Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 பன்சார் நிலங்களைத் தவிர, ஏறக்குறைய பத்து லட்சம் ஏக்கர் நிலங்கள் மக்களுக்குப் பங்கிடப்பட்டன. இந்த நிலங்கள் முக்கியமாக விவசாயக் கூலிகளுக்கும் வறிய,நடுத்தர விவசாயிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் விவசாயக் கருவிகளும் கால்நடைகளும்கூட மக்களிடம் பங்கீடு செய்யப்பட்டன. எதிரிகளுடன் சேர்ந்துவிட்ட நிலப்பிரபுக்களின் நிலங்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு, மக்களிடம் பங்கிடப்பட்டன. இவர்களுக்குச் சலுகைகள் அளிக்கப்படவில்லை. ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள் ஆகியோர் விவசாயிகளுக்குக் கொடுத்த கடன்கள் யாவும் ரத்து செய்யப்பட்டன. தேஷ்முக், மற்ற நிலப்பிரபுக்கள் ஆகியோருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான தானியமூட்டைகள் மக்களிடையே பங்கீடு செய்யப்பட்டன.


விவசாயத் தொழிலாளர்களின் தினக்கூலி உயர்த்தப்பட்டது. நிலவரி (ஃச்ணஞீ கீஞுதிஞுணதஞு) ஒழிக்கப்பட்டது. கள்ளுத் தொழிலாளர்களுக்கு மரங்களிலிருந்து இலவசமாக கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டது. பல கிராமங்களில் மக்களுடைய நிலங்களுக்குப் பாசன வசதிக்குத் தேவையான கால்வாய்கள், குளங்கள் கட்டுவதற்கு மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டன.


கிராமங்களில் மருத்துவ வசதி அதிக அளவில் அதிகரிக்கப்பட்டது. முக்கியமாக காலரா தொற்று நோய்க்காலத்தில், அதற்கான மருந்துகள் மிகப்பெரிய அளவில் விநியோகிக்கப்பட்டன. கிராமங்களில் விவசாயக் கருவிகளை இலவசமாகப் பெறுவதற்கு அனுமதிஅளிக்கப்பட்டது. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை அளிக்கப்பட்டது. தேவையான சமயங்களில் அது நிறைவேற்றப்பட்டது. இந்த மாபெரும் இயக்கமானது தீண்டாமையை (க்ணtணிதஞிடச்ஞடூடிtதூ) அழித்தது. பழையமூட நம்பிக்கைகள் பல ஒழிக்கப்பட்டன.


அரசியல் பிரசாரம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவை மிக விரிந்த அளவில் நடத்தப்பட்டன. கல்வியைப் பரப்புவதற்கு இரவு நேரப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. இலட்சக்கணக்கான மக்கள் ஆரம்பக் கல்வியைப் பெற்றனர். திருடுவதானது பெரும்பாலும் இல்லாத ஒன்றாகியது.