09252023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஹொலிவூட்டில் திருப்பதி மசிர் !

தமிழ்ப்பதிவுகள், உலகம்

பரீட்சையில் பாஸாக வேண்டுமா? வேலை கிடைக்க வேண்டுமா? வெளிநாடு போக வேண்டுமா? தீராத நோய்கள் தீர வேண்டுமா? காதலன்/காதலியைக் கைப்பிடிக்க வேண்டுமா? பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமா? சினிமாவில் சேர ஆசையா?

 

ஹொலிவூட்டில் மொட்டை4கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எளிய வழி உங்கள் மசிரை திருப்பதிக்கு வந்து மழுங்க வழித்துக் கொள்வது. ஏற்கெனவே மொட்டையடித்தவர்கள் பயன் பெற்றுளார்கள். பயன்பெற்றவர்கள் மீண்டும் மொட்டையடிக்க வருகிறார்கள்.

*

உலகத்தில் வத்திக்கானுக்கு அடுத்தபடியான பணக்கார ஆலய நிர்வாகம் திருப்பதிதான் என்கிறார்கள். கோயில் நிர்வாகம் சுமார் 120 கோடி டொலர்களை வருடாந்தம் செலவழிக்கிறதென்றால், கிடைக்கும் வருமானம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பக்த கோடிகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான நன்கொடைகளை விட இன்னொரு கொடையும் ஆலய நிவாகத்திற்கு பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. அது வேறெதுவுமில்லை, பக்தர்களின் மசிர் !

 

மொட்டை போட்டுக்கொள்ளும் பக்தர்களின் மயிர் சுமார் 400 தொன் வரை வருடம் ஒன்றுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 130 கோடி டொலர்கள் என்று
ஹொலிவூட்டில் மொட்டை2மதிப்பிடப்படுகிறது. 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடும் கோயில் மயிரின் பிரதான இறக்குமதி நாடுகளாக சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன.

 

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகி வெளிநாடுகளுக்கு வந்திறங்கும் மயிரை 2000 டொலர்களில் ஆரம்பித்து வாங்கிறார்கள் பிரபல வாடிக்கையாளர்கள்.

 

“கோயில் மயிர்” (Temple Hailr) என்றழைக்கப்படும் திருப்பதி மசிர் ஹொலிவூட்டில் மிகவும் பிரசித்தமானது. யாரோ ஒரு பக்தையால் ஏதோ ஒரு வேண்டுதலுக்காக கடவுளுக்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட மசிர் பத்தாயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால், டேவிட்பெக்ஹாம், பரிஸ்ஹில்டன் அல்லது ஜனற் ஜக்ஸன் தலையை அலங்கரிக்கக்கூடும்.

 

ஒவ்வொரு வருடமும் சுமார் 9-20 கோடிப் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து மொட்டையடித்துக் கொள்கிறார்கள். இவர்களை மொட்டையடிப்பதற்காக சுமார் 600 சிகையலங்காரத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவிக்கிறது. இவர்களுக்கான பணத்தைக் கொடுப்பதென்னவோ மொட்டை போட்டுக்கொள்ளும் பக்தர்கள்தான்.

*

ஹொலிவூட்டில் மொட்டை3ஏற்றுமதி செய்யப்படும் மயிர் தரம் பிரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும் இடத்தில் பெண்கள் 10 மணித்தியாலங்களுக்கும் மேலாக, இரவு/பகலாக வேலை வாங்கப்படுகிறார்கள். ஒருநாள் ஊதியமாக இவர்களுக்குக் கிடைப்பது வெறும் 18,- ரூபாய்கள் மட்டுமே. மயிர்களில் சிக்கெடுக்கும் வேலைகளுக்கு சிறுவர்களும் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்களின் பிஞ்சு விரல்கள் இதற்கு மிகவும் உபயோகமானவை என்பது முதலாளிகளின் விளக்கமாயிருக்கிறது.

 

தொழிலாளர்களுக்கான ஊதியத்திலும், வேலை நேரத்திலும் நியாயமாக நடந்துகொள்ளாத முதலாளிகள்/கோயில் நிர்வாகம் அவர்களது உடல்நலத்திலா அக்கறை காட்டப் போகிறார்கள். கைகளுக்கு கையுறைகளோ, மூக்கு/வாயை மறைக்கும் தடுப்புத்துணிகளோ இல்லாத நிலையில் மயிர்க் குவியல்களுக்குள் இருந்து வேலை செய்யும் பெண்களும், பிள்ளைகளும் தோல் நோய் உட்பட பலவிதமான் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

 

***

 

வீணாகப் போகும் மயிரைக் காசாக்குவது ஒன்றும் பிழையான விடயமல்ல. ஆனால் கோயிலின் பெயரால் ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டியது. இங்கே தொழிலாளருக்குரிய பாதுகாப்புகள் எதுவுமில்லை. வேலைநேர ஒழுங்குகள் இல்லை. வயதெல்லை கவனிக்கப்படவில்லை. மருத்துவ வசதிகள்/சுகாதர ஒழுங்குகள் இல்லை. மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது.

 

***

ஹொலிவூட்டில் மொட்டை1மயிரை மழுங்க வழித்துவிட்டு, மொட்டைத் தலையுடன் திரிந்தால் கேட்டதைக் கொடுப்பார் கடவுள் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இவர்களின் இந்த நம்பிக்கை முட்டாள்தனமானது என்று ஆணித்தரமாக நம்புவது கடவுள்/மத எதிர்ப்பாளர்கள் மட்டும் இல்லை, முக்கியமாக கோயில் நிர்வாகம்தான் என்பது இங்கு சுவாரஸ்யமானது. இல்லையென்றால் பக்தர்கள் கடவுளுக்கு அன்புடனும்/பயத்துடனும் அள்ளி வழங்கும் மசிர்-காணிக்கையை விற்று அவர்கள் காசாக்குவார்களா?

 

மதங்கள்/கோயில்கள் ஒடுக்குமுறை நிறுவனமாக மட்டுமல்ல, சிறந்த வியாபாரிகளாகவும் இருக்கின்றன என்பதற்கு மயிர் வியாபாரம் ஒரு சின்ன சாட்சியம்தான். மறைத்தும், ஒளித்தும் செயற்படுகின்ற கோயில்கள் இப்போதெல்லாம் நிர்வாணமாகிக் கொண்டிருந்தாலும், கடவுள் நம்பிக்கை முற்றிப் போன பக்தர்கள் இவற்றைக் கண் திறந்து பார்ப்பதாயில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது நம்பிக்கைகளைப் பற்றிக் கதைப்பது முட்டையில் மயிர் புடுங்குவது போன்றது அல்லது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக எடுக்கிறார்கள். இதில் அவர்களின் மயிர் “பிஸ்னெஸ்” பற்றிக் கதைப்பதெப்படி. தங்கள் நம்பிக்கைகளே தங்களை மொட்டையடிப்பதை அவர்கள் புரிந்துகொள்ள விரும்பவில்லை.

 

பக்தர்களை நன்கு புரிந்து கொண்ட கோயில் நிர்வாகமோ கோடிக்கணக்கான டொலர்களில் புரள்கிறது. காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது!

 

***

 

இந்த மசிர் வியாபாரம் பற்றி சுருக்கமாக ராஜேந்தர் பாணியில் சொல்வதென்றால் -

பக்தர்கள் அடிப்பதோ மொட்டை
கோயில் நிர்வாகம் எண்ணுவதோ துட்டை
கடவுள் நம்பிக்கைக்கு போட்டார் பட்டை

 

பொறுக்கி


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்