திட்டமிட்ட நிலப்பறியுடன் கூடிய நிலப்பகிர்வு விவசாயிகளின் நிலப்பிரச்சனைக்கு தீர்வை வழங்கியது. இது இலங்கையில் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான தேசியப் போராட்டத்தை பின்தள்ளியது. நிலப்பிரபுத்துவ வர்க்கம் இழப்பீடுயின்றி அரைகாலனிய அரைநிலப்பிரத்துவ வடிவத்தை தொடரும் வகையில் திட்டமிட்ட இனவாத நிலப்பகிர்வை ஒரு கண்ணியாகியது.
ஜனநாயகக் கோரிக்கை உள்ளடக்கிய தேசிய போராட்டத்தை இது பின் தள்ளியது. இதை மார்க்சியவாதிகள் இலங்கை வரலாற்றில் சரியாக அடையாளம் காணவில்லை. திட்டமிட்ட இன அழிப்பிலான நிலப்பகிர்வு வர்க்க போராட்டத்துக்கு எதிராக இருப்பதை அடையாளம் காணத்தவறியது, இலங்கையில் வர்க்கப் போராட்த்தின் பின்னடைவுக்கு வழி சமைத்து.
அத்துடன் கல்வியில் இனவாத அடிப்படையிலான தரப்படுத்தல், இனவாத அடிப்படையிலான வேலைவாய்ப்பு கூட இனங்களை பிளந்து நடத்தியதன் மூலம், வர்க்கப் போராட்த்தை பின் தள்ளமுடிந்தது. வரலாற்று ரீதியாக ஆளும் வர்க்கங்கள் இனங்களைப் பிளந்ததன் மூலமும், சமூக லாபங்களை ஒரு இனம் சார்ந்து மாற்றியதன் மூலமும் வர்க்கப் போராட்த்தை இனவாத சேற்றில் மூழ்கடித்தனர். உண்மையில் இனவாதம் சார்ந்து நடத்திய வர்க்க ஆட்சியை எதிர்த்து போராட வேண்டிய மார்க்சிய கட்சிகள், இனவாத சேற்றை தமக்கு அப்பியதன் மூலம் அதன் சேற்றில் மூழ்கினர். உண்மையில் வர்க்கப் போராட்டம் இந்த இனவாத நடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்டிருக்க வேண்டும்;. ஆனால் அது நடத்தப்படவேயில்லை. இதை மார்க்சியத்துக்கு அன்னியமான விடையமாக காட்டிதயன் மூலம், இனவாத்தை கொழுவேற்றவதில் துணைநின்றனர் என்றால் மிகையாகது.
மறுதளத்தில் தேசம், தேசியம் என்பதை வெறும் தமிழன் சிங்களவன் ஆட்சியாக சித்தரிப்பது நிகழ்கின்றது. இதில் இருந்து தமிழன் அல்லது சிங்களவனை எதிர்ப்பதை தேசியமாக காட்டுவது நிகழ்கின்றது. இந்த இனம் கடந்து இலங்கையின் பொதுவான இனவாதமாக உள்ளது. ஒரு தேசம் என்பது, அந்த தேசம் தனது உள்சுற்று சந்தை வடிவத்தில் நிர்மானமாகின்றது என்பதை, இனத் தேசியம் மறுக்கின்றது தனது சொந்த தேசிய பொருளாதாரத்தை அன்னிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக கட்டமைக்காத தேசியம், உண்மையில் ஒரு தேசமாகவோ தேசியமாகவோ இருப்பதில்லை. இதை இன குறுந் தேசிய வாதிகளும், தேசிய எதிர்ப்பாளர்களும் ஒரேவிதமாக மறுக்கின்றனர். ஏகாதிபத்தியம் கட்டமைக்கும் தனது பொருளாதார அமைப்புக்குள், தேசங்களையும் தேசியங்களையும் உட் செரித்து மறுகாலனியாக மாற்றும் பொதுவான தன்மைக்குள் தேசிய போராட்டங்களும் தேசிய அரசுகளும் அடிமையாகின்றன. இதையே இன்றைய தமிழ் தேசியமும், சிங்கள தேசியமும் விதிவிலக்கின்றி செய்கின்றனர். இதையே தேசிய எதிர்ப்பாளார்களும் செய்கின்றனர். சுயநிர்ணயம் என்பது அடிப்படையான பொருளாதார கட்டமைப்பை மறுக்கும் தேசியமாக விளக்குவது, இன்றைய நவீன தேசிய திரிபாகும். இது உலகமயமாதல் கோட்பாட்டில் தொங்குவதாகும்.