01202022வி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

பம்பாய் ஒரு காவியமல்ல கலை விபச்சாரமே

பதிலை எதிரெலியிடம் கேட்கவிட்டு பாறைகள் மீது ஒரு ஒப்பாரி. இது காவியம் அல்ல விபச்சாரம். பாசிசபார்பன இந்து வெறிக்கு ஒரு நியாயப்படுத்தல்.

 

 

பம்பாய் சினிமா பற்றிய விமர்சனம் இன்னும் ஓய்ந்து விடவில்லை. பம்பாய் படம் பற்றியும் அதன் குறுக்கு வெட்டுமுகத்தைப் பற்றியும் அதிகளவில் இலங்கை வாசகர்கள் மத்தியில் யமுனா ரயேந்திரன் ஒரு கருத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். இப்படம் சிறந்தபடம் என பாராட்டியதுடன் இது இந்தியாவின் ஜனநாயகம், சிறுபான்மை ஐக்கியத்தின் ஒரு சின்னமாகவும், மணிரத்தினத்தின் நேர்மையின், மனச்சாட்சியின் பக்கங்கள் எனவும் பாராட்டினார். இதுபோன்று இவர் பல வழிகளில் பம்பாய்படத்தை நியாயப்படுத்தி வருகிறார்.

 

பம்பாய் படம் அடிப்படையில் மக்களுக்கு எதிரானது. சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு எதிரானது. அந்த வகையில் தமிழ் தேச விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது. சுயநிர்ணய உரிமைக்கு குழிபறிப்பது.

 

பம்பாய் படம் மூலம் மனிரத்தினம,; இரண்டே இரண்டு மதத்தீவிர வாதிகளே இது போன்ற வன்முறைகளை கூவி அழைக்கின்றனர் என்ற படிமானத்தை இட்டுச் சென்றார். அத்துடன் பம்பாய் கலவரம் முஸ்லீம் மக்கள் தான் நடத்துகின்றனர் என்ற வகையில் படத்தில் முஸ்லீம்களை நெருக்கமாக காட்டி விடுகின்றார்.

 

பம்பாய் படம் வெளியிடப்பட முன்னமே மதக்கலவரத்தை தூண்டியவர்களுள் ஒருவரான பால்தாக்கரேக்கு போட்டுக் காட்டி அதன் அனுமதியை மணிரத்தினம் பெற்றும் இருந்தார். இதை மனிரத்தினமே ஒத்துக்கொண்டார். அதை ஒட்டி பால் தாக்கரே வழங்கிய பேட்டி படத்தின் மீதான எல்லா விமர்சனத்தையும் தகர்க்கின்றது.

 

""மணிரத்தினத்தின் பம்பாய் மிகச்சிறந்த படம். நான் படத்தைப் பார்த்தேன். சிலமாற்றங்கள் மட்டும் செய்யச் சொன்னேன், அவ்வளவு தான். பம்பாய் கலவரத்துக்கு நான் வருவது போல் ஒரு காட்சி வருகிறது. அது உண்மையல்ல. நான் எதற்காகவும் வருந்தவில்லை. கலவரத்தை சிவசேனை ஆரம்பிக்கவில்லை. நாங்கள் பதிலடிதான் கொடுத்தோம். (மற்றபடி) இது மணிரத்தினம் உருவாக்கியுள்ள அற்புதமான படம். படத்தை நான் வெகுவாக ரசித்தேன்.""
-டைம்ஸ் ஆஃபி இந்தியா- மார்ச் 31


இந்தவகையில் கலவரத்தைத் தொடங்கிய பால்தாக்கரே சிறந்த படம் என பாராட்ட முன்வரும் போது படம் பார்பன அடிப்படையை பாதுகாப்பது புரிகிறது.

 

பார்ப்பன இந்து வெறி கொண்ட கதாநாயகன் அப்பாவின் எதிர்ப்பையும்  மீறி நடந்த திருமணம் அதன் பின் ஒற்றுமையாகும் குடும்பமும், பம்பாய் கலவரம் குறுக்கிட்டு அனுமதி கொடுக்கிறது. தீபற்றி வீட்டில் பெற்றோர் கருகிச்சாக, பிள்ளைகள் தொலைந்து போக, பின் தேடி கண்பிடிக்க, மனிதச் சங்கிலிப் போராட்டத்தை தொடங்கி படம் முடிந்து விடுகின்றது.


பம்பாய் கலவரத்தை குறுக்கு வெட்டுமுகமாகக் காட்ட எத்தனையோ உண்மைச்சம்பவங்கள் இருக்க காதலும், பெண்களின் பாலியல் உறுப்புக்களுமே தேவைப்பட்டுள்ளது மணிரத்தினத்திற்கு.

 

இது வெறும் நடுத்தர வர்க்க இயலாமையை, அதன் சாதகத் தன்மையை மணிரத்தினம் நியாயப்படுத்த, பாதுகாக்க செய்யப்பட்ட மாபெரும் மோசடி. இதன் மூலம் இந்திய பாசிச பார்ப்பன ஆதிக்கத்தை, ஆட்சியை பாதுகாக்க முயல்வதாகும். சிறுபான்மை இன, மத, சாதி அடிப்படையிலான பரிவுகளை அடக்கி ஒடுக்க முயல்வதாகும். இதை மணிரத்தினத்தின் பேட்டி, படம் வெளிப்படுத்துகிறது.

 

""எவனோ அடித்துக்கொள்ள ஏன் சாகவேண்டும்?"" என மணிரத்தினம் புலம்புகிறார். நீங்கள் பார்பர் மசூதியை இடியுங்கள், முஸ்லீம்களைக் கொல்லுங்கள் நாங்கள் ஆதரவு தருகிறோம் என இந்துவெறியர்களுக்கு ஆதரவு தருகிறார்.

 

ஒரு சினிமாவின் உள்ளடக்கம் முக்கியமானது என்பதை மணிரத்தினம் சிறப்பாகப் புரிந்துள்ளார். முஸ்லீங்கள் மீது சேறடிக்க காதல் மிக அவசியமான உள்ளடக்கமாகிறது. உயர்ந்த காதல், அதன் உணர்ச்சிகள், அவர்களின் அழகுகள், குலுங்கி எழும் மார்பகம் என்பன படத்தின் அடிப்படையை திசைதிருப்பப் போதுமான உள்ளடக்கமாகும். பெண்களின் உடல் உறுப்புக்களை வைத்து திரைப்படக் கருவை திசை திருப்பி ஆண் ரசிகர்களுக்கு எச்சில் வடிய வைத்து விபச்சாரம் பண்ணியுள்ளார் மணிரத்தினம். பாலியல் உறுப்புகளைக் காண ரசிகன் மீண்டும் வருவான் தன் கஜனாவில் பணம் நிறையும் என அவருக்கு நன்கு தெரியும். 

 

கதாநாயகி ஒரு முஸ்லீம் பெண்ணாக வரும் இடத்தில் இந்துவான கதாநாயகன் முஸ்லீமாக மாறியிருப்பின் படம் எடுத்த எடுப்பில் தடைசெய்திருப்பர். ஏன் எனின் ஆணாதிக்க சமூகம், பார்பன இந்து மதவெறி ஆதிக்கத்தை எதிர் மறையாயை அங்கீகரித்திருக்காது. இதைப் பேணுவதன் மூலம் தன்னை முஸ்லீம் எதிர்பாளனாக பிரகடனம் செய்கிறார் மணிரத்தினம்.

 

அயோத்தி கோவில் கட்ட நிதி உதவி கோரிவரும் போது கதாநாயகி அதிர்ந்து நிற்க, கதாநாயகனை கூட்டிச் சென்று பணம் கொடுத்தானா? யார் அறிவார். அவ்விடத்தில் மௌனம். இதுதான் மணிரத்தினத்தின் விமர்சன நோக்கு.

 

பாபர் மசூதி இடிக்க ரதயாத்திரை செல்லும் பார்ப்பன பாசிச இந்து மதவெறிக் குண்டர்களை எதிர் கொள்ளும் முஸ்லீம் கதாநாயகியை அக்குண்டர்கள் மனிதாபிமானமாக விடுவிக்க செய்கின்றனராம். ஆனால் ரதயாத்திரை ரதத்தில் எத்தனையோ தலைகள் (முஸ்லீங்கள்) உருண்டது என்பது உண்மையாகும்.

 

இவ்விரு சம்பவத்திலும் கதாநாயகி தனது கணவனிடம் இது ஏன் எனக் கேட்கவில்லை. இது தான் பார்பனன் மணிரத்தினத்தின் நரிக்குணம். மதாநாயகி தனது கருத்தைச் செல்ல மறுக்கும் இன்னிலையில் மணிரத்தினம் மசூதி இடிப்பை ஆதரிக்கிறார். இது போன்று நடுவீதியில் நின்று கதாநாயகன் உபதேசம் செய்யும் போது படம் ஊமையாகிவிடுகிறது. இது ஏன்? இதுதான் மணிரத்தினத்தின் நேர்மையா?

 

கலவரம் தொடர்கிறது. ஏன் இந்தக் கலவரம் என யாரும் கேட்கவில்லை, இது ஏன்? இப்படியெல்லாம்  கேள்விகேட்டால் பம்பாய் என்ற இக்காவியம் சிதைந்து விடுமோ? பார்பன இந்து வெறித்தனம் கேள்விக்கு உள்ளாகிவிடுமோ?

 

பதிலை எதிரெலியிடம் கேட்கவிட்டு பாறைகள் மீது ஒரு ஒப்பாரி. இது காவியம் அல்ல விபச்சாரம். பாசிசபார்பன இந்து வெறிக்கு ஒரு நியாயப்படுத்தல்.

 

""இயா அல்லா"" என பெரும் கூச்சலுடன் திரையில் கலவரம் தொடங்கிய உடன் முஸ்லீம்கள் பொலீசைத் தாக்குகின்றனர், தீவைக்கின்றனர். இதுதான் படத்தின் கலவரக் காட்சியின் தொடக்கம்.

 

படத்தின் தொடக்கம், தொடர்ச்சியாக முஸ்லீம் தாக்கலை மீளமீளக் காட்டுவதும், அதிக அளவு காட்டுவதும், மிக நெருக்கமான குளோசப்பில் காட்டுவதும். இதன் மூலம் கலவரத்தை முஸ்லீங்கள் நடத்தியதாகச் சித்தரிக்கின்றது.

 

உண்மையில் கலவரம் தொடங்கிய தென்பது இரண்டு தொழிலாழர்கள் தொழிற்சங்கத் தகராறில் கொல்லப்பட்டனர். 6ம் திகதி ""சாம்னா"" பத்திரிகையில் தலையங்கமாக, அவர்கள் முஸ்லீம்கள் தான் கொன்றனர் என எழுதி, கலவரத்தை தொடங்கினார் பால்தக்கரே. ஆனால் இதை மணிரத்தினம் என்ற நரியன் இரண்டு மதக் கும்பல் மோதுவதாக ஏன் திரித்தான். இதை விளங்கிக் கொள்ள படத்தில் ஒரு காட்சியே போதும். கதாநாயகன் கதாநாயகியை நோக்கி மதம் மாறி வரும்படி கோருவதன் மூலம் மணிரத்தினம் பார்பன இந்து உருபெற்ற ஒருவன் எனப்புரியும். இப்படி வரிக்கு வரி எழுதும் விடையத்தை படம் முழுதாகக் கொண்டுள்ளது.

 

அடுத்துமணிரத்தினத்தை நியாயப்படுத்த சிலர் முனைகின்றனர். இந்தவகையில் யமுனா ராயேந்திரன் ஈழமுரசிலும், வேறு சில பத்திரிகைகளிலும் கலைஞ்ஞன் என்பவன் யார் என முத்திரை குத்த முனைகின்றார். இது இன்று தம்முகத்தை மூடி கலைஞ்ஞன் பற்றி பொதுவாக நியாயப்படுத்தும் வாதங்களே.

 

யமுனா ராயேந்திரன் கூறுகின்றார் கலைஞ்ஞன் தீர்வு வைக்கத் தேவையில்லை என்கின்றார். அது அரசியல் வாதியின் வேலை என்கின்றார். இதன் மூலம் மணிரத்தினத்தின் பார்ப்பன இந்து வெறி சமூகத்தைப் பாதுகாக்க முனைகின்றார். இதன் மூலம் தான் எதன் பிரதி நிதி என்பதைபறை சாற்றுகின்றார்.

 

தீர்வு வைக்கத் தேவையில்லை என்ற வாதம் ஒரு மோசடியாகும். இதைச் சொல்ல முனைபவர்கள் ஒரு உண்மையை மறைக்கின்றனர். இதன் மூலம் மணிரத்தினத்தின் பாசிசப் பார்ப்பன இந்து வெறி அம்பலமாகாமல் இதை அரசியல் வாதியின் வேலை என்றும் புரட்டிவிடுகின்றார். ஆனால் மணிரத்தினம் அதை ஏற்காதது மட்டும் இன்றி தனது சமூக அடிப்படையில் தீர்வு வைத்துள்ளார். ஆனால் இன்று விமர்சனம் எழுதும் பத்திரிகைகள் மணிரத்தினத்திற்கு திருத்திக் கொடுத்தும், தமது சமூகத்திற் கேற்ப படத்தை திரிபு படுத்தியும், புகழ் பாடியும் உள்ளனர். இது தேவை தான? முதலில் படத்தின் உண்மையையும், நடந்த நடந்த சம்பவத்தையும் ஒப்பிட்டு விமர்சிக்க வேண்டும். யதார்த்தத்தை யதார்த்தமாக வெளியில் கூறவும், விமர்சிக்கவும் வேண்டும்.

 

அடுத்து அரசியல் வாதி, கலைஞ்ஞன், தொழிலாளி என்ற வேறு பாடு நீடிக்கும் வரை ஒரு சோசலீச சமூகம் கூட நீடிக்க முடியாது. இவர்களுக்குள் உள்ள இடைவெளி இல்லாது போகும் போது தான் சமூகம் ஒரு சோசலிச சமூகத்தை கட்டி எழுப்ப முடியும். இது சோவியத், சீனாவில் நடந்தவைகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஒரு மனிதன் அரசியல்வாதி, கலைஞ்ஞன், தொழிலாளி என எல்லவிதமாகவும் இருக்க வேண்டும். இதை மறுப்பது இருக்கும் இன்றைய பிற்போக்க சமூக நிலைப்பாட்டை பேணுவதாகும்.

 

இப்பத்திரிகையில் சினிமா தொடர்பாக இரண்டு விமர்சனங்களை நாம் பிரசுரித்துள்ளோம். இவ்விரண்டு விமர்சனங்களும் இன்று சினிமாவின் சீரழிவுப் பாதையை தெளிவாகக் காட்டி நிற்கின்றது. சினிமா எனப்படுவது மக்களுக்கு இலகுவில் தம் எடுத்த விடையத்தை விளங்கப்படுத்தக் கூடிய ஒரு கலைவடிவமே. ஆனால் இவ்வடிவம் இன்று பணம் சம்பாதிப்பதற்கா தமது கற்பனைகளில் உருவாகும் புதிய சீரழிந்த கலாச்சாரங்களையும், மனிதனால் இயலாத விடையங்களையும் (ஒருவர் பலரை ஒரே நேரத்தில் அந்தரத்தில் பாய்ந்து பாய்து அடிப்பது) மற்றும் பாலியல் பலாத்காரக் காட்சிகளையும் காட்டுவதனுடாக பெண்களின் பாலியல் உறுப்புக்களை அரைகுறையாக காட்டி ரசிகர்களை தமது பணப்பெட்டியை நிரப்பிவருகின்றனர். இவ்வாறு சிரழிந்து செல்லும் படங்களை தயாரிப்பதன் மூலம் தாம் பயனடைவதுடன் ரசிகர்களை ஒர் கற்பனை உலகை நோக்கி நகர்த்தி அவர்களின் வாழ்கையை சீரழிப்பது பற்றி இரு கட்டுரையும் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன.  


பி.இரயாகரன் - சமர்