Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிகளின் மீதான ஐரோப்பிய பயணத் தடைகளைத் தொடர்ந்து, இது புலிகள் மீதான தடையாக அறிவிக்கும் ஒரு அனுகுமுறைக்குரிய நடைமுறை ஒன்று அழுலுக்கு வந்துள்ளது. புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நிலையில்,

 புலிகளின் பொது நடைமுறைகள் கட்டுப்படுத்தும் ஆரம்ப சமிக்கைகள் தொடங்கியுள்ளன. இதுவே தீவிரமான நிலையை நோக்கி நகரும் வண்ணம், புலிகளின் நடடிக்கைகள் தொடருகின்றன. தொடரும் படுகொலைகள், சிறுவர்களை கடத்தி அல்லது இணங்க வைத்து பயிற்சி அளித்தல் என்ற புலி இராணுவவாத கும்பல் அரசியல் மேலும் தீவிரமாகின்ற நிலையில், இதன் விளைவு மிக பாரதூரமான ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நோக்கி வேகமாகவே நகருகின்றது. இதை இக்கட்டுரை மூலம் ஆராய முனைகின்றேன்.

 

புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கை புலிகள் தரப்புக்கு ஒரு துன்பவியல் நிகழ்சியாகவும், புலியெதிர்ப்பு அணியினருக்கு இதுவே ஒரு மகிழ்சியான நிகழ்ச்சியாகவும் மாறியது. இதனடிப்படையில் பலரும் தத்தம் பக்கத்தில் நின்று இதுபற்றி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மக்கள் பற்றி எந்தவிதமான சமூகக் கருசனையுமின்றி;, தத்தம் குறுகிய சுயநல அரசியலில் முகிழ்ந்து மக்களையே புணருகின்றனர். இங்கு இரண்டு தரப்பும், ஏகாதிபத்தியங்கள் பற்றி சுடுசுரணையற்ற வகையில் தத்தம் அளவில் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடுகள், கேள்விக்குள்ளாகத வகையில் தத்தம் நிகழ்ச்சி நிரல்களையும், கருத்துகளையும் தொடருகின்றனர்.

 

புலிகளின் மீதான நடவடிக்கைகள் முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக மாற்றியிருக்கின்றது. இவை தொடருவதற்கான சூழலும், எதிர்வு கூறலுக்குரிய மதிப்பீடுகளும் நிராகரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதை உறுதி செய்யும் வகையில், புலிகளின் இராணுவ கும்பல்வாத நடத்தை நெறிகள் மாற்ற முடியாத ஒன்றாகவே மீண்டும் மிண்டும் அரங்கேற்றுகின்றது. இன்று சர்வதேச தலையீட்டுகான ஒரு நிலையை நோக்கி நகரும் வண்ணம், நிகழ்ச்சிகள் அதை நோக்கிச் தள்ளிச் செல்லுகின்றன. புலிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் அளவுக்கு கூட நிலைமை மோசமாகிச் செல்லுகின்றது. மனித இனத்துக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களாக அறிவிக்கும் ஏகாதிபத்திய நிலையை நோக்கி, புலிகள் தமது சொந்த நடவடிக்கைகள் மூலம் அதற்கான அத்திவாரத்தை அன்றாடம் இடுகின்றனர்.

 

இந்த நிலையை நோக்கி அல்லது தவிர்த்து அரசுடன் இணங்கிப் போகவைக்கும் நடைமுறை சார்ந்த முதற்பணியாகவே, ஐரோபிய பயணத்தடை அழுலுக்கு வந்துள்ளது. இந்த முயற்சி தோல்வி பெறும் போது, ஒட்டு மொத்தமான தடையாகவும், சர்வதேச ரீதியான ஒரு இராணுவ தலையிட்டு மூலம் புலிகளை அழித்தொழிக்கும் சூழலுக்குரிய ஒரு நிலைமை, அதிகரித்து வருகின்றது. அதற்கான சூழலை, புலிகளே அன்றாடம் தமது சொந்த இராணுவ கும்பல்வாத நடத்தைகள் மூலம் உருவாக்கி வருகின்றனர். ஐரோப்பியவின் எகாதிபத்திய நலன்கள் ஒருபுறம் இருக்க, மறுபக்கத்தில் இன்றைய துரித முடிவுகளுக்கு புலிகள் நடத்தைகளே தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது.

 

மக்களின் வாழ்வை மிதிக்கும் புலம்பல் அரசியல்

 

இந்த நிலையல் தமிழ்ச்செல்வன் ஐரோப்பாவின் இன்றைய முடிவுகளையிட்டு கூறியவை, தமது சொந்த குழுவாத இராணுவ எல்லையைத் தண்டியவையல்ல. மக்களின் நலனையிட்டு அலட்டிக் கொள்ளாத அதே நேரம், சொந்த மனித விரோத நடத்தையையிட்டு அலட்டிக் கொள்ளாது புலம்பமுற்படுகின்றார். ஐரோப்பியா என்ற எகாதிபத்தியம் பற்றிய, தேசிய உணர்வு எதுவுமற்ற நிலையில் இந்தப் புலம்பலே வெறும் அலட்டலாகவே மாறியது. கிளியைப் போல் பினாற்றும் இந்த அலட்டல், வழமைபோல் எதுவும் நடைமுறைக்கு உதவாத சொற்களின் கோவையாக இருக்கின்றது. இருந்தபோதும் கூட தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இந்த இராணுவ கும்பல்வாத புலிகளே இருப்பதால், இதனை நாம் மக்கள் நோக்கில் இருந்து பரீசிலிப்பதை அவசியமாக்கின்றது.

 

தமிழ்ச்செல்வன் "இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் பங்கேற்றுள்ள இருதரப்பினரில் ஒருதரப்பாகிய தமிழரின் நியாயத்தைச் சொல்லும் பாதைகளை தனது பயணத் தடை மூலம் ஐரோப்பிய ஒன்றியம் மூடியிருப்பதாக" கூறுகின்றார். தமிழ்ச்செல்வன் கூறுவது போல் எந்த சமூக நியாயத்தையும் யாரும் தடுத்துநிறுத்த முடியாது. ஆனால் சமூக நியாயமல்லாத எதையும் யாரும் தடுத்த நிறுத்தமுடியும். ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்த ஏகாதிபத்திய மேலான்மை மூலம், தனது தடைகள் மூலம் தமிழரின் நியாயங்களை தடுத்து நிறுத்த முடியாது. ஒரு இனத்தின் நியாயத்தை உலக மக்களிடம் சொல்வதை யாரும் தடுக்க முடியாது. இங்கு உள்ள அடிப்படை விடையமே, தமிழர் தரப்பில் நின்று எமது நியாயத்தையே நாங்கள் சொல்ல தவிறிவிட்ட எமது அரசியல் நிலையில், அவை எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு புதைகுழிக்கு அனுப்பபட்டுவிட்டது. தமிழரின் நியாயம் என்று எதையெல்லாம் நாம் இன்று சொல்ல முனைகின்றோம்;. உண்மையில் மக்களின் சமூக பொருளாதார நியாயங்களை நாம் சொல்வதில்லை. புலிகளின் சொந்த நலன் சார்ந்த நியாயங்களையே, தமிழரின் நியாயங்களாகிவிட்ட நிலையில், உலக மக்களிடம் சொல்வதற்கு என எதுவும் இருப்பதில்லை. இந்த தடைக்கு முன்னம் ஐரோப்பிய மக்களுக்கு என்ன நியாயத்தைத் தான் புலிகள் சொன்னர்கள். எமது தலைவர் பிரபாகரன் என்று சொன்னதைத் தவிர, வேறு எதைத்தான் சொல்ல முடிந்தது. தமிழர்தரப்பு நியாயம் என்று சொல்வதற்கு புலிகளிடம் எதுவும் இருப்பதில்லை.

 

ஐரோப்பியத் தடை தெளிவாக புலிகளிடம் ஒரு செய்தியைக் கூறுகின்றது. அதாவது படுகொலைகளை நிறுத்தும் படி. சிறுவர்களை இராணுவ நடவடிக்கைக்கு திரட்டுவதை நிறுத்துக் கோருகின்றது. மிக நுட்பமாக இதனடிப்படையில் தடை அறிவிக்கப்பட்டது. கொல்வதும், சிறுவர்களின் சமூக அறியாமையை சுயநலனுக்கு பாவிப்பதையும் தமிழர் தரப்பு நியாயமாக எப்படி நாம் எற்றுக் கொள்வது. யாராலும் இதை தமிழரின் உரிமை என்று கூற முடியுமா? ஆனால் தமிழ்ச்செல்வன் இதற்கு நேர்மையாக பதிலளிக்காது "தமிழர் தாயகத்தில் எமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டு வருவது தீவிரமடைந்து வருகின்றன. இதை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்." என்கின்றார். தமது தரப்பு மீதான கொலைகளை இதற்கு மாற்றாக வைத்து, தாம் கொல்லும் உரிமையை நியாயப்படுத்துகின்றனர். புலிகள் தரப்பில் சார்ந்தவர்கள் ஒப்பிட்டளவில் சிறுபகுதியினர் மட்டுமே. தமிழர்கள் பெருமெடுப்பில் கொல்லப்பட்டதைப் பற்றி பேசாது, தமது தரப்பில் கொல்லப்பட்டத்தை மட்டும் பேசுகின்றார். தமிழரின் எகபிரதிநிதிகள் என்று கூறிக் கொள்வதில் உள்ள முரண்நிலை இது.

 

தமது தரப்பு அல்லாத கொலையைக் கண்டிக்கத் தவறுவதுடன், கொலைகளை தொடர்ந்தும் புலிகள் அன்றாடம் செய்கின்றனர். ஏன் இந்த தடைக்கு பின்பும் கொல்லப்படுகின்றனர். இது சற்று மாறி அடித்துக் கொல்வது என்ற புதிய வடிவில் மாற்றம் காண்கின்றது. புலிகள் தரப்பின் மீதான தாக்குதல்கள் குறிப்பாக மட்டகளப்பிலேயே அதிகமாக உள்ளது. அங்கு புலியில் இருந்து பிரிந்த கருணா தரப்பு உடன் நடக்கும் பரஸ்பர மோதலே இக் கொலைகளின் அடிப்படையாகும்;. இந்த மோதலில் யாரும் தலையிடக் கூடாது என்ற பிரகடனம் செய்த புலிகள் தான், இன்று தொடரும் பரஸ்பர மோதலில் கொல்லப்படுபவர்களையே தம்தரப்பு மீதான கொலைகளாக காட்டுகின்றனர்.

 

இன்று இதையும் தாண்டி கிழக்கில், இராணுவம் மீதான ஒரு தரப்பாக தொடாச்சியான குண்டுத் தாக்குதலை புலிகள் நடத்துகின்றனர். இதை வடக்குகிழக்கு எங்கும் பொது நடைமுறையாக்கவே புலிகள் தீவிரமாக முனைகின்றனர். யுத்தத்தைத் துண்டும் வகையில், இவை உந்தித் தள்ளப்படுகின்றன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு நோக்கிய ஒரு கவணத்தை திருப்புவதற்கு பதில், சொந்த மக்கள் விரோத நடத்தைகளை மூடிமறைக்கவே குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கின்றனர். இது ஐரோப்பிய தடையை எந்தவிதத்திலும் மாற்றுவதற்கு பதில் தீவிரமாக்கும். ஐரோப்பிய தடையில் உள்ள எகாதிபத்திய அம்சத்தை தனிமைப்படுத்தி அதை அம்பலப்படுத்தி ஐரோப்பிய மக்களை வென்றெடுக்கும் உத்தி, இங்க தமிழ்ச்செல்வனால் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகின்றது. தொடர் கொலைகளை நிறுத்தவும், சிறுவர்களை படையணிக்காக கடத்துவதை நிறுத்தவும் தவறும் புலிகள், அதை செய்யும் உரிமையைத்தான் ஐரோப்பிய தடடையை நீக்குவதற்குடாக கோருகின்றனர். இது ஒரு முரண்நிலையானதும், அறிவியலுக்கு உதாவதும் கூட.


ஐரோப்பிய தடையை நீக்கக்கோரிய கையெழுத்து வேட்டையும், ஊர்வலங்களும், எழுச்சி மாகநாடுகள் எதுவும் இந்த தர்க்கத்தின் முன் வீண்விரயமாகிவிடும. தமிழ்மக்களை அன்றாடம் கொன்று குவிக்கும் உரிமைக்காக, தம் மீதான தடை நீக்கக் கோருவது அர்த்தமற்றவை. மாறக நடைமுறையில் கொலைகளை நிறுத்தி, முன்மாதிரியாக சுயவிமர்சனம் செய்து தடைக்கு எதிராக அதில் உள்ள ஏகாதிபத்திய உள்ளடகத்துக்கு எதிராக போராடவேண்டும். இந்த போராட்டதத்தை மறுக்கும் வரை, இவை எல்லாம் விலலுக்கு இறைத்த நீராகவே அமையும். ஐரோப்பிய மக்களைக் கூட தமக்கு சார்பாக வென்றுறெடுக்க முடியாது. இந்த நிலையில் தான் தமிழ்ச்செல்வன் "யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை வலுப்படுத்த வேண்டும்." என்ற வாய்கூசாது கூறுகின்றார். சிங்களப் பேரினவாதம் தான் ஒப்புக்கொண்ட விதிகளை அழுல்படுத்துவதற்கு முன்னம், அதைக் கோரும் எமது தரப்பு அதில் நேர்மையாக செயல்படுவது அவசியமானது. சொந்த அரசியல் நேர்மையில் நின்று தான், மற்றவனின் நேர்மையைப் பற்றி கேள்வி எழுப்பமுடியும். நான் நேர்மையினமாக இருந்து கொண்டு, மற்றவனின் நேர்மையினம் பற்றி சிலாகிப்பது அர்த்தமற்றவை.

 

இதில் முக்கியமானது புலிகள் ஒருதரப்பாக தமிழர் தரப்பைக் கொல்வதும், சிறுவர்களை கடத்திச் செல்வதும். இதை நாங்கள் செய்யும் உரிமை தான், யுத்தநிறுத்த ஒப்பந்த விதி என்று தமிழ்ச்செல்வன் கூற முனைகின்றார். இது புலி இராணுவவாத கும்பல்களின் அரசியலற்ற வெட்டித்தனத்தின் விளைவே இப்படி வெளிவருகின்றது. இந்த நிலையில் இந்தத் தடையை "இலங்கைத் தீவில் அமைதியைக் கொண்டு வரும் இருதரப்பினருடைய சம அந்தஸ்தை, சம அங்கீகாரத்தை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக" தமிழ்ச்செல்வன் தாங்கள் விரித்த வலையின் மேல் நின்று கொண்டு பிதற்றுகின்றார். உண்மையில் சம அந்தஸ்து என்ற நிலையை பலவீனமாக்குவது ஐரோப்பிய யூனியனா அல்லது நாங்களா என்ற கேள்வியை நேர்மையாக புலிகள் எழுப்பி விடையளிக்க வேண்டும்;. தமிழர் தரப்பை ஒரு தரப்பாக நாமே கொன்று குவிப்பதால் தனித்தரப்பாக இருக்கும் அங்கீகாரத்தை இழந்துவரும் தீவிரமான இன்றைய நிலையைத்தான் முதலி;ல் கேள்வியாக எழுப்பவேண்டும். அதற்கு பின்புதான் ஏகாதிபத்தியங்களின் சொந்த உள்நோக்கை தமிழச்செல்வன் கூறுவது போல் அல்லாது, ஏகாதிபத்திய உள்ளடகத்தில் கேள்விக்குள்ளக்க வேண்டும்.

 

சம அந்தஸ்துடனான உங்கள் நிலையை நீங்களே தகர்த்த படி, அதை மற்றவன் தகர்ப்பதாக கூறுவதே நகைப்புக்குரியது. இப்படி நாம் செய்தபடி "சர்வதேச சமூகத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை பலவீனமடைந்து போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்" என்ற கூறுவது வேடிகை தான். இதை தமிழ்மக்களின் பெயரில் இதைக் கூறவது மிகக் கேவலமானது. மக்கள் தான் வன்முறையில் ஈடுபடுவதாகசுவும், தமிழ் மக்கள் தான் கொலை செய்வதாகவும் புலியின் அரசியல் விளக்கங்கள் ஒருபுறம் அடிக்கடி கூறப்படுகின்றது. இதன் மூலம் மக்களின் பெயரில் பிரபானிசமே சந்திக்கு வருகின்றது.

 

சர்வதேச சமூகம் மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் இழப்பதாக தமிழ் செல்வன் கூறும் போது, இது புலியின் நம்பிக்கை பற்றிய பிரச்சனையாகவே மாறுகின்றது. இந்த நம்பிக்கையினம் தாம் கொலை செய்யும் உரிமை மீது கோரமுடியும் என்ற பிரபானிசத் தத்துவத்தை, மக்களின் பெயரில் வெளியிடுவதே அபத்தமாகும்;. மக்களா கொலை செய்யச் சொன்னார்களா? மக்களா அறியப்பருவம் கொண்ட தமது பச்சிளம் சிறு குழந்தைகளை, கடத்திச் சென்று பயிற்சி அளிக்கச் சொன்னர்கள்? இதன் மீது தடை வரும் பொது, மக்கள் நம்பீக்கை தகர்ந்து நிற்கின்றார்கள் என்று வாய்கூசாது எப்படித் தான் இப்படி அபத்தமாகவே புலிகளால் சொல்ல முடிகின்றது.


இப்படி அப்படி புலம்புவது பின் "யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்களை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தினோம்." என்ற கூறுவது என்பது, கபடர்களின் நேர்மையற்ற ஒரு செயல். தமிழ் மக்களையே அவாகளின் பெயரில் எமாற்றும் நரித்தனம.; கேள்விக்குள்ளாகத வாய்பூட்டு அரசியல் சர்வாதிகாரத்தில், இப்படி எதையும் எப்படியும் சொல்லிவிட்டுச் செல்லாம் என்ற நிலையில் இன்று தமிழ் மக்களின் சமூக அவலம் உள்ளது.

 

இந்த நிலையில் "கதிர்காமரின் கொலையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ளாமல் சிறிலங்கா அரசின் ஒருதலைப்பட்சமான முறைப்பாடுகளையும் குற்றச்சாட்டுகளையும் மட்டும் நம்பி ஐரோப்பிய ஒன்றியம் இப்படியான முடிவுகளை எடுக்கக் கூடாது" என்று கூறுவதற்கு முன், இது போன்ற நடத்தை நெறிகளை நீங்கள் கொண்டிருப்பதை நீங்கள் நடைமுறையில் மாற்றி காட்டியிருக்க வேண்டும். அமர்தலிங்கத்தின் கொலையின் போது கூட, அதை நீங்கள் அல்ல என்றீர்கள். புலியில் இருந்து பிரிந்து சென்ற சிலரின் உதிரி நடவடிக்கை என்றீர்கள். பின் தமிழ்ச்செல்வன் கொலைக்கான காரணத்தை தலைவரிடமே கேட்க் வேண்டும் என்றார். ராஜிவ் கொலையில் போது நீங்கள் அல்ல என்றீர்கள். இதை புதியஜனநாயகம் குழு செய்தாக கூறினீர்கள். பின் உதிரி குழுக்களின் நடவடிக்கை என்றிர்கள்;. இதை பின் ஒரு துன்பவியல் சம்பவம் என்று இன்று வருணிக்கின்றீர்கள். 1985 இல் அணுதாரபுரத்தில் நடந்த 150க்கு மேற்பட்ட கொலையை மறுத்தீர்கள். பின் அதை இந்தயா தந்த பணத்துகாக செய்தாக கூறினீர்கள். இப்படி பற்பல. இப்படி பல கொலைகளுக்கு நடந்தது.

 

நேர்மையான அரசியல் முன்மாதிரி இல்லாத உங்கள் நடத்தை நெறிகள், உண்மையில் நீங்கள் ஒன்றை செய்யவிட்டாலும் கூட உங்களுக்கு அது பொருந்திவிடும் நிலையில் நீங்கள் இருப்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்;. அதை மாற்றுவதே அவசியமானது. புலிகள் ப+னையாகிவிடவில்லை. இது சிலருக்கு எற்பட்ட மாலைக் கண் நோயால் அப்படி விபரிதத் போதம், உண்மை அப்படியல்ல. முதலில் நாம் எதையும் செய்யவில்லை என்று சொல்ல முன், நாம் நிச்சயமாக எம்மையும் எமது நடத்தைகளை சுயவிமர்சனம் செய்து சீரிய நடைமுறையில் மாறியிருக்க வேண்டும்.

 

தமிழ்ச்செல்வன் கூறுகின்றார் "அமைதி முயற்சிகளில் இரண்டு தரப்புகள் இருக்கின்றன." என்ற கூற்று, எப்படி தொடரும் கொலையை நியாயப்படுத்த போதுமானது. உண்மையில் இப்படி கூறியபடி தொடரும் கொலைகள், படிப்படியாகவே அமைதி முயற்சியில் ஒரு தரப்பு சார்ந்த தீர்வாக மாறும் ஒரு நிலையை நோக்கிய, எகாதிபத்திய நகர்வுகள் மாறிச் செல்வதையே துரிதமாக்கின்றது. அதாவது புலிகள் தாங்களாகவே அதில் இருந்து விலகி, ஒரு தரப்பாக அரசு தீர்வை முன்வைக்கும் வகையில் தம்மைத் தாம் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதன் பின்பாகவே சர்வதேச நகர்வு உள்ளது. இந்த சர்வதேச நகர்வை புரிந்து கொள்ளாமல் அலட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை. இந்த நிலையில் "சமதரப்பு என்ற அடிப்படையில் தமிழர்களின் பிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைச் சொல்வதற்கான பாதைகளை மூடிவிட்டு மற்றொரு தரப்பான சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கிற குற்றச்சாட்டுகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது என்பது எந்த விதத்திலும் நியாயமற்றது" என்ற கூறுகின்றனர். உண்மையில் தளித்தரப்பாகவே விலகிவரும் புலிகள் நடத்தைகள் உள்ளது. இதை புலிகளின் கொலைக் கலச்சாரம் தூண்டிவருகின்றது. இந்த நிலையை சிறிலங்கா பேரினவாத அரசும், ஏகாதிபத்தியமும் எற்படுத்தியதற்கு அப்பால், புலிகள் தாமவே இந்த நிலையை எற்படுத்தி வருவது முதன்மையான ஒன்று. ஏகாதிபத்தியமும், பேரினவாதிகளும் புலிகளின் நடத்தை நெறிகளில் இருந்தே, இதற்கான சாதகமான கூறுகளைப் பெறுகின்றனர். அவர்கள் தனித்து எந்த முடிவுகளையும் அந்தரத்தில் எடுக்கவில்லை. புலிகளின் நடத்தைகளில் இருந்து, தமது நோக்கத்துக்கு தேவையான முடிவுகளை எடுக்கின்றனர். தமிழ்மக்களின் தேசியம் சார்ந்த ஜனநாயக கோரிக்கையில் இருந்து, இந்த முடிவை எடுக்கும் ஒரு நெம்புகோலை மக்கள் வழங்கிவிடல்லை. மக்களுக்கு எதிராக இயங்க கங்கயம் கட்டி நிற்கும் புலிகளின் சொந்த நடத்தை நெறிகள் தான் இதை வழங்குகின்றன.

 

இந்த நிலையில் இந்தத் தடை"தமிழர் தரப்பை பலவீனப்படுத்தி இருக்கிறது. தென்னிலங்கை தீவிரவாத சக்திகள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். தமிழர்கள் மீது இன வன்முறையை, ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்துவிட சிங்கள இனவாதிகளுக்கு உற்சாகம் அளிப்பதுபோல் இம்முடிவு அமைந்திருக்கிறது." "ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினால் சிங்கள இனவாத சக்திகள் பலமடைந்திருக்கின்றன." என்று கூறுவதில் உள்ள உண்மைக்கு அப்பால், இந்த நிலமையை உருவாக்கிய எமது தரப்பு மனித விரோதச் செயலுக்காக நாம் வெக்கப்பட வேண்டும். பேரினவாதத்தை எப்பொதும் பலப்படுத்தி வந்தவை எமது சொந்த நடவடிக்கைகளே. எமது சொந்த நடத்தை நெறிகள் மகக்ளுக்கு எதிராக மாறுகின்ற போது, அதை மக்களுக்கு எதிரான மற்றைய சக்திகள் பயன்படுத்துவது இயல்பானது. இதையே இன்று புலிகள் செய்கின்றனர்.

 

இதில் இருந்து தப்பிப்பிழைக்கவே தமிழ்ச்செல்வன் வழமையான வகையில் "எங்களைப் பொறுத்த வரையில் சமாதான முன்னெடுப்புகளில் காத்திரத்துடனும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவில் வலுவுடனும் இருக்கிறோம்." இது காலவாதிகிப் போன வழமையான புலிகளின் விளையாட்டு அனுகுமுறை. பேரினவாதம் பலம்பெற்று வரும் இன்றைய நிலையில், இந்த தந்திரம் யாராலும் நேர்மையாக இருப்பதாக கருதுவதில்லை. வழமையானதும், குருட்டு தனமானதுமான அனுகுமுறை. இலங்கை அரசு மட்டுமல்ல, உலகமே இந்தச் சூழச்சியை புரிந்து கொள்கின்ற இன்றைய நிலையில், தமிழ்மக்கள் கூட இதை நம்பத் தயாரற்ற நிலையில் உள்ளனர். இப்படி கூறுவது, தம்மைத்தாம் திருத்தி செய்கின்ற ஒன்றுதான். தமிழ்செல்வன் ஒரே வார்த்தைகளை மீள மீள கூறுகின்ற ஒரு கிளிப்பிள்ளையாக இருப்பதால், இதைத் தாண்டி எதையும் சமூகத்தின் முன் வைக்க முடிவதில்லை. நடைமுறைக்கும், சொல்லும் வார்த்தைக்கும் உள்ள இடைவெளியும், வழமையான வகையில் அமைகின்றது. அவர்களே தாம் வெட்டும் புதைகுழியில் புதைந்து போகும் வகையில் மாறி வருகின்றது.

 

இதை பேரினவாதம் பெருவெற்றிக் களிப்புடன் காண்கின்றது. புலிகள் தாமகவே தாம்மை தனிமைப்படுத்தி வெறும் இராணுவக் கும்பல் வாதத்துக்குள் மூழ்கடிந்து நிற்கின்றது. தனது குழுவாத சொந்தக் கோரிக்கைக்களை கூட சிதைக்கும் உத்தியுடன் இயங்குகின்றது. இந்த நிலையில் "நீண்டகாலமாக இன வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் முகம் கொடுத்த எம்மக்கள் அரசியல் விழிப்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் அனைத்தும் நீதியான முறையிலேயே நடைபெற்று வந்துள்ளது."என், மக்களின் பெயரில் தமிழ்ச்செல்வன் ஒப:பாரி வைக்கின்றார். தமிழ் மக்கள் பேரினவாதத்தை எப்படி புரிந்து, அதை எப்படி தமது சொந்தக் கோரிக்கையாக முன்வைக்கின்றனர் என்பதில் இருந்தே அனைத்தும் அம்பலமாகி விடுகின்றது. மக்கள் தமது சொந்த அரசியல் பொருளாதார சமூகக் கூறுகளில் இருந்து, பேரினவாதத்தைப் புரிந்து நிற்கின்றனர் என்று, தமிழ்சசெல்வனால் ஒரு நாளுமே கூற முடியாது. புலிகளே அதை புரிந்து கொண்டது கிடையாது. புலிகளின் அடிமைகளாகவே அடிமைப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் கதி அதைவிடக் கீழனாதே.

 

இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் "..காலம் காலமாக மாறி மாறி வந்த சிறிலங்கா அரச தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றுவதிலும் தமிழ் மக்களின் மீதான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்துவதிலும்தான் ஈடுபட்டு வருகிறார்கள்." என்று கூறுவது மூலம், சொந்த மக்கள் விரோத நடத்தைகளை நிவர்த்தி செய்யமுடியாது. தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் பெயரில் மக்களையே காலகாலமாக எமாற்றும் போது, அதை பேரினவாதத்தால் மிக இலகுவாகவே எமாற்ற உதவுகின்றது. பேரினவாதம் தமிழ் மக்களை எமாற்ற, நாமே காரணமாக இருக்கின்றோம். இதற்கு எமது சொந்த நடத்தைகள், சொந்த அரசியல் நெறிகள் தான், இலகுவாக பேரினவாதம் மக்களை எமாற்ற உதவுகின்றது. நாங்கள் சரியாக இருந்தால், எந்த பேரினவாதமும், எந்த எகாதிபத்தியமும் எமது மக்களை எமாற்றமுடியாது. நாங்கள் எதை இந்த உலகத்திடம் கோருகின்றோம். எமது மக்களின் சொந்த சமூக பொருளாதார வாழ்வியல் மீதான உரிமையைக் கோருகின்றோமா? அல்லது புலிகளின் இராணுவ நலன் சார்ந்தவற்றை கிறக்குபுத்தியுடன் கோருகின்றோமா?

 

இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் கூறுகின்றார் "நீண்ட சமாதான காலத்தின் மீது தமிழ் மக்கள் விரக்தியும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் தங்களுடைய அரசியல் அபிலாசைகளை நேரடியாக திரண்டு வந்து சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கிற நிகழ்வுகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளன." என்ன வெற்றுவேட்டுத் தனம்;. மக்களை பினாமி அமைப்புகளின் வெயரில், மக்களின் சொந்தக் கோரிக்கைகள் அல்லாத புலிக் கோரிக்கைகளின் பெயரில் கூட வைக்கும் கும்பல் சேர்க்கும் நடத்தைகள் மூலம், எதையும் தமிழ்மக்கள் உண்மையில் பெறப்போவதில்லை. மாறாக மேலும் மேலும் புலிகள் மக்களிடம் இருந்து அன்னியமாவதுடன், உலகில் இருந்தும் கூட அன்னியமாகின்றனர்.

 

கொன்று குவிக்கும் புலி அரசியல், மக்களை எங்கே அழைத்துச் செல்லுகின்றனர்.

 

நாம் உலகின் அங்கீகாரத்தையும், மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டின் நிச்சயமாக மக்களின் சமூக பொருளாதார உறவுடன் உள்ளடங்கி சமூகம் சார்ந்த கோரிக்கைளை முன்வைக்க வேண்டும். ஆனால் உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படையான தேசியப் பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளன. பேரினவாத கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு என்ன அரசியல் தீர்வை தாங்கள் முன்வைக்கின்றோம் என்பதை முன்வைக்காது பேரினவாத அரசியல் களத்தில் இறங்கி நிற்கின்றன. அமைதி சமாதானத்தைக் கொண்டு வருவோம் என்ற மக்களை எமாற்றும் அரசியல் கோசத்தைத் தவிர, அதை எந்த தீர்வின் ஊடாக என்பதை சொல்லாத பேரினவாதமே, இன்று வெற்றிகரமாக அரங்கேறுகின்றது.

 

மறுபுறம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை பேரினவாத கட்சிகள் முன்வைக்க கோரும் அரசியல் யுத்த தந்திரத்தை, புலிகளும் அதன் எடுபிடி கூலிக்கும்பலும் மறுதளிக்கின்றது. சுயநலம் பிடித்த தமது அற்ப கோரிக்கைகளுடன் தமது அரசியல் செயல்பாட்டை மட்டுப்படுத்தி, மக்களுக்கு வழங்கும் பொருளாதார நிவாரணங்களை கொள்ளையடிக்கும் எல்லைக்குள் தமது அதிகாரம் என்ற கோரிக்கைக்கும், தமிழ் மக்களின் பிரச்சனையை குறுக்கி விட்ட நிலை இன்று காணப்படுகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் பேரினவாதம் முன்னும், தமிழ் தேசிய குறுந்தேசிய வாதிகள் முன்னும் காணமல் போய், அவை கந்தலாகிவிட்டன. தியாகத்துடன் தொடங்கிய போராட்டம் சுயநலன் சார்ந்த இராணுவ கும்பல்களின் குறுகிய போராட்டமாகவே சிதைந்து போனது.

 

இந்த நிலையில், அற்பத்தனமான சுயநலம் சார்ந்த குறுகிய நோக்கங்களுடன், புலிகள் விசர் பிடித்த நாயாகவே துப்பாக்கியும் கையுமாக அலைகின்றனர். இன்று வரி கொடுக்க மறுத்தாலும் மரணதண்டனையை விதிக்கும் எல்லைவரை, எங்கும் எதிலம் ஒரு அராஜகம் நிலவுகின்றது. மட்டக்களப்பில் கருணா புலி மோதலைக் கடந்து, இன்று யாழ் குடா வரை ஒரு தலைப்பட்சமாக, படுகொலைகளை புலிகள் மீண்டும் துடிப்புடன் தொடங்கியுள்ளனர். இது எதிர் தரப்பில் பதிலடி கொலைகளை உருவாக்கும் சூழலை விரைவாகவே உருவாக்கி வருகின்றது.

 

இன்று தேசியத்தின் பெயரில் கொலை செய்யப்படும் வடிவங்கள், நோக்கங்கள் கூட மேலும் மேலும் அதீதமான மனித விரோதத் தன்மையுடையதாக மாறிச் செல்லுகின்றது. புலிகள் தமது அரசியல் நடவடிக்கையை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து விலத்தியவுடன், விரிவான தொடர் படுகொலைகள் தொடங்கிவிடுவதை வரலாறு மீண்டும் எடுத்துக் காட்டுகின்றது. மனிதப் படுகொலைகள் புலிகளுக்கு விருப்பமான புலி உணர்வாக இருப்பதும், அதை ரசிக்கும் ஒரு கூலிக் கும்பலைக் கொண்டு இதை நியாயப்படுத்துவதும் அன்றாட நிகழ்ச்சியாக எம்முன் உள்ளது. எமது சமூகம் மனநோய் பிடித்த வன்மமும் வக்கிரமும் கொண்ட, சுயநலத்தில் தன்னைத் தான் தகவமைத்து நிற்கின்றது. உலகம் இதற்கு எதிரான மனித உணர்வு சார்ந்து இருப்பதை, இந்த கிணற்றுத் தவளைகள் கண்டு கொள்ளாத வகையில் தமது சொந்த கிடுகுவேலியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர். ஆனால் சுனாமி பேரலை ஒன்று பொங்கி கரைகளில் நிற்பதை காணமறுக்கும் சமூக மூடர்களாக, எமது கைக்கூலிச் சமூகம் தமது கண்களை மூடி, காதைப் பொத்தி உணர்வை இழந்து, தனது சமூக மரணத்துகாக கிணற்று பொந்துகளில் வரிசையில் நிக்கின்றன.

 

இதற்கு தலைமை தாங்கு புலிகளின் அரசியலுக்கு, ஒரேயொரு அரசியல் மொழிதான் அதற்கு உண்டு. அது மனிதப் படுகொலை. தமிழ் மக்களை விரும்பியவாறு அடக்கியாளவும், அணிதிரட்டவும், கொள்ளையிடவும் உள்ள அரசியல் வழியே, படுகொலை அரசியல் தான். இதுவே புலிகளை அதிகாரத்தில் தக்கவைக்கின்றது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் ஒன்றுபடாத புலிகள் இயக்கம், அந்த மக்களின் பொருளாதாரத்தை சூறையாடுவதில் மட்டும் மொத்த அரசியல் நகர்வையும், அது சார்ந்த குறுகிய அரசியலையும் கொண்டுள்ளனர்.


மக்களின் வாழ்வோ ஆழமான சமூகச் சிதைவைக் கண்டு வருகின்றது. இது பற்றி எந்தவிதமான சமூக அக்கறையும் இவர்களுக்கு இருப்பதில்லை. மக்களை அடக்கியாள தொடர் படுகொலைகளை தொடர்சியாக செய்வதது அவசியம் என்பதே, பிரபானிசத்தின் சித்தாந்தம் வழிகாட்டுகின்றது. இதைத் தான் அவர்கள், தமது தமிழ் தேசியம் என்கின்றனர். கொல், முடிந்தால் கொன்று குவி, இது புலித் தேசியத்தின் பிரபானிச சித்தாந்தமாக உள்ளது.

 

இப்படிக் கொல்வதன் மூலம் தமிழீழத்தை நீங்கள் அடைய முடியமென்றால், தமிழ் மக்களை வரிசையில் விட்டே சுட்டுக் கொல்லுங்கள். ஜெர்மனிய ஆரியர்களிகன் தூய்மையை பாதுகாக்க நாசிசத்தை சித்தாந்தமாக வரிந்து கொண்டு, பாசிசத்தை அடிப்படையாக கொண்ட கிட்லர் யூதர்களை இப்படித் தான் கொன்றான். இதன் மூலம் ஜெர்மனிய சமூகத்தை துய்மைப்படுத்தி உலகை ஆள தகுதியாக்க முனைந்தது போல், நீங்களும் தமிழ் மக்களை வரிசையில் நிறுத்தி கொலை செய்யுங்கள். இதன் மூலம் தமிழீழத்தைப் பெறுங்கள். அதை விடுத்து அன்றாடம் சிறுக்சிறுக்க கொன்று குவிக்கும் கொலை வெறியாட்டம், தமிழ் தாய்மையின் கருவறையில் குதறிக் கிழிப்பது போன்றதே. நீங்கள் ஒன்று செய்யலாம், தமிழீழத்தின் பெண்களின் தாய்மைக்குரிய கருவறைகளை வெட்டியெறிந்து, புலிகளையே தூய்மையாக்க முடியும்;. பெண்கள் பால் கொடுக்காது இருக்க, அவர்களின் சொந்த மார்பகங்களை அறித்தெறியுங்கள். ஆண்கள் குழந்தையை உற்பத்தி செய்யும் ஆற்றலை வரையில் நிறுத்திவைத்து நலமடியுங்கள். அதை உங்களால் செய்ய முடியும்;. அந்தளவுக்கு உள்ளது உங்கள் வக்கிரம். கொலையெறியுடன் கூத்தாடும் உங்களுக்கு இவைகள் எந்தமட்டில்.

 

இவர்களின் சமூக ஒழுக்கமோ கெடுகெட்டது. விபச்சாரிக்கு மரணதண்டனை, விபசாரனுக்கு சட்ட ஆலோசனையுடன் பாதுகாப்பை வழங்கும் தேசிய வக்கிரம். இவை எல்லாம் தேசியத்தின் பெயரில் அரங்கேறுகின்றது. சமூக நடத்தை நெறிகள், எந்தவிதமான நீதி நேர்மையுமற்ற வகையில், அனைத்தையும் புலிகள் என்ற இராணுவ கும்பலுக்கு சார்பாக வளைத்துப் போடுதல் தான், தமிழ் தேசியமாக காட்டப்படுகின்றது. மக்கள் வாய் பொத்தி, மௌனமாகவே தமது கடுமையான உழைப்பின் விளைவை புலிகளின் முன் சமர்ப்பித்து, உயிர் வாழும் உரிமைக்காக தம்மை வழிபடக் கோரும் புலித்தேசியமே இன்று எம்மண்ணின் அரங்கேறும் காட்சி படிமங்கள்.

 

புலிகள் மாறிவிட்டார்கள், அதோ பாருங்கள் என்ற சிறகு கட்டி பறந்த புலி கூலிக் கும்பல்கள், இன்று நடப்பதை இட்டு மௌன விரதம் இருக்கின்றனராம். தமிழ் பத்திரிகைகள், புத்திஜீவிக் கும்பல்கள் என அனைத்தும், மக்களுக்கு எதிராக, கூலிக்கு புகழுக்கும் மராடிக்கும் சமூகவிரோத கும்பல்லாக சீராழிந்துவிட்டது.


உண்மையில் புலிகளின் கொலைப் பட்டியலில் அன்றாடம் மடிந்து போகும் உயிர்களின் மீதான புலித் தீர்ப்புகள் சார்ந்த குற்றங்கள், உண்மையின் பாலனவையல்ல. மாறாக புலிகளின் சொந்த நடத்தைகள் எற்படுத்தி அதிர்வின் எற்பட்ட பிரதிபலிப்புகளின் மேல் தான், படுகொலை அரங்கேறுகின்றது. புலிகள் தாம் வலிந்து சமூகத்துடன் முரண்பாடும் அவர்களின் அன்றாட நடத்தைகளே, தன்மானம் உள்ளவர்களின் அதிர்த்திக்கு உள்ளாகின்றது. இதை எதிர்க்கின்ற ஒரு ஜனநாயக செயல்பாட்டின் போதே, அதை எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழைகளான புலிகள், இதன் மீதான படுகொலைகளை அன்றாட நிகழ்ச்சி நிரலாகிவிட்டனர். அன்றாடம் செய்திகளில் கொலைகள் இல்லாது இருப்பின், சூரியனே உதிக்க மறுக்கின்றது. தமழீழத்தில் சூரியன் அஸ்தமித்து இருண்டுவருகின்றது. இன்று ஒன்று இரண்டு மூன்றாக படுகொலைகள் நாளாந்தம் பெருகிச் செல்லுகின்றது. மக்களின் மேலான இந்த துர்நடத்தைகள் மூலம், பயபீதியை விதைத்து, அதன் மேல் பிரபானிச சித்தாந்தம் கொழுவேற்றிருக்கின்றது. இதன் மூலம் மக்களின் உழைப்பை திருடி, பெரும் சொத்துகளை குவித்து புலிகள் வயிற்றை வளர்கின்றனர் என்றால், இதற்கு எதிரான புலியெதிர்ப்பு வாதிகளும் கூட இதைச் சொல்லித் தான் தமது வயிற்றை வளர்க்கின்றது.



பாவம் மக்கள். மக்கள் வாழ்விழந்து இந்த அரசியல் கூத்தில் தத்தம் உயிர்களையும், தமது உழைப்பு சார்ந்த பொருட்களையும் இழந்து, வாய்பொத்தி கைகாட்டி வாழ்வதே பிரபானிசத்தின் சித்தாந்த உள்ளடக்கமாகும். இதைத் தான் பொலிஸ்காரன் நடேசன் தனது சொந்த தொழில் சார்ந்த தேசிய மொழியில், பிரபானிசம் என்று மிகவும் உள்ள கிளர்ச்சியுடன் அறிவித்தார்.

 

பொலிஸ்காரன் நடேசன் கூறியது போல், இது அனைத்து தமிழ் சமூகக் கூறிலும் அன்றாடம் மனித சிந்தனை தளத்தை ஆட்டிப்படைக்கும் இயக்க கூறாக மாறிவிட்டது. புலி பிரபானிசத்தின் கொலைகள் அற்ற நாட்கள், அதை சர்ந்து வாழும் லும்பன் பிழைப்புவாத ஆதாரவளர்களுக்கு மிகவும் சோர்வான நம்பிக்கை தகர்ந்த நாட்களாக மாறிவிடுகின்றது. ஒரு மனநோய்குரிய மனித பிழற்சி கண்ட, மனித விரோத வெறி அவர்களையே ஆட்டிப்படைக்கின்றது.


இந்தக் கும்பல் தமிழ் மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகள் எல்லாம், தமிழ் சமூகத்தில் இருந்தே துடைத்தெறிந்த நிலையில் குதிராட்டம் போடுகின்றனர். எஞ்சியிருக்கும் சமூகக் கூறுகளையும், அதன் சமூக வேர்களையும் அழிப்பதற்காக தொடர் படுகொலைகளை நடத்துகின்றனர். மனித விரோதத் தன்மை அதிகரிக்க அதிகரிக்க, சொந்த இராணுவ கட்டமைப்பு பலவீனமாவது அன்றாட நிகழச்;சியாகிவிட்டது. சொந்த உள் படுகொலைகளையும் தாண்டி, முரண்பாடுகள் மேலும் நுட்பமாகி கூர்மையடைகின்றன. மறுபுறம் தமது இந்த கொலைவெறி இராணுவ கும்பல் நலன்களை கட்டிப்பாதுகாக்க உதவிய, சுயமான பங்களிப்பு என்ற சமூக உணர்வு ஓட்டமே அடியோடு தகர்ந்து போய்யுள்ளது. மக்களுக்கும் இந்த புலி இராணுவ கும்பலுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகரித்தே வந்துள்ளது. தமது சொந்த நடத்தைகளே, தமது இராணுவ கும்பலுக்கு ஆட்களை பெறுவது மேலும் சிரமானதாகி விடுகின்றது.

 

இதன் ஒரு அங்கமாகவே மிகவும் பின்தங்கிய சமூக அறிவு மட்டத்தில் உள்ள, இளம் பெண்களை முதலில் அணிதிரட்ட முடிந்தது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் அடிமைநிலையால், இயல்பாகவே பின்தங்கிய அறிவு மட்டத்தினை உடைய பெண்களை புலிகள் தமக்கு சார்பாக பயன்படுத்தினர். பெண்களை தமது இராணுவ கும்பல்வாத செயலுக்காக பெருமெடுப்பில் அணிதிரட்டினர். இதுவும் வாழ்க்கை அனுபவம் மற்றும் பொதுவான சமர்ச்சீரான நிலையால், தொடர்ந்தும் இந்த இராணுவ கும்பல்வாத அரசியலுக்கு அணிதிரட்டும் பாதை முட்டுக்கட்டைக்கு உள்ளானது. இதை அடுத்து குழந்தைகளின் அறியப் பருவத்தையும், கவர்ச்சிகரமான மயக்கத்தையும் பயன்படுத்தி தமது இராணுவ கும்பல்வாத அரசியலுக்கு எற்ற கூலிக் கும்பலாக குழந்தைகளை மாற்றியமைத்தனர். இந்த குழந்தைகளின் அரசியல் அறிவே நாலு தூசணம் தான். இதைவிட்டால் எந்த பொது அறிவும் கிடையாது. இந்த குழந்தைகளுக்கு சமூக வாழ்வுடன் ஒன்றிப் போன எந்த வாழ்வியல் உணர்வும், உணர்ச்சியும் கிடையாது. உணர்ச்சியற்ற பொம்மைகள் போல், கீயை முறுக்கிவிட்டால் கொலை வெறியட்டத்தில் மூழ்கி எழக்கூடியவர்களாகவே, இவர்களை பிரபானிசம் உற்பத்தி செய்து குவித்துள்ளது. கொல் முடிந்தவரை கொல், இது அவர்களுக்க தெரிந்த நாலு தூசணத்துடன் உச்சாடனம் செய்யும் அதியுயர் தேசிய சித்தாந்தாமாகும்.

 

மக்களின் சமூக உழைப்பை சூறையாடி ஆடம்பரமாக வாழும் மேற்கத்தை மனப்பாங்குடன் கூடிய லும்பன் உணர்வுடன், வெறிபிடித்து உறுமுகின்றனர். என்நேரமும் துப்பாக்கி வேட்டுகளை தீர்;கும் மனயுளைச்சல் சார்ந்த ஒரு உணர்வுடன், கூண்டில் அடைத்து கிடக்கும் வெறிகொண்ட ஒரு விலங்காகவே இந்த குழந்தைகளை பிரபானிசம் உற்பத்தி செய்துள்ளது. மறுபுறம் சமூகம் தனது குழந்தை இட்டு கொண்ட பயப்பீதி, இயல்பாகவே தமது சொந்தக் குழந்தைகளை, இந்தப் புலி இராணுவ கும்பல் நெருங்காத வண்ணம் அதீதமான கண்கணிப்பை கொண்ட தற்காப்பை அடைந்தது. இது இயல்பாகவே குழந்தைகளை ஆயுதபாணியாக்கும் பிரபானிச சித்தாந்தம் தடைப்பட்டு, புலி இராணுவ கும்பலுக்கு ஆட்களை சேர்ப்பதில் புதியதொரு நெருக்கடி உருவானது.
வெறிகொண்டு அலையும் புலி இராணுவ கும்பல், இதில் இருந்து மீள பலக்காரமாகவே குழந்தைகளை கடத்திச் சென்ற இராணுவ மமயமாக்கும் திட்டத்தை இன்று அழுல்படுத்தியுள்ளனர். எங்கும் கட்டாய இராணுவ பயிற்சி என்ற பலக்காரமான செயல் நடத்தைகள், இன்றைய எதார்த்தமான செய்தியாக உள்ளது. இதையே மக்கள் புரட்சி என்று பிரபானிச சித்தாந்தம் வரையறுக்கின்றது. கட்டாய பயிற்சி முறைக்கு, குழந்தைகளை கடத்திச் செல்லுதல், இன்று புலியின் அரசியல் நடத்தை நெறியாகியது. புலிகளின் அரசியலில் இதுவும் ஒன்றாகிவிட்டது. புலியின் அரசியல் என்பது வரி அறவிடல், குழந்தையை கடத்ததல், படுகொலைகளை செய்தல், மக்களை கண்கணித்தல், வன்முறையை சூழ்ச்சியாகவே துண்டுதல், பொய்களை உற்பத்தி செய்து விதண்டவாதமாக்குதல், இதைத் தாண்டி புலிக்க என்று வேறு அரசியல் கிடையாது.

 

அமைதி சமாதானம் என்ற புலிகள் வரையறுப்பது இதைத்தான். தாம் விரும்பியவாறு சுதந்திரமாக இதைச் செய்யும் உரிமையை, அங்கீகரிப்பதைத் தாண்டி வேறு எதுவுமல்ல. இதற்கு ஒரு அரசியல் அதிகாரத்தைக் கோருகின்றனர். இதையே தமிழீழத்துக்கான முதற்படி என்கின்றனர்.

 

இதுவே பேரினவாதத்துக்கு மிகவும் இனிப்பான ஒரு விடையம். தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதம், எதை காலகாலமாக செய்ய நினைத்ததோ அதை புலிகள் நடைமுறைப்படுத்தி இருப்பதையிட்டு பேரினவாதம் மகிழ்சியில் திளைக்கின்றது. தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்வு புலிகளின் நடைமுறை எற்படுத்தும் ஆழமான பாரிய சிதைவு, பேரினவாதத்தின் ஆதிக்க மனபான்மைக்கு இனிப்பான ஒரு வெற்றிதான். இதன் மூலம் தமிழ் மக்கள் மீள முடியாத வரலாற்று சிதைவைச் சந்தித்துள்ளனர். புலிகள் என்ற இராணுவக் கும்பல் தமிழ் மக்களின் வாழ்வையே இன்ற சூறையாடும் நிலையில், இயல்பாகவே இலங்கையில் சிங்கள இனம் மேன்மை பெற்ற ஆதிக்க இனமாக மாறிவிட்டது. இது பல தளத்தில் நிகழ்ந்துள்ளது.

 

இது எண்ணிக்கையில், பொருளாதார பலத்தில், சமூகக் கூட்டில், பண்பாட்டில் என எங்கும் தமிழ் சமூகத்தைவிடவும், மிகவும் மேன்மை பெற்ற ஒன்றாகவும், பலம் பொருந்திய ஒன்றாக மாறிவிட்டது. மலையக, முஸ்லிம் மக்கள் கூட தமிழ்மக்களின் வாழ்வை விட மேன்மை பெற்ற, ஒரு சமூக அடிப்படையை அடைந்துள்ளனர். உண்மையில் புலியின் சமூக நடத்தை நெறிகள் எங்கும் எதிலும், தமிழ் இனத்தின் சுய அடையாளத்தை அழித்து வருகின்றது. தமிழ் மக்களின் சமூக இருப்பின் அழிவு, புலி இராணுவ கும்பலின் சுகபோகமான வாழ்வுமுறையாக பரிணமிக்கின்றது. இதற்காகவே வெறிகொண்ட மனித விரோதநடத்தை நெறிகள் மேலும் மேலும் கூர்மையாகின்றது.

 

அமைதி சமதானம் என்று, எதை எங்கு நோக்கிலும், அங்கு அதில் புலிகளின் மனிதவிரோத நடத்தையே மேன்மை பெற்ற போக்காக உள்ளது. தனது சொந்த மக்கள் விரோதத் தன்மையிலான போக்கையிட்டு, எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாத கூலி இராணுவ குணம்சத்தை பெற்றுவிடுகின்றது. இதற்கு தலைமை தாங்கும் பிரபானிச சித்தாந்த தலைமை, தனது குறுகிய சொந்தப் பாதுகாப்பு என்ற குறுகிய வேலிக்குள் மேலும் மேலும் பதுங்கிக் கொள்கின்றது. தனது சொந்த நடத்தையால் மக்களையிட்டு எற்படும் அச்ச உணர்வு, இயல்பாகவே அனைத்தையும் எதிரியாக கண்பதும் சித்தரிப்பதும் அன்றாட போக்காகிவிடுகின்றது. கண்ணை மூடிக்கொண்டு கண்ணில்படுவதை எல்லாம் சுட்டுப் பொசுக்கி, தமது சொந்த பிரபானிச சர்வாதிகார கனவில் மிதக்கின்றது. காலகாலமாக அவர்கள் திண்டு குடித்து வளர்ந்த இராணுவப் பாதை, எந்தவிதமான மாற்றமும் இன்றி அனைத்தையும் இராணுவ வழியில் காண்கின்றது. இதுவே கூலி இராணுவத்துக்குரிய கண்ணோட்டத்தை பெற்றுவிட்டது. கூலி பிச்சாரக் கும்பல், கூலி புத்தியீவிக் கும்பல் என்று எங்கு திரும்பிலும், எதிலும் கூலித்தனம் காணப்படுகின்றது.

 

பிரபானிசம் மீதான சர்வதேச நெருக்கடி

 

இன்று உலகமக்களைக் கூட எதிரியாக கருதும், மாற்றமுடியாத முட்டாள் தனமான பிரபானிச சித்தாந்தத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள புலிகள் என்ற இராணுவ கும்பல், தனக்கு வெளியில் உள்ள உலகத்தையே காணமறுக்கின்றது. இந்த நிலையில் இலங்கை பிரச்சனை சர்வதேச தலையிட்டுக்கு உள்ளாகி இருப்பதையே, இந்தக் இராணுவக் கும்பல் அலட்சியப்படுத்தி நிற்கின்றது. தலையாட்டும் முட்டாள் தமிழ் சமூகத்துக்கு எற்ப, பழைய பல்லவியையே புலின் படுகின்றனர்.

 

இந்தப் பல்லவி ஒருபுறம் கண்ணை மூடிக்கொண்டே பூனையாட்டம் எல்லாம் சரியாக இருப்பதாக கனவில் மிதக்க வைக்கின்றது. ஆனால் உலகம் வேகமான நகர்வுகளை பிரபானிச சித்தாத்தின் மீதாக நடத்திக் கொண்டுள்ளது. இன்று தேசிய இனப்பிரச்சனை, வெறும் புலிப் பிரச்சனையாக உலகில் முன் மாற்றப்பட்டுவிட்டது. இது மிகவும் சேகமான விடையம். இது தமிழ் மக்களுக்கு எதிரானது. தேசிய பிரச்சனைக்கான தீர்வு என்பதை உலகம் கைவிட்டு, பிரபானிச கொலைகளை நிறுத்துவது பற்றியும், சிறுவர்களை படைக்கு சேர்ப்பது பற்றி பிரச்சனையாக மாற்றிவிட்டது. இந்த நிலைமை எப்படி, எந்த நிலைமையின் கீழ், தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு எதிரனதாக முன்னுக்கு வந்துள்ளது என்பதை தமிழினம், இன்னமும் இனம் காணவில்லை. மாறாக இந்த நிலைமையிலும், கொலைகளும் சிறுவர்களை தமது படைக்கு பலக்காரமாகவும் திரட்டுவதும் அதிகரித்துச் செல்லுகின்றது.

 

இந்த நிலையில் குறித்த இரு நிபந்தனைகளின் மீது தான், ஜரோப்பிய பயணத் தடை அழுலுக்கு வந்துள்ளது. தொடரும் கொலைகள் முழுமையான தடையை நோக்கிய, ஒரு சர்வதேச நகர்ச்சியாக உள்ளது. புலிகள் இதை வலிந்து கோரும் வகையில், அவர்களின் நடத்தைகள் உள்ளன. புலிகள் என்ற இராணுவக் கும்பலின் சமூகபொருளாதார கண்ணோட்டங்கள், ஏகாதிபத்தியத்துக்கு எற்புடையதாக இருந்த போதும் கூட, அதன் மாபியத் தனம் அவர்களுக்கு எற்புடையவையல்ல. இந்த மாபியத் தனம் ஏகாதிபத்திய சமூகபொருளாதார நலன்களையே பாதிக்கும் வண்ணம், புலிகளின் செயல்பாடுகள் அமைந்து இருப்பதால் அதை அனுமதிக்கப் போவதில்லை. இலங்கை ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு ஏற்ற, ஒரு வளமான பிரதேசமாக, உள்ளது. இந்த நிலமைகளில் புலி என்ற இராணுவ மாபியத்தனம் மேற்க்கு அவசியமற்ற ஒன்றாகவுள்ளது.

 

இந்த நிலையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனை என்ற அரசியல் விடையம் பின்தள்ளப்பட்டு, அவை மழுங்கடிக்கப்படுமளவுக்கு புலிகளின் தொடர்ச்சியான மக்கள் விரோத நடத்தைகள் காரணமாகியுள்ளது. புலிகள் பிரச்சனை கொலைகள் மற்றும் சிறுவர்களை படைக்கு அணிதிரட்டுதல் என்ற அடிப்படையில் குறுக்கிக் காட்டும் வகையில், உலகமே அதற்குள் சென்றுவிட்டது. உலகின் முன் தமிழ் மக்களின் பிரச்சனை படிப்படியாக காணமல் போய்விட்டது. இதை முதலில் புலிகள் முன் காணமல் போனது. இதுவே இன்று உலகமயமாகின்றது. உலகின் முன் புலிப் பிரச்சனை அவர்கள் செய்யும் கொலைகள், சிறுவர்களை படைக்கு திரட்டுதலாக குறுகிப் போய்விட்டது. புலிகளின் அரசியல் வேலை இதுவாகவே இருந்த போது, இதற்குள் சர்வதேச சமூகமும் வழிநடத்தப்படுகின்றது.

 

ஆளால் இங்கு கொலைகள், சிறுவர்களை படைக்குச் சேர்த்தல் எதிரான உண்மையான சமூக கருசணையில் இருந்த ஏகாதிபத்திய உணர்வுகள் வெளிப்படவில்லை. மாறாக இந்த நெம்புகோலில மூலம் தான், தனக்கு சாதகமான தலையீட்டை இலங்கையில் நடத்தும் ஒரு புற நிலையான தயாரிப்புக்குள் உலகம் சென்றுள்ளது.


இன்று இலங்கையில் ஒரு தலையீட்டை நடத்தக் கூடிய புறநிலையான தயாரிப்புகள் தொடங்கியுள்ளன. இதற்கு எற்ப புலிகள் என்ற இராணுவக் கும்பலின் நடத்தைகள், சாதகமான விளைவுகளை உருவாக்கி வருகின்றது. ஏகாதிபத்திய அரசக்கும், அந்த நாட்டு மக்களின் உணர்வுக்கு இடையில் உள்ள இடைவெளி, இலங்கை பிரச்சனையில் முரண்பாடத வண்ணம் இருப்பதற்கு, புலிகள் நடத்தைகள் காரணமாக அமைந்து வருகின்றது. கொலைக் கலச்சாரமும், சிறுவர்களை படைக்கு சேர்த்தல் ஏகாதிபத்திய மக்களால் எற்றுக் கொள்ள முடியாத அதேநேரம், அரசுடன் முரணற்ற வகையிலான இத இணைப்பை எற்படுத்தி விடுகின்றது. உண்மையில் எதிர்கால நிகழ்ச்சிகள் எப்படி நிகழவாய்ப்பு உண்டு என்பதை, ஊகிப்பது சிரமானதல்ல.

 

ஒன்றுபட்ட ஏகாதிபத்திய தலையீட்டுகான சூழல், நிச்சயமான தயாரிப்பில் இருப்பதை நாம் முதலி;ல் தெளிவாகவே இனம் கண்டேயாக வேண்டும்;. அதற்கு முன்பாக புலிகள் விரும்புகின்றனரா அல்லது இல்லை என்பதைத் தாண்டியும், ஒரு தீர்வுத் திட்டத்தை ஏகாதிபத்தியம் இலங்கையில் உருவாக்கும். இந்த அடிப்படையில் இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமான ஒரு தீர்வுத்திட்டத்தை அறிவிக்கும் நிலைமை முனைப்பு பெற்றுள்ளது. இதை தெளிவாக எகாதிபத்தியம் முன்தள்ளி வருகின்றது. இன்றைய தேர்தல் இதை மிகவும் சாதகமாக்குவதுடன் (இங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்), புலிகளை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும் வகையில் இந்தத் நிரந்தர தீர்வுத்திட்டம் அமையும். அதாவது இந்தியா ஆக்கிரமித்த போது, எற்பட்ட திர்வுத்திட்டம் போல் அல்லாது, இது சர்வதேச ரீதியாக முன்வைக்கும் சூழல் அதிகரிக்கின்றது. இதை கண்காணிக்கும் உரிமைய ஐ.நா தலைமையிலான இராணவத் தலையீடாகவே அமையும். இதன் போது புலிகள் பேச்சு வார்த்தைக்கு தயாரற்றதும், அரசியல் அல்லாத இராணுவக் கும்பலாக இருப்பதை தனிமைப்படுத்தி காட்டுவதில் வெற்றி பெறுவார்கள். இதற்குபுலிகளின் சமகால நடத்தைகளே அச்சாணியாக அமையும்.

 

இந்த நிலையில் மனிதப் படுகொலைகள், சிறுவர் படையணிக்கு திரட்டுதலை மனித இனத்துக்கு எதிரான ஒரு குற்றமாக பிரகடனம் செய்யும், அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி ஏகாதிபத்தியம் செல்லுகின்றது. இதன் மூலம் புலிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்குரிய ஒரு குற்றவாளிகளாக பிரகடனம் செய்யும் நிலைமையும், குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை உலகம் எற்கும் ஒரு நிலைக்கும் நிலைமை மாறிச் செல்லுகின்றது. புலிகளின் வலிந்து செய்யும் அன்றாட நடத்தைகளே, இதை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளது.


இந்த நிலையில் புலிகளால் ஒரு யுத்தத்தை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடத்த முடியுமா? ஒரு ஈராக், ஒரு ஆப்கான் நிலைமையை, இலங்கையில் புலிகளால் எற்படுத்த முடியுமா எனின், நிச்சயமாக இல்லை. முதலில் புலிகள் ஏகாதிபத்தியத்தை பகைத்து போராடுவதற்கு முன், இதற்கு மாற்றக வேறு பொருளாதார கொள்கை என எதுவுமற்றவர்கள். சொந்த மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்கு தயாரற்றவர்களாக உள்ளனர். தேசிய பொருளாதாரத்தை அழித்து, அதனிடத்தில் உலகமயமாதல் பொருளாதார கொள்கைக்காக தலையால் நடப்பவர்களாக உள்ள இவர்கள் எதை வைத்துப் போராடமுடியும்.

 

உண்மையில் ஈராக்கில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு, அரசியல் பொருளாதார உணர்வோட்டத்திலேயே இருந்தது. அங்கு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசியவாத உணர்வு, அரசியல் ரீதியான முனைப்பு பெற்ற ஒன்றாக இருந்தது. இது எம் மண்ணில் துளியளவும் கிடையாது. இதற்கான சமூக பொருளாதார கூறுகளையே, தூப்பாக்கி முனையிலையே புலிகள் அழித்து ஒழித்துவிட்டனர். ஈராக்கில் சதாம்குசைன் அமெரிக்கா இராணுவம் அகற்றிய போது, அமெரிக்காவுக்கு சதாகமான சமூக பொருளாதார சூழல் ஈராக்கில் இருக்கவில்லை. அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சமூக உணர்வுவோட்டம் அந்த சமூகத்தில் காணப்பட்டது. அங்கு எமது தமிழர்களிடம் உள்ளது போல், இஸ்ரேலிய கனவும் சிங்கப்ப+ர் பற்றிய பிரமையும் காணப்படவில்லை. எமது தமிழன் மேற்கு பற்றி கொண்டுள்ள பொருளாதார கனவுகள் சார்ந்த மதிப்பீடுகள், ஈராக் மக்களிடம் இருக்கவில்லை. அதுவே அமெரிக்காவுக்கு எதிரான போராட்டமாகவுள்ளது. புலிகள் நினைப்பது போல், தன்னியல்பான போக்கில் போராட்டம் நடக்கவில்லை. அப்படி நடக்கவும் முடியாது. ஈராக்கில் முஸ்லீம் அடிப்படைவாத உணர்வுகளும் கூட, ஏகாதிபத்தியதுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அந்த மக்களிடம் ஒரு அரசியல் உணர்வு உள்ளது. ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான, அவர்களின் பகற்கொள்ளைக்கு எதிரான உணர்வு அவர்களை தொடர்ச்சியாக போரட வைக்கின்றது. எமக்கு என்ன உணர்வு தான் உள்ளது. நீங்களே உங்களை கேட்டுப் பார்க்கலாம்.


ஈராக்கில் அமெரிக்காவை எதிர்த்து பல நூறு குழுக்கள் உருவான போதும், அவை தமக்குள் மோதவில்லை. புலிகளைப் போல் ஒன்றையொன்று கொன்று குவிக்கவுமில்லை. தமக்கு இடையில் சந்திப்புகளை நடத்தி போராட்டத்தை சரியாக ஒருங்கினைக்கவே முனைகின்றனர். எம்மண்ணில் புலிகள் அதை அனுமதிக்கவே மாட்டார்கள். ஈராக் மக்களுக்கு இடையில் அமெரிக்காவை எதிர்ப்பதில் வேறுபட்ட கருத்து நிலையலும், ஒன்றுபட்ட உணர்வு முதன்மையான சமூகக் கூறாகவுள்ளது. அமெரிக்காவை பிரதான எதிரி என்ற கண்ணோட்டம், பல்வேறுபட்ட குழுக்களிடையே ஐக்கியத்தை பலமாக்கின்றது. தமக்குள் மாற்றுக் கருத்தைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் மோதவில்லை. அதேபோல் சில விதிவிலக்கைத் தவிர, மற்றவர்களை கொல்லவுவில்லை. எதிரிக்கு எதிராக அனைவரும் ஒரே அணியில் நிற்பதில் உணர்வுப+ர்வமாக உள்ளனர். புலிகள் போன்ற குழுக்கள், கண்மூடித்தமாக குண்டு வெடிப்புகளை மக்கள் மேல் நடத்திய போதும் கூட, அமெரிக்காவுக்கு எதிரான பிரதான போராட்டம் திசைதிரும்பவில்லை.

 

இதை நிலையில் ஆப்பகானில் தலிபான்கள் புலிகளைப் போல் காட்டுமிராண்டிகளாக செயல்பட்டவர்கள் தான்;. மக்களை அடக்கியொடுக்குவதே அவர்களின் முதன்மை கூறாக இருந்தது. மத அடிப்படைவாதத்தை அடிப்படையில் கொண்ட அதிகாரத்தைக் கொண்ட அதேநேரம், ஏகாதிபத்தியத்தக்கு எதிரான ஒரு மத எதிர்ப்பு கோட்பாட்டை கொண்டிருந்தனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு மத அடிப்படைவாதத்துக்குள் வௌ;வேறு கூறுகளில் காணப்பட்டது. ஆப்கான் மீதான அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்தியங்கள் தலையி;ட்ட போது, தலிபான் இயக்கம் மிக வேகமாகவே அழிந்துபோனது. இதற்கான காரணம் மக்களுக்கு எதிரான அதன் அராஜகமே. அந்த அமைப்பு அடியொடு அழித்தொழிக்கப்பட்டது. இந்த நிலமை புலிகளுக்கும் பொருந்தும்.


ஆப்கானில் மதஅடிப்படைவாதம் என்ற தெளிவான அதன் அடிப்படை சித்தாந்தம், அல்கையித வழியில் நீடிக்கும் ஒரு அரசியல் வரையறையில் மக்களிடம் அன்னியமான ஒரு நிலையில் தொடர்ந்தும் தாக்குதலை நடத்தமுடிகின்றது. இதற்கு இருக்கும் சர்வதேச தொடர்பு, மற்றும் அரபு நாடுகளில் காணப்படும் ஒன்றினைத்த மத அடிப்படைவாதம் முக்கிய காரணமாகும்.

 

இந்த நிலையில் புலிகளை எடுத்தால் ஒரு சர்வதேச தலையீட்டின் போது என்ன நடக்கும்;. மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் விரைவாக சிதறிக்கப்படுவார்கள். ஒரு கொரிலா யுத்தத்தைக் கூட செய்யமுடியாத நிலையை அடைவர்கள்;. மக்களுக்கும் புலிக்கும் உள்ள உறவு அகலமானதாக பிளந்து கிடப்பதால், புலிகள் தப்பிப் பிழைப்பது என்பது சாத்தியமில்லை. அதேநேரம் புலிகள் சார்ந்துள்ள மேட்டுக்குடி தமிழ்மக்கள், சமூக பொருளாதார அரசியல் உணர்வில் மேற்கத்திய மோகம் சார்ந்த சிந்தனை புலிக்கு எதிராகவே திரும்பும். தமிழ் மக்களின் ஆதிக்கம் பெற்ற உணர்வு ஏகாதிபத்தியம் சார்ந்தவை என்பதால், புலிகளை அது தனிமைப்படுத்தியே அழிக்கும். இன்று புலிக்கு எதிராக ஆதிக்கம் பெற்ற உணர்வுகள் (புலியெதிர்ப்பு அணியினரின் சிந்தனை) கூட, ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக இருப்பது ஒரு முரண் அல்ல.

 

ஏகாதிபத்தியம் புலிகளை அழிக்க மிக இலகுவான வழியையே தேர்ந்தெடுக்கும்;. அந்த வகையில் முதலில் குறிவைத்து புலித் தலைமைகளை அழிப்பதில் மிக கவணம் செலுத்துவர். குறிப்பாக பிரபாகரனை கொல்வதன் மூலம், புலியின் இருத்தல் என்பதையே இல்லாதாக்க முனைவர். படூpரபாகரன் இல்லாத எந்த நிலையிலும் மாற்று தலைமை என்பது, புலிக்குள் ஒன்றுபட்ட வழியில் சாத்தியமில்லை. இது எதார்த்தம். ஏகாதிபத்தியம் பிரபாகரனை தனிமைப்படுத்தி அழித்தல் அல்லது அவரின் அணிகளில் இருந்து அவரை நெருக்கடிகள் மூலம் தனிமைப்படுத்தி வைத்தல் மூலம், புலித் தலைமையை அழிப்பது மிகவும் இலகுவானதும் சாத்தியமானதே. மக்களிடையே அன்னியமாகியுள்ள புலிகள் இயக்கம், விரைவில் மக்களால் கூட வெறுக்கப்பட்டு காட்டிக் கொடுக்கும் நிலைமை வரலாற்றில் மிகவும் வேகமாகவே நடக்கும். மக்களுக்கும் புலிக்கும் இடையில் உள்ள செயற்கையான இன்றைய உறவும் சரி, புத்திஜிவிகளும் புலிக்கும் இடையில் உள்ள செயற்கையான துதிபாடும் உறவும் எல்லாம் தீடிரேன எதிர்நிலை உறவாக மாறுவதை இன்றைய தலைமுறை வரலாற்றில் நிச்சயமாக தரிசிக்கமுடியும். பெருமெடுப்பில் எகாதிபத்தியத்துக்கு சாதகமானதாகவும், புலிக்கு எதிரான பிரச்சாரத்தை இலவசமாக செய்யும் மன நிலைக்குரிய ஒரு தலையாட்டும் கூலிச் சமூகமாக, புலிகள் தாங்களாகவே தமக்கு எதிராக சமூகத்தை அணிதிரட்டி வைத்துள்ளனர். தனக்குத் தானே கண்ணிவெடியை புதைத்து வைத்துக் கொண்டு கூச்சலீடுகின்றனர். இன்று புலிக்காக துதிபாடும் செய்தித்துறையும், கூலி எழுத்தாளக் கும்பலும் புலியின் அழிவு உறுதியானது என தெரிந்தவுடன, புலிக்கு எதிராகவே முழுமையான அதி உயர்மட்டத்தில்;, தூற்றும் ஒரு பிரச்சாரத்தை நடத்துவர். சகல தமிழ் பத்திhகை உலகமும், வானோளி மற்றும் தொலைக்காட்சி அமைப்புகளும் கூட புலிக்க எதிராக மாறுவதை யாரும் தடுக்க முடியாது. அதை புலிகள் தமாகவே தமக்கு எதிராக வளர்த்தெடுத்துள்ளனர். இதற்கேயுரிய கூலி மனப்பான்மையே இன்றை தமிழ் சமூக உணர்வாக உள்ளது.

 

அனைத்தும் சிங்கள பேரினவாத அரசு ஒரு தலைபட்சமாகத் தன்னும் அறிவுக்கும் ஒரு நிரந்தர தீர்வுத் திட்டத்துடன் இவை ஆரம்பிக்கும். பெருமளவிலான பேரினவாத கட்சிகள் ஆதாரவுடன் இது நிகழும்; வாய்ப்பு அதிகரித்து வருகின்றது. புலிகள் இதற்குள் இணங்கி போகும் எல்லைமட்டும் தான், புலிகளை அதன் சொந்த வடிவத்தில் இருந்தமுற்றாக மாற்றி அமைத்து ஒரு வடிவத்தில் தன்னும் தற்காலிகமாக நீடிக்கவைக்கும். இது சர்வதேச தலையீட்டுடன், அவர்களின் கண்கணிப்பின் கீழ் நேரடியான ஆயுதக் களைவை உள்ளடக்கியதாகவே அமையும். அதை நோக்கி புலிகளின் இன்றைய நகர்வுகள் விரைவாக, தன்னைத் தானே விசப்பரீட்சைக்குள் நகர்த்திச் செல்லுகின்றது

10.10.2005