தன்னைப் பற்றிய வரலாறு தெரியாதவன் சுய அடையாளம் அற்றவன். சுய கல்வி அற்றவன், சுயமாக எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவன். மனிதன் (சுய) பற்றி வரலாறற்றையும், இயற்கை பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொள்ளதவன் சுய அடையாளம் அற்றவன்.

இவர்கள் மேற்கு நாடுகளில் வளர்க்கும் மந்தைக்கு கீழானவனாக இருக்கின்றான். சமூகத்தை, நாம் வாழும் எதார்த்த வாழ்க்கையை, ஏன், எப்படி, எதற்காக இவைகள் நிகழ்கின்றன என்று கேட்க முடியாத ஒருவன், சுய புலன்கள் உள்ள மனிதனாக இருப்பதி;ல்லை. நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்வது அவசியமானது, அடிப்படையானது. இல்லாது போது உனது புரிதல் என்பது மந்தைக்குரிய ஒழுக்கத்தைக் கடந்தது அல்ல. மந்தைத்தனம் என்பது சிலர் பலர் மேல் சவாரி செய்வதை நிபந்தனையாக்கின்றது.

 

நீ எப்படி வாழ்கின்றாய்? எப்படி உன்னை நீ தீர்மானிக்கின்றாய்? இது பற்றி எப்போதாவது நீ சிந்தித்த பார்த்தாயா? உன்னால் இதை விளக்க முடியுமா? நீ மற்றொரு மனிதனுக்கு ஒரு அடிமை என்பது உனக்கு தெரியுமா? இல்லை எனின் இது பொய் என நிறுவ முடியுமா? உனது அறிவின் எல்லை என்ன?

உனது சமூக அறிவை எங்கே இருந்து எப்படி, எப்போது பெற்றாய்? என்னத்தை பெற்றாய்? காலகாலம் நீ நம்புவது எல்லாம் உண்மையாக இருந்து வருகின்றதா? ஏன் இவை மாறிச் செல்லுகின்றன? நம்பிக்கைகள் ஏன் தகர்ந்து போகின்றன? இது போன்ற உணர்வுகள் உணர்ச்சிகள் எப்படி உன்மேல் உருவாகின்றன என்பது உன்னால் விளக்க முடியுமா?

 

சந்தோசம் எப்படி உருவாகின்றது? துன்பம் எப்படி உருவாகின்றது.? காதல் எப்படி உருவாகின்றது? அவமானம் எப்படி உருவாகின்றது? வெற்றி தோல்விகள் எப்படி உருவாகின்றது? விருப்பு வெறுப்பு எப்படி உருவாகின்றது? உனது நேசம் எப்படி உருவாகின்றது? உனது தனிமனித விருப்பு வெறுப்புகள் எப்படி உருவாகின்றது? சமூகம் பற்றிய விருப்பு வெறுப்புகள் எப்படி உருவாகின்றது. இது போன்றவற்றுக்கு உன்னிடம் பூரணமான விடை உண்டா? இதை ஏன் நீ தெரிந்து கொள்ளவில்லை? தெரிந்த கொள்ள என்ன தடை உனக்கு உண்டு? எப்போதாவது நீ சிந்தித்தது உண்டா? நீ உன்னைப் பற்றி (என்னைப் பற்றி) சிந்திதது உண்டா?

 

மனிதனின் வேறுபட்ட நிறங்கள் ஏன் உருவானது? வேறுபட்ட மதங்கள் ஏன் உருவானது? வேறுபட்ட இனங்கள் ஏன் உருவானது? வேறுபட்ட சாதிகள் ஏன் உருவானது? இயற்கையான பூமிக்கு யார் வேலியிட்டது? ஏன் வேலியிட்டனர்? இது உன்னுடையது இது என்னுடையது என்ற யார் சொல்லித் தந்தனர்.? இவை போன்றவற்றை நீ எப்படி உருவானது என்பதை தெரிந்து கொள்ள உனக்கு என்ன தடையிருந்தது? அதைக் கடக்க நீ முயன்றாயா?

 

மனிதனில் ஆண் பெண் இடையில் ஏன் அடிமைத்தனம் உருவானது? ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடக்கியாளுதல் எப்படி உருவானது? ஏன் உருவானது? ஒருவன் வசதியானவனாகவும் மற்றொருவன் வசதியற்றவனாகவும் மாறியது ஏன்? பணககாரன் எழை எப்படி உருவானன்? உயர் சாதி தாழ்ந்த சாதி எப்படி உருவானது? உன்னால் விளக்க முடியுமா? இவை எல்லாம் ஏன் எப்படி இந்த சமுதாயத்தில் நிகழ்கின்றன. வசதியுள்ளவன் காலடியில் வசதியற்றவன் நக்கி வாழும் மனித வாழ்க்கை இயற்கையானதா? ஏவன் எப்படியும் விதவிதமாக இதை நியாப்படுத்துவதை நாம் சகிக்கும் மந்தைக் கூட்டமா நாங்கள்?

 

நீ உனது உழைப்பை சுதந்திரமாக எங்கும் எப்படியும் பயன்படுத்த முடிகிறதா? நீ விரும்பியவாறு உழைப்பை பயன்படுத்துகின்றயா? அல்லது ஒரு இயந்திர வாழ்வில் ஒரு அங்கமாக இது போய்விட்டதா? நீ இயந்திரத்தின் ஒரு அடிமை அல்லவா! நீ நுகாரும் பொருட்கள் உனது விருப்பத்துக்கு உட்பட்டதா? அல்லது சந்தை உன் மேல் அதை திணிக்கின்றதா? பொருளின் அடிமையல்லவா நீ? கவர்ச்சியின் நீ கவரப்பட்டும் சிந்தனை ஆற்றலை இழந்த ஆப்பிளுத்த குரங்கா நீ!  இது போன்ற கேள்விகளை நீ உன்னையே கேட்டது உண்டா?

 

மனித வாழ்வின் உண்மைகள் கவர்ச்சியாக இருப்பதில்லை. அவை வேதனை நிறைந்தாக துன்பம் நிறைந்தாக உள்ளது. நீ புரிந்து கொண்ட உலகம் அழகனதாக, கவாச்சிகரமானதாக, போதை ஊட்டக் கூடியதாக காட்டி மந்தை குணத்தில் சொக்கி நிக்கின்றாய். ஆனால் மனிதன் நாள் தோறும் அழுகின்றான். நாள் தோறும் வதைக்கப்படுகின்றான். நாள் தோறும் உயிருடன் கொல்லப்படுகின்றான். அழகான வாழ்வை தரும் இயற்கை கற்பழிக்கப்படுகின்றது. இல்லை என்று அடித்துச் சொல்லும் துணிவு இருந்தால், கீழ் உள்ள வாழ்வின் உண்மைகளை மறுத்து நிறுவுங்கள் பார்க்கலாம்.

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் வேலையின் எற்படும் விபத்தினால் அல்லது அதனால் எற்படும் நோயினால் வருடம் 20 லட்சம் பேர் இறப்பதாக அறிவித்துள்ளனர். இந்த இறப்பு வேகமாக அதிகாரித்து வருகின்றது. 1990 இல் வேலையின் போதான விபத்து மரணம் 12 லட்சமாக இருந்தது. இந்த இறப்பில் மேற்கு நாடுகளில் அதாவது தொழில் வள நாடுகளில் 15 சதவீதமாகவுள்ளது. ஒவ்வொரு வேலை விபத்து மரணத்துக்கும் 2000 பேர் காயமடைகின்றனர். அதாவது வருடந்தம் வேலையினால் எற்படும் காயங்கள் அல்லது செயலாற்ற முடியாத நிலை என மொத்தமாக 400 கோடி நிகழ்ச்சிகள் வருடந்தம் நிகழ்கின்றது. இன்று வரும் கன்சர் நோயில் இறப்போரில் 60 சதவிதம் வேலை காரணமாக எற்படுகின்றது. இதன் காரணமாக வருடம் ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர். இவை எதற்காக நிகழ்கின்றன? முதலாளியின் சொத்துப் பெருகி வசதிவாய்ப்பு பெருகும் போது, மனித உடல்கள் அவனின் காலுக்கு கீழ் விரிக்கப்படும் செங் கம்பளமாகின்றன. இல்லை என்று சொல்ல யாருக்கும் துணிவு உண்டா!

 

பண்டைய கால மனிதன் தனது உணவில் 1500 விதமான காட்டுத் தவாரங்களை பயன்படுத்தினான். பண்டைய நாகரீகங்களில் 500 மேற்பட்ட காய் வகைகளை பயன்படுத்தினான். இன்று 30 வகையான தாவர உணவில் இருந்தே உணவுச் சத்து கிடைக்கின்றது. இதிலும் 75 சதவீதம் மூன்ற வகையான உணவில் கிடைக்கின்றது. அதாவது சோளம், அரிசி, கோதுமை சார்ந்து இருக்கின்றது. காய் கறிகளில் 20 வகை சாhந்து போய்யுள்ளது. இது ஏன் எப்படி அழிந்தது? என்ன நடந்தது? உனது தேர்வின் சுதந்திரம் எங்கே எப்படி அழிந்தது? யர்ர் அழித்து? உனது அறிவு, உனது ருசி, உனது ரசனை என எல்லாம் எப்படி அழிந்து போனது? நீ மந்தையாகிய வரலாறு எப்படி யாரால் நிகழ்ந்தது? நீ மந்தையாக இருப்பது உனக்கே தெரியமால் போனது எப்படி?

 

இலங்கையில் வேரில் விளையும் 40 காய்கறி வகைகளும், இலை காய்கறி வகையில் 28 இனங்களும் உள்ளன. இது உனக்கு தெரியுமா? இது இலங்கையில் இயக்கை சார்ந்த சிறப்பு! ஆனால் இதை நாம் எப்போதாவது புரிந்து பாதுகாத்தோமா? இது அழிக்கப்படுவதை நாம் தடுத்தோமா? ஏன் இந்த உணவு வகையை எமது அறிவு இழந்துள்ளது உனக்கு தெரியுமா? நாம் எங்கே எதை அடையும் போட்டியில் எமது இயற்கையை, எமது வாழ்வை இழந்தோம்!

 

இந்தியாவில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 100 வருடத்துக்கு முன் 30 ஆயிரம் வகையான அரிசி வகை இருந்தன. ஆனால் இன்று எஞ்சி இருப்பது 15 இனங்கள் மட்டமேயாகும்; லெபனிலும், சவுதி அராபியாவிலும் இருந்த பார்லி இனங்களில் 70 சதவீதமானவை அழிந்து விட்டது. கோதுமையை எடுத்தால் 1 10 000 வகைகள் இருந்தன. 12500 காட்டுக் கோதுமை இருந்தன. இது உனக்கு தெரியுமா?  யார் அழிக்கின்றான்? ஏன் அழிக்கின்றான்? இது உனக்கு தெரியாமல் போனது என்? 30 ஆயிரம் வகையான அரிசி உணவின் ருசியை இழந்து, இரண்டு முன்று அரிசியில் உனது ரசனை வீம்பும் என்பது வெக்கக் கேடானது! மனக்கேடான வாதங்களால் மக்களை மந்தையாக்கதே! கடந்த எமது முதையர் வாழ்வில் தேடு உனது அறிவை. அங்கே இருக்கிறது எமது செல்வம்?  அங்கே இருக்கிறது மனித அறிவியல்! இன்றைய அறிவு எமது முதையார் அறிவை அழிக்கின்றது? இங்கு படைப்பது மந்தைக்குரிய பொருட்களையே ஒழிய, மனிதனின் பரந்த வாழ்வுக்கும் அது சாhந்த சமூக அறிவுக்குரிய பொருட்களை அல்ல? லாபத்துக்கா உன் மேல் கட்டிவிடப்படும் கழிவுகளே! இதற்கு நவீன தேவை பற்றியும், வாழ்வின் இலகுவான பொருட்கள் பற்றியும் ஒரு போதனை புகட்டி விட மந்தையாக நின்று கத்துவது எஞ்சிக்கிடக்கின்றது. நவீன அறிவியல் எல்லாம் மனித வாழ்வை முன்னேற்றுவதற்கே ஒழிய, மனிதனை அடிமைப்படுத்துவதற்கு அல்ல!

 

மூன்று கோடிக்கு மேற்பட்ட உயிரணங்கள் பூமியில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மழைக்காடுகள் ஒரு நிமிடத்துக்கு 100 ஏக்கா வீதம் இன்று அழிக்கப்படுகின்றது. இதனால் 25 வகையான பூச்சி இனங்கள் மட்டும் ஒரு நாளைக்கு பூமியில் இருந்தே அழிந்து போகின்றன. இன்று நாம் பாவிக்கும் மருந்துகளின் 25 வீதமானவை மழைக்காடுகளின் மூலிகையில் இருந்து உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு வகைத் தாவர இனமும் அழியும் போது அது சார்ந்து வாழும் 10 முதல் 30 வகையான உயிரிணங்களும் அழிந்து விடுகின்றது. இயற்கை அழிக்கப்படுகின்றது. ஏன்? காடுகள் சூறையாடப்படுகின்றது என்? இயற்கை கற்பழிப்பவன் எதை பெறுகின்றான்? அவனின்; நோக்கம் என்ன? காடுகள் அழிக்கப்பட்டு எங்கே அவை செல்லுகின்றன. தெரிந்து கொள் அவை எங்கே, யாருக்கு, எதற்காக செல்லுகின்றன என்பதை! ஒரு இனம் அழிகின்ற போது, அதைச் சார்ந்து வாமும் உயிர்கள் அழிந்து விடுகின்றனவே? யார் குற்றவாளி? இந்த உயிரினங்கள், இனங்கள் மனிதனுக்கு நன்மை அளிக்கக் கூடிய பல கூறுகளைக் கொண்டவையாக இருந்த போதும், இதுவரை யாரும் அவைபற்றி தெரிந்த கொள்ளவில்லை என்பது தெரியுமா உனக்கு? ஒரு சதவீதமான உயிரினத்தைக் கூட மனிதன் பூரணமாக தனது இன்றைய நவீன அறிவால் அறிந்த கொள்ள முடியாத நிலை, இயற்கை அழிப்பு எதைத்தான் எமக்கு விட்டுச் செல்லப் போகின்றது?

 

1994 இல் வெளியான அறிக்கை ஒன்றின் படி தொடர்ந்த 20, 30 வருடத்தில் 2.5 லட்சம் உயிரிணங்கள் மண்ணில் இருந்த காணமல் போய்விடும் நிலமையை அறிவித்திருந்தது. 350 பறவையினங்கள், 200 வகையான பாலுட்டிகள், 25 ஆயிரம் தவரங்கள் உடனடியாக அழிந்து போகும் நிலையில் இருந்தது. யாரால்? எதற்காக? இவை அழிக்கப்படுகின்றது. மனித சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்காவுமா? இதனால் என்னத்தை நீ அடைந்த விடுகிறாய்? அழிப்பது தான் சுதந்திரமா? இது தான் ஜனநாயகமா? இது தான் உனது நியாவாத சார்ந்த வீம்பா!

 

உலகெங்கும் 4 லட்சம் ச.கி.மீ பரந்து காணப்படும் ஏரிகள் சார்ந்து வாழும் 5 லட்சம் உயிரிணங்கள் வாழ்விடத்தை இழந்த அழிகின்றன. இதனுடன் காடுகள் சூறையாடும் போது உயிரணத் தொகுதியை மூலதனம் முழுங்கி ஏப்பமிடுவது தான் சுதந்தரமான ஜனநாயகமா? இது உனது லட்சிய கனவா? இல்லை என்றால்!

 

பூமியின் வரலாற்றை ஒரு மாதமாக எடுப்பின் தற்போதுள்ள மனிதன் தோன்றி ஒரு நிமிடம் தான் கடந்துள்ளது. இந்த மனிதன் நிலையாக வாழத் தொடங்கி 7 செக்கன் தான் கடந்துள்ளது. மொத்த மனித வரலாற்றில் 99 சதவீத காலம் வேட்டையாடியும் மீன் பிடித்தே காலத்தை கடந்துள்னான். மிகுதி உள்ள 1 சதவீத ஆயுள் தான் இன்றை நவீன சமுதாயத்துக்கு உட்பட்ட சுரண்டல் சமுதயாமாகும். 7 சென்னளுக்கு முன் நிலையாக தரிக்கக் தொடங்கிய வரலாற்றில் அழிப்பும், அதை நியாப்படுத்துவதும் தொடங்கிவிடுகின்றது. இவன் தான் பூமியை சூறையாடுகின்றான். அழிக்கின்றான்? இயற்கை மீதான அவனின் அறிவு உலகை எப்படி அழிப்பது என்பதே! எப்படி இயற்கையை பாதுகாப்பது என்பது அல்ல! அவன் தன்னைத் தானே அழிக்கின்றான்! தன்னைத் தானே அடிமைப்படுத்துகின்றான்! இது எப்படி நிகழ்ந்தது? இதில் ஒவ்வொரு மனிதனும் பங்காற்றுகின்றான். இதை மாற்ற உனது பங்களிப்பு அவசியமா? இல்லையா?

 

உலகத்தையே ஆளுகின்றவர்கள், உலகத்துக்கு ஒழுக்கத்தை போதிப்பவர்கள், உலகத்தின் செல்வங்களை நுகர்பவர்கள், உலகத்தின் மேல் தூப்பாக்கியை நீட்டி வைத்திருப்பவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்களே. இது உனக்கு தெரியுமா? ஒரு சின்ன நம்ப முடியாத ஆச்சரியமான உதாரணம். காலனிகளை உருவாக்கி உலகை சூறையாடிய போதும், மற்றயை நாடுகளில் புகுந்து தாவரங்களைக் கூட கொள்ளையிட்டனர். உன்னால் நம்ப முடியவில்லையா? பிரிட்டன் தனது நாட்டுக்கு கடத்தி வந்த உலகையே அடிமைப்படுத்தி தாவரங்கள் எண்ணிக்கை


16 ஆம் நூற்றாண்டு       84
17 ஆம் நூற்றாண்டு       940
18 ஆம் நூற்றாண்டு       8939


இவற்றை ஏன் கடத்தி வந்தனர்? உனக்கு தெரியுமா?  தெரியாவிட்டால் தெரிந்து கொள்வது உனது கடமையல்லவா! 

அமெரிக்காவில் 1947ம் ஆண்டு உற்பத்தி செய்த தனியங்களின் அளவைப் பெற இன்று 5 மடங்கு செயற்கை உரங்கள் தேவைப்படுகின்றது. மண்ணை, மண்வளத்தை கற்பழித்தவர்கள் சேர்க்கையாக மண்ணுக்கே பூச்சு பூசுகின்றனர்? மண்ணை மண் வளத்தை கொள்ளையிட்டவர்கள் யார்? சேர்க்கை உரங்கள் என்பவை என்ன? அவை எல்லாம் இராண்டாம் உலக யுத்தத்தில் மக்கள் மேல் போட்ட குண்டுகளுக்குரிய வெடி பொருட்களே. அன்று குண்டுக்காக செய்த வெடிப் பொருள் முதாலளிகள் நட்டமடையாகக் கூடாது என்பதால், அதை மண்ணில் கொட்டி மண்ணையே வெடிக்க வைத்தனர். சேர்க்கை உரமற்ற விவாசாயம் இந்த மண்ணில் இருக்கவில்லையா? 50 வருடங்களுக்கு முந்தை எமது விவசாயம் என்ன? மறந்துவிட்டதா? உனது தலைமுறையிடம் கொஞ்சம் கேட்டுப் பார்? எல்லாம் புரியும்? உனது மந்தை தனமும் சேர்த்து தான்!

 

1984 இல் மண் அரிப்பு காரணமாக வருடத்துக்கு 2 கோடி ஹெட்டர் விவசாய நிலம் நசாமாகியது. வருடாந்தம் 60 லட்சம் ஹெட்டர் என்ற விகிதத்தில் பாலைவனம் விரிந்து செல்லுகின்றது. 350 கோடி ஹெக்கடர் செழிப்பான விவசாய நிலம் பாலவனமாதலால் சேதமடைந்து வருகின்றது. இதில் மூன்றில் ஒரு பகுதி தீவிரமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வெப்ப மண்டலாக் காடுகள் அழிப்பு 1980 இல் வருடாந்தம் 1.13 கோடி ஹெட்டராக இருந்தது. 1990 இல் இது 1.7 கோடி ஹெட்டராக மாறியது. எதை நோக்கி நாம் முன்னேறுகின்றோம்;? எந்த நவீனத்தை நோக்கி? உனது சந்ததிக்காக மாடாய் உழைக்கும் நீ, உனது சந்ததியே இந்த இயற்கையில் வாழமுடியாத மலட்டுத்தனத்தில் அழியப் போகிறனே! அதைப்பற்றி கொஞ்சம் சிந்தித்தாயா?  எப்போது?

 

1979 க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒசோன் படத்தில் சராசரி அளவு 5 சதவீத்தால் அதிகரித்துள்ளது. 1980 இல் அண்டாடிக்காவுக்கு மேலே ஒரு துவாரம் கண்டு அறியப்பட்டது. இது போன்று 1994 இல் ஆர்டிக்கிற்கு மேலே ஒரு துவாரம் எற்படும் சத்தியக் கூறு காணப்பட்டது. 1960க்கும் 1985 க்கும் இடையில் சல்பர் டையாக்ஸைடு வாயுவின் வெளியேற்றம் வருடத்துக்கு 70 லட்சம் தொன்னில்; இருந்து 15.5 கோடி தொன்னாக அதிகரித்துள்ளது. இது அமில மழையை பூமியின் மேல் பொழிய வைத்துள்ளது. இதை தடுத்த நிறுத்த யார் தடையாக இருக்கிறார்கள்? தேவையின் அடிப்படையில் உற்பத்தி என்பது மறுக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக நோக்கில் உற்பத்தி இயற்கையின் எல்லாப் பண்பையும் அழிக்கின்றது அல்லவா! யார் லாபம் அடைகின்றான் எனின், இதை உற்பத்தி; செய்பவன் தான் அல்வா! ஆனால் பாதிப்பு எல்லா மனிதனுக்கு மட்டுமல்ல, இயற்கை சார்ந்த அனைத்துமே பாதிக்ப்படுகின்றது அல்லவா! இது உனக்கு தெரியுமா?1990 இல் ஐ.நா சுற்றுச்சூழல் கூட்ட தொடரில் 30 முதல் 40 கோடி தொன் கழிவு உலகில் உருவகுவதாக அறிவித்து. இதில் 98 சதவீதம் 24 முன்னேறிய நாடுகளினால் உருவாக்ப்படுகின்றது என அறிவித்தது. எதற்காக கழிவை உற்பத்தி செய்கிறார்கள்? அதை எங்கே கொட்டுகிறார்கள்? உதவித் திட்டத்தின் கீழ் மூன்றாம் உலகுக்கு வருவதில் கனிசமானவை நச்சுக் கழிவை கலந்து, ஏமாற்றியும் அனுபுவது உனக்கு தெரியுமா?

 

உணவு, சுத்தமான நீர், சுத்தமான காற்று, மருத்துவம் இன்றி அண்ணளவாக வருடந்துக்கு 19 கோடி மக்களின் உயிரை நேரடியாகவே பலியிடுவதன் மூலம் படுகொலை செய்யப்படுகின்றனர். இது அனைத்து மக்களுக்கு கிடைப்பதை யார் தடுக்கின்றார்கள்? இந்த படுகொலைகளுக்கு யார் பொறுப்பு? யார் குற்றவாளி? இதை எந்த சாவதேச நீதி மன்றம் விசாரிக்கும்? 19 கோடி மக்களின் உயிரையே வருடாந்தம் அடித்தளமாக கொண்டு எழுந்து நிற்கும் இந்த அமைப்பு உன்னதமானதா? உனது நம்பிக்கைகள் எல்லாம் சரியானதா? உனது தெரிவுகள் சரியானவையா? 19 கோடி மக்கள் கொல்லப்படும் போது நீயும் அதற்;கு எதோ ஒரு விதத்தில் உதவுவதை உணரவில்லையா? இதை தடுக்க என்ன செய்யப் போகிறாய்?

வருடம் 1.8 கோடி மக்கள் வறுமை சம்பந்தப்பட்ட ஒரு காரணத்தால் கொல்லப்படுகின்றனர். இதற்கு காரணம் என்ன? விதியா! வருடம், வறுமை இல்லாத ஒரு நிலையில் 1.8 கோடி மக்கள் இந்த மண்ணில் உயிருடன் வாழ்வர்கள் அல்லவா!. அவர்கள் வருடா வருடம் வறுமையினால் கொல்லப்படும் நிலையில், யார் குற்றவாளி? இதில் எனது பங்கு என்ன? உனது பங்கு என்ன? உனது மௌனத்தின் சம்மதம் உனது பெருந்தன்மையா?  வாயைத் திற, மந்தைத் தனத்தை திரும்பி பார் அப்போது புரியும் உனது கடந்தகால முட்டாள் தனத்தையும் உனது அறியமையும் உனக்கே புரியவைக்கும். 

 

இன்று பூமியில் இறைச்சிக்காக கொடுக்கும் உணவு 1500 கோடி மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யப் போதுமானது. அப்படியாயின் வறுமை என்பது கற்பனை அல்லவா! இறைச்சி ஏன் தேவைப்படுகின்றது? யாருக்கு தேவைப்படுகின்றது? இறைச்சியை எத்தனை வீதமானவர்கள் அன்றாட வாழ்வில் உணவில் பயன்படுத்துகின்றனர்? 1500 கோடி மக்களின் உணவை உபயோகித்து மந்தைகளை உருவாக்குபவன், மனிதனையே மந்தையாக்கியுள்ளான்! இந்த மந்தைத் தனத்தைப் பேனவே, வறுமைக்கு காரணங்களை சோடிக்கின்றான். உண்மை நிர்வாணமாகும் போது, பொய் பித்தலாட்டங்கள் தலைவிரிகோலமாகிவிடுகின்றன.

 

2001ம் ஆண்டு உலகில் 10 லட்சம் டொலருக்கு அதிகமான 71 லட்சம் பேர் கொண்ட மிகப் பெரிய சொத்துடைய ஒரு வர்க்கம் உருவாகியிருந்தது. இது 2000ம் ஆண்டில் 69 லட்சமாக இருந்தது. இந்த சொத்துடைய வர்க்கத்தின் மொத்த சொத்தின் பெறுமதி 26 20 000 கோடி டொலராகும். சொத்துடை வர்க்கம் தொடர்ந்து கொழுக்கின்றது. இதில் தென் அமெரிக்காவில் அதிகமாக அதாவது 8 சதவீத்தால் சொத்துடை வர்க்கம்  கொழுத்துள்ளது. மூலதனம் சுதந்திரமானது. அது தன்னதை; தான் விரிவாக்கும் ஜனநாயகத்தை ஆதாரமாக கொண்டது. மூலதனம் சில நாட்டில் சிலரிடம் குவிகின்ற போது, உலக மக்கள் இழப்பு நிபந்தனையானது அல்லவா! உலகில் அடிநிலையில் உள்ள 45 சதவீதமான மக்களின்; வருமானத்துக்கு சமமாக உலகில் அதிகூடிய வருமானத்தை உடைய 258 இரத்தை உறுஞ்சிக் கொழுக்கும் அட்டைகள் பெறுகின்றனர். இது தான் இந்த உலகின் ஜனநாயகம், சுதந்திரத்தின் வரைவு? எழைகள் பெருக்க, வசதியானவன் கொழுக்கின்றான். எதுவரை உனது அற்ப சொத்தையும் கொள்ளையடிக்கும் வரை தான். அதற்;கு பின்னால் மந்தையில் நீயும் நானும் விடப்படும் இடத்தில் நின்று, ஏஜாமானுக்காக எமையே சுய தியாகம் செய்வது தான் இந்த ஜனநாயத்தின் உயர்ந்த வடிவமாகிவிடும்.

 

ஜனநயகமான சுதந்திரமான சமத்துவமான உலகில் அண்ணளவாக ஒவ்வொரு நாலு செக்கனுக்கும் ஒரு மனிதன் உணவு இன்றி கொல்லப்படுகின்றான்;. அதாவது நாள் ஒன்றுக்கு 24000 பேர் பட்டினியில் இறக்கின்றனர். உலகமயமாதல் ஒவ்வொரு வருடமும் 88 லட்சம் மக்களை வெறுமனே பட்டினி போட்டே பலியெடுக்கின்றது. இந்த பலீயிடும் ஜனநாயக உரிமையில் சராசரி கலோரித் தேவையை ஒரு அமெரிக்கன் ஒரு ஆபிரிக்கனைவிட 78 சதவீதம் அதிகமாக பெறுவதன் மூலம் நுகர்கின்றான். அப்படியாயின் வறுமைக்கு காரணம் என்ன? ஆபிரிக்காவில் 30 நாடுகள் உள்ளடங்க மொத்த 50 நாடுகளில் 75 வீதமான மக்கள் வறுமையில் பட்டினியில் மடிந்த வழ்வதையே உலக ஜனநாயகமாக வருணிக்கின்றனர் உலக காவலர்கள். உலகில் உள்ள பணக்கார நாடுகள் உணவு உற்பத்தியை பேண 35 000 கோடி டொலரை விவசாயிகளுக்கு மனியம் வழங்குகின்றது. வளரும் நாடுகள் வெறும் 800 கோடி டொலரையே மானியமாக வழங்குகின்றது. இந்த 800 கோடி டொலரையும் நிறுத்தக் கோரி உலமயமாதல் வங்கிகள் நிர்பந்திக்கின்றன. பட்டினி வாழ்வை ஒரு நிரந்த கொடையாக ஜனநாயகம் வளரும் நாடுகள் மீது திணிக்கின்றன. 35000 கோடி டொலர் மானியத்தில் ஏற்றமதியாகும் உணவை சார்ந்து எழை நாடுகள் சுதந்திரமாக கையெந்தி பிழைக்க கோருவதே உலகமயமாதலின் உள்ளடக்கமாகும். இது உனக்கு உனது சந்ததிக்கும் புரியவில்லையா?

 

இயற்கையில் இருந்த நீரை செயற்கையாக அளிக்கும் உரிமையே சுதந்திர, ஜனநாயகம் என்ற பீற்ற முடியுமா? நீ நம்பும் ஜனநாயகம் அப்படித்தான் விளக்கி அழிக்கின்றது. இதை நீ புரிந்து கொள்ளதா வரை உன் உதவியின்றி இது நடக்கவில்லை. குடிக்கும் நீர்ருக்கு பணம் கொடுத்து வாங்கும் மனித அவலம் எப்படி உருவானது? எல்லா பண்ணகார நாடுகளிலும் குடிக்கும் தண்ணிருக்கு பணம் அறவிடப்படுகின்றது. எல்லா வளரும் நாடுகளில் நகர்புறங்களிலும் தண்ணிருக்கு பணம் அறவிடப்படுகின்றது. இதைவிட சந்தையில் போத்தல் தண்ணிர் வந்துவிட்டது. குடிக்கும் தண்ணிர் பணம் கொடுத்த வாங்கி குடிக்கும் அவலத்தை 100 வருடங்களுக்கு முன் யாரும் நம்பியிருப்பார்களா? இயற்கை வளத்தில் நீர் அழிகப்படுகின்றது. உலகில் 150 கோடி மக்கள் குடிக்க தண்ணிர் அற்ற உலகமயமாதலில் வாழ்கின்றனர். இந்த உன்னாதமான அமைப்பில் யார் குற்றவாளி. இயற்கையா? இல்லை. மூலதனமா? காடுகள் வரைமுறையற்ற வகையில் அழிகப்படுகின்றது. நீரை மூலதனம் உறுஞ்சுகின்றது. ப+மியில் உயிரிணம் தோன்றியது முதல் நீரின் இயற்கை இருப்பு சிதைந்தது கிடையது. கடந்து 100 வருடத்தில் நீர் காணமல் போவது ஏன். மக்கள் தண்ணிரை குடிப்பதால் அல்ல. 2025ம் ஆண்டில் உலகில் 500 கோடி மக்களுக்கு தண்ணிர் குடிக்க கிடைக்காது என்று இந்த மூலதன அமைப்பே எச்சரிக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் 6600 கன மீற்றர் நீரை பெறுகின்றான். ஆனால் 2025 இல் 4800 கன மீற்றா நீர்தான் கிடைக்கும் உலகமயமாதலின் சூறையாடல் விதி இது. 1950 இல் ஒரு மனிதனுக்கு கிடைத்து 17 000 கன மீற்றராகும். மூலதனம் அழிக்கின்ற, நுகர்கின்ற வேகத்தில் மனிதன் உணவுக்கு மட்டமின்றி, குடிக்க தண்ணிரே இன்றி வாழும் அவலம் உலகமயமாதலின் கொடையாக உங்கள் முன் படைக்கின்றனர். இது நீ சுவாசிக்கும் காற்றுக்கு நிகழ்ப் போகின்றது? சுத்தமான கற்றை சுவசிக்க பணம் கொடுத்து வாழும் நாள் அதிகமில்லை! இதை தான் ஜனநாயகத்தின் பெயரில் சுதந்திரத்தின் பெயரில் நாம் தங்கத் தட்டில் எந்தி மட்டைக்குள் இறக்குகின்றோம்;. எதற்காக சுடுசுறனையற்ற வகையில் இதைச் செய்கின்றோம். உலகில் நீர் வளமுள்ள 269 ஆறுகள் மற்றும் அருவிகளிள் சார்ந்து வாமும் பூமியில், அனைத்த உயிரிணங்களும் வாழ்கின்றன. ஒவ்வொரு நீர் வளங்கள் சார்ந்த 2 நாடுகள் உயிர்வாழ்கின்றன. இந்த அருவிகளில் நீர் வருவது குறையும் அளவுக்கு இயற்கை வளம் கற்பழிகப்படுகின்றது.  ஏன்? ஒரே ஒரு கனம் சிந்;தித்து பார்த்தயா!ஒவ்வொரு செக்கனும் நீர் சார்ந்த நோயால் 9 பேர் கொல்லப்டுகின்றனர். உலகமயமாதல் சுதந்திரமாக குடிக்க சுத்தமான தண்ணிரை வழங்க மறுக்கும் உன்னதமான ஜனநாயகத்தில், நாள் தோறும் நீர் சார்ந்த நோயால் 30 000 பலியெடுக்கப்படுகின்றனர். 30000 மக்கள் பலியிடப்பட்டு கிடைக்கும் இரத்தமே, நீ சுதந்திரமாக குடிக்கும் கொக்கோகோல முதல் அனைத்தும். மற்றவன் குடிக்க தண்ணிர் இன்றிய விடாயில் தான் உனது வக்கிரமான குளிர்மை பேனப்படுகின்றது. இதுதான் ஜனநாயகத்தினதும், சுதந்திரத்தினதும் எல்லை. 

 

ஒவ்வொரு மூன்று செக்களுக்கும் ஒரு குழந்தை தனது 5 வயதை அடைய முன்பு உலகமயமாதல் பலியெடுக்கின்றது. அதாவது வருடம் 1.2 கோடி குழந்தைகளை தமது ஐந்து வயதை அடைய முன்பு மூலதனம் தனக்கு இரையாக்கின்றது. உலகமயமாதமல் இதை நிறுத்தப் போவதில்லை. புறநிலையாக நடைமுறை ரீதியாக உலகமயமாதல் மருத்துவம், உணவு மானியம் போன்றவற்றை நிறுத்தக் கோரி மூன்றாம் உலக நாடுகளின் உள்ள வரவு செலவை திருத்துகின்றது. உன்னதமான உலகமயமாதலை போற்றும் ஒவ்வொரு பன்றியும், குழந்தைகளின் பலீயிட்டின் மேல் தான் தனது சுதந்திரத்தை ஜனநாயகத்தை  நிலைநிறுத்துகின்றான்.

 

ஒவ்வொரு செக்கனும் உலகில் இரண்ட மனிதர்களுக்கு மருத்து கொடுக்க மறுத்து உலகமயமாதல் மூலதனம் பலியெடுக்கின்றது. அதாவது வருடம் 5.5 கோடி மக்கள் மருத்துவம் மறுக்கபட்ட ஜனநாயக சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தால் கொல்லப்படுகின்றனர். உலகளவில் மருந்து உற்பத்தியை கட்டுப்படுத்தும் விரல் விட்டு எண்ணக் கூடிய பன்நாட்டு நிறுவணங்கின் ஒரே நோக்கம், மூலதனத்தின் கொள்ளையே. இந்த மூலதனம் வீங்கி வெடிக்க 5.5 கோடி மக்களின் உயிர் காவு கொல்லப்டுகின்றது. இதை மறுப்பது எதிர்ப்பது பயங்கரவாதமாகும்;; என்பது உலகமயமாதலின் அடிப்படையான ஜனநாயக கொள்கையாகும்.

 

ஒவ்வொரு 2 செக்களுக்கும் ஒரு உதைபந்தாட்ட விளையாட்டரங்கு அளவுக்கு காடுகளை அழிப்பது யார்? அதாவது கிழமைக்கு இரண்டு லட்சம் ஹெக்கடர் காடுகள் முற்றாக அழிக்கப்படுகின்றது. கடந்த 10 முதல் 20 வருடத்துக்கு முன்னிருந்த காட்டில் எஞ்சியிருப்பது 40 சதவீதக் காடுகள் மட்டுமேயாகும். இன்று உலகில் இருக்கும் 17 லட்சம் ஹொக்டர்  காடுகள் உள்ளன. இதில் 3.6 லட்சம் தவரங்களும், 9.9 லட்சம் முதுகெழுபற்ற உயிரணமும், 50 ஆயிரம் முதுகெழுபுள்ள உயிரணமும்; உள்ளன. ஒட்டு மொத்தமான ஒன்று முதல் மூன்று கோடி தாவர மற்றும் விலங்கு வகை உயிரணங்கள் காட்டில் வாழ்கின்றன. இதை மூலதனத்திடம் இருந்து எப்படி பாதுகாப்பது?

 

இன்று மக்களை அடக்கும் ஆயுதத்துக்காக நிமிடத்துக்கு உலகளவில் 35.9 லட்சம் டொலர் செலவு செய்யப்படுகின்றது. 1985 இல் ஒரு போர் வீரனின் பயிற்சிக்காக செலவு செய்வதை விட 60 மடங்கு குறைவாகவே அறிவியல் அடிப்படையை புரிய வைப்பதற்காக குழந்தைக்கு செலவு செய்யப்படுகின்றது. பசி நோய், குடிநீர் இன்மை, மருத்துவம் இன்மையால் நாள் ஒன்றுக்கு 2880 குழந்தைகள் மூலதனத்தின் லாப வேட்கைக்கு பலியிடப்படுகின்ற ஜனநாயயகமே இன்று  உலகமயமாகின்றது. ஒரு ஆக்கிரமிப்பு இராணுவ வீரனுக்கு உலகம் ஆண்டு ஒன்றுக்கு செலவு செய்யும் தொகை 12330 டொலர். ஆனால் பாடாசாலை மாணவனுக்கு 219 டொலரே செலவு செய்யப்படுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஜீலியஸ் சீஸர் யுத்தத்தில் ஒரு பகைவனை; கொல்ல 75 அமெரிக்க சதம் தேவைப்பட்டது. நெப்போலியன் பகைவனைக் கொல்ல 3000 டொலர் செலவு செய்யப்பட்டது. இது முதலாம் உலக யுத்தத்தில் 21000 டொலரும், இரண்டவது உலக யுத்தத்தில் 2 லட்சம் டொலரும் தேவைப்பட்டது. மக்கள் வாழ்வு பிழியப்பட்டு மூலதனத்தின் யுத்தவெறி ஒரு தொழில் துறையான முதலீடாக மாறியிடுகின்றது. 90 ஆயிரம் தொன் நச்சுப் பொருட்களை வியட்நாம் மக்களுக்கு எதிராக வீசிய அமெரிக்கா, 18 லட்சம் எக்கர் நிலத்தை முற்றாக நாசமாக்கினர். வியட்நாம் யுத்தத்தில் ஒவ்வொரு வியட்நாமியனுக்கும் எதிராக 160 கி.;கிராம் குண்டை அமெரிக்க போட்டு உலக ஜனநாயகத்தை பாதுகாத்தாக மார்பு தட்டியது.. வியட்நாமில் ஒவ்வொரு வியநாமியனுக்கு எதிராக 3 கிலோ நச்சு பொருட்கனை சுதந்திர அமெரிக்கா வீசி நச்சிட்டது. அமெரிக்கா வீசிய குண்டு மற்றும் பீரங்கிகள் துளைத்த துளைகளின் அளவு 1.48 லட்சம் ஹெக்டா நிலத்தின் அளவுக்கு சமமாகும். 700 அணுக் குண்டுக்கு சமாமாக 1.4 கோடி தொன் வெடிகுண்டுகளை அமெரிக்கா வியட்நாம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தியது. வானில் இருந்து வியட்நாமுக்கு எதிராக விசிய 80 லட்சம் தொன் வெடிகுண்டுகளின் அளவை, இரண்டாம் உலக யுத்தத்தில் வீசிய மொத்த வெடி குண்டுடன் ஒப்பிட்டு ஆராயில் மூன்று மடங்கு அதிகமாகும். உலக அமைதி ஆய்வுக் கழகம் முதலாவது உலக யுத்தத்;தில் இறந்தவர்களில் 5 சதவீதமானவர்கள் மட்டுமே மக்கள் என தெரிவித்தது. இதுவே இரண்டாம் உலக யுத்தத்தில் 48 சதவீதமாக மாறியது.  இது வியநாமில்  90 சதவீதமாக மாறியது. யுத்தம் நவீனத்துவமாக, தொழில் நுட்பம் குறிப்பானதாக மாற, மக்கள் யுத்தத்தில் பலியிடப்படுகின்றனர். இரண்டாம் உலக யுத்தத்தில்  போலந்தில் 60 லட்சம் பேர் இறந்தனர். இதில் 11 சதவீதமானவர்கள் மட்டுமே போர்முனையில் இறந்தனர். மிகுதியானவர்கள் பாசிச சட்ட வரையறைக்குள் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலக யுத்தத்தில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 220 போலந்து மக்களும், 130 சோவியத் மக்களும், 108 யுக்கோசிலேவியா மக்களும், 15 பிரஞ்சு மக்களும் கொல்லபட்டனர். யுத்தம் மக்களுக்கு எதிரானதாக இருந்தது போய் குறிப்பாகவும் மாறிவிட்டது. என் யுத்தங்கள் நடக்கின்றன? யார் இதில் லாபம் பெறுகின்றனர். மக்களுக்கு இறுதியில் கிடைப்பது என்ன? இயற்க்கை எதை அனுபவிக்கின்றது?

 

உலகில் 1985 இல் 25000 வானோலி நிலையங்களும், 100 கோடிக்கு மேற்பட்ட வனோளிப் பெட்டிகளும்;, 40 கோடி தொலைக் காட்சி பெட்டிகளும், லட்சகனக்கான செய்தி பத்திரிகைகளும் உலகை வழிநாடத்தின. அமெரிக்கா பாதுகாப்பு இலக்கா உலகெங்கும் 250 வனோலி நிலையங்களும், 40 தொலைக் காட்சி நிலையங்களையும் சொந்தமாக வைத்திருந்தன. மற்றும் செய்தி தகவலை உள்ளடக்கிய 80 லட்சம் பிரதியை அச்சிட்டது. பென்டகன் வருடம் தோறும் 24 செய்தி படங்களை வெளியிட்டது. பிபிசி 3250 பேர் பணிபுரிந்தனர். 46 மொழியில் வாரம் 725 மணி நேர வெளிநாட்டு மொழியில் ஒளிபரப்பைச் செய்தது. பிரஞ்சு நாடு 77 நாடுகளுக்கு 6000 மணி நேர ஒளிபரப்பை வருடாந்தம் செய்தது. இப்படி பல. எதற்காக இதை ஒளிபரப்புகின்றனர்? எதை நியாப்படுத்த செய்கின்றனர்? குறைந்த பட்சம் இந்த கட்டுரையின் உள்ளடக்கம் சார்ந்த உண்மைகளை எப்போதாவது செய்துள்ளர்களா? உண்மையில் நேரடி அடக்கு முறையற்ற அடிமைகளை இவை உற்பத்தி செய்கின்றன? உண்மைகளை குழி தோண்டி புதைக்கவும், மலட்டு சமுதாயத்தை படைக்கவும் இவை உழைக்கின்றன. ஆக்கமும் அறிவுமற்ற மலட்டு மந்தைகளைத் தான், சுதந்திரமும் ஜனநாயகமும் அன்போடு ஆராத் தழுவி நேசிக்கின்றன. இது கற்பனை அல்ல நிஜாம்.

 

29 பேர் தமது மனைவியை கொடுமைப்படுத்தியவர்கள். 7 பேர் மோசடி குற்றச் சாட்டக்காக கைது செய்யப்பட்டவர்கள். 19 பேர் கள்ளக் கசோலை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். 117 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு தொழில் நிறுவனங்களை திவலாக்கி கொள்ளையிட்டவர்கள். 3 பேர் பொது இடத்தில் வன்முறையில் ஈடுபட்டதால் கைதாகி சிறையில் இருந்தவர்கள். 71 பேர் வங்கி மோசடியில் ஈடுபட்டதால் வங்கி அட்டை (கிரடிக் காட்,அல்லது காட்டி புளு) மறுக்கபட்டவர்கள். 14 பேர் போதைவஸ்து குற்றச் சாட்டுக்காக கைதானவர்கள். 8 பேர் கடைகளில் திருடியதற்காக கைதானவர்கள். 21 பேர் குற்றம் சாட்டப்பட்ட வாழக்குகாளுக்காக சிதி மன்றம் செல்வவர்கள். 84 பேர் குடித்துவிட்டு வாகனம் ஒட்டியதற்காக 2002 இல் கைதானவர்கள்.

 

இவர்கள் யார்? 535 பேர் பணியற்றும் உலகையே அடக்கியாளும் ஜனநாயக பராளுமன்றமான அமெரிக்காவின் உறுப்பினர்களிள். அமெரிக்கா சட்டத்துக்கு உட்பட்டு குற்றம் சட்டப்பட்ட தண்டிக்கப்பட்டவர் பட்டியல்தான் இது. குற்றங்கள்  இதைவிட பல மடங்கு? ஆனால் ஜனநாயகம் சமூகக் குற்றவாளிகளின் தங்குமிடமாகின்றது. இவாகள் தான் மக்களை அடக்கியாளவும், அவர்களை கொள்ளையிடவும் சட்டங்களை இயற்றியவர்கள்.. அந்த சட்டங்கள் இவர்களை விலைக்கு வாங்கிவிடுவது பொதுவான வடிவம். சில மட்டும் இப்படி சந்திக்கு வந்துவிடுகின்றது. ஈராக் போரில் இந்த குற்றவாளிகள் தான் அங்கு ஜனநாயகத்தை மீட்க படையெடுத்தவர்கள்.  தம்மைத் தாம் ஜனநாயகவாதிகள் எனக் கூறக் கொள்கிள்பவர்கள்.. சொந்த நாட்டை சட்டத்துக்கு புறம்பாக கொள்ளையிட்டவர்கள், ஈராக்கை கொள்ளையிடவும் முயல்கின்ற கனவன்களின் கூடாரம் தான், அமெரிக்கா பராளமன்றம். இதை தெரிந்து கொள்ளால, புரிந்து கொள்வது எப்படி?சமூகத்தைப் புரிந்து கொள்வது எப்படி? உனது முட்டாள் தனமானமான மந்தை வாழ்வை விட்டு ஒழிப்பது எப்படி? இதில் இருந்து சுய அறிவைப் பெறுவதற்க்கு குறைந்த பட்சம் படிப்பது அவசியமானது. படிப்பது என்பது பரிட்சைக்காக படிக்கும் படிப்பைக் அல்ல. சினிமாவைப் பற்றியோ, அன்றாடச் செய்திகள், கிசுகிசுக்களை அல்ல. மாறாக இயற்கை குறித்து, அதில் வாழும் மனிதன் எதார்த்தமான வாழ்வு குறித்து, மக்களுக்காக தம் வாழ்க்கையை அர்ப்பனித்த மனிதர்களின் அளப்பறிய அறிவுக் கள்சியங்களை படிப்பது அவசியம். இது பல உனக்கு முரண்பட்டதாக, உனது எதார்த்துக்கு புறம்பானதாக இருக்கலாம்;. ஆனால் அதில் மனிதனின் எதார்த்த வாழ்வு குறித்து, எமது முன்னோர்கள் முதல் இன்றைய வாழ்வுவரை அறிவைத் தேடிப் படிப்பது மட்டுமே, நிகழ்கால எதிர்கால வாழ்வை புரிந்து கொள்ள உதவும்;. எனது, எமது வாழ்வுக்கும் மற்றும் எமது சந்ததிக்காகவும் உண்மையாக இருக்கமுடியும். நான், எனது, எனது சந்ததி, என்று நீளும் எமது பார்வையில் இருக்கின்ற சுயநலன்களைக் கூட, எதிர்கால தலைமுறைக்காக வாழும் எமது சுயதியாகம் உண்மையானதாக நேர்மையானதாக இருக்க வேண்டும் எனின், நீ ஒரு மந்தையாக இருக்கின்றயா அல்லது ஒரு சுய சிந்தனையள்ள மனிதானாக இருக்கிறயா என்பதை நீ தெரிந்து கொள்வது அவசியம்.

 

இந்த வகையில் மந்தை அறிவியலுக்கு வெளியில் எமக்காக வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற மனித சிந்தனைகள், அறிவுகளை பல தரப்பட்ட தரப்பில் இருந்து படிப்பது அவசியம். நான் அண்மையில் வாசித்த நூல் ஒன்றை குறித்தும், அதில் மனிதத்துவம் எப்படி ஒரு அரசனால் பிரிட்டிஸ் எகாதிபத்தியத்துக்கு எதிராக வீரமாக போராடியபடி கையாளப்பட்டது என்பதற்கு ஒரு சிறு அறிமுகத்தை தரமுயல்கின்றேன்.

 

1.திப்பு - தொகுப்பு - வெ.ஜீவானந்தம், வெளியிடு அமைதி அறக்கட்டளை
(200 ஆண்டுக்கு முன்பு வெள்ளையருக்கு எதிராக கடைசிவரை கடைசி வீரப்போர் புரிந்த இந்தியா மன்னன் தான் திப்புசுல்தான்.)

 

1789 இல் அமைச்சர்களுக்கு திப்பு ஆற்றிய உரையில்

 

""எகிப்திய பிரமிடுகள் அடிமைகளால் கட்டப்பட்டன. சீனப்பெருஞ்சுவர் அடிமைகளின் ரத்தத்தாலும்;, எலும்புகளாலும் உருவாக்கப்பட்டது. ரோமபுரியிலும், பாபிலோனியாவிலும், கிரேக்கத்திலும், கார்த்தேஐpயிலும் உருவாக்கப்பட்ட மாபெரும் அரண்மனைகளும் கட்டடங்களும் சங்கலிகளால் பிணைக்கப்பட்டு சவுக்கடிகளால் ரத்தம் சிந்திய எண்ணற்ற அடிமைகளின் உழைப்பைக் கசக்கிப் பிழிந்து உருவானவை. இந்தியாவின் கிழக்கிலும், மேற்கிலும் உருவாக்கப்கப்பட்டுள்ள அத்தனை நினைவுச்சின்னங்களும் கட்டிடங்களும், கலைச்சின்னங்களும் அந்த மன்னர்களின் மாட்சியைக் கூறவில்லை. அவற்றை உருவாக்கக் கண்ணீரையும்;, ரத்தத்தையும் சிந்திய அபாக்கியவான்களாகிய அந்த அடிமைகளின் வேதனைமிக்க மரண ஒலங்களின் சாட்சிகளாக அவை நிற்கின்றன.

 

அந்த நினைவுச் சின்னங்கள் எதை உணர்த்திக் கொண்டுள்ளன? என்ன செய்தியைச் சொல்லுகின்றன? அது மன்னர்களின் போலித்தனமான புகழ் மாயையை, அவர்களின் வெறுமையை, கொடுங்கோன்மையை எதிரொலிக்கின்றன. சர்வாதிகாரக் கொடுமையால் உருவான அந்த சாம்ராஐ;ய சிதைவுகள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வேதனைகளைப் பதிவு செய்வதாக இருக்கிறது.

 

ஆனால், நமது இந்திய மண்ணின் பெருமைக்குரிய மரபு என்ன? இதன் அண்மைக்கால தாஐ;மகால் முதல் 2000 ஆண்டுத் தொன்மை வாய்ந்த சாஞ்சிஸ்தூபி வரை யாவும் சுதந்திரமான ஈடுபாடு கொண்ட மக்களின் உழைப்பிலேயே உருவாகின. இன்னும் பின்னோக்கிப் பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும் ஏதேனும் ஒரு நினைவுச்சின்னம், கட்டிடம், கலைப்படைப்பு அடிமைப்படுத்தப்பட்டு, மக்களைத் துன்புறுத்தி உருவானது என்று சுட்டிக்காட்ட முடியுமா? 2000 ஆண்டுகள், என்ன, அதற்கு முன்னரும் கூட இந்த நாடு எவரையும் வற்புறுத்தி, துன்புறுத்தி, கூலியின்றி உழைக்கச் செய்யும் அந்நியர்களின் அநாகரீக முறைகளைக் கையாண்டதில்லை."

 

இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால் மலபார் பகுதி அதிகாரிகள் அரசுக் கட்டிடங்களைக் கட்ட சிற்ப தொழிலநுட்பக் கலைஞர்களைச் சம்பளம் ஏதுமின்றி உழைக்க வற்புறுத்துவதாகக் கேள்விப்பட்டேன். எனது தந்தை கட்டிய தரியா தவுலத் அரண்மனையை விரிவுபடுத்துவதில், எந்த விருப்பமுமில்லாத கைகளின் உழைப்பும் இருக்கக் கூடாது. அத்துடன் மட்டுமல்ல, அவர்களது கடந்க கால உழைப்புக்குமான கூலி உடனடியாகத் தரப்பட வேண்டுமென உத்தரவிடுகிறேன். இனி எவரையும் வற்புறுத்திக் கூலியின்றி வேலை செய்யச் சொல்வது சட்டப்படி குற்றமாகும். இச் சட்டத்தைக் கடுமையாக அமல்தார்கள் உடனடியாக அமலாக்க வேண்டும். இப்போக்கினை அனுமதித்தால் அது அடிமைத்தனத்திற்கு சுலபமாக வழிவகுத்து விடும்.

 

மனிதர்களின் கண்ணீரும், ரத்தக்கறையும் படிந்த எந்த அரண்மனையோ, சாலையோ, அணையோ புகழுக்கு உரியதாக ஆக முடியாது"

 

 புதிய மது விலக்கு பற்றி திப்பு

 

"அனாதை பெண்களையும் - குழந்தைகளையும் விற்பது தடை செய்யப்படுகிறது. அரசு அதிகாரிகள் முன்பு இத்தகைய வணிகத்தை மேற்கொண்டிருந்தனர்.

 

 எகிப்தின் பேரோக்கள் அடிமைகளைத் கொண்டு பிரமிட்டுகளைக் கட்டினார்கள். அடிமைகளின் ரத்தத்தாலும், எலும்புகளாலும் கட்டப்பட்டதே சீனப் பெருஞ்சுவர். அப்பாவி மக்களின் கண்ணீரிலும், வியர்வையிலும், ரத்ததிலும் எழுப்பப்படும், எந்த மாளிகையோ, சாலையோ, அணைகளோ பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதாகாது. 

 

1789-ல் தரியா தவுலத் உருவாக்கத்தின் போது முழு மது விலக்கு எனது இதயம் கவர்ந்த லட்சியம். மக்களின் பொருளாதாரம், ஆன்மீகநெறி, இளையோரின் எதிர்காலம் இவற்றை நாம் மனதில் கொள்ள வேண்டும். கிராமங்ஙளில் உள்ள மத மடங்களில் போதைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. பஃகிர்கள் தங்கள் மடங்களை விட்டு வெளியே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைக் கடுமையாக எச்சரியுங்கள். இதை மீறுபவர்களை நாடு கடத்துவங்கள்."


 

தண்டனைகள் பற்றி திப்பு

 

"கசையடி போன்ற தண்டனைகள் அர்த்தமற்றவை. மனிதாபிமானமற்றவை. அவற்றால் பலன் எதுமில்லை. அவை குற்றவாளியைக் கேவலப்படுத்துகின்றன. அதற்கு உத்திரவிடும் மனிதனைத் தலைகுனியச் செய்யும் இழிதன்மை கொண்டது அது."

 

1788 அமில்தார்களுக்கான உத்திரவு

 

 ""விவசாயமே நாட்டின் ஐpவநாடி. வளமிக்க இம்மண் உழைப்பவர்களுக்கு எல்லாம் தரும். இல்லாமையும் வறுமையும் சோம்பல், அறியாமை அல்லது ஊழல் இவற்றால் உருவாவதே."

      
1787 தண்டனைகள் குறித்து

 

"நமது மக்களுடன் முரண்படுவது என்பது நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வதாகும். மக்களளே நமது வாளும் கேடயமும். அவர்களது கொடையை நமது அரசு. நமது சக்தி முழுவதையும் அந்நிய எதிரிகளை அழிப்பதற்கே பயன்படுத்த வேண்டும்."

 

மலபார் கவர்னருக்கு திப்புவின் கடிதம் - 1785

 

"மலபாரில் சில இனப் பெண்கள் மார்பகங்களைத் துணியால் மூடாமல் செல்வது எமக்கு வருத்தம் அளிக்கிறது. நல்ல உணர்வுக்கும், ஒழுக்கத்திற்கும் ஒவ்வாத உறுத்தலான காட்சி அது. அது பழங்குடி மக்களின் வழக்கமென நீங்கள் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அது அவர்களின் தொன்மையான பழக்கமா? இல்லை வறுமையின் விளைவா? வறுமை காரணமென்றால் அவர்கள் மேலாடை அணிவாற்கான அனைத்து உதவிகளையும் உடன் வழங்குங்கள். அது அவர்கள் மரபு என்றால் அவர்களது இனத் தலைவர்களிடம் பேசி, ஒத்துழைப்பைப் பெற்று அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். இதற்கான முயற்சிகளை அவர்களது மத நம்பிக்கையைப் புண்படா வண்ணம் நட்பு ரீதியில் மேற்கொள்ளுங்கள். அவர்களது நம்பிக்கையின் வேர்களை உணர்ந்து அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.

 

இத்தகைய கட்டுப்பாடு ஆண்கள் மீதும் உண்டா? அப்படி அல்லாமல் பெண்கள் மீது மட்டும் இத்தகைய பழக்கம் சுமத்தப்பட்டால் அது நீதிக்குப் புறம்பானது. முரண்பாடானது

 

மேலாடை இல்லாத பழக்கம் வறுமையின் விளைவா அல்லது அரசர்கள் விதித்த தண்டனையா? இரண்டில் எதுவானாலும் அதை முடிவுக்குக் கொண்டு வர அந்த மக்களுக்கு உதவுவது நல்லது.

 இது பழைமைப் பழக்கம் என்றாலும் கூட தமது தாய்மார்களும் சகோதரிகளும் பாதி நிர்வாணமாக நடமாடுவதை எப்படி இந்தப் பழங்குடி இன இளைஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்?"

 

 திப்புவின் நூலகத்தில் 2000 மேற்பட்ட உலகளவிய நூல்கள் இருந்தன. இன்று அவை அனைத்தும் பிரிட்டனில் உள்ளது. மனிதப் பண்பை, மனிதத்துவத்தை உருவாக்குவது சக மனிதனை பற்றிய உனது பார்வையில் இருந்து தான். இதைத் தெரிந்து கொள்வது செயலாற்றுவதுமே மனிதனின் உயர்ந்த மனிதத்துவமாகும்

 

பி.இரயாகரன்