திசைகளின் கவர்ச்சியை வெறுத்து
தசைகளின் சுகங்களை மறுத்து
வசவுகள் ஆயிரம் பொறுத்து
உழைக்கும் மக்களின் விடுதலை வேருக்கு
பசையென உயிரையே கொடுத்து
மண்ணைக் கிளப்பிய வேர்களே
மார்க்சிய லெனினியப் பூக்களே
மகத்தான தியாகிகளே!
நிலவைக் காட்டிச் சோ×ட்டும்
தாயின் அன்பும் மாறிவிடும்
சமூக உறவைக் காட்டி அரசியலூட்டிய
உங்கள் தோழமை இரத்தம்
தலைமுறை தாண்டியும் ஊறி வரும்!
நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை : முதல் வணக்கம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode