Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அ மெரிக்காவை எடுப்பின் 7 அமெரிக்கப் பெண்களுக்கு ஒருவர் ஏழையாகவும், 6 பெண்களுக்கு ஒருவர் மருத்துவ வசதி இன்றியும் உள்ளனர். இதில் கறுப்பு நிறப் பெண்கள் 25 சதவீதம் பேர் வறுமைக்குள் உள்ளனர். நிறவெறியும் சேர்ந்து கறுப்பு நிறப் பெண்களை ஒடுக்குகின்றது. இங்கு கறுப்பு நிறப் பெண் வறுமை, ஆணாதிக்கம், நிறம் போன்ற மூன்று சுமையை ஒரே நேரத்தில் சந்திக்கின்றாள்.


கி.பி. 1990-இல், அமெரிக்காவில் 1.8 முதல் 2 கோடி பேர் வரை வருடம் முழுக்கப் பட்டினியாக உள்ளனர். இதில் 18 வயதிற்குக் குறைந்த குழந்தைகள் 70 முதல் 80 இலட்சமாகவும், 65 வயதிற்கு மேற்பட்டோர் 20 இலட்சம் பேராகவும் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களாவர். அமெரிக்க அரசின் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் தொகை 3.2 கோடிப் பேராவர். இதில் பெரும்பகுதி பெண்களாவர். இந்த வறுமைக் கோட்டின் நிலவரம் கி.பி. 1980-88-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 43 சதவீதமாக அதிகரித்தது. கி.பி. 1985-இல், சராசரி வருடத்திற்கு ஐந்து ஆயிரம் டாலர் வருமானமுடைய தாய்மார்கள் 68 சதவீதம் பேர் வீட்டுக்கு வெளியிலும் வேலை செய்தனர். இதன் மூலம் தமது வறுமையைத் தவிர்க்க முனைந்தனர்.


கி.பி. 1989-இல் அமெரிக்காவில் ஆண் உழைப்பாளியின் வருமானத்தில், ஒரே வேலையைச் செய்யும் வெள்ளையினப் பெண் 62 சதவீதத்தையும், கறுப்பு இனப் பெண் 56 சதவீதத்தையும் மட்டுமே பெற்று தனது இரண்டாவது நிலையை ஆணாதிக்க ஜனநாயகச் சமுதாயத்தில் பெறுகிறாள்.


அமெரிக்காவில், பெண்களை அதிகளவில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட நிலைமை என்பது குடும்ப வருமான இழப்பில் உருவானது. கி.பி. 1986-89-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 9 சதவீதம் கூலி பணவீக்கத்துடன் குறைந்தது மட்டுமின்றி ஓய்வூதியம் 13.8 சதவீதமாகக் குறைந்தது. இதனால் கி.பி. 1980-இல், 54 சதவீதம் பெண்கள் உழைப்பில் ஈடுபடல் என்பது கி.பி. 1990-இல் 65 சதவீதமாக மாறியதன் மூலம் தனது குடும்ப உழைப்பு வருமானத்தைப் பங்கிட்டுச் சரிகட்ட முயல்கின்றனர்.


இதேநேரம் அமெரிக்காவில் நிரந்தர வேலை செய்யும் ஒரு கோடி பெண்கள் தமது அடிப்படைத் தேவையைக் கூட ப+ர்த்தி செய்ய முடியாத வறுமைக்குள்ளான சம்பளத்தைப் பெறுகின்றனர். கி.பி. 1980-88-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் 3 இலட்சம் சிறுபண்ணைகளை விழுங்கிய பெரிய பண்ணைகள் கிராமப்புற வறுமையை 44.8 சதவீதமாக அதிகரிக்க வைத்ததன் மூலம், கிராமப்புறப் பெண்களின் அரைவாசிப் பேரை வறுமைக்குள் தள்ளினர். ஒரு பண்ணை மூடியபோது 3 முதல் 5 பேர் வேலை இழந்தனர்.19


25 முதல் 59 வயது வரையிலான பெண்களில் வீட்டில் இருக்கும் பெண்களை அட்டவணை:11 மூலமாகச் சதவீதத்தில் அறியலாம்.20


அட்டவணை: 11


நாடுகள்                   சதவீதம்

அயர்லாந்து                 60%
ஸ்பெயின்                   49%
லுக்சம்பெர்க்              45%
கிரீஸ்                            42%
இத்தாலி                       40%
நெதர்லாந்து                36%
ஜெர்மனி                       31%
இங்கிலாந்து                27%
பிரான்ஸ்                      25%
பெல்ஜியம்                  23%
போர்ச்சுக்கல்             22%
டென்மார்க்                  4%

பிரான்சில் ஓய்வு ஊதியத்தை எடுத்தால் ஆண் 7,950 பிராங்கைப் பெற பெண் 4,350 பிராங்கைப் பெறுகின்றாள். இந்த வேறுபாடு ஏற்பட, பிள்ளைப்பேறை ஒட்டிய விடுமுறை காரணமாக உள்ளது.21


பிரான்சில் பெண்கள் வேலை செய்வதைப் பார்ப்போம்.4


"அவசியத்தால் வந்த அவதாரம்" என்ற தலைப்பில் ஆண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதையும், இதனால் மாறி வரும் போக்கையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கை 22.56 சதவீதமாகும். (21.10.1994)13


பிரான்சில் வேலை செய்யும் பெண்களில் 85 சதவீதமானவை பகுதி நேரத்தை கொண்டவை. இது ஐரோப்பாவில் 76 முதல் 90 சதவீதமாகும். பிரான்சில் கி.பி. 1980-இல், பகுதி நேர வேலை செய்தோர் 15 இலட்சம் மட்டுமே. இது கி.பி. 1997-இல், 35 லட்சமாகும். கி.பி. 1992-இல், 30 சதவீதம் பகுதிநேர வேலையாக இருந்தது. இது கி.பி. 1998-இல், 38.2 சதவீதமாக மாறியுள்ளது. டென்மார்க்கில் வேலை செய்யும் பெண்கள் 80 சதவீதமாக இருக்க, இதில் 40 சதவீதம் பகுதி வேலை நேரமாகும். நெதர்லாந்தில் பகுதி வேலை நேரம் 62 சதவீதமாக உள்ளது.22


பிரான்சில் தொழில் புரிவோரில் கி.பி. 1990-இல், பகுதி நேர வேலையில் இருந்தோர் 30 சதவீதமாகும். இது கி.பி. 1998-இல், 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. (18.31999)17 மொத்த வேலை செய்வோரில் 30 சதவீதம் பெண்கள் பகுதி நேர வேலையில் உள்ளனர். இந்தப் பகுதி நேர வேலையில் 25 வயதுக்குக் குறைந்த பெண்கள் 38 சதவீதமாக உள்ளது. தொழிலில் ஈடுபடுவோரில் ஆண்கள் பகுதி நேரத்தில் 5 சதவீதம் பேராக உள்ளனர். வேலையற்றோரில் 25 வயதுக்குக் குறைவானோரில் பெண்கள் 25.5 சதவீதம் ஆகும். 25-49 வயதுக்கு உட்பட்டோரில் 12.8 சதவீதமாக உள்ளனர். 50 வயதுக்குக் கூட 10.1 சதவீதமாகும். (2.1999)23


பிரான்சில் வேலையற்றோர் பெண்கள் 13.8 சதவீதமாக இருக்க ஆண்கள் 10.2 சதவீதமாக உள்ளது. இதில் 25 வயதுக்குக் குறைந்த பெண்கள் 30 சதவீதமாக இருக்க ஆண் 21.9 சதவீதமாக உள்ளது. பிரான்சில் பகுதி நேர வேலையில் ஈடுபடுவோர் 18 சதவீதமாக இருக்க, இதில் பெண்கள் தொகை 40 சதவீதமாக உள்ளது. இவர்களின் வருமானம் 4,000 பிராங்கை விட குறைவாகும். பிரான்சில் ஆணைவிட சராசரியாக 20 சதவீதம் குறைந்த சம்பளத்தையே பெண் பெறுகின்றாள். 80 சதவீதமான வீட்டு வேலைகளைப் பெண்ணே செய்கின்றாள்.


தொழிற்சங்கத்தின் தலைமைகளில் ஊகுனுவு-யில் 46 சதவீதமும், ஊபுவு-யில் 25-30 சதவீதமும் அதே நேரம் தலைமையில் 50 சதவீதமும், ஊகுவுஊ-யில் 40 சதவீதமும், ஊபுஊ-யில் 18 சதவீதமும், தலைமைக் குழுவில் இரண்டு தலைமை உறுப்பினரையும் கொண்டு உள்ளனர்.(8.3.1999)24


உலகில் பெண்கள் 40 சதவீதம் வேலை செய்வோரில் இருந்த போதும் உயர் பதவிகளில் ஐந்து சதவீதம் மட்டுமே உள்ளனர். கி.பி. 1994-1995-ஆம் ஆண்டு உலகில் சில முன்னணி நாடுகளில் உயர் பதவிகளில் உள்ள பெண்ணின் நிலையை அட்டவணை:12-இல் பார்ப்போம்.(2.1999)23


அட்டவணை: 12


நாடுகள்                சதவீதம்

அமெரிக்கா            43%
இங்கிலந்து            33%
நார்வே                     32%
சுவிஸ்                     28%
பின்லாந்து             25%
ஆஸ்திரியா          22%
இஸ்ரேல்               19%
ஜப்பான்                    9%

 
நியூசிலாந்தில் பெண்களின் கல்வித் தகுதி, ஆண்களை விட அதிகமாக இருந்த போதும் பெண்கள் குறைவான சம்பளத்தைப் பெறுகின்றனர். பெண்கள் 40 வயதை அடைந்த உடன் 20 சதவீதமான ஆண்கள் பெண்களை விவாகரத்து செய்கின்றனர். (23.3.1999)25


மேற்கு பெண்களின் பல்வேறு நிலைமையை இப்புள்ளிவிபரம் காட்டுகின்றது. முதலாளித்துவம் வீட்டுக்கு வெளியில் பெண்ணைச் சுரண்ட அழைத்து வந்த போது, அது பெண்ணின் உரிமையை வழங்கிவிடவில்லை. இந்த உரிமைக்காகப் போராடுவது வர்க்கப் போராட்டத்தின் உள்ளடக்கமாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் உச்சக் கொப்பளிப்பில் தேசம் கடந்து தொழில்கள் செல்கின்ற போது உற்பத்தியும் மேற்கைத் தாண்டி செல்கின்றது. மலிவு கூலி, இலகுவான தொழில் சட்டங்கள் என்று முதலாளித்துவம் வர்க்கப் போராட்டமின்றி எங்கெல்லாம் தொழிலாளரை நிபந்தனையின்றி கசக்கி பிழிய முடியுமோ அங்கு உற்பத்தியை நகர்த்துகின்றனர். இது மேற்கில் சமூக நெருக்கடியை வேகப்படுத்துகின்றது. இதனால் வேலையிழக்கும் மனிதர்கள் பெண்களாக இருப்பதே பொதுவிதியாக உள்ளது.


மேற்கில் நவீனத் தொழில் நுட்பம் பெண்ணை வீட்டுக்கு அனுப்புகின்றது. இது போல் ஏகாதிபத்தியப் பக்க விளைவுகள் அனைத்தும் பெண்ணை முதலில் சிதைக்கின்றது. முதலாளித்துவப் புரட்சிகள் முதலாளித்துவ உற்பத்தியை மலிவுக்கூலியில் வளர்த்தெடுக்க வீட்டுக்கு வெளியில் பெண்ணை அழைத்து வந்த அதே வேகத்தில் மலிவான உற்பத்திக்காக ஏகாதிபத்தியம் பெண்களை மறுபடியும் வீட்டுக்குள் முடக்குகின்றது. இதை அரசுகள் திட்டமிட்டே செய்கின்றது.


பிரான்சில் குழந்தை பெற்ற பெண்கள் குழந்தையின் மூன்று வயது வரையான பராமரிப்புக்கு, அரசு உதவியுடன் பெண்ணை வீட்டில் கடமை செய்ய கோரியது. "இதனால் கி.பி. 1997-இல், ஐந்து இலட்சம் பெண்கள் குழந்தை பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இது கி.பி. 1994-ஐ விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்தக் குழந்தை பராமரிப்பு விடுமுறையை எடுத்த ஆண்கள் ஒரு சதவீதம் மட்டுமே. குழந்தையின் மூன்று வயதிற்குப் பின் 50 சதவீதமான பெண்கள் வேலையை இழக்கின்றனர்."26 இப்படி பலவழிகளில் பெண்ணை வீட்டுக்கு அனுப்புகின்றனர்.


சொத்துரிமை விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் கையில் குவிந்து செல்ல, சிறு உற்பத்திகள் விழுங்கி ஏப்பமிடப்பட, பெரும் நவீன உற்பத்திகள் உயர் தொழில் நுட்பத்தால் நவீனப்பட, உழைப்போர் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது. இது பெண்களை முதலில் பாரம்பரியக் கடமைகளுக்காக மீண்டும் வீட்டுக்கு அனுப்புகின்றது. இதைப் பாட்டாளி வர்க்கம் மட்டுமே உற்பத்தியையும் அது சார்ந்த சொத்துரிமையையும் சமூகத்தின் உரிமையாக்க கோரி எதிர்த்துப் போராடுகின்றது. உலகில் இரண்டு பொருளாதார வடிவங்கள் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் பெண் இதில் ஒன்றை மட்டுமே தனது நலன் சார்ந்து தெரிந்தெடுக்க வேண்டியுள்ளது.


ஏகாதிபத்தியம் சார்ந்து சொத்துக் குவிப்பு ஊடாகத் தனது வேலையைப் பறி கொடுத்தல் அல்லது பாட்டாளி வர்க்கம் சார்ந்து சொத்தை மக்கள் சொத்தாக்கி தனது பங்கை உறுதி செய்வது என்பதைப் பெண் தீர்மானிக்க வேண்டியுள்ளது. எந்தப் பெண்ணியமும் இதற்கு வெளியில் வழி காட்ட முடியாது. விரும்பின் தனிநபர் பயங்கரவாத வழியில் குண்டு வெடிப்பு ஆணாதிக்க அரசியலைப் புகட்டுவதும், அதில் நம்பிக்கை கொள்ளச் செய்து ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு நீடித்து இருக்க உதவமுடியும்.


பெண்ணிடம் சொத்துரிமையற்ற நிலையில், அற்ப அன்றாடக் கூலியையும் இழக்க வைக்கும் ஏகாதிபத்திய வரலாற்றை முடிவுக்குக் கொண்டுவர பாட்டாளி வர்க்கம் கோருகின்றது. இதை லெனின் "டிரஸ்டுகளிலும் தொழிற்சாலைகளிலும் பெண்கள் வேலைக்கமர்த்தப்படுவது முற்போக்கானது என்று நாம் விளக்குகிறோம். கைத்தொழில் அமைப்பிற்கு அதாவது ஏகபோக முதலாளித்துவத்திற்கு முந்தின கட்டத்திற்கு, பெண்கள் வீட்டு வேலை வட்டத்திற்குள் உழலும் நிலைக்கு நாம் திரும்பிப் போக விரும்பவில்லை..."8 என்று குறிப்பிட்டு அன்று பெண்களை வீட்டுக்கு அனுப்ப முற்பட்ட போது லெனின் எதிர்த்து நின்றார். இன்று பெண்ணை நவநாகரிகமாக அலங்கரித்து, அழகுபடுத்தி, கவர்ச்சியாக்கி, விபச்சாரப்படுத்தி, பாலுறவு (ளுநஒ) பதுமையாக்கி, தனிமையில் வதைத்து, மீண்டும் வீட்டுக்கு அனுப்பி, அழுந்தக் கோரும் இப்பண்பாட்டு வக்கிரத்தைப் பாட்டாளி வர்க்கம் எதிர்த்துப் போராடுகின்றது.


உலகளாவிய ரீதியில் பெண்களை வீட்டுக்கு அனுப்புவது ஒரு போக்காக உள்ளது. இதே போல் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி பெண்களின் மலிவுக் கூலியைச் சுரண்டுவதும் அதிகரிக்கின்றது. இந்த எதிர் நிலைப் போக்குகள் மேற்கும், மற்றைய நாடுகளுக்குமிடையிலான பாரிய வேறுபாடாக உள்ளது. சந்தைப் பொருளாதாரத்தை முழுமையாகக் கையில் குவிக்கும் பன்னாட்டு அமைப்புகள் உற்பத்தியை எங்கே, எதற்காக, எதனடிப்படையில், எப்படி உற்பத்தி செய்கின்றது என்பதைப் பொறுத்தே, பெண்ணின் வேலை பாதுகாப்பு தீர்மானமாகின்றது. இந்த ஏகாதிபத்தியப் பன்னாட்டுப் பொருளாதார அமைப்பை மாற்றக் கோராத எந்த நிலையிலும், பெண்ணின் கோரிக்கைகள் நிறைவேறுவதில்லை. ஏதாவது சலுகை வழங்கின் அது வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தில் மட்டும் சாத்தியமாகின்றது. இதுவும் தற்காலிகமானவையாகவே நீடிக்கின்றது.


இன்று சுரண்டல் ஊடான இலாபத்தைச் சம்பாதிக்கும் பன்னாட்டு அமைப்புகள் ஒரு நபரைக் கூட தேவையின்றி வைத்திருக்கத் தயாராக இல்லை. அதாவது தொழில் நுட்ப வடிவத்தைச் சிறுக்கப் பண்ணும் வளர்ச்சியில், உற்பத்தியில் உள்ள உழைப்பாளிகள் என்ற இயந்திரப் பாகத்தைச் சுருக்கிச் சரக்காக்கி மூலதனத்தைக் குவிக்கின்றனர். இந்தச் சுருக்கம் அதிகமான உற்பத்தியூடான உபரியை உயர்த்தி, சிறு அளவு உழைப்புச் சாதனங்கள் என்ற கோட்பாட்டில் பெண்ணின் வேலை உடனடியாகப் பறிக்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்தே பொதுவாக ஆணின் வேலை பறிக்கப்படுகின்றது. ஏனெனின் மரபார்ந்த ஆணாதிக்கக் குடும்பத்தில் பெண்ணின் கடமையை மீள புகுத்துவது இலகுவானது. இதன் மூலம் சமூகக் கொந்தளிப்பைத் தடுக்க முடியும் என்று இந்த ஏகாதிபத்திய அமைப்பு கனவு காண்கின்றது.


சலுகை போன்றவற்றைக் காட்டிப் பெண்ணைக் குழந்தை பராமரிப்புக்குள் அனுப்பும் பிரஞ்சு ஏகாதிபத்தியம் பெண்ணின் மரபார்ந்த கடமைக்குள் அவளை அறியாமலே இட்டுச் செல்லுகின்றது. இதை மேலும் ஏகாதிபத்தியம் வீட்டு வேலைக்குக் கூலி வழங்குவதன் மூலம், பெண்ணை வீட்டுக்குள் மீள வேகமாகத் தள்ளவும் எதிர்காலத்தில் தயாராக உள்ளது.


முதலாளித்துவப் பூர்சுவா பெண்ணியம் வீட்டு வேலைக்குக் கூலி வழங்கக் கோரும் போராட்டத்தை, ஏகாதிபத்தியம் பெண்ணின் கடமைக்குள் கட்டமைக்கப் பயன்படுத்தி வருகின்றது. பெண்ணின் வீட்டு வேலைக்குக் கூலி நியாயமானதும் அடிப்படையானதுமாகும். ஆனால் இதை ஏகாதிபத்தியம் தனது வர்க்க அமைப்பின் பாதுகாப்புக்குச் சாதகமான ஒரு வடிவமாகக் கையாளும் நாள் மிகவிரைவில் அரங்கேறும். இதன் மூலம் சமூகத்தின் வேலையில்லாத் திண்டாட்டத்தை மட்டுப்படுத்தவும், பெண்ணைச் சமூகப் பொது இயக்கத்தில் இருந்து வீட்டுக்குள் மீள இயங்க வைப்பதற்கு ஒரு மாற்றுப் பாதையாகும்.


முதலாளித்துவம் பெண்ணைத் தனது உற்பத்தியைப் பெருக்க வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்த வேகத்துக்குச் சமமாக ஏகாதிபத்தியம் பெண்ணை மீளவும் வீட்டுக்கு அனுப்ப வீட்டு வேலைக்குச் சலுகை வழங்குவதன் மூலம் தொடங்குகின்றது. இது இன்று குழந்தை பராமரிப்புடன் பெண்ணின் பணியை விரிந்துரைக்கின்றது. மேல் சுட்டிக்காட்டியது போல் குழந்தை பராமரிப்பில் ஈடுபட்ட பாதிப் பெண்கள் வேலையை விட்டு, வீட்டில் மூழ்கிப் போனதைக் காட்டுகின்றது.


இதில் இருந்தே பாட்டாளி வர்க்கத்தின் கோஷம் (முழக்கம்) திட்டவட்டமாக வேறுபடுகின்றது. இந்தச் சமூக அமைப்பில் பெண்ணின் உழைப்புக்குக் கூலி வழங்குவதை ஆதரிக்கும் அதே நேரம், பெண்ணைச் சமூக உற்பத்தியில் ஈடுபடுவதை வீட்டுக்கு வெளியில் கோருகின்றது. குழந்தை பராமரிப்பு, உணவு தயாரிப்பைச் சமூக மயப்படுத்தக் கோருகின்றது. அதாவது வீட்டு வேலையைச் சமூகத்தின் கூட்டு உழைப்பாக, வீட்டுக்கு வெளியில் கோருகின்றது.


பிரான்சில் 22 இலட்சம் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்துக்கு வெளியில் தாய்மாரால் வீட்டில் பராமரிக்கப்படுகின்றனர். இரண்டு இலட்சம் குழந்தைகள் மட்டுமே அரசு பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படுகின்றனர். (15.6.2000)17 முதலாளித்துவ ஜனநாயகம் பெண்களைச் சமூக உழைப்பில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தி, சிறைவைப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றது. இதில் இருந்தே ஆணாதிக்க ஆண் எதிர்ப்பு பெண்ணியல்வாதிகள் அரசுக்கு எதிராகப் போராடுவதை மறுத்து, இதை மூடி மறைக்க குழந்தை பெறுவதையே எதிர்க்கின்றனர். அத்துடன் தனிப்பட்ட ஆணைக் குற்றவாளியாகக் காட்டுகின்றனர்.


முந்திய சோசலிச நாடுகளில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் நிலவிய போது, குழந்தை வளர்ப்பை அரசே முழுக்க முழுக்க பொறுப்பு எடுத்து பராமரித்ததும், இன்று குழந்தைகளை மீள தாய்மாரிடம் கொடுத்து வீட்டில் சிறை வைப்பதையும், இன்றைய ஆணாதிக்க ஜனநாயகத்தின் பொதுத் தன்மையைத் தெளிவாக அம்பலமாக்குகின்றது.


பிரான்சில் இன்று குழந்தை பராமரிப்புக்கான மையங்களைக் குறைக்கும் அரசின் போக்கை எதிர்த்தும், இதைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்தும் குழந்தை பராமரிப்பு மையங்களை மேலும் அதிகமாகக் கோரியும் போராடக் கோருகின்றது. இதேபோல் உழைப்பு மையங்களில் தமக்கான உணவை வழங்கக் கோரி போராட வேண்டும். இதன் மூலம் பெண் வீட்டுக்கு வெளியில் உற்பத்தியில் ஈடுபடவும், கூலி பெறுவதையும் உறுதி செய்யக் கோருகின்றது. இது இந்தச் சமூக எல்லைக்குள் நடத்தும் போராட்டமானது சமூகத்தின் முன்முயற்சிக்கும், தனது பொறுப்பில் இவைகளை நடத்தும் சமூகக் கண்ணோட்டத்தையும் வழங்குகின்றது. கூலிக்குப் பதில் தேவைக்கு உட்பட்ட சமூகக் கண்ணோட்டம் பெண்ணை வீட்டில் இருந்து திட்டவட்டமாக விடுவிக்கவும், தேவையைப் பெற்றுக் கொள்ளும் சமூகத்தை நோக்கி பெண் முன்னேறக் கோருகின்றது.


இன்று பெண்கள் சமூக உழைப்பில் இருந்து அன்னியப்பட்டு, வீட்டுக் கடமையுடன் மூழ்கிவிடும் பெண்கள் தொடர்பான புள்ளி விபரம் ஏற்கெனவே தரப்பட்டுள்ளது. இது மேற்கில் வேறுபட்ட தன்மையைக் காட்டுகின்றது. பெண்ணை வீட்டுக்கு வெளியில் உழைப்பில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பது எது? மேற்கில் சில நாடுகளில் உள்ள பொது வறுமை. மறுபக்கம் பெண்ணின் ஏகாதிபத்திய நுகர்வு பண்பாட்டிலான சுயேட்சையான தன்மையைக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய ஆணாதிக்கக் கண்ணோட்டத் தன்மை. இதனுடன் மரபார்ந்த மத ஆதிக்கம் கொண்ட பண்பாட்டின் தொடர்ச்சி பெண்ணை வீட்டில் சிறை வைக்கின்றது. இவை தான் மேற்கில் பெண்ணின் வீட்டுக்கு வெளியிலான தொழிலில் ஈடுபடும் எண்ணிக்கையை நாட்டுக்கு நாடு தீர்மானிக்கின்றது.


மேற்கில் சில நாட்டுப் பெண்களை விட மூன்றாம் உலகில் பொதுவாக வீட்டுக்கு வெளியில் பெண் அதிகமாக உழைப்பில் ஈடுபடுவதைக் காணமுடியும். இது சாதி, நிறம், தேசிய இனம், வர்க்கம், மதம் என்ற குறிப்பான நிலைமைகளுக்கு உட்பட்டு, அதற்குள் கூட பெண் உழைப்பின் எண்ணிக்கை தீர்மானகரமாகின்றது. இவை ஆணாதிக்கம், பொது பொருளாதாரம், குறிப்பான பண்பாடு என்ற பொது எல்லைக்குள் பெண்ணின் கடமையை எல்லைப்படுத்துகின்றது.


வீட்டுக்கு வெளியில் வந்த பெண் எப்படி உள்ளாள்? பகுதி வேலைகளிலும், அரைகுறை வேலைகளிலும், இடைவெளிவிட்ட வேலை நேரத்திலும் என்று பெண் அலைக்கழிக்கப்படுகின்றாள். இந்த அரைகுறை வேலையூடாகப் பெண்ணின் மிகுதி நேரத்தை வீட்டில் மரபார்ந்த கடமையைச் செய்யக் கோருகின்றது.


பொதுவாக மேற்கில் உழைக்கும் பெண்களில் பெரும்பான்மையானோர் ஒழுங்கற்ற பகுதி வேலையில் உள்ளனர். அத்துடன் இதற்கு வழங்கும் கூலி எந்தளவுக்கு அடிமட்டமாக இருக்க முடியுமோ அந்தளவுக்குச் சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாக உள்ளது. இந்த அடிமட்டச் சம்பளம் வர்க்கப் போராட்டத்தின் நிலைமை, அதில் பெண்ணின் பங்கு, குறிப்பான பண்பாடுகள், அந்த நாட்டுத் தொழில் சட்டங்களின் வரையறைகள், பெண்ணின் பொருளாதாரத் தேவை, ஆண் கூலியின் அளவு போன்றனவே பெண்ணின் கூலியை மட்டுப்படுத்துகின்றது.

 
பெண்ணின் உயர் பதவிகள் அவளின் திறமையால் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக ஆண் அந்த இடத்தை நிரப்ப முடியாத நிலையில் மட்டுமே பெண் அவ்விடத்தை வந்தடைகின்றாள். இங்கு பெண்ணின் திறமை ஆணிடம் இல்லாத ஒரு நிலையில் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றது. முடிவு எடுக்கும் அதிகாரப் பீடத்தில் பெண் அமர்வதால் பெண் ஆணாதிக்கத்தை ஒழித்துவிடுவதில்லை. அதிகார வர்க்கத்துக்கே உரிய நாய்க்குணத்தை ஆணுக்குப் பதில் பெண்ணும் பெற்று வெளிப்படுத்துவது பொதுப் பண்பாகின்றது. இந்த அதிகாரம் ஆணாதிக்க வழிகளில் கட்டமைக்கப்படுகின்றது.


பெண் அதிகாரத்தில் பெரும்பான்மையை அடைந்தாலும் பெண் மீதான ஆணாதிக்கம் உச்சத்தில் தான் இருக்கின்றது, இருக்கும். இது சிலவேளைகளில் விகாரமாகக் கூட மாறுகின்றது. இதற்குப் பல உதாரணங்களைக் காணமுடியும் அழகுராணி போட்டிகள், மொடலிங் போன்ற பலதுறைகளில் பெண்ணின் அதிகாரம் ஆணாதிக்கத்தை மேலும் விகாரப்படுத்தி வெளிப்படுத்துகின்றது. ஆணுக்கு இந்தச் சமூகத்தில் இருக்கும் உரிமைபோல் பெண்ணுக்கும் இருக்கவேண்டும் என்ற ஜனநாயகக் கோரிக்கை எவ்வளவு நியாயமானதாக இருந்த போதும், இதைச் சாதிப்பதன் மூலம் பெண் விடுதலையடைந்து விடுவதில்லை. மாறாக அதே ஆணாதிக்கத்தைப் பெண்ணே தலைகீழாக நின்று கையாள்வதுதான் பொதுப்பண்பாக இச்சமூக அமைப்பு வழிகாட்டுகின்றது.


சில நாடுகளில் கைத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் எண்ணிக்கையைக் கீழ்க்கண்ட அட்டவணை:13 வழியாக ஆராய்வோம்.22


அட்டவணை: 13


நாடுகள்                                                       சதவீதத்தில்
மெக்ஸிக்கோ                                                 58%
கோஸ்ரோரிக்கா                                           60-62%
கொண்டூராஸ்                                                72-75%
குவாட்டாமாலா (1993)                              78%
டொமினிக்கன் குடியரசு (1992)             60%


இந்தியாவில் கி.பி. 1990-இல் 3,000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உடைய 20 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டோரிடம் இந்தியா டுடே-மார்க் நடத்திய ஆய்வைப் பார்ப்போம். (21.12.1996)13 நகர்ப்புறப் பெண்களில் 12 சதவீதம் பெண்கள் வேலைக்குப் போகின்றனர். "உயர் பதவியில் உள்ள பெண்கள் அடங்கிப் போக மறுக்கின்றனர்" என இந்தியா டுடே எழுதுகின்றது.


இந்தியாவில் இமாலயப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் நடத்திய ஆய்வில் வருடம், பெண்கள் 640 மணித்தியாலம் களையெடுப்பிலும், 384 மணித்தியாலத்தை நீர்ப்பாசனத்திலும், 650 மணித்தியாலத்தைப் பசுவின் கழிவு மூலமான உரச் சேகரிப்பிலும் அதை மண்ணில் இணைப்பதிலும், 984 மணித்தியாலத்தை அறுவடை, கதிரடித்தல் போன்றவற்றிலும் 557 மணித்தியாலத்தை விதைத்தலிலும் (ஆண்கள் உடன் சேர்ந்து) ஈடுபடுகின்றனர்.

 
மலைப்பகுதி ஆய்வில், ஒரு ஜோடி மாடு ஒரு போகத்துக்கு 1,064 மணித்தியாலமும், ஆண்கள் 1,212 மணித்தியாலமும், பெண்கள் 3,485 மணித்தியாலமும் பணிபுரிகின்றனர்.


பாஃதி, மற்றும் சிங் ஆகியோருடைய இமாலயப் பிரதேச ஆய்வில் பெண்கள் விதைத்தலில் 37 சதவீதத்தையும், களையெடுத்தல் மற்றும் நீர்ப்பாசனத்தில் 59 சதவீதத்தையும், அறுவடையில் 69 சதவீதத்தையும், கதிரடித்தல் மற்றும் தூற்றுதலில் 59 சதவீதத்தையும், விலங்குகளைப் பராமரித்தலில் 69 சதவீதத்தையும் ஆக மொத்தம் 61 சதவீதத்தையும் பெண்கள் விவசாயத்தைச் சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.27


ஆப்பிரிக்காவில் உள்ள வேளாண்மைத் துறைகளில் 80 சதவீதத்தைப் பெண்கள் உழைப்பால் கட்டிப் பாதுகாத்து 50 சதவீத உணவு உற்பத்தி செய்தனர். ஸ்ரீலதா பத்லிவாலா மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் ஒரு நாளில் வீடு சார்ந்து வேளாண்மையில் ஆண் 37 சதவீதத்தையும் பெண் 53 சதவீதத்தையும், குழந்தைகள் 16 சதவீதத்தையும் உழைப்பில் பயன்படுத்துகின்றனர்.27


இப்புள்ளி விபரங்கள் பெண்ணின் கடின உழைப்பைக் காட்டுகின்றது. ஆணைவிட உற்பத்தியில் அதிகமாக உழைப்பதைக் காட்டுகின்றது. ஆணாதிக்கம் பெண்ணிடம் இருந்து சொத்துரிமையைப் பறித்த பின்னாலும் பெண் உழைப்பதில் கடினமாகப் பணியில் ஈடுபடுவதைக் காட்டுகின்றது. இந்த உழைப்பின் ஊடாக உலகத்துக்கு உணவு கொடுப்பதையும், தான் பட்டினி கிடப்பதையும் காட்டுகின்றது. தாய்மையின் உன்னதமான கூறுகளைப் பெண்ணின் தியாக மனப்பான்மைக்குச் சான்றாக இவை விளங்கிய போதும், இதை அவளிடம் கட்டாயப்படுத்திச் சூறையாடும் வரலாறு தான் பெண்ணின் வறுமைக்குக் காரணமாகும்.


பெண் வறுமையில் மடிந்து போகும் அளவுக்கு அவளின் உழைப்பையும், அதன் ஊடான உணவையும் கைப்பற்றிய சுரண்டும் வர்க்கம் இன்று அதை மேலும் தீவிரமாக்கி பெண்ணை அடிமைப்படுத்துகின்றது.


விவசாயத்தைப் பெண் கண்டுபிடித்து உணவை உற்பத்தி செய்த போது, அவள் இயற்கையின் உன்னதமான பாதுகாப்பையும் சார்ந்து பாதுகாத்தாள். ஆனால் விவசாயத்தைச் சுரண்டும் வர்க்கம் பெண்ணிடம் இருந்து சொத்துரிமையைக் கைப்பற்றியதன் மூலம் பெண்ணுக்கு அன்னியப்படுத்திய இன்றைய வரலாற்றில் பின்தங்கிய மக்கள் வாழ்கின்ற இடங்களில் பெண்ணின் ஆளுமை தொடர்ந்து காணப்படுவதை அவளின் உழைப்பு காட்டுகின்றது. ஆணாதிக்கச் சொத்துரிமை பெண்ணுக்கு மறுத்து விவசாயத்தைச் சுரண்டும் நலனுக்கு ஊடாக அதிகாரம் பெற்ற மக்கள் கூட்டத்தில் பெண் கூலியாக மாறுவது பண்பாகின்றது.


இந்தியாவில் அகர்வால் என்பவர் செய்த ஆய்வில் கி.பி. 1961 முதல் கி.பி. 1981 வரையிலான பசுமைப் புரட்சிக் காலத்தில் பெண் விவசாயத் தொழிலாளர் எண்ணிக்கை 25.6 சதவீதத்தில் இருந்து இரண்டு மடங்காக அதாவது 49.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம் கி.பி. 1961-க்கும் கி.பி. 1971-க்கும் இடையில் பெண் உற்பத்தியாளர்கள் குறைந்து, கூலிப் பெண்கள் அதிகரித்ததை மரியா பீஸ் என்பவரின் ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. அதே நேரம் வழங்கப்படும் கூலி ஆணை விட பெண்ணுக்கு அரைப்பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்கு குறைவாகவே கிடைத்தது.27 இதன் மூலம் பெண்ணின் பொருளாதார ஆதாரங்கள் பறிக்கப்பட்டுக் கூலித் தொழிலாளராகத் தள்ளியுள்ளதையும், அதே நேரம் வறுமை மேலும் சமூக மயமாகி அதிகரித்ததையும் புள்ளி விபரம் காட்டுகின்றது.

 
பெண் உற்பத்தியாளனாக இருந்த அவளின் கண்டுபிடிப்பு மீதான அனுபவமும், வழிகாட்டலும் பறிக்கப்பட்டுக் கூலிகளாக மாற்றப்படுவதைப் புள்ளிவிபரம் நிறுவுகின்றது. அத்துடன் ஆணாதிக்கக் குடும்பத்தில் வீட்டுக் கடமையில் ஈடுபட்ட பெண் ஆணின் கூலியிழப்பால் வீட்டுக்கு வெளியில் கூலியாக்கப்படுவதைக் கட்டாயமாக்குகின்றது. இவை ஏகாதிபத்திய நலன் சார்ந்த பசுமைப் புரட்சியின் விளைவால் பெண் புதிதாகச் சந்திக்கும் பொது நெருக்கடியாகும். ஒருபுறம் உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கூலியாகவும், மறுபுறம் புதிய கூலிகளையும் சமூகத்தில் தோற்றுவித்த போது சமூகம் பொதுவான நெருக்கடிக்குள் செல்வதைக் காட்டுகின்றது.


உலக மக்கள் தொகையில் வாழும் அடிமட்ட பிரிவாக உள்ள 20 சதவீதம் பேர் கி.பி. 1960-இல், உலகச் செல்வத்தில் பெற்ற 2.3 சதவீதமான ஆதாரத்தை கி.பி. 1986-இல், 1.1 சதவீதமாகக் குறைக்க, ஏகாதிபத்தியச் சூறையாடலே இச்சமூக அவலத்தை நிர்வாணமாக்குகின்றது.


இதையும் பறிக்கும் இன்றைய காட் ஒப்பந்தம் இந்த ஜனநாயக அமைப்பின் அச்சாணியாக உள்ளது. இதன் மூலம் பெண் சொத்துரிமை இழப்பு அதிகரிப்பதும், பெண் கூலியிழப்பைச் சந்தித்து செல்வதும் அதிகரிக்கின்றது. இதை மாற்ற போராடாத வரை பெண் விடுதலை சாத்தியமில்லை. இதை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கப் போராட்டம் அல்லாத எந்தப் போராட்டமும் வழிகாட்டியதில்லை. வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு முதலாளித்துவத்தைப் போலிக் கம்யூனிசக் கட்சிகள் வரிந்து கொண்டதைத் தொடர்ந்து கூலி மேலும் மேலும் குறைந்து செல்வது அதிகரிக்கின்றது. இந்தக் கூலியில் ஆணைவிட பெண்ணுக்கு இழிவாக உள்ள கூலி மேலும் இழிவுபடுத்தப்படுகின்றது. இதை வருடாந்த சம்பளத்துக்கும் விலை அதிகரிப்புக்கும் இடையிலுள்ள சதவீதத்தில் அட்டவணை:14-இல் இருந்து பார்ப்போம்.28


அட்டவணை: 14

 1.1961 உண்மையான சம்பளம் அதிகரிப்பு
 2.1961 போலியான சம்பளம் அதிகரிப்பு
 3.1961-1970 உண்மையான சம்பளம் அதிகரிப்பு
 4.1961-1970 போலியான சம்பளம் அதிகரிப்பு
 5.1971-1980 உண்மையான சம்பளம் அதிகரிபபு
 6.1971-1980 போலியான சம்பளம் அதிகரிப்பு
 7.1981-1990  உண்மையான சம்பளம் அதிகரிப்பு
 8.1981-1990  போலியான சம்பளம் அதிகரிப்பு
 9. 1993 உண்மையான சம்பளம் அதிகரிப்பு
 10. 1993 போலியான சம்பளம் அதிகரிப்பு

நாடுகள்               1              2               3                4                 5                   6                 7                 8               9            10

ஜெர்மனி          10.2        6.5             8.6            5.6              8.3                3.0             3.6               0.9            3.6          0.0
பெல்ஜியம்        3.2        0.6             7.7            4.5            12.0                4.6             5.2               0.6            4.7          1.8
ஸ்பெயின்       12.9      10.9          14.1            7.7            20.4                4.6             9.9               0.5            7.3          1.7
பிரான்ஸ்          10.6        7.0            9.5            5.0            13.3                3.5             7.5               1.0            3.9          1.2
இத்தாலி              8.2       6.4          10.8            6.7            18.4                3.3           12.0               1.8             4.1        -1.6
நெதர்லாந்து      7.4       4.9          10.6            6.3             10.8                3.1             2.3               0.1             3.3         0.6
இங்கிலாந்து     6.8         3.7           7.0            3.0             16.0                2.4             8.4               2.3             3.7        -1.3
ஐரோப்பா           8.8         5.8           9.1            5.1             14.3                3.2             7.8               1.3             4.4          0.0
அமெரிக்கா      3.2        1.9            5.2            2.4                8.1                0.9             5.1               0.5             2.1        -0.6
ஜப்பான்           13.2        6.5          13.5            7.5              13.1               4.1              3.9               2.0             1.9        -0.7

 

வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் இன்றைய மனித வாழ்வில் தொழிலாளியினுடைய கூலி குறைந்து செல்வதைக் காட்டுகின்றது. வர்க்கப் போராட்டத்தின் வர்க்க அடிப்படை சிதைக்கப்படுகின்ற போது சொத்து மேல் சொத்து குவிப்பதன் மூலம் கூலி குறைந்து செல்லுகின்றது. இது பெண்ணின் கூலியை மேலும் இழிவுக்குள்ளாக்குகின்றது. பெண் இழந்து போனதும், இழந்து செல்கின்றதுமான சொத்துரிமையையும், இழக்கும் கூலியையும் பெண் மீளப் பெற போராடாமல் ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியாது. அதாவது சொத்துரிமையை மீளவும் சமூகச் சொத்தாக்கும் வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே இது சாத்தியம். மேலும் கூலியிழப்பால் பெண் ஆணாதிக்கப் பிடிக்குள் இறுக்கப்படுகின்றாள்.


சந்தையில் சுயாதீனமாக நுகர ஆணாதிக்கம் பெண்ணை ஊக்குவித்தபடி பெண்ணின் கழுத்தைப் பொருளாதார ரீதியில் மேலும் இறுக்குகின்றது. பெண் பொருளாதார ரீதியில் ஆணிடம் சார்ந்திருப்பதை இது ஊக்குவிக்கின்றது. இவை எமக்குக் காட்டுவது என்ன? எந்தச் சீர்திருத்தங்களும், சலுகைகளையும் தருகின்ற சுரண்டும் வர்க்கம் மற்றொரு பக்கத்தில் அதை ஒழித்துக் கட்டுகின்றது. வழங்கப்படும் சம்பள உயர்வை விலை ஏற்றத்தின் ஊடாகச் சுரண்டும் வர்க்கம் மறுக்கின்றது (பறித்துக் கொள்கிறது). இது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்.
இதன் மறுபுறத்தில் பெண்ணின் தொழிலைச் சுரண்டும் வர்க்கம் மறுக்கின்றது. மறுபுறம் பெண்ணின் தொழிலைப் பகுதி நேரமாக்குகின்றது. இதைக் கீழ்க்கண்ட அட்டவணை:15-இன் மூலம் ஆராய்வோம்.28


அட்டவணை: 15


நாடுகள்  ஆண் பெண் மொத்தம்


                                           1979             1992            1979               1992               1979             1992

ஆஸ்திரேலியா            5.2%           10.5%           35.2%           43.3%              15.9%          24.4%
ஆஸ்திரியா                  1.5%             1.51%            18.0%        20.1%                 7.6%            8.9%
பெல்ஜியம்                    1.0%              2.11%           16.5%        27.41%               6.0%          11.8%
கனடா                              5.7%              9.3%             23.3%        25.9%              12.5%           16.8%
டென்மார்க்                    5.2%            10.5%             46.3%        37.81%            22.7%           23.1%
பின்லாந்து                     3.2%              5.5%             10.6%          10.4%              6.7%              7.9%
பிரான்ஸ்                        2.4%               3.6%            16.9%        24.31%             8.2%            12.7%
ஜெர்மனி                         1.5%           2.71%             27.6%          34.3%            11.4%            15.5%
கிரீஸ்                                  -%              2.21%               -%             7.21%                 -%                3.9%
அயர்லாந்து                  2.1%             3.61%          13.1%          17.81%              5.1%              8.4%
இத்தாலி                         3.0%               2.7%            10.6%          10.5%              5.3%               5.4%
ஜப்பான்                         7.5%             10.6%            27.8%          34.8%             15.4%            20.5%
லுக்சம்பேர்க்               1.0%            1.91%             17.1%        17.91%               5.8%              7.5%

நெதர்லாந்து                 5.5%           16.7%            44.0%          62.21%            16.6%            34.3%
நிய+சிலாந்து               4.9%            10.3%            29.1%           35.9%             13.9%            21.6%
நார்வே                             7.3%            9.8%              50.9%          47.1%              25.3%            26.9%
போர்ச்சுக்கல்              2.5%             4.2%               16.5%           11.0%               7.8%              7.2%
ஸ்பெயின்                     -%                 2.0%                   -%            23.7%                   -%               5.9%
சுவீடன்                           5.4%            8.4%              46.0%           41.3%             23.6%            24.3%
இங்கிலாந்து               1.9%              6.1%             39.0%            44.6%             16.4%            23.2%
அமெரிக்கா                 9.0%           10.8%              26.7%           25.4%             16.4%            17.5%


1991-ஆம் ஆண்டுக்குரியது.
இது பெண்ணின் அவலத்தைக் காட்டுகின்றது. பெண் வீட்டுக்கு வெளியில் தொழில் புரிவதாகக் காட்டும் ஆணாதிக்க ஜனநாயகம் உண்மையில் பெண்ணின் வேலையை அரைகுறையாகக் கொடுத்து அதிகமாக அவளை ஒட்டச் சுரண்டுகின்றது. பெண் பொருளாதார ரீதியாகத் தொடர்ந்து ஆணைச் சார்ந்திருக்க இது நிர்ப்பந்திக்கின்றது.


பிரான்சில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் பாரிய சம்பள வேறுபாட்டை ஒரே தொழிலில் கொண்டுள்ளனர்.19 அதைக் கீழ்க்கண்ட அட்டவணை:16-இல் காணலாம்.


அட்டவணை: 16
துறை                                                                       வருட வருமானம்
                                                          பெண்                           ஆண்                   பெண்ணை விடஆணின் அதிகரிப்பு
பாதுகாப்புத் துறை            1,96,200 பிராங்        2,69,000பிராங்                                     37 சதவீதம்
தொழில் நுட்பவியல்      1,15,800                        1,37,000                                               18 சதவீதம்
அலுவலகர்                              86,800                           96,000                                               11 சதவீதம்
தொழிலாளர்                           72,100                           93,600                                               29 சதவீதம்


ஆணுக்கும் பெண்ணுக்கு இடையில் காணப்படும் சம்பள வேறுபாடுகள் விதிவிலக்கின்றி எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றது. மேற்கு நாடுகளில் அடிப்படை சம்பளம் வரையறுக்கப்பட்ட போது (சில மேற்கு நாடுகளில் அடிப்படைச் சம்பளம் வரையறுக்கப்படவில்லை. அடிப்படைச் சம்பளம் உள்ள நாடுகளில் உலகமயமாதல் இதை மீள நீக்க கோருகின்றது.) ஆண் பெண்ணுக்கு ஒரே சம்பளத்தையே வரையறுத்துள்ளது. அடிப்படைச் சம்பளத்தைப் பெறும் ஆண் பெண்ணுக்கிடையில் சம்பள வேறுபாடு என்பது கிடையாது. பொதுவாக இப்பிரிவு தொழிலாளர் வர்க்கமாகக் காணப்படுகின்றது. அதற்கு மேல் ஊதியம் பெறும் ஆண் பெண்ணுக்கிடையில் காணப்படும் வேறுபாடு, இந்த ஆணாதிக்க அமைப்பில் நீக்கப்பட முடியாதவகையில் காணப்படுகின்றது.


ஒரே வேலையில் திறமை, ஊக்குவிப்பு... போன்ற பல்வேறு காரணங்களால் இப்பிளவு மூலதனத்தின் ஆதாரமாக உள்ளது. இந்தப் பிளவில் பெண் மட்டுமல்ல ஆண்களும் சுரண்டப்படுகின்றனர். பொதுவாகச் சுரண்டல் வர்க்கம் பிரித்து விடும் நோக்கில் சலுகை பெற்ற பிரிவை உற்பத்தி செய்வதாலும், கண்காணிப்பை அதிக சம்பளம் கொண்டு நடைமுறைபடுத்துவதாலும் ஊதிய வேறுபாடு ஜனநாயகமாக, சுதந்திரமாக அங்கீகரிக்கப்படுகின்றது. சராசரியாகப் பெண்களின் கூலி அதிக சதவீதத்தால் வேறுபட்ட போதும், இதன் கட்டமைப்பு ஆண்-பெண் என்ற பிளவைச் சுரண்டும் வர்க்கம் பிரித்து சுரண்டும் கைக்கூலித்தனத்தில் நடைமுறைப்படுத்துகின்றது.


இந்தச் சுரண்டல் அமைப்பு நீடிக்கும் வரை வேறுபட்ட சம்பளம் நடைமுறையில் கையாள்வது மூலதனத்தின் ஆதாரமாகும். மனிதர்களின் தேவைக்குரியதைப் பெறும் சமுதாயம் மட்டுமே இதைத் தீர்க்கும் மாற்றாக எதிர்நிலையில் காணப்படுகின்றது. மூலதனத்தை மக்கள் தமது கைகளால் பறித்தெடுப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பிளவுகளை ஒழித்துக் கட்டமுடியும்.


இன்று உலகமயமாதல் தொழிலை விட்டு துரத்துகின்ற போது, அந்தத் துரத்துதலைப் பெண்ணை நோக்கி நகர்த்துகின்றது. தொழிலை இழந்த பெண் பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் அவலத்தை மீண்டும் சுரண்டும் வர்க்கம் மேலும் மலிவான கூலியிலும், மிகக் குறைந்த காலத்தில் (விரைவுச் சுரண்டல்) ஒட்டச் சுரண்டும் கைங்கரியத்திலும் ஈடுபடுகின்றது. பெண் இந்தப் போக்கின் ஊடாக ஆணாதிக்கச் சுரண்டலுக்குள் அதிகமாக நசுக்கப்படுகின்றாள்.


நுகர்வுப் பண்பாட்டில் நேரடியாக ஆணிடம் இருந்து விடுவிக்கும் ஏகாதிபத்தியம் பெண்ணை ஒட்டச் சுரண்டுவதற்கும், பொருளைச் சுதந்திரமாக நுகர்வதுக்கும் வசதியாக, ஆணின் பொருளாதாரப் பாதுகாப்பில் நின்று பெண் போராடுவதை ஆண் எதிர்ப்பு கோஷத்தின் (முழக்கத்தின்) ஊடாக மறுக்கின்றது. இதில் இருந்தே ஏகாதிபத்தியப் பெண்ணியம் உதித்து எழுகின்றது. இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டே பூர்சுவா மற்றும் அராஜகப் பெண்ணியக் கோட்பாடுகள் கட்டமைக்கப்படுகின்றது. இந்தப் பெண்ணியம் ஆணுடன் இணைந்து வர்க்கப் போராட்டத்தை நிகழ்த்துவதன் ஊடாக ஆணாதிக்கத்தை ஒழிப்பதை மறுக்கின்றது. இது பாட்டாளி வர்க்கம் தன்னை ஒரு வர்க்கமாக, அரசியல் அதிகாரத்துக்காகப் போராடிய காலம் முதலே நீடிக்கின்றது.


பாரீஸ் கம்யூன்-ஐப் பார்த்த ஒரு முதலாளித்துவ பத்திரிக்கையாளர் கி.பி. 1871 மே மாதத்தில் கீழ்க்கண்டவாறு கூறினார். "பிரஞ்சு தேசம் முழுவதும் பெண்களையே கொண்டிருந்தால், அது எத்தகைய பயங்கரமான நாடாக இருக்கும்! பெண்களும் பத்து வயதைக் கடந்த குழந்தைகளும் பாரிஸ் கம்யூனில் ஆண்களோடு தோளோடு தோள் நின்று போராடினர்."8


பெண்கள் மீதான அச்சத்தை முதலாளித்துவ வர்க்கம் தனது சுரண்டும் நலனுடன் எப்போதும் இனம் காண்கின்றது. இதைக் கோட்பாட்டு ரீதியாக ஆணிடம் இருந்து பிளந்து விட்டால் ஆணும் வர்க்க விடுதலையை அடைய முடியாது. பெண்ணும் ஆணாதிக்கத்திடம் இருந்து விடுதலை அடைய முடியாது என்பதால் தான் பாட்டாளி வர்க்கமல்லாத பெண்ணியத்தைத் தோற்றுவிக்கின்றனர். இது அந்த வர்க்கத்தில் இருந்து இயல்பாகவும் தன்னிச்சையாகவும், அதே நேரம் இதற்குக் கோட்பாட்டு விளக்கம் திட்டமிடப்பட்டும் பாட்டாளி வர்க்க எதிர்ப்பில் கட்டமைக்கப்படுகின்றது. இதையும் மீறி நடந்த வர்க்கப் புரட்சிகள் பெண்ணை ஆணாதிக்கத்திடம் இருந்து விடுவிக்கும் போராட்டத்தைத் தீவிரமாக்கியது. இதைத் தொடர்ந்து கலாச்சாரப் புரட்சியின் ஊடாக ஆணாதிக்கத்தை ஒழிப்பது அரசியல்மயமாக்கப்பட்டது.


கி.பி. 1988-இல் சீனாவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என டெங்சியாபிங் அறிவித்த பின் அங்கு பெண் சிசுக் கொலை வேகமாக அதிகரித்துச் சென்றது. இது வருடத்திற்கு 10 இலட்சமாக மாறியது. டெங் கம்ய+னிசத்தைக் கைவிட்டு முதலாளித்துவத்தை ஏற்ற பின்பு, சமூகத்தில் பெண்களை இரண்டாம்தர பிரஜையாக மாற்றியதுடன் பெண்களை இழிநிலைக்கும் இட்டுச் சென்றது.


இன்று அங்கு பெண்கள் பகிரங்க இடத்தில் ஏலம் விடப்படுவதுடன், பெண்களை விலை பேசி விற்கப்படுவதும், ஒரு பெண்ணை 4-5 பேர் கூட்டாக வாங்கி அடிமைகளாகத் தமது வீடுகளில் விடுகின்றனர். பெண்களை வரிசையாக நிறுத்தி அவர்களின் மார்பகத்தின் மீது ஒரு துண்டு சீட்டில் பெயர், வயது, விலை எழுதி வைத்து, விற்பதற்காக நிறுத்தி வைக்கப்படுவது இன்று நடைமுறையாக உள்ளது. முதலாளித்துவச் சீனாவில் 25 சதவீதமான பெண்கள் அதாவது 15 கோடி பெண்கள் வீட்டில் துன்புறுத்துதலைக் கணவன்மார் மூலம் எதிர் கொள்கின்றனர். இன்று டெங் பொருளாதாரச் சீர்திருத்தம் 2 கோடி பெண்களை வேலையை விட்டு நீக்கி, வீட்டில் அடிமையாக இருக்க வீட்டுக்கு அனுப்பியுள்ளது.


முதலாளித்துவ மீட்சியைக் கட்சிக்கு உள்ளிருந்தே உருவாக்கியவர்கள், மொத்தச் சமூகத்தையே சுரண்டும் வர்க்க நலனுக்காக முதலாளித்துவ ஜனநாயகச் சர்வாதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கம் மீது திணித்தனர். இது பெண்களைத் தமது வேலைகளில் இருந்து அகற்றியது.


சீனாவில் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுத் துறையில் வேலைசெய்த இரண்டு கோடி பெண்கள் வேலையில் இருந்து துரத்தப்பட்டுள்ளனர். (4.9.1994)6


கி.பி.1995-இல், ருசியாவில் 62 சதவீதமான பெண்கள் வேலையிழந்து, மீண்டும் வேலை தேடுபவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.


பல்கேரியாவில் கி.பி. 1991-க்கும் கி.பி. 1995-க்கும் இடையில் 55 முதல் 65 சதவீதமான பெண்கள் வேலை இழந்துள்ளனர்.


ருமேனியாவிலும், போலந்திலும்53 முதல் 56 சதவீதப் பெண்கள் வேலை இழந்துள்ளனர்.


லிதுவேனியாவில் கி.பி. 1990-இல், அரசு சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 76.4 சதவீதக் குழந்தைகள் விடப்பட்டுப் பெண்கள் விடுவிக்கப்பட்டு இருந்தனர். போலி கம்யூனிசத்துக்குப் பதில் ஜனநாயகம் மீட்ட பின் கி.பி. 1993-இல், இந்தப் பராமரிப்பு நிலையத்தில் 36.4 சதவீதமான குழந்தைகளே பராமரிக்கப்பட்டுப் பெண்களை குழந்தையைப் பராமரிக்கும் இயந்திரமாக்கி, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.22


முன்னைய கம்யூனிச நாடுகள் தமது போலி கம்யூனிசத்தைக் கைவிட்டு முதலாளித்துவ ஜனநாயகச் சர்வாதிகாரத்தை மீட்ட பின் வேலையின்மை அதிகரித்துச் செல்ல, பெண் பழையபடி வீட்டில் பட்டினியுடன் வேலைக்காரியாகின்றாள். இந்த நாடுகளின் ஜனநாயகம் எப்படி பொதுவில் வேலையை விட்டுத் துரத்துகின்றது என்பதை அட்டவணை:17-இல் இருந்து பார்ப்போம்.(28 மற்றும் 29)

 


அட்டவணை: 17
நாடுகள்                          1989                   1990                1991               1992                 1993
அல்பேனியா                 1.9                        2.1                   5.1                12.5                     -
பல்கேரி                           0.0                       1.5                 10.8                 15.6                  16.4
கங்கேரி                           0.4                       1.9                   7.5                 12.3                  13.4
போலந்து                        0.1                       6.3                 11.8                 13.6                  15.7
ருமேனியா                    0.0                       0.4                    3.0                   8.4                  10.1
ருசியா                             0.0                       0.0                    0.1                  1.4                     1.1
சிலோவனியா              2.9                       4.7                  10.1                  3.4                  14.4
செக்கோசிலாவியா    0.0                      1.0                     6.6                  5.1                      -
செக்                                   0.0                      0.6                   4.1                   2.6                     3.5
சிலாவாகியா                 0.0                      1.6                  11.8                10.4                  12.0

ஜனநாயகம் என்பது ஆணாதிக்கச் சுரண்டும் வர்க்க ஜனநாயகம் என்பதையே மேலுள்ள புள்ளிவிபரங்கள் எமக்கு நிறுவுகின்றன. அனைவருக்கும் வேலை என்பதை மறுக்கும் இன்றைய ஏகாதிபத்திய ஜனநாயகம் பாட்டாளி வர்க்கம் மீது ஆணாதிக்கச் சர்வாதிகாரத்தைக் கையாண்டு அவர்களின் வேலையை மறுக்கின்றது. இதையே ஜனநாயகத்தின் வடிவமாகப் பிரகடனம் செய்கின்றனர்.


வேலையின்மை முதலில் பெண்கள் மீதே பாய்கின்றது. இதன் மூலம் பெண்ணை வீட்டுக்குள் திருப்பி அனுப்பிய ஜனநாயகம், பெண்ணை வீட்டுக் கடமைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றது. குழந்தை பராமரிப்பு இல்லங்களை மூடுவது முதல் அனைத்தையும் பெண்ணுக்கு எதிராகக் கையாளுகின்றது. பெண்களைத் தமது வறுமையின் ஊடாக வீதி விபச்சாரத்தை அந்த நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இந்தச் சுரண்டல் ஜனநாயகம் ஈடுபடுத்துகின்றது.


சிறுமிகள், குழந்தைகள் எல்லாம் விபச்சாரத்துக்கும், ஓரினச் சேர்க்கைக்கும், தத்தெடுப்புக்கும், சிறுவர் உழைப்புக்கும் வீதிச் சிறுவர்களாக சிறுவர்களை மாற்றிய பெருமை எல்லாம் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கு எதிரான முதலாளித்துவ ஜனநாயகத்தின் சுரண்டும் ஜனநாயகமாக, அதன் பரிமாணமாக இருந்தது. இதைத் தான் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான அனைத்துக் கோட்பாட்டுவாதிகளினதும் அடிப்படையான ஜனநாயக விளக்கமாக இருந்தது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் விமர்சிக்கும் எல்லா விதமான மார்க்சிய எதிரிகளும் இதற்காகவே தலைகீழாக நின்றனர், நிற்கின்றனர். இந்தப் பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளை இனம் காண்பதன் மூலமே ஆணாதிக்கத்தைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் ஊடாக ஒழித்துக் கட்டமுடியும் என்பதை யதார்த்தம் மீண்டும் நிர்வாணமாக்குகின்றது.