03062021
Last updateபு, 03 மார் 2021 9pm

கிட்லரை வரலாற்றில் உருவாக்கியவர்கள் யார்?

அரவிந்தன் நீலகண்டன் போன்ற பார்ப்பனிய அறிவிலிகள், பூணூலிட்டு மனித வரலாற்றை பார்ப்பனியமாக்கிவிட முடியாது. அதுபோல் மனித வரலாறு ஏகாதிபத்தியமயமாகி விடாது.

 

 

நிகழ்கால சமுதாய கொடுமைகளுக்கு பதிலளிக்க முடியாது, அதைப் பாதுகாக்கும் பார்ப்பனியம் கடந்த காலத்தை திரிக்க முனைகின்றது. அரவிந்தன் நீலகண்டன் என்ற அறிவிலி வரலாற்றை கிட்லர், ஸ்ராலின் ஊடாக திரிக்கின்றது. உங்களுக்கு வரலாற்றைச் சொல்லித்தரும் ஏகாதிபத்தியம் என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் அவர்கள் சோவியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்ய மறுத்தார்கள்? ஏன் கிட்லருடன் செய்தனர்? இப்படி மறுபக்கத்தை மறுக்கும் பார்ப்பனியம் எப்படிப்பட்டது என்பதற்கு இந்த சாதிய சமூக அமைப்பே ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்றை ஸ்ராலின், கிட்லர் என்று மட்டும் சுருக்கி காட்டும் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும், எதைத்தான உழைக்கும் மக்களுக்கு சொல்ல முனைகின்றது?

 

பார்ப்பனிய சதியை மந்திரமாக கேட்டு பரவசமடையும் சில பக்தகோடிகள் மட்டுமே, இந்த திரிபுக்கு சாமி சரணம் போடுபவர்கள். இந்த திரிபை அம்பலப்படுத்தும் கட்டுரை இது.

 

2ம் உலகப் போர் முடிவடைந்த 50 ஆண்டை ஒட்டி சமரில் வெளியான இக் கட்டுரை, பார்ப்பனிய சதியை அம்பலமாக்க மறு பிரசுரமாகின்றது.

 

2ம் உலக மகா யுத்தத்தின் 50 வருட கொண்டாட்டங்களின் ஊடாக மறைக்கப்பட்டு வரும் உண்மைகள்.

பி.இரயாகரன்
07.04.2007

2ம் உலக மகாயுத்தம் தொடர்பான சிறு கட்டுரை ஒன்றை வரையும் நாம் அதன் முழுமையான பாரம்பரியத்தை இக்கட்டுரையினூடாகச் செய்யமுடியாதும் உள்ளோம். இருந்தபோதும் ஒரு பொது அறிவைப் பெறும் வகையிலும், உண்மைகளை அறிந்து கொள்ளவும் இக்கட்டுரையைத் தர முயற்சிக்கின்றோம்.

 

2ம் உலக மகாயுத்தம் முடிந்து 50 வருடங்களைக் கடந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில், ஏகாதிபத்தியங்கள் யுத்தம் முடிந்த கையோடு தொடங்கிய பொய்யானதும், மிகைப்படுத்தியதுமான தமது வெற்றிகள் பற்றிக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவ் யுத்தம் நடந்த காலத்தில் பல்வேறு தரப்பினரும் இவ் ஏகாதிபத்தியங்களும், யுத்தத்தின் உண்மையான நிலைமைகளை ஓரளவு தெரிந்து வந்தனர். ஏனெனில் இவைகள் எல்லாமே ஓரளவுக்கு எல்லா மக்களுக்கும் தெரிந்தவைகளே. இன்று யுத்தத்தின் வெற்றிகள் மீதான திரிபுகளைச் செய்து வரும் சகல ஏகாதிபத்திய ஆதரவு எழுத்தாளர்களினதும் பொய்ப்பிரச்சாரத்தை மக்கள் மீது திணித்துவிட கடும்முயற்சி செய்கின்றனர்.

 

இந்நிலையில் யுத்தகாலத்தில் ஏகாதிபத்தியங்களும், அவர்களின் தலைவர்களும் விட்ட அறிக்கைகள், மற்றும் ஜெர்மனிய பாஸிச தலைவர்களின் பல அறிக்கைகளும் இக்கட்டுரையின் உண்மையின் பக்கத்தை இனம் கண்டுகொள்ளும் வகையில் எடுத்துக் கையாளுகின்றோம்.

 

ஜெர்மனியத் தோல்விகளின் பின் ஜப்பான் மீதான தாக்குதல் கூட, ஜப்பானின் சரணடைவு அணுக்குண்டு போட்டமையால் ஏற்படவில்லை. ஜப்பான் தொடர்ந்தும் போராடியது. அணுக்குண்டு தாக்குதலின் பின்னர் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை அமெரிக்கா தேவையின்றிக் கொன்றதுடன், ஜப்பானின் சரணடவை சோவியத் தாக்குதலே ஏற்படுத்தியது. ஜப்பானின் பெரும் படையை சோவியத்படை அழித்ததைத் தொடர்ந்தே ஜப்பான் சரணடைந்தது.

 

மற்றும் எல்லா நாடுகளிலும் போராடிய கெரில்லாக் குழுக்களே உண்மையில் அரசியல் அதிகாரத்தை பெற்றிருக்க வேண்டும். ஆனால் தப்பியோடியவரையும், காட்டிக்கொடுத்தவர்களையும், யுத்தத்தின் பின்னர் ஆட்சியில் அமர்த்துவதில் இவ் ஏகாதிபத்தியங்கள் ஈடுபட்டன. இதற்கெதிராக போராடிய குழுக்களைக் கைதுசெய்தும், படுகொலை செய்தும் தமது பொம்மை ஆட்சிகளை நிறுவினர்.

 

2ம் உலகயுத்தத்தின் தயாரிப்பில் இறங்கிய காலம் முதல் யுத்தம் தொடங்கிய ஆரம்பகாலத்தில் கூட ஜெர்மனியை உற்சாகப்படுத்தும் வழிவகையில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உட்பட பலர் தம்மால் இயன்றவரை உற்சாகப்படுத்தினர். யுத்தத்தைத் சோவியத் நோக்கி நகர்த்த எல்லாவித முயற்சியிலும் ஈடுபட்டனர். அதற்காக தமது காலனியாகவும், நட்பு நாடுகளாகவும் இருந்த சில நாடுகளை ஜெர்மனிக்குக் கொடுத்தும், ஆக்கிரமிப்புக்கு பச்சைக்கொடி காட்டியது மட்டுமன்றி, விமானம், மற்றும் இராணுவ உற்பத்திக்கான மூலப்பொருட்களை என்றுமில்லாதவாறு வாரி வாரி வழங்கினர்.

 

ஹிட்லர் யுத்தத்தைத் தொடங்கிய காலத்தில் பிரிட்டனிலும், பிரான்சிலும் இருந்த படைகளின் வலிமை ஜெர்மனியைவிட அதிகமானதாக இருந்தது. இருந்தும் யுத்தத்தை சோவியத் யூனியனை நோக்கி திருப்ப எல்லா வகையிலும் முயன்றதால், தமது சக்தியில் பலவற்றை இழந்த பிரான்ஸ் ஆதிக்கவாதிகள் நாட்டைவிட்டோடினர்.

 

யுத்தம் ஆரம்பித்தபின் 1944 களில் ஐரோப்பாவில் ஹிட்லர் ஆக்கிரமித்த பிரதேசங்களில் 20 லட்சம் கெரில்லாக்கள் இயங்கினர். இது சோவியத்தில் மட்டுமே 13 லட்சமாக இருந்தது. பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுக்களே இக்கெரில்லாக் குழுக்களுக்கு தலைமை தாங்கியதுடன், தற்காலிக அரசாங்கங்களையும் அமைத்திருந்தனர். யுத்தத்தின் இறுதியில் இவர்கள் பல பிரதேசங்களை தாமாகவே நேசநாட்டுப் படையெடுப்புடன் விடுவித்தனர்.

 

2ம் உலகயுத்தம் 2194 நாட்கள்(6 வருடங்கள்) நீடித்தன. 170 கோடி மக்களைக்கொண்ட (இது உலக சனத்தொகையில் 80 வீதமாகும்.) 61 நாடுகள் இவ்யுத்தத்தில் ஈடுபட்டன. 11 கோடி பேர் இராணுவ வேலைகளில் அமர்த்தப்பட்டனர்.

 

1939 செப்ரெம்பர் 01. முதல்- 1945 செப்ரெம்பர் 02. படையின் நிலைமை.

 

 

விமானங்கள்..

டாங்கி.

பீரங்கி.

மார்.பீர

ஹிட்லர் எதிர்ப்பு நாடுகள்.

588000.

236000

147600.

616000

ஜெர்மனி..

109000.

46000

435000.

 

 

1938 ம் ஆண்டு விலைவாசிப்படி மொத்தமாக உலகில் 26,000 கோடி டொலர் பெறுமதியான பொருட்சேதம் ஏற்பட்டது. போரிட்ட நாடுகளின் இராணுவச்செலவு தேசிய வருமானத்தில் 70-80 சதவீதமாக இருந்தது.

 

இவ் யுத்தத்தில் 5 கோடிக்கு மேற்பட்டோர் இறந்தனர். ஆகக் கூடிய இழப்பை சோவியத் கொண்டிருந்தது. 2 கோடி மனிதரைப் பறிகொடுத்த சோவியத் 1,700 நகரவாசிகளையும், 70,000 கிராமவாசிகளையும் சோவியத் இடிபாடுகளாலே மீளப்பெற்றது. 32,000 தொழில் நிலையங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. போலந்து 60 லட்சம் பேரை பறிpகொடுத்தது. யூகோஸ்லாவியா 17 லட்சம் பேரையும், பிரான்ஸ் 16 லட்சம் பேரையும், அமெரிக்கா 4 லட்சம் போரையும், பிரிட்டன் 3லட்சத்து 70ஆயிரம் பேரையும் பறி கொடுத்தது. ஜெர்மன் தரப்பில் ஒரு கோடியே 36 லட்சம் பேர் கொல்லப்பட்டனர், சிறைப் பிடிக்கப்பட்டனர், காயப்பட்டனர். இதனுடைய கூட்டாளி நாடுகளில் 50 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர்.

 

இவ்விழப்புக்களே யுத்தத்தில் யார் தீவிரமாக இயங்கியது என்பதையும், 2ம் உலகயுத்தம் தோற்கடிக்கப்பட்டு பாஸிசத்தைக் குழிதோண்டிப் புதைக்க சோவியத் முயன்றதையும் மேற்படி தரவுகளே நிரூபிக்கின்றன.

 

2ம் உலகயுத்தத்தில் பிரதான யுத்தமுனை சோவியத்திலும், பல படைகளை கட்டிப்போட்டு வைப்பதில் சோவியத் போர்முனை தீர்க்கமான பங்காற்றியது. ஜெர்மனிலும், அதன் கூட்டாளி நாடுகளிலும், அதன் படைத்தொகுதியில் 70-76 சதவீதம் 1941-1942 வரை சோவியத் முனையில் இருந்தது. 2-4 சதவீதமே பிரிட்டன், அமெரிக்கப் போர்முனைகளில் செயற்பட்டன. 1944 இல் இரண்டாவது போர்முனை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 50 சத வீதத்திற்கு அதிகமானவை சோவியத் போர்முனையிலும், பிரிட்டன், அமெரிக்காவுக்கு எதிராக 30 சதவீதம் மட்டுமே போரில் ஈடுபட்டன.

 

போர்முனையின் நீளம் இத்தாலிலும், மேற்கு ஆபிரிக்காவிலும் 300-500 கி.மீற்றர்களும், மேற்கு ஐரோப்பாவில் 800 கி.மீ ஆகவும், சோவியத்-ஜெர்மனி போர்முனை 3000 முதல் 6200 கி.மீற்றர்களாகவும் இருந்தன.

 

போர்முனையில் நிலவியநேரம்: இத்தாலிய போர்முனை இருந்த நேரம் 74 சதவீதமும், வட ஆபிரிக்காவில் 29 சதவீதமும், ஐரோப்பா வில் 86.7 சதவீதமும், சோவியத்திலோ 93 சதவீதமாவும் இருந்தது. சோவியத்-ஜெர்மனி போர்முனையில், சோவியத்- ஜெர்மனி மற்றும் துணைநாடுகளில் 607 டிவிஷன்களை அழிந்தனர். வட ஆபிரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் நேச நாட்டினர் 176 டிவிஷன்களையே அழித்தனர்.

 

சோவியத் துருப்புக்களுக்கு எதிராக நடைபெற்ற சண்டையில் பாசிஸ்டுக்களின் பெரும்பகுதிப் பீரங்கிகளையும், டாங்கிகளையும், மூன்றில் ஒருபகுதி விமானங்களையும், 1,600க்கு மேற்பட்ட போர் கப்பல்களையும் இழந்தனர். அத்துடன் ஒரு கோடிக்கும் குறையாத போர்வீரர்களை சோவியத்-ஜெர்மனி போர்முனையில் இழந்தனர். இது ஜெர்மன் தரப்பில் இழந்த ஒரு கோடியே 36 லட்சம் பேரில் 73 சதவீதமாக இருந்தது.

 

30ம் ஆண்டுகளில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் யுத்தவெறி கொண்ட பாசிஸ்டுக்கள் ஆட்சிக்கு வந்தனர். கம்யூனிஸ பூச்சாண்டி காட்டியபடி, முதலாளித்துவ ஜனநாயகம் என்ற சுரண்டும் வர்க்க அமைப்பு முறையினூடாவே இப் பாசிஸ்டுக்கள் ஆட்சிப்பீடம் ஏறினர்.

 

1ம் உலகயுத்தத்தின் முடிவில் ஜெர்மன் மீது ஏகாதிபத்தியங்கள் திணித்த 'வெர் சேய்' எனப்படும் நியாயமற்ற ஒப்பந்தத்தை ஒழிப்பது என்ற பாசாங்கில், புதிய உலக ஒழுங்கை கோரியபடியே பாசிஸ்டுக்கள் 'தேசிய தொழிலாளர் கட்சி' என்ற பொய்யான பதாகையை உயர்த்தியபடி 1933ல் ஆட்சிக்கு வந்தனர்.

 

கம்யூனிஸத்தையும், சோசலிஸத்தையும் ''உலகம் முழுவதன் எதிரி'' என அறிவித்தபடி, ''மூன்றாவது பேரரசு'' (ஜெர்மன்), ''மேற்கத்திய நாகரீகத்தின் கோட்டை'' என்றும், ''சிலுவைப் போருக்கு ஆயுதம் தரிக்கும் உரிமை வேண்டும்'' என்ற கோரிக்கையுடன் ஆயுதபாணியாகினர். 1935ம் ஆண்டு மார்ச் 16ம் திகதி கட்டாய இராணுவசேவை குறித்து ஜெர்மன் சட்டம் இயற்றியது. மே 21ம் திகதி ''பேரரசின் தற்காப்பு'' பற்றிய சட்டமும் இயற்றப்பட்டது. இது யுத்தம் தொடங்கும் வரை இரகசியமாவே வைக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற 'நியூ ரென்பர்க்' விசாரணையில், இந்த தற்காப்புச் சட்டம் தான் அனைத்திற்கும் காரணமெனத் தெரியவந்தது.

 

1936ம் ஆண்டு முதலாவது ஆக்கிரமிப்பை 'ரைன்' பிரதேசத்திற்குள் ஜெர்மன் நிகழ்த்தியது. இந்நிலையிலும், தொடர்ந்து ஏற்பட்ட பல ஆக்கிரமிப்புக்களிலும் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ''தலையிடாமை'', ''நடு நிலைமை'' பற்றிக் கூறியபடி யுத்தத்தை சோவியத்தின்பால் திருப்பவும், ஜெர்மன் தனது ஆயுத பலத்தை பெருக்கத் தேவையான அளவு பொருட்களை என்றுமில்லாதவாறு அனுப்பி வைத்தனர். இதனால் 30 களில் ஜெர்மனியின் இராணுவத் தொழிற்துறை மற்றைய ஏகாதிபத்தியத்தின் தரத்தை விடவும் அதிக உயர்ந்த நிலையை அடைந்தது.

 

1936ம் ஆண்டு ஒட்டோபரில் பிரபல ஜெர்மன் தொழிலதிபரான ஷாஹ்ட் மூன்றாவது பேரரசின் பொருளாதார அமைச்சராக இருந்தபோது ஆண்டுதோறும் 1/2 பில்லியன் மார்க்குக்கு கூடுதலான பெறுமதியான இரும்புத்தாதுவை பெறுவதற்கு ஒப்பந்தம் பிரான்சுடன் செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனிக்கு பாக்சைட்டின் வரவு 6 மடங்காக அதிகரித்தது. இது விமானக் கட்டுமானத்திற்காக அலுமீனியத்தை உற்பத்தி செய்வதில் உலகின் முதலாவது இடத்தை ஜெர்மன் பெற்றுக்கொண்டது.

 

ஜெர்மனிய புள்ளி விபரப்படி 1933 முதல் 1939 வரை ஆயுத உற்பத்தியானது 10 மடங்காகவும், விமானக் கட்டுமானம் 23 மடங்காகவும், இயந்திரக்கட்டுமான தொழிற்சாலை உற்பத்தி 4 மடங்காகவும் அதிகரித்தது. அமெரிக்க ஏகபோக கம்பனிகளின் உதவியுடன் 1938ல் ஜெர்மனி சேர்க்கை எரிபொருளின் உற்பத்தியை 1,600 ஆயிரம் டன் வரை உயர்த்தியது. 2ம் உலகயுத்தம் தொடங்கியபோது உலகில் அதிகளவு கடைசல் இயந்திரத்ததை (18 லட்சம்.) ஜெர்மனி வைத்திருந்தது. 1935-1940 வரைக்கும் அதன் இராணுவ உற்பத்தி 23 மடங்காகவும், துருப்புக்களின் எண்னிக்கையோ 35 மடங்காகவும் அதிகரித்தது.

 

சோவியத் மீதான கம்யூனிஸ விரோதப் பிரச்சாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஈடுபட்ட அதேநேரம், ஜெர்மனியை சோவியத் மீது தாக்குதல் தொடுக்க எல்லாவகைகளிலும் உந்தித் தள்ளினர் இதைப் பயன்படுத்திய ஹிட்லர் பின்வருமாறு கூறினார்.

 

''போல்ஷிவிக் பூதத்தின் உதவி கொண்டு, சிவப்பு பிரளயத்திற்கு எதிரான கடைசி அரண் ஜெர்மனி மட்டுமே என்று நம்பச் செய்துதான் என்னால் வெர்சேய் வல்லரசுகளை கட்டுப்படுத்தி வைக்க முடியும்..... நெருக்கடியான காலகட்டத்தைக் கடக்க நமக்குள்ள ஒரே வழி வெர்சோயிடமிருந்து பிரிந்து மீண்டும் ஆயுதந் தரிப்பதாகும்.''

-          K. Ludecke, I knew Hitler, New Youk, 1936,p. 468.-   

 

பாசிசத்தை எதிர் கொள்ள சோவியத் 1939 ஏப்பிரல் 27ல் கூட்டு உடன்பாட்டுக்கு பிரிட்டீஸ், பிரான்ஸ்சுக்கு அழைப்புவிட்டனர். அதற்கான ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்தனர். இந்த நோக்கோடு 1939 ஆவணி மாதம் பிரிட்டீஸ் பிரான்ஸ், சோவியத் என்பன சோவியத் யூனியனில் பேச்சுக்களை நடத்தினர். இதை எதிர்கொள்ள சோவியத் தரப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பரவலான அதிகாரம் இருந்ததுடன், யுத்தத்தைத் தடுக்க 136 காலாட்படை, மற்றும் குதிரை டிவிசன்களையும் 5.000 கனரக பீரங்கிகளையும், 10 ஆயிரம் டாங்கிகளையும், 5.500போர் விமானங்களையும் வழங்கத் தயாராகவிருந்தது. இவ்வளவும் இருந்தும் பிரிட்டீஸ் தூதுக்குழுவிற்கு கையொப்பமிடும் அதிகாரம் இருக்கவில்லை. இது அடிப்படையில் சோவியத் பால் கொண்ட வெறுப்பில் பாசிசத்தை ஆதரிப்பதில் போய் நின்றது. இது குறித்து பிரிட்டீஸ் அரசியல்வாதியான டே. லாயிட் ஜார்ஜ் கேலியாகக் கூறியதைப் பார்ப்போம். கிட்லருடன் கொஞ்சிக் குலாவ சேர்ம்பர்லோன் மூன்று முறை தொடர்ந்தாற் போல் சென்றார். முசோலினியைக் கட்டித்தழுவவும் அபிஸ்ஸீனியாவைக் கைப்பற்றியதற்காக எமது அதிகாரபூர்வமான அங்கீகார வடிவில் பரிசளிக்கவும் அவர் ஸ்பெயினில் தலையிடுவதற்கும் நாங்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கமாட்டோம் என்று சொல்லவும் சோம்பர்லோன் விசேஷமாக ரோமிற்கு சென்றார்.

 

எந்தளவுக்கு ஜெர்மனியை வளர்ப்பதில் இவ் ஏகாதிபத்தியங்கள் போட்டியிட்டன என்பதை விளங்கிக்கொள்ள ஹிட்லரின் இக்கூற்றே போதுமானது. ஜெர்மனி மட்டுமல்லாது இவ் ஏகாதிபத்தியங்களும் குற்றவாளிகளே.

 

1936ல் இத்தாலியும், ஜெர்மனியும் கம்யூனிஸ எதிர்ப்பு, சோவியத் எதிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டன. பின் ஜப்பானும் இதில் சேர்ந்துகொண்டது. 1938 மார்ச்சில் ஆஸ்திரியாவை ஒன்றிணைத்தல் என்ற பெயரில் ஆக்கிரமிப்பை ஜெர்மன் நிகழ்த்தியது. இதன் பின் செக்கோஸ்லொவாக்கியாவில் மிகமுக்கிய எல்லைகளை ஜெர்மனிக்கு வழங்கும் ஒரு ஒப்பந்தத்தை சோவியத்தின்மீது தாக்குதலை தொடுக்க ஊக்குவிக்கும் வகையில் 1938 செப்ரெம்பர் 29ல் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி பிரதிநிதிகள் மூனிக்கில் கைச்சாத்திட்டனர். இவ்வொப்பந்தம் செக்கோஸ்லொவாக்கியாவின் பிரதிநிதி இன்றி ஹிட்லரும், முஸ்ஸோலீனியும், பிரஞ்சுப் பிரதமர் ஏ. டலடியேவும், பிரிட்டன் பிரதமர் நே. சேம்பர்லேனும் கையொப்பமிட்டனர்.

 

இந்த ஒப்பந்தத்திற்கு அப்பால் செப்ரெம்பர் 30ல் மூனிக் உடன்படிக்கைக்கு கூடுதலாக பிரிட்டன்-ஜெர்மன் ஒப்பந்தம் வெளியானது. இது பரஸ்பரம் தாக்குவதில்லை என அறிவித்தது. பின் டிசம்பர் 6ல் பிரான்சும் சேர்ந்துகொண்டது. இவ் ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை சோவியத் கண்டித்தது. இதற்குப் பதிலளித்த சேம்பர் ''உலக அமைதியைக் காப்பாற்ற'' என்று பதிலளித்து, ஆக்கிரமிற்பிற்கான வகையில் புதிய உலக ஒழுங்கு வழியைத் திறந்துவிட்டனர்.

 

மூனிக் ஒப்பந்தத்தை ஒட்டி அமெரிக்க வரலாற்றாசிரியர் பிரெடெரிக்ஷ_மன் எழுதியதைப் பார்ப்போம்.

 

''இரண்டாம் உலக யுத்தத்தின் முன்னணைப் பொழுதில் ஜனநாயக மக்களின் பொறுப்பு மிக்க பிரதிநிதிகள் வெளிப்படுத்திய முடடாள்தனம் மற்றும் கபடத்தோடு ஒப்பிடக்கூடிய எதையுமே மனித பலவீனம், முட்டாள்தனம் மற்றும் மனிதர்களால் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள வரலாற்றில் காணமுடியாது.''

 

இவ் ஒப்பந்தத்தை ஒட்டி ஜெர்மனிய அயல் விவகாரத்துறை அமைச்சர் ரிபென்ட்ரோப் பிரிட்டீஸ் பிரதமர் சோம்பர்லேனின் பங்கைக் குறித்து இப்படிக் கூறுகின்றார்.

 

''இந்தக் கிழவர் இன்று பிரிட்டீஷ் பேரரசின் மரணதண்டனையில் கையொப்பமிட்டு இந்தத் தண்டனையை நிறைவேற்றும் தேதியை முடிவு செய்யும் பொறுப்பை எங்களுக்கு விட்டுள்ளார்.''

 

2ம் உலகயுத்தத்தை நடத்த எல்லாவகையிலும் உதவியோர் இவ் ஏகாதிபத்தியங்களே இதை ஜெர்மனிய பாசிஸ்டுகளின் கூற்றுக்களே நிறுவிவிடுகின்றன. 1939ம் ஆண்டு பிரிட்டன்-ஜப்பான் ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் பிரிட்டீஷ் காலனியான சீனாவை தாரைவார்ப்பதில் இட்டுச்சென்றது. 1938ல் ஜெர்மனிய இராணுவம் சுதேத் பிரதேசத்திற்குள் ஊடுருவியது 1939 மார்ச்சில் செக்கோஸ்லொவாக்கியா முழுவதையும் ஜெர்மனி ஆக்கிரமித்தது. 1939 வசந்தகாலத்தில் லித்துவேனியாவின் கிளைபெத் பிரதேசத்தைக் கைப்பற்றினர். ருமேனியா மீது தளைபூட்டும் ''பொருளாதார'' ஒப்பந்தத்தை திணித்தனர்.

 

1939ம் ஆண்டு ஏப்ரலில் அல்பானியாவை இத்தாலி கைப்பற்றியது. 1938 இன் இறுதியில் ஜெர்மனி டான்ட்ஸிங் நெருக்கடியை ஏற்படுத்தி சுயேச்சையான டான்ட்ஸிங் பிரதேசம் மீது நியாயமற்ற தன்மையை ஒழிப்பது என்ற போர்வையில் போலந்தின் மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகினர். பிரிட்டனும், பிரான்சும் ''பாதுகாப்பு உத்தரவாதங்கள்'' என்ற பெயரில் தமது பொருளாதார நலன்கள் மீது போலந்து, ருமேனியா, கிரீஸ், துருக்கி போன்ற நாடுகள் மீது உத்தரவாதத்தை அளித்தபோதும், ஆனால் நடைமுறையில் இவர்கள் ஆக்கிரமிப்புக்கு பச்சைக்கொடியையே காட்டினர்.

 

1939 ஏப்ரல்-மே யில், 1935ம் ஆண்டு செய்துகொண்ட பிரிட்டீஷ்-ஜெர்மனி கடல் உடன்படிக்கையை ஜெர்மன் ரத்துச் செய்தது. அத்துடன் 1934ல் போலந்துடன் படையெடுப்பது இல்லையென்ற ஒப்பந்தத்தையும் முறித்துக்கொண்டது. இத்தாலியுடன் ''இரும்பு உடன்படிக்கை'' ஒன்றைச் செய்து கொண்டது. இது ஜெர்மனுடன் மேற்குநாடுகளுடன் போர் மூண்டால் இத்தாலி உதவுமென வரையறுத்திருந்தது.

 

2ம் உலகயுத்த ஆரம்பத்தில் அதாவது 1939 செப்ரெ. 1.ம் நாள் இராணுவபலம்.

நாடுகள்.

இராணுவம்.

பீரங்கி

டாங்கி

விமானம்.

நீர்மூழ்கி.-மொத்தம்.

.நீர்மூழ்கி.

ஜெர்மன்.;.

4600000.

26000.

3195.

4093.

53.- 107.

 

பிரான்ஸ்.

2670000.

26000.

3100.

3335.

77.- 174.

 

பிரிட்டன்

1626000.

5600.

547.

3891.

தெரியாது.-328

.1222.

 

 

இப் புள்ளிவிபரப்படி ஜெர்மனிய இராணுவத்தின் பலத்தைவிட பிரிட்டன், பிரான்சின் பலம் அதிகமாகவிருந்தது. யுத்த ஆரம்பத்தில் யுத்தத்தை சோவியத்தின் மீது நிகழ்த்தும் கொள்கையினால், யுத்தத்தை வளர்த்து 6 கோடி மக்களை படுகொலை செய்யப்பட காரணகர்த்தாக்களாக இவ்விரு நாடுகளும் முனைந்து நின்றன. இதேபோது சோவியத் மீது ஜப்பானானது யுத்தத்தில் இறங்க இவ்நாடுகள் பகிரத்தனமான முயற்சியில் ஈடுபட்டன. அதற்காக ஜப்பானை ஆயுதபாணியாக்க 1939ன் ஆரம்பத்தில் பெரும் முயற்சி செய்தனர். 1939 தின் ஆரம்பத்தில் ஜப்பான் இறக்குமதி செய்த இராணுவத் தளவாடங்களில் 86 சதவீதத்தை அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந் ஆகியவைகளிடமிருந்து பெற்றுக்கொண்டது.

 

1931ல் வடகிழக்கு சீனாவையும், பின் உள் மங்கோலியாவின் பகுதியையும் ஜப்பான் கைப்பற்றிக்கொண்டது. 1934ல் மஞ்சூரியாவிலும், கொரியாவிலும் சுமார் 40 விமானத்தளங்களும், 50 இறங்குமிடங்களையும், கட்டினர். இது தவிர போர்நடவடிக்கைக்கு அவசியமான 1000கி.மீ இரும்புப்பாதையையும் போட்டனர். இவை அனைத்தும் சோவியத் எல்லையிலும், சோவியத் மீதான தாக்குதலுக்கான அடிப்படையில் நிகழ்ந்தன. சோவியத்திற்கு எதிராக மஞ்சூரியாவில் இருந்த இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரித்தவண்ணம் இருந்தனர். 1932ல் 50ஆயிரம் பேர் இருந்தனர். இது ஜப்பானிய இராணுவத்தின் 20 சதவீதமாகும். இது 1937ல் ஐந்துமடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்தது.

 

ஆக்கிரமிப்புக்கு வசதி செய்யும் வகையில் 1933 மார்ச் 27. ல் சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேறியது. பின் 1934ல் கடற்படை ஆயுதந்தரித்தலைப் பற்றிய வாஷிங்டன் மகாநாடு(1921-1922) உடன்படிக்கையை நிராகரித்தது. 1936 நவம்பர் 25.ல் ''கம்யூனிஸ அகில எதிர்ப்பு உடன்படிக்கையை'' செய்துகொண்டது. 1940 செப்ரம்பர் 27.ம் திகதி ஜெர்மனி-இத்தாலியுடன் ''முத்தரப்பு உடன்படிக்கையை'' செய்துகொண்டது.

 

ஜப்பானிய யுத்தத் தயாரிப்புக்கள் நிகழ்ந்தபோது இவ் மேற்கு நாடுகள் அதை சோவியத்தின்பால் திருப்பவும், அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து ஊக்குவித்தன. யுத்தக் குற்றவாளிகளில் இவ் மேற்கு நாடுகளின் பங்கு கணிசமானது என்பதை நடைபெற்ற நிகழ்ச்சிகள், புள்ளி விபரங்கள் நிரூபிக்கின்றன.

 

''மூனில் சதி''யைத் தொடர்ந்து சோவியத் செக்கோஸ்லொவாக்கியாவிற்கு உதவும் வகையில் 76 துப்பாக்கிப்படை, மற்றும் குதிரை டிவிஷன்களும், 3 டாங்கி கோர்பஸ்களும், 22 தனி டாங்கி பிரிகேடுகளும், 12 விமான பிரிகேடுகளும் தயாராக வைத்திருந்தன. இருந்தபோதும் செக்கோஸ்லொவாக்கியா இதை ஏற்றுக்கொள்ள மறுக்குமாறு பிரிட்டன், பிரான்ஸ், ஆகியவை நிர்ப்பந்தித்து ஜெர்மனி ஆக்கிரமிக்க வழி அமைத்தன.

 

1936-39களில் ஸ்பெயின் மக்கள் நடத்திய தேசிய புரட்சியில் 3000 க்கும் மேற்பட்ட சோவியத்தின் பல்வேறு வீரர்கள் இணைந்து நின்று போராடினர். இதில் பாஸிச சக்திகளுக்கு எதிராகவும், ஜெர்மன், இத்தாலி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடிப் பெரும் புகழ் பெற்றனர். 1939ல் மங்கோலியாவினுள் ஜப்பான் நுழைந்த போது சோவியத் படைகள் உதவிக்கு வந்து ஜப்பானைத் தோற்கடித்து மங்கோலியாவைக் காப்பாற்றினர்.

 

1937ல் சோவித்-சீனா பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அத்துடன் சீனா மீதான ஜப்பானிய தாக்குதலின்போது அதாவது 1937 முதல் 1941வரை தேசிய விடுதலைக்கு உதவும் வகையில் 940 பீரங்கிகளையும், 100 டாங்கியையும், 885 விமானங்களையும், மற்றும் சில ஆயிரம் துப்பாக்கிகளையும், 4000ற்கு மேற்பட்ட சோவியத் ஆலோசனைகளையும் வழங்கியது. சோவியத் விமானிகள் சீனாப்பரப்பில் 100 ஜப்பானிய விமானங்களைச் சுட்டுவிழ்த்தினா.

 

பாஸிசத்தை எதிர்கொள்ள சோவியத் 1939 ஏப்பிரல் 27ல் கூட்டு உடன்பாட்டுக்கு பிரிட்டீஷ், பிரான்ஸ்சுக்கு அழைப்புவிட்டனர். அதற்கான ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்தனர். இந்த நோக்கத்தோடு 1939 ஓகஸ்ட் மாதம் பிரிட்டீஸ், பிரான்ஸ், சோவியத் என்பன சோவியத் யூனியனில் பேச்சுக்களை நடத்தின. இதை எதிர்கொள்ள சோவியத் தரப்பில் கலந்துகொண்டவர்களுக்கு பரவலான அதிகாரம் இருந்ததுடன், யுத்தத்தைத் தடுக்க 136 காலாட்படை, மற்றும் குதிரை டிவிஷன்களையும் , 5,000 கனரக பீரங்கிகளையும், 10 ஆயிரம் டாங்கிகளையும், 5,500 போர் விமானங்களையும் வழங்கத் தயாராகவிருந்தது. இவ்வளவு இருந்தும் பிரிட்டீஷ் தூதுக்குழுவிற்கு கையொப்பமிட அதிகாரம் இருக்கவில்லை. இது அடிப்படையில் சோவியத்தின் பால் கொண்ட வெறுப்பில் பாஸிசத்தை ஆதரிப்பதில் போய்நின்றது. இது குறித்து பிரிட்டீஷ் அரசியல்வாதியான டே. லாயிட் ஜார்ஜ் கேலியாகக் கூறியதைப் பார்ப்போம்.

 

''ஹிட்லருடன் கொஞ்சிக்குலாவ சேம்பர்லோன் மூன்று முறை தொடர்ந்தாற் போல் சென்றார். முசோலீனியைக் கட்டித் தழுவவும் அபிஸ்ஸீனியாவைக் கைப்பற்றியதற்காக எமது அதிகாரபூர்வமான அங்கீகார வடிவில் பரிசளிக்கவும் அவர் ஸ்பெயினில் தலையிடுவதற்கும் நாங்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கமாட்டோம் என்று சொல்லவும் சோம்பர்லோன் விசேஷமாக ரோமிற்கு சென்றார். தனது உதவியை நமக்கு முன்மொழியும் அதிக வல்லமை வாய்ந்த ஒரு நாட்டிற்கு நம்மை பிரதிநிதித்துவப்படுத்த அந்நிய அமைச்சரகத்திலிருந்து அதிகாரியை அனுப்பினார்கள் என்று ஏன் கூறவேண்டும்? இதற்கு ஒரே ஒரு விடை மட்டுமே இருக்க முடியும்: கனவான் நேவில் சோம்பர்லோன், லார்ட் ஹாலிபாக்ஸ் மற்றும் சர் சைமன் ஆகியோரக்கு ரஷ்யாவுடன் கூட்டுச்சேர விருப்பமில்லை.''

w. Coates, Z. Coates, A  History of Anglo-Soviet  Relations, London, 1945, p .614. -

 

இந்த வகையில் சோவியத்தின் பாலான எதிர்ப்பும், பின் சோவியத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பின்னர் கூட இரண்டாவது போர்முனையைத் தொடங்கும் வரை 3 வருடங்களாக இருந்து அடித்து 1944ல் சோவியத்தின் முன்னேறிய வெற்றியுடன் போட்டியிடவே படைகளை இறக்க நிர்பந்திக்கப்பட்டனர். சோவியத்யூனியனுடன் அதிகாரம் இல்லாதவர்கள் பேசிக்கொண்டிருந்த அதேநேரம் பிரிட்டீஷ் அரசாங்கம் ஜெர்மனியுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

 

இப் பேச்சுவார்த்தையின் ஊடாக உலகை சமாதானமாக பங்கு போட்டுக் கொள்ளவும், போலந்தில் தலையிட மாட்டோம் என ஒப்புக்கொண்டும், சோவியத்தை எப்படி பங்குபோடுவது என்ற சமாச்சாரங்களே பேச்சுவார்த்தையின் சாரமாக இருந்தது. இதேநேரம் பிரிட்டீஷ், பிரான்ஸ், சோவியத் பேச்சுவார்த்தையை குலைத்ததன் மூலம் பாஸிச 2ம் உலக யுத்தத்தை தடுக்கும் கடைசி சந்தர்ப்பம் இழக்கப்பட்டது. இது தொடர்பாக பிரிட்டீஷ் இராணுவ வரலாற்றாசிரியர் லிடல் கார்ட் குறிப்பிடுவதைப் பார்ப்போம்.

 

''போலந்திற்கு நேரடி உதவி அளிக்க ஒரே ஒரு வல்லரசாகிய ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவதுதான் யுத்தத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வாய்ப்பாக இருந்தது.''

- லிடல் கார்ட்: இரண்டாவது உலக யுத்தம்.-

 

இக்காலத்தில் சோவியத் ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில் மங்கோலியப் படையுடன் இணைந்து போரில் இறங்கியிருந்தது.

பலம்.

நாடுகள்.

டிவிஷன்.

விமானம்.

டாங்கி.

பீரங்கி.

பிரா, பிரி, சோவி.

311.

11700.

15400.

9600.

ஜெர்மன் இத்தாலி.

168.

7700.

8400.

4350.

 

சோவியத்திற்கு எதிராக 'சிலுவைப் போரை' நடத்த ஜெர்மனி தயாரான நிலையில் இதை முறியடிக்கும் வழிவகைகளை சோவியத் தேடியது. பாஸிசத்திற்கு எதிரான மேற்கு நாடுகளின் கூட்டு சாத்தியமற்ற நிலைமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் முன்மொழியாக வந்த பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும்படி சோவியத்தை நிர்பந்தித்தது. 1939 ஓகஸ்ட் 23.ம் திகதி இவ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் சோவியத் மீதான ஜெர்மனியின் தாக்குதலை ஊக்கப்படுத்திய ஏகாதிபத்தியங்களின் திட்டம் தவிடுபொடியாகியது. தொடர்ச்சியாக 1941 ஏப்பிரலில் ஜப்பானுடன் நடுநிலை பற்றி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. இதன் தொடர்ச்சியாக 1939 முதல் 1941 வரை யுத்தம் எதிலும் சோவியத் பங்கு கொள்ளவில்லை.

 

சோவியத்யூனியன் மீது திட்டமிட்டபடி சிலுவைப் போருக்குப் பதில் ஹிட்லர் தனது படைகளை பிரிட்டீஷ், பிரான்ஸ்சுக்கு எதிராக அனுப்பினார். இதையொட்டி பிரபல பிரஞ்சு அரசியற் பிரமுகர் ஏரியோ சரியாகக் குறிப்பிட்டது என்னவெனில் ''பாஸிச ஜெர்மனி, தன் கழுத்துக் கயிற்றை அறுத்து, எஜமானனையே கடித்த நாயைப் போலிருந்தது.'' என்றார்

 

பாஸிச ஜெர்மனி 1939 மார்ச் 12 இல் போலந்திற்கு ஒரு காலக்கெடுவை கொடுத்து டான் ட்ஸிங்கை (கிதான்ஸ்க்) தடுமாறும், போலந்தில் இடைவழியில் சாலை, இரும்புப்பாதை அமைக்கும் உரிமையை கோரினர். 1939 ஏப்பிரல் 3ம் திகதி போலந்தின் மீது தாக்குதலைத் தொடுக்க தயாரிப்பில் இறங்கியது. இத்தாக்குதல் நடவடிக்கையை ''வெள்ளைத்திட்டம்'' என அழைக்கப்பட்டது. 11ம் திகதி யுத்தத்திற்கு தயாராகும் கட்டளையில் ஹிட்லர் கையெழுத்து இட்டான். 1934இல் போலந்துடன் ஏற்பட்ட உடன்பாட்டை ஏப்பிரல் 28 இல் முறித்துக் கொண்டது ஜெர்மனி.

 

இத்தாக்குதலுக்கு முன் படைகளின் பலம்.

நாடுகள்.

டிவிஷன்

.டாங்

.பீரங்

.விமானங்கள்

.படையின் எண்னிக்கை

கடற்படை

.ஜெர்மனி.

62.

2800.

6000.

2000.

1600000.

7நீர்மூழ்கி 2போர்.கப்..

போலந்.

39.

870.

4300.

800.

1000000.

5நீர்மூழ்கி மற;றும்.

 

1939 செப்ரெம்பர் 1ம் திகதி ஜெர்மனி போலந்தின் மீது தாக்குதலைத் தொடுத்தது. இது தொடங்கிய அன்று பிரிட்டீஷ்- பிரான்ஸ் 1920 களில் செய்து கொண்ட ''வெர் சேய்'' ஒப்பந்தத்தைத் திருத்துவது என்று பேரத்தில் இறங்கினர். இது தோல்வி பெற்றது. அப்போது ஹிட்லர் தனது நெருங்கியவர்கள் மத்தியில் பிரிட்டீஷ் பிரதமர் பற்றிக் கூறியதைப் பார்ப்போம்.

 

'' 'குடையேந்திய இந்த மனிதன்' மட்டும் என்னிடம் பெர்ஹ்டேஸ் காடனுக்கு வருவதாக இருக்கட்டும்.... காலால் அவனைப் பின்புறம் உதைத்து மாடிப்படியில் உருட்டிவிடுவேன். இவ்வாறு நான் செய்யும்போது இதை ஏராளமான பத்திரிகையாளர்கள் இருந்து பார்க்கும்படி கவனித்துக் கொள்கிறேன்.''

-இரண்டாவது உலக யுத்தத்தின் வரலாறு தொகுதி 3.-

 

1ம் திகதி போலந்து யுத்தத்தை ஆரம்பிக்க முன்பு ஓகஸ்ட் 31ம் திகதி ஒரு நாடகம் நடத்தப்பட்டது. இதற்கு என ஜெர்மனியர் போலந்து உடையில் ஜெர்மன் நகரமாகிய கிலேய்விட்ஸில் உள்ள வானொலி நிலையத்தில் புகுந்து 'மைக்'கு முன்னால் சில குண்டுகள் வீசி போலந்து மொழியில் முன்பே தயாரித்த வாசகத்தை வாசித்து யுத்தத்தை நடத்த ஜெர்மனிய மக்களை தயார்படுத்தினர். இது தொடர்பாக முன்பே எப்படி யுத்தத்தைத் தொடங்குவது என்பதை ஒட்டி ஹிட்லர் கூறியதைப் பார்ப்போம்.

 

''யுத்தத்தை மூட்டி விடுவதற்கான பிரச்சார சாக்கை நான் தடுக்கிறேன். இது உண்மையானதாயிருக்குமா என்பது முக்கியமல்ல. வென்றவனை பின்னால், அவன் கூறியது உண்மையா இல்லையா என்று கேட்கப்போவது இல்லை.'' -ஹிட்லர்-

-IMT ஆவணம் 1014-P pp. 523-524. 1939 ஓகஸ்ட் 22 உயர் ஜென்ரல்களின் முன் ஹிட்லரின் இரண்டாவது உரை.-

 

செப்ரம்பர் 3ம் திகதி பிரான்ஸ், பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தை அறிவித்தது. ஆனால் தீவிர தாக்குதலில் இறங்கவில்லை. செப்ரம்பர் 9ம் நாள் பிரான்ஸ் இராணுவம் சவாரில் தொடங்கிய குறுகிய நோக்கிலான தாக்குதல் 12ம் திகதி நிறுத்தியது. இதன் ஊடாக பிரான்ஸ், பிரிட்டனும் தனது கூட்டாளியான போலந்திற்கு துரோகமிழைத்தது.

 

ஜெர்மனிய- பிரான்ஸ் எல்லையில் பிரான்ஸின் படை பலம் வாய்ந்ததாக இருந்தது. ஜெர்மனிய பலத்தை எல்லாவிதத்திலும் விஞ்சி நின்றது. இதை ஒட்டி ஜெர்மனிய தளபதிகள் கலக்கம் அடைந்திருந்தனர். போலந்துத் தாக்குதலின் போது பிரான்ஸ் தாக்காது இருக்க வேண்டுமென விரும்பினார். இதையொட்டி ஜெர்மனிய ஜெனரல்கள் கூறியதைப் பார்ப்போம்.

 

''பிரான்சும், பிரிட்டனும் மட்டும் தாக்குதலைத் தொடுத்திருந்தால் எங்களால் முற்றிலும் கற்பனையான தற்பாதுகாப்பைத்தான் வைத்திருக்க முடியும்.''

-பீல்ட்மார்ஷல் ஜென்ரல் வெகைடல்-

-நியூ ரென்பார் விசாரணை தொகுதி, 1.-

 

இதையொட்டி மற்றுமெரு ஜென்ரல் கூறினார்:

''1939ம் ஆண்டிலே நாங்கள் தோல்வியடையவில்லை என்றால் அதற்குக் காரணம், போலந்துடன் நாங்கள் யுத்தத்தில் இறங்கியிருந்த போது மேற்கே 23 ஜெர்மன் டிவிஷன்களுக்கு எதிராக நின்ற சுமார் 110 பிரன்சு மற்றும் பிரிட்டீஷ் 4 டிவிஷன்கள் முற்றிலுமாக செயலற்று இருந்தது.''

- ஜெனரல் யோடல்-

- நியூ ரென்பார் விசாரணை தொகுதி, 1.-

 

1939ல் ஜெர்மன் தோற்கடிக்கப்பட்டு 6 கோடி மக்கள் உயிரையும், பலகோடி பெறுமதியான சொத்துக்களைப் பாதுகாத்து இருக்க முடியும். ஆனால் பிரான்ஸ், பிரிட்டன் சோவியத் மீதான தாக்குதலை மையமாகக் கொண்டு ஜெர்மனியை எல்லா விதத்திலும் வளர்க்க பாடுபட்டனர்! இதையொட்டி பிரன்சு ஆசிரியர் கூறுவதைப் பார்ப்போம்:

 

''நமது லோரைன் சேனையின் முழுச் செயலின்மைக்கான காரணத்தை அரசியல் நிலைகளில்தான் தேடவேண்டும்.''

- போஃப்ரின்-

A. Beanfre, Le drame de 1940, Paris, 1965, p. 206.

 

போலந்து தலைநகர் மீதான தாக்குதலில் 2 ஆயிரம் போர் வீரர்கள் இறந்தனர். 16,000 பேர் காயமடைந்தனர். ஒக்டோபர் 2வரை நீடித்த இவ் யுத்தத்தில் மொத்தமாக 66,300 போலந்து வீரர்கள் இறந்தனர். 1,33,700 பேர் காயமடைந்தனர். 4,20,000 சிறை பிடிக்கப்பட்டனர். ஜெர்மனிய

 தரப்பில் 10,600 பேர் இறந்தனர். 30,300 பேர் காயமடைந்தனர். 3,400 பேர் தொலைந்து போனார்கள்.

ஜெர்மனிய முன்னேற்றம் சோவியத் எல்லைகளை நோக்கி சென்ற போது சோவியத் 1939 செப்ரெம்பர் 17ம் திகதி மேற்கு உக்ரோன், மேற்கு பெலோ ரஷ்யாவுக்குள் விடுதலைப் பிரயாணத்தை மேற்கொண்டு கிழக்கு நோக்கிய ஜெர்மனிய படைகளைத் தடுத்தனர். 1940 ஏப்பிரல் 9ம் நாள் யுத்த அறிவிப்பு இன்றி டென்மார்க் நாட்டினுள் நுழைந்தது. இதே நாள் நோர்வேயில் ஜெர்மனிய படைகள் இறங்கின. பல முக்கிய இராணுவ இலக்குகளை கைப்பற்றிக் கொண்டது. ஏப்பிரல் நடுவில் பிரிட்டீஷ்-பிரான்ஸ் படைகள் நோர்வேயில் தரையிறங்கியது. யுத்தத்தில் போராட முடியாது யூனில் மீண்டும் வெளியேறியது. நோர்வே மக்களின் துரோகியாகிய குவீஸ்லிங்கின் ''ஐந்தாவது படை'' உதவியுடன் 2 மாதங்களின் பின்னர் முற்றாக நோர்வேயை ஜெர்மனி கைப்பற்றிக் கொண்டது. இதன் மூலம் டென்மார்க், நோர்வேயின் பொருளாதாரங்களைப் பயன்படுத்தியதுடன், சுவீடனின் இரும்புத் தாதுவை பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.

 

பிரான்சு நாட்டுக்கு எதிரான ஜெர்மனியத் தாக்குதலுக்கு தயாரான நிலையில் இரு நாடுகளின் படைகளின் பலம்.

நாடுகள்.

டிவிஷன்.

விமானம்.

டாங்கிகள்.

பீரங்கிகள்.

ஜெர்மன்.

136.

3824.

2580.

7375.

பிரா, பிரிட்

147.

3800.

3100.

14500.

 

இப் படைப்பலத்தின் பின்னனியில் கூட பிரான்ஸ் தோல்வி பெற்றது. இதையொட்டி அந்த இராணுவ நடவடிக்கையில் பங்கு கொண்ட பிரான்சு ஜென்ரல் காம்பியேஸ் கூறுவதைப் பார்ப்போம்:

 

''1940ம் ஆண்டு பிரான்சின் தோல்வி ஒரு அசாதாரணமான சம்பவமாகும். பொதுவான சக்திகள் சமன் நிலையைப் பார்த்தால் டாங்கிகள், பீரங்கிகளைப் பொறுத்த மட்டில் பிரான்ஸ்-பிரிட்டீஷ் படைக்கு மேம்பாடு இருந்தது என்பது நமக்கு இப்போது தெரியும். விமானப் படையில் இவற்றின் பலவீனம் இவ்வளவு விரைவான தோல்வியை முன்கூட்டியே கூறுமளவிற்கு அவ்வளவு அதிகமாக இல்லை.''

- இரண்டாவது உலக யுத்தத்தின் வரலாறு.-

 

இத் தோல்விக்கு முக்கிய காரணம் முதலாவது உலக யுத்தப் பாணியில் ஜெர்மனி அதே திசையில் தாக்கும் என எதிர்பார்த்திருந்ததே. இந்தவகையில் அவ் எல்லைகளில் படைகளை குவித்தும் இருந்தனர். ஆனால் ஜெர்மனி அதிக நெருக்கமான காடுகள், சகதிகள் கொண்ட வழிகளின் ஊடாக பிரான்சுள் புகுந்தது. ஜெர்மனி வருமென எதிர்பார்த்திருந்த இடங்களில் ஹாலந்து இராணுவத்தின் 11 டிவிஷன்களும், 124 விமானமும், பெல்ஜிய இராணுவத்தின் 23 டிவிஷன்களும், 410 விமானங்களும் நிறுத்தப்பட்டு இருந்தது.

 

மே 10.ம் நாள் ஹிட்லரின் அறைகூவல் வாசிக்கப்பட்டது. இதில் பிரிட்டீஷ், பிரான்ஸ் ஆகியவை துரோகக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டியது. ''இன்று துவங்கும் சமர் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஜெர்மன் இனத்தின் விதியை நிர்ணயிக்கும்.'' என அறிவிக்கப்பட்டது.

 

1940 மே 10.ம் திகதி காலை 5.30க்கு 2000 பாஸிச விமானங்கள் 70 பிரான்ஸ், பெல்ஜிய, ஹாலந்து விமானத்தளத்தின் மீது குண்டுகளைப் பொழிந்தது. 1940 மே 12ம் திகதி தொடர்ச்சியான தாக்குதலின் பின்னர் மே 12.ல் ஹாலந்து சரணடைந்தது. இதன் அரசாங்கம் இலண்டனுக்குத் தப்பி ஓடியது.

 

பெல்ஜியம், பிரான்சின் பல பகுதிகளை ஊடுருவிய ஐர்மனிய இராணுவம் நேசநாடுகளின் படைகளை இரண்டாகப் பிரித்து கரையோரமாகத் தள்ளிச் சென்றது. இத்தாக்குதலை ஒட்டி ஹிட்லரின் பீல்ட்மார்ஷல் ரோம்மல் கூறுவதைப் பார்ப்போம்

 

''1940ஆம் ஆண்டு பிரான்ஸில் எங்களுடைய 10 கவச டாங்கி டிவிஷன்கள் தாக்குதலை முடித்தன. பிரிட்டீஷ்-பிரஞ்ச் படைத் தலையின் செயலின்மை இந்த வெற்றியை இலகுவாக்கியது.''

 

மே 20ல் பிரான்ஸ் நிபந்தனை அற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சரணடைந்தது. அத்துடன் தப்பியோடும் படலம் ஆரம்பித்தது. ஆங்கிலேயர் 3,38,000 போர்வீரர்களை பிரிட்டனுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றனர். இதில் ஆங்கிலேயர் 2,15,000பேர், பிரன்சுக்காரர் 1,23,000 பேர் ஆகும். ஜெர்மனி 40,000 பேரை சிறைபிடித்தது.

 

பிரிட்டீஷ் தரப்பில் 68,000 பேர் கொல்லப்பட்னர். இந்த நடவடிக்கையில் பங்கு கொண்ட 224 பிரிட்டீஷ் கப்பல்கள், 6 நாசகாரிக் கப்பல்கள், மூழ்கடிக்கப்பட்டன. ஜெர்மனி 140 விமானத்தை இழந்தது. பிரன்சுக் கரையில் பெருமளவு போர்த் தளவாடங்களை கைவிட்டே பிரிட்டீஷ், பிரான்ஸ் தப்பி ஓடினர்.

 

படைகள் சேதமின்றி வெளியேற அரசியல் காரணமே பிரதான பங்கு வகித்தது. தப்பி ஓடுபவர்கள் மீது தாக்குதலை நடத்த வேண்டாம் என்று ''நின்றுவிடும் கட்டளையை'' போட்டது என்பது, பிரான்ஸ் முறியடித்தது என்பது, பிரிட்டனை நிபந்தனை இன்றி ஒப்பந்தத்தைச் செய்ய ஹிட்லர் விரும்பினான். இதையொட்டி ஜெர்மனிய கால்டர் தனது நாட்குறிப்பில் எழுதியதாவது:

 

''...........பிரதான எதிரி........... எங்களுக்கு-பிரான்ஸ் உலகின் செல்வாக்கு மண்டலங்களை பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில் நாங்கள் பிரிட்டனுடன் உடன்படிக்கையைத் தேடுகின்றோம்.''

- கால்டர் யுத்த நாட்குறிப்பு, தொகுதி 1.

 

ஆக்கிரமிப்புக்கு வசதிசெய்யும் வகையில் 1933 மார்ச் 27ல் சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேறியது. பின் 1934ல் கடற்படை ஆயுதந்தரித்தலைப் பற்றிய வாஷிங்டன் மகாநாடு(1921-1922) உடன்படிக்கையை நிராகரித்தது. 1936 கார்த்திகை 25ல் கம்யூனிச அகில எதிர்ப்பு உடன்படிக்கையை செய்து கொண்டது. 1940 கார்த்திகை 27ம் திகதி ஜெர்மனி-- இத்தாலியுடன் முத்தரப்பு உடன்படிக்கையை செய்து கொண்டது. ஜப்பானிய யுத்தத் தயாரிப்புக்கள் நிகழ்ந்தபோது இவ்மேற்கு நாடுகள் அதை சோவியத்தின் பால் திருப்பவும் அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து ஊக்குவித்தன. யுத்த குற்றவாளிகளில் இவ் மேற்கு நாடுகளின் பங்கு கணிசமானது என்பதை நடைபெற்ற நிகழ்ச்சிகள் புள்ளி விபரங்கள் நிருபிக்கின்றன. மூனில் சதியை தொடர்ந்து சோவியத் செக்கோஸ்செலவாக்கியாவிற்கு உதவும் வகையில் 76 துப்பாக்கிக் கடை, மற்றும் குதிரை டிவிசன்களும் 3 டாங்கி கோர்பஸ்களும் 22 தனி டாங்கி பிரிகேட்டுகளும் 12 விமான பிரிகேடுகளும் தயாராக வைத்திருந்தன. இருந்த போதும் செக்கோஸ்செலவாக்கியா இதை ஏற்றுக்கொள்ள மறுக்குமாறு பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை நிர்ப்பந்தித்து ஜெர்மனி ஆக்கிரமிக்க வழி அமைத்தன. 1936-39களில் ஸ்பெயின் மக்கள் நடத்திய தேசிய புரட்சியில் 3000க்கும் மேற்பட்ட சோவியத்தின் பல்வேறு வீரர்கள் இணைந்து நின்று போராடினர். இதில் பாசிச சக்திகளுக்கு ஏதிராகவும், ஜெர்மனி, இத்தாலி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடிப் பெரும்புகழ் பெற்றனர். 1939ல் மங்கேலியாவினுள் ஜப்பான் நுழைந்தபோது சோவியத்படைகள் உதவிக்கு வந்து ஜப்பானைத் தோற்கடித்து மங்கேலியாவைக் காப்பாற்றினர். 1937ல் சோவியத்---சீனா பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அத்துடன் சீனா மீதான ஜப்பானிய தாக்குதலின் போது அதாவது 1937 முதல்1941 வரை தேசியவிடுதலைக்கு உதவும் வகையில் 940 பீரங்கிகளையும் 100 டாங்கிகளையும் 885 விமானங்களையும் மற்றும் சில ஆயிரம் துப்பாக்கிகளையும், 4000ற்கு மேற்பட்ட சோவியத் ஆலோசனைகளையும் வழங்கியது. சோவியத் விமானிகள் சீனாப்பரப்பில் ஜப்பானிய 100 விமானங்களைச் சுட்டு விழ்த்தினர். பாசிசத்தை எதிர் கொள்ள சோவியத் 1939 ஏப்பிரல் 27ல் கூட்டு உடன்பாட்டுக்கு பிரிட்டீஸ், பிரான்ஸ்சுக்கு அழைப்புவிட்டனர். அதற்கான ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்தனர். இந்த நோக்கோடு 1939 ஆவணி மாதம் பிரிட்டீஸ் பிரான்ஸ், சோவியத் என்பன சோவியத் யூனியனில் பேச்சுக்களை நடத்தினர். இதை எதிர்கொள்ள சோவியத் தரப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பரவலான அதிகாரம் இருந்ததுடன், யுத்தத்தைத் தடுக்க 136 காலாட்படை,மற்றும் குதிரை டிவிசன்களையும் 5.000 கனரக பீரங்கிகளையும், 10 ஆயிரம் டாங்கிகளையும், 5.500போர் விமானங்களையும் வழங்கத் தயாராகவிருந்தது. இவ்வளவும் இருந்தும் பிரிட்டீஸ் தூதுக்குழுவிற்கு கையொப்பமிடும் அதிகாரம் இருக்கவில்லை. இது அடிப்படையில் சோவியத் பால் கொண்ட வெறுப்பில் பாசிசத்தை ஆதரிப்பதில் போய் நின்றது. இது குறித்து பிரிட்டீஸ் அரசியல்வாதியான டே. லாயிட் ஜார்ஜ் கேலியாகக் கூறியதைப் பார்ப்போம். கிட்லருடன் கொஞ்சிக்குலாவ சேர்ம்பர்லோன் மூன்று முறை தொடர்ந்தாற் போல் சென்றார். முசோலினியைக் கட்டித்தழுவவும் அபிஸ்ஸீனியாவைக் கைப்பற்றியதற்க்காக எமது அதிகாரபூர்வமான அங்கீகார வடிவில் பரிசளிக்கவும் அவர் ஸ்பெயினில் தலையிடுவதற்கும் நாங்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கமாட்டோம் என்று சொல்லவும் சோம்பர்லோன் விசேஷமாக ரோமிற்கு சென்றார். தனது உதிவியை நமக்கு முன்மொழியும் அதிக வல்லமை வாய்ந்த ஒரு நாட்டிற்கு நம்மை பிரதிநிதித்துவவப்படுத்த அந்நிய அமைச்சரகத்திலிருந்து அதிகாரியை அனுப்பினார்கள் என்று ஏன் கூறவேண்டும்? இதற்கு ஒரே ஒரு விடை மட்டுமே இருக்க முடியும் கணவான் நேவில் சோம்பர்லோன், லார்ட் ஹாலிபாக்ஸ் மற்றும் சர் சைமன் ஆகியோருக்கு ரஷ்யாவுடன் கூட்டுச்சேர விருப்பமில்லை

---w.coates . z coates. A History of Angio- soviet relations. 1945 p614

 

இந்த வகையில் சோவியததி்ன் பாலான எதிர்ப்பும், பின் சோவியத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பின்னர்கூட இரண்டாவது போர்முனையைத் தொடங்கும் வரை3 வருடங்களாக இருந்து அடித்து 1944ல் சோவியத்தின் முன்னேறிய வெற்றியுடன் போட்டியிடவே படைகளை இறக்க நிர்பந்திக்கப்பட்டனர். சோவியத்யூனினுடன் அதிகாரம் இல்லாதவர்கள் பேசிக்கொண்டிருந்த அதேநேரம் பிரிடீஸ் அரசாங்கம் ஜெர்மனியுடன் இரகிசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இப் பேச்சுவார்த்தை ஊடாக உலகை சமாதானமாக பங்கு போட்டு கொள்ளவும் போலந்தில் தலையிடமாட்டோம் என ஒப்புக்கொண்டும் சோவியத்தை எப்படிபங்குபோடுவது என்ற சமாச்சராங்களே பேச்சுவார்த்தையின் சாரமாக இருந்தது. இதேநேரம் பிரிட்டீஸ்,பிரான்ஸ்,சோவியத் பேச்சுவார்த்தையை குலைத்ததன் மூலம் பாசிச 2ம் உலகயுத்தத்தை தடுக்கும் கடைசி சந்தர்ப்பம் இழக்கப்பட்டது. இதுதொடர்பாக பிரிட்டீஸ் இராணுவ வரலாற்றாசிரியர் லிடல் பார்ட் குறிப்பிடுவதைப் பார்ப்போம். போலந்துக்கு நரடி உதவி அளிக்க ஒரே ஒரு வல்லரசாகிய ருசியாவில் ஆதரவைப் பெறுவதுதான் யுத்தத்தை தவிர்ப்பதற்கான ஒரே வாய்ப்பாக இருந்தது. -லிடல் கார்ட்

 

-இரண்டாவது உலக யுத்தம்-இக்காலத்தில் சோவியத் ஜப்பானுக்கு எதிரான யுத்ததில் மங்கோலியப் படையுடன் இணைந்து பேரிரல் இறங்கியிருந்தது. சோவியத்ற்கு எதிரான சிலுவைப் போரை நடத்த ஜெர்மனி தயாரன நிலையில் இதை முறியடிக்கும் வழிவகைகளை சோவியத் தேடியது. பாசிசத்துக்கு எதிரான மேற்கு நாடுகளின் கூட்டு சாத்தியமற்ற நிலைமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் முன்மொழியாக வந்த பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும்படி சோவியத்தை நிர்பந்தித்தது. 1939 ஆவணி 23திகதி இவ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் சோவியத் மீதான ஜெர்மனியின் தாக்குதலை ஊககப்படுத்திய ஏகாதிபத்தியங்கிளின் திட்டம் தவுடுபோடியாகியது. தொடர்ச்சியாக 1941 சித்திரையில் ஜப்பானுடன் நடுநிலை பற்றி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. இதன் தொடர்ச்சியாக 1939முதல் 1941 வரை யுத்தம் எதிலும் சோவியத் பங்கு கொள்ளவில்லை. சோவியத் யூனியன் மீது திட்டமிட்டபடி சிலுவைப்போருக்கு பதில் கிட்டலர் தனது படைகளை பிரிட்டீஸ்,பிரான்சுக்கு எதிராக அனுப்பினார். இதையோட்டி பிரபல பிரஞ்சு அரசியற் பிரமுகர் ஏரியோ சரியாகக் குறிப்பிட்டது எனனவெனில் பாசிச ஜெர்மனி,தனது கழுத்துக்கயிறை அறுத்தது, எஜமானனையே கடித்த நாயைப்போலிருந்தது என்றார்.

 

பாசிச ஜெர்மனி 1939 பங்குனி 12ல் பாலந்துக்கு ஒரு காலக்கொடுவை கொடுத்து டான் ட்ஸிங்கை (கிதான்ஸ்க்) தடுமாறும் போலந்தில் இடைவழியில் சாலை, இரும்புப்பாதை அமைக்கும் உரிமையை கோரினர். 1939 சித்திரை 3ம் திகதி போலந்தின் மீது தாக்குதலைத் தொடுக்க தயாரிப்பில் இறக்கியது. இத் தாக்குதல் நடவடிக்கை வெள்ளைத் திட்டம் என அழைக்கப்பட்டது. 11ம் திகதி யுத்தத்துக்கு தயாராகும் கட்டளையில் கிட்லர் கையெழுத்து இட்டான். 1934இல் போலந்துடன் ஏற்பட்ட உடன்பாட்டை சித்திரை 28ல் முறித்துக்கொண்டது ஜெர்மனி. இத்தாக்குதலுக்கு முன் படைகளின் பலம்.

 

நாடுகள்

டிவிசன்கள்

பீரங்கிகள்

விமானங்கள்

படைகள்

டாங்கிகள்

கடற்படை

ஜெர்மனி

62

6.000

2.000

16.00.000

2.800

7நீர்மூழ்கி 2 போர்கப்பல்

போலந்து

39

40300

8.00

10.00.000

8.70

5 நீர்மூழ்கி மற்றும்...

 

1939 புரட்டாதி 1ம் திகதி ஜெர்மனி போலந்தின் மீது தாக்குதலைத் தொடுத்தது. இது தொடங்கிய அன்று பிரிட்டீஸ்-பிரான்ஸ் 1920களில் செய்து கொண்ட வெர்சேய் ஒப்பந்தத்தை திருத்துவது என்று பேரத்தில் இறங்கினர். இது தோல்வி பெற்றது. அப்போது கிட்லர் தனது நெருங்கியவர்கள் மத்தியில் பிரிட்டீஸ் பிரதமர் பற்றி கூறியதைப் பார்ப்போம். குடையேந்திய இந்த மனிதன் மட்டும் என்னிடம் பெர்ஹ்டேல் பாடனுக்கு வருவதாக இருக்கட்டும் பாலால் அவனைப் பின்புறம் உதைத்து மாடிப்படியில் உருட்டிவிடுவேன். இவ்வாறு நான் செய்யும் போது இதை ஏராளமான பத்திரிகையாளர்கள் இருந்து பார்க்கும்படி கவுனித்துக் கொள்கிறேன்.        இரண்டாவது உலக யுத்தத்தின் வரலாறு தொகுதி 3

 

1ம் திகதி போலந்து யுத்ததை ஆரம்பிக்கமுன்பு ஆவணி 31 திகதி ஒரு நாடகம் நடத்தப்பட்டது. இதற்க்கு, என ஜெர்மனியர் போலந்து உடையில் ஜெர்மன் நகரமாகிய கிலேய்விட்ஸில் உள்ள வானேலியி நிலையத்தில் புகுந்து மைக்கு முன்னால் சில குண்டுகளை வீசி போலந்து மொழியில் முன்பே தாயாரித்திருந்த வாசகத்தை வாசித்து யுத்தத்தை நடத்த ஜெர்மனிய மக்களை தயார்படுத்தினர். இது தொடர்பாக முன்பே எப்படீ யுத்தத்தைத் தொடங்குவது என்பதை ஒட்டி கிட்லர் கூறியதைப்பார்போம். யுத்தத்தை மூட்டி விடுவதறக்கான பிரச்சார சாக்கை நான் தடுக்கிறேன். இது உண்மையானதாயிருக்குமா என்பது முக்கியமல்ல. வென்றவனை கின்னால் ,அவன் கூறியது உண்மையா இல்லையா என்று கேட்க்கப் போவதில்லை. கிட்டலர்-ழூ--

ஜ-எம்--டி ஆவணம் 1014--பி-பிபி. 523--524. 1939 ஆவணி 22,உயர் ஜெனரல்களின் முன் கிட்லரின் இரண்டாவது உரை-

 

புரட்டாதி 3ம் திகதி பிரான்ஸ்,பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தை அறிவித்தது. ஆனால் தீவிர தாக்குதலில் இறங்கவில்லை. புரட்டாதி 9ம்நாள் பிரான்ஸ் இராணுவம் சவாரில் தொடங்கிய குறுகிய நோக்கிலான தாக்குதல் 12ம் திகதி நிறுத்தியது. இதன் ஊடாக பிரான்ஸ்,பிரிட்டனும் தனது கூட்டாளியான போலந்துக்கு துரோகமிழைத்தது. ஜெர்மனிய-பிரான்ஸ் எல்லையில் பிரானஸின் படை வலம்வாய்ந்ததாக இருந்தது.ஜெர்மனிய பலத்தை எல்லாவிதத்திலும் விஞ்சிநின்றது. இதை ஒட்டி ஜெர்மனிய தளபதிகள் கலக்கம் அடைந்திருந்தனர். போலந்துத் தாக்குதலில் போது பிரான்ஸ் தாக்காது இருக்க வேண்டுமென விரும்பினர். இதையொட்டி ஜெர்மனிய ஜெனரல்கள் கூறியதைப் பார்ப்போம்.

 

பிரான்ஸ்,பிரிட்டனும் மட்டும் தாக்குதலைத் தொடுத்திருந்தால் எங்களால் முற்றிலும் கற்பனையான தற்காப்பைத்தான் வைத்திருக்க முடியும்.

பீல்டமார்ஷல் ஜெனரல் வெகைடல்-

நியூ ரென்பார் விசாரனை தொகுதி,1-

 

இதையொட்டி மற்றுமெர்ரு ஜெனரல் கூறினார் 1939 ஆண்டிலே நாங்கள் தோல்வியடையவில்லை என்றால் அதற்கக் காரணம், போலந்துடன் நாங்கள் யுத்தத்தில் நாங்கள் இறங்கியிருந்த போது மேற்கே 23 ஜெர்மன் டிவிஷன்களுக்கு எதிராக நின்ற சுமார் 110 பிரன்சு மற்றும் பிரிட்டீஸ் 4 டிவிஷன்கள் முற்றிலுமாக பிரன்சு மற்றும் பிரிட்டீஷ் 4 டிவிஷன்கள் முற்றிலுமாக செயலற்று இருந்தது.

ஜெனரல் யோடல்--நியூ ரென்பார் விசாரனை தொகுதி.1-

 

1939ல் ஜெர்மன் தோற்கடிக்கப்பட்டு 6 கோடி மக்கள் உயிரையும், பலகோடி பெறுமதியான சொத்தக்க்களைப் பாதுகாத்து இருக்க முடியும். ஆனால் பிரான்ஸ். பிரிட்டன் சோவியத் மீதான தாக்குதலை மையமாகக் கொண்டு ஜெர்மனியை எல்லா விதத்திலும் வளர்க்க பாடுபட்டனர்! இதையொட்டி பிரன்சு ஆசிரியர் கூறுவதைப் பார்ப்போம்:

 

நமது லோரைன் சேனையின் முழுச் செயலின்மைக்கான காரணத்தை அரசியல் நிலைகளில்தான் தேடவேண்டும் போப்ரின்

----A Beanfre drame de 1940 paris 1965 p206

 

போலந்து தலைநகர் மீதான தாக்குதலில் 2ஆயிரம் போர் வீரர்கள் இறந்தனர். 16.000பேர் காயமடைந்தனர். ஜப்பசி 2வரை நீடித்த இவ் யுத்தத்தில் மொத்தமாக 66.300 போலந்து வீரர்கள் இறந்தனா. 1.33.700 பேர் காயமடைநதனர். 4.20.000 சிறை பிடிக்கப்பட்டனர். ஜெர்மனிய தரப்பில் 10.6000பேர் இறந்தனர். 30.300 பேர் காயமடைந்தனர். 3.400 பேர் தொலைந்து போனார்கள்.

 

ஜெர்மனிய முன்னேற்றம் சோவியத் எல்லைகளை நாக்கி சென்றபோது சோவியத் 1939 புரட்டாதி 17ம் திகதி மேற்கு உக்கிரேன், மேற்கு பெலோ ரஷ்சியாவுக்குள் விடுதலைப்பிரயாணத்தை மேற்கொண்டு கிழக்கு நோககிய ஜெர்மனிய படைகளைத் தடுத்தனர். 1940 சித்திரையில் 9ம்நாள் யுத்த அறிவிப்பு இன்றி டென்மார்க் நாட்டினுள் நுழைந்தது. இதே நாள் நோர்வேயில் ஜெர்மானிய படைகள் இறங்கின. பலமுக்கிய இராணு இலக்குகளை கைப்பற்றி கொண்டது. சித்திரை நடுவில் பிரிட்டீஸ், பிரான்ஸ் படைகள் நோர்வேயில் தரையிறங்கியது. யுத்தத்தில் போராடமுடியாது ஆனியில் மீண்டும் வெளியேறியது. நோர்வே மக்களின் துரோகியான குவிஸ்லிங்கின் ஜந்தாவது படை உதவியுடன் 2மாதங்களின் பின்னர் முற்றாக நோர்வேயை ஜெர்மனி கைப்பற்றிக் கொண்டது. இதன் மூலம் டென்மார்க் நோர்வேயின் பொருளாதாரங்களைப் பய் படுதியதுடன்.சுவீடனின் இருன்புத் தாதுவை பயன்படுத்தும் வாயப்பைப் பயன்படுத்தும் வாயப்பை பெற்றுக் கொண்டுவிட்டது பிரஞ்சு நாட்டுக்கு எதிரான ஜெர்மனியத தாக்குதலுக்கு தயாரான நிலையில் இரு நாடுகளின் படைப்பலம்.

 

நாடுகள்

டிவிசன்

விமானம்

டாங்கிகள்

பீரங்கிகள்

;ஜெர்மன்

136

3.824

2.580

7.375

பிரா-பிரிட்டன்

147

3.800

3.100

14.500

 

இப் படைப்பலத்தின் பின்னணியில் கூட பிரான்ஸ் தோல்வி பெற்றது. இதையொட்டி அந்த இராணுவ நடவடிக்கையில் பங்கு கொண்ட பிரான்சு ஜெனரல் காம்பியஸ் கூறுவதை அடுத்த இதழில் பார்ப்போம்.

 

''1940ம் ஆண்டு பிரான்சின் தோல்வி ஒரு அசாதரணமான சம்பவமாகும். பொதுவான சக்திகள் சமன் நிலையைப் பார்த்தால் டாங்கிகள், பீரங்கிகளைப் பொறுத்த மட்டில் பிரான்ஸ்-பிரிட்டீஷ் படைக்கு மேம்பாடு இருந்தது என்பது நமக்கு இப்போது தெரியும். விமானப் படையில் இவற்றின் பலவீனம் இவ்வளவு விரைவான தோல்வியை முன்கூட்டியே கூறுமளவிற்கு அவ்வளவு அதிகமாக இல்லை.''

- இரண்டாவது உலக யுத்தத்தின் வரலாறு.-

 

இத் தோல்விக்கு முக்கிய காரணம் முதலாவது உலக யுத்தப் பாணியில் ஜெர்மனி அதே திசையில் தாக்கும் என எதிர்பார்த்திருந் ததே. இந்தவகையில் அவ் எல்லைகளில் படைகளை குவித்தும் இருநஇதனர். ஆனால் ஜெர்மனி திக நெருக்கமான காடுகள், சகதிகள் கொண்ட வழிகளின் ஊடாக பிரான்சுள் புகுந்தது. ஜெர்மனி வருமென எதிர்பார்த்திருந்த இடங்களில் ஹாலந்து இராணுவத்தின் 11 டிவிஷன்களும், 124 விமானமும், பெல்ஜிய இராணுவத்தின் 23 டிவிஷன்களும், 410 விமானங்களும் நிறுத்தப்பட்டு இருந்தது.

 

மே 10.ம் நாள் ஹிட்லரின் அறைகூவல் வாசிக்கப்பட்டது. இதில் பிரிட்டீஷ், பிரான்ஸ் ஆகியவை துரோகக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டியது. ''இன்று துவங்கும் சமர் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஜெர்மன் இனத்தின் விதியை நிர்ணயிக்கும்.'' என அறிவிக்கப்பட்டது.

 

1940 மே 10.ம் திகதி காலை 5.30க்கு 2000 பாஸிச விமானங்கள் 70 பிரான்ஸ், பொல்ஜிய, ஹாலந்து விமானத்தளத்தின் மீது குண்டுகளைப் பொழிந்தது. 1940 மே 12ம் திகதி தொடர்ச்சியான தாக்குதலின் பின்னர் மே 12.ல் ஹாலந்து சரணடைந்தது. இதன் அரசாங்கம் லண்டனுக்குத் தப்பி ஓடியது.

 

பெல்ஜியம், பிரன்சின் பல பகுதிகளை ஊடுருவிய nஐர்மனிய இராணுவம் நேசநாடுகளின் படைகளை இரண்டாகப் பிரித்து கரையோரமாகத் தள்ளிச் சென்றது. இத்தாக்குதலை ஒட்டி ஹிட்லரின் பீல்ட்மார்ஷல் ரோம்மல் கூறுவதைப் பார்ப்போம்

 

''1940ஆம் ஆண்டு பிரான்ஸில் எங்களுடைய 10 கவச டாங்கி டிவிஷன்கள் தாக்குதலை முடித்தன. பிரிட்டீஷ்-பிரஞ்ச் படைத் தலையின் செயலின்மை இந்த வெற்றியை இலகுவாக்கியது.''

 

மே 20ல் பிரான்ஸ் நிபந்தனை அற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சரணடைந்தது. அத்துடன் தப்பியோடும் படலம் ஆரம்பித்தது. ஆங்கிலேயர் 3,38,000 போர்வீரர்களை பிரிட்டனுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றனர். இதில் ஆங்கிலேயர் 2,15,000பேர், பிரன்சுக்காரர் 1,23,000 பேர் ஆகும். ஜெர்மனி 40,000 பேரை சிறைபிடித்தது.

 

பிரிட்டீஷ் தரப்பில் 68,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையில் பங்கு கொண்ட 224 பிரிட்டீஷ் கப்பல்கள், 6 நாசகாரிக் கப்பல்கள், மூழ்கடிக்கப்பட்டன. ஜெர்மனி 140 விமானத்தை இழந்தது. பிரன்சுக் கரையில் பெருமளவு போர்த் தளவாடங்களை கைவிட்டே பிரிட்டீஷ், பிரான்ஸ் தப்பி ஓடினர்.

 

படைகள் சேதமின்றி வெளியேற அரசியல் காரணமே பிரதான பங்கு வகித்தது. தப்பி ஓடுபவர்கள் மீது தாக்குதலை நடத்த வேண்டாம் என்று ''நின்றுவிடும் கட்டளையை'' போட்டது என்பது, பிரான்ஸ் முறியடித்தது என்பது, பிரிட்டனை நிபந்தனை இன்றி ஒப்பந்தத்தைச் செய்ய ஹிட்லர் விரும்பினான். இதையொட்டி ஜெர்மனிய கால்டர் தனது நாட்குறிப்பில் எழுதியதாவது:

 

''...........பிரதான எதிரி........... எங்களுக்கு-பிரான்ஸ் உலகின் செல்வாக்கு மண்டலங்களை பகிர்ந்துகொள்வதன் அடிப் படையில் றாங்கள் பிரிட்டனுடன் உடன்படிக்கையைத் தேடுகின்றேம்.''

- கால்டர் யுத்த நாட்குறிப்பு, தொகுதி 1. -

 

பிரான்ஸ்சு மீதான தாக்குதலில் பல இடங்களில் மக்களும் இணைந்து போர்வீரர்கள் தீரத்துடன் போராடினர். இருந்தபோதும் உயர்மட்டத் தலைமையின் துரோகமும், படைத்தலைமையின் செயலின்மையும், தோல்வியில் இட்டுச் சென்றது.

 

யூன் 14ம் திகதி எந்தவித எதிர்ப்பும் இன்றி ஜெர்மன் இராணுவம் பாரிஸைக் கைப்பற்றியது. இந்த நிகழ்வு பிரான்சு மக்களின் துரோகிகளான அரசியற் பிரமுகர்களின் சூழ்ச்சியில் நிகழ்ந்தேறியது. கம்யூனிஸட் கட்சி பாரிஸைக் காப்பாற்ற அழைப்பு விட்டிருந்த நிலையில், பிரன்சுத் துரோகிகள் கம்யூனிஸ்ட் தலைமையில் போராட்டம் நடைபெற்றால், கம்யூனிஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்குமெனக் கருதி, படையில் கம்யூனிஸ்ட் சார்பு தலைமைகளை மாற்றி அமைத்ததுடன், பாரிசைவிட்டு தூருக்கு ஓடினர். பாரிஸில் இருந்த சனத்தொகையில் 3 இல் 4 பங்கு வெளியேறியது.

 

1940 யூன் 10.ம் திகதி பிரிட்டீஷ் பிரான்சுக்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடனம் செய்தது. இது பிரான்ஸ் யுத்தத்தில் பங்கு கொள்ளவும், இதனூடாக தோல்வியடையும் பிரான்சில் பங்குகளைக் கேட்டு பேரம்பேசவும் யுத்தம் அவசியமாக இத்தாலிக்கு இருந்தது. இதையொட்டி முஸ்ஸோலீனி கூறியதைப்பார்ப்போம்.

 

''யுத்தத்தில் பங்கேற்றவன் என்ற வகையில் சமாதான மாநாட்டு மேசையில் உட்கார எனக்கு ஒருசில ஆயிரம் இறந்தவர்கள் மட்டும் போதும்.''

-H. A zeau, La guerre fraco-italiana. Juine 1940, Paris, 1967,p.41.-

 

1ம் யுத்தத்தில் ஜெர்மன் தோல்வி அடைந்தபோது 1918 நவம்பர் 11.ம் திகதி புகைவண்டிப் பெட்டியில் கப்பியேன் காட்டில் காய்ஸர் ஜெர்மனியின் சரணாகதியை ஏற்றாரோ அதே பெட்டியில் பிரான்சு பெட்டேன் அரசாங்கம் சரணாகதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தத்தின் இரண்டாம் நாள் இத்தாலியுடன் பிரான்சு உடன்படிக்கை செய்தது. இதன்மூலம் 832 ச.கி.மீற்றரை இத்தாலி தனதாக்கியது.

 

இதே நேரம் லண்டனில் டெகோலின் தலைமையில் 'சுதந்திர பிரான்ஸ்' எனும் தேசபக்த எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. 1941 மே முதல் பிரன்சுக் கம்யூனிஸ்ட் கட்சி கெரில்லாக் குழுக்களை உருவாக்கியது. பிரான்சு மீதான தாக்குதலில் 84 ஆயிரம் பிரான்சு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 15 லட்சத்து 47ஆயிரம் பேர் சிறை பிடிக்கப்பட்டனர். ஜெர்மனிய தரப்பில் 45 ஆயிரத்து 500 பேர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

 

1940 மே 10.ம் திகதி சேம்பர்லேனின் அரசாங்கத்தின் வீழச்சியுடன் சர்ச்சிலின் அரசாங்கம் பதவியை ஏற்றது. 1940 யூலை 16.ம் திகதி ஹிட்லர் கிரேட் பிரிட்டன் மீது தாக்குதலைத் தொடுக்கும் கட்டளையில் கையெழுத்திட்டான். இது கடல் சிங்கம் எனப் புனைப் பெயர் பெற்றது. 1940 ஓகஸ்ட் நடுப்பகுதியில் பிரிட்டன் மீது தொடங்கிய பரந்தளவு தாக்குதல் 1941 மே 11.வரை நீடித்தது. பிரிட்டன் மீதான தாக்குதலை தொடங்கத் திட்டமிட்ட ஹிட்லர் பின் சோவியத் மீதான தாக்குதலை முதன்மைப்படுத்தியதால் பிரிட்டன் மீதான படையெடுப்பைக் கைவிட்டான்.

 

1940 பேர்லின் உடன்படிக்கையின் ஊடாக இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி கூட்டு உடன்பாட்டை உருவாக்கின. பிரிட்டன் மீது 1940 ஓகஸ்ட் 13.முதல் செப்ரம்பர் 6 வரை ஹிட்லர் ஆதிக்கத்தைப் பெற விமானத்தளங்கள் மீது தாக்க முயன்றது. நாளொன்றுக்கு 1000 முதல் 1800 விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

1940 செப்ரம்பர் 7. முதல் நவம்பர் 13. வரை பிரிட்டீஸ் மக்களை அச்சுறுத்தும் வகையில் நகரங்களைத் தரைமட்டமாக்க முனைந்தது. இதில் காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைக்கும் 300 டண் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர்.


பி.இரயாகரன் - சமர்