Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 1750இல் உலக ஏற்றுமதியில் சீனா மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. இந்தியா நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பா அண்ணளவாக நான்கில் ஒரு பகுதியை கொண்டிருந்தது. மிகுதியான 20 சதவீதத்தையே மற்றைய நாடுகள் கொண்டிருந்தன. இங்கு உழைப்பவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு சமச்சீரான சர்வதேசப் போக்கு காணப்பட்டது. செல்வத்தைப் பகிர்வதில் இடைவெளிகள் குறைந்து காணப்பட்டது. இடைப்பட்ட மத்தியதர வர்க்கம் சமூகத்தின் பெரும் போக்காகக் காணப்பட்டது.

 ஒவ்வொருவரும் தனது உழைப்பைக் கொண்ட இயற்கையில் வாழும் ஒரு இயங்கியல் போக்கு, பெரும்பான்மை மக்களின் சமூகப் போக்காக இருந்தது. ஆனால் காலனிகளை உருவாக்குவது 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் கூர்மையடைந்த போது, சமச்சீர் தன்மை சிதைவது முன்பைவிட வேகம் பெற்றது. 1830இல் மேற்கு நாடுகள் சீனாவின் எல்லையைத் தாண்டி காலனிகளை உருவாக்கியது. தொடர்ச்சியாக உலக வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கை மேற்கு நாடுகள் கைப்பற்றின. 1928இல் இது 84.2 சதவீதமாகியது. காலனித்துவத்தின் விரிவான உலகம் தழுவிய  ஆக்கிரமிப்புகள், மேற்கின் செல்வச் செழிப்புக்கு அத்திவாரமாகியது. உண்மையில் இந்த உண்மையை இன்று பலர் புரிந்து கொள்வதில்லை. ஏதோ மேற்கு மிகப் பெரிய பொற்குவியலில் பிறந்ததாகவும், மற்றைய நாடுகள் கையேந்தும் பிச்சைக்கார நாடுகளாக இருந்ததாகவும் கட்டுவதும், நம்புவதும் இன்றைய மலட்டு அறிவாக உள்ளது. மனித அறிவை மலட்டு சமூகப் போக்கில் கட்டமைப்பது, உன்னதமான வர்த்தக சமூக அமைப்பன் ஆன்ம ஈடேற்றத்துக்கு அவசியமாகி விடுகின்றது. உண்மையில் உலகம் ஏற்றத் தாழ்வுகள் குறைந்த ஒரு சமூக அமைப்பாக, இயற்கை மீது தமது சொந்த உழைப்பை செலுத்தி வாழ்ந்த ஒரு சமூக அமைப்பாக கொண்டு பெரும்பான்மை மக்கள் வாழ்ந்தனர். இதை கடந்த 135 வருடங்களுக்கு உட்பட்ட சர்வதேச வர்த்தகங்களை ஆராயும் போது, இந்த உண்மை பளிச் சென்று அனைத்தையும் வெட்டவெளிச்சமாக்கிவிடுகின்றது.


 சர்வதேச ஏற்றுமதியை 1990 டாலரின் பெறுமதியின் அடிப்படையில், அன்றைய காலத்தில் எப்படி நிகழ்ந்தது என்ற ஆராயும் போது, இயற்கை மீதான தனிமனித உழைப்பின் பலத்தையும் அதன் முக்கியத்துவம் பளிச்சென்று தெரிவித்து விடுகின்றது. கீழ் உள்ள பெறுமதிகள் 1990 டாலர் பெறுமதியின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகம் அனைத்துப் பெறுமானமும் கோடி டாலரில்

                            1820              1870            1913             1929             1950           1973                   1992
ஓஸ்ரியா         4.7                 46                 202               174                 134          1390                   4578
பெல்ஜியம்      9.2               123                 731               784                 808          6176                 12241
பிரான்ஸ்       48.7               351               1129            1660               1684        10416                23605
ஜெர்மனி           -                  676               3820            3506               1317        19417                40908
இங்கிலாந்து 112.5          1224               3935            3199               3935          3467                 19454
கனடா                -                    72                  404              781               1258           6021                14029
அமெரிக்கா  25.1               250               1920            3037               4311        17455                45103
வங்காளதேசம் -                  -                       -                    -                   28.4               44.5                  212
சீனா                    -                  140                 420              626                  634          1168                   8494
ஜப்பான்             -                   5.1                 168              434                  354           9511                 29949

இந்தியா            -                  347                 948              821                  549              968                   2010
தாய்லாந்து      -                   8.8                    50                64                  115              308                   3084
தாய்வான்         -                    -                         7                26                     18             576                   8221
தென்கொரியா -                  0                      17              129                     11             789                   7780
இந்தோனேசியா -           17.2                    99              261                   225             960                   3805
பிரேசில்            -                   85                   189            259                    349           1000                   3671
மெக்சிகோ       -                 24                    236            371                    200             524                   3049


 இவை கடந்த 1820க்கு பிந்திய வருடங்களை அடிப்படையாக கொண்டு, 1990களில் டாலரின் பெறுமதியின் அடிப்படையில் சர்வதேச வர்த்தகத்தை ஆராய்கின்றது. நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வற்ற போக்கு இருந்ததையும், அது படிப்படியாகவே மாறி வந்ததையும் கூட எடுத்துக்காட்டுகின்றது. மேற்கு நாடுகள் உலகை ஆக்கிரமித்து காலனிகளை உருவாக்கிய போது நிலைமை முற்றாகவே மாறியது. காலனிகளைச் சுரண்டியதன் மூலம், வறிய மூன்றாம் உலக நாடுகளை உலகில் மேற்கு நாடுகள் உருவாக்கின. இதன் விரிவான கொடூரமான சூறையாடலைப் புரிந்து கொள்ள, மேற்கு நாடுகளின் விரிந்து சென்ற ஆட்சிப் பரப்புகள் இவற்றை எடுத்துக்காட்டுகின்றன. 15ஆம் நூற்றாண்டில் உலக நிலப்பரப்பில் 2.2 சதவீதமான நிலமே (உலகின் மொத்த நிலப்பரப்பு 8 கோடி சதுர கி.மீட்டர்) மேற்கின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆனால் முதலாம் உலக யுத்தத்தின் பின்பாக, அதாவது 1920இல் உலக நிலப்பரப்பில் 50 சதவீதத்தை மேற்கு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. முதலாம் உலக யுத்தத்தின் முன்பாக, அதாவது 1900இல் உலக சனத் தொகையில் ஐரோப்பியர் 30 சதவீதமாக இருந்த போதும், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டோர் 45 சதவீதமானவராக இருந்தனர். அதாவது 75 சதவீதமான மக்கள் மேற்கு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டனர். மேற்கில் குவிந்த செல்வத்தின் அடிப்படை,  உலகை கொள்ளையடித்ததன் மூலம் தான் உருவானது. இதன் மூலமே சர்வதேச முதலீடு, சர்வதேச வர்த்தகம் மேற்கு சார்பாக மாற்றியமைக்கப்பட்டது. படிப்படியாக சர்வதேச வர்த்தகம் சில நாடுகளின் தனிப்பட்ட சொத்தாகியது. இதுவே சில பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தாகின்றது.


 இந்த சர்வதேச வர்த்தக ஏற்றுமதியை அன்றைய டாலரின் பெறுமதியில் பார்க்கும் போது மேலும் துல்லியமாக இந்த ஏற்றத் தாழ்வை காணமுடியும். ஏற்றுமதி அன்றைய டாலர் பெறுமானத்தில் கோடியில்

                                 1870          1913             1929          1950             1973             1992
ஓஸ்ரியா             16             56.1                 30.8             32.6            955.9           4441.5
பெல்ஜியம்          13.3          71.7                 88.4           165.2          2245.5        12297.6
பிரான்ஸ்              54.1       132.8               196.5           308.2          3663.5        23577.2
ஜெர்மனி              42.4       245.4               321.2           199.3          6756.3         42227.1
இங்கிலாந்து       97.1       255.5               355              632.5          2963.7         19000
கனடா                     5.8          42.1               114.1           302             2643.7         13405.6
அமெரிக்கா         40.3       238 5                15.7          1028.2         7140.4         44816.4
சோவியத்             21.6*      78.3*               48.2            180.1          2145.8           4080*
வங்காளதேசம்      -              -                       -                  30.3               35.8              209.8
சீனா                      25.5         78.6                117.7           114.5             291.7          1955.4
ஜப்பான்                 1.5         31.5                  96.9              82.5           3701.7         33988.5
இந்தியா                3.1         27                     58.2              80                 321.1           2932.2
தாய்லாந்து          0.7           4.3                    9.4              30.4              156.4           3247.3
தாய்வான்              -             2.6                   12.5               7.3               448.3           8141.9
தென்கொரியா    0            1.5                   15.9                2.3               322.5           7663.2
இந்தோசீனா      3.1            27                     58.2            80                  321.1           2932.2
பிரேசில்               7.6           31.7                  46.2            135.9             619.9           3610.3
மெக்சிகோ         2.5             4.3                   11.7              19.3             111.2             348.4
தென்கொரியா 1.4           34.2                   45.4            115.8             611.4          2389.2
சையிர்                   -               -                         4                  26.1             101.3               43.7
எத்தியோப்பியா  -              -                         -                     3.7                23.9               16.9

*1870, 1913 ரசியா


 1870க்கு பிந்திய வருடங்களில் சர்வதேசப் பொருளாதாரம் மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிராக மாறி வந்ததையே இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அன்று மிகவும் சுயேச்சையாக இருந்த உற்பத்தி முறைமைகள், இன்று முற்றாக மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. அன்று நாடுகளின் பணப்பெறுமதியுடன் தொடர்புடைய டாலரிலான இந்த வர்த்தகம், அடிப்படையில் நமக்கு எடுத்துக்காட்ட முனைவது, பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் சமச்சீரான வாழ்க்கை முறைமையைக் கொண்டிருந்தனர் என்பதைத் தான். மக்கள் தமது சொந்த உற்பத்தி சார்ந்து உழைத்து வாழ்ந்த வாழ்வு பறிக்கப்பட்டு, அவை சில நாடுகளின் சொத்தாகியதையும், சொத்தாகி வருவதையுமே எடுத்துக்காட்டுகின்றது. இவை சில பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தாக மாறி வரும் இன்றைய வரலாற்றில், தேசங்களின் அடிப்படையான தேசியக் கூறுகள் அழிக்கப்படுகின்றது. உலகமயமாதல் ஊடாக, சிலரிடம் உலகின் அனைத்துச் செல்வங்களும் குவிந்து விடுவதையே எடுத்துக் காட்டுகின்றது.


 மக்களின் சமச்சீரான வாழ்க்கை எப்படிச் சிதைந்து வந்தது என்பதை, சில நாடுகளின் சராசரியான தனிநபர் வருமானத்தை ஆராய்வதன் மூலம் வரலாற்று ரீதியான உண்மைகள் பளிச்சென்று எடுத்துக்காட்டி விடுகின்றது. 1990 டாலர் பெறுமதியின் அடிப்படையில் தனிநபர் வருமானம் டாலரில்


                                  1820          1870          1913            1929               1950             1973                 1992
ஓஸ்ரியா             1295          1875          3488             3723               3731           11308                17160
பெல்ஜியம்          1291          2640          4130             4947                5346          11905                17165
பிரான்ஸ்              1218         1858           3452             4666                5221           12940               19351
ஜெர்மனி              1476         1913           3833              4335                4281          13152                17959
இங்கிலாந்து       1756         3263           5032              5115               6847           11992                15738
கனடா                      893         1620           4213             4799                7047           13644               18293
அமெரிக்கா         1287         2457           5307              6577                9573          16607                21558
சோவியத்               751         1023           1488             1386                2834              6058                 4671
வங்காளதேசம்     531             -                617                619                   551               478                    720
சீனா                          523          523              688                779                   614             1186                 3098
ஜப்பான்                   704          741           1334              1949                1873            11017              19425
இந்தியா                  531          558             917                 665                   597                853                1348
தாய்லாந்து               -                -                  -                    799                  848               1750                4694
தாய்வான்                  -                -              794                1107                  922               3669              11590
தென்கொரியா         -               -               948                1164                  876               2840              10010
இந்தோசீனா        614          657             917                 1207                  874               1538                2749
பிரேசில்                670          740              893                1106                1673                3913                4637
மெக்சிகோ          760          710            1467                1489                2085                4193               5112
சையிர்                    -                -                   -                          -                    636                   757                 353
எத்தியோப்பியா -                 -                   -                          -                    277                  412                  300

* 1920, 1870, 1913 ரசியா


 இவை நமக்கு காலனித்துவத்தின் ஆரம்ப காலங்களில், உலகளவில் மக்களிடையே இருந்த பகிர்வு முறைமையை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. ஏற்றத்தாழ்வு குறைந்த சமூகங்களாகவே உலகம் இருந்துள்ளது. தமது உழைப்பைச் சார்ந்த வாழ்வு என்பது, பரந்துபட்ட பெரும்பான்மை மக்களின் பண்பாடாகவும் வாழ்வு முறைமையாகவும் இருந்துள்ளது. 1820களில் மேற்கு மற்றும் மூன்றாம் உலக நாடுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி இரண்டு மடங்கு மேல் வித்தியாசம் காணப்படவில்லை. இக்காலத்தில் பல நாடுகளில் காலனித்துவம் நிறுவப்பட்ட நிலைமை மற்றும் உள்ளூர் பணப் பெறுமதியின் வேறுபாடுகள், சராசரி வருமான வேறுபாட்டை பொதுவான வாழ்வில் இல்லாத ஒன்றாகவே நாடுகளுக்கு இடையில் கொண்டிருந்தது. ஒரு நாட்டின் சொந்தப் பணப்பெறுமதி, கூலியை அடிப்படையாக கொண்டு மாறுகின்றது. கூலி வீதம் குறைவாக உள்ள போது, மூன்றாம் உலக நாடுகளின் வாழ்க்கை மேற்கு நாட்டுக்கு சமாந்தரமானதாகவும் அல்லது மேலானதாகவும் கூட இருந்தது. 
 இதை நாம் மேலும் குறிப்பாக பிரதேச ரீதியாக 1990 டாலர் பெறுமதியின் அடிப்படையில் ஆராயமுடியும்.  சராசரி வருமானம் டாலரில்


                                            1820           1870            1913         1929             1950          1973                 1992
மேற்கு ஐரோப்பா      1292           2110             3704        4385              5126        12289                17387
9  நாடுகள்                      1205           2440             5237        6653              9255        16075                20850
தெற்கு ஐரோப்பா         804           1108            1750         2153              2021          6015                  8287
கிழக்கு ஐரோப்பா        772           1085            1690         1732              2631          5745                  4665
தென் அமெரிக்கா        679             760            1439         1832              2487          4387                  4820
பசிபிக் மற்றும் ஆசியா  550      580              742            858               765           1801                  3252
ஆப்பிரிக்கா                    450              480               575           660                830           1311                 1284
மத்திய கிழக்கு            651             895             1639         1806              2238          4123                  5184
* 9 நாடுகள் அமெரிக்கா, கனடா, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா...


 இவை மேலும் துல்லியமாக சமச்சீர் போக்கு பிரதேச ரீதியாகவே எப்படிக் காணப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இன்று பல நாடுகள் 1820இல் பெற்ற சராசரி வருமானத்தைவிடவும் மிக மோசமான நிலைக்கு எப்படி மாற்றப்பட்டது என்பதையும், நாடுகளுடன் ஒப்பிட்டு காணமுடியும். குறிப்பாக ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மிக மோசமாகவே காலனித்துவவாதிகளால் சிதைக்கப் பட்டுள்ளதை காணமுடியும். உண்மையில் காலனித்துவத்தின் சூறையாடல், அந்த நாடுகளையே திவாலாக்கிவிட்டதை எடுத்துக் காட்டுகின்றது. காலனித்துவ சூறையாடல்கள் மூலம் தான், மேற்கில் செல்வங்கள் குவிந்தன. அதாவது காலனித்துவ மக்களின் சொந்த இழப்புத்தான், மேற்கில் செழிப்பை உருவாக்கியது. இந்த வரலாற்று நீட்சி, சில சமூக அதிர்வுகளின் ஊடாகவே பயணித்தது, பயணிக்கின்றது.