Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனித நேயத்தை, மனிதத்துவத்தை விரும்பும் ஒருவனுக்கு இவை நிகழ்வது உண்டு. அற்பர்கள்  முதுகுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு எறியும் அவதூறுகள், வரலாற்றின் குப்பையில் தான் வீழ்கின்றன. சிறிரங்கன் பற்றிய பதிவொன்று, மிகவும் கேடுகெட்ட வகையில் பதிவிடப்பட்டு இருந்தது. திண்ணையில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை

தொடர்பான விடையமாக இருந்தது.  சிறிரங்கன் திண்ணைக்கு குறித்த கட்டுரையை அனுப்பிய போது, அதில் பரமுவேலனின்; பெயர் இல்லாமையை அடிப்படையாக கொண்டு, பரமுவேலனும் சிறிரங்கனும் ஒரே ஆட்கள் என்று கூறியதன் பின்னால், வக்கிரமான பதிவுகள் இடப்பட்டன.

 

சிறிரங்கனின் கருத்துகளை கருத்தாக எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழைகள் எல்லாம், இதை ஏதோ ஒரு பெரிய விடையமாக ஊதிப்பெருக்கி வம்பளந்தனர். இந்தளவுக்கும் பரமுவேலன் எந்த ஆட்சேபனையும் இதில் எழுப்பவில்லை. சிறிரங்கன் பல்வேறு விடையங்களை பற்றிச் சொந்தமாக, சொந்தப் பெயரில் எழுதுபவர். அவர் ஒன்றும் பினாமியாக பதிவிடுபவரோ, எழுதுபவரோ அல்ல. தனக்கென்ற கருத்துதளத்தை தனது சொந்த ஆளுமையுடன் எழுத முற்படுபவர். அவரின் கருத்தை கருத்தாக எதிர்கொண்டு விவாதிக்க வக்கற்றவர்கள், இணைய விவாதத் தளத்தில் வம்பளக்கவே விரும்புகின்றனர். அறிவும் நேர்மையுமற்ற, சொந்தக் கருத்து வளமற்றவர்கள், எப்போதும் உருப்போடும் மதவாதிகள் போல, துப்பாக்கியின் பலத்தை நம்பி கருத்தையே விபச்சாரம் செய்ய விரும்புகின்றனர்.

 

இங்கு சிறிரங்கன் தெளிவாக விளக்கிய போது, அவர் விரும்பும் கட்டுரைகளை திண்ணைக்கு அனுப்பிய போதும், திண்ணையில் சம்பந்தப்பட்டவர்கள் கட்டுரையாளரின் பெயரை வெளியிடத்தவறிவி;ட்டனர். இப்படியான ஒரு காரணத்தைப் பற்றி அக்கறையின்றி பதிவி;ட முனைந்தவர்கள் அறிவோடு நேர்மையாக எதையும் எழுத முற்படவில்லை. சம்பந்தமில்லாத வகையில் சொந்த நேர்மையீனத்தை, ஒழுங்கீனத்தை  வம்பளந்தனர்.

 

இரண்;டாவது விடையமாக அப்படித்தான் பரமவேலனும் சிறிரங்கனும் ஒரே நபர்கள் என்று வைப்போம், அதில் என்ன தவறு காண்கின்றீர்கள். ஐயா தூற்றிய புண்ணியவான்களே, ஒழுக்கவாதிகளே அதில் என்ன தவறு உண்டு? ஒருவர் பல பெயரில் தளம் வைத்திருந்தால் தேசவிரோதக் குற்றமோ? தமிழ் மணம் அப்படி கூறுகின்றதோ!


ஒன்றுக்கு மேற்பட்ட தளம் வைத்திருந்தால், ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றில் கருத்திட்டால் நானும் தான் விமர்சிப்பேன்;. அப்படி இருந்தால் விமர்சிக்கலாமே ஒழிய தூற்ற முடியுமா!

 

இதைப் பற்றிப் பதிவிடப் போனவர்கள் அவரின் மணைவி, குழந்தைகள் எல்லோரையும் இழுத்து வைத்து விவாதிப்பதில் என்ன நேர்மை உங்களிடம் உண்டு. இங்கு அப்படி கூறுவதன் மூலம், மிரட்டும் வக்கிரம் அரங்கேறியது. பதிவுகளின் நல்லபிள்ளையாக வேஷம் போடுவதும், அனாமதேயங்களாக வேஷம் போட்டு வரும் போது தூசணம் முதல் சகல வக்கிரத்தையும் தமிழ் தேசிய மொழியில் கொட்டித் தீர்ப்பது எந்த வகையில் நேர்மையானது.

 

இதை புலித் தேசியத்தின் பெயரில்  நிகழ்த்துவது அன்றாடம் நடக்கின்றது. தமிழ் மணம் அதை நன்றாகவே கண்டு உணருகின்றது. கருத்தால் எதிர்கொள்ள வக்கற்று, கருத்துத் தளத்தின் மீது துப்பாக்கி முனையை நீட்டியபடி, தமிழ் மணத்தில் வந்த வக்கரிப்பது தான் உங்கள் நீதியோ!

 

சிறிரங்கன் பல்வேறு சமூகம் சார்ந்த விடையங்களை விவாதிப்பவர். புலித் தேசியத்தை மட்டும் விமர்சித்தால் சீறிக் கொண்டு வரும் உங்கள் பின்னால் இருப்பது, உருப்போடும் மலிவு அரசியல் தான். அது தர்க்க ரீதியாக கூட பலமற்றது. சிறிரங்கனின் நேர்மையை, ஒழுக்கத்தை கேள்வி கேட்பது தவறல்ல, அதற்கு முன் அதை நீங்கள் நேரடியாக நேர்மையாக உங்களை அறிமுகப்படுத்திபடி கேளுங்கள். உங்களை நீங்கள் யார் என்று அறிமுகம் செய்தபடி கேட்பது தான் நேர்மை. அது தான் ஒழுக்கம்;. அதைவிடுத்து முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு தூற்றுவது தான் இன்றைய புலித் தேசியம் என்றால், அது தான் உங்கள் மனித நாகரீகமோ!

 

தமிழ் மணத்தில் புலித் தேசியத்தின் பெயரில் எத்தனை தூசணங்கள், எத்தனை வக்கிரங்களை அரங்கேற்றும் போது, அங்கு ஒழுக்கம் பற்றியும் நேர்மை பற்றியும் எதுவும் தெரியாத ப+னைமாதிரி இருந்து பால்குடிப்பவர்கள், திடீர் என்று பாய்ந்து குதறுகின்றனர். 

 

குதறும் போது கூட அறிவு நேர்மை எதுவுமற்ற வக்கிரப் புத்தியைக் காட்டுகின்றனர். கார்ல் மார்கஸ் கூறியது போல் அற்பவாதிகள் சொந்தக் கருத்தற்றவர்கள் ~~தன்னுடைய மிகவும் முட்டாள்தனமான அற்பக் கருத்துரைகளையும், சாதாரணச் செய்திகளையும் தத்துவஞானிகளுக்கு எதிர் நிலையில் நிறுத்துவதற்குத் தனக்கு உரிமை இருப்பதாக நம்புகின்றது|| சொந்த வக்கிரங்களை, தாங்கள் அன்றாடம் உருப்போடும் வழிபாட்டு நம்பிக்கையை,  தமது சொந்த அறிவிலித்தனத்தை, தலையில் சுமந்து வைத்துள்ள முட்டாள் தனத்தை எல்லாம் மூட்டைகட்டி குதியம் குத்துகின்றனர்.

 

சிறிரங்கனின் கருத்துக்களில் விமர்சனங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர் சமூகத்தை நேசித்து எழுதுகின்றார். மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்த முனைகின்றார். அவர் சமூகத்தின் பல்துறை சார்ந்து நின்று எழுத முனைகின்றார். அவரின் மனித நேயத்தை, மனிதப்பற்றை இழிவுபடுத்துகின்ற நீங்கள், எப்போதும் எல்லாவிடையத்திலும் அக்கறைப்படுபவர்கள் அல்ல. புலித்தேசியத்தின் விசுவாசிகளாக, உருப்போடப்பட்ட மதஉபதேசங்களைப் போன்று அற்ப மனிதர்களாக மட்டும் ஏன் நீங்கள் காட்சியளிக்கின்றீர்கள்.