11292022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

சர்வாதிகாரிகள்

"இந்து தேசிய காங்கிரசு' குறிப்பாக போலிச் சுதந்திர ஆண்டுகளுக்குப் பின்னால், நேரு பாரம்பரியத்தின் கீழ் தனிநபர் சர்வாதிகாரத் தலைமையும், அடக்குமுறைத் தன்மையும் கொண்ட பாசிஸ்ட் கட்சியாக மாறிவிட்டது. எழுபதுகளில் தொடங்கிய இந்த பாசிசத் தன்மை இன்று அதன் உச்சநிலையை எட்டியுள்ளது. காங்கிரசுத் தலைமையின் தனிநபர் சர்வாதிகாரத் தன்மை இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. 1939ஆம் ஆண்டு பட்டாபி சீத்தாராமையா என்பவரை காங்கிரசுத் தலைவராக்க விரும்பினார் காந்தி. ஆனால் சுபாஷ் போஸ் காந்தியின் விருப்பத்திற்கு எதிராக கட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டார்.

1575க்கு 1376 எனப் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இதனால் சீற்றம் கொண்ட சர்வாதிகாரி காந்தி சுபாஷ் போஸின் வெற்றியை ஏற்க மறுத்தார். "காங்கிரசை விட்டு வெளியேறி விடுவேன்'' என மிரட்டினார். இறுதியில் சர்வாதிகாரி காந்தியின் விருப்பப்படியே முடிவை மாற்றியமைத்து பட்டாபி சீத்தாராமையா தலைவராக்கப்பட்டார்.