அண்மையில் பாரிஸில் நடைபெற்ற பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவாக்கம் குறித்து நடைபெற்ற விவாதமொன்றில்; பல்வேறுபட்ட கருத்துகள் பகிரப்பட்டன. குறிப்பாக புலம் பெயர்ந்த நாட்டின் நிலை தொடர்பாக கவனத்தில் எடுத்த போதும், இது பரந்த சமூக தளத்தில் பொதுவான அடிப்படையை கொண்டே எதார்த்தில் விவாதிக்கத் தூண்டியது.

 புலம்பெயர் சூழல் என்பது எமது பெற்றோருக்கு முற்றிலும் புதியது. மொழி மற்றும் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள் என அனைத்தும் முற்றிலும் எமக்கு எதிர்மறையாக காணப்படுகின்றது. அதாவது எமது கூட்டுச் சமுதாய வாழ்வு முறைக்கும், தனிமனித வாழ்வு முறைக்கும் இடையிலான ஒரு அகன்ற பள்ளமாக இது காணப்படுகின்றது. இதை தெளிவாக கூறின் நிலப்பிரபுத்துவ சமுதாய பண்பாடுகளைக் கொண்ட ஒரு சமுதாயத்துக்கும், ஏகாதிபத்திய உலகமயமாதல் பண்பாட்டைக் கொண்ட சமுதாயத்துக்கும் இடைலான முரண்பாடாக உள்ளது. பெற்றொர் குழந்தை வளாப்பில் பாரிய நெருக்கடியை இது உருவாக்கின்றது.

 

இங்கு எமது குழந்தைகள் எகாதிபத்திய சமூக அமைப்பில் பிறந்தும் அல்லது சிறு வயது முதலே தனிமனித வாதத்துடன் வாழத் தொடங்குகின்றது. குழந்தை மீதான பெரும் செல்வாக்கை வகிக்கும் சமூகத் தாக்கம், அடிப்படையில் மேற்கத்திய பண்பாட்டு கலாச்சார சூழலுக்கு உட்பட்டு குழந்தை சிந்திக்க தொடங்குகின்றது. ஆனால் குழந்தை எதிர்மறையான நிலப்பிரத்துவ பண்பாட்டை பெற்றொரிடம் இருந்து எதிர் கொள்கின்றது. இது இயல்பான எதார்த்தமான முரண்பாடான எதிர்மறையான மோதலாக வெடிக்கின்றது. மேற்கத்தைய பண்பாட்டில் பொதுவாக கையாளப்படும் ஜனநாயக விழும்மியங்கள், எமது சமுதாயத்தில் இயல்பாகவே அங்கிகரிக்கப் படுவதில்லை. இங்கு பெற்றொருக்கும் குழந்தைக்குமான உறவில் உறவாக்கம் என்பது, அதிகார வடிவங்கள் சார்ந்த பண்பியலுடன் தான் கையாளப்படுகின்றது. அதாவது பெற்றோர் குழந்தைகளை அடக்கியாளும் உரிமையை, ஏன் ஏதற்கு என்ற கேள்வி இன்றி அங்கிகரிக்கின்றது. இது ஜனநாயக விழுமியத்தை நேசிக்கு குழந்தைகளின் மனதை நேரடியாகவே பாதிக்கின்றது. இந்த இடைவெளி குழந்தையின் எதார்த்த அறிவு சார்ந்து, பெற்றோருக்கு எதிரானப் மனப்பாங்கை உருவாக்கிவிடுகின்றது. இதில் இருந்து புலம் பெயர்ந்த பெற்றோர் குழந்தை உறவில் எற்படும் நெருக்கடிகள் பலவாகிவிடுகின்றன.. வயதுக்கு வயது இதுவே ஒரு புதிய பிரச்சனையாகிவிடுகின்றது. குழந்தை இரட்டை காலச்சார பண்பாட்டு மற்றும் பொருளாதார சமூக கண்ணேட்டத்துக்கு இடையில் சிக்கி அங்குமிங்கும் பந்தாடப்படுகின்றது. குழந்தை இரண்டு சமூக அமைப்புடனும் நெருங்க முடியாத இடைவெளியால், சமூகத்தின் மீதான வெறுப்புக்கு குழந்தை பலியாகின்றது. இது பொதுவாக நிலைத்து வாழும் சமூகத்தை விட, வன்முறை கொண்ட குழந்தைகளை உருவாக்கின்றது. சமூக மீதான வெறுப்பும், சமூக மதிப்பற்ற அராஜகத்தை கையாள்வதை குழந்தையின் அடிப்படை உளவியலாகின்றது.

 

இந்த அபாயத்தை நாம் புரிந்து கொள்ளாமலே, வன்முறை குழுக்களைப் பற்றி வெறுப்பாக பேசிக் கொள்கின்றோம். இதைச் சற்று விரிவாக பார்ப்போம்;. மேற்கில் நிகழும் இளைஞர் குழுக்களின் வன்முறைகள், பாடசாலை வன்முறைகள் கணிசமான அளவு வெளிநாட்டு குழந்தைகள் ஈடுபடுவது அவதானிக்கப்படுகின்றது. இதற்கு முக்கியமாக இரட்டைக் கலாச்சாரம் அடிப்படையாக உள்ளது. இங்கு ஜனநாயகத்தையும், அறிவு ப+ர்வமாக விடயங்களை கையாளும் அணுகுமுறையற்ற குடும்பச் சூழல், இதற்கு அடிப்படையாக உள்ளது. இதை விட விவாகரத்துகள், குடும்பத்தில் காணப்படும் வன்முறைச் சூழல், நுகர்வு வெறியை எற்படுத்தும் உலகமயமாதல் சந்தைக் கண்ணோட்டம் என்று நீண்ட சமூகக் காரணங்கள் முண்டுகொடுக்கின்றது. தமிழர்கள் மத்தியில் காணப்படும் இளைஞர் குழுக்களின் வன்முறையை எடுத்துக் கொண்டால், இதிலும் எமது சமூக இயக்கத்தில் காணப்படும் ஜனநாயகமற்ற போக்கு அடிப்படையாக பிரதிபலிக்கின்றது. இது ஆயுதக் கலாச்சாரமாகியுள்ளதால், ஆயுத வன்முறை வரை விரி;ந்துவிட்டது. அத்துடன் பெருமளவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் 13 வயதுக்கு பிற்பாடு மேற்கு நோக்கி புலம் பெயர்ந்தவர்களை அடிப்படையாக கொண்ட குழுக்களாக உள்ளது. இவர்களை தமிழ் படசாலைகள் ஒன்று இணைத்து, வன்முறைக்குரிய குழுகளையும் உருவாக்கி கொடுக்கின்றது. வக்கிரமான பிஞ்சுக் காதலை உற்பத்தி செய்கின்றது. இப் பாடசாலைகளால் தமிழை அல்லது மற்றைய கல்வி சார்ந்த எதையும் வெற்றிகரமாக சாதிப்பதில்லை. பெற்றோரின் கற்பிக்கும் ஆர்வத்தை பணமாக்கும் கல்வி நிறுவனங்கள், வெற்றிகரமாக சாதிப்பது வன்முறை கொண்ட குழுக்களை ஒன்று திரட்டவும், வக்கிரமான பாலியல் நுகர்வை தமிழருக்கு இடையில் காதலாக்குவதுமே. இடைப்பட்ட இரட்டைக் காலச்சாரத்தில் சிக்கி, எதிலும் சமூக அடிப்படையை எற்படுத்த முடியாதவர்களின் வெடிப்புத்தான் இந்த குழுக்களாகின்றது. இதன் பின்னணியில் இளம் பெண்களும் இணைந்து இருப்பது தற்செயலானவை அல்ல. குழுக்கள் பொறுக்கி வாழவும், துன்புறத்தி ரசித்து வாழவும் எல்லாப் பண்பாட்டு கலாச்சரத்தையும் அழிக்கும் உலகமயமாக்கல் பண்பாடே, இவர்களின் கதாநாயக தனத்தைப் பீற்றும் ஆதாரமாக உள்ளது.

 

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது பெற்றோரின் பணி இங்கு மிக முக்கியமானதாக உள்ளது. குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவில் மிகவும் நேர்த்தியான இயல்பான பரஸ்பரம் கதைத்துக் கொள்ளும் உறவை உருவாக்க வேண்டும். எதையும் ஜனநாயக விழுமியங்களுக்குள், அறிவார்ந்த வகையில் பேசித் (கதைத்து) தீர்க்கும் அறிவும், சமூகப் பண்பும் மிக முக்கியமானதாக உள்ளது. காரணமற்ற எதையும், அதேபோல் விளக்கமற்ற எதையும், திணிப்பதையும் கோருவதையும் பரஸ்பரம் கோராத உறவு அடிப்படையானதாகும். பகுத்தாராய்வுக்கு உட்பட்ட வகையில் விடயங்களை கையாள்வது அவசியம். இவை அனைத்தையும் குழந்தையிடம் எற்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. இதை தாம் கடைப்பிடிப்பது பெற்றோரின் முதன்மைப் பண்பாக இருக்க வேண்டும்;. அதாவது பெற்றோர் முன் கையெடுத்து அணுகுவது அடிப்படையானது. அனைத்து பெற்றோரினதும் விருப்பங்கள் பூர்த்தியாவது என்பது, குறிப்பாக பெற்றோரின் பொறுப்பு வாய்ந்த அணுகுமுறையில் தங்கியுள்ளது. இந்த விடயத்தைக் கையாள்வது இலகுவானதும், நனவுப+ர்வமானதும் கூட.

 

பெற்றோர் தம் குழந்தைக்கு சொல்லும் ஒவ்வொரு விடயத்தையும், மறுக்கும் ஒவ்வொரு விடயத்தையும் ஏன் சொல்லுகின்றோம் என்பதை, தமக்கு தாமே கேட்டுப் பார்க்க வேண்டும்;. இவற்றை பொதுவாக குழந்தையின் நன்மைக்காக என்ற, ஒற்றைப் பதிலில் இருந்து அல்ல. மாறாக இந்த மறுப்பும், உத்தரவுகளும் சமூக பண்பாட்டு  உறவாக்கத்துடன் தொடர்புடையவை. ஏன் இவற்றைக் குழந்தை கேட்கின்றது மறுக்கின்றது என்பதை, அந்தக் குழந்தையின் நிலையில் இருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டியது பெற்றோரின் கடமையாகின்றது. இதை முதலில் பெற்றோர் செய்யத் தொடங்க வேண்டும். அதே நேரத்தில் குழந்தையிடம் இதே கேள்வியை, அதாவது ஏன் கேட்கின்றாய், ஏன் மறுக்கின்றாய் என்று தனக்கு தானே கேட்க வைப்பது அவசியமானது. இதன் மூலம் ஒரு தர்க்க ரீதியான முடிவை, பெற்றோர் மற்றும் குழந்தைக்கு இடையில் ஒரு சரியான முடிவை வந்தடைவதை தூண்ட முடியும்;. இங்கு இந்த விடயத்தில் குழந்தை பெற்றோர் தமக்கு இடையில் ஜனநாயக பூர்வமான உறவாக்கத்தை உருவாக்குவது அவசியமானது. மறுப்பு மற்றும் கேட்டலில் உள்ள விடயத்தை ஜனநாயக ப+ர்வமாக அணுகி, அடிப்படை தேவையின் நிமர்த்தம் என்ற எல்லைக்குள் அனுசரித்துப் போவதைப் பண்பாடாக்க வேண்டும். அறிவுபூர்வமாக அல்லாது அடாத்தாக மறுப்பதும், அடாத்தாக கேட்பதும் பரஸ்பரம் உறவை பிளந்து விடுகின்றது.

 

குழந்தை மற்றும் பெற்றோர்; சிந்திக்க ஆற்றல் உள்ள உயிரியல் தொகுதியே. இவர்கள் வெறும் உணர்ச்சி அற்ற பொருட்கள் அல்ல. சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பதன் மூலம் தான், ஒரு இயந்திர வாழ்விற்கு பதில் இசைந்து இணங்கி போக முடியும். இது மனித பண்பாட்டை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் பொருட்களின் உறவில் இருந்து உருவாகும், இயந்திரத்தனமாக சடங்கு ரீதியான அனுகுமுறையை மாற்றி அமைப்பது அவசியமானது. இன்றைய மனித உறவுகளை பொருட்களே தீர்மானிக்கின்றது. மனிதன் உற்பத்தி செய்த பொருட்கள், மனிதனை அடக்கியாளும் சமூக உறவாக்கத்தை கட்டுப்படுத்துகின்றது.

 

பொருட்கள் வெறும் இயந்திரகதியில் மனித உறவுகளின் எல்லையை தீர்மானிக்கின்றது. உறவுகள் அனைத்துகும் லஞ்சம் ஒரு உற்சாகமான உறவாக புனையப்படுகின்றது. குழந்தை மீதான அன்பைக் கூட, பொருட்களை லஞ்சம் கொடுப்பதன் மூலம் பெற்றோர் வெளிப்படுத்த முனைகின்றனர். குழந்தையின் சாதனையை பொருட்கள் மூலம் கோரப்படுகின்றது. அதாவது பரீட்சையில் பாஸ் செய்தால், இதை வாங்கித் தருவேன், அதைச் செய்தால் இந்தக்கடையில் அந்த உணவை வாங்கித் தருவேன் என்று விரிந்த தளத்தில் இந்த லஞ்ச உறவாக்கம் கட்டமைக்கப்படுகின்றது. மனிதனுக்கு இடையில் சமூக உறவாக்கம் என்பது விலை பேசப்படுகின்றது. குழந்தையின் அறிவின் மீதான ஆர்வம், லஞ்சம் என்ற பொருட்களின் உறவில் விலை பேசப்படுகின்றது. இந்த உறவுகள் இயல்பில் பெற்றோரையும் குழந்தையும் ஒரு வர்த்தக உறவுக்குள் உற்பத்தி செய்கின்றது. இது பெற்றோரிடம் இருந்து குழந்தையிடம் கைமாறும் போது, குழந்தையும் அதையே கோருகின்றது. உதாரணமாக குழந்தை பெற்றொரிடம் எனது பிறந்த தினத்துக்கு இன்ன பொருளை வாங்கித் தரவேண்டும் எனக் கோருகின்றது. நான் இதைச் செய்வது என்றால் அல்லது இதைச் சாதிப்பது என்றால், இன்ன பொருளை வாங்கித் தா என்கின்றது. எங்கும் பொருட்கள் சார்ந்த உறவாக மனித உறவு உள்ளது. மனித உறவை பொருட்கள் நிர்ணயம் செய்கின்றது. இதுவே பெற்றோர் குழந்தை உறவில் எற்படும்; முரண்பாட்டின் அடிப்படையாக உள்ளது. மனித உறவு என்பது இதற்கு வெளியிலானது. மனித உறவில் மிக முக்கியமானது சக மனிதனை ஒரு மனிதாக மதித்தலாகும்;. இதை பொருட்கள் நிர்ணயம் செய்ய முடியாது. தனிமனித நலன்களை விட சமூகத்தின் நலனை சிந்திக்க வைத்தல், சிந்திக்க தொடங்குதல் முதன்மையானது. இதற்குள் விரிவாக தற்போதைக்கு ஆராய்வதைப் தவிர்ப்போம். பொருட்கள் சார்ந்த உறவு  லஞ்ச வகைப்பட்டது. இது பாசம் வகைப்பட்டது அல்ல. மனிதப் பாசம் வேறானது. பொருட்கள் மூலம் காரியம் சாதிப்பது முற்றிலும் இயந்திரவகைப்பட்ட உறவாகும்.

 

நல்ல குழந்தை என்பதன் வரைவு இலக்கணம் என்ன? பெற்றொரின் சொல்லைக் கேட்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளா? வகுப்பில் சிறந்த புள்ளிகளைக் எடுக்கும் குழந்தை நல்ல குழந்தையா? குழப்படி செய்யாத குழந்தை நல்ல குழந்தையா? பெற்றோர் சொல்லும் ஆணை அல்லது பெண்ணை திருமணம் செய்யும் குழந்தை நல்ல குழந்தையா? பணத்தை பெருக்கி;; சம்பாதிப்பவன் நல்ல குழந்தையா? இப்படி வௌ;வேறு அளவில் நல்ல குழந்தை பற்றிய ஒரு சமூக அடிப்படை காணப்படுகின்றது. இங்கு அனைத்திலும் பெற்றொரின் சுயநலமும், குழந்தை மீதான ஒரு அதிகாரத்துவமும் தொங்கி நிற்கின்றது. இவை அனைத்தும் பொருட்கள் சார்ந்த உறவில் இருந்தே வரையறுக்கப் படுகின்றது. ஆனால் நல்ல குழந்தை என்பது, சமூகத்தின் பொது நலனில் இருந்து சிந்திக்க கற்றுக் கொள்வதில் முற்றாக சார்ந்து உள்ளது. அதாவது யாருக்கும் பாதகமில்லாத, மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த சமூக பண்பாட்டில் மற்றவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் குழந்தை நாம் உருவாக்க வேண்டும். அதாவது சுயநலமற்ற மனித உறவுகள், பரஸ்பரம் தமக்கு இடையில் மனித இனத்தின் நலனை முதன்மைப்படுத்தும் உறவே, மிக நல்ல குழந்தைகளை உருவாக்கின்றது.  இந்தக் குழந்தைகளை இட்டு எந்தப் பெற்றோரும், எதற்கும் கவலைப்பட வேண்டி அவசியம் இருக்காது. சுய ஆற்றல் உள்ள, சுய நம்பிக்கை உள்ள சமூகத்தில் தன்னை ஒரு அங்கமாக இணைத்துக் கொள்ளும் குழந்தை யாருக்கும் சுமையாக உருவாவதில்லை. யாருக்கும் மனக் கஸ்ட்டத்தை கொடுப்பதில்லை. மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் ஒரு குழந்தைகள் உருவாகுவார்கள். இவை அனைத்துக்கும், உண்மையில் குடும்பச் சூழலில் ஜனநாயக மனப்பாங்கு உருவாக்குவது அவசியமானது. எதையும் சேர்ந்து ஆராயவும், விமர்சிக்கவும், சுயவிமர்சனம் செய்யும் சூழல் குடும்பத்தில் அவசியமான நிபந்தனையாகும்.

 

சில பெற்றோர்கள் குழந்தை கோருவதை அப்படியே நிறைவு செய்யும் எதிர்மறை போக்கும் அல்லது ஏனோ தானே என்று நிறைவு செய்வதும் நிகழ்கின்றது. இன்றைய எதார்த்தில் குழந்தை கோரும் அனைத்தையும் பெற்றோர் நிறைவு செய்ய முடியாது. அதேபோல் பெற்றொர் செய்வது அனைத்தும் சரியானவையும் அல்ல. இதற்கு பதிலாக பெற்றொர் குழந்தைகளின் தேவை என்ன என்ற கேள்வியில் இருந்து, அதன் அடிப்படைத் தேவையை மட்டும் பூர்த்தி செய்வதில் இணங்கிப் போகும் முறையைக் கையாள்வது அவசியமாகும். இங்கு ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பில், இதை நாம் புரிந்து அதன் எல்லைக்குள் எதார்த்தம் மீது தீர்வு காணவேண்டும். இதை பரஸ்பரம் குழந்தையுடன் விரிவாக கதைத்து நடைமுறைப்படுத்துவது அவசியமானது.

 

ஆனால் நாம் இந்த அடிப்படை சமூகத் தேவையை கடந்தே பொதுவாகச் சிந்திக்கின்றோம்;. சமூகத் தேவை என்பதும் தனிப்பட்ட தேவை என்பதைக் கடந்து நாம் அணுகும்போது, தவறானவற்றை பெரும்பாலும் கையாளத் தொடங்குகின்றோம். இது பெற்றோர் தமது சொந்த நடைமுறை வாழ்விலும், குழந்தை தனது வாழ்விலும் இதை கையாளுகின்றது. அதாவது பொருட்களே பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையில் அடிப்படையான உணர்வை தீர்மானிப்பதாக மாறிவிடுகின்றது. அநேகமாக குழந்தையின் தவறான கோரிக்கையை அங்கீகரித்தும், அல்லது மறுத்து பின் இணங்கிச் செல்வதும் அதை நியாயப்படுத்துவதும் பொதுவாக நிகழ்கின்றது. இது படிப்படியாக பல தவறான காரணமற்ற நடத்தைகளுக்கு, படிப்படியாக இணங்கிப் போவதை நிர்பந்திக்கின்றது. பெற்றோர் தாம் செய்பவற்றின் மேலான ஆதாரவளராக மாறி நியாயப்படுத்தி விடுகின்றனர். குறிப்பாக இதை ஆராய்வது விடயத்தை துல்லியமாகப் புலப்படுத்தும்.

 

'மார்க்' பொருட்கள் மீதான குழந்தையின் கோரிக்கைகள்

 

புலம்பெயர் நாட்டில் மார்க் சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதையே குழந்தைகள் பொதுவாக கோருகின்றனர். இது இன்று இலங்கையில் (மூன்றாம் உலக நாடுகளில் கூட) கூட குழந்தைகளால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. பொதுவாக இந்த விடயத்தில் விலை சார்ந்து பெற்றோர் இதை எதிர்த்த போதும், குழந்தைகளின் விடாப்பிடியான கோரிக்கைக்கு பெற்றோர் அடிபணிந்து இணங்கிப் போவது அல்லது ஒரு மோதலாகவும் மாறுகின்றது. சில பெற்றோர் அதை நியாயப்படுத்தவும், அதற்கு காரணங்களை கண்டுபிடித்து வாதிடவும் செய்கின்றனர்.

 

மார்க் பொருட்கள் மீதான குழந்தையின் மோகம் எப்படி உருவாகின்றது? சந்தை பொருளாதாரத்தில் சூறையாடும் வக்கிரத்தில் இருந்து, அதை அறிவியலுக்கு புறம்பாக குழந்தை மண்டைக்குள் இறுக்கப்படுகின்றது. தொலைக்காட்சி முதல் கண்ணால் பாhக்கும் அனைத்து காட்சியிலும், காதால் கேட்கும் விடயங்கள் முதல் அனைத்து மனித உணர்வு வழிகளில் மார்க் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, சிறந்தது அழகானது, கவர்ச்சிகரமானது என்று குழந்தையில் மூளையில் திணிக்கப்படுகின்றது. இதை கௌரவத்தின் சின்னமாக, புகழின் உச்சமாக, நவீனத்தின் இலட்சியமாக மாற்றி, கதாநாயக காதநாயகிகளின் உன்னத நிலைக்கு இதுவே அடிப்படை காரணம் என்று எம்மைச் சுற்றி உள்ள அமைப்பு எமக்கு இடித்துரைக்கின்றது. குழந்தைகள் தாம், தம்மை மற்றவர்கள் முன் கதநாயகன் கதநாயகியாக காட்ட இந்த விடத்தை இறுக பிடித்துக் கொள்கின்றன. குறிப்பாக இதை இலகுவாக புரிந்து கொள்ள, தமிழ் சினிமா நடிகைகள் மூலம் அறிமுகமாகும் சாறி வகைகள்;, எப்படி எமது பெண்களை அதன் பின் அலையவிட்டு மக்களின் உழைப்பை உறுஞ்சுவது சந்தை விதி. புதிய சாறிகளை நோக்கி சந்தை எப்படி மாறுகின்றதோ, அதுவே மார்க் பொருட்கள் மீதான குழந்தையின் மோகமும்.

 

இந்த மோகம் என்பது உலகமயமாதல் பண்பாட்டால் கட்டி அமைக்கப்படுகின்றது. அமெரிக்கா ஐரோப்பிய உயர் வர்க்கப் பண்பாடுகளை, உலகமயமாக்கின்ற இன்றைய உலக நிலைக்கு இசைவாகவே, இந்தச் சந்தை கட்டியமைக்கப் படுகின்றது. அந்த எல்லைக்குள் குழந்தைதயின் சிந்தனை, செயல்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்படுகின்றது. இது குழந்தை மட்டத்தில் செல்லுகின்ற போது, பொதுவான இயல்பான சமூகக் கலச்சாரமாக மாறுகின்றது. எல்லாவற்றையும் இதற்குள் இருந்து சிந்திக்கின்றவனாக மாற்றுகின்றது. உலகமயமாதலுக்கு உட்படாத, உலகில் உள்ள பன்மைக் கலாச்சாரத்தை விரோதமாக பார்க்கின்றது. இது கூட எமது பெற்றோருக்கு எதிரான ஒரு பண்பாக, ஒரு கலாச்சாரமாக மாறுகின்றது.

 

இப்படிப் பொதுவாக உலகமயமாகும் சந்தை பண்பாட்டைக் கலச்சாரமாக உள்வாங்கும் குழந்தை, தமக்குள் அது சமூக அங்கீகாரம் கொண்ட செக்கு மாட்டுத் தனத்தை பொதுவான பண்பாடாக கொள்கின்றது. இங்கு இந்த உலகமயமாதல் பண்பாட்டை கலச்சாரத்தை கைகொள்ள முடியாத குழந்தையை, இந்த பண்பாடும் கலாச்சாரமும் இழிவுபடுத்துகின்றது, அவமானப்படுத்துகின்றது. சராசரிக் குழந்தைகள் இதை எதிர்த்து எதிர் நீச்சல் போடவும், எதிர்த்து நிற்க முடியாத நிலையில் இணங்கிப் போதல் என்ற நிலைக்குள் தள்ளப்படுகின்றனர். கள்ளச் சந்தை மூலம் மார்க் பதித்த பொருட்கள் மூலம், இதை சிலர் பூர்த்தி செய்து விடுகின்றனர். இதை பெற்றோரும், குழந்தைகளும் தப்பித்துச் செல்லும் சமூக நெருக்கடியில் இருந்து, இந்தத் தீர்வை கையாளுகின்றனர். ஆனால் மாணவர் சமுதாயமே சந்தை என்னும் கட்டமைக்குள் சிந்தனையை உருவாக்குவதால், இந்த இரட்டைப் பொருட்கள் மேலான இடை வெளியை இனம் கண்டு அதை நோக்கியும் ஒரு தாக்குதலுக்கு உள்ளாகின்றது. குழந்தை பொருட்களின் உயர்ந்த விலையை நோக்கி நகர்வதையும், அதைக் கோருவது படிப்படியாக மாறி வருகின்றது. சில பெற்றோர்கள் விமர்சனமற்ற நிர்பந்தமான எல்லைக்குள், கள்ளச் சந்தையில் உருவாகும்; மார்க் பதிக்கப்பட்ட பொருட்களை மலிவாக வாங்கி கொடுக்க தொடங்கும் போது, அது முடிவல்ல ஆரம்பம் என்பதை புரிந்து கொள்வதில்லை. சந்தையில் உயர் விலை உள்ள மார்க்கை பொருளை நோக்கி குழந்தை நகாத்தப்படுகின்றது என்பதை பெற்றோர் தெரிந்து கொள்ள முடியாது நிற்கின்றனர். குழந்தை அடிப்படை அறிவியல் சிந்தனையே, உயர் விலை சார்ந்த சமூக கண்ணோட்டத்தில் பலியிடப்பட்டதை பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. மிக நுட்பமான சூட்சுமமான சந்தை குழந்தையை சந்தைப் பொருளாதாரத்துக்குள் பலியிடுகின்றது. சமூக அறிவீனத்தை மூலதனமாகக் கொண்டு, குழந்தையை சந்தை பலியீடுகின்றது. சமூகம் தனது சொந்த உழைப்பை ஆடம்பரமற்ற இயல்பான வாழ்வை அழித்து, ஆடம்பர வாழ்வுக்குள் பலாத்காரமாக சந்தை, இழுத்துச் சூறையாடுகின்றது. மொத்த குடும்பத்தின் சூழலே படிப்படியாக, முற்றிலும் மாறான பண்பாட்டு கலாச்சார எல்லைக்குள் மாறிச் செல்ல தூண்டுகின்றது.

 

குழந்தை உளவியல் சக நண்பர்கள் நண்பிகள் முன்பு, இந்த மாhக் போட்ட தரத்தில் இருந்தே சொந்தப் பெருமை பீற்றிக் கொள்கின்றது. இதை அடைவதையும், அடைந்ததையும் இலட்சியமாக பீற்றிக் கொள்கின்றது. மாணவர் சமுதாயத்தில் திறமை, அதி உயர்வெற்றி மார்க்கை நுகர்வதில்; இருந்து கிடைப்பதாக பீற்றிக் கொள்வது, சர்வசாதாரணமான சமூக உறவாகிவிடுகின்றது. இதுவே கல்வியின் அடிப்படை உளவியலாகிவிடுகின்றது. கல்வி என்பது முதலாமிடத்தில் இருந்து அகன்று அந்த இடத்தை மார்க் ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இது ஒன்றும் கற்பனை அல்ல. இது மாணவர்களின் அடிப்படையான உளவியலாக உள்ளது.

 

குழந்தை கல்வி மீதான ஆர்வம், அதில் திறமை, சாதனைகள் அனைத்தையும் பெறுவதை இட்டு அக்கறைப்படுவதில்லை. மார்க் பொருட்களை நுகர்வதில் சாதனை சார்ந்துள்ளது என்ற உணர்வு, உளப்ப+ர்வமானதாக உள்ள நிலையில் கல்வியின் தரம் வீழ்ச்சி காண்கின்றது. குழந்தை பாடசாலை செல்லும் போது, இந்த எல்லையைத் தாண்டி செல்வதில்லை, சிந்திப்பதில்லை. இதற்கு அப்பால் தான் கல்வி பற்றிய உணர்வு. இதுவே சமூக எதார்த்தமாக உள்ளது. சக மாணவனிடம் தனது தகுதிக்கான அங்கீகாரமாக, மார்க் பொருட்களின் நுகர்வே மாணவ உளவியலை சிந்திக்கின்றது. இதை உலகமயமாதல் சந்தை சார்ந்து, அது உருவாக்கம் பண்பாட்டையே கலாச்சாரமாக உருவாக்கின்றது. இதை நோக்கிச் செல்லும் மாணவர் சமுதாயம், பெற்றோரை அதை நோக்கி தள்ளிச் செல்ல முனைகின்றது. குழந்தைகள் பெற்றோரை தவாறன வழிக்கு வழிகாட்டிச் செல்லுகின்றனர். உலகமயமாதல் சந்தை குழந்தைகளை ஊடுருவி, பெற்றோரை அதை நோக்கி இழுத்து எடுக்கின்றது.

 

இதற்கு சிந்திக்க முடியாத இயந்திரமயமாக இயங்கும் பெற்றோர்கள் பலியாகின்றனர். சிலர் காரணம் சொல்ல முடியாத எதிர்ப்பு அல்லது நிதி இல்லாதால் எற்படும் உணர்வுகளும் விளைவுகளும் என பல விதத்தில் ஒரு போராட்டத்தை நடத்துகின்றனர். சிலர் இதை அடைய மாடாய் உழைக்கின்றனர். இந்த உலகமயமாதல் பண்பாடு கலாச்சாரம், பெற்றொருரிடமும் குறிப்பாக ஏழைகளிடம் இருக்கும் உயர்ந்த மனிதப் பண்பு கொண்ட சமூக பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் கூட படிப்படியாக அழிக்கின்றது. உலகமயமாதல் என்பது அமெரிக்கா ஐரோப்பிய மேட்டுக் குடிகளின் பண்பாட்டை கலாச்சாரத்தை, உலக மக்கள் மேல் திணிக்கின்றது. இதை எதிர்த்து நிற்க முடியாத பெற்றோர்கள், குழந்தைகளின் கால்களின் தொப்பென விழ்கின்றனர். குழந்தைகளுக்கு வழிகாட்ட முடியாத திணறுகின்றனர். படித்தால் சரி, சொல்லைக் கேட்டால் சரி என்ற உணர்வைப் பெறுகின்றனர். குழந்தைக்கு லஞ்சம் கொடுக்கின்றனர். இதில் விசித்திரம் என்ன என்றால் லஞ்சப் பொருளாக எதைத் தர வேண்டும் என்பதை, குழந்தையே தெரிவு செய்கின்றது. அது மார்க்காக இருப்பதை குழந்தை உறுதி செய்கின்றது. எந்த நிலையில் குழந்தை கோரும் லஞ்சம் படிப்பு சார்ந்ததாக அறிவு சார்ந்ததாக பெரும்பாலும் இருப்பதில்லை. ஆடம்பர வாழ்வுக்குள்ளும், மார்க் நுகர்வுக்குள்ளும் லஞ்சம் மற்றும் குழந்தையின் கோரிக்கை சுருங்கிவிடுகின்றது. இப்படி இந்த பண்பாட்டுக் கலாச்சாரத்துக்குள் பெற்றோர்கள் எதோ ஒரு விதத்தில் இணங்கி, செம்மறி ஆடுகளாக மாறிவிடுகின்றனர். குழந்தை அனைத்து சமூக உறவையும் பொருட்கள் ஊடாக காண்பது எதார்த்தமாகின்றது. மனிதப் பண்புகள், சமூக உணர்வுகள் சிதைக்கப்பட்ட அமைப்பில், இயந்திரமாக சிந்திக்க செயலாற்றத் தொடங்குகின்றது.

 

குழந்தையின் கோரிக்கைகள், செயல்கள், நடவடிக்கைகள் சுற்றி உள்ள சமூகத்தில் இருந்தே உருவாகின்றது. விரிந்த சமூகப் பகுதியில் இருந்து உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு எற்பவே, குழந்தையின் மீதான தாக்கம் மற்றும் கோரிக்கைகள் வேறுபடுகின்றன. குழந்தை உள்வாங்கிக் கொள்ளும் உலகம், உலகமயமாதலானது. இது மேற்கில் இருந்து இலங்கை வரை ஒரே மாதிரியாக உள்ளது. கொலிவுட் படத்துக்கும், தமிழ் சினிமாவுக்கும் அதிக வேறுபாடு இருப்பதில்லை. இவர்கள் ஒரு பொருளை காட்சிப்படுத்தவும், ஒரே சந்தையை விளம்பரங்களாக காட்சியாகின்றனர். சமுதாய உருவாக்கம் இப்படித் தான் உருவாக்கப்படுகின்றது.

 

இங்கு தான் பெற்றோரின் கடமை கூர்மையாகின்றது. முதலில் குழந்தையின் கோரிக்கை எதனால் எப்படி எற்படுகின்றது என்பதை, குழந்தையைக் கொண்டே அறிய வேண்டும். உதாரணத்துக்கு மார்க் பொருட்களை நுகரக் கோரும் போது, ஏன் அதை கோருகின்றது என்பதைக் கேட்க வேண்டும். குழந்தைகளிடம் எப்போதும் பதில் இருப்பதில்லை. இது வெளியில் இருந்து அதாவது குழந்தை சிந்தனைக்கு அப்பால் இருந்து வரும் ஒரு நிர்ப்பந்தம் என்பதால் தான், எப்போதும் பதில் இருப்பதில்லை. மற்றவர்கள் போடுவதால் தான், நான் போட விரும்புவதாக சிலவேளை சப்பைக் கட்டக் கூடும். குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு, இது முற்றிலும் மாறான மலட்டுக் குணத்தை குறிப்தாகும். மிகவும் உணர்வு பூர்வமாக ஏன் எதற்கு என்று பல ஆயிரம் கேள்விகளுடன் அறிவைத் தேடி வளரும் குழந்தை தீடிரென இப்படி கேட்க மறுத்து, செம்மறி ஆட்டு நிலைக்கு செல்வதை குழந்தை மீது அக்கறையுள்ள எந்தப் பெற்றோரும் அனுமதிக்கவும் இணங்கிப் போகவும் முடியாது. காரணம் தெரியாத ஆடம்பர நுகர்வை நோக்கி ஏன் ஏதற்கு என்ற பதில்கள் அற்ற நிலைக்கு குழந்தை மாறிவிட்ட நிலைமை, ஏன் எற்பட்டது என்பதை முதலில் பெற்றோர்கள் நிச்சயமாக அடையாளம் காணவேண்டும்;. அறிவின் வளர்ச்சி தேங்கி மலடடைவதையும், சமூகத்துடன் தொடர்பற்ற துறையில் கவனம் மாறிவிட்டது என்பதை உடனடியாக பெற்றோர்கள் அடையாளம் காணவேண்மும்;. சிறு குழந்தைகள் தொடக்கம் என் எதற்கு என்று கேட்டு வளர்ந்த குழந்தை, ஏன்? நான் மார்க் உடுப்பை போடக் கோருகின்றேன் என்பதை தெரியாமல் போன நிகழ்வை இட்டு பெற்றொர்கள் அக்கறைப்பட வேண்டும்;. குழந்தையின் அறிவில் எற்பட்ட மலட்டுத் தனத்தை திருத்துவதே, அனைத்திலும் முக்கியமான பணி;. இதைச் சிறு குழந்தையில் இருந்து செய்ய வேண்டும்;. ஆனால் இதை கடந்த நிலையிலும் கூட சாத்தியமானதே. மேட்டுக் குடியின் ஆடம்பர வாழ்க்கையில் இருந்து அடிமட்டத்தில் கையேந்தி நிற்கும் உலகத்தின் வெட்டு முகத்தின் தோற்றத்தையும், இதற்கான அடிப்படைக் காரணங்கள் மேல் குழந்தைக்கு எதார்த்தமாக காட்ட வேண்டும். உழைப்புத்தான் அனைத்தும் என்பதையும், உனது வாழ்கையை நீ உழைத்து உனது உழைப்பில் இருந்து தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை புகட்ட வேண்டும். உனது தெரிவையும், நுகர்வையும் நீ உழைத்து வாழும் ஒரு வாழ்வில் அனுபவித்து பெறவேண்டும் என்பதை, ஆரம்பம் முதலே குழந்தைக்கு பெற்றோர்கள் புகட்ட வேண்டும்.

 

மார்க்கும் அதன் தரமும்

 

கொஞ்சம் வளர்ந்த குழந்தை தனது ஆடம்பர நுகர்வை நியாயப்படுத்த சில வேளைகளில் தரம் பற்றி பேசுவது உண்டு. மார்க் பொருட்களின் தரம் என்பது பொய்யானது. தரத்தை பற்றி எப்படி நிர்ணயம் செய்கின்றனர். இங்கு மற்றொரு பொருளுடன் பயன்படுத்திய ஒப்பிட்டு ரீதியாக பரிசோதனை இன்றி, இந்த தரம் பற்றிய விளக்கத்தை இயந்திர கதியில் முன்வைக்கப்படுகின்றது. தரம் என்பது அறிவுக்கு உட்பட்டது. தரம் என்பது பொருளின் விலை, குடும்பத்தின் வருமானம், பாவிக்கும் காலம், உடலுக்கு எற்படும் பக்க விளைவுகள், சுற்றுச் சூழலுக்கு உள்ள பக்க விளைவுகள், பொருளை உற்பத்தி செய்பவனின் சமூக நிலை, எந்த நாட்டில் எந்த நிலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது, எப்படி சந்தைக்கு வருகின்றது, இதில் யார் அதிகம் லாபம் அடைகின்றனர், அவர்கள் மக்களை பற்றி என்ன நினைக்கின்றனர், அவர்கள் எப்படியான மனித சமுதாயத்தை உருவாக்கியுள்ளனர் என்ற நீண்ட பல விடயம் மீதான அறிவே தரத்தை நிர்ணயம் செய்யும். ஆனால் இவற்றை புரிந்து கொண்டு தரத்தைப் பற்றி பேசுவதில்லை. பெண்ணை நிர்வாணமாக்கி அல்லது எதோ ஒரு விதத்தில் கவர்ச்சி காட்டிய பாலியல் விளம்பரமே, தரத்தைப் பற்றி போதிக்கின்றது. சந்தை விளம்பரம், தரத்தை பற்றி பேசுவனின் மூட்டாள் தனத்தை சார்ந்து செயலாற்றுகின்றது. பெருமை பேசுபவன் தாழ்வு மனப்பான்மை சார்ந்து, தரம் நிர்ணயமாகின்றது. அதி கூடிய பணத்தைக் கொடுத்த நுகரும் ஆற்றல் உள்ளதாக காட்டும் போலித்தனத்தை சார்ந்து, தரம் பற்றி பிரமைகள் கட்டமைக்கப்படுகின்றன. விளம்பரம் என்பதே, இயல்பான தேவை என்னும் பயன்பாட்டில் சந்தைப் படுத்த முடியாத நிலையில் உருவான பொருட்கள் மீது கட்டமைப்பதே. அது பின்னால் உயர்ந்ததாகக் காட்ட விடாப்பிடியாக மூளைச் சலவை செய்யப்பட்டு, சந்தைப் படுத்தப்படுகின்றது. விளம்பரம் கற்பனையான வகையில் அறிவுக்கு ஒவ்வொத வகையில் கட்டமைப்பதன் மூலம், மனப் பிரமையைக் கொண்டு சந்தை வக்கரிக்கின்றது. தரம் பற்றிய போலி உணர்வு ஊட்டப்பட்டு, சந்தையில் மக்களின் உழைப்பு கொள்ளை அடிக்கப்படுகின்றது. தரம் பற்றிய பிரமைகள் பின்னால், போலியான சமூக நடைமுறைக்கு அன்னியமான பல கூறுகளே, இந்த தரத்தைப் பற்றி பீற்ற வைக்கின்றது.

 

இதை புரிந்து கொள்வது இலகுவானது. ஒரு குழந்தையை ஒரு கடைக்கு கூட்டிச் செல்லும் போது, கவர்ச்சி மற்றும் மிக அண்மையில் பாதித்த ஒரு காட்சி மீதே பொருட்களை தெரிவு செய்வதையும் அதை வாங்கித் தரக் கோருவதையும் நாம் அவதானிக்க முடியும். இயல்புக்கு மாறான ஒரு சின்ன வித்தியாசமே, வாங்கித் தரக் கோருவதில் இருந்து அவதானிக்க முடியும். சப்பாத்து, புத்தகம் கொண்டு செல்லும் பையில் காணப்படும் குறித்த படம் கூட தெரிவை உருவாக்கின்றது. இது விளம்பரச் சந்தை விதிக்கு உட்பட்டதே. சந்தை முட்டாள்களின் அறியாமையில் கட்டப்படுதை இலகுவாக அவதானிக்க முடியும்;. முட்டாள் தனமான அறியாமை சார்ந்து, அந்தப் படம் பொறித்த பொருட்கள் சந்தையில் குவிக்கப் படுகின்றது. இதுவே கொஞ்சம் கொஞ்சமாக மார்க் மீதான மோகமாகவும் கட்டமைக்கப்படுகின்றது. கீரோசியம் என்பது இன்றைய எதார்த்த உலகமயமாக்கலில், மார்க்; மயமான பொருளாகின்றது. மார்க்கை நுகர்ந்தால் விரும்பிய பெண் அல்லது ஆணை பாலியல் ரீதியாக நுகர முடியும் என்ற உணர்வை உருவாக்கின்றது. அது கவர்ச்சியால் வக்கரிக்கும் போது, பாலியல் கண்ணோட்டமும் சார்ந்த உணர்வும் கூட வக்கரித்து சிதைகின்றது. தன்னை எலலோரும் பார்ப்பார்கள் என்ற விளம்பர உணர்வைப் பெறுகின்றனர். தன்னைத் சாதனையாளனாக காட்ட, இந்த மார்க் உயர்ந்த விலை சார்ந்த கௌரவம் அதன் பெருமை என கட்டமைக்கப்படும் போலித்தனங்கள் இதன் அடிப்படையாக உள்ளது. தன்னைத் தான் வேறுபடுத்தும் வகையில், தன்னை கவரும் வகையில், தன்னைப் பார்க்கும் வகையில் என பலவிதமாக தன்னை வேறுபடுத்த தலைக்கு டை அடித்தல், உடுப்பை வெட்டுதல், தலையை மொட்டை அடித்தல், தொப்பியை எதோ ஒரு விதத்தில் போடுதல், தன்னை மூடி உடுப்பு போடுதல் என பற்பல கோமாளிக் கூத்துக்களை இளைய தலைமுறை செய்வதன் மூலம், தன்னைத் தான் உயர்ந்தவனாக காட்ட முனைகின்றது. சமுதாயத்தில் தனது தனித்துவமான அங்கிகாரம் என்ற உணர்வு சார்ந்து, தன்னை மிதப்பாக காட்ட வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையே இதன் அடிப்படையாகும். உண்மையில் இவை அனைத்துக்கு உளவியல் ரீதியாக உள்ள அடிப்படையான காரணம், தாழ்வு மனப்பான்மை என்ற உளவியல் சிக்கலே. இந்த உலகமயமாதலில் எனது நிலை என்ன, என்ற அடிப்படை கேள்வியில் இருந்தே இது ஒரு சமூக நோயாக மாறுகின்றது. உளவியல் நோய்க்கு தானாகக் கூறக் கூடிய காரணம் இருப்பதில்லை. ஏன் அது ஒரு நோய் என்பதைக் கூட தெரிந்து கொள்வதில்லை. ஆனால் கோருதல் முதன்மை பெறும்; போது, நிர்ப்ந்தமான கோரிக்கையையே தரம் பற்றிய உள்ளடகத்தின் மூலம் நியாயப்படுத்துவதன் மூலம் தமது அறிவை பீற்றிக் கொள்ள முனைகின்றனர்.

 

மார்க் பொருட்கள் உற்பத்தியை ஆராய்ந்தாலேயே, இதன் தரம் பற்றி உண்மை அறியமுடியும்;. மார்க் பொருட்கள் மேலான பகிஸ்காரம் என்று இணையதளத்தில் தேடினால், ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் பெறமுடியும். பக்கங்கள் இந்த மார்க் உற்பத்திகளின் வண்டவாளத்தை அவை சந்திக்கு கொண்டு வருகின்றது. மாhக் உடுப்புகள், சப்பாத்துகள், தொப்பிகள் என பெரும்பாலனவை மூன்றாம் உலக அடிமைகள் மற்றும் வறிய எழைக் குழந்தைகளின் உழைப்பில் உருவாகுவதை ஆதாரத்துடன் அம்பலமாகின்றது. இதை யாரும் மறுக்க முடியாது. நீ நுகர்வதற்கான பொருளை உன்னை ஒத்த குழந்தைகளின் உழைப்பும், அவர்கள் கையேந்தி பிச்சையாக கிடைக்கும் அற்ப கூலிக்காக உற்பத்தி செய்கின்றனர்?. இதற்கு வெளியில் அற்ப கூலியில் பெண்கள் முதல் மிக குறைந்த கூலியைக் கொடுத்து உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கான அடிப்படையான மூலப் பொருட்கள், மூன்றாம் உலக சேரிகளில் இருந்து மிக அற்ப தொகைக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. அவற்றையே பின்னால் கவர்ச்சியாக்கி மார்க் பொருட்கள் என முத்திரை குத்தி காசாக்கின்றனர். அத்துடன்; உற்பத்திகான இடத்தை மோசடி செய்ய உற்பத்தியான பாகங்களை, மேற்கு நோக்கி நகர்த்தி பின் அதை இணைத்து சந்தையை போலியாக எமாற்றுகின்றனர். இங்கு தரம் என்பது போலியானது. ஒரே இடத்தில் ஒரே கைகள் தயாரிக்கும் ஒரே விதமான பொருளுக்கு, மார்க் முத்திரை குத்தியவுடன் தரமாக காட்டுவது என்பது, சந்தையை கைப்பற்றி வைத்துள்ள கொள்ளையர்களின் கைவந்த கலை. தரம் பற்றி விளம்பரங்கள், மூளையை மூளைச் சலவை செய்த பின்பே இது சாத்தியமாகின்றது. இந்த மூட்டாள் தனத்தை சமூகம் தனது உணர்வாக கொள்ளும் போது, மந்தைக்குணம் இயக்கமற்ற சமூகக் குணமாகின்றது. 

 

குழந்தையின் சமூக அங்கிகாரம் என்ற விடயத்தில், மார்க் பொருட்களை நுகர்தல் என்ற கோரிக்கையை பெற்றோர்கள் அனுமதிக்க முடியாது. ஒரு நெருக்கடியில் அனுமதிக்கும் பட்டசத்தில், எதிர்ப்புடன் கூடிய தொடர்ச்சியான அபிராயத்துடன் தான் குழந்தையை அணுகவேண்டும். சமூக அங்கிகாரத்தை மார்க் பொருட்களால் குழந்தை நிர்ணயம் செய்கின்றது என்றால், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் சமூக சிந்தனை நோக்கில் இருந்து சரிந்து செல்வதை தவிர வேறு வழியில் குழந்தை உருவாககுவதில்லை. இதை மார்க் என்ற லஞ்சம் மூலம் நிறைவு செய்யும் பட்சத்தில், அன்பையும் சரி குழந்தையின் போக்கையையும் சரி இயந்திர வகையான சமூகக் குழந்தையே பெற்றோர் உருவாக்குவர். அடிப்படையில் குழந்தையின் சுயநலப் போக்கே சமூக கண்ணோட்டமாகும். இது பெற்றோரிடமும் கூட சுயநல நோக்கில் அணுகி, நுகர்வதில் முதிர்ச்சி அடைகின்றது. தனிமனித வாதம் முதன்மை பெற்று, பெற்றோரைக் கூட தனிமனித கண்ணோட்டம் சார்ந்து தனக்கு எதிரான ஒரு சமூக உறுப்பாக்கி தனது சிந்தனைத் தளத்தை மாற்றி அமைக்கின்றது.

 

குழந்தைகளின் தமிழ்க் கல்வி தொடர்பாக

 

குழந்தையின் தமிழ் கல்வி தொடர்பாக ஒரு விளக்கமற்ற சாச்சையை, பொதுவாக தமிழ் சமூகம் எதிர் கொள்கின்றது. பெற்றொரிடையே கற்றல், கற்கக் கூடாது என்ற இரு எதிர் நிலைப் போக்குகள் காணப்படுகின்றது. மறுதளத்தில் கற்றுக் கொடுக்கும் பெற்றோரிடம், குழந்தை நான் ஏன் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகின்றது. இது பெற்றோருக்கு பதிலளிக்க முடியாத அல்லது தெளிவான விளக்கமற்ற விடயமாக மாறுகின்றது. ஏன் குழந்தைக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை, எதிர் மறையில் சில பெற்றோரும் எழுப்புகின்றனர்? குழந்தை தமிழை கற்க வேண்டும் என்ற இந்தக் கேள்வியை ஏன் எழுப்புகின்றது? தமிழ் படிக்க சில குழந்தைகள் மறுப்பது ஏன்? பெற்றோர் ஏன் தமிழ் கற்றக் கொடுக்க வேண்டும் என்றும், ஏன் கற்றுக் கொடுக்க கூடாது என்றும் கூறுகின்றனர்?

 

இவை அனைத்திலும் லாப நட்டக் கணக்கை பொருளாதார எல்லைக்குள் நின்று சிந்திப்பதால் தான், பெருமளவிலான கருத்துகள் கட்டமைக்கப்படுகின்றது. அதாவது இங்கு தமிழ் கற்றல், கற்றுக் கொடுத்தல் என்பதை, பொருளாதார நலன் என்ற எல்லைக்குள், லாப நட்ட கணக்குக்குள் உள்ளடங்;கிய சிந்தனை முறைதான், தமிழ் கற்றலின் அடிப்படையான தோல்வியாகும். இன்று இது புலம் பெயர்ந்த நாட்டில் மட்டுமல்ல, தமிழை தாய் மொழியாக கொண்ட இலங்கை இந்தியப் பிரதேசங்களில் கூட இதுவே அடிப்படையான பிரச்சனையாகியுள்ளது. அடுத்த 100 ஆண்டில் தமிழ் மொழி அழிந்து விடும் என்ற யூனோஸ்கோவின் அறிக்கை தற்செயலானவை அல்ல. உண்மையில் மொழி பற்றிய கொள்கை, பொருளாதார நோக்கு நிலை சார்ந்து கற்றலினால்; என்ன லாபம்? என்ற லாப நட்ட கணக்கு இதற்கு அடிப்படையாகும்.

 

தமிழைக் கற்றால் என்ன லாபம்? என்ற கண்ணோட்டம், பொதுவாகவே சமுதாயத்தின் அடிப்படையான சிந்தனையாக உள்ளது. இன்றைய உலகில் பொருளைத் தேடும் போட்டியில், தமிழ் மொழி தெரிவதால் எதையும் குறிப்பாக நிர்ணயம் செய்வதில்லை என்ற உண்மை சார்ந்தே தமிழ் அழிகின்றது. தமிழ் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ் வழிக் கல்வி மறுக்கப்படுகின்றது. பெற்றோர் குழந்தை உறவில் சமுதாயத்தின் மேல் மட்டத்தில் இருந்து கீழாக தமிழ் அருகிச் செல்லுகின்றது. பெற்றோர் தமிழ் கற்றுக் கொடுப்பதை அவசியமற்ற ஒன்றாக கருதுகின்றனர். இதையே கற்றுக் கொடுக்கும் மற்றோரு தளத்தில், குழந்தை பெற்றோரை நோக்கி கேட்கின்றது. இந்த பொருளாதார அமைப்பின் உள்ளடகத்தை விமர்சிக்காது உருவாக்கப்படும் தமிழ்க் கல்வி, பிறக்கும் போது கழுத்தை நெரித்து பலாக்காரமாக கொன்றுவிடுவது அதன் இயல்பாகின்றது. குழந்தை பொருளாதார நலன் நோக்கில் நின்று, கற்பதை மறுக்கின்றது. சமுதாயத்தில் கட்டமைக்கும் உறவுகள், நடத்தைகள், செயல்கள் அனைத்தும் இந்த பொருளாதார அமைப்பில் பணத்தை சம்பாதிப்பதற்கு இசைவாக இருக்கும் ஒரே ஒரு காரணம், தமிழ் கல்விக்கு தூக்குப் போட போதுமானது. தமிழ் இந்த சமூக அமைப்பில் பொருளாதாரத்தை திரட்டுவதில், குறிப்பான சமூகப் பங்கை வகிப்பதில்லை. தமிழ் கற்றலில் பொருளாதார நலன்கள் குறிப்பாக இல்லாத எல்லா நிலையிலும், தமிழ் அழிவதை இந்த சமூக சித்தாந்த கண்ணோட்ட எல்லைக்குள் யாரும் தடுக்க முடியாது.

 

சில குழந்தைகள் இந்த புரிதலுக்கு வெளியில் தமிழ் கற்க மறுக்கின்றனர். இதற்கு அடிப்படையான காரணம் கற்பித்து கொடுக்கும் முறையினால் எற்படுகின்றது. கற்றுக் கொடுத்தல் என்பது, அதன் அடிப்படை நோக்கம் தெளிவுறாத வரை கற்றல் என்பது கடினமாகி விடுகின்றது. கற்பித்தல் என்பது, எதைக் கற்பித்தல் என்பதுடன் தொடர்புடைய பிரதான விடயமாக இருப்பதால், இதை புறக்ணிக்கின்ற இன்றைய கற்பிக்கும் முறை கற்றலுக்கு எதிரானதாக இருக்கின்றது. கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் பொதுவாக, சமூக செயல் தளம் இதை ஒரு மரபாகவும், கலாச்சாரத்தை ஊட்டும் ஊடகமாகவும் இதைக் காண்கின்றனர். தமிழ் என்ற பெயரில் குழந்தையின் தேவைக்குப் புறம்பான திணிப்பாக மாறும் போது, தமிழ் கற்றலில் குழந்தையின் ஆர்வம் தகர்ந்து போகின்றது. குழந்தை இதை ஒரு சுமையாக தேவை இல்லாத ஒன்றாக கருதத் தொடங்குகின்றது.

 

தமிழ் மொழிக் கல்வியின் அவசியத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்;. தமிழ் ஒரு மொழியாக, சில ஆயிரம் வருடங்கள் பல மொழி வளங்கள் உடன் நிலைத்து நின்றது எப்படி சாத்தியமானது? இன்று ஏன் அழிகின்றது என்பதை புரியாத சமூக அறிவீனம் தகர்க்கப்பட வேண்டும்; இதைப் புரிந்து கொள்வதன் மூலம் தான், கற்றுக் கொடுப்பதில் முழுமையை இனம் காணமுடியும். மறு தளத்தில் தமிழை குழந்தைக்கு கற்றுக் கொடுத்தல் என்பதற்கான, அடிப்படையான அவசியமான காரணத்தை தெளிவாக இனம் காணவேண்டும்;. அந்த வகையில் தமிழ் கற்றலின் அவசியம் என்ன?

 

1. பெற்றோருக்கும் குழந்தைக்குமான ஒரே தொடர்பு மொழி தமிழ் மட்டும் தான். அது தான் தாய் மொழியாக இருக்கின்றது. பெற்றொரும் குழந்தைகளும் பேசிக் கொள்ளும் மொழியை குழந்தை நிச்சயமாக தெரிந்த கொள்வது அவசியமான அடிப்படையானது என்ற அடிப்படையில், தமிழ் கற்றல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இல்லாத எந்த மொழியிலும் குழந்தையை பெற்றோர் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. மொழியியல் ரீதியாக தாய்மொழி அல்லாத தொடர்பு வழி, சமூகச் சிதறலை இயல்பாக்கின்றது.

 

2.இரண்டாவதாக தாய் தந்தைக்குரிய அடியை (பரம்பரை வழியை) குழந்தை தனது நோக்கில் சுயமாக அறிந்து கொள்ள தமிழை கற்றுக் கொடுத்தல் பெற்றொரின் அடிப்படையான கடமையாகும். இதை புறக்கணிப்பது என்பது, குழந்தை எதிர் காலத்தில் பெற்றோரைக் குற்றச் சாட்டும் அளவுக்கு இது அமையும். செய்ய வேண்டிய அடிப்படையான பணி தாய் மொழியை ஊட்டுவதாகும்.

 

3.தமிழ் ஒரு மொழி என்ற வகையில், அதை கற்றுக் கொள்வதை எதுவும் கட்டுப்படுத்தாது. எனெனின் மொழியின் அறிவு குழந்தையின் பரந்த அறிவை  விசாலப்படுத்தும். குழந்தையின் பன் மொழித் திறமை பொதுவாகவே அவசியமானவை மட்டுமின்றி அங்கிகாரிக்கப்பட்டவையும் கூட. இதில் மற்றொரு உண்மையை நாம் காண மறந்துவிடக் கூடாது. கற்கும் நாட்டு மொழிக்கு வெளியில், வேறு மொழிகளை குழந்தை கற்கும் போது, தமிழை நிராகரிப்பது எந்த வித்திலும் யாரும் நிராகரிக்க முடியாது.

 

4.அடுத்த பல மொழிகளை கற்றக் கொள்ளும் ஆற்றல், திறன் குழந்தைக்கு இருப்பதால், அதில் தமிழும் ஒன்றாக இருப்பதை தமிழ் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்

 

5. தமிழைக் கற்றுக் கொடுத்தலில் பொருளாதார நலனுக்கு வெளியில் கற்றுக் கொடுதலை உணர்வுப+ர்வமானதாக்க வேண்டும். அதைப் பற்றிய அறிவியல் பூர்வமான சிந்தனை வளர்த்து எடுக்கப்பட வேண்டும். இன்னமும் பல காரணங்கள் இருந்த போதும் இவை அடிப்படையானவை, முக்கியமானவை.

 

பெற்றோர்கள், கற்பிப்பவர்கள், கற்றலை திட்டமிடுபவர்கள் இவற்றை புரிந்து கொள்ளாத வரை தமிழ் கற்றுக் கொடுப்பதில் தவறு இழைப்போம்;. பொரளாதார நலனுக்கு வெளியில் சிந்தனைத் தளத்தை விரிவுபடுத்தி கற்றலை, கற்பித்தலை ஊக்குவிக்க வேண்டும்;. இதை செய்யாத நிலையில், கற்கும் குழந்தைக்கு ஏன் கற்கின்றோம் என தெரியாத நிலையில், அதுவே கற்றலுக்கு எதிரான பாரிய எதிர்ப்பாக மாறுகின்றது. சொந்த பெற்றோருடன் உரையாட தமிழ் தேவை என்பதை குழந்தை உணர்வுபூர்வமாக உணரும் வகையில் ஊட்டாப்படாத குழந்தை, தமிழை ஒரு நாளும் கற்காது. புலம் பெயர்ந்த சமூகங்களில் மொழியின் தொடர்ச்சி அதிசயத்தக்க வகையில் பல மொழிக்கு (யூத, அரபு, சீனா மொழி,.... மொழி) உண்டு. அங்கு தாய் தந்தை சொந்தத் தாய் மொழியில் குழந்தையுடன் அனைத்த தொடர்பையும் பேணுவது முரணின்றி நிகழ்கின்றது.

 

புலம்பெயர் நாட்டில் தமிழ் கற்றுக் கொடுத்தல் என்பது நடைமுறையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். முதலில் நிச்சயமாக குழந்தை அன்றாடம் பெற்றோரிடம் தொடர்பு கொள்ளும், அடிப்படையான நடைமுறை தேவையை ஒட்டிய சாதாரண மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும்; சர்வசாதாரணமாக பெற்றோருடனும், சகோதர சகோதரிகளுடன் தமிழில் உரையாடக் கூடிய வகையில், தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டு தமிழ் குழந்தைகள் தமக்கு இடையில் பரிமாறும் விடயங்கள் எதுவாகினும், அதை தமிழில் கதைக்கும் வகையில் குழந்தைக்கு சொற்களையும், வசனங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மற்றும் தமிழ் குழந்தைகள் தமக்கு இடையில், தமிழ் உரையாடலை இலகுவாக பேசிக் கொள்ளும் வகையில் கற்றுக் கொடுத்தல் வேண்டும். இந்த முறை தமிழ் மொழியில் மீதான ஆர்வத்தையும், ஒரு பாய்ச்சலையும் குழந்தைக்கு எற்படுத்தும்;. இதை வளம்படுத்த இலகுவான வாழும் சூழலுடன் தொடர்புடைய சிறிய பாடல்களை குழந்தை பாடும் வண்ணம் உருவாக்க வேண்டும். இவை வெற்றி பெறும் போதே, மொழியை சரளமாக குழந்தை கையாளும் நோக்கில் இருந்தே, எழுத்தை எழுதுவதும், இலக்கணங்களை கையாளும் நடைமுறை மெதுவாக குழந்தைக்கு உருவாக வேண்டும்.

 

தேவாரம், திருக்குறள் என்று பெரியவர்களே புரிந்துகொள்ள முடியாத, பல ஆயிரம் வருடத்துக்கு முந்திய தமிழை பாடமாக்க வைப்பதும், நிற்பந்தமாக ஒப்புவிக்கும் கல்வி படுதோல்வி அடைவது தவிர்க்க முடியாது. பெரியவர்களே அவற்றை கற்க ஆர்வமற்று புறக்கணிப்பதுடன், கற்றுக் கொள்ள மறுக்கின்ற ஒரு விடையமாக உள்ள நிலையில், பண்டிதர்களும் அறிவாளிகளும் கற்கின்ற விடையமாக உள்ள நிலையில், அதை குழந்தைக்கு திணிப்பதால் எந்தக் குழந்தை தான் தமிழைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக முன்வரும்.

- பி. இரயாகரன்