இதுக்கு வாஸ்துசாஸ்திரமா? வீடே இல்லையாம் இதுக்கு வாஸ்த்தாம். வாஸ்து எதுக்கு வைப்ப?ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வெளிக்கு போறதுக்கு இடமில்லாமல் டாய்லெட்டுன்னு ஒன்னுதெரியாமல் வெளியபோயிகிட்டிருந்தான். இதுக்கு ஒரு 3 கிலோமீட்டர் போயி குப்புசாமி வரல, கோயிந்தசாமி வரல, நீ சொம்பு எடுத்துக்குனு வா, நா டார்ச் லைட் எடுத்துக்குனு வாரேன்னு பாகப்பிரிவினை பண்ணிக்கினு போனானுங்க. இப்ப வாஸ்துவா? இப்ப பங்களா கட்டுற வீட்டுல வாஸ்துன்னா டாய்லெட் எப்படி வைப்ப? உன் வாஸ்து குளத்தங்கரையில வெளிக்கு போறது. எந்த வாஸ்து சாஸ்திரத்திலே எங்கடா இருக்குது உங்களுக்கு டாய்லெட்டு. கேட்போமா? கேட்கமாட்டோமா? இதை கேட்கிறதுக்குத்தான் இப்போ நான் பேச வந்திருக்கிறேன் என்பது என்னுடைய முன்னுரை.
இவர்களுடைய சாஸ்திரம் இவர்களுடையதா? இப்ப ஆயுர்வேதன்றான். விளக்கெண்ணெய் விக்கணும்னா கூட திடீர்னு ஆயுர்வேதமுறைப்படி தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய்ன் றான். அது இவனுடைய சாஸ்திரமாம். ஆயுர்வேதம் இவன் சாஸ்திரம். வாஸ்து இவன் சாஸ்திரம். சோசியம், காலக்கணிதம், நியூமராலஜி, அவனோட ஆயாலஜி எல்லாத்தையும் சேத்து உழைக்கிற நம்மள ஒரு அங்குலங்கூட விழிப்பு அடைந்து விடாமல் தடுக்குற இந்த சதிகளுக்குப் பெயர் இந்து மதம்.
எல்லாரையும் சேத்துக்குவாராம், இவரு. சங்கராச்சாரியாருக்கு இப்ப வந்திருக்கிற பெரிய ஃபுல் டைம் டியூட்டி, 24 மணிநேர வேலை, என்னன்னா? இந்துக்கள் யார், யார்னு பார்த்து அவர்களை ஒன்றிணைக்கிறாராம். இதுவரைக்கும் ஊருக்குள்ள வராதடான்னு துரத்திக்கிட்டிருந்தீங்க, சேரியிலேயே இருடான்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க, உன்ன நா தொடமாட்டன்டான்னு சொல்லிக்கிட்டீருந்தீங்க. இப்ப கூப்புடுறானாம்!
1932இல் காந்திக்கே இந்த மேட்டரு புரியாம போய் வட்ட மேசை மாநாட்டுல நீயும் இந்து நானும் இந்துன்னு பாபா சாகேப் அம்பேத்கரைப் பார்த்து அவர் சொன்னாராம். யாரு? மகாத்மா காந்தி. நாமெல்லாம் வெறும் ஆத்மா. அவங்க மட்டும் தான் மகாத்மா. அதற்கு பாபா சாகேப் அம்பேத்கர் பதில் சொல்லியிருக்கிறார். ஹலோ மிஸ்டர் காந்தி! மகாத்மான்றத ஒத்துக்காம முதன் முதல் போர்க் குரல் கொடுத்த பெருந்தலைவன் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். இந்த வெறும் ஆத்மாவே இல்லன்னு சொன்னார் புத்தர். ஆத்மாவே இல்லை இதுல மகாத்மா இந்த தேசத்திற்கு பிதா! அந்த மகாத்மாவை பார்த்து ஹலோ மிஸ்டர் காந்தி வாயை மூடுங்கன்னு சொல்லிட்டு நீ எப்படி இந்துன்னு என்ன சொல்லற? நீ சொல்லிக்கோ நீ இந்து. என்ன எப்படி சொல்ற? என்று கேட்டதற்கு, இல்ல. நீயும் இந்து நானும் இந்துன்னாரு அவரு.
இந்த விவகாரமெல்லாம் பண்ணாத, ""நா இந்து இல்ல''ன்னு சொன்னாரு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். நீயும் இந்து நானும் இந்து, அப்படின்னா, அப்பதான் கேட்டாரு மலத்த தொட்டிருக்கியான்னு? யாரு? பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். அப்பதான் ஞாபகம் வந்தது ""2'' தடவை தொடுற, ஒருநாளைக்கு. கழுவிதான ஆகணும். அவரு மகாத்மான்றதால ""எவாப்ரேட்டா'' ஆயிடும்? இப்ப சங்கரச்சாரியாரு வெளிக்கு போனா கழுவிதான ஆவனும். மலத்த தொட்டுதான ஆவனும் தொட்டு கழுவிதான ஆவனும் இரண்டு வேளை. இரண்டுமுறை மலத்த தொடுகிற நீ கைய மட்டும் சோப்பு போட்டு கழுவுற, ஆனா மனிதனா பிறந்த என்னை தீண்டப்படாதவன் என்று சொல்லி தொட்டா குளிக்கணுன்னு சொல்ற, நீயும் இந்து, நானும் இந்துன்னு சொல்றியே ராஸ்கல், அப்போ யார் இங்க இந்து? இவங்க சொல்றாங்க எல்லாருமே இந்துவாம். யாருடா இந்துன்னா? இந்திய தத்துவ மரபில் வந்தவங்க எல்லாரும் இந்துன்றான்.
நாங்க சுடலமாடனுக்கு காவு குடுத்து கட்டாந்தரையில் கடாவெட்டி அங்க உடுக்க சிலம்புல பாட்டுப்பாடி, ""சுடலை மாடன் வந்து..... நின்றான் நின்றானங்கே'' நின்றான், நின்றான்னு அரைமணி நேரமா நிற்கிறோமே, நானும் இந்து. சேரிக்குள்ளயே சாமி வரக்கூடாதுன்னு அடம்புடிச்சிக்கிட்டிருக்கிற நீயும் இந்துவா? என்னுடைய மரபும் உன்னுடைய மரபும் ஒன்றா? இந்தக் கேள்வியைத்தான் இன்றைக்கு இங்கே எழுப்புகிறோம். இந்திய தத்துவ மரபுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்திய தத்துவ மரபு மிகப் பெரியது. அகலமானது. ஆழமானது. அது சாங்கியர் என்று சொல்லப்படுகிற கபிலரிலே ஆரம்பித்து புத்தரிலே தொடர்ந்து வள்ளலார் வரை வந்து இன்றைக்கும் பாமர மக்களென்று சொல்லப்படுகின்ற உழைக்கும் வர்க்கத்தினரிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மரபு இந்திய தத்துவ மரபு.
இந்திய மரபு என்று சொல்லும் பொழுது அது வடக்கே, இமயமலையிலிருந்து, கங்கையாறு போல் குதித்து வந்த மரபு மட்டுமல்ல, நம்முடைய தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி, காவிரி இந்தக் கரையிலே இருந்தெல்லாம், இமயத்தை நோக்கியும் சென்றது இந்த மரபு. இந்திய மரபு என்பது வடக்கேயிருந்து வந்தது என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டிலே இருந்து போனது இந்திய மரபு. இது நமக்கு தெரியலை என்பதை வைத்துக் கொண்டுதான் எப்பப்பார்த்தாலும், இந்துக்கள் என்றால் இந்தியர்கள், இந்தியர் என்றால் இந்துக்கள், இதுல முஸ்லீம்களெல்லாம் வெளியில இருந்து வந்துட்டாங்கன்னு இராமகோபாலன் அண்ட் கம்பனி பிரைவேட் லிமிடெட் புருடா உட்டுக்குனு வராங்க! டுபாக்கூரு! யோசிச்சு பாருங்க. ஊர் ஊருக்கு வந்து மீட்டிங் போட்டு சொல்றாரு இராமகோபாலு. என்னான்னு சொல்றாரு? ஊர் ஊருக்கு வந்து நம்ம கிராமத்துல முஸ்லீம் கடையில் எதுவும் வாங்காத. அப்படி என்னா வாங்கிட்டோம், நாங்க எங்க ஊரு முஸ்லீம் கடையில 50 பைசாவுக்கு தேங்காய் எண்ணெய் வாங்குவோம். ஒரு 10 பைசாவுக்கு கடுகு வாங்குவோம். இத தவிர வேற என்னா மூட்ட மூட்டையா வாங்கறதுக்கு எங்ககிட்ட காசு இருக்குது. நாங்க என்னமோ பெரிசா முஸ்லீம் கடையில வாங்குற மாதிரி இஸ்து கட்டிக்கினு, கோமணத்தை வெளியே கட்டிக்கிட்டு. கோமணத்த உள்ள கட்டி வௌசாயம் பாத்தவன், வேட்டிய வெளிய கட்டிக்கிட்டு இருக்கான். இவன் கோமணத்தையே வெளியில கட்டிக்கிட்டு நம்ம ஊருக்கு வந்து நம்மகிட்ட சொல்றான் முஸ்லீம் கடையில் எதுவும் வாங்காதே, எதுவும் வாங்காதேன்னு. அப்படி என்ன வாங்கிட்டோம்னு கேக்கறன் நானு. தயவு செய்து யோசியுங்கள். எங்கள முஸ்லீம் கடையில எதுவும் வாங்காதன்னு சொல்ற அந்த இராமகோபலன் மெட்ராஸ்ல இருந்து கார்ல வரும்போது, அரேபியாவுல இருந்து முஸ்லீம் எடுத்த பெட்ரோல ஊத்திக்கிட்டுதான் வரானே தவிர, முருகப் பெருமான் சொன்னாமாதிரி அவரு போன மாதிரி மயிலுமேல ஏறியா வரான். முருகப்பெருமான் மயில்ல ஏறி வந்த மாதிரி நீயும் மயில் ஏறி கீர் போட்டுக்கினு எங்க ஊருக்கு வா. அப்புறம் முஸ்லீம் கடையில எதுவும் வாங்காம இருக்கலாம். இப்ப, சொல்றது வேற, செய்றது வேறன்னு இருக்குறாங்கன்னு புரியுதா உங்களுக்கு?
இந்திய மரபு என்பது எங்கள் மரபு. தமிழனுடைய மரபு. தெலுங்கனுடைய மரபு, மலையாளியுடைய மரபு. மராட்டியனுடைய மரபு. குஜராத்தியுடைய மரபு. இது பார்ப்பானுடைய மரபு இல்லை, இல்லை. இந்து மரபு என்று இவன் சொல்லுவது, பார்ப்பான் மரபு மட்டுந்தான். அந்த மரபு என்னன்னு எடுத்த எடுப்புலேயே சொல்றேன். இந்து சமய மரபுல கொஞ்சம் குடுமி மயிரும், கிழிஞ்சிபோன கோமணத்தையும் தவிர வேற ஒரு மசுருமில்ல. தத்துவ பேராசிரியராக 32 ஆண்டுகளாக பச்சையப்பன் கல்லூரியில இருக்கிற நான் சொல்றேன். இன்றைக்கு இந்து தத்துவ மரபுன்னு சொல்லுவதை நான் சும்மா இந்த கூட்டத்துல பேசிட்டு போகல. இதே இராமகோபாலன வச்சிக்கிட்டு விவாதம் பண்ணேன், அந்தாளு டி.வியில ஒத்துக்கிட்டான்.
இந்து தத்துவ மரபுல ஒரு மசுருமில்லேன்னு சங்கராச்சாரியார்கிட்ட நான் குமுதத்துக்காக பேட்டி கண்டு விவாதித்து அது பத்திரிக்கையிலேயே வந்தது. அதையும் ஒத்துக்கிட்டான். அந்த ஆளுக்கு எதுவும் தெரியலேன்னு. இப்ப நான் மக்கள் மத்தியிலே இந்த விசயங்களை எடுத்து வைக்கிறேன். இந்து தத்துவ மரபு வேறு, இந்திய தத்துவ மரபு வேறு. இந்திய தத்துவ மரபு என்பது, கொஞ்சம் கவனியுங்கள் தோழர்களே, கொஞ்சம் கடினமாக இருந்தாலும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சாங்கியம், யோகம் என்று ஒரு மரபு, தத்துவ மரபு. யோகம் என்று ஒரு தத்துவ மரபு, யோகாசனமெல்லாம் பண்றாங்களே அது. சாங்கியம், யோகம், மீமாம்சம், ஞாயம், வைசேஷிகம், வேதாந்தம். இது வரைக்கும் இந்திய தத்துவ மரபு ஆறு.
இது இல்லாமல், பௌத்தம், ஜைனம், இதுக்கப்புறம் சித்தாந்தம் அதுக்கப்புறம் வேறு மரபுகள் இருக்கிறது. இதுல வேதத்தை ஒப்புக் கொள்கிற மரபு எது என்று பார்த்தால் வேதாந்தம் என்று சொல்லுகின்ற அந்த ஒரே ஒரு மரபுதான் வேதத்தை ஒப்புக் கொள்ளுவதாய் பெயரளவில் சொல்லுகிறது. அதுவும் நான்கு வேதத்தை ஒப்புக் கொள்வதில்லை. ஆரண்யகங்களை ஒப்புக் கொள்வதில்லை. வேதாந்த மரபு உபநிடதங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறது. உபநிடதம் என்பது வரலாற்றுப்படி பௌத்தத்துக்கு பின்னால் வந்தது, அல்லது சமகாலத்தில் வந்தது என்று சொல்லலாம். உபநிடதம் எத்தினின்னு சங்கராச்சாரியார கேட்டேன். எத்துனையோ இருக்குது, அதெப்படி சொல்றது அப்படின்னான் அந்தாளு. அட எத்தனையோ இருக்குது அதுல அஞ்சு, ஆறு, நாலு, ஏழு, சொல்லுடான்னு கேட்டா, அது எத்துனையோ இருக்கு அதெப்படி சொல்றதுன்னு சொன்னான். ஏதாவது ஒண்ணு சொல்லுயான்னா தெரியல. அப்பதான் நான் கேட்டேன்.
உபநிடதங்கள் எத்தினின்னு தெரியாதவன் பெரிய ஜாதி, தெரிஞ்ச நானு சின்ன ஜாதியாடா நாயேன்னு கேட்டேன். கோவம் வந்தா கேட்பேனா? கேக்கமாட்டேனா? இதுதான் கேட்டேன், பத்திரிக்கையில் இதை ரொம்ப நாகரிகமா போட்டாங்க. உங்களுக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைத்து நான் சொன்னேன்னு எழுதியிருக்குறான். உனக்கு இது தெரியாத நீ பெரிய ஜாதி தெரிஞ்ச நான் சின்ன ஜாதியா? பஜகோவிந்தம்னு சொல்றியே, பஜ கோவிந்தம் என்ன பாட்டுன்னு கேட்டேன். ஆதிசங்கரர் எழுதிய பஜகோவிந்தம், நன்னா தெரியுமேன்னாரு. எத்தினின்னு கேட்டேன். தெரியலையேன்னாரு. அதுல உண்மையா என்ன இருக்குதுன்னா பன்னிரண்டு பாட்டுதான் அந்த ஆளு எழுதியிருக்கிறான். நான் எழுதப்போறது 12 பாட்டுன்னு சொல்லி அதுக்கு முன்னால ஒரு பாட்டெழுதியிருக்கிறான்.
""துவாதச மஞ்சரி காபிர தெக்ஷ'', பன்னிரண்டு பாடல்களை நான் எழுதப்போகிறேன். இது எதுக்குத் தெரியுமா? ""வையா கரணி ஸ்பண்டித வைஷ்ய'' பண்டிதர்களுக்காக இந்தப் பாட்டை நான் எழுதுகிறேன்னு சொல்லியிருக்கிறான். அதில் பஜகோவிந்தமே இல்லை. அந்த பன்னிரண்டு பாட்டுக்கும் ஒரு முன்னுரை தான் இருக்கிறது. இந்த நூலுக்கு என்னடா பேருன்னா, எழுதுன ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறாரு, துவாதச மஞ்சரிகாரி. துவாதசன்னா பன்னிரண்டுன்னு பேரு, சமஸ்கிருதத்துல. நாம பத்து இரண்டு பன்னிரண்டுன்னு சொல்லுவோம். சமஸ்கிருதத்துல இப்படி சொல்வாங்க இரண்டு பத்துன்னு. துவாதசன்னா இரண்டு தச பத்து, இரண்டு பத்துன்னுவான், நமக்கு இரண்டு பத்துன்னா இருபது, இந்த இரண்டு மரபும் ஒரு மரபா? பத்தும்ரெண்டும் பன்னிரண்டுன்னு சொல்றது என் மரபு, உன் மரபு, இல்லையா? இரண்டு பத்துன்னு சொன்னா பன்னிரண்டுன்னு அர்த்தமாம். நமக்கு இரண்டு பத்துன்னு சொன்னா இருபதுன்னு பாட்டியம்மாவுக்கு கூட தெரியும். உண்டா இல்லையா? அப்போ இந்த துவாதச மஞ்சரி பிரவேகவு. துவாதச மஞ்சரிதான்னு அவரு எழுதுனாரே, அதுவும் அவனுக்கு தெரியல.
மீண்டும் நினைவுபடுத்துகிறேன். சாங்கியம், யோகம், மீமாம்சம், வேதாந்தம், அதற்கு முன்னால் ஞாயம், வைசேஷிகம் இவ்வளவுதான். ஜைனம் இருக்கிறது. பௌத்தம் இருக்கிறது. இதுல வேதாந்தம் கூட உபநிடதத்தை அடிப்படையாகக் கொண்டதே தவிர, வேதங்களையோ, ஆரண்யகங்களையோ அடிப்படையாகக் கொண்டது இல்லை. மதிமாறன் அவர்கள் ஒரு பத்திரிக்கையிலே, தலித்முரசு பத்திரிக்கையிலே, ஒரு நீண்ட கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதினார். "பாரதிய ஜனதா பார்ட்டி'ன்னு பாரதியை விமர்சித்து எழுதினார். அதுக்கு கோவை ஞானி அவர்கள், நான் மதிக்கிற தலைவர்களிலும், அன்பர்களிலும், நண்பர்களிலும் ஒருவர், அதற்கு விமர்சனம் எழுதும்பொழுது இப்ப ஒரு புத்தகத்துக்கு என் நண்பர் பாரதி புத்திரன் எழுதிய புத்தகத்தில எழுதும்போது சொல்லியிருக்கிறாரு, ""இப்பொழுது திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களும் தமிழ் உணர்வு, தமிழ் தேசிய உணர்வு கொண்டவர்களும், தவறான பின்புலத்திலிருக்கிறார்கள். இவர்கள் வேதத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வேதத்தில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ளவில்லை'' என எழுதி இருக்கிறார்கள். நல்லவேளை அவரு என்னை சொல்லியிருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்.
ஏன்னா வேதத்தில் என்ன இருக்கிறதுன்னு தெரிந்தவன் உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். நான்கு வேதங்கள் என்று சொல்கிறார்கள். அதிலே ரிக் வேதம், யசூர் வேதம், அதர்வண வேதம், சாமவேதம் என்று நான்கு இருக்கிறது. இந்த ரிக் வேதத்திலேதான் மீன் குழம்பு வச்ச மாதிரி, இந்த நரிக்குறவர்கள் சாப்பாட்டை பிரிச்சு வச்ச மாதிரி, அதில் மீன் குழம்பும் இருக்கும், கருவாட்டுக் குழம்பும் இருக்கும், சாம்பாரும் இருக்கும், சுத்தமா, சைவமா வெண்டக்கா குழம்பும் இருக்கும், எல்லாம் கலந்து இருக்கும். ரிக் வேதத்திலே அப்படித்தான் இருக்கிறது. ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பே இல்ல. சில விசயம் ரொம்ப அறிவு பூர்வமா இருக்குது. சில விசயம் முட்டாள்தனத்துக்கு மகுடம் சூட்டின மாதிரி இருக்குது. எங்கேயிருந்துடா இந்தக் கலப்படச் சோறு வந்ததுன்னு பார்த்தா ரிக் வேதத்துல எங்கெல்லாம் கொஞ்சம் அறிவுப் பூர்வமா சொல்லியிருக்குதோ, அதுக்கெல்லாம் கீழே எழுதியிருக்கிறான் திராவிட ரிக்குன்னு. அது எல்லாம் திராவிட ரிக்கு, தென்னாட்டுல இருந்தவன் ஏதாவது சிந்தித்து சொன்னா அந்த சிந்தனையை, சிந்தினதை எடுத்துக்கிட்டு போயி சேர்த்து வைத்துக் கொண்டு, திராவிட ரிக்குன்னு சொல்லிக்கிட்டிருக்கிறானுங்க. அதுதான் ரிக் வேதத்துல இருக்கறது. இன்னொரு வேதம் இருக்கிறதே யசூர் வேதம், அது என்னா சொல்லுது? நம்ப பேட்டையிலே சில பேர் பேசிக்குவாங்க, மாப்ள என்ன ரொம்ப ராங் பண்றான். நா, அந்தப் பக்கமா போனா எனுக்கு ரொம்ப பயமா இருக்குது. நீ மட்டும் ஊம்னு சொல்லு, அவன கீசிர்றன். இத அப்படியே மொழி பெயர்த்தீங்கன்னா, அதுதான் யசூர் வேதம். மாப்ள எனக்கு பயமா இருக்குது, அந்தப் பக்கமா போனா உதைப்பான் போலருக்குது, நீ மட்டும் ஊம்னு சொல்லு நீ மட்டும் எனக்கு சப்போட் பண்ணு நான் அவங்கள கீசிர்றன். இத ட்ரான்ஸ்லேட் பண்ணினா அது யசூர் வேதம்.
மூன்றாவது இருக்கிறதே அது சாம வேதம். அதிலேதான் தெளிவு பெற்ற சில விசயம், மன்னிக்க வேண்டும், ரிக்வேதம், யசூர் வேதம், அதர்வண வேதம் அதில் பாதி சடங்குகள் கற்பூரத்தை எப்படி கொளுத்துறதுன்னு சடங்கு இருக்கிறதுன்னு வச்சிக்குங்க, நல்லா கவனிங்க கற்பூரம் கண்டுபிடிக்கப்பட்டு 1218 வருசம்தான் ஆவுது. கற்பூரம் 1218 வருசத்துக்கு முன்னால கண்டுபிடிக்கப்பட வில்லை என்பது உலக வரலாறு, ஆனால் கற்பூரத்தை எப்படி கொளுத்தறதுன்னு, எப்படி தீபாராதனை காட்டணும்னு ஐயாயிரம் வருடத்துக்கு முன்னால எழுதி வச்சிருக்கான்னு சொன்னா கேட்கறவன் கேனையா இருந்தா, எருமமாடு ஏரோப்பிளேனு ஓட்டும்னு சொல்லுவான்! 1218 வருசத்துக்கு முன்னால இல்லாத கற்பூரத்தை எப்படி காட்டுறதுன்னு அதுக்கு முன்னால எப்படி சொல்ல முடியும். அப்ப இதையும், அதையும் எல்லாம் சேர்த்துக்கணும், இன்னொரு பெரிய வேடிக்கை 2,200 வருசத்துக்குமுன்னால வந்த புத்தர், அவரைப்பற்றிய செய்தியெல்லாம் கூட 5000ம் வருசத்துக்கு முன்னாலேயே வந்துவிட்டது, யசூர் வேதத்துல. அது எப்படியிருக்கும்? இதுல இருந்து தெரியவில்லையா உங்களுக்கு. திருட்டு பசங்க மாத்தி மாத்தி கெடச்சதெல்லாம் சேர்த்து வச்சுட்டு அதையும் பிரிண்ட் பண்ணாம வச்சிக்கினு, இது எழுதாக் கிளவி, இது சும்மா செவி வழியில் பாரம்பரியமா படித்துக் கொண்டு வருவதுன்னு பிலிம் காட்டிக்கினு இருந்தானுங்க. இப்ப அதை பிரிண்ட் பண்ணி பார்த்தா! அதுல தப்பு தப்பா இருக்குது. கடைசியாக சாம வேதம் ஒன்று இருக்கிறது.
அருமைத் தோழர்களே! தோழியர்களே! அது என்னான்னு டிரான்ஸ்லேட் பண்ணி உங்களுக்கு சொல்றேன், ஒரு பொம்பளய 10 ஆம்பிளைங்க தனி அறையில் பலாத்காரம் எப்படி பண்ணனும்ன்னு தெரிஞ்சுக்கனும்னா சாம வேதத்தை படிச்சா தெரிஞ்சுக்கலாம். டீடெய்லா இருக்குது அதுல. பின்னால் வாத்சாயனர் காம சூத்திரம் எழுதறதுக்கு அடியெடுத்து கொடுத்ததுதான் சாம வேதத்தின் பல பகுதி. இப்ப அத என்னான்னு பேசிக்கிட்டு இருக்கறாங்கன்னா, இப்ப இருக்கறாரே சங்கராச்சாரியார், இவரு எவளோ ஒரு நேபாளக்காரி கூட ஓடிப் போயி, திரும்பி ஓடி வந்தவரு. ஓடாமலேயே பரலோகம் போயி சேர்ந்தாரு இதுக்கு முன்னால் இருந்த பெரிய சங்காரச்சாரியார். அவரு சொல்லியிருக்கிறாரு, சாம வேதம் கலை ஞானம் உடையதுன்னு!
எது... ஒரு பொம்பளைய பத்து ஆம்பிளைங்க எப்படி பலாத்காரம் பண்றதுன்னு டீடெய்லா ஸ்டடி குடுத்திருக்கிறானே, அது கலை ஞானம் உடையதாம். இப்படி சினிமா படம் எடுக்கிறவங்களும், டி.வி தொடர் எடுக்கறவங்களும் இதே காட்சியை காட்டினா முகம் சுளித்தால் எதனாவது அர்த்தமிருக்குதா? அவர்கள் சாமவேதம் படித்தவர்கள். அவர்கள் சாம வேதத்தின் படி படமெடுக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் இல்லையா? தயவு செய்து யோசிங்க. இந்த வேதங்கள் நான்கும் நாசமா போவுதுன்னா, அப்போ, வேதத்திலே எங்களுக்கு கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது? அந்தக் கேள்வியை நான் எழுப்புகிறேன். தமிழர்களுக்கு, தெலுங்கர்களுக்கு, மலையாளிகளுக்கு, குஜராத்திகளுக்கு பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு சாம வேதத்தில் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை. அதர்வண வேத்தின் சடங்குகள் எங்களுக்கு தேவைப்படவில்லை. ரிக் வேதத்தின் சில பகுதிகளை தவிர, இயற்கை வர்ணணைகளைத் தவிர அதுவும் திராவிட ரிக் தவிர அவர்கள் தந்த ரிக்கிலே ஒரு மசுரும் இல்லை என்பது புரிந்து போய் விட்டது.
அதர்வண வேதத்தில், ஒன்றுமில்லை, ரிக்வேதத்தில் ஒன்றுமில்லை, யசூரிலே ஒன்றுமில்லை, சாம வேதம் வெறும் காமக் களஞ்சியம் என்று ஆன பின்னால், இதை சும்மா நான் கூட்டத்தில் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், இங்கே கூட, எந்தப் பார்ப்பன பண்டிதர்களிருந்தாலும், அவர்கள் பெயரை வச்சுக்குவான் சிலபேரு, நான் சாம வேதம் படித்தவன், அதனால் சாமவேதி. நான் யசூர் வேதம் படித்தவன் யசூர் வேதி, நான் சீதபேதி! அப்படின்னு அவன் பேரு வச்சுக்குவான். எவனா இருந்தாலும், யாரா இருந்தாலும், பணிவோடு சவாலுக்கு அழைக்கிறேன். இதே போல ஒரு கூட்டத்தைக் கூட்டி வியாக்கியானம் செய்வதற்கும், விவாதம் செய்வதற்கும், நான் தயார். நான் சொல்வதை தவிர வேதத்தில் ஒரு மசுரும் இல்லை. யார் கூப்பிட்டாலும் நான் வருவதற்குத் தயார். இந்த வேதங்கள் இப்படியென்றால், அதற்குப் பிறகு இவர்களுக்கு ஆரண்யகங்கள் என்று இருக்கிறது. அசபர்ணர், அசக பர்ணர், யார்னா தெரிதா உங்களுக்கு அசக பர்ணர், அவர் நம்ம சித்தப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் ஒண்ணுவிட்ட தம்பிபுள்ள மாதிரியா இருக்குது. அந்த அசக பர்ணர், அசக மர்ணர், பிருகஸ்பதி, நாராயணர், வெங்காயத்தார், வெள்ளபூண்டார்னு பத்து பேர் சேர்ந்து ஆரண்யகங்கள்ல ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இந்த பிரபஞ்சம் எதிலேயிருந்து தோன்றியது?!
நல்லா கவனியுங்க. சோத்துக்கு உழைச்சு, செத்து, சுண்ணாம்பாயி இதோ, என் முன்னால உக்காந்துக்கிட்டு இருக்காங்கள்ல, இவர்களுக்கு இதுவா பிரச்சனை? பிரபஞ்சம் எதிலே இருந்து வந்தது எதுல இருந்து வந்தா எனக்கென்ன? உழைப்புல இருந்துதான் எல்லாம்வர முடியும். மனிதனுடைய உழைப்பு மட்டும் இல்லையென்றால் மலை மலையாக இருக்குமே தவிர, மலையை குடைந்து தள்ளி பாதையை அமைக்க மனிதனின் உழைப்பு சக்தியால் தான் முடியுமே தவிர வேறு எதனாலும் முடியாது. கடல் கடலாகத்தான் இருக்குமே தவிர மனிதனின் உழைப்பு சக்தி சேராதவரை கடலின் சொத்து கரைக்கு வராது. ""மச்சாவதாரம் எடுத்த சிறீமன் மகாவிஷ்ணுவே நாராயண பெருமாளே, வராலு மீனே. நீயே கரைக்கு வா, நீயே கரைக்கு வா, நீயே கரைக்குவா''ன்னு இன்னிக்கெல்லாம் உடுக்கு சிலம்படி மவனெ. ஒரு வரால் குஞ்சு கூட வராது, இல்லியா?
மனித உழைப்பு சேராவிட்டால் ஒன்றுமே மாறாது; நடக்காது; வாழ்க்கைக்கு உதவாது என்று தெரிந்து வைத்திருக்கிற உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஆரண்யகங்கள் என்ன சொல்கிறது என்றால், இந்தப் பிரபஞ்சம் எதிலேயிருந்து வந்தது? ஒருத்தன் சொன்னான் பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. நல்லா கவனிச்சீங்கன்னா புரியும். கொஞ்சம் கடினமான செய்திதான் இது. பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது. பக்கத்துல ஒருத்தன் நின்னான். இவன் சொக்காய புடிச்சு, கோமணத்த புடிச்சு இழுத்து, நீரு எதுல இருந்து வந்தது; அப்புறம் பிரபஞ்சம், நீரில இருந்து வந்ததுன்னா, நீரு எதுல இருந்து வந்தது. பக்கத்துல இருந்தவன் ஏதாவது ஒண்ணு சொல்லிட்டு போவனுமில்ல, நீர் நெருப்பிலே இருந்து வந்ததுன்னு அவன் போயிட்டான்.
இவரு ஒரு ஆரண்யக தத்துவ ஞானி. முதல் ஞானி பிரபஞ்சம் நீரிலே இருந்து வந்தது என்றார். பக்கத்துல இருந்தவர் கேட்டார் நீர் எதுல இருந்து வந்ததுன்னு? நீர் நெருப்புல இருந்து வந்ததுன்னார். நெருப்பு எதுல இருந்து வந்ததுன்னு, பக்கத்துல இருந்தவன் சொக்காய புடிச்சு இழுத்தான். அவன் சொன்னான் கருமுட்டையிலேயிருந்து வந்ததுன்னு. இவங்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பறதா, இல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரியை இங்கேயே கொண்டு வந்து இவங்களை அமுக்கிறதா? இதெல்லாம் ஒரு தத்துவமாம். இது என்னா மசுருக்கு உதவும்.
உழைக்கும் மக்களுக்கு, கஞ்சிக்கு வழியில்லாம செத்துக்கிட்டிருக்கிறவங்களுக்கு, காவிரியில தண்ணி வராம சம்பா பயிர் கருகிக்கிட்டு இருக்குதேன்னு வயிறெரிஞ்சுகிட்டு இருக்கிற விவசாயிக்கு, ஊராரின் மானத்தை மறைக்க, நெசவாளி, துணியை தயாரித்து கொடுத்துவிட்டு கஞ்சிக்கு செத்துக்கிட்டிருக்கிறவங்களுக்கு ஒரு கட்சிகாரங்க சொன்னாங்க, நாங்க கஞ்சி ஊத்தறம்னாங்க. இன்னொரு கட்சிகாரங்க சொன்னாங்க நாங்க பிரியாணி போடறம், முட்டை பிரியாணின்னாங்க. கஞ்சி ஊத்தனவங்க, 1,000 ரூபாய்க்கு கஞ்சி காய்ச்சி வைத்து, அதை ஊத்தற நிகழ்ச்சிக்கு 50,000 ரூபாய்க்கு போஸ்டர் அடிச்சாங்க. ஆயிரம் ரூபாய்க்கு கஞ்சி காய்ச்சி 50,000 ரூபாய்க்கு போஸ்டர் அடிச்சு 3 லட்ச ரூபாய்க்கு விழா ஏற்பாடு பண்ணி, அதுவும் பொறுக்காத போலீசு உதைச்சு துரத்தினாங்க.
இன்னொரு பக்கம் முட்டை பிரியாணி போடறான். தோழர்களே! தொழிலாளித் தோழர்களே! உழைக்கும் பெருமக்களே! நீங்கள் என்ன வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இங்கு வந்தவர்கள் யாரும் வேறு ஒரு வர்க்கமும் இல்லை உழைக்கும் வர்க்கம் தான் இங்கு வரும். டாட்டா, பிர்லா, டால்மியா, கோயங்கா, சிங்கானியா, ஐ.எஸ்.டி இராமமூர்த்தி, செட்டியார் எல்லாமா முன்வரிசையில் உட்கார்ந்து இருக்கப் போறாங்க. இதெல்லாம் உழைக்கற கூட்டம். வர்க்கம், நம்முடைய ஒரே வர்க்கம்தான். ஆனால் நீங்கள் எந்தச் சார்புசிந்தனை உடையவர்களானாலும் தயவு செய்து யோசியுங்கள். நெசவாளியை ஒரு தேசம் பட்டினி போட நினைக்கிறதென்றால் அந்த தேசம் நிர்வாணத்தை நேசிக்க ஆரம்பித்து விட்டதாக அர்த்தம்.
இவ்வளவு பிரச்சனையில அழுதுகிட்டிருக்கிறோம். எனக்கு 17 வயசிருக்கும் போது எங்கத் தம்பிக்கு 12 வயசிருக்கும்போது எங்க அம்மா கூப்பிட்டாங்க. ""டேய் வீட்ல பணக்கஷ்டமா இருக்குதுடா கண்ணு''ன்னாங்க. நான் சின்னப்பையன் 17 வயசு. என் தம்பி அதைவிட சின்னப்பையன் 12 வயசு. எங்களுக்கு என்ன தெரியும்? ""என்னம்மா பண்றது''ன்னு கேட்டோம் நாங்க ரெண்டு பேரும். ""என்னடா பண்றது? பணக்கஷ்டமா இருக்குது வேலைக்குப் போங்கடா''ன்னாங்க, எங்கம்மா. படிப்பறிவில்லாத எங்கள்தாய். தறி கணக்குகூட கரிக்கோடு போட்டு எழுதறவங்க. படிக்காதவங்க எங்கம்மா. அவங்க சொன்னாங்க. பணக்கஷ்டமா இருக்குது வேலைக்குப் போங்கடான்னாங்க. அந்தப் பணக்கஷ்டம் என்பதை பொருளாதார நெருக்கடின்னு டிரான்ஸ்லேசன் பண்ணி கூட சொல்லத் தெரியாத படிக்காதவங்க எங்கம்மா, ஆனா இப்ப இருக்கறவங்க என்னங்கறாங்க. பொருளாதார நெருக்கடி வந்து விட்டது. பணக்கஷ்டம். இதுக்கு இப்ப என்ன தீர்வு சொல்றாங்கன்னா வேலையை விட்டுப் போங்கடாங்கறாங்க. எங்கம்மா வேலைக்குப் போங்கடான்னுச்சி. பணக்கஷ்டமா இருக்குது. வேலைக்குப் போங்கடான்னுச்சி எங்கம்மா. இப்ப இருக்கிறவங்க ரொம்ப படிச்சவங்க பிரெசன்டேசன் கான்வென்ட்ல கிராஜிவேட்டு. அதனால வேலையை விட்டுப் போங்கடாங்கறாங்க. பொருளாதார கஷ்டத்தை தீர்க்கறதுக்கு. இப்போ கஷ்டத்திலே அவஸ்த பட்டுட்டிருக்கிற நம்பளுக்கு ஆரண்யகம் என்னா உதவும்னு கேட்கறேன்.
நாலு வேதமும் இன்னான்னு சொல்லிப்புட்டேன். ஆரண்யகம் என்னான்னு சொல்லிப்புட்டேன். அதுக்கப்புறம் உபநிடதம். ஆரண்யகம் என்பது இதான். நெருப்பிலேருந்து வந்ததா, நீரிலே இருந்து வந்ததா? வெங்காயத்திலேயிருந்து வந்ததா? வெள்ளப்பூண்டிலிருந்து வந்ததா? எதுலேயிருந்து வந்தா எங்க மசுருக்கு என்ன? பிறப்புக்கு முன்னால் இருப்பதைப் பற்றிக் கவலைப்படும் உத்தேசம் இங்கு எவருக்கும் இல்லை. உழைக்கும் வர்க்கத்துக்கு. இறப்புக்குப் பின்னால் நாங்கள் என்ன ஆகப் போகிறோம் என்கிற கவலை எங்களுக்கு இல்லை. பிறப்புக்கு முன்னாலோ, இறப்புக்குப் பின்னாலோ நாங்கள் எந்த இழவாய்ப் போனாலும் இருக்கும் காலத்தில் உழைப்பை நம்பி வாழுகிற நாங்கள் உத்திரவாதமான வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் அல்லவா? அதற்கு உத்திரவாதம் தராமல் டகுள்பாச்சி வேலை பண்றதுக்குப் பேர்தான் ஆரண்யகம். அதுக்கு அப்புறம் உபநிடதங்கள்.
உபநிடதத்திலே பெரிய கேள்வி. பிரம்மம் வேறா? ஆன்மா வேறா? ரொம்ப முக்கியம். தஞ்சாவூர்ல அரிசி விலை ஏறிப் போச்சு, பருப்பு விலை ஏறிப் போச்சு ஏன் ஏறிப்போச்சின்னு கவலைப்பட வந்தா இந்துவே முன்னணிக்கு வா! இந்து முன்னணிக்கு வான்றானே எதுக்கு வரணும் நானு. உன்னுடைய உபநிடதம், உன்னுடைய ஆரண்யகம் அதற்கு முன்னால் நான்கு வேதமும் பிரச்சனை எதைத் தீர்க்கும்? தயவு செய்து யோசிங்க. நம்ம பிரச்சனை எதைத் தீர்க்கும் உபநிடதம்? பிரம்மம் வேறா ஆன்மா வேறா என்று ஆராய்ந்து பிரம்மம் வேறல்ல, ஆன்மா வேறல்ல. பிரம்மம்தான் ஆன்மா, அதைத் தெரியாமல் நடுவிலே அவித்யா குறுக்கே கோடு போட்டிருக்கிறது இதான் உபநிடதச் சாரம்.
உபநிடதம் என்ன சொல்கிறது என்றால் மொத்தம் 108 உபநிடதம் இருக்கிறது. அதில் 18 பிரதானமான உபநிடதங்கள் ஒன்றை ஒன்று முரண்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படி முரண்படுகிற இந்த உபநிடதங்கள் இந்து தத்துவ மரபு என்று சொன்னால் அது எங்களுக்கு இல்லை. எங்கள் இந்திய மரபில் அதற்குத் தேவையும் இல்லை. அது எங்களுக்குத் தேவை இல்லை என்கிறோம். சரி, உபநிடதங்கள் இப்படி போச்சு. அதுக்கப்புறம் சாஸ்திரங்கள். ஆறு சாஸ்திரங்கள். இப்பொழுது, உழைக்கும் தோழர்களும், தோழிகளும் கொஞ்சம் கூர்மையாய் கவனியுங்கள், சாஸ்திரம், சாஸ்திரம் என்று சொல்றானே, எது நமக்கு இவன், சாஸ்திரம் என்று சொல்லியிருக்கிறானென்றால், ஆறு சாஸ்திரமும் சமம். நீங்கள் யாரை வேண்டுமானாலும், பார்ப்பன, பண்டித சாமவேதி, யசூர்வேதி, விஷிஸ்டாத் வைதியை கூடக் கேளுங்கள், தஞ்சாவூர்ல தான் நிறைய பேர் இறைஞ்சி கிடப்பாங்க. எவனையாவது பிடிச்சி கேட்டுப் பாருங்க, ஆறு சாஸ்திரம்னு சொல்றீங்களே அப்படீன்னா என்னான்னு கேட்டுப்பாருங்க. பத்திரிக்கையாளர்கள் தயவு செய்து கேளுங்கள். பத்திரிக்கையில் இந்த பெரியார்தாசன், இந்த கேள்வியை கேட்டான் என்றே கேளுங்கள். எந்தப் பார்ப்பன, வித்யாபூஷண, விதாரண, வைத்யா ஆசாரண, சாஸ்த்ர, மூத்ர, எந்த பாப்பானாவது பதில் சொல்வானா பார்க்கலாம்.
எது ஆறு சாஸ்திரம்? கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், விபரீதமான அரசியல் தத்துவம். அது ஒரு சாஸ்திரம். கௌடில்யரின், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், பிற்காலத்திலே 1542 வாக்கிலே இத்தாலியிலே, மாக்கியவல்லி என்பவன் எழுதிய பிரின்ஸ் என்கிற விபரீதமான, கொடுங்கோல் அரசியலுக்கு ஆதாரமாக எழுதப்பட்ட நூல்தான். இந்த தேசத்தில் அலகாபாத் கோர்ட்டிலே, சின்ஹா என்பவர், இந்திராகாந்தியை நாளையிலிருந்து, நீ பிரதமருமில்லை, வெங்காயமுமில்லை என்று தூக்கியடிச்சவுடனே அன்றைக்கு இரவு அந்த அம்மா, கொடுங்கோன்மையாக, மக்கள் விரோதமாக எமர்ஜென்ஸி என அறிவித்து, எல்லா கிழவனையும், 60 வயதுக்கு இருக்கிற எந்த கிழவனா இருந்தாலும், அது மொரார்ஜிதேசாயா இருந்தாலும் சரி, சரண்சிங்கா இருந்தாலும் சரி, பெருந்தலைவர் காமராசராக இருந்தாலும் சரி, எல்லாக் கிழவனையும் உள்ள போடுன்னாங்களே அதுக்கு ஐடியா உனக்கு எப்படியம்மா வந்ததுன்னு பி.பி.சி.இண்டர்வியூ ஒண்ணுல கேட்டபோது, அந்தம்மா சொன்னாங்களே அன்னைக்கு ராத்திரி இந்த கேசுல தீர்ப்பு வந்தவுடனே நான் ரொம்ப சோர்ந்து போயி மாக்கியவல்லியோட பிரின்ஸ் படிச்சேன் அதுலதான் ஐடியா கெடச்சுதுன்னு சொன்னாங்களே.
அந்த மாக்கியவல்லிக்கு மாமாதான் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம். கொடுங்கோலனுக்கு ஆதரவாக எழுதப்பட்ட விபரீத சாஸ்திரம் அது. அது ஒரு சாஸ்திரம். இது நம்ம இந்திய மரபா? இப்ப இருக்கிற இந்தியனும் சரி, இதுவரைக்கும் வாழ்ந்த இந்தியர்களும் சரி, எந்த இந்தியர்களுக்கு இதிலே உடன்பாடு. மொகலாயர்களால் ஆளப்பட்டவர்களுக்கு உடன்பாடா? நம்ப வரலாற்று புத்தகத்திலே படிக்கிறோம், பிள்ளைகளுக்கெல்லாம் கற்றுத் தருகி÷றாம். ஏன் கற்றுத் தருகிறோம் என நமக்கும் தெரியறதில்ல, ஏன் கத்துக்குறோம் என அவங்களுக்கும் தெரியறதில்லை.
1526இல் பாபர் வந்தார். வந்தா வந்துட்டு போறார். நாம என்ன பண்ண முடியும். நாம லெட்டர் போட்டு கூப்டோமா அவங்கள. அவரு வந்தாரு. அத நாம பெருசா படிக்கிறோம், 1526இல் பாபர் வந்தார் அவருக்குப் பின் அவர் மகன் ஹிமாயூன் ஆட்சிக்கு வந்தார். இறந்த பிறகு அக்பர் ஆட்சிக்கு வந்தார். இதுவரைக்கும் நல்லா கவனிச்சு பாருங்க வேறு ஏதாவது சொல்லிருக்கிறோமா? இதெல்லாம் வெறும் நேம்லிஸ்ட். ஸ்கூல்ல அட்டனன்ஸ் எடுக்கற வாத்தியாரு இதே வேலையத்தான் செய்றாரு, மணிமேகலை வந்தாச்சு மலர் விழி வந்தாச்சு, சின்சாமி வந்தாச்சு, பெரியசாமி வந்தாச்சு வெறும் நேம்லிஸ்ட், இது எங்கடா இருந்து வந்துச்சு.
வரலாற்று முறைன்னு பார்த்தால், காலைல சுப்ரபாதம் பாடறாங்களே, நல்லா கேட்டு பாருங்க, சனிக்கிழமை காலைல ரேடியோவுல கீச்சுக்கினு ஆடுதே, அத கேட்டுபாருங்க, ""ஸ்ரீபத்மநாப புருசோத்தம வாசுதேவ, வைகுண்டநாத ஜனார்த்தன சக்ரபாணி ஸ்ரீமத் ஜகந்நாத பாரிஜாத ஸ்ரீ வேங்கடாசல பதே தவசுப்ரபாதம்.'' அருள் இன்னமோ பொழியுதாம் ரேடியோவில கூர்ந்து கவனிச்சா நல்லா இதென்னமோ நம்மாளுக்கு ரொம்ப புரிஞ்சுட்ட மாதிரி நாமகாரு இப்டி இப்டி போட்டுக்குறாரு. என்ன புரிஞ்சுது ஒனக்கு? புரியும். வெறும் நேம்லிஸ்ட். அட்டடென்ஸ் லிஸ்ட் கடைசியா தவசுப்ரபாதம். ஸ்டேண்டப் ஆன் தி பெஞ்ச்னு அர்த்தம். எழுந்துடுறாப்பான்னு அர்த்தம். இது இன்னான்னே தெரியாம தொட்டுத் தொட்டு கும்பிட்டுகினுகிறான் டேப் ரெக்கார்டரை நம்மாளு. இதே முறைதான் இந்த வரலாற்றில இருக்குது. 1526ல பாபர் வந்தாரு. அவரு மகன் வந்தாரு, வெங்காயம் வந்தாரு, வெள்ளபூண்டு வந்தாருன்னு. வரலாறு என்பது என்ன என்று கார்ல் மார்க்ஸ்தான் மிகச் சரியாக சொன்னார்.
மன்னர்கள் செய்த போர்களும் அவர்கள் விதித்த வரிகளும் ஆடிய அந்தரங்க விளையாட்டுகளும், கட்டி வைத்த கோட்டைகளும் மட்டும் அல்ல வரலாறு. மனிதர்கள் வர்க்கங்களாகப் பிளவுபட்டு வர்க்கங்களுக்கு இடையே நடந்த மோதல்தான் வரலாறு. இந்த வரலாறு நமக்குத் தெரியக்கூடாதுன்னுதான் இந்த பிலிம் காட்றது. இப்ப தோழர்களும் தோழியரும் பாடறாங்களே நாமக்கட்டி ஆளப்போகுது உசாருன்னு இந்த நாமக்கட்டி வந்ததுன்னா நமக்கு வரலாறே இந்த வரலாறுதான். எந்த வரலாறு ? பாபர் வந்தாரு. அவர் மகன் ஹிமாயூன் வந்தாரு. வந்தா வந்துகினு போறாரு. நாம என்ன பண்றது. உண்மையான வரலாறு இது இல்லை. வரலாறு மக்கள் வரலாறாக இருக்க வேண்டும். மக்கள் சந்தித்த பிரச்சனைகளின் வரலாறாக இருக்க வேண்டும். மக்கள் போராடிய போராட்டங்களின் வரலாறாக இருக்க வேண்டும் என்றுதான் அறிகிறோம். இப்ப இந்த கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் விபரீத அரசியல் என்று சொன்னேன். இரண்டாவது சாஸ்திரம் மனுவினுடைய சாஸ்திரம். இது அதைவிட விபரீதம். அது சமுதாய சாஸ்திரம்.
சமுதாயத்திலே கீழ்சாதிக்காரன் இப்படி இருப்பான். மேல்சாதிக்காரன் இப்படி இருப்பான். புருச சூக்தம் என்று ஒன்றை இணைத்து தலையில் பிறந்தான், கால்ல பிறந்தான், தோள்ல பிறந்தான், இடுப்பில் பிறந்தான்னு சொல்லிக்கிட்டிருக்கீங்களே! மக்களைப்பிரித்து வைத்து அவர்களை ஏணிப்படிகளாய் கீழிறக்கி வைத்து பார்ப்பானுக்கு மேல பெரிய சாதி இல்லை. சக்கிலியன் என்று சொல்லப்படுகிற அருந்ததியனுக்குக் கீழே சின்ன சாதி இல்லை. இடையில் எந்த சாதியும் சமம் இல்லை என்ற ஏற்பாட்டைச் செய்ததுதான் மனு சாத்திரம் அது இந்திய தத்துவ மரபா? இந்திய மண்ணில் உழைத்துக் கொண்டிருக்கிற உழைப்பாளியே உன்னுடைய தத்துவ மரபா அது? இல்லை. இல்லை. இல்லவே இலலை.
அப்போ கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் சொன்னேன். மனுவினுடைய சமுதாய சாஸ்திரம் சொன்னேன். மூன்றாவது வாத்யாய அண்ணனுடைய காம சாஸ்திரம். காம சூத்திரம் என்று சொல்வாங்க அதை. அது சாம வேதத்தில இருக்கிறதுக்கு விளக்க உரை. இலக்கணம் அது. இலக்கியம் இது. இதுலதான் பத்துபேரை என்னா பண்றது அஞ்சு பேரை என்னா பண்றது, பின் பக்கம் எப்படி பண்றது, முன்பக்கம் எப்படி பண்றதுன்னு கேவலமா எழுதி வச்சிருக்கிறான்.
இந்திய தத்துவமரபா அது. காதலிக்கும் பொழுது காதலனும், காதலியும் பெரிய கல்வி, இலக்கணம், இலக்கியம், எல்லாம் படிக்கணும்னு நான் சொல்லல. சாதாரணமா கிராமத்துல காதல் வரவுங்க காதலிக்கும் போது பாத்தீங்கன்னா, காதலியை, சினிமாவுல காதலியை எப்படியெப்படியோ காட்றாங்க. ஐ லவ் யு, ஐ லவ் யு என்கிறான். எவனாவது அப்படி சொல்வானா, எங்க வீட்டு அல்சேசன் கூட அப்படி சொல்லாது. இவ்ளோ கத்து கத்துவாளா எவளாவது. கிராமத்துல லவ் பண்றது நாம பாத்து இருக்கறோம். அரசல், புரசலா காதல் நடக்கதான் செய்து. எல்லா ஊரிலயும் அந்தம்மா வந்து நிக்கும். அவங்கிட்ட சொல்லும். ""நா ஒண்ணு சொல்லணுமே'' ""சொல்லுமா!'' இவரு. ரொம்ப ஆசையா கேப்பாரு. சொல்லப் போறா லவ் பண்ற மேட்ருன்னு. அப்படியே ஜொல்லுட்டுக்கினு நிப்பாரு. ""சொல்லுமே, சொல்லு''. வேர்த்து, விறுவிறுத்து கைநடுங்கி, கால்நடுங்கி ஒண்ணுல்ல நாளைக்கு சொல்றன்''னுட்டு போயிடும். இது காதல் இதுதான் நம்ம மரபு.
இன்னிக்கு வரைக்கும் இந்த மரபு உயிரோடு இருக்குது காதல்ல. ஆனால் இவங்க காதல், காம சூத்திரத்துல, வாத்ஸாயனர் எழுதிய காம சூத்திரத்துல முன்னால எப்படி செய்யறது, பின்னால எப்படி செய்யறது, வாயில எப்படி செய்யறது, தொப்புல்ல எப்படி செய்யறதுன்னு எழுதி வச்சிருக்கிறான். த்தூ.. நாய்ங்களா, இதுவா இந்திய தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லை. இது இந்து தத்துவ மரபு, பார்ப்பன தத்துவ மரபு, சங்கராச்சாரியானின் தத்துவ மரபு, இராமகோபாலனின் தத்துவ மரபு. உழைக்கும் பாட்டாளியான என்னுடைய தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லவே இல்லை. இதெப்படி என் தத்துவ மரபாகும். என் அம்மாவுக்கு தெரிய என் மனைவி மேலேயே கை வைக்க மாட்டேன். இது என்னுடைய மரபு. அவனுடைய வாத்ஸாயனுடைய காம சூத்திரத்துல, அம்மாவே விளக்கு புடிக்கறா. இதுவா என்னுடைய மரபு. இல்லை. மூணுசாத்திரம் முடிஞ்சுது. அப்புறம் என்னடா மூணுசாத்திரம். மீதி மூணு என்னாடான்னா, இதுவரைக்கும் வாய மூடிக்கினு இருந்துட்டு இப்பதான் ஆரம்பிக்கிறாங்க,
ஆயுர்வேத சாஸ்திரம்னு, பேரறிஞர் அண்ணாவுக்கு, புற்றுநோய் வந்ததே அப்ப அமெரிக்கா அனுப்பனாங்களே அப்ப இங்க இருந்த ஆயுர்வேதிகளெல்லாம் என்ன புடிங்கிகிட்டு இருந்தாங்க? கேப்பனா கேக்கமாட்டனா கோவம் வந்தா, கேப்பேன். இன்னா அநியாயம் இது அப்போ எங்க போயிருந்தீங்க. இப்பகூட மத்திய மந்திரி முரசொலி மாறனுக்கு உடம்பு சரியில்லை. போவ வேண்டியதுதானே? ஆயுர்வேதியெல்லாம் அப்ளிகேசன் எடுத்துக்கிட்டு. வாஜ்பாய்கிட்ட போய் சொல்ல வேண்டியதுதானே? நாங்க ஆயுர்வேதத்திலேயே தீத்துடுவோம்னு அவங்களுக்கும் தெரியும், வாஜ்பாய்க்கும் தெரியும். இவங்க ஆயுர்வேதத்துல ஆள தீக்க முடியுமே ஒழிய நோயை தீக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரியும்.
அதனாலதான் விளக்கெண்ணெய் வித்துக்கிட்டிருக்கிறானுங்க. பேஸ்ட் சாதாரண பல் துலக்கிற பேஸ்டுகூட ஆயுர்வேத முறைப்படி செய்ததுன்னு ஃபிலிம்காட்டிக்கினு இருக்கறானுங்க அஞ்சு வருசமா, புரியுதா உங்களுக்கு. அது எங்கள் மரபு இல்லை. எங்கள் மரபு கிராமத்துல சித்தர்களின் மரபு எதையும் கொஞ்சம் புரியறதுக்காக பிற்காலத்துக்கு வரதுக்காக கொஞ்சம் மறைபொருளா எழுதிவச்சுட்டு போயிருக்காங்க. பிள்ளையார் பொம்மையை வச்சுகிட்டு, பெரியவங்கள்லாம் கிராமத்துல பாட்டு பாடிக்கிட்டிருப்பாங்க.
""வாக்குண்டாம், நல்லமனமுண்டாம், மாமலரால் நல்நோக்குண்டாம் துப்பார் திருமேணி தும்பிக்கையான் பாதம், தப்பாமல் சார்வார் தமக்கு.'' இது விநாயகருக்கு பாட்டுன்னு நிறைய பேர் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனால் கிராமத்துல இருக்கிற எல்லாருக்குமே இவ்விசயம் தெரியும். எவன் ஒருவனுக்கு, திக்கு வாய் இருக்கிறதோ, தெளிவாய் பேச முடியவில்லையோ, எவன் மனம் சித்த பிரமை அடைந்திருப்பது போல் இருக்கிறதோ. எவனுடைய கண்பார்வை மங்கலாக இருக்கிறதோ இந்த மூன்றுக்கும் மருந்து சொல்லப்பட்டிருக்கிறது இந்த பாட்டிலே. வாக்குண்டாம், நல்ல மனம் உண்டாம், மாமலரால் நோக்குண்டாம் யாருக்குத் தெரியுமா? துப்பார்த் திருமேனி அதுக்கு பேரு இந்த குப்பமேனின்னு சொல்றமே. குப்பமேனி இலைமேல இன்னிக்கே குப்பை எதாவது கொட்டிப்பாருங்க. காலையில எழுத்துபோய் பார்த்தீங்கன குப்பை அதுமேல இருக்காது.
அதனாலதான் அது குப்பைமேனின்னு சொல்றது. அது தன்னைத்தானே சிலிர்த்துக் கொள்கிற தன்மையுடைய ஒரு தாவரம் என்பதாலே அது மேல எந்த குப்பையை போட்டாலும் தள்ளி விட்டுடும். அதனால அதன் பேர் துப்பார்த்திருமேனி. தூய்மையாய் இருக்கிற மேனியை உடையது என்று பெயர். துப்பார்த்திருமேனி. நம்மாளு பேர் வச்சிருக்கறான் குப்பை மேனின்னு. அந்த துப்பார்த் திருமேனி, தும்பை தும்பைப்பூ பார்த்திருப்பீங்க. அந்த தும்பைப் பூவையும், துப்பார்த்திருமேனி இலையையும் அந்த குப்பைமேனி இலையையும் கையாந்தரைன்னு ஒரு வேர் இருக்கிறது. அந்த கையாந்தரை வேரையும் இந்த மூன்றையும் கசாயம் வெச்சி குடிச்சா திக்குவாய்க்காரனுக்கு திக்குவாய் திரும்பி நல்ல பேச்சு வரும். இதுக்கு யாரும் சாட்சி தேவையில்லை. உங்கள் முன்னால் பேசிக் கொண்டிருக்கும் பெரியார்தாசனே சாட்சி. பன்னிரண்டு வயது வரை திக்குவாய்க்காரனாக இருந்தவன். பன்னிரண்டு வயது வரை திக்குவாய்க்காரனாக இருந்தவன் இன்று தமிழகத்திலேயே சிறந்த பேச்சாளர்களிலே ஒருவனாகப் பெயர் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றால் இந்த துப்பார்த்திருமேனி, தும்பை, கையாந்தகரை சிகிச்சை எடுத்துக் கொண்டதால்தான். இதுதான் எங்கள் மரபே தவிர ஆயுர்வேதம் எங்கள் மரபில்லை. அண்ணாத்த அது இந்து மரபு.
இப்ப வாஸ்து சாஸ்திரம்னு புதுசா சேர்த்திருக்கிறான் இதுக்கப்புறமும் கூட ஐந்து சாஸ்திரம்தான் வந்திருக்கிறது ஒண்ணு மிஸ்சிங். 108 புராணங்கள் இரண்டு இதிகாசங்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் விளக்கவே வேண்டியதில்லை. 108 புராணமும் ஆபாசம். அறிவுக்குப் பொருந்தாதது. பகுத்தறிவுக்குப் பொருந்தாதது. மூட நம்பிக்கை உடையது. இராமாயணம் இதிகாசம்னு உங்களுக்குத் தெரியும். எங்க ஊர்ல சாதாரண கேசு; டெய்லி நடக்குது. இங்க வந்திருக்கிற எல்லா முன்னால உட்கார்ந்திருக்கிற எல்லா மக்களுக்கும் தெரியும். உழைக்கும் மக்களுக்கு நம்ம ஊர்ல அன்னாடம் நடக்கற கேசு. முனுசாமி பொண்டாட்டிய கந்தசாமி இஸ்துகுனு போயிட்டான்.
இதுக்கு என்னா பண்ண முடியும்? போலீசுல போயி கம்ப்ளைண்டு கொடுக்கலாம். இல்ல ஆள் அம்பாரி இருந்தால் சொந்தகாரங்கள திரட்டிகிட்டுப்போயி, முனுசாமி பொண்டாட் டிய கந்தசாமி இஸ்துகினுபோனா கந்தசாமிகிட்ட சின்னசாமி சண்டைபோட்டு இழுத்துகினு திருப்பி கொண்டாந்து வைச்சிருக்கலாம். இதான் நடக்குது. அன்னாடம் போலீசு ஸ்டேசனிலே கேசு புக்காவுது. இதுக்காக முனுசாமிக்கு கோயில்கட்ட முடியுமான்றதுதான் என்னுடைய கேள்வி. முனுசாமி பொண்டாட்டிய கந்தசாமி இஸ்துக்குனு பூட்டாம்பா. அத சின்னசாமி பாத்துகினு வந்து சொல்லிட்டான். முனுசாமி போய் சண்டை போட்டோ, பஞ்சாயத்து பண்ணியோ மீட்டுகிட்டு வந்துட்டான். இதுக்காக முனுசாமிக்கு கோயில் கட்ட முடியுமா?
இப்ப கவனிங்க. இராமன் பொண்டாட்டிய இராவணன் இஸ்துகினு போயிட்டான். அத அனுமாரு பார்த்துட்டு வந்து சொல்லிட்டான். இதுக்காக ஆள தெரட்டிகிட்டு போயி இராமர் மீட்டுகிட்டு வந்தாராம். இதுக்கு போய் கோயில் கட்டுன்றான். நான் இன்னா சொல்றன்னா நான் இராமனுக்கு கோயில் கட்டாதேன்னு சொல்லல. முனுசாமிக்கு எப்ப கோயில் கட்ட போற? ஊருக்கூரு கோயில் கட்டனுன்றன் நானு. இந்த கேசு நிறைய இருக்குது. ஏகப்பட்ட இராமாயணம் ஏகப்பட்ட மகாபாரதக்கதை நடந்துக்கினு இருக்குது. அது இந்திய தத்துவ மரபு இல்லை.
தத்துவம் என்பது தகவு என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது வாழ்க்கை நெறி என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது சிந்தனையின் முடிவு என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது சிந்தனையின் தெளிவு என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது செயல் ஊக்கம் என்று புரிந்து கொண்டால், இந்து தத்துவ மரபு இந்திய மக்களுக்கு ஏற்ற தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லவே இல்லை. உழைக்கும் மக்களான நம்முடைய தத்துவ மரபு அல்ல, இந்து தத்துவ மரபு.
மீண்டும் இந்திய தத்துவ மரபை விளக்குவதற்கு முன்னால் இதுவரை சொன்னதை சுருக்கிப் பார்த்துக் கொள்ளலாம். நான்கு வேதங்களும் நம் மரபு இல்லை. ஒப்புக் கொள்கிறவர்கள் கையொலி எழுப்புங்கள். நம்முடைய மரபு இல்லை. நான்கு வேதங்களும் நம்முடைய மரபு இல்லை. (கரவொலி அதிர்கிறது). ஆரண்யகங்கள் நம்முடைய மரபு இல்லை. இல்லையா? உபநிடதங்கள். பிரம்மமும் ஆன்மாவும் வேறா? ஒன்றா? பெரிய புடுங்கற வேலை இது. எங்களுக்கு, போட்டது முளைக்க மாட்டங்குது. காவிரியில தண்ணி வரமாட்டங்குது. உழைச்சதுக்கு கூலி கிடைக்க மாட்டங்குது. உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை, இருக்க இடமில்லை, படிக்க படிப்பில்லை, படிச்சவனுக்கு வேலை கிடைக்கல.
வேலை கெடச்சவனுக்கு கூலி போதல, கூலி வாங்கறவனுக்கு வாங்கற மாதிரி வெலவாசி இல்ல. நொந்து நூடுல்சா ஆகிப் போயிருக்கிறோம். இதில் பிரம்மம், ஆன்மா, வேறுவேறா, ஒண்ணு, ஒண்ணா, இந்த உபநிடதம் நமக்கு தேவையா? இந்த தத்துவ மரபு நம்முடையதா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. அப்போ உபநிடதமும் இல்லை. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. சமுதாய சாஸ்திரம், நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. சமுதாய சாஸ்திரம் என்று, ஜாதிபிரித்து உழைப்பவனை பார்ப்பனுக்கு மேல் பெரிய ஜாதி இல்லை, சக்கிலியனுக்கு கீழே சின்ன ஜாதி இல்லையென்று நம்மை பிரித்து வைத்து அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறானே மக்களை பிரித்தாண்டு கொண்டு இருக்கிறானே, இந்த மரபு நம்முடைய மரபா அந்த சமுதாய மனு ஸ்ம்ருதியும், நம்முடைய மரபல்ல, அப்புறம் இந்த சாஸ்திரம், வாத்சாயணரின் காம சாஸ்திரம், செருப்பாலடிப்பாங்க வீட்டுல போய் சொன்னா? வாத்சாயணரின் காமசூத்திரப்படிதான் நீயும் நானும் படுத்துக்க போறோம்னா, தொடப்பக்கட்ட பிஞ்சிடும். இததான் பாட்டெழுதி, சினிமாவுல கூடக் காட்னாங்க. ""வாடி ... நாட்டுக்கட்ட'' உண்மையிலே கிராமத்துல போய் பாடிக் காட்டு. பிஞ்சிடும் துடப்பக்கட்ட. இதெல்லாம் வாத்சாயணர் கம்பெனி பிரைவேட் லிமிடெட். தோழர்களே! தோழியர்களே! இதெல்லாம் நம் மரபு இல்லையென்றால், எது நம்முடைய மரபு?
இவர்களுடைய ஆயுர்வேதமும் நம்முடைய மரபு இல்லையென்றால் பாட்டாளி வர்க்கம், தமிழர்களாய் இருந்தாலும், தெலுங்கர்களாய் இருந்தாலும், மலையாளிகளாய் இருந்தாலும் சரி, குஜராத்திகளாய் இருந்தாலும் சரி, இமாச்சல பிரதேசத்தில் வாழ்பவர்களாய் இருந்தாலும் சரி, உழைக்கும் இந்திய மக்களுடைய சிந்தனையை வளப்படுத்திய, செயலை ஊக்கப்படுத்திய, பயன் அனுபவிப்பைத் திரட்டிய, அவனை வாழ்வாங்கு வாழச் செய்கிற மரபு இந்திய தத்துவ மரபு. இதுவரை நான் விளக்கிய இந்து தத்துவ மரபு இல்லை. அப்ப அது சாங்கியம், யோகம், மீமாம்சம், அடுத்தது ஞாயம், வைசேசிகம், வேதாந்தம், அதற்குப் பிறகு, வேதாந்தத்திலே சில விவகாரம் இருக்கிறது. அது அந்த இடத்திலே வரும்போது சொல்கிறேன். வேதாந்தம்ன்றது எல்லாரும் நெனச்சுக்கிட்டிருக்காங்க. காலடியிலே பிறந்த சங்கரர் சொன்னதுதான் வேதாந்தம்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க.
அவரு சும்மா டுபாகூரு வேதாந்தி, அதை விளக்கி சொல்ல எனக்கு நேரம் இல்லை. நேரம் இருக்கற வரையில் அதை சுருக்கமாகச் சொல்கிறேன். உண்மையாக வேதாந்திகள் வேறு யாரோ இருந்திருக்கிறார்கள். அவரு நம்ம சினிமா டைரக்டர் ஐயா வந்திருக்கிறாரு. தங்கர்பச்சான், அவரு சினிமாவுல ஒரு பழக்கம் இருக்கிறது. யாராவது டைரக்ட் பண்றன்னு புது டைரக்டர் புரடியூசர்கிட்ட போய் கதை சொன்னா இவர அனுப்பிடுவாங்க கதை நல்லா இல்லன்னு. இரண்டு வருசம் பொறுத்து வேறு எவன் பேர்லியோ அந்த கதை வந்திடும். சினிமாவே எடுத்துடுவானுங்க திருட்டு பசங்க. இந்த வேலைய செய்தவருக்குப் பேருதான் சங்கரரு. இந்த டுபாக்கூர் வேலை செய்தவர்ல பர்ஸ்ட் மேன் சங்கரரு. அவர் எங்கியோ இருந்த தத்துவத்தை கிட்நாப் பண்ணிட்டு போயிட்டாரு அதை நான் விளக்கி அந்த இடத்தில் சொல்லுகிறேன்.
அடுத்தது பார்த்தீங்கன்னா இன்னொன்று கேள்விப்பட்டிருக்கலாம். உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். நாதாந்தம், காலாந்தம், போதாந்தம், சித்தாந்தம், வேதாந்தம் என்று ஒரு செட்டிருக்குது. அதை சடாந்தம் என்று சொல் வார்கள். இந்த சடாந்தத்தை ஒன்றிணைத்து அந்த வேறுபாட்டை நீக்கி, சுத்த சன்மார்க்க சங்கம் வைத்த வள்ளலார் சடாந்த சமரச சங்கம் தான் வைத்தார். இந்த சடாந்தம் என்று சொல்லப்படுகிற நாதாந்தம், காலாந்தம், போதாந்தம், வேதாந்தம் என்கிற தத்துவ நெறிகள் நம்முடைய இந்திய மரபை சார்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது மறுபடியும் அங்கு போவோம்.
திருமூலர் சுத்தமான தமிழர். அவருக்கும் பார்ப்பானுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனா ஒரு மயக்கத்தை உண்டாக்குகிறதுக்காக அவரு மூவாயிரம் ஆண்டு வாழ்ந்தாருன்னு ஒரு புருடா உட்டானுங்க. எந்த மனிதனாவது மூவாயிரம் ஆண்டு காலம் வாழ முடியுமா? இனிமேல் வாழலாம். ஒருவேளை மனிதன் வாழுகிற விஞ்ஞானம் அவனுக்கு கை கொடுக்கலாம். மூவாயிரம் ஆண்டு வாழலாம். ஆனால் நேற்று வரை வாழ்ந்தவர்களுக்கு, இன்று வரை வாழ்பவர்களுக்கு மூவாயிரம் ஆண்டு வாழ்வதென்பது முயன்றால் கூட முடியாத காரியம். இந்த வேலை இல்லாத வேலைய ஒருவருசத்துக்கு ஒரு பாட்டுன்னு மூவாயிரம் வருசத்தில மூவாயிரம் பாட்டு எழுதினாராம் திருமூலர். இது அவரை அவமானப்படுத்துற மாதிரி இல்லையா? அவ்ளோ பெரிய கவிஞர். ஒரு வருசத்துக்கு ஒரு பாட்டுதான் எழுதுவார்னா மீதி நாளெல்லாம் என்னா பண்ணுவார். இது திருமூலரையே கேவலப்படுத்துற மாதிரி இல்ல? நாலுவரி பாட்டு எழுதறதுக்கு நம்மாளுங்க சினிமா பாட்டுல கொளுத்தறாங்க அவனவன் உக்கார்ந்து, டேப்பு வந்து சேர்ந்து உடனே பாட்டு எழுதி அனுப்பிட்டு அடுத்த டேப்பை அனுப்பச் சொல்றாங்க. ஸ்பீடு பிரேக்கரே இல்லாம போயிட்டிருக்கிறான் நம்மாளு, பாட்டெழுதுறவன். கம்பரு அவ்ளோபன்னெண்டாயிரம் பாட்டெழுதினார்னா இன்னா அர்த்தம். வேற வேல இல்லன்னு அர்த்தம். அவர் பாட்டுக்கு எழுதிகிட்டே இருந்திருக்கிறாரு. எல்லாம் ஸ்பீடா இருக்கிறாங்க. மாமனாருக்கு கடிதாசி எழுத சொன்னாலே கவிதை கவிதையா எழுதுறாங்க. இந்த நாட்ல போயி ஒரு வருசத்துக்கு ஒரு பாட்டுதான் எழுதினாரு திருமூலர். இது பொய்யில்லையா? ஆக உண்மையை மறைப்பதற்கு, திருமூலரை நாம யாரும் படிச்சிடக் கூடாதுன்னு பண்ணியிருக்கிறான்.
திருமூலர் ஒரு பாட்ல சொல்லியிருக்கிறாரு ""உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயமாம், வள்ளல் பிராணார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே'' என்றிருக்கிறாரு. இது கொஞ்சம் கடுமையான நடையில் இருந்தாலும் எளிதாக புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தால் புரிந்து கொள்ள முடியும். உள்ளம் பெருங்கோயில் என்றால் மனத்தைப்பற்றி சொல்வதற்கு ஒரு செக்சன் என்று அர்த்தம். மனத்தை பற்றிய தத்துவத்தைச் சொல்லுவது சாங்கியம். ஊனுடம்பே ஆலயமாம், உடலை வளப்படுத்திக் கொள்கிற தத்துவம். அதற்குப் பெயர் யோகம். சாங்கியம், யோகம் என்று இரண்டாயிற்று. மூன்றாவது செயல்பாடுகளை சொல்வது ""உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயமாம், தர்க்கம், நியாயம், வள்ளல் பிராணர்க்கு வாய் கோபுர வாசல், வாய் என்பது தர்க்கத்துக்கு குறியீடு, தர்க்க ரீதியாக பேசுவது, நியாயம் என்கிற அந்த தத்துவ மரபைச் சேர்ந்தது அது. வள்ளல் பிராணர்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம், அதுதான் வேதாந்தம் என்பது தெள்ளத் தெளிவது, கடைசியாய் சொல்வது, கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே, கள்ளப்புலனைந்தையும், புலன்களை அடக்கி நம் வசப்படுத்திக் கொள்வது.
அந்த புலன்களை நம்வசப்படுத்தி நடத்தினால் ஒளிமிக்க வாழ்வு பெற முடியும் என்று சொல்வது இதைத்தான் அவர் சொல்லியிருக்கிறாரு. இந்த சாங்கியம், யோகம், மீமாம்சம் என்பது அவர் காலத்தில் இல்லை என்று நினைக்கிறேன். மீமாம்சம் என்பது செயல்களைப் பற்றிய தத்துவம். இப்போது கவனியுங்கள். இந்திய தத்துவ மரபு இந்த ஆளைச் சேர்ந்தது. இது இந்து தத்துவ மரபு இல்லை. அவர்கள் இதை ஏற்பதும் இல்லை. சாங்கியத்தை எழுதியவர் கபிலர். கபிலர் என்பவர் ""பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள'' அழிந்து போன நம்முடைய பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த பெரிய ஞானிக்குப் பெயர் கபிலர். தொல்காப்பியருக்கு முன்னாலேயே வாழ்ந்த பல அறிஞர்கள் இருந்ததால்தான், தொல்காப்பியம் அவராலே எழுத முடிந்தது. அந்த இலக்கணத்தை அவராலே தர முடிந்தது. அப்போ தொல்காப்பியத்துக்கு முன்னால் இங்கே நூற்றுக்கணக்கிலே, ஆயிரக்கணக்கிலே இங்கே எழுத்துக்கள் இருந்திருக்க வேண்டும். அறிஞர் பெருமக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.
அவர்கள் பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதே அந்தப் பகுதியில் அமிழ்ந்து போன அந்த தமிழகத்துக்குரிய அந்த ஞானிதான் கபிலர். கவனியுங்கள், இதில் ஒரு பெரிய வேடிக்கை நடந்தது. சாங்கியம் என்று அதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். எண்ணம் என்ற பொருள் அதற்கு. எண்ணம் என்பது எண்ணுதல் என்பது நினைத்தல் என்று பொருள் அதற்கு. மனம் சார்ந்த விசயம் அது. இதை வடமொழியில் மொழிபெயர்த்தவன் பார்த்து எழுதியவன், தவறா எழுதிக்கிட்டு போய் எண்ணுதல் என்பதை அவன் எப்படி டிரான்ஸ்லேட் பண்ணான்னா, எண்ணுதல் 1,2,3,4,... ன்னு டிரான்ஸ்லேசன் பண்ணிவிட்டான். சாங்கியன்னா, கவனியுங்கள், கொஞ்சம் கடினமான விசயம், சொல்ல முயற்சிக்கிறேன்.
நான் அதை எண்ணுகிறேன். இதை எண்ணுகிறேன், தோழர் மருதையன் ஒன்றை எண்ணுகிறார். நான் ஒன்றை எண்ணுகிறேன். அய்யா ஒன்றை எண்ணுகிறார், நீங்கள் ஒன்றை எண்ணுகிறீர்கள், நினைக்கிறோம் என்று ஒன்று இருக்கிறதே, அதுவும் எண்ணுதல் என்று தமிழில் இருக்கிறது. எண்ணம் 1,2,3,4,...ன்னு எண்றது எண்ணுதல், அது இந்த எண்ணுதல் என்கிற நினைத்தலை எண்ணுதல் இணிதணtடிணஞ்ன்னு மொழி பெயர்த்துக்கிட்டு போயி, சாங்க்யான்னு பேர் வச்சு கபிலான்னு எழுதிக்கிட்டான். இவரு பேரு கபிலா, ""க'' இந்த பெரிய ""பி'' சான்ஸ்கிரிட் ல அவன் ""பி'' போட்டு கபிலான்னு எழுதியிருக்கிறான். ஏன்னா நம்ம ஆளுன்னு தெரியக்கூடாதுன்றதுக்கு. மயிலாடுதுறையை மாயவரம்ன்னு மாத்தினவனுக்கு இது சுலபம்தானே இந்த திருட்டு பசங்களுக்கு இந்த மயிலாடுதுறையிலேயே, மயில் ஆடுதுறைன்னு அழகா இருக்குது பெயரிலே இதைப் போயி மாயவரம்னு மாத்திட்டாங்க.
மாயவரம்னா என்னடான்னு கேட்டா, மயூரம்ன்னா மயில். அந்த மயிருக்கு மயில்ன்னே சொல்லிட்டுப் போறது. மயிலுன்னே சொல்லிட்டு போலாம்ல, இதப் போயி மயூரம்னு டிரான்ஸ்லேட் பண்ணுவாராம். எண்ணத்தை டிரான்ஸ்லேட் பண்ணி எண்ணுதல் என்றாச்சு, எண்ணுதலை இணிதணtடிணஞ்னு போட்டு சாங்க்யான்னு கடைசியில் இப்ப என்னான்றாங்க சாங்க்ய தத்துவம் என்பது இப்பொழுது மறைந்து போய்ட்டதுன்றான். அடப்பாவி! இப்போது மீண்டும் யாரும் தவறாக நினைக்கக்கூடாது, நம்மவர்க்கு இல்லை என்னுடைய சவால், உழைக்கும் வர்க்கத்துக்கு நான் சவால் கொடுக்கல. இந்து தத்துவ மரபு தேவை என்று சொல்கிற எவன் வந்தாலும், என்னுடைய சவால் சாங்கியம் உங்களுடைய இந்து தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லை, அந்த சாங்கியம் முழுவதும் எங்கள் தத்துவ மரபு.
எங்க சகோதரன் தங்கர் பச்சான் இன்று ஒன்பது ரூபாய் நோட்டு என்று சிந்தித்தானே. அந்த கதை எழுதும்போதே பத்து ரூபாய் நோட்டு இருக்கு, அம்பது ரூபாய் நோட்டு இருக்குது, அதுல பாதி கள்ள நோட்டு இருக்குது, அதுவேற விசயம். ஆனால் ஒன்பது ரூபாய் நோட்டுன்னு சிந்திச்சாரு பாருங்க, இந்த சிந்தனை இப்படி மாறுபாடாய் ஒரு விசயத்தை அழுத்தமாய் ஆரவாரமில்லாமல் அதிரடியாய் இல்லாமல் மிகைப்படுத்தாமல், அதே நேரத்தில் புதுமையாய், நவீனமாய், எவனால் எது சொல்ல முடிந்தாலும், அது சாங்கிய தத்துவ அடிப்படையில் சொல்லப்படுவது என்று பொருள். அது படிக்காமலேயே நம் தமிழர்களுக்கு பழக்கமான ஒரு கலை. இது நம்முடைய தத்துவ மரபு. நீ அதை படிக்காமலே சிலசமயம் நாம் யோசிப்போம்.
வீட்டுல கிராமத்துல எல்லாம் பேசுவாங்க, ""நான் நினைச்சன்டா, நீ வந்துட்ட''ன்னுவாங்க என்ன அர்த்தம். சில சமயம் நினைக்காமலேயே நினைச்சன்னு புருடா உடுவாங்க. அது வேற விசயம். ""நான் நினைச்சன்டா நீ வந்துட்ட''ன்னு அதான் சாங்கியம். எண்ணத்தில் அதை வைத்திருக்கிறான் என்று அர்த்தம். கனவுல கூட வந்துருக்குதுப்பா அந்த விசயம் என்பான். பல சமயம் தோணுதுப்பான்னுவான். என்னா அர்த்தம், அதைப் பற்றி இவன் சிந்தித்திருக்கிறான். அது அவனுக்கு தோன்றியிருக்கிறது என்று அர்த்தம். சிந்தனையை ஒழுங்குபடுத்தும் தத்துவ மரபு நமக்குரியது. சாங்கியம் நமக்குரியது. ஆனால் சிந்திக்காமலே சொல்லுவதை ஏற்றுக் கொள் என்று அடம்பிடிக்கும் இந்து மரபு. அது, இந்திய மரபு அல்ல, அல்ல, அல்லவே அல்ல என்பது தான் என்னுடைய கருதுகோள்.
அது இந்து மரபில் நீ சிந்திக்கவே கூடாது. இல்லன்னா, பி.ஏ. பிலாசபி படிச்சிருக்கிற ஒரு ஆளு, தத்துவம் படிச்சிக்கிட்டிருக்கிற ஒரு ஆளு நேரா ஒரு சாமியார்கிட்ட போனானாம். அந்த சாமியார் முன்னால போயி கடவுள நீ பார்த்திருக்கியா? காட்டுன்னானாம். அந்தாளு ஒரு அறை விட்டானாம். இவனுக்கு உடனே வலிச்சுதாம். வலிச்ச உடனே புரிஞ்சிக்கிட்டாராம். ஓ இந்த வலிதான் கடவுள் என்று புரிந்து கொண்டாராம். அடுத்த கட்டம். இந்த சீன் நடந்தா இன்னா செய்வாங்க. எடுத்துகிட்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேர்த்திருப்பாங்க. வலிகடவுளா? அப்போ நல்லா கேட்க மாட்டேன் வாயில கோபம் வந்தா? என்னங்கடா இது வலி கடவுளு, நோவு கடவுளு, நமைச்சலு கடவுளு, அரிப்பு கடவுளு இந்தக் கடவுளை உணர்த்தியவர் இராமகிருஷ்ண பரம அம்சராம். உணர்ந்தவர் விவேகானந்தராம். ரெண்டு பேரையும் ஒரே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில மூணாம் நம்பர் பெட்டுல நாலாம் நம்பர் வார்டுல கட்டிப் போட வேண்டாம். இது என்னா மரபு இது? இதெல்லாமா கடவுளை உணர்த்தும். நம்மாளு கடவுள சிந்தித்து போடுபோடுன்னு போடறான் பாருங்க, அது சாங்கியம்.
மாணிக்கவாசகர் சொல்றாரு. தயவு செய்து கவனியுங்க. மாணிக்கவாசகர் கடவுள் எப்படி இருப்பாருன்னு யோசிக்கிறாரு. அவரு பார்த்த கடவுளை ஏத்துக்கல. நடராஜப் பெருமான் டேன்ஸ் ஆடறாரே அவருதான் கடவுள்னு ஒத்துக்கல. பக்கத்துல சக்தி பராசக்தி உமாதேவி இப்படி இப்படி பெரிய முலை வைச்சிகினு நின்னுகிற மாதிரி சிலை இருக்குதே அதப் பார்த்து கடவுளுன்னு ஒத்துக்கல, பக்கத்துல முருகர் வள்ளி தெய்வானையோட டபுள்ஸ் வைச்சிகினு கீறாரே அதப்பார்த்து கடவுள்னு ஒத்துக்கல. அவராகச் சிந்திக்கிறார். மாணிக்கவாசகர் அவராகச் சிந்திக்கிறார். அது சாங்கியம். சிந்தித்து, தான் சிந்தித்ததை வெளியே சொல்லுகிறார்.
""வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊணாகி, உயிராகி அதுவரை'' வந்துட்டு ஒரு பிரேக் போடறார். வானாகி இருப்பானோ கடவுள், வளியாகி காற்றாகி இருப்பானோ கடவுள்? ஒளியாகி இருப்பானோ? அப்புறம் தான் சந்தேகம் வருது அவருக்கு. அப்படியெல்லாம் இல்ல உண்மையுமாய் இருப்பவனாய் கடவுள் இருப்பானோ? இன்மையுமாய் இல்லாதவனாயும் கடவுள் இருப்பானோ? அதாவது வாரியாருக்கும் இருப்பானோ பெரியாருக்கும் இருப்பானோ என்று அர்த்தம். வாரியாரு இருக்குதுன்னாரு. இவரு இல்லன்னாரு, பெரியாரு. மாணிக்கவாசகர் ரெண்டு பேருக்கும் அல்வா குடுத்தாரு. உண்மையுமாய், இன்மையுமாய், கோனாகி, குடியாகி, யான் எனது என்பவரை கூத்தாட்டு வானாகி, நின்றாயை... இது வரை எல்லாரும் பாடிக்கினு கடைசிவரி வரும்போது என் சொல்லி வாழ்த்துவனே! என் சொல்லி வாழ்த்துவனேன்னு டுபாக்கூர் வேலை பார்க்கிறான்.
இந்த இடத்தில நிறுத்தி கவனிச்சி பார்த்தா இந்திய தத்துவ மரபு எது என்று புரியும். வானோ, மண்ணோ, வையகமோ, வளியோ, ஒளியோ, உண்மையோ, பொய்யோ, கோனோ, குடியோ, எல்லாம் சொல்லிட்டு உண்மையோ இன்மையோ எதுவும் தெரியலடாப்பான்னான். ஆளவுடுன்னு அர்த்தம் இந்தப் பாட்டுக்கு. இல்ல மாணிக்கவாசகருக்கே புரியல. இந்த குச்சி வச்சிருக்கறவன் சங்கரச்சாரிக்கு புரிஞ்சிரிச்சின்னா எப்படிடா நம்பறது. மாணிக்கவாசகரே கைதூக்கிட்டாரு.
வானும், வளியும், ஒளியும், ஊணும், உயிரும், அதுவும், இதுவும் ஏமி தெல்லேதுறா பகவானேன்னு கை தூக்கிட்டான். அதனால்தான் உண்மையுமாய், இன்மையுமாய் கோனாகி, குடியாகி, யான் எனதென்பவரை கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே என்னடாப்பா செய்றதுன்னா, முடிஞ்சு போச்சா கதை. இந்த சிந்தனைதான், சிந்தனை முறைதான் சாங்கியம் தோழர்களே. இது மாணிக்கவாசகன் ஏற்றுக் கொண்ட இந்திய தத்துவ மரபு. இது இந்து மரபு அல்ல, அல்லவே அல்ல. இதற்கு அப்பறம், சில நூற்றாண்டு கழித்து வறான் இன்னொரு பாட்டு. கொஞ்ச கவனிங்க எல்லாரும். கொஞ்சம் கடினமான விசயம், இத எப்படி என்னால சொல்ல முடியும்னு நீங்க நம்புனீங்களோ தெரியல, பொதுக்கூட்டத்துல இத எப்படி சொல்ல முடியும் இவ்வளவு கூட்டத்தில. இது வகுப்பறையில் அங்கங்க போர்டு வச்சுகிட்டு விளக்கக்கூடிய விசயம். ஆனால் நண்பர்கள் எல்லோருக்கும் புரியற மாதிரி சொல்றேன்னு நினைக்கிறேன்.
முயற்சி பண்றேன். மாணிக்கவாசகர் ஐந்தாம் நூற்றாண்டில் அல்லது ஆறாம் நூற்றாண்டில் மறைந்து போகிறார் இறந்து போகிறார். பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து 14 ஆம் நூற்றாண்டில் ஒருத்தர் வரார். கவனியுங்கள், அவர் வந்து பட்டிமன்றம் நடத்த வரார். மாணிக்க வாசகரை வம்புக்கு இழுக்க வரார். அலோ! மிஸ்டர் மாணிக்கவாசகம் தீடச்t தூணித டச்திஞு ண்ச்டிஞீ? கடவுள் எப்படியிருக்கிறார்னு சொன்ன? வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊணாகி, உயிராகி இருக்கிறார்னா சொன்னா. பிளடி நான்ஸன்ஸ், யார்யா உனக்கு சொன்னது. மாணிக்கவாசகர் மறைந்து சில நூற்றாண்டுகள் கழித்து வந்து பட்டிமன்றம் நடக்குது.
மாணிக்கவாசகர் அங்கேயிருந்து சொல்றாரு. நான் தான் சொன்னேன் அடியேன் தான் சொன்னேன்றாரு. ஹாய் பிளடி நான்ஸென்ஸ், இடியட், சட் அப் யுவர் மவுத், நீ சொன்னது தப்பு, நான் சொல்றேன் கேளு. நான் சொல்றதும் நான் சொல்லல. எங்கப்பன் முருகன் சொன்னது. அதுவும் முருகன்னா யாரு ""தேனென்றும், பாலென்றும் உவமிக் கொணா'' தேனென்றும் உவமிக்க முடியாதாம். பாலென்றும் உவமிக்க முடியாதாம். அவ்வளவு டேஸ்ட்புல்லா இருக்கற தேனென்றும், பாலென்றும் உவமிக்கொணா தெய்வ மொழி வள்ளி. அந்த தெய்வ மொழி வள்ளி இருக்காளோ இல்லியோ, அவளுடைய டைலாக் வருதோல்லையோ அந்த டயலாக் எப்படி டேஸ்டா இருக்கும் தெரியுமோ, அந்த மணி மொழியாளுடைய குரலிருக்கிறதே அது தேனென்று பாலென்று உவமிக்கொணா தெய்வ மொழி வள்ளி, அந்த வள்ளியோட கோன் ஹஸ்பண்ட் வள்ளிக் கோன், மிஸ்டர் முருகன்தான் சொன்னாரு, எனக்கு அன்று உபதேசித்தது ஒன்றுண்டு. தேனென்று, பாலென்று உவமிக்கொணாத தெய்வ மொழி வள்ளிக்கோனன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறிடிலோ.
இப்பதான் மாணிக்கவாசகருக்கு ஆப்பு, நீ எப்படி சிந்தித்த. சாங்கிய முறைப்படி நீ சிந்தித்த. அதே சாங்கிய முறைப்படி சிந்தனை முறைப்படி கட்டில்லாத சிந்தனை முறைப்படி, கட்டுப்பாடில்லாத சிந்தனை முறைப்படி நான் சிந்தித்தேன். எனக்கு முருகப் பெருமான் என்ன சொன்னார் தெரியுமா? எனக்கு அவர் உபதேசித்தது என்ன தெரியுமா மிஸ்டர் மாணிக்க வாசகா, எனக்கு சொன்னது என்னா தெரியுமான்னு அருணகிரி நாதர் சொல்றாரு கவனியுங்கள். வானன்று, அவர் வானாகின்னாரா அந்தப்பக்கம் நின்னு, இவரு வானன்று, நீரன்று, நிலனன்று, வளியன்று, ஒளியுமன்று, ஊணன்று, உயிரன்று, நீயன்று, நானன்று, நம்பொணாதே. கந்தரனுபூதி பத்தொன்பதாவது பாடல். கந்தரனுபூதியில எழுதியிருக்கிறாரு. இப்போ கூப்பிடு கும்மி கம்பெனிய, இதுல எத நீ ஏத்துக்கப் போறீங்க? இப்படி கட்டற்று சிந்திப்பது, ஹரியானாவுல, மாட்டுத்தோல, பசுமாட்டுத்தோல, உரிச்சிட்டானாம் யாரோ ஒருத்தன். இந்த தொக்காடியா, புக்காடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு அப்படியே நட்டுக்கிச்சாம்.
மாட்டுத் தோல உரிச்சா, மாடு கோமாதான்னா, கோமாதாவே கடவுள்ன்னா, அந்த மசுரு புடுங்கி மாடுல்ல அவன முட்டியிருக்கனும். நீயென்னடா டப்பா டக்கரு. அதான் செத்துபோச்சில்ல. நீ மூடிக்கிட்டு போக வேண்டியதுதான. இப்போகூட மசூதி கட்டினானாம் பாபர், இடிக்கறதுக்குனு போனானுங்க வேல மெனக்கெட்டு. நான் கேட்கிறேன் பாபர் கோயில இடிச்சபோது ராமர் லீவுலயா போயிருந்தார். அவரு பாபரு கைய எட்டி புடிச்சிருக்க வேண்டியதுதானே. அவருக்கே தெரிஞ்சிருக்குது. பாய்கிட்ட வச்சுக்கக்கூடாதுன்னு. இராவணுடைய பத்து தலையில ஒத்த தலைய கூட விடாம சிக்கு சிக்குனு திண்ண புடுங்கி பாபர் கிட்ட சும்மாதான இருந்தாரு. அத்வானி ஏன் அப்படி அரை மரத்து வேப்பிலையை ஒண்ணா கட்டிகிட்டு ஆடறாரு அப்படின்னு நான் கோவம் வந்த கேட்பனா இல்லையா? இப்ப கோவம் வரல. இப்ப இவரு கேக்கறாரு. வானாகி, மண்ணாகி, வளியாகின்னு சொல்றியே அதே சிந்தனை முறைப்படி கட்டற்று சிந்தித்துதான் நான் கேக்கறேன். வானன்று, மண்ணன்று, நிலமும், நீரன்று, ஒளியன்று வளியன்று, ஊணன்று, உயிரன்று எதுவுமில்ல போடான்னா. இப்போ பாய்ங்க காலை மாலை ஐந்து வேளை தொழுகை நடத்தும் போது லாயிலா...உல்லா...ன்றாங்க இதுக்கு என்ன அர்த்தம், இல்லப்பா, இல்லப்பா அல்லாவ தவிர வேற கடவுள் இல்லப்பா அத சொன்னவர் முஸ்தபா ரஸூலல்லா, முகமது சல்லப்பா அத நீ நம்புப்பா, அவ்வளவுதான் அது. அவரு எல்லையற்ற அன்பாளர் எல்லையற்ற அறிவாளர், எல்லாவற்றையும் படைத்து காத்து இரட்சிக்கிறவர், இது பாய் சொல்றது. கவனியுங்கள் தோழர்களே, இந்து தத்துவ மரபு இதை ஏற்கிறதா? மறுக்கிறதா என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.
இந்து தத்துவ மரபு இதை ஏற்காது. ஏன்னா வேதத்தில் வருணன், இந்திரன், வெங்காயத்தான், வெள்ளப்பூண்டான் எல்லார்கிட்டயும் போய் மாப்பிள என்ன அடிக்கிறாங்கப்பா, பயமா இருக்குதுப்பா, சப்போர்ட்டுக்கு கொஞ்சம் வறியா? அதுதான் வேதம். எல்லா சாமியும் கூப்பிடறது. அதுக்கு, ஊனும், மதுவும், எல்லாத்தையும் கொட்டி யாகம் வளர்க்கிறது உயிர்பலி கொடுக்கறது. இது இந்து தத்துவ மரபே தவிர, இந்திய தத்துவ மரபு அல்ல. இந்திய தத்துவ மரபுல இப்போ நாம என்ன சொல்லிக்கிட்டு இருக்கறோம்னா, ஆழ்வார் பாசுரத்தில குலசேகர ஆழ்வார் சொல்றாரு, அவர் சொன்னது, ஆறாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். கவனியுங்கள்,
ஏழாம் நூற்றாண்டுல குலசேகர ஆழ்வாருக்கு அந்த குரான் புத்தகம் மொழி பெயர்ப்பா தந்தனுப்பி இருந்தார்கள். அத அவர் படிச்சிட்டா சொல்லியிருப்பாரு. அவரு என்னமோ படிச்சு பார்த்து சிந்திச்சு பாடறாரு கடவுள் எப்படி இருப்பான்னு கேக்கறாரு. அவரே கேள்வி கேட்டு, அவரே பதில் சொல்லிக்கிறாரு, நல்லா கவனியுங்க, நாராயணன் ஆமைமேல உட்கார்ந்திருக்கிறான் உலகத்தையே தாங்கிக்கிட்டிருக்கிறான் ஆமைமேல உலகம் உட்கார்ந்திருக்கிறது. சங்கொடு, சக்கரம் அதெல்லாம் சொல்லல. நல்லா கவனியுங்க. குலசேகர ஆழ்வாருக்கு எப்படி தோணுது, மன்னிக்க வேண்டும். நம்மாழ்வாருக்கு எப்படி தோணுது, ""உயர்வர உயர் நலன் உடையவன் எவன் அவன்'' எவன் என்றே பதில் சொல்லவில்லை, உயர் வர உயர் நலம் உடையவன் எவன் அவன், கேள்வி மட்டும் கேட்டாச்சு. இதற்கு இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம். எல்லாரும் கவனிச்சிங்கனா புரியும், உயர்வர உயர்நலம், தனக்கு இணை இல்லாதவனாய், தன்னைவிட உயர்ந்தவன் எவனுமில்லாதவனாய் இருக்கிற நலமுடையவன் எவன்னு கேள்வி கேட்டாச்சு பதில் வரல. உயர்வர உயர்நலன் உடையவன் எவன் அவன், மயர்வரமதி நலம் எல்லையற்ற, மயக்கமற்ற, மதிநலம் அறிவுநலம் உடையவன் எவன் அவன், எவன் என்றே சொல்லவில்லை. மூணாவது வரி ""அயர்வரு அமரர்கள் சதிபதி எவனவன்'' எவன் சொல்லவே இல்லை.
கடைசியா முடிக்கும் போது துயர் கெட என்னுடைய துயரம் கெட்டுப் போக என்னுடைய துயரம் கெட்டு நல்லவனாய் இருக்க, மகிழ்ச்சியா இருக்க என்ன செய்யலாம்னா, அவனடி தொழுதெழு மனமே, மனமே அவனடியை தொழு எவனடியை? எவனடி என்றே சொல்லாத உயர்வர உயர்நலம், தனக்கு இணையில்லாதவனாய் அகில உலகத்துக்கும் தனக்கு இணை இல்லாதவனாய் இருக்கிறவன்னு அவன் சொல்றான் பாருங்க, லாயில்லாவு இல்லில்லாவு அதுக்கு டிரான்ஸ்லேசன் மாதிரி இல்ல இது. உயர்வர உயர்நிலம், உடையவன் எவனெவன் அந்த பக்கம் பார்த்தா லாயில்லாவு இல்லல்லாவு அவருக்கு இணையே கிடையாது. அதுவே தான் இது. இப்போ இந்த ரண்டு கம்பனியையும் முட்ட வைக்க பார்க்கிற பார்ப்பான கூப்ட்டு இங்கேயே முட்டணுமா? வேணாமா? அவன் சொல்றததான் எங்க ஆழ்வார் சொல்லியிருக்கிறாரு. லாயிலா உல்லாவு, முஸ்தபா ரஸூலல்லாவு, முகம்மது சல்லல்லா, எங்காளு உயர்நலம், உயர்வர உடையவன் எவனவன். மயர் வர மதிநலம் அருளினவன் எவன் அவன், அயர்வரு அமரர்கள் அதிபதி எவனவன், கடைசி வரையிலும் எவன்னே சொல்லல. அவன் யார்னு நீயே கண்டு பிடித்து சிந்திச்சு நீயே தொழுன்னு பொருள். இப்போ சாங்கிய சிந்தனை முறை இந்திய தத்துவ மரபு இதற்கு சில உதாரணங்கள் சொன்னேன். அடுத்தது யோகம்.
நம்முடைய சித்தர்கள் எல்லோரும் யோகிகள். ஊணை சுருக்கி, உள்ளொளி பெருக்கி யோக முறையை கற்றவர்கள். இப்ப கூட நம்ம கிராமத்துல காலைல 4.30 மணிக்கு எழுந்திருக்கணும்னு யாரும் அலாரம் வைப்பது கிடையாது. நம்ம டவுனுக்கு வந்துட்டவங்க தான் அலாரம் வச்சுட்டு 4.30 மணிக்கு எழுந்து ரயிலுக்கு போலான்னு நினைச்சுட்டு 4.30 மணிக்கு அலாரம் அடிச்ச உடனே டயர்டா ஆகிப்போயி எழுந்து அது தல மேல ஒரு தட்டு தட்டி திரும்பவும் படுத்துகிட்டு தூங்கி விடுகிறோம். ஆனால், அருமை சகோதரர் தங்கர் பச்சான் ஒத்துக்குவார், கிராமத்து கதையெல்லாம், அருமையா எடுக்கறவர். அவர் கிராம வாழ்க்கை வாழுகிறவர். அங்கே 4.30 மணிக்கு எழுந்திருக்கணும் கண்ணே! போய் மடை மாத்தணும்டா, தண்ணி கட்டணும்டா. அலாரமில்ல, டைம்பீஸ் இல்ல, ஒரு மசுருமில்ல.
அவனவன் தானா எழுந்து போவான். பயலாஜிகல் இடூணிஞிடு உடம்புல இருக்கற ஒரே இனம் தமிழினம். உழைக்கும் இனம். நம்ம கிராமத்துலதான் இதை பார்க்கலாம். இதே ஆளு டவுனுக்கு வந்து கெட்டுப் போயிடறான். அது வேற விசயம். ஆனா கிராமத்துல நான்கு மணிக்கு எழுந்துக்கணுண்டா கண்ணுன்னு சொல்லிட்டா சரியா எழுந்துக்குவான். எப்படி அவனுக்கு டைம் தெரியும். அதுதான் யோகம். மனமும், உடலும், ஒன்றி செயல்படுவதற்கு பெயர் யோகம். அது இந்திய தத்துவ மரபு. சரிதானா? மீமாம்சம் செயல்திறன் இதுக்கு விளக்கமே சொல்லத் தேவையில்லை. கூடியிருக்கும் எல்லோரும் உழைக்கும் மக்கள், ஒரு நெல்லை நூறு நெல்லாய் மாற்றுகின்ற மீமாம்ச தத்துவ வாதிகள் இவர்கள். செயல்முறை வித்தகர்கள். செயல் சோம்பேறிகள் இங்க யாருமில்லை.
பார்ப்பான், பார்ப்பான்னா கெட்டவார்த்தைன்னு நினைச்சுகிட்டு பேரறிஞர் அண்ணா, பெரியார்கிட்ட ஒருமுறை ரிப்போர்ட் பண்ணாராம். ஏன்? அண்ணா, ""அவங்க மனசுக்கு கஷ்டப்படாதா, பார்ப்பான், பார்ப்பான்னு, திட்டறீங்களே!'' ""அப்ப என்னான்னு சொல்றதுன்னு கேட்டராம்'' பெரியார். அதுக்கு அண்ணா சொன்னாராம். பிராமணன்னு சொல்லுங்கன்னு. யோவ் பிராமண்ணன்னா என்னய்யா அர்த்தம்னு கேட்டாராம் பெரியார். பிராமணர்னா பிரம்மத்தை உணர்ந்தவன். பிரம்மத்தை உணர்ந்தவன்னா, அவன் செத்து போயிருக்கணுமே, அவன் உயிரோட இருந்தா அவன் எப்படி பிரம்மத்தை உணர்ந்தவன்னு சொல்றது, பிராமணன்னு என்னால சொல்லமுடியாது. நான் பார்ப்பான்னு தான் சொல்லுவேன். இல்லீங்க அவங்க மனசு கஷ்டபடுமேன்னு சொன்னதுக்கு அதுக்கு பெரியார் சொன்னாராம்.
பார்ப்பான்னு சொல் ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது. நீயும், நானும் கஷ்டப்பட்டு உழைப்போம். அவன் தூர நின்னு பார்ப்பான். பார்ப்பான்னா அது ஒண்ணும் கெட்ட வார்த்தை கிடையாது. இன்னைக்கு வரைக்கும் பார்ப்பான்தான் மீமாம்சகனாக இல்லையே தவிர செயலூக்கம் உள்ளவனாக இல்லையே தவிர, யோசியுங்கள். எந்தப் பாப்பானாவது கதை எழுதுற சிவசங்கரியோ, கதை எழுதுற நம்ம சுஜாதாவோ உழைப்பாளிகள் என்று இந்த உலகம் ஒப்புக் கொள்ளுமா? இந்துமதி உழைப்பாளியா? எங்கள் பிரபஞ்சனோ, எங்கள் தங்கர்பச்சானோ, எங்கள் திலகவதியோ ஒரு செய்தியை எழுதணும்னா உழைச்சு களைச்சு அந்த செய்தியை தெரிஞ்சுக்கிட்டு எழுதறாங்களே. இந்த உழைப்பாளிக்கு முன்னால் எங்கியோ உட்கார்ந்துகிட்டு டுபாக்கூர் கதை எழுதற எழுத்தாளர்கள் எப்படி இணை ஆவார்கள். எங்கள் சிந்தனை முறை மீமாம்ச சிந்தனை முறை சாங்கிய சிந்தனை முறை யோக சிந்தனை முறை, அதெல்லாம்தான் எங்கள் மரபு. மீமாம்சம்.
இன்னும் அதற்கடுத்தது முக்கியமானது தர்க்கத்திலே தர்க்கம்னு சொல்லுவாங்களே, ஏரணம் என்று மாணிக்க வாசகர் சொல்லுவாரே இந்த விவாதத்திலே மெய்ப்பொருள் காணுவதற்கு விவாதிக்கிற முறை இருக்கிறதே. அதுல டாப்பு டக்கரு நாமதான். இந்து மதத்துல எதையுமே விவாதிக்க முடியாது. எதைச் சொன்னாலும் அதை நீ நம்பு. இதை நம்பு. ஏண்டா நம்புறதுன்னு கேட்டா நம்புன்னு சொல்றன் இல்ல. அதுக்காக நம்பு. எப்படிப்பா நம்பறது?
எங்கிட்ட ஒரு கிறிஸ்தவர் வந்தாரு. ஏசுவை நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்ன்னாரு. சரி நான் இரட்சிக்கப்படுவது எனக்கும் ஆசைதான். ஏசுவை விசுவாசிக்க நான் தயாராக இருக்கிறேன். ஏன் நான் அவரை விசுவாசிக்க வேணுன்னு கேட்டா அதான் பைபிள்ல இருக்குதேன்னாரு. சரி பைபிள்ல இருக்கிறத நான் ஏனய்யா நம்பணும்னா, அதான் ஏசுவே சொல்லியிருக்காரே என்றார். ஏசு சொன்னாருன்னு எப்படி தெரியும்னு கேட்டா, அதான் பைபிள்லே இருக்குதே, சரி பைபிள்ல இருக்கிறத நான் ஏன்யா நம்புறதுன்னா, ஏசுவே சொல்லிட்டாரே. ஏசு சொல்லிட்டாருன்னு எப்படிடா நம்புறதுன்னா அதான் பைபிள்ல இருக்குதே. அண்ணாந்த நம்ம கதையே முடியாது போய்வான்னிட்டேன். அவரு இன்னொரு நாள் வந்து ரொம்ப கோவிச்சிகிட்டாரு என்கிட்ட. பிரிய சகோதரரே நீங்க நல்லா பேசறீங்க. ஆனால், ஏசுவை நீங்கள் விசுவாசித்தால் நல்லா இருக்கும்னாரு. எதுக்குங்க'ன்னு கேட்டேன். நீங்கள் ஏசுவை விசுவாசிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இன்னாயா காரணம் என்று கேட்டதற்கு, நீங்கள் புஷ்பத்தை பார்த்திருக்கிறீர்களா? ஏன்யா 56 வயசாச்சி, பூவே பார்த்திருக்க மாட்டேன் நானு. பார்த்திருக்கேன்னேன்.
புஷ்பத்தை பார்த்திருக்கிறீங்களா அதிலே மொய்க்கிற வண்ணத்து பூச்சியைப் பார்த்திருக்கிறீர்களா? பட்டாம் பூச்சி? பார்த்திருக்கிறேன். அந்த அழகான காட்சியைக் காணும்போது தோன்றவில்லையா. இந்த அழகிய காட்சியைப் படைத்து அளித்த கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டாமா? ன்னாரு. உடனே நான் கைதூக்கிட்டேன். ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம். அழகான புஷ்பத்தையும் அற்புதமான வண்ணத்து பூச்சியையும் படைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்னேன். பார்த்தீர்களா கர்த்தர் உங்களுக்குள் புகுந்து விட்டார்ன்னாரு. கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்கண்ணே. ரொம்ப அவசரப்படாத கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. மேட்டரு கொஞ்சம் இருக்குது. நானு அழகான புஷ்பத்தையும் அதில் மொய்க்கிற அற்புதமான வண்ணத்துப் பூச்சியையும் படைத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்லிவிட்டேன்; அருவருப்பான மலத்தையும் அதில் நெளிகிற புழுவையும் படைத்தளித்த கர்த்தரை கட்டி வைத்து உதைக்க வேண்டும். எப்போ போலாம்னேன். அருவருப்பான மலத்தையும் அதில் நெளிகிற புழுவையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும்? அப்படீன்னு கேட்டேன். அவரு கையத்தூக்கிட்டாரு. எப்படிங்க இப்படியல்லாம் பேசறீங்க. பயமா இருக்குது. நான் இந்த வேலைய விட்டுடுவம்போல இருக்குது என்றாரு. இதுதான் தர்க்க முறையான சிந்தனை. இது தமிழன் இரத்தத்தில் ஓடுகிற தர்க்க சிந்தனை.
இதுதான் எங்களின் இந்திய மரபு. லேட்டா வேலைக்கு போயிட்டு லேட்டா வந்துட்டு அங்க எங்கனா ஊர் மேஞ்சிட்டு வந்து வீட்ல பொய் சொல்லி தப்பிக்கவே முடியாது மவன எவனாலேயும். ஏன்? நம்முடைய தாய்மார்கள் இயற்கையிலேயே, படிக்காமலேயே தர்க்கம் அறிந்த மரபு தத்துவ வாதிகள் என்பதாலே, அன்னிக்கு அப்படி சொன்னியேன்னு இன்னிக்கு கொக்கி போடுவாங்க. கல்யாணம் ஆனப்ப என்னா சொன்ன நீ எனக்கு எதுவுமே வேணாம், நீ ஒன்னு இருந்தா போதுன்னு சொன்னியேன்னு கொக்கி போடறாங்க பாரு, அது தர்க்கம். இந்த வாய் கோபுர வாசல்னு சொன்னானே திருமூலர், தர்க்கம் என்பது நம்முடைய மரபு, இந்திய தத்துவ மரபு. அதற்கு இந்து தத்துவ மரபில், வேதத்திலும் இடமில்லை, ஆரண்யகத்திலும் இடமில்லை, உபநிடதத்திலும் இடமில்லை. இந்த முரண்பாடுகளை தவிர்க்க மகாபாரதத்திலும் இடமில்லை. வேற எதுலயும் இடமில்லை. புரியுதா உங்களுக்கு, இந்து தத்துவ மரபுல இப்ப தர்க்க ரீதியா பேசப்போனா, உங்கள்ள யாரு பார்த்தீங்களோ தெரியல இராமகோபாலனோட விவாதிச்சது சன் டிவியில் வந்ததே, பார்த்தவங்க யோசிச்சு பாருங்க, அந்தாளால என் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடிந்ததா? கரெக்டா சொல்றேளே, சரியா சொல்றேளே ஊ.... ஆன்னான். நான் அப்படி என்னா சொன்னேன்னா, மாட்ட உரித்தான், பசுத்தோலை உரித்தான் என்பதற்காக, அஞ்சு பேர் தோல உரிச்சு கொன்னுட்டு இதுதான் எங்களுடைய இந்துமத சாஸ்த்திர, சம்மதம்னு சொன்னியே, இங்க எங்காளு ஒருத்தன் சைவன் ஒருத்தன் இருக்கறான். அந்தாளு சொல்லியிருக்கிறான் நான் வணங்கற கடவுள் யார் தெரியுமாடா? அப்படின்னு கேக்கறான்.
நீ மாட்டுத்தோல உரிச்சவன் தோல உரிச்சுட்டு அதுதாண்டா சாஸ்திரம், இந்து மதம்னு சொல்ற இங்க எங்க ஊர்ல சைவன் ஒருத்தன் இருக்கறான். அந்த ஆளு காலைல எழுந்து பாட்டுப் பாடறான். என்னாடா பாட்டுன்னு நான் உத்து கேட்டேன். அவன் என்னா சொல்றான், ""சங்க நிதி, பதும நிதி இரண்டும் தந்து, சங்க நிதி பதுமநிதி இரண்டும் தந்து வானாள தருவரேனும், மங்குவார். அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்.'' சங்கநிதி, பதுமநிதி இரண்டும் தந்து மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், அங்கம் குறைந்து அழுகி தொழுநோயராய் ஆ உரித்து, பசுத்தோல் உரித்து, தின்று உழலும் புலையரேணும், கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில், அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுள் ஆவார்'' அவர் தான் நான் வணங்கும் கடவுள். அங்கம் குறைந்து அழுகி தொழு நோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரைத்தான் நான் வணங்குவேன் என்கிறான் சைவன்.
அப்பரடிகள், திருநாவுக்கரசர், இதுவும், மாட்டுத்தோல உரிச்சவன் தோல உரிப்பேன்னு சொன்னியே, அந்த இந்து மதமும் ஒண்ணான்னு இராம கோபாலன கேட்டா இல்லியே, அது இல்லியே, அத நாங்க கண்டிச்சிட்டோமேன்னான். அது நாங்க கண்டிச்சோமேன்னா எத கண்டிச்ச? கண்டிச்ச இல்ல, இந்துமத கோவணத்த அவுத்து போட்டுட்டு வெளியே வா. அத கண்டிக்கறதுன்னா எப்படி இந்துவா இருக்க முடியும். நாங்கள் யாரும், இதோ ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கிறோமே, நாங்கள் யாரும் இந்துக்கள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. எங்கள் இந்திய மரபு வேறு. அது தர்க்கம் சார்ந்தது. இப்படி யோசிப்பது. அதனால்தான் சங்கராச்சாரியாராலயும், பெரியார்தாசனுக்கு பதில் சொல்ல முடியல.
அதனால்தான் இராமகோபலனால பதில் சொல்ல முடியல. அதனாலதான் யாராலயும், இன்னும் சவால் விடறேன். பண்டித சிரோமணி, குரோமணி, கூப்பிட்டு வா, எங்கிட்ட பதில் சொல்ல முடியாது. எங்கிட்ட மட்டுமில்ல, எங்க ஊர்ல படிக்காத கைநாட்டு, சாதாரண விவசாயி, இங்கு எல்லோருக்கும் தர்க்கம் தெரியும், படிக்காமலேயே. ஆக, தர்க்க மரபு எங்களுடையது.
அடுத்தது வைசேசிகம். பொருளறிவு. எங்கள் பொருளறிவு, உலக பிரசித்திபெற்றது. அதனால்தான் எந்த ஊர்லருந்து என்னத்த ஏற்றுமதி பண்றதுன்னு அந்த காலத்துலயே தெரிஞ்சு இருந்தது. புதுக்கோட்டை பக்கத்துல, பட்டுக் கோட்டையிலும், புதுக்கோட்டையிலும், காப்பர்னு சொல்றாங்களே, தாமிரத்தை, எழுவது நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே கவனியுங்கள் தோழர்களே 70 நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே, காப்பர் என்று சொல்கின்ற தாமிரத்தை எகிப்துக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து, அங்க எகிப்து, சமீபத்துல போனபோது அங்கே எகிப்துல, பார்த்தேன் கெய்ரோவிலே அந்த பிரமிட்களுக்கு பக்கத்திலே ஒரு எக்ஸிபிஸன் மாதிரி வைத்திருக்கிறான். ஓவியக் கண்காட்சி மாதிரி. அந்த எக்ஸிபிஸன்ல இந்த புதுக்கோட்டையில இருந்து அந்த காலத்துல வந்திருக்கற காப்பர்னு போட்டுருக்கான். பொருளறிவு வைசேசிகம். இந்த இந்திய மரபு அறிந்தவர்கள் தமிழர்கள். இவர்கள் இந்துக்கள் இல்லை, இல்லவே இல்லை.
ஏன்னா இந்து தத்துவத்துல வைசேசிகம் பொருளறிவே கிடையாது அதனாலதான் வாழ்வாவதே மாயம், மண்ணாவதே திண்ணம், வெங்காயம் வெள்ளப் பூண்டுன்னு சொல்றான். அவர்களுக்கு பொருளறிவு இல்லை. வேதாந்தம், வேதத்தின் அந்தம் என்று பொருளில்லை அதற்கு. மெய்பொருள் முடிவு என்று பொருள். மெய் பொருள் முடிவு மறைந்திருப்பதை வெளிக் கொணரும் முடிவு. இது தமிழருக்கே உரியது. நேரம் அதிகம் இல்லாமையால் முழு விளக்கம் தர முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு சுட்டிக் காட்டியிருக்கின்றேன். நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், வேதம் சார்ந்த, உபநிடதம் சார்ந்த, விபரீதமான மனுஸ்மிருதி சார்ந்த கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும், வாத்சாயணரின் காம சூத்திரமும் சார்ந்த அந்த இந்து மரபு பார்ப்பனர்களுக்குரியது. அவர்கள் கூட இதில் எதையும் இப்பொழுது பின் பற்றுவதில்லை என்பதுதான் விபரீதம். இப்போ கேட்டீங்கன்னா பார்ப்பன இந்து மரபிலே என்ன மிஞ்சியிருக்கிறது என்று கேட்டால் முடிக்கும் போது சொல்கிறேன். கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஊர் எல்லாம் இந்தக் கருத்தை பரப்புங்கள். வாய்ப்பு நேரும் போதெல்லாம் இந்தக் கருத்தை சொல்லுங்கள். இன்றைக்கு இந்து தத்துவ மரபுகூட கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை, வாஜ்பாயும், அத்வானியும் கூட ஏற்பதில்லை. அவனால சொல்ல முடியுமா? தைரியமா? கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை நாங்க ஏற்கிறோம் என்று. வேதத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா அவர்களாலே. நான் சொன்ன மனு ஸ்ம்ருதியை ஏற்றுக் கொள்கிறேன் என்று டிக்ளேர் பண்ண முடியுமா வாஜ்பாயாலே? யாராலயும் முடியாது. காரணம் என்னன்னா பார்ப்பனர்களாலேயே இந்து மதத்தை பின்பற்ற முடியாது என்பதை அறிக. பார்ப்பானாலேயே இந்து மதத்தை பின்பற்ற முடியாதுன்னா அப்போ பாப்பான்கிட்ட இந்து மதம்ங்கற பேர்ல மிச்சமாயிருக்கறது என்ன என்பதை ஆராய்ந்து நாம் எடுக்கற முடிவு கொஞ்சம் குடுமி, கிழிஞ்ச கோவணத்தையும் தவிர இந்து மதத்துல வேற ஒரு மசுரும் இல்ல. கொஞ்சம் குடுமியும், கிழிஞ்ச கோவணத்தையும் தவிர இந்து மதத்துல எந்த மரபும் இல்ல. எங்கள் இந்திய மரபு, தமிழ் மரபு தத்துவ மரபு, சாலப் பரந்தது.
அதுபோதும் இந்துவே இந்த நாட்டைவிட்டு வெளியேறு. இந்திய மரபுடைய உழைக்கும் மக்களான, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், எங்கள் தத்துவ மரபைச் சார்ந்ததாய் எங்கள் ஆட்சி இங்கே வரும். இங்கு உழைக்கும் மக்களின் ஆட்சி மலர வேண்டும். இந்த ஓடு காலிகள் ஓட வேண்டும். அவர்களுக்கு பதிலடி கொடுக்க இங்கு படை வீரர்களாய் திரண்டிருக்கின்ற அனைவருக்கும், என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வணக்கம், நன்றி, வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.