06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

உலகைச் சூறையாடும் உலகமயம் : கட்டுரையைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகள்

எண்களுக்குரிய சர்வதேச அலகுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. நான் இந்த நூலை எழுதுவதற்காக வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களில், இந்த முறையை பலர் சரியாகக் கையாளவில்லை. எண்களைப் பல இடங்களில் எடுத்துக் கையாளும்போது குழப்பியடித்துள்ளனர். எந்த அலகைப் பயன்படுத்தினர் என்ற குறிப்பு தரப்படவில்லை. உதாரணமாகச் சர்வதேச ரீதியாகப் புள்ளி விபரங்களை எடுத்துக் கையாளும்போது டிரில்லியன், பில்லியன் எனப் பல்வேறு எண் அலகுகளை எடுத்துப் பயன்படுத்திய போது, புள்ளி விபரங்கள் ஒன்றுக்கு ஒன்று குழப்பமாகவே காணப்படுகின்றது. இயன்றவரை எனது நூலில் அவற்றைச் சரிபார்த்துப் பயன்படுத்தியுள்ளேன். சரிபார்க்க முடியாதவைகளை இந்த நூலில் பயன்படுத்தவில்லை. சில இடங்களில் அடைப்புக்குறியுடன் பயன்படுத்தியுள்ளேன்.  கீழே சர்வதேச அலகுகள் கொடுக்கப்பட்டுள்ளன.


சர்வதேச அலகுகள்


ஐரோப்பிய அலகு
டிரில்லியன்             10,000 கோடி கோடி (1018) (1 000 000 000 000 000 000)
பில்லியன்               1,00,000 கோடி  (1012) (1 000 000 000 000)
மில்லியட்                 100 கோடி  (109)  (1 000 000 000)


அமெரிக்க அலகு
டிரில்லியன்            1,00,000 கோடி  (1012) (1 000 000 000 000)
பில்லியன்              100 கோடி  (109)  (1 000 000 000)


பொதுவானது
மில்லியன்            10 இலட்சம்  (10,00,000)
நூறுஆயிரம்        1 இலட்சம்  (1,00,000)
பத்தாயிரம்            10 000
ஆயிரம்                   1000
நூறு                         100
பத்து                        10
ஒன்று                     1


 இக்கட்டுரையில் குழப்பத்தைத் தவிர்க்க கோடி, இலட்சம்,  ஆயிரம் என்ற பழக்கமானதும், விளங்கக் கூடியதுமான சொற்களையே பயன்படுத்தியுள்ளேன். இதன் சர்வதேச அலகுகளைப் புரிந்துகொள்ள அவற்றுக்குரிய அட்டவணையை தந்துள்ளேன். உலகமயமாதல் ஒரு சர்வதேசப் பிரச்சினையாக உள்ளதால், சர்வதேச அலகில் எண் பற்றிய தெளிவு அவசியமானது. உலகமயமாதலை எதிர்த்த போராட்டத்தில், நிலைமையைப் பூரணமாக புரிந்து கொள்வதற்கு, எண்கள் பற்றிய அடிப்படை அறிவு அவசியமானதாகும். 


கோடி              1,00,00,000  (100  இலட்சம்)
லட்சம்             1,00,000  (100  ஆயிரம்)
ஆயிரம்           1,000   (100  பத்து)


 நிலங்களின் பரப்பைப் புரிந்து கொள்ள, கீழ் உள்ள அலகை தெரிந்து கொள்வது அவசியம்.


ஹெக்டேர்   10,000 சதுர மீட்டர் 


 இக்கட்டுரையில் ரூபா என பயன்படுத்தியுள்ள அனைத்தும் இந்திய ரூபாயைக் குறிக்கின்றது. மற்றவை குறித்த நாட்டின் பணப் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது.


பி.இரயாகரன் - சமர்