ம ண்டல் கமிசன் அறிக்கையை ஏற்று கல்வியிலும்  சமூகத்திலும் பின்தங்கிவிட்ட பிற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்வதாக 1990இல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இட ஒதுக்கீடு விவகாரம் பற்றி புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், கேள்வி  பதில்கள் மற்றும் ஆசிரியர் குழு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கவுரை ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். வாசகத் தோழர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று தற்போது நூலாக வெளியிடுகிறோம்.


 இட ஒதுக்கீடு யாரால் கொண்டு வரப்பட்டது, எந்தெந்த சாதிகள்வர்க்கங்கள் ஆதாயமடைந்தன, என்ன விளைவு என்பதையும், இட ஒதுக்கீடு பற்றிய மார்க்சியலெனினியப் பார்வையையும் எமது நிலைப்பாட்டையும் இந்நூல் தெளிவாக்கும்.


 1990இலிருந்தே இட ஒதுக்கீடு விவகாரம் பற்றியும் அதில் எமது நிலைப்பாட்டையும் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம். அதைத் திரித்துப் புரட்டி தமது சொந்த வியாக்கியானங்களை இட்டுக்கட்டு அவதூறு செய்து வரும் சமூக (அ) நீதிக்காரர்களின் குதர்க்க வாதங்களை அம்பலப்படுத்திக் காட்டுவதாக இந்நூல் அமையும்.


 இட ஒதுக்கீடு அமலாக்கத்தையொட்டி, ஆதரவு  எதிர்ப்புப் போராட்டங்களும் வாதப் பிரதிவாதங்களும் தொடரும் இன்றைய சூழலில், சமூக நீதிக்கும் சமுதாய விடுதலைக்கும் போராடிவரும் புரட்சிகரஜனநாயக சக்திகளுக்கு இந்நூல் புதிய பார்வையை அளிக்கும் என்று நம்புகிறோம்.


 புதிய ஜனநாயகம்