந்த நூலுக்கு உட்பட்ட அதன் நோக்கத்துக்குள் வைக்கப்பட்டத்தே ஒழிய, முழுமையானவை அல்ல. இது இந்த நூலுக்கு அவசியமல்ல என்பதால் அவை வைக்கப்படவில்லை.



அடுத்து முன்வைக்கும் "ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களின் போராட்டம் குறிப்பாக தமிழ்த்தேசிய இனத்தின் போராட்டம் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமாக வளர்ந்தது." என்பது, அரசியல் உள்ளடகத்தை மறுக்கின்றது. இதில் இருந்தே தேசபக்தன் தடுமாறுகின்றது. சுயநிர்ணயம் என்றால் சொந்த தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட தேசியம் என்பது அடிப்படையான அரசியல் விடையமாகும். சொந்த பொருளாதாரத்தை முன்வைத்த தேசியமாக தமிழ் தேசியப் போராட்டம் வளர்ச்சி பெற்றதா? ஒருக்காலும் இல்லை. மாறாக நிலப்பிரபுத்துவ தரகுமுதலாளித்துவ வர்க்கத்தை பிரநிதித்துவப்படுத்திய கூட்டணியின், வாலாக அதன் ஆயுதக் கும்பலாக தொடங்கிய ஆயுதப் போராட்டம், அதன் அடிப்படைக் கோட்பாட்டுடன் தன்னை பண்பில் இருந்து கூட வேறுபடுத்தவில்லை. பராளுமன்ற வழியா? அல்லது ஆயுதப் போராட்டமா? என்பதில் மட்டுமே அடிப்படை வேறுபாட்டைக் கொண்ட இருந்தனர். ஆனால் வர்க்க அடிப்படையில் முரண்பாடு எற்படவில்லை. தேசிய தலைவர்கள் பெரும்பாலனோர் கூட்டணியின் இளைஞர் இயக்கத்தின் இருந்து உருவானதுடன், அதே அரசியலை அப்படியே பிரதிபலித்தவர்கள் தான். இது பிரபாகரனுக்கும் விதிவிலக்கல்ல.



கூட்டணியின் வாலாக உருவாகாத விதிவிலக்கான இயக்கங்கள், ரூசியா சமூக ஏகாதிபத்தியத்தைப் பின்பற்றிய இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு துணை நின்றன. இங்கு எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது என்பதில் முரண்படவில்லை. எந்த ஏகாதிபத்திய நலன்களை பிரநிதித்துவப்படுத்துவது என்பதில் தான் முரண்பட்டன. கூட்டணியின் பராளுமன்ற அரசியலில் இருந்து ஆயுதம் எந்திய வழிகள் மூலம் தேசியத்தை முன்னெடுத்த போது, எந்த ஏகாதிபத்தியம் அதிக நிதியும் ஆயுதமும் தருவார்கள் என்பதில் குறியாக இருந்துடன், அது சார்ந்த அதன் பிளவு ஆழமாகி அதுவே தேசத்தின் பிளவாகியது. ஆனால் மறு தளத்தில் இந்த ஆயுதம் எந்திய இயக்க உருவாக்கத்தில் குட்டிப+ர்சுவா வர்க்கம் இனைந்ததும், மார்க்சியம் பற்றிய கலைவை கோட்பாடுகளால் எற்பட்ட முரண்பாடுகள் தேசிய முதலாளித்துவம் பற்றிய சிந்தனையை உருவாக்கின என்பது உண்மையே. ஆனால் அவை அரசியல் ஆதிக்கம் பெற்ற தலைமையாக ஒரு நாளும் கூட வளரவில்லை. அவை முளையிலேயே அழிக்கப் பெற்றன.



கூட்டணியின் வாலாக உருவான புலிகள் இயக்கம் சரி, அதன் வளர்ச்சியில் சரி என்றும் சுயநிர்ணயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை உள்ளடக்கிய தேசியமாக வளரவில்லை. இங்கு ஒரு சில சிறு குழுக்களை பற்றிய விடையம், இந்த விவாத உள்ளடகத்துக்குள் முக்கியத்துவமற்றது. எனெனின் அவை சமூகத்தில் தேசியம் சார்ந்து தன்னை பலமான ஒரு சக்தியாக மாற்றியதில்லை. இந்த இடத்தில் அதே தேசபக்தனில் வந்துள்ள மற்றொரு வாதம் "சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சிங்கள தேசிய இனத்துக்குள்ள எல்லா வகையான அரசியல் அதிகார உரிமைகளும் உள்ள, தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் அரசியல் - அதிகாரங்கள் குறித்தும், தேசிய இனங்கள் சம உரிமையுடன் வாழும் இலங்கைக் கூட்டரசு பற்றியும் ஏன் புலிகள் முன் வைக்கவில்லை, பேச மறுக்கிறார்கள்" என முன்வைக்கின்றனர். சிங்கள இனத்துக்கு சுயநிர்ணய அடிப்படையில் இருக்கின்ற உரிமைகள் எல்லாம், தமிழ் இனத்துக்கு இருக்க வேண்டும் என்பது, தனியாக எதார்த்ததுக்கு வெளியில் கோட்பாட்டு ரீதியாக பாhத்தால் சரியானது. ஆனால் சுயநிர்ணயம் என்ன என்ற கேள்விக்கு ஊடாக ஆராய்கின்ற போது, தேசபக்தனின் வாதம் சரிந்து செல்லுகின்றது. சிறுபான்மை இனங்கள் சுயநிர்ணய அடைப்படையில் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் இருந்தே போராடினார்கள். மாறாக சுயநிர்ணய அடிப்படையில் வளர்ந்தது என்றால், ஏதை அடிப்படையைக் கொண்டு வளந்தார்கள். சிங்கள மக்களை எடுத்துக் கட்டும் தேசபக்தன், இனவாத தேசியத்தை சுயநிர்ணயமாக காட்டி விடுகின்றனர். சிங்கள தேசியம் என்னவாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளமால், அதையே தமிழ் தேசியம் கோருவது அப்பட்டமான பச்சை இனவாத இனத் தேசியமாகும். இதையே தேசபக்கதன் கூட்டிக் கழித்து வைக்கின்றனர்.



அடுத்து "ஏகாதிபத்திய எதிர்பற்ற இந்த முதலாளித்துவ தேசிய இயக்கம் சிறீலங்கா அரசுக்கு எதிரான உறுதியான விடாப்பிடியான, இன ஒடுக்குமுறை எதிர்ப்பு யுத்தத்தினை நடத்தி வந்தது." என்று புலிகள் குறித்த கருத்து, திரிவுபடுத்தியதுடன் முழுமையற்றதுமாகும். முதலாளித்துவ தேசிய இயக்கம் என்பது உள்ளடகத்தை, அதன் பொரளாதார அடிப்படையில் திரிவுபடுத்துகின்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாத முதலாளித்துவ தேசியம் இருக்க முடியாது. இன ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டும் யுத்தத்தை புலிகள் நடத்தவில்லை. இனப் பிளவையும் இனவாத அடிப்படையில் விதைத்தனர். இதை எதிரி மட்டும் திணிக்கவில்லை. புலிகளும் எற்படுத்தினர். இந்த யுத்தத்தின் துன்பங்களையும் துயரங்களையும் சிறிலங்கா இனவாத அரசுமட்டும் எற்படுத்தவில்லை. மாறாக மக்களின் மேல் யுத்த அல்லாத போக்கில் அதை ஒரு சுமையாகவெ திணிக்கின்றனர். மற்றைய இன மக்கள் மேல் நியாயமற்ற நீதியற்ற அழித்தொழிப்பை நடத்தினர். சிறிலங்கா இனவெறி அரசு தமிழ் மக்களை கொன்ற அழித்த வரலாற்றில், அதற்கு எதிரான நீதியான யுத்தம் என்ற தனது எல்லையைக் கடந்து சென்றது. மற்றைய இன மக்கள் மேல் வரைமுறையற்ற இன அழிப்பு யுத்தத்தை நடத்தினர். இதன் மூலம் அநீதியான யுத்தத்துக்கு உரிய அடிக்காலை நாட்டினர். முஸ்லீம் மக்களை ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், அவர்கள் தமது சொந்த வாழ்விடத்தில் வாமும் உரிமையை மறுத்தனர். அவர்களின் பொருளாதார வாழ்வை சிதைத்தனர். முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒரு அநீதியான இன அழிப்பு யுத்தத்தை சிறிலங்கா சிங்கள இனவாத அரசுக்கு நிகாராக புலிகள் நடத்தினர், நடத்துகின்றனர். ஒரு சிங்கள் இனவாத பாசிச அரசு இதைச் செய்வது ஆச்சரியமானது அல்ல. ஆனால் அதைக் கூறியபடி ஒரு விடுதலை இயக்கம் செய்யும் போது, அது தனது எல்லையைத் தாண்டி அரசின் இனவாத எல்லையைக் கடந்து சென்று மற்றைய இனங்களை ஒடுக்கும் போது, அங்கு குறுந்தேசிய பச்சை இனவாதம் கொழுப்பேறி வெம்பி விடுகின்றது. இதை மூடிமறைப்பதும், விடுதலையின் பெயரில் வெள்ளையடிப்பதும், அதற்கு அலங்காரம் செய்வதும் பச்சையான சந்தப்பவாதடன் கூடிய பேடித்தனமாகும்.



இங்கு அடுத்து நீங்களே ஒத்துக் கொள்வது போல் "இன ஒடுக்குமுறை எதிர்ப்பு யுத்தத்தையே" எதிர்மறையில் நடத்தினர். சுயநிர்ணயத்துக்கான தேசிய யுத்தத்தை புலிகள் நடத்தவில்லை. நீங்கள் இன யுத்தம் அல்ல என்று கட்டுரையில் மறுக்கின்றிhர்கள். "சீறிலங்கா - ஆளும் வர்க்கங்களின் இன - மத பெருந் தேசிய வெறியையும் ஒடுக்குமுறையை இன - மத ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற சிறுபான்மை மக்கள் மத்தியில் உள்ள குறுந்தேசிய வாதத்தையும் சமன்படுத்தி பார்க்க முடியாது. சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது நடத்தி வரும் இன அழிப்பு ஒடுக்குமுறை யுத்தத்தையும், அதற்கு எதிரான தமிழ் மக்கள் மத்தியில் முதலாளித்துவ இயக்கம் நடத்தும் இன ஒடுக்குமுறை எதிர்ப்பு யுத்தத்தையும் ஒன்றாக சமன்படுத்தி விடமுடியுமா? ஆசிரியர் இதை "இனயுத்தம்" என வரையறுக்கிறார். இது மிகத் தவறு" என்கின்றனர்.



இனம் யுத்தம் அல்ல என்றால், இது என்ன யுத்தம்? தேசிய யுத்தமா? இனயுத்தம் அல்லாத வேறு ஒன்றாகவும் இது இல்லை. தேசிய யுத்தம் என்றால் நிச்சயமாக தேசிய நலன்கள் முதன்மையானது. தேசிய நலன்கள் தேசிய பொருளாதாரம், தேசிய பண்பாடு, தேசிய மொழியின் வளர்ச்சி என்று, தேசியம் இதற்கு எதிரான பல்வேறு துறையில் விரிந்த அர்த்ததைக் கொண்டது. தமிழ் இனத்துக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்தும் இன அழிப்பு யுத்தத்ததை எதிர்த்து புலிகள் நடத்திய தற்காப்பு யுத்தம், இனம் என்ற அடிப்படையில் இன யுத்தமாகவே நீடிக்கின்றது. தமிழ் இனவாதமே தேசியமாக கட்டமைக்கப்படுகின்றது. இனவாதம் பண்பாடாக, அதுவே ஒரு மொழியல் சிந்தனையாக உருவாக்கப்படுகின்றது. அப்பாவி சிங்கள இனமக்களை கொல்வது, முஸ்லிம் மக்களை கொன்று ஒடுக்குவது உட்பட இவை அனைத்துக்கும், தமிழ்  இனவாதத்துடன் கூடிய இனத் தேசியமே அடிப்படையாக உள்ளது. இது ஒரு இன யுத்தமாக இருப்பதில் வியப்பேது! இவை அனைத்தும் தொடர்ச்சியாக நியாயப்படுத்தப்படுகின்றது. இதற்கு தமிழ் இனவாதம் ஒரு கோட்டபாடாக சித்தாந்தமாக உள்ளது. தமிழன், சிங்களவன், முஸ்லிம் என்ற பதங்கள் எதிர் நிலையில் கையாளப்படுகின்றது. எதிரியாக முத்திரை குத்தப்படுகின்றது. இதை ஆதாரமாக கொண்டு ஒரு இன யுத்தத்தையே புலிகள் நடத்துகின்றனர். இதனால் இதை நாம் குறுந்தேசிய போராட்டமாக காண்கின்றோம். குறுகிய சொந்த வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு நடத்தும் யுத்தம், தேசியத்தை ஆதாரமாக முன்வைக்கின்றது. அந்த தேசியம் குறுகிய நலன்களால் கற்பழிக்கப்படுகின்றது. குறுந்தேசியம் குறுகிய இன வர்க்க நலன்கைள முன்வைக்கும் போது, இந்த யுத்தம் இனயுத்தமாக இருப்பது அதன் எதார்த்தமாக உள்ளது.



இங்கு பெரும் தேசிய இனவெறியையும், புலிகளின் குறுந் தேசிய இனவெறியையும் நாம் என்றும் தேசபக்தன் கூறவது போல் ஒன்றாக கருதவில்லை. பெருந் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக உருவான குறுந்தேசியம் என்பதில் நாம் என்றும் தெளிவாகவே கருத்துரைத்து வருகின்றோம். பெரும் தேசிய ஒழுக்குமுறை பரந்துபட்ட மக்கள் மேலானதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் போராடும் உரிமையை பாதுகாப்பதும், அதை முன்னெடுப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் கடமை. இந்த போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் சொந்த வர்க்க நடைமுறைகளை பாசிச வடிவத்தில் புலிகளால் அழிக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் மேலான இன ஒடுக்கு முறைக்கு எதிராக புலிகள் போராடும் போது, அதை நாம் எதிர்க்கவில்லை. பெரும் தேசிய இனவெறி அரசக்கு எதிராக அவர்கள் போராடும் போது, குறுந்தேசிய வெறியை வளர்த்து இன யுத்தமாக சிதைந்த எல்லா உட்கூறுகளையும் எதார்த்த நடைமுறைகளையும் எதிர்க்கின்றோம். முஸ்லிம் சிறுபான்மை இனம் மீது பெரும் தேசிய இனவெறியர்கள் போல் நடத்தும் அழித்தொழிப்பை நாம் எதிர்க்கின்றோம். மேல் இருந்து கட்டமைக்கப்பட்ட சாதிய ஒடுக்கமுறை போல் தான், இந்த இன யுத்தம் பெரும்பான்மை சார்ந்து கீழ் நோக்கி ஒடுக்குகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசு நடத்தும் அழித்தொழிப்பை எதிர்த்து போராடும் புலிகளின் உரிமையை, அரசு அல்லது எகாதிபத்தியங்கள் அழித்தொழிப்பதை நாம் இதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் தமது சொந்த தேசியத்தை முன்னேடுப்பதில் உள்ள உரிமையை நாம் பாதுகாக்கவும், இந்த அடிப்படை விடையத்தில் புலிகளை எதிர்த்து போராடவும் தயாரற்ற யாரும் பச்சையான சந்தர்ப்பவாதிகள் தான்.



இந்த சந்தர்ப்பவாதம் குறித்து எழுதுவது சமகாலத்தில் மிக முக்கியத்துவம் உடையதாக மாறிவிடுகின்றது. கடந்த காலத்தில் சமர் இதழை தொடங்கியதற்கும் பின்னால், புலிகள் தொடர்பாக நாம் மிதமான விமர்சன அனுகுமுறையை கொண்டிருந்தோம்;. இந்த மாற்றம் தொடர்ச்சியான அரசியல் வழிமுறை ஒன்றை உருவாக்கும் பணி சார்ந்து, இதைக் கையாண்டோம். எதார்த்தத்தின் மீதான கடுமையான விமர்சனம், ஒட்டுமொத்தமாகவே அவர்களின் துப்பாக்கிக்கு இரையாவதை துரிதப்படுத்திவிடும் என்பதை அனுபவம் காட்டியது. மார்க்சியம் அதன் இயல்பான புரட்சிகர பண்பை எமது சொந்த மண்ணில் இழந்த நிலையில், மார்க்சியம் எமது தேசிய வாழ்வில் சிதைந்த நிலையில் இருந்து மீட்டு எடுக்கும் முதன்மைப் பணி எம்முன் நின்றது. புலிகளில் இருந்து முரண்பட்ட பிரிவுகளின் அரசியலற்ற புலி எதிர்ப்பும், மறுதளத்தில் மார்க்சியத்தை அதன் புரட்சிகர வர்க்க பண்பில் இருந்தே சிதைத்த நிலையில், எமது பணி என்ன என்ற கேள்வி எம்முன் எழுந்தது.

புலிகளுடன் நேரடியாக முட்டி மோதுவதை தவிர்ப்பதும், மார்க்சியத்தை உணர்வுபூர்வமாக உள்வாங்கவும், அது சார்ந்த சக்திகளை உருவாக்குவது அவசியமாக இருந்தது. இதுவே சமரின் மையப் பணியாகியது. முக்கியமான சமகாலத்து அனைத்த எதார்த்த நிகழ்வுகள் மீதும், எமது விமர்சனத்தை நாம் வைத்து வந்தோம். புலிகள் சார்ந்த அனைத்து முக்கிய விடையத்துக்கும் இது விதிவிலக்காகவில்லை. முக்கியமான அனைத்தின் மீதும் விமர்சனம் செய்யாத ஒரு விடையத்தையும் நாம் விட்டுவிடவில்லை. ஆனால் மிதமாக இதைக் கையாண்டோம். இதைக் கையாண்ட போது, முக்கியமாக கோட்பாட்டு ரீதியாக தெளிவாக அதை வரையறை செய்தோம்.



1.தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கை வேறு, புலிகளின் இனக் கோரிக்கை வேறு என்பதை அடைப்படையாக அரசியலாக கொண்டோம். இதன் அடிப்படையில் தமிழ் மக்களின் முணைற்ற ஜனநாயாக கோரிக்கைகளை உயர்த்தி, அதற்கு முரணான புலிகளின் கோரிக்கைகளை விமர்சித்தோம்;. இது நடைமுறை பிரச்சனைகள் மீது பாட்டாளி வர்க்கம் கையாளும் செயல்முறையான நடைமுறை தந்திரம் கூட.



2. தேசியத்தின் அடிப்படையான முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து, அதை புலிகளிடம் நடைமுறைப்படுத்தக் கோரினோம். ஜனநாயக கோரிக்கை அல்லாத அனைத்தையும் விமர்சித்து, ஜனநாயக கோரிக்கையை செயலுள்ள வடிமாக மாற்ற புலிகளிடம் கோரினோம்.



3. தேசியத்தில் உள்ள முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையை மக்களின் வாழ்வியல் நடைமுறையுடன் முன்வைத்து, அதை அரசியல் ஆணையில் முன்னிறுத்தினோம். எல்லா விமர்சனங்கள் மீதும் இது அடிப்படையானதும் மையமானதாகவும் இருந்தது.



இந்த வகையில் பிரதானமாக முக்கிய மூன்று அடைப்படையில் இருந்தே, நாம் மக்களை நோக்கிய எமது மாற்று அரசியலை முன்னெடுத்தோம். உண்மையில் இந்த நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டிய தனிநபர்கள், குழுக்கள் யாரும் சமகாலத்தில் இதைச் செய்யவில்லை. விதிவிலக்கு இன்றி இதுவே எதார்த்தமாக உள்ளது. ஆனால் இதை தவறாக புரிந்த கொண்ட சில அடிப்படைகள் உண்டு. எம்மை நோக்கி



1.நீங்கள் புலிகளை திருத்த விரும்புகின்றீர்களா? அல்லது புலிகள் திருந்தி விடுவர்கள் என சமர் கருதுகின்றதா?


2.புலிகள் மேலான விமர்சனம் ஆழமான கோட்பாடாக மாறும் போது அல்லது புலிகள் மீதான விமர்சனம் கூர்மையாகும் போது, நாம் கோட்பாட்டு ரீதியாக தவறு இழைப்தாக குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது.


3.புலிகளை நோக்கிய எமது விமர்சனமுறை எம்மை புலிகளாக, புலி எதிர்ப்பு கோஸ்டியால் முத்திரை குத்தப்படுகின்றது.



எமது அரசியல் வழிப்பட்ட, நடைமுறை வழிப்பட்ட எமது தெளிவான அனுகுமுறையை, இப்படி பற்பலவாக விளக்கி முத்திரை குத்தினர், குத்துகின்றனர். எதாவது அரசியல் நடவடிக்கையில் உள்ளவர்கள், விதவிதமாக அவர்களின் சொந்த நிலைபாட்டுக்கு இணங்க வரையறுத்துக் கொண்டனர், கொள்கின்றனர். உண்மையில் எதார்த்தமான அரசியல் வழிப்பட்ட நடைமுறைப் போராட்டம் இதன் மூலம் நிராகரிக்கப்பட்டது. குறைந்த பட்சம் கருத்துகள் முன்வைப்பது கூட இதன் அடிப்படையில் மறுக்கப்பட்டது. இவர்கள் யாரும் மக்களின் அன்றாட வாழ்வியில் சார்ந்தும், போராட்டம் சார்ந்தும் விமர்சிப்பதைக் கூட மறந்து போனார்கள் என்பதே எதார்த்தமாகும்;. 20 வருட தேசிய போராட்ட காலத்தில் ஒரு அரசியல் வழிப்பட்ட மாற்றுப் பாதையை, நாம் அடையாளம் காணவில்லையா. நிச்சயமாக மாற்று அரசியல் வழிப்பட்ட நடைமுறை ஒன்றை, கடந்த காலத்தில் எமக்காக பலர் தமது சொந்த உயிர்களை பலி கொடுத்து கற்றுத் தரப்பட்டது. ஆனால் இதை யாரும் கண்டு கொள்வதுமில்லை, முன்னெடுப்பதுமில்லை. அதை மறந்துவிடுவது, மேலும் தம்மை மூடிமறைத்துக் கொள்ள உதவுகின்றது. கடந்த எமது தேசிய வரலாறு மக்களுக்காக, அவர்களின் விடுதலைக்காக சொந்த தியாகத்துடன் கூடிய மாற்று நடைமுறை அரசியல் தான், இன்றைய பிற்போக்கு தேசியத்துக்கு பதில் மாற்றுப் பாதைக்கான ஒரே ஒரு அடிப்படையாகும.; அது என்ன எனப் பாhப்போம்.



தேசவிடுதலை இயக்கங்கள் உருவானவுடன் மாற்றுப் பாதையும் அதனுடன் ஒட்டியபடியே தொடர்ச்சியாக வெளிக்கிளம்பியது. பிரதான எதிரியான அரசுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய இயக்கங்கள் போராடிய போது, உள் இயக்க முரண்பாடுகள் அனேகமாக எல்லா இயக்கத்திலும் தோன்றியது. இந்த போராட்டம் பிரதான எதிரியை நேரடியாக எதிர்த்து தோன்றவில்லை. பிரதான எதிரியை எதிர்த்த படி தேசியத்துக்கு போராடிய இயக்கத்தை எதிர்த்துத் தோன்றியது. தலைமையும், தேசிய இயக்கங்களும் பிற்போக்கனவையாக மக்களுக்கு எதிரானதாக எதார்தத்தில் இருந்த போது, அதை எதிர்த்து அவற்றுக்கு மாற்றான ஒரு புரட்சிகரமான போராட்டத்தைத் தொடங்கினர். இது போன்று மாற்று இயக்க நடவடிக்கைகளுக்கும் எதிராகவும் கூட, இந்த புரட்சிகரமான அரசியல் வழி பரந்த தளத்தில் உருவானது. இது இரண்டு தளத்தில் நடந்தது. ஒன்று இயக்கத்தின் உள்ளிருந்தும், மற்றையது வெளியிலிருந்து தலைமைகளை எதிர்த்து உருவானது. இதை விட சம காலத்தில் இயக்கங்களை எதிர்த்து தன்னியல்பாக, பல நூறு போராட்டங்கள் மக்கள் மத்தியில் இருந்து எழுந்தது. நாம் அப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய அதேநேரம், இயக்கங்களில் இருந்து விலகியோர் இதில் முன்னணி பாத்திரத்தை வகித்தனர். எந்த இயக்கங்கள் தேசிய விடுதலை இயக்கமாக தம்மை காட்டிக் கொண்டவோ, அவற்றை எதிர்த்து பரந்த தளத்தில் போராட்டங்கள் வளர்ச்சி பெற்றன. இது அன்றாட வாழ்வியல் கோரிக்கையில் இருந்து தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை வரை விரிந்த தளத்தில் நடந்தது. இந்தப் போராட்டத்தை தேசிய விடுதலைக்கு எதிரானதாக, இயக்க தலைமைகளைத் தவிர அன்று யாரும் கொச்சைப்படுத்தும் அரசியல் பலம் இருக்கவில்லை. ஆனால் இன்று ஐயோ தேசியம், பிரதான எதிரி, இரண்டாம் எதிரி, ஐக்கிய முன்னணி பற்றி எல்லாம் சண்டை பிரசங்கித்தனத்தை தொடங்கிவிடுகின்றனர். தேசியத்தின் பிற்போக்கை அக்குவேர் ஆணிவேறாக ஆராய்யும் போது, ஐக்கிய முன்னணியை பற்றியும், இனத் தேசியம் பற்றிய எல்லாம் சம்பந்தமில்லாத இடத்தில் விடையத்தை பூசிமொழுகும் வகையில் எழுப்பபடுகின்றது.

 

எமது புரட்சிகரமான சரியான போராட்ட வழி என்பது, ஆயிரக்கணக்கில் தமது குருதியைச் சிந்திப் பெறப்பட்டதில் இருந்து வளர்த்தெடுத்தலாகும். ஆனால் இன்று, யார் அதை உயிரோட்டமான நடைமுறையை கையாளுகின்றனர். அப் போராட்டங்கள் இயல்பாகவும் தன்னியல்பாகவும் எழுந்த போது, அனுபவ ரீதியான அரசியல் மூலம் தலைமை தாங்கப்பட்டது. வெற்றி தோல்விகள் மூலம் இவை ஒரு வீச்சாக இருந்தது. இந்தப் போராட்டங்கள் நடந்த போது இதற்கு தலைமை தாங்கும் ஒரு புரட்சிகரமான அரசியல் வேலைத் திட்டத்தை யாரும் அன்று வைத்திருக்கவில்லை. உண்மையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய அரசியல் படிப்பினையாக இருப்பது, மக்களின் நியாயமான போராட்டங்கள் தலைமை தாங்கும் ஒரு அரசியல் வழிமுறையையும் நடைமுறையையும் கொண்டிருக்காமை தான். பிற்போக்கு தேசியத்துக்கு எதிராக அலை அலையாக எழுச்சி பெற்ற போராட்டங்களை தலைமை தாங்கி அழைத்துச் செல்ல, எந்த அரசியல் வழிப்பட்ட நடைமுறையையும் யாரும் கொண்டிருக்கவில்லை. இது வரை யாரும் அதை ஒரு அரசியல் வேலைத் திட்டமாக முன்வைக்கவில்லை.



அன்று இருந்த ஒரு சில அரசியல் வழிப்பட்ட குழுக்கள், மார்க்சியத்தை கோசமாக வைத்தபடியும், அதை எழுதிக் கொண்டும் அதை பாடமாக்கி கொண்ட இருந்தனர். அதே நேரம் பணத்தை எப்படி பெறுவது என்பது பற்றியும், ஆயுதங்களை சேகரிப்பது பற்றியும், ஆள் பிடிப்பதுமான கனவுகளில் மிதந்தனர். அதாவது பிற்போக்கு தேசியம் எப்படி வளர்ச்சி பெற்றதோ, அதே பாதையில் தனது பிரதான கவணத்தை செலுத்தினர். போராட்டத்தை நடத்தும் திசை வழியில் தன்னியல்பாக பல நூறு போராட்டங்கள் எழுந்த போது, தன்னியல்பாகவே சிலர் அதில் கலந்து கொண்டனர் என்பது எதார்த்தமே. திட்டமிட்ட வகையில் மக்களின் போராட்டங்கள், தன்னியல்பான போராட்டங்களில் தலையிடல் மற்றும் பரந்த முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவான போராட்டங்களில் ஈடுபட, எந்த அமைப்பும் தயாராக தன்னை ஒழுங்கமைக்கவில்லை. இதானல்; தான் இன்று பிற்போக்கு தேசியம் குறுந்தேசிய இனப் போராட்டமாக சீராழிந்து, ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவும் வழிக்கும் கம்பளம் விரித்துக் கொடுத்தது. ஆயுதம், பணம், ஆட்கள் என்ற இந்த மையமான குறிக்கோளை நோக்கி நகர்ந்த போது, அரசியல் ரீதியாக இதற்;கு சிறு முற்போக்கான தேசிய குழுக்கள் சரிந்து சென்றதை யாரும் இதை இன்று வரை சுயவிமர்சனமாக பார்க்கவில்லை. இயக்கத்தின் உள்ளும், வெளியிலும், மக்களுடனும் முரண்பாடுகள் கூர்மையாகி, பலர் ஆயுதத்துடனும் பணத்துடனும் பயிற்;சி பெற்ற நபர்களுமாக சமுதாயத்தில் உதிரியாக வெளிவந்து மாற்று வழியை தேடிய போது, அவர்களை இனைத்துக் கொள்ள எந்த நபரும் எந்த குழுவும் எதார்த்ததில் அரசியல் ரீதியாக இருக்கவில்லை. இதுவே இன்றைய அரசியல் ரீதியான பொதுவான நிலையும் கூட. அரசியல் ரீதியாக உணர்வும் உணர்ச்சி பெற்ற முன்னணியாளர்களைக் கொண்ட, ஒரு புரட்சிகரமான தலைமையே எந்த மற்றத்துக்கும்  முன்நிபந்தனையாக உள்ளது. மக்களின் அன்றாட போராட்டத்தில் ஊன்றி நிற்பதன் மூலம், பொதுவான தேசியப் போராட்டத்தில் மக்களுக்கு தலைமை தாங்கிச் சென்று இருக்கவேண்டும், செல்லவேண்டும்;. மக்கள் தமது வாழ்வியல் அடிப்படை சார்ந்த போராட்டத்தை அடிப்படையாக கொண்ட, ஒரு புரட்சிகரமான நடைமுறை சார்ந்த ஒரு புரட்சிகரமான அமைப்பு இல்லாத வரை, பிற்போக்கு தேசியம் இலகுவாக ஆட்சிக்கு வருகின்றது. கடந்த காலம் பற்றிய தெளிவான அரசியல் பார்வை இன்றி, இன்று எதுவும் அசையாது.



தேசபக்தனை எடுத்தால் இதை திட்வட்டமாக மறுத்து நிற்கின்றனர். அவர்கள் தமது சொந்த கடந்தகால அனுபவத்தைக் கூட பொதுமைப்படுத்த மறுக்கின்றனர். புலி பற்றியயும் சரி, தேசிய விடுதலைப் போராட்டம் பற்றியும் சரி, ஒரு வரலாற்றை கட்டுரை சார்ந்து தொகுப்பதன் மூலம், சில பாட்டாளி வர்க்க கோசங்களால் மட்டும் புலிகளுடன் முரண்படுகின்றனர். தொடர்ச்சியான அவர்களின் வெளிப்பாடுகள், அரசியல் கோசங்கள் அனைத்தும் இதற்கு வெளியில் இல்லை. அதாவது இன்னமொரு தேசவிடுதலை இயக்கத்தை கட்ட, சொற்களில் முனைப்பு பெறுகின்றனர். கடந்த காலத்தில் எப்படி தேசிவிடுதலை இயக்கங்களை பல உருவாக முயன்றனவோ, அதே போன்று பண்பியல் மற்றத்துடன் முனைப்பு பெறுகின்றனர். உண்மையில் உணர்வுபூர்வமான உணர்ச்சி ரீதியான ஒரு நபரைக் கூட அணிதிரட்டுவது என்பது, இயலாத காரியமாக இருப்பது எதார்த்தமாக அவர்கள் வாழ்வு ப+ராவும் நீடிக்கவே செய்யும்.



புதிய ஜனநாயக புரட்சி திட்டத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தேசவிடுதலை இயக்கம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்றால், நிச்சயமாக தேசிய விடுதலை இயக்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டில் புரட்சிகரமாக தலையிடுவதில் இருந்து தொடங்குகின்றது. இந்த பாதையைத் தான் கடந்த காலத்தில் மக்களுக்காக, இயக்க உள், வெளி; முரண்பாடுகளில் தம்மையும் தமது உயிரையும் தியாகம் செய்த தோழர்கள் எமக்கு சுட்டிக் காட்டியதாகும். இல்லாத வரை மாற்று தேசிய இயக்கத்தை அரசுக்கு எதிராக ஒரு நாளும் கட்டமுடியாது. அரசுக்கு எதிராக போராடும் புலிகள் உள்ள வரை, மாற்று தேசிய இயக்கம் அவசியமற்றது. இங்கு மற்றொரு தேசிய இயக்கத்தின் தேவை மக்களின் அன்றாட வாழ்வியல் முரண்பாடுகளில் இருந்தே என்பது தெளிவானது. புலிகளின் தேசியம் பூர்த்தி செய்யாத வாழ்வியல் மற்றும் எதார்த்தத்தில் இருந்து, அதை மறுக்கும் புலிகளுக்கு எதிரான போராட்டத்தை முதன்மைப் படுத்தி அதில் உருவாக முடியும்;. மக்களின் நலன் சார்ந்து உருவாக வேண்டும் எனின், நிச்சயமாக மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய இன்றைய எதார்த்த தேசியத்துக்கும் மக்களின் வாழ்வுக்கும் உள்ள முரண்பாட்டில் அரசியல் மயமாக வேண்டும.



இதை இன்னும் தெளிவாக குறிப்பாக பார்ப்பின் இருக்கும் பிற்போக்கு தேசியத்துக்கும், மக்களின் முற்போக்கு தேசியத்துக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு, அரசியல் ரீதியான நடைமுறை சார்ந்த போராட்டத்தை தனது பிரதான அரசியல் வழிமுறையாக கொள்ள வேண்டும்;. இலங்கை அரசின் இனவாத ஒழுக்குமுறையையும், அதை எதிர்த்து இன தற்காப்பை நடத்தும் இனப் போராட்டத்தையும் கூறி, அதில் மார்க்சிய சொற்கோவைகளை பொருத்துவதன் மூலம் புரட்சிகரமான அரசியல் மார்க்கம் சாத்தியமில்லை. வேண்டுமெனின் தாம் தம்மை சார்ந்து வாழ்வதற்கான சில அடிப்படைகளை மட்டும் எற்படுத்திக் கொள்ளமுடியும்.

 

  
1991க்கு முந்திய ஏழு வருடத்தில் ஆயிரக்கணக்கில் தமது சொந்த உயிரை ஒரே ஒரு அடிப்படை காரணத்துக்காக உயிர் துறந்தனர். அவர்கள் இயக்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக, ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிராக போராடியதால் கொல்லப்பட்டனர். இந்த முரண்பாடுகள் பிந்தைய வரலாற்றில் இல்லையா? அவையும் அந்த அடிப்படை முரண்பாடும் காணமல் போய்விட்டதா? பாசிசம் தனது சொந்த வர்க்க சர்வாதிகார நடைமுறை வழியூடாக மக்களை அடக்கியொடுக்கி எதுவுமற்றதாக காட்டும் நிலையிலும், ஆங்கங்கே இது வெடித்துக் கிளம்பத்தான் செய்கின்றது. எல்லா செய்தி அமைப்பும், அறிவுத்துறையினரும் மக்களின் துன்பத்தை மூடிமறைத்து தம்மைத் தாம் புலிகளின் பினாமியாகிய நிலையில், புரட்சிகரமான தேசியத்தை புரட்சிகரமான அரசியலை முன்வைப்பவர்களும் வால் பிடித்தபடி அவர்களுடன் கைகோத்து நிற்பதும் தான் இன்றைய எதார்த்தம். இது தேசபக்தனுக்கு விதிவிலக்கு அல்ல. மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள், முரண்பாடுகள், போராட்டங்கள் எதையும் நாம் தேசபக்கதன் இதழில் பார்க்க முடியாது. அரசுடன் எற்படும் புலி முரண்பாடுகள் தவிர எதையும் அவர்கள் கண்டு கொள்ளதாத வரை, ஒரு புரட்சிகர இயக்கம் கட்ட முனைவது என்பது எப்படி சாத்தியமானது. 1990க்கு பிந்திய வராலாற்றுச் சம்பவங்கள் சரி, அதற்கு முந்திய சம்பவங்களை அரசியல் ரீதியாக தொகுத்து, அதில் இருந்த புரட்சிகரமாக நடைமுறை ரீதியாக போராட மறுப்பது ஏன்?



நான் தேச விடுதலை இயக்கங்களின் பிற்போக்கை மறுத்து முற்போக்கான தேசியத்தை அதாவது புதிய ஜனநாயக புரட்சியை முன்வைக்கும் போது, அதை எதிர்த்து நிற்பது தேசபக்தனுக்கு தவிர்க்க முடியாத விதியாகின்றது. புலிகள் இனவிடுதலை இயக்கமல்ல என்கின்றனர். அரசியலைக் கைவிட்டு முதலாளித்துவ தேசியம் என பொத்தம் பொதுவில் கூறி நியாயப்படுத்துகின்றனர். உடனே விவதத்துடன் சம்பந்தமில்லாத வகையில் ஐக்கிய முன்னணி பற்றி பேசுகின்றனர். எனது குறிப்பான கட்டுரையில் ஜக்கிய முன்னணி பற்றி எதுவும் நான் எழுதாத போது (இந்த நூலின் உள்ளடகத்துக்கு அவசியமற்றது.), அதை பற்றி பேசுகின்றனர். என்ன கோசம் வைத்திருக்க வேண்டும், எப்படி போராடி இருக்க வேண்டும் என பலவாக பிரச்சனை மூடிமறைக்க திசை திருப்புகின்றனர். பாட்டாளி வர்க்கத்தின் கடமையை எப்படி தேசிய விடுதலை இயக்கத்திடம் கோரமுடியும் என்று புல்லரிக்கும் வகையில் விவாவதத்தை திசை திருப்புகின்றனர். அவர்களிடம் இருக்கும் ஊசலாட்டம் எனது நிலைக்கு இடையில் தடுமாறுவதையே காணமுடிகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் கடமையை புலிக்கு எதிரான விமர்சனமாக வைக்க முடியாது என்பது, தேசபக்கதனின் மைய அரசியல் வடிவமாக உள்ளது. புலிக்கு எதிராக என்ன விமர்சனத்தை எந்த அரசியலில் இருந்து வைக்கவேண்டும்? என்பதைப் பற்றி வாய் திறப்பதில்லை.



அவர்கள் இதை எப்படி எதிர் கொள்கின்றனர் என பார்ப்போம். "தேசிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்ற குட்டி முதலாளிய - அரசியல்  - ஆயுதப் போராட்ட இயக்கங்களிடம் இதற்கு அப்பால், பாட்டாளி வர்க்கம் எதை எதிர்பார்க்க முடியும் - இன ஒடுக்குமுறையில் தன் வர்க்கம் சார்ந்த பாதிப்புக்களை முக்கியப்படுத்தி முதன்மைப்படுத்தி தேசியக் கோரிக்கைகளை முன்னிறுத்தியது. இன ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளையும், விவசாயிகளையும் தனது வர்க்க நலனுக்காக தன் பின்னால் அணி திரட்டியது. இதற்காக ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய கோரிக்கையும், தேசியப் போராட்டத்துக்கான அடித்தளத்தின் தார்மீக நியாயங்களும் பிற்போக்கானவை என முத்திரை குத்த முடியுமா?" என்ற வாதம் எந்தளவுக்கு பிற்போக்கு தேசிய விடுதலைப் போராட்டங்களை விமர்சிப்பதற்கு எதிராக முனைப்பு பெறுகின்றது என்பதைக் காட்டுகின்றது. முதலில் இந்த இயக்கத்திடம் இதற்கு அப்பால் எதிர்பார்க்க முடியாது என்பதன் மூலம், விமர்சனத்தை தவறு என்கின்றனர். எதை எதிர்பார்க்க முடியும் என்பதை இட்டு எதுவும் கூற மறுக்கின்றனர். லெனின் இவர்களுக்கு சாட்டை அடியாக "... வளர்ந்த வரும் அரசியல் நிலைமையை இடைவிடாமல் விமர்சித்துவருவதாகும், முதலாளி வர்க்கத்தின் எதிர்பார்க்கவியலாத புதிய புதிய முரண்களையும் துரோகங்களையும் அம்பலப்படுத்தி வருவதாகும்." என்கின்றார். ஆனால் தேசபக்தன் இதை எப்போதும் நிராகரிக்கின்றது. அவர்களின் எழுத்துகள் இதற்கு எதிர்மறையில் தன்னை உப்புச் சப்பற்ற விசயத்தில் வக்களத்துவாங்குகின்றது.



விமர்சனம் எப்போதும் மக்களிடம் செல்லுகின்றது என்பதை இதன் மூலம் மறுக்கின்றனர். இது மக்களிடம் விலகிய அரசியல் நடைமுறையை காட்டுகின்றது. அதாவது பாட்டாளி வர்க்கம் தேசிய விடுதலை இயக்கத்தின் அரசியல் தவறுகளை, ஒட்டு மொத்தமாக மக்கள் மேலான ஒடுக்கமுறைகளை விமர்சிக்காது எப்படி போராடமுடியும்;. பாட்டாளி வர்க்கம் தனது வர்க்க நலன்களில் இருந்து விமர்சிப்பது என்பது, எங்கும் அடிப்படையானது. இதை நிராகரிப்பபவர்கள் மார்க்சியத்தை குழிதோண்டி புதைப்பவர்கள் தான். தேசிய இயக்கங்கள் தொழிலாளர் விவாசாய வர்க்கத்தை மட்டுமல்ல தேசிய முதலாளித்துவ வர்க்க சக்தி வரை தனது நலனுக்கு இசைவாக எமாற்றி பிற்போக்கு தேசியத்தை முன்னெடுக்கும் போது, அதை விமர்சிக்காத போராடத்தை புதியஜனநாயக புரட்சி என்பது கற்பனையானது. நாம் விமர்சிப்பது திருத்துவதற்காக மட்டுமல்ல. திருந்த மறுக்கும் போது அவர்களின் வெகுஜன அடித்தளத்தை பலவீனப்படுத்தவும், அவர்களின் செல்வாக்கில் இருந்து மக்களை விடுவிப்பதற்காகவுமே. இதன் மூலம் புரட்சிகரமான அமைப்பு ஒன்றை நிறுவதற்காகவுமே. நியாயமான விடுதiலைக்கு மக்கள் தமது சொந்த அரசியல் பலத்தில் நின்று போராடுவதற்கான ஆயுதமாகவே விமர்சனம் அமைகின்றது. ஆனால் தேசபக்கதன் பிற்போக்கு தேசியத்தை விமர்சிப்பது தவறு என்கின்றனர். அவர்களிடம் இதற்கு மேல் எதிர் பார்க்க முடியாது என்பதன் மூலம், உண்மையில் விமர்சிப்பதை நிறுத்த முனைகின்றனர். ஆனால் தேசபக்தன் உட்பட புலிகள் ஈறாக அரசை நோக்கி உயர்ந்தபட்சக் கோரிக்கையை முன்வைப்பது சரியானது என்பது, முரண்பாடாக இவர்களுக்கு இருப்பதில்லை. ஆனால் நாம் அதை புலிகளை நோக்கியும், ஏன் தேசபக்தனை நோக்கி வைக்கும் போது தவறனது என்கின்றனர். "தேசியப் போராட்டத்துக்கான அடித்தளத்தின் தார்மீக நியாயங்களும் பிற்போக்கானவை என முத்திரை குத்த முடியுமா?"" என்று கூறுவதன் மூலம் கற்பனையில் ஒரு அர்த்தமற்ற எதிர்விமர்சனத்தை புனைகின்றனர். தேசியத்தின் அடிப்படையான நியாயமான எந்தக் கோரிக்கையையாவது நாம் எப்போதாவது நிராகரித்தை ஆதாரமாக கட்டமுடியுமா? அவர்களால் ஒருக்காலும் முடியாது. நாம் இந்த நியாயமான கோரிக்கைகளை அழுல்படுத்தும் படி தேசிய இயக்கங்களை நோக்கி எமது விமர்சனத்தை வைக்கின்றோம். இதை விமர்சிக்க கூடாது என்பது தேசபக்தனின் சரிந்து செல்லுகின்ற அரசியல் வாதமாக உள்ளது. லெனின் தெளிவுபடவே எமக்;கு தேசியத்தில் உள்ள இடைவெளி என்ன என்பதையும், ஐக்கியம் என்ன என்பதையும் தேசபக்கதனின் அடிப்படைக் கண்ணோட்டத்துக்கு மாறாக விளக்கம் போது    "நாமனைவரும் முதலாளித்துவப் புரட்சியையும் சோஷலிஸப் புரட்சியையும் எதிர்மாறு வேறுபடுத்தி நிறுத்துகிறோம், நாமனைவரும் அவற்றைக் கறாராக வேறுபடுத்திப் பார்ப்பதின் முற்றவசியத்தை வலியுத்துகிறோம். என்ற போதிலும், வரலாற்றப் போக்கில் இவ்விரண்டு புரட்சிகளின் தனித்தனி அம்சங்கள், தனிப்பட்ட அம்சங்களை பின்னிப் பினைத்து விடுவதை மறுக்கமுடியுமா?" என்றார். இங்கு எமது அரசியல் விமர்சனங்கள் தவாறனவையாக இருப்பதில்லை.



எனது நூல் மேலான தேசபக்தனின் கருத்து என்பதால், முற்போக்கு தேசியத்துக்கு பதில் பிற்போக்கு தேசியத்தை முண்டு கொடுக்க முனைகின்றனர். இதை சாதகமாக்க புலிகளை முதலாளித்துவ சக்திகள் என பொதுப்படையாக்கி காட்டுவதன் மூலம், விமர்சனத்தின்; தேசிய அடிப்படையை அரசியல் ரீதியாக சிதைக்கின்றனர். முதலாளித்துவம் என்பது தரகு மற்றும் தேசிய முதலாளித்துவப் பண்பைக் கொண்டது. ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில், இவை எதிர்தெதிர் திசையில் இருப்பதுடன், தேசிய முதலாளித்துவத்தை தரகுமுதலாளித்துவம் அழிப்பதுடன் தேசியத்தை முடமாக்கின்றது. இந்த உள்ளடகத்தை தேசபக்தன் தேசியத்தின் பெயரில் மூடிமறைத்தபடியே தான், விமர்சிப்பது தவறு என்ற முடிவை முன்வைக்கின்றனர். அவர்களிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது என்ற கூறி தடுக்கின்றனர். எதிர்பார்க்க முடியாத ஒரு அமைப்பிடம், எமது அரசியலை முன்வைத்து அம்பலப்படுத்தி போராடும் பணியை மறுதலிக்க, ஐக்கிய முன்னணி பற்றி சம்பந்தமில்லாமல் முன்வைக்கின்றனர். ஆனால் பிறிதோர் இடத்தில் "தமழீழ மக்களின் தேசியப் போராட்டத்தினை பயன்படுத்தி, முதலாளித்துவ தேசியத்தை பலமான உட்கட்டமைப்புடன்  நிறுவியுள்ளது." என்ற கூறுகின்றனர். இதன் மூலம் பிரச்சனையின் அடிப்படையை திசை திருப்புகின்றனர். "முதலாளித்துவ தேசியத்தை" பலமான உட்கட்டமைப்புடன் நிறுவியுள்ளது என்பது, அரசியல் மிக கேவலானமான ஆதாரமற்ற வெற்று வெட்டுத்தனமாகும். பச்சையாக தரகு தேசியத்தை வாக்களத்து வாங்க இது பயன்படுகின்றது. முதலாளித்துவ தேசியத்தை பலமாக நிறுவியுள்ளனர் என்றால் எங்கே? எப்படி? புலிகளால் தேசிய பொருளாதாரம் சிதைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. தேசிய வளங்கள் வரைமுறையின்றி கற்பழிக்கப்படுகின்றது. தேசிய பொரளாதார வாழ்வியல் சார்ந்த மக்களின் அனைத்து உட் கூறுகளும் சிதைந்து செல்லுகின்றது. இதை எல்லாம் முடிமறைத்து, பலமாகவும் உறுதியாகவும் தேசிய பொருளாதாரம் உருவாக்கப்படுகின்றது என்பது, தேசபக்தன் பிற்போக்கு தேசியத்தை பாதுகாக்க வழங்கும் கைதேர்ந்த அரசியல்வாதமாகும்; முதலாளித்துவ தேசியம் பலமான உட்கட்டமைப்புடன் புலிகள் நிறுவியுள்ளனர் எனின், உண்மையில் தேசிய முதலாளிகள் பலமாக வளர்ச்சி பெற்ற ஜனநாயகப் புரட்சி இன்றைய உலகாளவில் விதிவிலக்காக இலங்கையில் உருவாகும் நிலையில் கனிந்து உள்ளது என்ற அர்த்தத்தை இது எற்படுத்தி விடுகின்றது. பாட்டாளி வர்க்கம் இதற்கு உதவி செய்யும் ஐக்கிய முன்னணியை அமைக்க வேண்டும் என தேசபக்தன் சொல்லாமல் சொல்ல முனைகின்றது. உலகளாவில் புதிய ஒரு எதிர்மறையான புரட்சி கட்டம் தோன்ற போகின்றது என்பதே தேசபக்தனின் கூற்றான, முதலாளித்துவ தேசியத்தின் பலமான உட்கட்டமைப்பு எமக்கு இடித்துரைக்கின்றது. இது தான் மார்க்சியம் என்றால், எப்படி இதை நாம் வாழ்த்தாது இருக்கமுடியும்?



தேசபக்தன் மேலும் "ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளையும், விவசாயிகளையும் தனது வர்க்க நலனுக்காக தன் பின்னால் அணி திரட்டியது. இதற்காக ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய கோரிக்கையும், தேசியப் போராட்டத்துக்கான அடித்தளத்தின் தார்மீக நியாயங்களும் பிற்போக்கானவை என முத்திரை குத்த முடியுமா?" என்று கேட்ப்பதன் மூலம், உண்மையில் பாட்டாளி வர்க்க நலன்களை காவு கொடுக்கின்றனர். தொழிலாளர் விவசாய நலன்களை தனது நலனுக்கு இசைவாக பயன்படுத்துகின்றது என்றால், அந்த நலன் தான் என்ன? அது முதலாளித்துவ நலன் என்றால், எந்த முதலாளித்துவ நலன்களை சார்ந்து பயன்படுத்துகின்றது. தேசிய முதலாளித்துவ நலன்ககளை அல்ல என்பது எதார்த்தம். இது இன்று அல்ல அன்று முதல் அதை நிறுவி வந்துள்ளது. தேசிய போராட்டத்துக்கான அடித்தளமும், தாமீக நியாயங்களும் என்றும் பிற்போக்கானவை அல்ல. இதை நாம் என்றும் நிராகரித்தில்;லை. என்னெனின அது ஜனநாயக கோரிக்கையாக இருப்பதால், அதை நாம் பிற்போக்கானவை என்று என்றும் சொன்னது கிடையாது. நாம் இதற்காக உறுதியாகவும் விடப்பிடியாகவும் முன்னிறுத்தி போராடியுள்ளோம், போராடிவருகின்றோம். இதனால் தான் புலிகளை நாம் விமர்சிக்கின்றோம். அந்த நியாயமான அடிப்படையை பயன்படுத்தி, அதற்கு எதிராக செயல் படுவதையே நாம் எதிர்த்து வந்துள்ளோம். தேசியக் கோரிக்கை என்பது தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது. தேசபக்தன் இதை என்றும் புலிகளைப் போல் முன்னிறுத்தியது கிடையாது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயமான முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகள் உயிர் உள்ளவை உயிரோட்டமானவை. இதற்காக மனித வரலாற்றில் இதை பாதுக்காவும், அதற்காக போராடவும் பாட்டாளி வர்க்கம் என்றும் பின் நின்றதில்லை. ஆனால் இதை பயன்படுத்தி பிழைக்கவும், காட்டிக் கொடுக்கவும், இதைக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முனையும் குழுக்களின் பிற்போக்கு தேசியவாதத்தை எதிர்த்து போராடுவது எப்போதும் சரியானதும் அடிப்படையானதுமாகும். அடுத்து "..தொழிலாளிகளையும், விவசாயிகளையும் தனது வர்க்க நலனுக்காக தன் பின்னால் அணி திரட்டியது.." என்றால் பாட்டாளி வர்க்கம் இவர்களை அவர்களிடம் இருந்து விடுவிப்பது எப்படி? புலிகளின் கோரிக்கைகள் நியாயமானவை என்றால், இந்த வர்க்கங்கள் எப்படி சொந்த வர்க்க நலனுக்காக போராடமுடியும்;. சொந்த வர்க்க கோரிக்கையை பாட்டாளி வர்க்கம் மட்டும் போராட முடியும் என்பதால், அதை முன்வைத்து புலிகளை நோக்கி விமர்சிக்க கூடாது என்றால் என்ன தான் பாட்டாளி வர்க்கம் செய்ய முடியும்?



விமர்சனத்தை திசை திருப்ப "பாட்டாளி வர்க்க இயக்கம் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிராக இன ஒடுக்கமுறையால் 1948ல் தொடங்கி பாதிக்கப்பட்ட தொழிலாளி - விவசாயி வர்க்கத்திற்காக எப்படிப் போராடியது? எப்படி போராடி இருக்க வேண்டும்? இதைப் பற்றி ஆசிரியர் எதுவும் தெளிவாக எழுதவில்லை." என்ற விமர்சனத்தை தேசபக்தன் வைக்கின்றது. எனது நூலின் எல்லைக்கு அப்பால் சென்ற விமர்சனத்தை வரிந்து கட்டமைக்கின்றது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி இனவாதத்தை உள்வாங்கிய வராலாற்றையோ, சிங்கள் பெரும் தேசிய எப்படி இனவாதத்தை கட்டமைத்து என்பது பற்றி ஆராய்வது இந்த நூலிலின் நோக்கமில்லை. அது போல் ஐக்கிய முன்னணி பற்றியோ இது போன்ற விடையங்கள் இந்த நூலின் உள்ளடக்க வேண்டும் என்பது விவாவதத்ததை திசை திருப்ப முனைவாதாகும்;. உண்மையில் இந்த நூலின் நோக்கம் இன்றைய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான தவறை, தமிழ் மக்கள் முன்பும் தேசிய வாதிகளுக்கு அம்பலப்படுத்துவதன் மூலம், பிற்போக்கு தேசியவாதத்தை எதிர்த்து முற்போக்கு தேசியத்தை சரியாக சுட்டிக் காட்டுவதுதான். பாட்டாளி வர்க்கம் தேசிய பிரச்சனையை தெளிவாக புரிந்து கொண்டு, தன்னை அரசியல் ரீதியாக ஆயுத பாணியவதை கோருகின்றது. இதை விடுத்து மற்றயை விடையங்களை இந்த நூல் ஆய்வுக்கு உள்ளாக்கவில்லை. அது மற்றோரு தேவை கருதிய நூல்தான்.



எனது நூலில் ஆய்வைச் செய்யாத ஒரு விடையத்தை எடுத்து வைத்து, அதை இந்த நூலுக்கு எதிராக முன்நிறுத்தி விமர்சிப்பதும், அதற்கு காவடி எடுப்பதும் நூலின் நோக்கத்தை பின் பக்க வழியாக சேறுயடிப்பது தான்;. தமிழ் தேசிய தலைவர்கள் எடுத்த நிலைப்பாட்டையே கைவிட்டு, எந்தளவுக்கு மோசடியாக மக்களை எமாற்றினர் என்பதை சொன்னவுடன், இதை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் என்ன செய்தது, என்ன செய்திருக்க வேண்டும் என்று என்னிடம் கேட்பது வேடிக்கையான வாதமாகும். நான் அந்தக் கட்சியையோ அல்லது அதற்கு பின்னால் உருவான எந்த கட்சியையின் பிரதிநிதியாக இருந்து இக்கருத்தை வைக்கவில்லை. இக் கட்சிகள் பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்த பிழைப்புவாதக் கட்சிகள் தான்;. வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய அடிப்படை மார்க்சியத்தைக் கூட எற்றுக் கொள்ளாத இனவாத கட்சிகளாக சீராழிந்த போன நிலையில் தான் அவை சிதைந்தன. என்னிடம் இதைக் கோருவது, என்ன செய்திருக்க வேண்டும் என்பது பச்சையான இனத் தேசியவாதிகளின் ஒரு தந்திர உபாயமான வாதமாகும்;. மார்க்சியம் எழுப்பும் கோட்பாடுகளுக்கு பதில் சொல்ல முடியாத போது வைக்கும் எதிர்வாதம் தான்; இது. இதை நான் சொல்ல வேண்டும் என்பது நிபந்தனையல்ல. சமூகத்தின் பால் அக்கறையாக செயல்படுவதால் அதை பற்றிய அக்கறை எனக்கும் உண்டு.



புலிகளின் இனத் தேசியத்தை பாதுகாக்க "தேசிய இன ஒடுக்குமுறையால் சமூக பொருளாதார அடக்குமுறையால், சுரண்டலால் பாதிக்கப்படுகின்ற புதிய சனநாயக வர்க்கங்களிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசாமல், முன்வைக்காமல் அவர்களை எப்படி பட்டாளி வாக்கம் அணிதிரட்ட முடியும்? கீழ் இருந்து கட்டப்படும் அய்க்கிய முன்னணிக்கான அரசியல் அடிப்படை என்ன? ஆசிரியரும், வாசகர்களும் இது குறித்த சிந்திக்க வேண்டும்." மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை பேசமல் முன்வைக்கமல் எப்படி பாட்டாளி வர்க்கத்தை அணி திரட்ட முடியும் என்று எம்மை நோக்கி எழுப்பவதுடன், அதைப்பற்றி சிந்திக்க கோருகின்றது தேசபக்தன். அத்துடன் இதை ஐக்கிய முன்னணி தத்துவதுடன் இனைத்து கருத்து வைக்கின்றனர். மக்களின் அடிப்படை பிரச்சனை என்ன? சிங்கள இன அரசின் ஒழுக்குமுறை மட்டுமா? இல்லையே. சிங்கள இனவாதிகள் நடத்துகின்ற இன அழிப்பு ஒழுக்கமுறையை எதிர்த்து போராடுவதை நாங்கள் மறுத்தோமா? இல்லையே. அப்போது ஏன் இப்படி தேசபக்தன் எழுப்புகின்றது? உண்மையில் சிங்கள் இனவெறி அரசுக்கு எதிராக போராடும் புலிகளை விமர்சிப்பதை எதிர்த்தே, மக்கள் பற்றியும் ஐக்கிய முன்னணியைப் பற்றியும் கதை சொல்லுகின்றனர். இன்று புலிகள் பேச்சுவார்த்தை எப்படி மக்கள் என்று உச்சாரித்த படி அவர்கள் நடத்தம் மக்கள் விரோத பேரங்களுக்கும், தேசபக்தன் சிந்திக்க கோரும் அடிப்படைக்கும் அதிக வேறுபாடு இல்லை. நோக்கம் ஒன்றுதான்

 

மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை எதார்த்தமானது. மக்கள் அரசிடம் இருந்து மட்டும் நெருக்கடியை எதிர் கொள்ளவில்லை. அதேநேரம் எல்லா மக்களும் ஒரே விதமாக ஒரு குறித்த பிரச்சனையை எதிர் கொள்ளவில்லை. வௌ;வேறு அதிகார பிரிவுகளின் கீழ்ளும், யுத்த பிரதேசங்களின் நகரும் தன்மைக்கு எற்ப பல வகையான சூழல்களுக்கு இசைவாக பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். இன ஒழுக்குமுறையை மட்டுமல்ல நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தை தரகு முதலாளித்துவ சுரண்டலை, ஏகாதிபத்திய பொருளாதார அழித் தொழிப்பு தொடங்கி தேசிய பொருளாதார அடிப்படையைக் கூட இழக்கின்றனர். மக்கள் வாய் பேச முடியாத சர்வாதிகர அமைப்பில், உழைப்புக்கும் உற்பத்திக்கும் எல்லயைற்ற சூறையாடலை வரைமுறையற்ற வகையில் எதிர் கொள்கின்றனர். மக்களின் அவலம் எல்லையற்று காணப்படுகின்றது. 1980 க்கு 1990 இடையில் மக்களும் அவர்களின் முன்னணியாளர்களும், பிரதேசத்துக்கு பிரதேசம் எதிர்கொண்ட பிரச்சனைகள் பலவகையாக இருந்தது. அவர்கள் அக்காலத்தில் தேசிய போராட்டத்தில் ஊன்றி நின்ற படி, மக்களின் நியாயமான அடிப்படை கோரிக்கைகள் சார்ந்து இயக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தம் உயிரை ஆயிரக்கணக்கில் தியாகம் செய்தனர். இந்த இரத்த கறைகளை குழி தோண்டி சொந்த கால்களால் மூடியபடி மக்கள் பிரச்சனை பற்றியும், ஐக்கிய முன்னணி பற்றியும் பேசுவது இன்று நகரிகமான அரசியலாகிவிடுகின்றது. மக்களின் பிரச்சனைனயில் தலையிடாத, அன்றாட வாழ்வியல் போராட்டத்தில் ஊன்றி நிற்பதன் மூலம் தான்; இது சாத்தியமாகின்றது. அரசுக்கு எதிராக மட்டும் அல்ல, அரசு மற்றும் இயக்கங்கள் மக்களின் வாழ்வியிலை சிதைக்கும் அனைத்து வாழ்வியல் சிதைவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் தான் ஐக்கிய முன்னணி பற்றி நாம் பேச முடியும். மக்களின் வாழ்வை அவர்களின் உயிர் வாழ்வையும் பாதுகாக்காத எந்த அரசியலும், ஐக்கிய முன்னணியும் மக்களுக்கு விரோதமானவை. அதாவது சிங்கள் அரசை மட்டும் எதிர்த்து, ஐக்கிய முன்னணி பற்றி தேசபக்தனின் விவாதம் எப்போதும் மையப்படுகின்றது.


 
சிங்கள இன ஆக்கிரமிப்பாளன் அல்லது ஏகாதிபத்தியம் புலிகள் இயக்கத்தை அழிப்பது அல்லது அவர்களின் போராட்டத்தை அழிப்பதை எதிர்த்து போராடவது, பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இது பற்றி நான் பலமுறை சமரில் குறிப்பிட்டுள்ளேன். உதாரணமாக குவைத்தை ஈராக் ஆக்கிமித்த போது பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது. நாம் ஈராக்கின் ஆக்கிரமிப்பை எதிர்த்தோம்;. அதே போல் குவைத்தை மீட்பதாக கூறி அமெரிக்கா தலைமையில் நடத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்தோம்;. உண்மையில் ஆக்கிரமிப்பையும்;, புதிய எகாதிபத்திய ஆக்கிரமிப்னபயும் கூட எதிர்த்தோம்;. இன்று ஈராக்கை அமெரிக்கா நேரடி காலனியாக ஆக்கிரமித்த போது கூட எதிர்க்கின்றோம். ஆனால் இந்த விடையத்துக்காக ஈராக் சதாம் அரசுடன் ஐக்கிய முன்னணி அமைக்கவில்லை. அந்த யுத்தத்தை எதிர்க்கும் பிரஞ்சு மற்றும் மற்றைய எகாதிபத்தியத்துடன் ஐக்கிய முன்னணி அமைக்கவில்லை. ஈராக் அரசுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும் என்பதில் எமக்கு முரண்பாடு இல்லை. உண்மையில் ஈராக் மக்களின் போராடத்தையே நாம் ஆதாரித்து நிற்கவும், ஐக்கிய முன்னணி அமைக்கவும் பாட்டாளி வர்க்கம் முயலுகின்றது. இதுவே சர்வதேசிய பாட்டாளி வர்க்க கட்சிகளினதும் நிலையாகும். இது போன்று தான் கொஞ்சம் வேறுபட்ட நிலையில் இலங்கை பிரச்சனை உள்ளது. முஸ்லீம் மக்கள் எந்த வகையான நிலைப்பாட்டை புலிக்கு எதிராகவும் அரசுக்கும் எதிராகவும் எடுப்பது என்பதை பாட்டாளி வர்க்கம் தெளிவாக வரையறுக்கும் போது, அனைத்தவிதமான பிற்போக்கு தேசியவாதம் நிர்வாணமாகும். இரண்டு பக்கத்திலும் இருந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் முஸ்லீம் மக்களின் நிலையில், அவர்கள் என்ன செய்வது. உண்மையில் ஒரே ஒரு சர்வதேசிய நிலைப்பாடுதான், புலிக்கு அரசுக்கும் மற்றும் அனைத்து பிற்போக்கு பிரிவுகளுக்கும் எதிரான போராட்டத்தை, அனைத்து தேசிய இனங்களுக்கும் வழிகாட்டும். இதை யாரும் எழுந்தமானமாக நிராகரிக்க முடியாது.


 
பிற்போக்கு தேசியத்துக்கு வக்காளத்து வாங்கி அதை ஆதாரிக்க "தேசிய இன ஒடுக்குமுறை அரசக்கு எதிராக, அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, தரகு இயக்கம் கூட போராடுகின்ற வரை, அவ்வியக்கத்துடன் மேல் இருந்து அய்க்கிய முன்னணி கட்டி, பொது எதிரிக்கு எதிராகப் போராட பாட்டாளி வர்க்கம் தயாராக இருக்க வேண்டும்" என்கின்றனர். ஐக்கிய முன்னணி என்பது என்ன. இரண்டு வர்க்கங்களின் வேறுபட்ட கோரிக்கைகளும் போராட்ட வழிகளிலும் உள்ள ஒற்றுமை சார்ந்து தான் உருவாகின்றது. அது பிரதான எதிரியை தனிமைப்படுத்தவும், மக்களின் நலனை பாதுகாக்கவும் கையாளப்படும் ஒரு யுத்தந்திர செயல் வழியாகும். மேலும் துல்லியமாக ஆராய்ந்தால் மக்களின் அடிப்படை நலன்களை பாதுகாக்க, நடைமுறையான செயல் ரீதியான ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு, எதிரியை தனிமைப்படுத்தி அழிப்பதுதான். இதை எப்போதும் தவறாகவும், சந்தர்ப்பவாதத்துக்கு இசைவாக பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு விடையமும் நுட்பமாக கவணத்தில் கொண்டே இவை கையாளப்படவேண்டும்;. மக்கள் நலனே இதில் முதன்மையானது. ஐக்கிய முன்னணியில் கீழ் இருந்து கட்டும் வடிவமும், மேலிருந்து கட்டும் நடைமுறையும் எப்போதும் விமர்சனம் சுயவிமர்சனத்தை உள்ளாடக்கியது.


 
பிற்போக்கு தேசியத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் நூல் மேலான விமர்சனமாக ஐக்கிய முன்னணியை தேசபக்தனை முன் தள்ளுவதால், உண்மையில் விமர்சனத்தை கைவிடக் கோருகின்றனர். இதை தேசபக்தன் அவர்கள் "இதற்கு மேல் அவர்களிடம் எதிர் பார்க்க முடியாது" என்ற கூறி விமர்சிப்பதை விமர்சிக்கின்றனர். பாட்டாளி வர்க்கம் பிற்போக்கு தேசியத்திடம் மக்களின் கோரிக்கையை முன்வைத்து விமர்சனமாக வைக்க கூடாது என்று கருத்தை கட்டமைக்கின்றனர். இதை பாதுகாக்க ஐக்கிய முன்னணியை பற்றி பேசுகின்றனர்.  ஐக்கிய முன்னணி பற்றி இந்த நூல் ஆராயவில்லை. ஆனால் சமர் பல சந்தர்ப்பத்தில் இதன் அடிப்படையில் தனது கருத்தை முன்வைக்கின்றது, வைத்து வருகின்றது. இந்த நூலில் புலிகளை நோக்கியும் தேசிய வாதிகளை நோக்கியும் எனது விமர்சனமே ஐக்கியமுன்னணி தந்திர உபாயத்தை அடிப்படையாக கொள்கின்றது. தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை நோக்கி போராடக் அழைக்கின்றது. எதிரியை நன்பனை தெளிவாக பிரிக்க கோருகின்றது. அரசுக்கு எதிராக நாம் உயர்த்தும் போராட்டமே ஐக்கிய முன்னணிக்கான நிபந்தனையாக கொள்கின்றது. நான் புலிகளின் வதைமுகாமில் இருந்த தப்பிய பின், எனது விடையம் தொடர்பாக அவர்கள் பேசிய மேடையில் நான் பேசினேன். அவர்கள் நான் பேசிய போது மேடையில் இருந்து இறங்கிச் சென்ற நிலையிலும், அவர்களுக்கு எதிராக நான் பேசிய போது, தமிழ் மக்களின் நலனை சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் போராட வரும்படியே அறைகூவல் விடுத்தவன். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யுத்தத்தை தொடங்கிய பின்பாக வெகுசான போராட்டத்துக்கு புலிகள் பின்வாங்கிய நிலையில், நானே தலைமை தாங்கி நடத்திய போது, எதிரிக்கு எதிரான ஐக்கிய முன்னணி கோட்பாட்டை எதார்த்ததில் நடைமுறையில் கையாண்டவன். நாளை ஏகாதிபத்தியம் ஆக்கிரமிக்கும் போதும் இந்த ஐக்கிய முன்னணி கோட்பாட்டின் அடிப்படையில் பிரதான எதிரிக்கு எதிராக நாம் இருப்பது எதார்த்தம் தான். ஆனால் விமர்சன சுதந்திரத்தை பிற்போக்கு தேசியத்தின் மேல் நாம் எப்போதும் கொண்டுள்ளோம். 1980 க்கும் 1990 க்கும் இடையில் நாம் இயக்கத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதுடன் அதற்கு தலைமை தங்கிய போதும், பிரதான எதிரியை நோக்கிய போராட்டத்திலும் தலைமை தாங்குபவர்களாக எதார்த்தில் இருந்தோம். எமது விமர்சன சுதந்திரம் உட்பட இயக்கத்துக்கு எதிரான போரட்டம் எதையும் நாம் கைவிட்டுவிடவில்லை. அதை நடத்தியபடி எதிரியை நோக்கி எதார்த்ததில் தலைமை தாங்கினோம். மக்களின் வாழ்வின் அடிப்படை நலன்களை நாம் சார்ந்து, அவர்களுக்காக அவர்களுடன் இணைந்து நின்று போராடுவது பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையான கடமையாக இருந்தது, இருக்கின்றது.


 
இங்கு அடுத்தாக. "சிங்களத் தேசியம், தமிழ் தேசியம் என பொதுவாக பார்க்க முடியாது. அடையளப்படுத்தக் கூடாது" அப்படி நான் பொதுவாக பார்க்கவில்லை. நிபந்தனைக்கு ஊடாகவே அதை பார்க்கின்றேன். ஆனால் இங்கு தேசபக்தனின் இந்த வாத உள்ளடக்கம் என்பது, பொதுவான அடிப்படையான உண்மைச் சராம்சத்தை மறுப்தாகும்;. இன்று ஆதிகத்தில் இருக்கின்ற தமிழ் சிங்கள தேசியக் கண்ணோட்டத்தை மூடிமறைக்க முயல்வாதாகும். உதாரணமாக முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை தமிழ் மக்கள் செய்தார்கள் என்பது, ஒரு தவறானது வாதம் என்று கூறுவது போன்றது. முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் துணையில்லாமல் ஒடுக்குமுறை செய்யப்படவில்லை. புலிகள் முஸ்லீம் மக்களை ஒடுக்கிய போது, அந்தக் குற்றத்துக்கு தமிழ் மக்களே பொறுப்பாளிகள்;. தமிழ் மக்கள் மேலான ஒடுக்கு முறைக்கு சிங்கள மக்கள் பொறுப்பாளியாவர். விதிவிலக்கான எதிர்ப்புகள் இருந்த போதும், பொதுவான சமூக ஆதிக்கம் பெற்ற கருத்தை பொதுமைப்படுத்தி அந்த சமூகத்தையே விமர்சிக்க வேண்டும். விமர்சிக்கும் போது தான், சரியான சமூக கண்ணோட்டம் மொத்த சமுகத்தின் மேல் எற்படும். எமது சமுதாயத்தை நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ அமைப்பு என்ற பொதுவாக சரியாக நாம் என்று கூறுகின்றோம். அப்படி சிங்கள தேசியம் தமிழ் தேசியம் என்று கூறமுடியும். நிபந்தனை இன்றி பிரிப்பது என்பது ஒரே பிற்போக்கான கூற்றுக்கு கவசமிட முயல்வது தான். இங்கு ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசியமும், ஒடுக்கும் தேசியமும் சராம்சத்தில் இருப்பதை இது நிராகரிக்கவில்லை. தேசியம் ஒடுக்கமுறையை எதிர்த்து, தான் ஒடுக்காமல் இருக்கும் வரை இது பொருந்துகின்றது.


 
லெனின் "பழையதாக இருப்பினும் எக்காலத்துக்கும் புதுமைப் பொலிவுடன் விளங்கும் மார்க்ஸியத்தின் கருத்துக்களை (ஜனநாயகப் புரட்சியின் முதலாளித்துவத் தன்மையை) ஒரு முன்னுரையாக அல்லது முதல் மெய்க்கோளாகக் காங்கிரஸ் தீர்மானம் எடுத்துக் கொள்கின்றது. ஜனநாயகப் புரட்சிக்காகவும் சோஷலிஸப் புரட்சிக்காகவும் ஒருங்கே போராடும் முற்போக்கான வர்க்கத்தின் முற்போக்கான பணிகளைப் பற்றி அதிலிருந்து முடிவுகள் எடுக்கின்றது." என்றார். இதை மறுத்து தேசியத்தில் உள்ள பிற்போக்கு தேசியத்தை பாதுகாக்கவும், விமர்சனத்தை மறுக்கவும் "தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முற்போக்கு தேசியத்தை, தமிழ்த் தேசிய இனத்திலுள்ள எந்த வர்க்கம் முன்னெடுத்திருக்க முடியும் என ஆசிரியர் எதிர்பார்க்கிறார். தரைப்படுத்தலை முன்னிலைப் படுத்திய குட்டி முதலாளிய வர்க்கத்திடம் முற்போக்கு தேசியத்தை எதிர்பாhக்கிறாரா? அல்லது பாட்டாளி வாக்கத்திடம் எதிர்பார்க்கிறாரா?" அற்பத்தனமான கொச்சையான கேள்வி. லெனின் கூறுவது போல் "சொற்களும் செய்கைதான் என்பதைக் கொச்சையான புரட்சிவாதம் பார்க்கத் தவறுகின்றது" இதையே தேசபக்கதன் புலிகளை பாதுகாக்க அர்ப்பத்தனமாக எழுப்புகின்றனர். ஒரு வர்க்கத்திடம் மட்டுமல்ல. தேசியத்தில் முற்போக்கு பாத்திரத்தை வகிக்கும் அனைத்து வர்க்கத்திடமும் நாம் கோருகின்றோம். தேசிய நலன்களை பெறக் கூடிய பாட்டாளி வர்க்கம் தொடங்கி தேசியமுதலாளி வர்க்க ஈறாக முற்போக்கு தேசியத்தின் அனைத்து வர்க்கக் கடமையையும் நடைமுறைப்படுத்த கோருவது ஜனநாயக (புதியஜனநாயக) கடமையாகும். இது தேசியத்தின் அடிப்படையான கடமையும் நிபந்தனையுமாகும். இது பாட்டாளி வர்க்கத்தின் கடமை மட்டுமல்ல. பாட்டாளி வர்க்கமாகிய நாம் அதை உறுதியாக முன்வைத்த போராடும் போது, முற்போக்கான தேசிய வர்க்கத்திடம் இதை அமுல்படுத்தக் கோருவது அடிப்படையான ஐக்கிய முன்னணி கோரிக்கையாகும். இதை மறுத்து கோருவதே தவறு என்பது, தேசியத்தை மறுக்கும் இருக்கின்ற பிற்போக்கு தேசியத்தை கவசமிட்டு பாதுகாப்பது தான். இதற்கு வெளிச்சம் காட்ட தேவையில்லை. அப்பட்டமான நிர்வாணமானக உள்ளது.