கொலைகார ரசிகர்களுக்கு என்று ஒரு இனம் உண்டு என்றால், அது தமிழ் இனம் தான். கொலைகள் ரசிக்கப்படுகின்றது. விதவிதமாக வக்கிரமாக கொல்லப்படுகின்றனர். அதையும் விதவிதமாகவே ரசிக்கின்றனர். கார்ல் மார்க்ஸ் இந்தியா பற்றிய தனது கட்டுரையில்
''பாதிக் காட்டுமிராண்டிகளின், அரைகுறை நாகரீக சிறிய குழுக்களின் நாடு" என்றார். மேலும் அவர்
''மிகச்சிறிய அறிதல் சூழலுக்குள் அகப்பட்டு எல்லாவித மூட நம்பிக்கைகளுக்குமான கருவியாக சுழல்கிறது"என்றார்.
தொடர்ந்து கூறும் போது
"தரமற்ற, தேக்க நிலையடைய தாவரத் தரம் கொண்டது" என்றார்
அத்துடன்
"இயற்கையின் பேரதிபனான மனிதன் காட்டுமிராண்டித்தனமான இயற்கை வழிபாட்டின் விளைவாக எந்த அளவு தாழ்ந்துவிட்டானென்றால் அனுமான் என்கிற குரங்கிற்கும், சப்பாலா என்கிற பசுவுக்கும் முன்னால் மண்டியிடுகிற அளவுக்கு தாழ்ந்துவிட்டான்" என்றார்.
இதுவே இலங்கை வானரங்களுக்கும் பொருந்தும். உலகை அறிவியல் பூர்வமாக பார்க்க மறுக்கும், மனிதனை மனிதனாக பார்க்க மறுக்கும் காட்டுமிராண்டிகளின் வக்கிரத்துக்குள் ஒரு செம்றியாகவே நாம் வாழ கற்றுக்கொள்கின்றோம்.
காட்டுமிராண்டி கொலைகளை இரசிக்கும் காட்டுமிராண்டிகளாகவும் கூட நாம் மாறிவிட்டோம். சினிமா வக்கிரத்துக்கும், தொலைக்காட்சி தொடர் நாடகத்துக்கும் மண்டியிட்டு நுகர்ந்து வக்கரிக்கும் பொம்மைகளாக மட்டுமல்ல, மனித பண்பாட்டுக்கு எதிராகவும், காட்டுமிராண்டித்தனமாக நாம் வாழ்வோம் என்று நிறுவிவருகின்றனர்.
பி இரயாகரன்
27.05.06