இன்றைய இணைய உலகில் அதிகளவு மக்கள் செல்லும் ஒரு தளமாக youtube தளம் இருக்கின்றது. சில வேளைகளில் எமது கணினியில் இருந்து youtube இணையத்தளத்திற்குள் செல்லமுடியாத நிலை நம்மில் பல பேருக்கு ஏற்பட்டிருக்கலாம். எமது இணையஉலாவியில் youtube முகவரியை ரைப்பண்ணியதும் இணையஉலாவி காணாமல் போவதுடன் youtube is banned you fool The administrators didnt write this program guess who did?? MUHAHAHA!! என்ற செய்தியும் சிறு பெட்டியில் தோன்றும். ஏன் இப்படி வருகிறது, இதை எவ்வாறு சரிசெய்யலாம் என இப்போது பார்ப்போம்.

இப்படி ஒரு நிலை உங்களுக்கு எற்பட்டால் உங்கள் கணினியில் Heap41a / win32.USBworm என்ற வைரஸ் பரவியுள்ளது என்று அர்த்தம். இந்த வைரஸை உருவாக்கியவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்தியர். இவ்வைரஸ் USB pen drives மற்றும் removable storage devices மூலமாக பரவுகின்றது. இதை உங்கள் கணினியிலிருந்து அழிக்க

CRTL+ALT+DELETE பட்டன்களை அழுத்தவும். திரையில் தோன்றும் பெட்டியில் processes என்பதை அழுத்தவும்.இப்போது மிக கவனமாக உங்கள் பெயரில் இருக்கும் svchost.exe என்ற பைலை தேடிப்பிடித்து RIGHT CLICK பண்ணி END PROCESS பண்ணவும் ( கவனிக்க வேண்டியது உங்கள் பெயரிலிருக்கும் svchost.exe பைலை மட்டும் தான் மாத்தணும். மற்ற பைல்களை தொடாதீங்க)

இனி கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கி வைரஸை ஓட ஓட விரட்டுங்க.

Download Worm Removal tool

 

http://www.nathiyosai.com/2008/05/youtube.html