மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ உள்ளிட்ட ஜோதிபாசு கும்பலின் ஏகாதிபத்திய அடிவருடித்தனம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். இதற்கு முன்பு CPM கட்சி ஸ்ட்ரைக் அறிவித்த போது அதற்க்கு எதிராக வேலை செய்தவர் இவர். இப்போது தொழிலதிபர்கள் மீட்டிங்கில் ஸ்ட்ரைக் செய்வது தவறு என்று சொல்லியுள்ளார் இந்த மார்க்ஸிஸ்டு. அப்பன் குதிருக்குள் இல்லை என்று புத்ததேவு காட்டிக் கொடுத்துவிட்டதை கண்டு பதறிப் போய் விட்டது CPM தலைமை. ஸ்ட்ரைக்கிற்க்கு நாங்கள் எப்போதுமே ஆதரவு என்று உடனே ஸ்டேட்மெண்டு விட்டுள்ளனர் போலி கம்யுனிஸ்டு காட்டேரி கும்பல் CPM தலைமை.


இப்படி ரெண்டு விதமாகவும் பேசுவதை CPM அடிவருடி கும்பல் ரொம்ப காலமாக செய்து வருகிறது. முல்லை பெரியாறு அணை, காவேரி பிரச்சினை, உலகமயம், அமெரிக்க எதிர்ப்பு-ஆதரவு, காங்கிரஸ் ஆதரவு-எதிர்ப்பு, ஆதிக்க சாதி ஆதரவு, தலித் ஆதரவு என்று இப்படி ஒவ்வொரு விதமாகவும் பேசுவதற்க்கு ஒவ்வொரு தலைவர், ஒவ்வொரு நபர்களை வைத்துள்ள மோடி மஸ்தான் வித்தை கம்பேனியாக CPM கார்போரேட் கம்பேனி இருக்கிறது. வோட்டு பொறுக்க வசதியாக இப்படி ரெட்டை நாக்கு அம்பிகளாக வலம் வருகிறார்கள். ஆயினும் ஆளும் வர்க்க அடிவருடி வேலை செய்வதில் மட்டும் கொஞ்சம் கூட பிசிறுவதில்லை. இதே போல ரெட்டை நாக்கு அம்பிகளாக வலம் வரும் இன்னொரு கும்பல் பார்ப்பனிய பயங்கரவாதிகளான பாஜக, RSS கும்பல்தான்.

அமெரிக்க அணு ஒப்பந்தம் எதிர்ப்போம் என்று ஒருவர் சொல்லுவது, இன்னொருவர் இல்லையென்று சொல்லுவது. குஜராத் கலவரத்தை வாஜ்பேயி கண்டிப்பார், அத்வான் ஆதரிப்பார். இதே போலத்தான் CPMமும் அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் காரணமாக காங்கிரஸை எதிர்ப்பதாக ஒரு கும்பல் இன்னொரு கும்பல் காங்கிரஸை ஆதரிப்பதாக. ஒரு கும்பல் உலகமயம், ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிவருட, இன்னொரு கும்பல் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்களை ஏமாற்றி மயக்குவதற்க்கு. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நபர் தேவைப்படுவதால்தான் ஜோதிபாசு, புத்ததேவு, 'நான் முதலில் ஒரு பார்ப்பான்' என்று சொன்ன அமைச்சர் உள்ளிட்ட அத்தனை பேரும் இன்னும் கட்சியில்தான் இருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மதவாத சக்திகள் எதுவும் ஆட்சிக்கு வந்துவிடுமா என்ன? காங்கிரஸை ஆதரிப்பது என்ற பெயரில் உலகமயத்துக்கு சட்டி தூக்கிய போதுதான் இந்த வாதம் தேவைப்பட்டது. ஒருவேளை இப்போதும் இந்த வாதம் தேவைப்படுகிறதோ? எப்போதுமே தேவைப்படும். இதோ இந்த சம்பவத்திலேயே பாருங்கள், CPMல் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச சுயமரியாதையுள்ள தொண்டர்கள் யாராவது ஸ்ட்ரைக் குறித்த புத்ததேவுவின் கருத்துக் குறித்து கேட்டால் அது அவரது சொந்த நிலைப்பாடு என்று கட்சி சொல்லிவிட்டது, கட்சி என்றைக்குமே ஸ்ட்ரைக்குக்கு ஆதரவு என்று பதில் கிடைக்கும். ஆனால் ஆட்சியில் உள்ளதும், முதலாளிகளுக்கு அடிவருடுவதும் புத்ததேவ் என்ற முகமூடியின் பெயரில் தொடரும்.

பாட்டாளிக்கு பட்டை நாமம்! பன்னாட்டு முதலாளிக்கு நமஸ்காரம்!!

எங்க அப்பன் குதிருகுள்ள இல்லைனு இதத்தான் சொல்லுவாங்க.