06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

சிறுவணிகம் சிறு தொழில்கள் உயர்த்திப்புடி ! சூறையாடும் ரிலையன்சை துரத்தியடி !


21-04- 2007 புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் உரை

 

மயூரனுடன் இது தொடர்பாய் நடந்த விவாதத்தின் பகுதி கீழிணைக்கப்பட்டுள்ளது

 


உங்கள் கட்டுரை சொல்லவரும் அரசியல் நிலைப்பாடு முற்றிலும் தவறானது.பன்னாட்டு நிறுவனங்களுக்கு பதில், கூட்டுறவு நிறுவனைங்களை அமைப்பதா ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்? இல்லையே!

 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பது கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதல்ல.அரசு அதிகாரம் அல்லாத காலத்தில் கீழ் இருந்து கட்டிய கூட்டுறவு நிறுவனங்கள், கம்யூன் கூட்டு வாழ்க்கை முறை அனைத்தும் கடந்த காலத்தில் தோல்வி பெற்றவையே. இது வரலாறு. அது அராஜகத்தன்மை கொண்டதாக கோட்பாட்டளவில் நடைமுறையில் அமையும்.மற்றும் தரம், மலிவு, போன்ற இதர காரணங்களை முன் வைக்கின்ற வாதம், சந்தை பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஏமாற்று வித்தை. தரம், மனம், குணம் … எப்படி யாரால் ஏன் தீர்மானிக்கப்படுகின்றது.மனிதன் கடந்த 30 வருடங்களுக்கு முன், இந்த தரம் எல்லாம் எங்கே இருந்தது. தரம் என்பது என்ன?மலிவு என்பதன் சந்தை விதி என்ன? மலிவு எதனுடன் ஒப்பிடுவது. வர்த்தகருக்கும், விவசாயிக்கும் இடையில் அந்த மலிவை எப்படி உருவாக்க முடியும்? முடியாது. விவசாயி பிச்சைக்காரனாகிக் கொண்டு இருக்கிறான்.இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் மலிவு பற்றிய மாயை, சந்தை கைப்பற்றும் வரை தான். இந்தியாவின் குளிர்பானத்துக்கு இப்படித் தான் நடந்தது.அடிப்படையில் இன்றைய மலிவும் சலுகையும், நாளை சிறுகடைகள் மூடப்படும் வரைதான். பின் வாழ்வுக்கு எட்டாத விலைக்கு சென்றுவிடும். விவசாயிக்கு கொடுப்பதோ மிகக் குறைந்த விலை தான்.பிரான்சில் விவசாயிகளின் பொருட்களின் விலையை தீர்மானிப்பது சந்தை விலையல்ல. மிகப்பெரிய நிறுவனங்களின் லாபவிதிதான். மலிவாக வாங்குவதும், அதற்கு எதிராக போராட்டமும் கூட நடக்கின்றது. கடைக்குள் புகுந்து பொருட்களை அழிப்பது, வீதியில் வாகனத்தை தடுத்து நிறுத்தி பொருளுக்கு தீ வைப்பது போன்ற பல போராட்டங்கள். குறிப்பாக தொழிற்சாலை உற்பத்திகளைக் கூட இப்படி கட்டுப்படுத்த தொடங்கியுள்ளது.குறிப்பாக பாரிசுக்குள் இப்படியான கடைகள் போட முடியாதபடி சட்டங்கள் உள்ளது. கடை வந்தால் பல பத்தாயிரம் கடைகள் மூடப்படவும், பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.


 

'இதில் ஏகாதிபத்தியவாதிகள், பெருமுதலாளிகளோடு சில்லறை வணிகத்தில் புரையோடிப்போயிருக்கும் இடைத்தரகுச்சுரண்டலாளர்களும் எதிர்நிலையில் தள்ளப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுவதுதான்" இங்கு இடை தரகர்களை இல்லாத ஒழித்தல் என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையல்ல. மாறாக பன்னநாட்டு நிறுவனங்களின் இன்றைய அடிப்படையான வேலைத் திட்டமே அது தான்.குறிப்பாக கடந்த 20, 30 வருடங்களுக்கு முந்தைய தரகு முதலாளித்துவம் என்ற இடைதரகு வர்க்க அமைப்பை இன்று இல்லாது ஒழித்தல் என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. லாப வீகித்தில் முக்கியமான கூறுகளில் ஒன்று.ரிலையன்ஸ் விவாசயிகளிடம் பொருளை நேரடியாக வாங்குவது கூட இதில் ஒன்று தான். குறிப்பாக பாருங்கள் விவசாயி சந்தையில் நேரடியாக விற்றல் என்பது கூட இன்று மறுக்கப்படுகின்றது. இந்த வகையில் நவீனமயமாக்கல் என்ற பெயரில், சந்தையில் விவசாயிகள் விற்பதையும் படிப்படியாக ஒழிக்கின்றனர்.சந்தையில் சிறியளவிலான ஏழைகள் கூட பொருட்களை வாங்கி விற்கின்றனர். சிறு வணிக உள்ளடகத்தில் இருப்பது வாழ்வதற்கான பொருளாதாரமே ஒழிய, சுரண்டலுக்கான பொருளாதாரமல்ல. உலகளவில் இடைத்தரகு செய்கின்ற பன்னாட்டு நிறுவனங்களை உங்கள் வழயில் ஒழிக்க முடியாது. மாறாக ஏழை எளியதுகள், வாழ்வுகாக நடத்துகின்ற உழைப்பை ஒழிப்பது, யாருக்கு லாபம். நிச்சயமாக ஏகாதிபத்தியத்துக்குத் தான்.இடைக்கால மாற்று என்பது ஏழை எளியவர் வாழ்வை அழிப்பதும், பெரும் இடை தரகர்களை பாதுகாப்பதும் தான். அரசு துறையை தனியார் மயமாக்கும் போது, தொழிலாளியை ஏமாற்ற பங்குகளை அவனுக்கு விற்பது போல்தான் இதுவும்.
'அல்லது ரிலையன்சுக்கு வெற்றியளிக்கக்கூடியதாயிருக்கும் பலமான பக்கங்களை உள்வாங்கி, விவசாயிகளுக்கும் சிறுவணிகர்களுக்கும் ஒரு இடைக்காலத்திட்டத்தினை, நவீனத்துவத்தை உள்ளடக்கிய இடைக்கால மாற்றினை பரிந்துரைப்பது அவசியமற்றதா?"இது இடையான மாறறு அல்ல. மாறாக ஏகாதிபத்தியத்துக்கு உதவுவதற்கான, செல்வதற்கான பாதை. சந்தை விதியை தீhமானிப்பது எது? சந்தையின் சட்டம், ஒழுங்கு அதைச் சுற்றி ஒரு அரசு உள்ளது.இன்று தன்னார்வுக் குழுக்களின் வேலைத்திட்டம் என்ன? இந்த இடைக்கால மாற்றை முன்வைப்பது தான். இது போன்ற கூட்டறவு அமைப்புகளை நிறுவுகின்றது. இடைக்கால தீர்வை இப்படித்தான் அது வைக்கின்றது. இவை எல்லாம் நடைமுறையில் ஏகாதிபத்திய அமைப்பைப் பாதுகாக்கின்ற இடையிடான வடிவங்கள், அல்லது இடையீடுகள் தான்."இப்போதிருக்கும் படிநிலைத்தரகர்கள் நிறைந்த, பழசாகிப்போன சில்லறை வணிகப் பொறிமுறையை எமது அசைவியக்கம் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதுதான்."இது அதியத்தக்க ஒன்று. இந்த எடுகோள், ஏகாதிபத்தியம் இதைக் கோரும் வரை எந்த அசைவியக்கமும் இதை அசைக்க முனையவில்லை.ஒரு உற்பத்தி முறை முதல் விற்பனை முறை வரை மாற்றத்துக்குள்ளவது அவசியமானது தான்;. ஆனால் அவை சமூகத்தின் பொது நலன்களுடன் தொடர்புடையவை. இடைத்தரகரை ஒழிக்க வேண்டும் என்றால் பன்னாட்டு இடைததரகை ஒழித்தல் பற்றி பேசுங்கள். சில்லறை வணிகத்தை ஒழித்தல் என்றால், அதனால் பாதிக்கப்படும் மக்களின் மாற்று வாழ்வை பற்றிய விடையத்தக்கு வருங்கள்.இடைக்கால மாற்று என்பது, ஏகாதிபத்திய அமைப்புமுறை தூக்கியெறியும் போராட்டம் தான்.
மக்களின் அதிகாரம் மூலமான மாற்றுத்தான், அதற்கான போராட்டத்தில் தான் பொருத்தமான மாற்று தேர்வுகள சாத்தியமானது. அது பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களையும் உள்ளடக்கியது.


பி.இரயாகரன் - சமர்