1.கொடுத்த நாடுகள் (உதவி வழங்கும் முன்னேறிய நாடுகள்)
 2.உதவி அபிவிருத்தி அடையும் நாடுகளுக்கு (தேசிய வருமானத்தில் வீதத்தில்)
 3.மிக பின்தங்கிய நாட்டுக்கான உதவி ஒதுக்கியதில் (உதவி வீதத்தில்)
 4.மத்திய ஆபிரிக்கா
 5. மத்திய கிழக்கு-வட ஆபிரிக்கா
 6.மத்திய ஆசியா-தென் ஆசியா
 7.ஆசியா-தென் கிழக்கு நாடுகள்
 8.தென் அமெரிக்கா-கருங்கடல் நாடுகள்
 

 

அரசு உதவி அபிவிருத்தி அடையும் நாடுகளுக்கு- 1995   (01 -04)

 பின்தங்கிய நாடுகளுக்கு அரசு உதவிகள் பிரிக்கப்படும் விதம் (பத்து லட்சம் டொலரில்- 1994-1995) (05-07)

        1                          2             3              4                5             6                   7                 8                      

டென்மார்க்         0,96          29           522            61         166                91             208             

நோர்வே               0,87         38            468           65          143               86             100

நெதர்லாந்து       0,81         28            846        158          313               99              460

சுவீடன்                0,77          28           539           93          196             133              175

பிரான்ஸ்            0,55          21         3549        1107        346           1425              406

கனடா                 0,38          22            546           98         236              213              165

பெல்ஜியம்        0,38         25            301           41            45               68                 99

லுக்சம்பேர்க்    0,36          27                9             1             1                  1                   4

அவுஸ்திரேலியா0,36    17             133           16         111             697                 14

சுவிஸ்               0,34          30              291          47         150                88              122

ஒஸ்ரியா         0,33          14              116          88           30              171                 41

பின்லாந்து       0,32          25             111           33           43                 17                23

ஜேர்மனி          0,31           21          1912         517         693           1073               646

அயர்லாந்து   0,29           36               55              3              4                  4                   3

இங்கிலாந்து   0,28           26            949           119          437            233              189

யப்பான்           0,28           17          2216           806        2325         4296            1144

போர்த்துக்கல்0,27         63            203                6               4               3                    4

ஸ்பெயின்     0,24           16           195             112            39           185               401

நியூசிலாந்து0,23            21                 9                1              6               71                  3

இத்தாலி          0,15           24            522              78            40            146              237

அமெரிக்கா 0,10           23           1873           2091        556           462          1060

மொத்தம்       0,27            22        15364           5931       5874        9588         5408

 

இது உதவியைப் பெற்ற நாடுகளையும் கொடுத்த நாடுகளையும் உள்ளடக்கியது. "இந்த உதவி கி.பி. 1994-இக்கும் கி.பி. 1998-இக்கும் இடையில் 6,000 கோடி டொலரில் இருந்து 5,000 கோடி டாலராகக் குறைந்துள்ளது. பன்னாட்டுப் பணக்காரக் கொள்ளையர்கள் அவர்களின் தேசிய உற்பத்தியில் இருந்து உதவ ஒப்புக் கொண்ட 0.70 சதவீதத்தில் இருந்து வெறுமனே 0.22 சதவீதத்தையே உதவியாகக் கொடுக்கின்றனர்."36 ஒவ்வொரு 100 ரூபாய் பணத்திலும் 22 சதவீதம் மட்டுமே உதவுகின்றனர். இந்த உதவிகளும் தமது கொள்கைக்காகச் செயல்படும் தன்னார்வக் குழுக்களுக்கு உதவி, மதப் பிரச்சார அமைப்புகளுக்கு உதவி, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த உதவி, சமூக நெருக்கடியைத் தடுக்க உதவி என தமது சூறையாடும் பொருளாதார ஜனநாயகத்தைப் பேணிக் கொள்ள வழங்கப்படுபவை தான்;. இதில் உலகை ஆளத் துடிக்கும் அமெரிக்கா 100 ரூபாய்க்குப் பத்து சதவீதத்தை மட்டுமே உதவ ஒப்புக் கொள்கின்றது. ஒரு அமெரிக்க பிச்சைக்காரனுக்கு கூட வாழ உதவாத இப்பணத்தை, வீணில் வடிய தரகு கும்பல் வாங்கவும் சேவகம் செய்யவும் மானம் இழந்து கைக்கூலியாகச் செயல்படுகின்றனர்.


வறிய நாடுகளில் இருந்து கொள்ளையடித்து எடுத்துச் செல்லும் பணத்தில் ஒரு சிறு துளியைக் கூட திருப்பிக் கொடுக்க தயாரற்றவர்கள் தான் வறுமை ஒழிப்பு மகாநாடுகளில் கூடி தின்று குடிக்கின்றனர். இந்த ஏகாதிபத்திய வறுமை ஒழிப்பு மகாநாடுகள்தான் பெண்களையும், குழந்தைகளையும் மீட்கும் என்று, சில பெண்ணியங்கள் ஏகாதிபத்தியத்துக்குக் காலாற சேவகம் செய்கின்றனர். தன்னார்வக் குழுக்களின் பெண்கள் அமைப்புகள் மற்றும் வறுமை ஒழிப்பு அமைப்புகள் எல்லாம் கைக்கூலித்தனத்தில் செயல்பட்டபடிதான் ஆணாதிக்க ஒழிப்பு பற்றி பிரகடனம் செய்கின்றனர்.


பெண்ணின் பொருளாதாரப் பலத்தைப் பெறுவதுக்கு முன் வறுமையில் இருந்து மீள்வது நிபந்தனையானது. அதேபோல் பொருளாதாரப் பலம் ஆணாதிக்க ஒழிப்பின் அடிப்படையானது. உலகில் அடுத்த நேர உணவு என்ன? எனத் தெரியாது பட்டினியில் வாழும் 105 கோடி பெண்கள் நிலை பற்றி பேசாது எந்தப் பெண்ணியமும் ஆணாதிக்கத்தை ஒழிப்பதில்லை. வறுமை ஒழிப்பின்றி பொருளாதாரப் பலத்தை எப்படி பெண் பெறமுடியும் இன்றைய ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பில் போட்டி போடுவதன் மூலமோ, உதவியைப் பெறுவதன் மூலமோ சாத்தியமானவையல்ல. ஏனெனின் இந்த ஜனநாயகம் சூறையாடும் சுரண்டல் கட்டமைப்புக்கு மட்டும் இயல்பான சமூக அமைப்பைக் கட்டமைத்துள்ளது. இந்தக் கட்டமைப்பு தகர்க்கப்படாமல் பெண்ணின் வறுமையை ஒழிப்பதோ பொருளாதாரப் பலத்தைப் பெறுவதோ முடியவே முடியாது.
தொழில் நுட்ப வளர்ச்சியும், பொதுவான சமுதாய வளர்ச்சியும், ஆணாதிக்கச் சமூக இயங்கியல் எல்லைக்குள் மட்டும் மாற்றம் கண்டனவே ஒழிய ஆணாதிக்கத்தை ஒழித்ததில்லை. எல்லா நடுத்தர வர்க்கமும் (பூர்சுவா வர்க்கம்) இதன் மூலம் தான் விடுதலையை அடைந்து விடமுடியும் என்று நம்புகின்றது, கனவு காண்கின்றது. இருக்கும் சமூகப் பொருளாதார அமைப்பைப் பற்றிய எந்தவிதமான பார்வையும் இன்றி இயல்பான, வேகமான தீர்வைக் கோரும் இப்பிரிவின் இந்த நம்பிக்கைகள் வெம்பிப் போகின்றன, ஈழப்போராட்டத்தைப் போல். இது பெண்ணியத்தின் வரைமுறையற்ற விபச்சாரப் பண்பாட்டுக்கு அழைத்துச் செல்லுகின்றது. இது சமூகத்தை எதிரியாகக் காண்பதுடன் அன்னியப்படுகின்றது. மாற்றங்கள் சமூகத்தின் தொடர்ச்சியான இயங்கியல் பாய்ச்;சல் ஊடாக மாறுகின்றது என்பதை மறுத்துப் பிஞ்சில் இருந்தே பழுத்து வெம்பிப் போகின்றன. இது இன்று சமுதாயத்தில் பல பெண்ணியக் கோட்பாடுகளின் பின் புகையாக மண்டிப்போய் வெம்பவைக்கும் செயற்கையான வடிவமாகின்றது. சமுதாயத்துக்கு எதிரான இந்தக் கோட்பாடுகளைச் சமுதாயம் எதிர்த்து நிற்கின்றது.


பாட்டாளி வர்க்கம் ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் இந்த வெம்பல்களை அகற்றியே, புரட்சியை, இயற்கை சார்ந்து முன்னெடுக்கின்றது. இந்தப் புரட்சி சுரண்டலை மட்டுமல்ல ஆணாதிக்கத்தையும், நிறவாதத்தையும், இனவாதத்தையும், சாதியையும் என அனைத்துச் சமுதாய அவலங்களையும் ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட கோருகின்றது, போராடுகின்றது. இதை ஏகாதிபத்தியத் தலைமையில் எதிர்த்து நிற்கும் அனைத்து வண்ண (வகைவகையான) கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் அம்பலப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தொடர்ந்தும் இதற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடுகின்றது. இந்த உறுதிமிக்க விடாப்பிடியான போராட்டத்தை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை உலக வரலாறு எங்கும் துல்லியமாகக் காணமுடிகின்றது. இது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டச் சகாப்தம் என்பதை மறந்து விடும் அல்லது, மறுத்துவிடும் அனைத்துக் கோட்பாட்டுகளையும் கருவறுக்கும் போராட்டத்தில், நாம் இதைத் தொடர்ந்து ஆராய்வோம்.