எ யிட்ஸ் எப்படி தோன்றியது? என்ற கேள்வி பல்வேறு ஊகங்களைத் தாண்டி இன்று மெதுவாகக் கசிந்து வரும் உண்மை ஒன்று ஏகாதிபத்திய உலகமயமாதலின் சூறையாடலை அம்பலப்படுத்துகின்றது. ஆப்பிரிக்காவில் போலியோ போன்ற நோய்களைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பாகக் கண்டறிந்த தடுப்பூசியொன்றே, எய்ட்சுக்கான மூலகாரணம் என்பது இரகசியமாக அம்பலமாகியுள்ளது.


கி.பி. 1950-களின் இறுதியில் ஆப்பிரிக்காவில் கோடிக்கணக்கான மக்கள் மீது பரிசோதனையாக நோய் எதிர்ப்பு மருந்து என்று கூறி, எந்தவிதமான முன் பரிசோதனையுமின்றி ஏற்றிய தடுப்பூசிதான், எய்ட்சின் மூலமாகியது என்று தெரிய வருகின்றது. சூறையாடும் அமைப்பில் புதிய கண்டுபிடிப்புகள் கோடீஸ்வரரை உருவாக்கக் கூடிய மூலதனமாக இருப்பதால், புதிய கண்டுபிடிப்புகள் மக்கள் மீது நேரடியாகப் பரிசோதனை செய்யப்படுகின்றது. இதற்காகப் பயன்படும் மூன்றாம் உலக மக்கள் விஞ்ஞானிகளின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் (டயடி) அடிமைகள் தான்.


இரண்டாம் உலக யுத்தத்தில் யூதர்கள் மீது நாசிகள் செய்த மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பலரைக் கொன்று (உயிருடன் கூட உரித்து, அறுத்து, பிரித்து, மூளையை உயிருடனும், தனியாக்கியும் ஆய்வுக்குள்ளாக்கினர்) பல புதிய மருந்துகளைத் தயாரித்ததுடன், அதைக் கண்டறிந்த நாசி விஞ்ஞானிகளும், அதன் நிறுவனங்களும் இன்றும் கோடீஸ்வரர்களாக இருப்பதைக் காணமுடியும. இந்த வகையில் இன்று உலகம் முழுக்க மக்களை நேரடியான மூலதனப் பண்டமாக மாற்றி, நடத்திய பரிசோதனைகளின் போது உருவான நோய்தான் எய்ட்சாகும்.


இன்று கொழுத்த இலாபம் சம்பாதிக்க மரபுக் கூறுகளின் மீது நடத்தும் ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் உயிரினங்களிலும், தாவரங்களிலும் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்தி, உற்பத்தி செய்யும் உணவு போன்றவற்றின் விளைவுகளை உலகம் எதிர்கொள்ள ஆயத்தமாகின்றது. அமெரிக்காவில் மக்கள் உடல் கொழுத்து இருப்பதுக்குக் காரணம் மிருகங்களைக் கொழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்துதான் ஆகும். அந்த மிருக இறைச்சியை உண்ணும் போது மனிதனைக் கொழுக்க வைக்கின்றது என்ற உண்மை அமெரிக்க மக்கள் கொழுத்து இருப்பதை அம்பலப்படுத்துகின்றது.


ஐரோப்பாவில் இறைச்சியை உண்ணும் முறைகளில் சில தடைகளைக் கொண்டிருந்த போதும், இதை இரகசியமாகப் பயன்படுத்துவதைக் கண்டுபிடிக்கும் பத்திரிக்கைத்துறைக்கு, மருத்துவத்துறைக்கு எதிராக மாஃபியாக் குழுக்கள் பல படுகொலைகளைச் செய்துள்ளனர் என்ற உண்மை அம்பலமாகின்றது. இந்தக் கொழுக்க வைக்கும் மருந்து அமெரிக்காவில் சட்டப்படி பயன்படுத்த, ஐரோப்பாவில் மாஃபியாக் குழுக்கள் விநியோகம் செய்யும் அளவுக்குக் கொழுத்த மூலதனத்தைக் கொடுக்கின்றன. இந்தமாதிரி நோய்களில் இருந்து பணக்காரர்கள் தப்புவதற்குப் பொருட்களில் சில குறியீட்டுகளுடன் (இயற்கையான உற்பத்தி என்ற அடையாளத்துடன்) அதிக விலைகொண்ட புதிய உணவுகளை, மேற்கில் சந்தைப்படுத்தப்படுகின்றது. அடிநிலைத் தொழிலாளர் வர்க்கம் மூலதனச் சந்தையில் பயன்படுத்தப்படும் மற்றொரு மூலதனம்தான். இந்த வகையில்தான் எயிட்ஸ் மூலதனத்தின் விளைவாகியது.


கி.பி. 2000-ஆம் ஆண்டில் பிரான்சில் 1,20,000 முதல் 1,50,000 வரையிலான பேர் எயிட்ஸ் நோய்க் காவியாக (Zero Positive)இருக்க, 50,000 பேர் எயிட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 35.2 சதவீதம் பேருக்கு எயிட்ஸ் உண்டாகக் காரணம் ஓரினச் சேர்க்கையும், போதைவஸ்து பயன்பாடும் காரணமாகும். இந்தச் சதவீதம் அதிகரித்துச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (14.4.2000)17


அமெரிக்காவில் எயிட்ஸ்க்கு உள்ளானோர் 5 இலட்சமாக அதிகரித்துள்ளது. கி.பி. 1981 முதல் கி.பி. 1987 வரையிலான காலத்தில் எயிட்ஸ்க்கு உள்ளான பெண்கள் 8 சதவீதமாக இருந்தது. இது கி.பி. 1993 முதல் கி.பி. 1995-இல், 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.2


எயிட்ஸ் நோய் உலகில் இதுவரை 33.6 கோடி மக்களைக் கொன்று ஒழித்துள்ளது. கி.பி. 1997-இல், 23 இலட்சம் பேரைக் கொன்றது."36 ஒவ்வொரு நாளும் 8,500 பேருக்கு எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. இவர்களில் 1,400 பேர் முதல் ஒரு வயதுக்குள்ளாகவே இறந்துவிடுகின்றனர். இந்த நோய் உலக வளர்ச்சியை 1.3 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளிவிட்டதாக ஐ.நா. சபை அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.


இந்த நோய் வறுமையைச் சார்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளை வேட்டையாடியும் வருகின்றது. ஐக்கிய நாட்டு அறிக்கையொன்றின்படி கி.பி. 1995-இல், 13 இலட்சம் மக்கள் எயிட்சால் பாதிக்கப்பட்டதுடன், இது கி.பி. 1994-ஐ விட 25 சதவீதம் அதிகமாகும். உலகம் முழுவதும் 2.1 கோடி மக்கள் ஹெச்.ஐ.வி.யால் (H.I.V.)  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். ஒவ்வொரு நாளும் 7,500 பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.


கி.பி. 1995-இல், எயிட்ஸ் காரணமாக 9,80,000 பேர் இறந்தனர். கி.பி. 1996-இல், 11,20,000 உயரும் என அறிவிக்கப்பட்டது. சில ஆப்பிரிக்க நாடுகளில் 16 முதல் 18 சதவீதம் வரை எயிட்ஸ் பரவியுள்ளது. இது இளம் பெண்களை அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளதால், இந்நாடுகளில் பிறக்கும் மூன்றில் ஒரு குழந்தை எயிட்ஸ் நோயுடன் பிறக்கின்றது. அத்துடன் தாய்ப்பால் ஊட்டும் 10 பெண்களில் 2 அல்லது 3 பேர் ஹெச்.ஐ.வி.யால் (H.I.V.)பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தாய்ப்பாலூடாக 7 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தில் குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. பரவுகின்றது.


கி.பி. 1999-இல், எயிட்ஸ் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஆண்டுக்கு 4 இலட்சம் குழந்தைகள் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுவதை உறுதி செய்துள்ளனர். கி.பி. 1999 முடிய உலகில் 3.36 கோடி மக்கள் எயிட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 1.63 கோடி மக்கள் எயிட்சால் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலைமை உலகளவில் ஆப்பிரிக்காவை அதிகம் பாதித்துள்ளது. (12.5.2000)24 உலக அளவில் எயிட்ஸ் உள்ளோர்களையும், எயிட்சால் மரணமடைந்தவர்களையும் அட்டவணை:33-இல் காணலாம்.

அட்டவணை: 32

 பிரதேசம்                                             எயிட்ஸ் உள்ளோர்                எய்ட்சால்  மரணமடைந்தோர்
தென் ஆப்பிரிக்கா                                 2,33,00,000                                       1,37,00,000
வடஆப்பிரிக்கா, அரபு நாடுகள்             2,00,000                                                70,000
தென் அமெரிக்கா                                     13,00,000                                            5,20,000
வட அமெரிக்கா                                          9,20,000                                             4,50,000
கரிபியன் நாடுகள்                                      3,60,000                                             1,60,000
தென் கிழக்கு ஆசியா                            60,00,000                                          11,00,000
ஐரோப்பா                                                         5,20,000                                            2,10,000
மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா    3,60,000                                               17,000
பசுபிக் நாடுகள், கிழக்கு ஆசியா         5,30,000                                               40,000
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து                    42,000                                                 8,000 

 ஆப்பிரிக்காவை எயிட்ஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக பாதிக்கின்றது. இதை அட்டவணை:34-இல் இருந்து ஆராய்வோம்.


அட்டவணை: 34

 

1.15-49 வயது உடையவர்களில் எயிட்ஸ். சதவிகிதத்தில்
 2. 2005 இல் எயிட்ஸ் உள்ளவர்களின்; சராசரி வயது
 3.2005 இல் எயிட்ஸ் இல்லாதவர்களின் வாழும் சராசரி வயது

4. 1996 இல் ஒதுக்கப்பட்ட பணம் டொலரில்


                                           1                             2                                3                                 4

சாம்பி                           19                            42                               60                             8.07
பொற்ஸ்வானா        25                           41                                70                           14.27
நமீபியா                       20                           41                               62                              8
தென் ஆப்பிரிக்கா 13                            47                               64                              -
மொசாம்பிக்             14                            38                               53                              24
சிம்பாப்வே                26                           41                               66                              9.82
மாலாவி                     15                           40                               53                              8.94
கென்யா                     12                           48                                66                            13.43
உகான்டா                  15                             -                                  -                                   -
ருவாண்டா               13                           41                                51                               27.63


எயிட்ஸ்சைக் கட்டுப்படுத்தும் சில மருந்துகள்: கி.பி. 1996-இல், ஒவ்வொன்றின் விலையையும் கீழே அட்டவணை:35-இல் காணலாம்

 

LAMIVUDINE (3tc) 5.8 டொலர்

ZALCITABINE (ddc)4.65 டொலர்

DIDANOSINE (ddl) 7.4 டொலர்

ZIDOVUDINE (azt) 2.8 டொலர்


ஆப்பிரிக்கா மக்கள் மத்தியில் எப்படி எயிட்ஸ் பரவுகின்றது என்பதையும், அவர்களிடையே நோய்த்தடுப்பு எப்படி பலவீனமாக உள்ளது என்பதையும் இப்புள்ளிவிபரம் அம்பலப்படுத்துகின்றது. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இதன் மூலம் கோடி கோடியாக மூலதனத்தைத் திரட்டவும், கறுப்பினத்தைக் கொன்று ஒழிக்கவும் உலகமயமாதல் தனது மூலதனத் திரட்சிக் கொள்கையை வெற்றிகரமாகக் கையாளுகின்றது. அந்த மக்கள் பட்டினி முதல் எயிட்ஸ் வரை பொதுவான இறப்புவிதியாகி அழிகின்றனர்.


மேற்கத்திய சூறையாடும் பொருளாதார அமைப்பு அந்த நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாகக் கட்டுப்படுத்தி, அவர்களின் இறப்பைத் தீவிரமாக்குகின்றனர். எயிட்ஸ் தடுப்புக்குப் பாதுகாப்பான பாலியல் உபகரணங்கள் வழங்காமை, நோய் விரிவாவதைத் தடுக்கும் மருந்து வழங்காமை போன்றன அந்த மக்களின் மீதான மேற்கத்திய வன்முறையாகும். ஏகாதிபத்தியங்கள் சர்வதேசக் குற்றவாளியாக இருப்பதுடன் கடும் தண்டனைக்குரியவர்கள் ஆவர்.


வரைபடம்: 4 1000 பேர் எயிட்ஸ்

 1996               2.5

1988               3.5

1990               5.2

1992               7.2

  

"இந்தியாவில் தலைதூக்கும் எயிட்ஸ்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையியை எழுதியுள்ளது இந்தியா டுடே. (21.11.1992)13 இந்தியாவில் இந்தப் புள்ளிவிபரத்தை விட உண்மையில் எயிட்ஸ் 15 மடங்கு அதிகமாகும். எயிட்ஸ் உண்டாகும் காரணத்தை ஆராய்வோம் என்பதை அட்டவணை:36-இல் இருந்து காணலாம்.


அட்டவணை: 36
எந்த முறையில் எயிட்ஸ் ஏற்பட்டது சதவீதத்தில்

 

செக்ஸ் தொடர்பு                     41.77%
இரத்தம் செலுத்தல்               17.37%

தருபவர்-                                      15.6%

பெறுபவர்-                                  1.71%போதை

ஊசிமூலம்                               14.85%
மற்றவை                                  26.1%

இந்தியாவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரில் பத்தில் ஒருவர் குடும்பத் தலைவியாக இருக்கின்றனர். அரசு நிதி உதவியுடன் இயங்கும் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (நேகோ) 29 இலட்சம் பேரைப் பரிசோதித்தது. இதில் 49,527 பேருக்கு எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 3,161 பேர் ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.


ஐ.நா. எயிட்ஸ் திட்டம் இந்தியாவில் 30 இலட்சம் பேருக்கு எயிட்ஸ் இருப்பதை உறுதி செய்தது. இந்தியாவில் 22.3 கோடிக்கு அதிகமான ஆண்கள் தீவிரமான பாலியல் நடத்தையில் ஈடுபடுபவர்களாக இருக்க, அதில் 10 சதவீதம் பேர் விபச்சாரிகளை நாடுகின்றனர். அதாவது 2.23 கோடி ஆண்கள் விபச்சாரத்தை நாடி செல்லுகின்றனர். இந்த ஐ.நா. அறிக்கையின் படி கி.பி. 2000-ஆம் ஆண்டில் 50 இலட்சம் எயிட்ஸ் நோயாளிகள் இந்தியாவில் இருப்பர் என்று எச்சரித்ததுடன், 80 இலட்சம் ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் (H.I.V. Positive) உடையவர்களாக இருப்பர் என்ற தகவலையும் வெளிப்படுத்தியிருந்தது.


இந்தியாவில் எயிட்ஸ் எதிர் பாலருடன் ஏற்பட்ட உறவால் (ஆண் ஒ பெண்) மூன்றில் இரண்டு பேருக்குத் தொற்றியது. மேற்கு நாட்டில் 70 சதவீத எயிட்ஸ் ஓரினச் சேர்க்கையால் ஏற்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தேகா என்ற அமைப்பு கடந்த 11 வருடமாக 16,154 பேரிடம் நடத்திய ஆய்வின் போது 48 சதவீதம் பேர் திருமணத்துக்கு முன் உடல் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டனர். திருமணம் செய்தவர்களில் 20 சதவீதம் பேர் ஆண் - பெண் தம் உறவுக்கு வெளியில் உறவு கொள்பவர்கள் என ஒத்துக் கொண்டனர். இந்தியாவில் பம்பாயில் (மும்பை) கி.பி. 1996-இல், கர்ப்பிணிப் பெண்களிடம் எடுத்த இரத்தப் பரிசோதனையில் 2.7 சதவீதம் பேருடையதில் எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


சென்னை ஏஷியா-பசிஃபிக் நெட்வொர்க் ஆஃப்பீப்பிள் (ஏ.பி.என்.) நடத்திய ஆய்வில் எய்ட்சுக்குப் பதிவான 79 ஆண் 46 பெண்களில் 64.8 சதவீதம் பேர் பட்டதாரிகள். 24.8 சதவீதம் பேர் முதுநிலை பட்டதாரிகள். 7.2 பேர் பி.எச்.டி. (முனைவர்) பட்டதாரிகள் ஆவர்.


புனே ஆஸ்பத்திரியில் எயிட்ஸ்க்கு மருத்துவம் தேடி வரும் பெண்களில் 14 சதவீதம் பேர் குடும்பப் பெண்கள் ஆவர். இது வருடம் 3 சதவீதம் அதிகரிக்கின்றது. எயிட்ஸ் அவேர்னஸ் அண்ட் ப்ரிவென்ஷன் என்ற அமைப்பின் அறிக்கையில் நடுத்தர வர்க்க நோயாளிகளின் எண்ணிக்கை வருடம் 30 சதவீதம் அதிகரிக்கின்றது என்றும் பெருமளவில் எயிட்ஸ் தொற்று விபச்சாரம் மூலம் தொற்றுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. (6.3.1997)13


பாலியல் உறவு மூலம் தொற்றும் எயிட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகள் மூலம் மரணத்தைத் தள்ளிப்போட முடிகின்றது. இவை கூட மேற்கு மக்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக உள்ளது. பாலியல் ரீதியான எயிட்ஸ் தொற்றைத் தடுப்பதுக்குப் பாதுகாப்பாக ஆண் உறை பாவிப்பது (பயன்படுத்துவது) நோய்த் தடுப்பாக உள்ளது. இது போல் இரத்தப் பரிசோதனை, ஊசியை மறுதரம் பாவியாமை (பயன்படுத்தாமை), சவரக் கத்தியை மறுதரம் பாவியாமை (பயன்படுத்தாமை) போன்ற தடுப்பு வகைகள் எல்லாம் மேற்கில் சாத்தியமானதாக உள்ளது. வறுமையான நாடுகளில் இது சாத்தியமற்ற நிலைமையை ஏற்படுத்தும் மேற்கின் சூறையாடும் பொருளாதாரக் கொள்கை மக்களை வறுமையூடாக எயிட்ஸ்க்குப் பலியாக்குகின்றது.


எயிட்ஸ் தொற்றும் வழிகளில் ஓரினச்சேர்க்கை முக்கியமான ஒரு பாலியல் தொடர்பு வழியாக உள்ளது. இது போல் விபச்சாரம் மற்றொரு வழியாகும். இவை இரண்டும் இயற்கையான பாலியல் தெரிவுகளுக்கு விரோதமான ஆணாதிக்கத்தின் பக்கவிளைவுகளாகும். இவை இரண்டும் எயிட்ஸ் ஊடாக மக்களைப் பலி கேட்கின்றது. இதனுள் வறுமையைப் பிறப்புரிமையாகச் கொண்ட மக்களைச் சூறையாடுகின்றது.


பொதுவாகச் சமுதாயத்தில் நிலவும் ஒருதாரமணத்தைப் பெண் கடைப்பிடிக்கின்றாள், ஆண் பலதார மணத்தைப் பலவடிவில் கையாள்வதால் ஆண் எயிட்ஸ் நோயாளியாகின்றான். ஆண் காவிச் செல்லும் இந்த நோய்க்கூறு சொந்த மனைவிக்குக் கொடுக்க, பொது விபச்சாரத்தின் ஊடாக எய்ட்சை விபச்சாரத் தாய்மையாக்கி தொற்றினைப் பொது மையமாக்குகின்றாள். ஆண் இடத்துக்கு இடம் காவுபவனாக இருக்க பெண் கொடுப்பவளாக உள்ளாள். இது பொதுவான ஆணாதிக்கப் பாலியல் உறவு மூலமாக உள்ளது.


ஆரோக்கியமான பாலியல் உறவு சமுதாயத்தில் நிலவும் பட்சத்தில் இந்த எயிட்ஸ் இந்தளவு வேகத்தில் பரவாது. சமுதாயத்தில் ஆணாதிக்கப் பாலியல் நெருக்கடிகள் மிருகத்துடனான உறவு, ஓரினச்சேர்க்கை, பொதுவிபச்சாரம் போன்ற இயற்கைக்குப் புறம்பான பாலியல் தொடர்புகளால் இந்நோய் தோன்றவும், தொற்றவும் காரணமாகிறது.


இந்த நோய் இந்தியாவில் கடுமையாக ஆணாதிக்கம் கடைப்பிடித்து கண்காணிக்கும் ஒருதார மணத்தில் குடும்பப் பெண்களைப் பாதிப்பது, அந்தச் சமுதாயத்தின் பாலியல் அவலத்தைக் காட்டுகின்றது. குடும்பப் பெண்களின் கணவன்மார் அப்பெண்ணை விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு கொள்வதையும், பெண் வேறு உறவை வைத்திருப்பதையும் அம்பலப்படுத்துகின்றது. இது யாருக்கு முதலில் ஏற்பட்டது என்பதே அவர்கள் அந்த உறவுமுறையை மீறியவர்களாக இருப்பதை யதார்த்தமாக்குகின்றது.


நாகரிகமான, கௌரவமான சமுதாயத்தின் பிரதிநிதிகளில் இந்த நோய் தொற்றுவதும் இதே காரணத்தால்தான் என்பதும் அம்பலமாகின்றது. மருத்துவ உதவி தேடி தமது பணப்பலத்தால் வரும் போது இவர்களின் கல்வித் தரம் நிர்வாணமாகின்றது. சமுதாயத்தில் இந்நோய்க்கூறு அனைத்துத் தரப்பையும் பாலியல் நெருக்கடியூடாகத் தொற்றுவதை உறுதிசெய்கின்றது. இது வறிய மக்கள் இடத்தில் வேகமாகத் தொற்றுகின்றது. இதில் நுகர்பவன் அந்த நோயை நுகராத பெண்களுக்கு காவிச் சென்று கொடுப்பதன் மூலம் அப்பாவிப் பெண்களையும் சேர்த்தே பலியிடுகின்றனர்.


உபரி இலாபத்துக்காக முதலாளித்துவ அமைப்பு எப்படி தொழிலாளர் வர்க்கத்தைப் பலியிட்டுச் சமுதாயத்தைப் பொது நெருக்கடிக்குள் நகர்த்தி அழிக்கின்றதோ, அதே போல் ஆணாதிக்கப் பாலியல் நுகர்வு பெண்ணையும் சேர்த்து சமூகத்தையே பலியிடுகின்றது. பெண்களைக் கட்டற்ற சுதந்திரத்தின் பின் பாலியலில் கட்டற்ற நுகர்வைக் கோரும் ஏகாதிபத்தியப் பெண்ணியம் இதை உலகமயமாக்கி எய்ட்சைக் கட்டற்ற தன்மைக்குள் நகர்த்த அரும்பாடுபடுகின்றது. அங்கு பலியாவது பெண்ணாக இருப்பது தவிர்க்க முடியாது. நுகர்வு எல்லையற்ற வக்கிரத்தால் ஆனது. இது அதற்கேயுரிய பாலியல் வக்கிரத்தில் சமுதாயச் சீரழிவை ஒருதளத்திலும், மறுதளத்தில் எயிட்சையும் உலகமயமாக்க துடிக்கின்றது.


ஆணின் கட்டற்ற பாலியல் பலதார மணத்தை விமர்சிப்பதும், பெண்கள் மீதான ஒருதார மணத்தை விமர்சித்துப் போராடுவதன் மூலமும் இணைந்த இருதார மணத்தை ஆணாதிக்க ஒழிப்பில் சாதிக்கப் போராட வேண்டும். எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது முற்றுமுழுதான தீர்வல்ல. அது இந்நோயைத் தடுக்கலாம். ஆனால் பாலியல் நோய்கள் தொடரவும், புதிதாக உருவாகவும் காரணமான சமூகக் காரணத்தைத் தகர்த்தாகவேண்டும். அவைகளை உயிருடன் வைத்திருந்தபடி அதை ஊக்குவிக்கும் தடுப்பூசிகள் மேலும் மேலும் மனித அவலத்தைப் பெருக்கும்.


சுரண்டல் வர்க்கம் செய்யும் சீர்திருத்தங்கள் எல்லையற்றவையாக இருப்பது போல் பாலியல் நோய்கள் எல்லையற்று கட்டற்று நீடிக்கும். ஆண் பெண் இணைந்த இருதாரமணத்தை உருவாக்க வர்க்கப் போராட்டத்தை ஆணாதிக்கச் சுரண்டல் சமுதாயத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் புரிந்து கொண்டு எயிட்ஸ் ஒழிப்பில் முன்கையெடுத்து போராட கற்றுக்கொள்ளவேண்டும்.