அ.மார்க்ஸ் மறுக்கும் போது ரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.


அடுத்து சீனாப் புரட்சியில் மாவோ பயன்படுத்திய தேசிய முதலாளித்துவ அடையாளப் படுத்தல் இந்தியாவுக்கு பொருந்தாது என அ.மார்க்ஸ் கூறுகின்றார். ஏன் எனில் இந்தியா பல்தேசிய நாடு என்கின்றார். அது சரி சீனா ஒரு பல்தேசிய நாடு என்பதை மூடி மறைத்தபடி முன்வைக்கும் கருத்து, எப்படி மாவோவை மறுப்பது என்பதில் தான் தொடங்குகின்றது. சீனா இந்தியாவுக்கு இடையில் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளதே ஒழிய இரண்டு நாடு பல தேசிய இனங்களைக் கொண்ட பல்தேசிய நாடே.


சீனா நிலமை இந்தியாவுக்கு பொருந்தாது என்பதன் ஊடாக பொதுவில் சமூகத்தில் தேசிய முதலாளிகள் இல்லை என்பதன் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சி வடிவம் சாத்தியமில்லை என்கின்றார். வர்க்கப் புரட்சியைத் தடுக்க நினைக்கும் அ.மார்க்ஸ் செய்யச் செல்லுவதெல்லாம் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் அடிப்படைக் கோட்பாடுகளை மறுதலித்து, மேலெழுந்த வாரியாக சிலவற்றை ஏற்பதாகக் காட்டி புரட்சிகரச் சக்திகளை ஏமாற்றுவதே.


இந்தியாவில் தேசிய முதலாளிகள் இருக்க முடியாதா? இதற்கு அ.மார்க்ஸ் தேசிய முதலாளிகள் ஏகாhதிபத்தியத்தைச் சார்ந்து வளருவதால் அவர்கள் இல்லை முற்போக்காக இருக்க முடியாது என்கின்றார். ஏகாதிபத்தியம் தேசிய முதலாளித்துவம் தொடர்பான அடிப்டை வரையறையைக் கண்டு கொள்ள மறுக்கும் அ.மார்க்ஸின் வரையறை போட்ட பின் நவீனத்துவ குருட்டுக் கண்ணாடியால் ஏற்பட்டதே.


ஏகாதிபத்தியம் என்பது உண்மையில், அது மற்ற நாடுகளை அனைத்துத் துறையிலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்வதாகும். தனது சந்தையை மற்றைய நாடுகளில் விரிவுபடுத்தும் அதே நேரம் மற்றைய நாட்டுச் சந்தையை கட்டுப்படுத்துவதுடன், கைப்பற்றுகின்றது. அதாவது தேசங்களின் தனித்துவத்தை சுயாதிபத்தியத்தை எல்லாத் துறையிலும் அழித்து ஒழிக்கின்றது.


தேசிய முதலாளித்துவம் என்பது உண்மையில் தனக்கான சந்தையைக் கொண்டு இருந்திருக்கிறது. அதாவது இருக்கும் சந்தையைக் கைப்பற்ற பாதுகாக்க, மீட்க எல்லாத்துறையிலும் எதிர்த்துப் போராடுகின்றது.


ஏகாதிபத்தியம்-தேசிய முதலாளித்துவம் ஒன்றுக்கு ஒன்று எதிரான போது எப்படி ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த முன்றாம் உலக நாடுகளில் எப்படி தேசிய முதலாளித்துவம் வளர முடியும் அ.மார்க்ஸ் ஐயா அவர்களே. கொஞ்சம் விளக்குங்களே. தேசிய முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் (ஏகாதிபத்துpய நாடுகளில் ஒன்றாகவும் வேறோன்றாகவும் இது உள்ள அதே நேரம் இது இன்று அழிக்கப்படுகின்றது) ஒன்று என்கின்ற ரொட்சிய வாதமும், அ.மார்க்சின் வாதமும் அதன் அடிப்படை பொருளாதார நலனைப் பற்றி ஆய்வு செய்வது கிடையாது.


ஏகாதிபத்தியத்துpன் தயவில் வாழ்வது தரகு முதலாளித்துவப் பிரிவே. இதை மாவோ அன்று தெளிவாக வரையறுத்தே தேசிய முதலாளித்துவ சக்திகளைப் பிரித்தார். இன்று உலகில் எல்லா முன்றாம் உலக நாடுகளிலும் தரகு முதலாளித்துவப் பிரிவும் தேசிய முதலாளித்துவப் பிரிவும் உள்ளனன. பூர்சுவா வர்க்கம் உள்ள வரை தேசிய முதலாளித்துவம் அதன் ஊற்றுக் கண்ணாக உள்ளது.
தேசிய முதலாளித்துவப் பிரிவு தனது போராட்டத்தில் தொடர்ந்து போராடும். உறுதி இன்மையால் அடிக்கடி சரணடைகின்றது. ஒரு பகுதி தோற்று ஒன்றும் இல்லாத பிரிவாக மாறுகின்றது. இன்னும் ஒரு பிரிவு தரகுப்பிரிவாக ஏகாதிபத்தியத்துடன் சரணடைகின்றது. பாட்டாளி வர்க்கம் போராடின் அதனுடன் இணைந்து முன்னேறுகின்றது.


தேசிய முதலாளித்துவம் மாறுகின்ற நிலமையுடன் தனது பாத்திரத்தை ஆற்ற முனைகின்றது. ஆனால் அது அப்போது தனது சொந்த வர்க்கத்தைப் பாதுகாக்க, தனது தனித்துவ சுரண்டலைக் கோரி மெதுவாக மேலே எழுகின்றது. இது தனது தனித்துவமான சுரண்டலைப் பேண, தனித்துவமான தேசியத்தை முன் தள்ளுகின்றது. கட்டுரையில் தேசிய முதலாளிகள் ஏகாதிபத்தியத்தின் தயவில் வாழ்வதாக பின் பெருமுதலாளித்துவம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது. அதாவது எதிரியை இனங்காண விடாது தடுக்கும் வகையில் தரகு முதலாளிகளை மூடி மறைத்து ஏகாதிபத்திய தயவில் உள்ள தேசிய முதலாளிகள் பெரு முதலாளிகள் என பலவகைக் கதை அளக்கப்படுகின்றது.


அடுத்து சுரண்டலை எல்லாத் தேசிய இனத்துக்கும் தரகுமுதலாளிகளாக நடத்தும் போது அவர்கள் எப்படி தேசிய வாதியாக இருக்க முடியும் என அ.மார்க்ஸ் கேள்வி எழுப்புகின்றார். முதலில் தரகு முதலாளிகளை தேசிய முதலாளிகளாக்கி விட்டு பின் எல்லா இனத் தரகுகளும் சுரண்டுவதாகக் கூறுவதன் மூலம் இந்தியாவில் தேசிய முதலாளிகள் தான் சுரண்டுகின்றனர் என்கின்றார். அதாவது ஏகாதிபத்தியத் தயவில் என்கின்றார். அதாவது ஏகாதிபத்தியத்தின் சுரண்டலின் தயவில் தேசிய முதலாளிகள் சுரண்டுவதாக கூறுவது ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போரை மட்டுப்படுத்தவே. அத்துடன் ஏகாதிபத்தியம் சுரண்டவில்லை என சாதிக்கவும் முனைகிறது.


தரகு முதலாளிகள் தான் தேசிய எல்லையைக் கடந்து சுரண்டக் கூடியவர்கள, அதனால் தான் அவர்கள் தரகு முதலாளிகளாக இருக்கின்றனர். தேசிய முதலாளிகளுக்கு தனது சந்தையை மட்டும் சுரண்டும் தகமை உடையவர்கள். அதனால் தான் அவர்கள் தேசிய முதலாளிகளாக உள்ளனர். தரகு முதலாளிகள் தான் தேசிய முதலாளிகள் மீது ஏறி நின்று சுரண்டும் தகமை உடையவர்கள்.


இந்தியாவில் குளிர்பான உற்பத்தியில் இருந்த தேசிய முதலாளிகளின் ஆதிக்கம் எப்படி தரகு முதலாளிகளால் இன்று கைப்பற்றப் பட்டுவிட்டது என திரும்பிப் பார்க்க வேண்டும். இப்படி ஒவ்வொரு தேசிய உற்பத்தியும் இன்று காணாமல் போய் அதில் பிரதியிடப்படும் தரகு முதலாளித்துவ, தேசம் கடந்த உற்பத்தியை நாம் கொஞ்சம் இனம் காட்டுவோம் எனின் அ.மார்க்சின் புலுடா அரசியல் போக்கிடமின்றி அழுகி நாறிவிடுவதைக் காண முடியும் .


பொது மொழி ஒன்று இல்லை ஆகையால் இந்தியா தேசியம் கிடையாது என்கின்ற அ.மார்க்சின் கண்டு பிடிப்பு நகைப்புக்குரியது. சோவியத்தில் பொது மொழி இன்றி சோவியத் தேசமாக எப்படி இருந்தது. சீனாவில் ஒரு பொது மொழி இன்றி ஒரு தேசியம் எப்படி உருவானது. ஸ்ராலினின் வரையறை என்பது ஆகக் குறைந்ததே ஒழிய அதி கூடியது அல்ல. பல தேசிய இனம் ஒன்று சேர்ந்து போராட முடியும். ஒரு ஐக்கிய முன்னணி போல் போராட முடியும். பொதுவாக அடையளப்படுத்தப்படும் அடிப்படை உடன் பாட்டில் ஸ்ராலினின் வரையறை கொண்ட பல தேசிய இனங்கள் போராட முடியும்.


இந்தியாவில் இந்து என்கின்ற மதக் கலாச்சாரத்தின் ஊடாக, ஆங்கிலம் என்ற பொது மொழியின் ஊடாக அதே நேரம் பல்தேசியக் கூட்டாக ஒரு நிலத் தொடர் ஊடாக, ஒரு பொதுச் சந்தை ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இந்தியாதான் இந்தியா பல்தேசியமாக இருந்து இருக்கின்றது. ஆனால் சர்வதேசியப் போராட்டத்துக்கு இவை கட்டாயமல்ல. பல் தேசிய இனம் ஒரு பொது எதிரியை எதிர்த்துப் போராட முடியும். இதைப் புரட்சிகரப் பிரிவுகள், முற்போக்குகள் அடையாளப் படுத்துதலின் ஊடாக பிரதியிட்டு இந்திய வர்க்கப் புரட்சிக்காக சர்வதேசிய நிலையில் நின்று போராட முடியும்.


அதாவது இந்தியாவில் ஒரு தேசிய இனம் ஒடுக்கம் தேசிய இனமாக ருசியாவைப் போல் இல்லை என்கின்றார் அ.மார்க்ஸ். அ.மார்க்சின் நூலில் குறித்துள்ள அவரின் கூட்டாளியாக எஸ்.வி.ராஜதுரை எழுதிய "இந்து இந்தி இந்தியா" நூலில் எப்படி இந்தி சமஸ்கிருத மொழி ஊடாக ஒடுக்கு முறையை மற்றைய தேசிய இனத்தின் மீது கட்டுவிழ்த்து விட்டுள்ளனர் என்பதை என்பதை தெளிவாக புள்ளிவிபரத்துடன் கொண்டு வந்துள்ளார். எந்தத் தேசியமும் எந்தத் தேசியத்தையும் ஒடுக்க வில்லை என்றால் ஏன் அ.மார்க்ஸ் ஐயா தமிழ் நாடு தனியாகப் போக வேண்டும் எனப் பிரகடனம் செய்கின்றீர். சுரண்டவே இல்லை மற்றைய தேசிய இனங்களால் எனின் எப்படி யாருக்கு எதிராகத் தேசிய இனப் போராட்டம். தமிழ் நாட்டில் நடந்த தேசிய இனப் போராட்டக் குரல்கள் எல்லாம் யாருக்கு எதிராக? அ.மார்க்ஸ் கண்ணை மூடி பால் குடித்தால் பலருக்கு தெரியாது என நினைத்தோ என்னவோ தேசிய இன முரண்பாடு இல்லை என்கின்றார். எதிரியே இல்லை என்கின்றார். இப்படிச் சொல்லுவதன் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்துக்கும் ஆங்கிலத்துக்கும் தாரை வார்க்கின்றனர். தமிழ் மொழியை. நடந்து வருவதைக் கண்டு கொள்ள வேண்டாம் என்கின்றார். அது எல்லாம் "கற்பிதம்" என்கின்றார். மொழி அழிப்பு, கலாச்சார அழிப்பு எல்லாம் சும்மா கற்பிதம் என்கின்றார். அப்படி எதுவும் கிடையாது என்கின்றார்.