இவர்களின் கைக்கூலி அரசியல் பணி என்ன?
1. பேரினவாத அரசுடன் சேர்ந்து அபிவிருத்தியின் பெயரில் கிழக்கை ஏகாதிபத்தியத்துக்கும், பேரினவாதத்துக்கும் விற்றல்.
2. வடக்கு மக்களையும், கிழக்கு (தாம்) அல்லாத தமிழ் அரசியல் கட்சிகளையும் கிழக்கில் இருந்து முற்றாக ஒழித்தல்.
3. இன்னமும் புலியுடன் இருக்கின்ற கிழக்கு உறுப்பினர்களின் புலிக் குடும்பங்களை படுகொலை செய்து, அவர்களை ஒழித்தல்.
இதுதான் கிழக்கில் கருணா - பிள்ளையான் கும்பலின் அரசியலாக அரங்கேறுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக, ஒரு கூலிக் கும்பலாக இருந்து செய்வது, இதைத்தான்.
ரவுடியும், கைக்கூலியுமான பிள்ளையானுக்கு ரை கட்டி, கோட்டுப்போட்டு, நாசனலும் வேட்டியும் கட்டி, வேஷம் போட்டுக் காட்டுவது வெளிப்படையான கவர்ச்சி அரசியலாகிவிட்டது. இதை வழகாட்டும் கும்பல், ஊர் உலகத்தை ஏமாற்றவும், பதவிகள், பட்டங்கள். அமைதி சமாதானம் பெயரில் கோசங்கள், அறிக்கைகள் என்று, தடபுடலாக ஜோக் அடிக்கின்றனர். இதுவோ இப்படி ஒரு மோசடிக் கும்பலாக, இந்தா அபிவிருத்தி அந்தா விடிவு என்று அறிக்கைகள் ஊடாக, வித்தை காட்டுகின்றனர்.
இதற்கு அரசியல் ஆலோசனை வழங்கும் ஞானம். ஸ்டாலின் என்ற புனைபெயரில், ஸ்டாலினுக்கு எதிராக எழுதிய மோசடிக்காரன்.
கருணாவின் உடைவின் பின், அவரின் அரசியல் மதியுரைஞராகிய பின், பிரான்சில் சில இலட்சம் ஈரோ பெறுமதியான சொந்த வீடு வாங்கினார். எப்படித் தான், எங்கிருந்து தான் பணம் கட்டினார், கட்டுகின்றனர். கிழக்கில் அரச கைக்கூலியாக இருப்பதால், அந்த பேரினவாத அரசு சம்பளம் கொடுக்கின்றதோ? யாருடைய உழைப்பு. அங்கு அவர், இங்கு சொத்து ஏதோ வகையில் பெருகுகின்றது. அடிக்கடி அங்கும் இங்கும் பயணங்கள். அரச கைக்கூலித்தனத்தை பிரச்சாரம் செய்ய, அங்குமிங்கும் பயணங்கள் கூட்டங்கள். இதன் பின் எத்தனை தாலிகள் அறுந்ததோ!?
இது ஒருபுறம். மறுபக்கம் கடைந்தெடுத்த கைக்கூலி கும்பலுக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் ஞானம் அன்ட் கொம்பனி. இவர்கள் தம் அரசியல் படி படுகொலைகளைச் செய்கின்றனர். புலியுடன் இன்னமும் எஞ்சியிருக்கும் புலி உறுப்பினர்களின் குடும்பத்தைச் சோந்தவர்களை கிழக்கில் படுகொலை செய்கின்றனர்.
எப்படி கிழக்கில் எஞ்சிய புலியை ஒழித்தல் என்ற அடிப்படையில், குடும்ப உறுப்பினர்கள் பிள்ளையான் கும்பலால் கொல்லப்படுகின்றனர். இந்தக் கும்பலுக்கு உயிர்நிழல், எக்சில் சஞ்சிகைகளின் ஆசிரியர் மற்றும் பாரிஸ் தலித் முன்னணி ஞானமும், பெண்ணியம் பேசிய அவரின் மனைவி விஐp எல்லாம் தூணாக துணை நிற்கின்றனர். இவர் பிள்ளையானின் அரசியல் ஆலோசகராக கிழக்கில் நின்று, இந்த கொலைகளுக்கு துணையாக ஆலோசனை வழங்கி ஊக்குவிக்கின்றார். இந்தக் கும்பலைச் சேர்ந்த எவரும் (கிழக்கு பாசிச இணையமான விழிப்பு, நெருப்பு, அதிரடி முதல் தொலைபேசி மூலம் கொலைகார கும்பலின் நடத்தைகளை மறுக்கும் விபச்சார அரசியலை செய்யும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வரை) இந்தக் கொலைகளை கண்டிக்கவில்லை. அவர்களின் சட்டம் ஆட்சி கொலையாளிகளை கைது செய்யவில்லை.
இவர்களின் சட்டம், கிழக்கு அல்லாத மற்றைய அரச கூலிக்குழுவுக்கு எதிராக மட்டும் பாய்கின்றது. பின் சிறையில் அவர்களை கொல்ல, அங்கு குண்டு வெடிக்க வைக்கப்படுகின்றது. என்ன அரசியல்!? என்ன ராஜதந்திரம்!?
ஏகாதிபத்திய தயவில் அபிவிருத்தியாம்! ஏகாதிபத்தியம் கொள்ளையடித்துக் கொண்டு போகும் ஏற்பாட்டைத் தான், இந்தக் கும்பல் கிழக்கின் அபிவிருத்தி என்கின்றனர். ஏகாதிபத்தியம் போட்ட பணத்தை கிழக்கு மக்களிடம் பலமடங்காக சூறையாடி, அதை மீளக் கொண்டு போவதைத் தான், கிழக்கு அபிவிருத்தி என்கின்றனர்.
இப்படி கிழக்கு மக்களுக்கு எதிராக, அவர்களின் வாழ்வோடு இணைந்து நிற்க முடியாத இந்தக் கூலிக்கும்பல், பேரினவாதத்தின் தொங்கு சதையாக அங்குமிங்கும் தொங்குகின்றது. பதவிகள் பட்டங்கள் ஊடாக, பல்வேறு வேஷங்கள் போட்டு, நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.
பி.இரயாகரன்
08.09.2008