சமூகத்தின் வழிகாட்டிய நடித்த ஒருவரால் ஒரு சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்ட நிலையிலும், தமிழ் சமூகம் காட்டும் மௌனங்களே ஒரு பித்தலாட்ட அரசியலாகிவிடகின்றது. இது தமிழ் சமூகத்தின் அனைத்து விடைத்துக்கும் பொருந்துகின்றது.
ஒரு பல்கலைகழக பேராசியர் ஒருவர் ஒரு சிறுமியை பலமுறை கற்பழித்த சம்பவம் ஒன்று, தமிழ் ஊடாகவியலின் அரசியல் சார்பால் திட்டமிட்ட வகையில் பலத்த இருட்டடிப்புக்கு உள்ளாகியுள்ளது. மறுதளத்தில் இது தொடர்பாக பலத்த சாச்சை ஒன்றை தமிழ்மணம் விவாதத் தளங்களில் எழுப்பியுள்ளது.
இந்த சம்பவம் வழமைபோல் புலிசார்பு, புலியெதிர்ப்பு விதண்ட வாதங்களுக்குள் சிக்கிவிட்டது. இதைச் செய்த பேராசியர் புலிகளின் முக்கியமான ஒரு பதவியில் இருந்ததும் முக்கிய காரணமாகியது. புலியெதிர்ப்பு அணியினர் இதைப் புலிக்கு எதிராக கையாள, புலிசார்பு செய்திகள் இதை மூடிமறைக்கும் ஒரு அரசியல் போக்கை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
புலியெதிர்ப்பு அணியினர் இதை புலிகளின் தனித்துவமான சிறப்பான ஒரு புலிப்பண்பாக காட்டி, சமூகத்தில் இதற்கான சமூக இருப்பை மறுத்தளிப்பதில் முனைப்புபெற்றனர். இந்த குற்றம் ஆணாதிக்க சமூக போக்காக இருப்பதையே மறுதளித்தனர். இதன் மூலம் ஆணாதிக்க சமூக அமைப்பை பாதுகாத்தபடி, குற்றத்தை புலிகள் மீது மட்டும் சுமத்துகின்றனர்.
புலிகள் கூட இதை மூடிமறைப்பதன் மூலமும், மௌனம் சாதிப்பதன் மூலமும், இந்த ஆணாதிக்க குற்றத்துக்கு துணை போகின்றனர். பெண் விடுதலையை பேசும் புலிகள் இந்த ஆணாதிக்க குற்றத்தை கருத்தில் எடுத்து, தமது பக்க சுயவிமர்சனத்தை செய்ய மறுக்கின்றனர். இது பலவேறுபட்ட கேள்விகளை எழுப்பிவிடுகின்றது.
நாம் இதை எப்படிப் புரிந்துகொள்வது. ஒரு சமூக விரோத குற்றம் நிகழ்ந்து, இது யாரால் நிகத்தப்பட்டது என்ற விடையம் முழுமையாக வெளிவரமுன்பே இது அம்பலமாகியது. இது யாரென்று முன்னமே தெரிந்து இருந்தால், இது செய்தியாக கூட வந்திருக்காது. இக்குற்றம் மிகவும் பாரதூரமானது. சதாரணமாக பொறுகிகள், லும்பன்கள் செய்வதில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஆணாதிக்க சிந்தனையுடன், யாழ் மேலாதிக்க உணர்வுடன், அதிகார செருக்குடன் மிகவும் திட்டமிட்ட வகையில் நடந்த ஒரு குற்றம். இந்த குற்றம் பலவகையான உள்ளடகத்தைக் கொண்ட காணப்படுவதால், சமூக விசாரனை விரிவானதாக மாறுகின்றது.
1.ஒரு பெண் தொடர்ச்சியாக திட்மிட்ட வகையில் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதிலும் கற்பழிப்புக்கு உள்ளனவர் ஒரு சிறுமி.
2.சிறுவர் சிறுமிகளை வேலைக்கு வைத்திருக்கும் ஒரு சமூகவிரோதக் குற்றம் இங்கு நிகழ்ந்துள்ளது. அந்த குழந்தைகளின் வாழ்வுக்கான சமூகத் தேவைகளை மறுத்து, அடிமையாகவே வசதியனவன் தமக்கு சேவை செய்ய வைக்கும் மனிதவிரோ குற்றம் இங்கு நிகழ்ந்துள்ளது.
3.இந்த குற்றத்தை இழைக்க அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தியே இந்த குற்றம் மிக திட்மிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
4.இக் குற்றவாளி தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டே, தமிழ் மக்களுக்கு எதிரான சமூக விரோதச் செயலை திட்மிட்டே செய்துள்ளான்.
சமூகவிரோத குற்றத்தின் பன்மை வடிவங்கள் இப்படி பலவகைப்பட்டது. மிகவும் கேவலமான ஆணாதிக்க அதிகார கட்டமைப்பில், இந்த வக்கிரம் வரலாற்றில் மீண்டும் ஒரு புள்ளியாகவே பதிவாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஆணாதிக்க அதிகாரவர்க்க ரக்கிங் முதல், இணையத்தளங்களில் ஆணாதிக்க திமிருடன் ஆபாசமாக துற்றுவது வரை, அன்றாடம் நடந்தேறி வரும் தொடரான ஆணாதிக்க செயல்பாட்டில் இருந்தே இந்தக் குற்றங்கள் அரங்கேறுகின்றன. பாலியல் வக்கிரம் நடைமுறை ரீதியான அத்துமீறலாக அன்றாடம் சமூகத்தில் புளுத்துக் கிடக்கின்றது. இதில் சில வகையானவை திட்டமிடப்படாததும் உதிரித்தனமானவையாக உள்ளது. சில மிகவும் திட்மிட்டு செயல்படுத்தப்படுபவவை. அதாவது பணம், அதிகாரம், சமூக மேலான்மை மூலம் மிகவும் நிறுவனப்படுத்தப்பட்ட வகையில் செய்யப்படுபவை. இதுவும் அப்படிப்பட்டவை தான்.
1.சமூகத்தை வழிநடத்தும் ஒரு கல்விசார் பல்கலைகழகத்தின் பேராசியரால் இக்குற்றம் நிகழ்ந்துள்ளது. மாணவர்களை வழிகாட்டும் பொறுப்பான ஒரு கற்பித்தல் என்ற பதவியில் இருந்தபடி, இக் குற்றம் நிகழ்ந்துள்ளது. இது கல்வி கற்பிப்பவர், கற்றவர்கள் பற்றிய ஒரு சமூக விசாரனைக்கு சமூகத்தையே இட்டுச் செல்லுகின்றது.
2.புலிகள் கூறும் அவர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பதவியில்; இருந்தபடி இந்த செயல் நடந்துள்ளது. புலிகளின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் செயல்நெறியை உலகுக்கு அறிவிக்கும் ஒருவராக இருந்தது மட்டுமின்றி, யாழ்குடா நாட்டில் நடந்த பல போராட்டங்களையும் வழிநடத்தியவரால் இது நிகழ்ந்துள்ளது. இராணுவ கற்பழிப்பு, ஆணாதிக்க ராக்கிங்ககு எதிரான பல போராட்டங்கள் உள்ளடங்கும்.
சமூகத்தின் பொறுப்பான இரு முக்கிய பதவிகளில் இருந்தபடி நடந்த இந்த குற்றத்தை, நாம் சமூக நேர்மையுடன் இதை ஆராய தவறுவது அப்பட்டமாக இதற்கு துணைபோவது தான். இது போன்ற குற்றங்கள் ஒரு பேராசியர், ஒரு போராளி என்பவர்களால் சமூகத்தில் நடக்க முடியாது என்பதல்ல. இதை ஒரு போராளி அமைப்பு, ஒரு பல்கலைகழகம் தமது கொள்கையாக கொண்டு உள்ளனர் என்பதுமல்ல.
இதற்கு வெளியில் இந்த குற்றத்தின் ஊற்று மூலத்தில் இந்த சமூக நிறுவனங்களின் பங்கு என்ன என்பதே எமது சமூக விசாரனை கோருகின்றது. சமூகம் ஆணாதிக்க அமைப்பாக, வன்முறை கொண்ட அதிகாரத்துவ நிறுவனமாகவே உள்ளது. அதன் உறுப்பாகவே பல்கலைக்கழகம், புலிகள் உள்ளனர் என்பதால், இக்குற்றத்தின் மீதான சமூகப் பொறுப்பை முழுமையாக எற்றேயாக வேண்டும். இந்த சமூக அமைபிலும் இது போன்ற சம்பவங்கள் உதிரியான சமூக லும்பன் தனத்தில் நிகழும் போது அதன் மீதான எதிர் வினையாற்றல் வேறு. ஆனால் சமூக லும்பன் தனத்தில் அல்லாத ஒருவர் நிகழ்த்தும் போது, அதன் எதிர்வினை வேறு. ஆனால் இதை மூடிமறைக்கும் ஒரு நிகழ்ச்சியும் மறுபக்கத்தில் இதை ஒரு தலைபட்சமாக குறித்த அவரின் அரசியல் சார்புநிலை மீது முன்னிறுத்தி மட்டும் துற்றுவது நிகழ்கின்றது. இதன் பின் எந்தவிதமான சமூக அக்கறையும் இதற்கு கிடையாது.
இதைப் புரிந்துகொள்ள இந்த நிகழ்வை சற்று மாற்றிப்பார்ப்போம்; இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட இப் பேராசியர் ஈ.பி.டி.பி.யாக இருந்து இருந்தால், இதன் எதிர்வினை என்பது முற்றிலும் மறுப்பட்டதாக அமைந்து இருக்கும்;. இதை சமகால அரசியலை புரிந்துகொண்ட யாராலும் மறுக்கமுடியாது. நேர்மையாக சமூகத்தை நேசிக்கும் ஒருவனுக்கு இதன் பின்னுள்ள புலிசார்பு, புலியெதிர்ப்பு மக்கள் விரோத நோக்கத்தை தெளிவாக இனம் காணமுடியும்.
அரசியலில் மக்களுக்கு நேர்மையாக இருக்க வக்கற்ற எமது மலட்டு சார்பு நிலைமையே அனைத்துக்கும் காரணம். ஒரேயொரு விடையம் அவரின் சார்பு அரசியல் மாறும் போது எப்படி அமைந்து இருக்கும்;. விவாதத் தளங்களில் விவாதிக்க வந்தவர்களின் கருத்துநிலையே முற்றாக மாற்றமடைந்து இருக்கும். இதில் பலர் விவாவதத் தளத்தில் எட்டியே பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ் செய்தியேட்டில் எத்தனை பந்திச் செய்திகள் வந்திருக்கும். துரோகிகள் இப்படி என்பார்கள். தண்டனைகள், தண்டனை முறைகள் என்ற பற்பலவற்றை தமிழ் ஊடாகவியலும், இணையங்களும், விவாதங்களில் கலந்து கொள்வோரும் போட்டிபோட்டு கொண்டு அதை முன்வைப்பதில் குதித்தெழுந்திருபார்கள்.
மறுதளத்தில் புலியெதிர்ப்பின் நிலை கூட எதிர்நிலைக்கு போய்யிருக்கும்;. அவர்கள் இது புலிகளால் திட்டமிட்டு அனுப்பிய ஒரு பெண் என்றிருப்பார்கள்;. இங்கு இப்படி புலிகள் பயன்படுத்த மட்டார்கள் என்பதல்ல. எனது விவாதம் புலியெதிர்ப்பு அரசியல் பின்புலத்தை விசாரனைக்குள்ளாக்கின்றது.
காட்சிகளும் படிமங்களும் மாற்றமடைந்து இருக்கும். இதை நேர்மையான அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள எதுவும் தடையாக இருக்காது. உண்மையில் இந்த சமூக விரோதக் குற்றத்தின் மீதான சமூகப் பொறுப்புணர்வை யாரும் பொறுப்பு எடுத்துக் கொண்டு போராடமுன்வரலில்லை. பாதிகப்பட்ட அந்த சிறுமியின் நலன் பற்றி யாரும் அக்கறைப்படவில்லை. விதண்டவாதங்களை தாண்டி எதையும் சமூகத்துக்கு பொறுப்பாக தெளிவுபடுத்தவில்லை. குற்றங்கள் தொடரும் என்பதைத் தான் புலி சார்பு, புலியெதிர்ப்பு அரசியல் வழிகாட்டி செல்லுகின்றது. குற்றத்துகான சமூக கட்டமைப்பைப் பாதுகாப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.
1.புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இந்தக் குழந்தையின் வறுமைக்கான சமூக காரணம் தான்என்ன. இதை வெறுமானே சிங்கள் அரசு என்றும், புலிகள் என்றும் குற்றம்சாட்டி இனவாத அரசியலுக்குள் மூடிமறைக்க முடியாது. மாறக சமூகத்தை வழிநடத்துவதாக பீற்றும் அரசும், புலிகளும் தான், இந்த மக்கள் விரோத சமூக விரோத செயலுக்கு பொறுப்பானவர்கள். இழிந்து போன சூறையாடும் பொரளாதார அமைப்பின் முதுகெழும்பாக இருப்பவர்களே இருக்கின்றனர். இதை மாற்றியமைக்கும் போராட்டத்துக்கு, இன்றைய எமது அரசியல் எதார்த்தம் மறுதலிக்கின்றது. இதில் போராடும் அமைப்பு என்ற வகையில் புலிகள் முக்கிய பொறுபாளிகள். குழந்தைகள் ஒரு நேர உணவுக்காக தீமிர் பிடித்த பணக்காரர்களின் குசினிகளில் ஓடாகவே தேய்வதற்கும்;, பாலியல் வன்முறைக்கு இரையாவதற்குரிய நிலைமையை, உண்மையான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் அனுமதிக்காது. இந்த நிகழ்வு மீண்டும் மக்கள் விரோத புலிப் போராட்டத்தை அரசியல் ரீதியாக சுட்டிக் காட்டுகின்றது.
2.அந்த சிறுமி புலிகளுக்;காக குரல் கொடுக்கும் ஒரு பேராசிரியர் வீட்டின் அடுப்படியில் நசிந்து, பாலியல் பண்டமாக குதறப்பட்ட நிலைக்குரிய சமூகப் பொறுப்பை, புலிகள் நேர்மையாக எற்றுக் கொள்ளவேண்டும்;. அதாவது புலிகளும், புலிசார்பு நிலைப்பாட்டை உடையோரும், இப்படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்தமுடியும் என்ற பொதுவான பொருளாதார பண்பாட்டின் வழிகாட்டுதலுக்குரிய முழு சமூகப் பொறுப்யும் புலிகளைச் சாரும்;. இதில் அந்தக் குழந்தையை, புலிகள் தான் இவரின் வீட்டின் வேலைக்கு அனுப்பியிருப்பின் பொறுப்பின் தன்மை மேலும் பலமடங்காகிவிடும்.
3.யாழ் மேலாதிக்கம் இப்படி குழந்தைகளை வேலைக்கு அமாத்தி, அவர்களை சுரண்டும் பொது வடிவத்தை, எமது மேலாதிக்க போராட்டம் சமூகத்தை எந்த வித்திலும் கேள்விக்கு உள்ளக்கவில்லை. அதை ஊக்கப்படுத்தியது. யாழ்மேலாதிக்கம் போராட்டத்தின் போது, மிக மோசமான சமூக மேலான்மை தக்கவைத்து, போராட்டத்தையே தனக்கு சார்பாக பயன்படுத்துகின்றது. இதில் வன்னிக் குழந்தைகளை அடிமைப்படுத்தும் புதிய நடைமுறையாக இது அமைந்துள்ளது
4.புலிகள் தமது அணிக்கு எப்படி ஆட்களை கொண்டு வருகின்றனர் என்ற கேள்வியை மீண்டும் இது தெளிவாக எழுப்பி விடுகின்றது. புலிகளை துதிபாடக் கூடியவர்கள், நக்கிபிழைக்க கூடியவர்கள் என அனைவரினதும் தயவில், புலிகள் இயக்கம் வாழும் இன்றைய எதார்த்ததை யாரும் மறுக்க முடியாது. இதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்;. உண்மையான மக்கள் விடுதலை, உண்மையான மகக்ள நலன் என்பதை புலிகள் மறுத்த நிற்கும் போது, அதைச் சற்றி இப்படியான கும்பல்கள் கூடிவிடுவது இயல்பே. இது படிப்படியாக இதை கண்டும்காணது விட்டுவிடும் வரலாற்று விதிக்குள் சிதைந்து விடுவது தவிர்க்கமுடியாது. எல்லா வகையான சமூக விரோதமும் இதற்குள் அக்கபக்கமாக இயங்கத் தொடங்குவதும், அதை சமாளிப்பதும் அவசியமான ஒன்றாக மாறிவிடும். இது மொத்த போராட்டத்தையும் சீராழிவாக மாறிவிடும்.
5.இந்த சம்பவத்தை அடுத்து புலிகளின் நீடித்த மௌனம். நான் அறிய இந்த கேவலமான நடவடிகைக்கு எதிராக புலிகள் வாய் திறந்ததை அறியமுடியவில்லை. உடனுக்குடன் கண்மூடித்தனமான தீர்ப்புகளையும், தண்டனைகளையும், குற்றத்தையும் சுமத்தும் புலிகள் காட்டும் எதிர்வினை சந்தேகத்தை பலமாக்கின்றது. குற்றவாளியை பாதுகாக்க முனைகின்றனரா? அல்லது அதைப் ப+சிமொழுக விரும்புகின்றனரா? உண்மையில் நேர்மையாக இதற்கு எதிராக முதல்: நடடிவக்கையை புலிகள் எடுத்து இருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.
இது ஒரு அரசியல் விசாரனையை உருவாக்கின்றது. தீவிர கேள்வியை எழுப்புகின்றது. சந்தேகத்தை உருவாக்கின்றது. சமூகத்தை வழிநடத்தும் பல்கலைக்கழகத்தின் மௌனம் மேலும் இதை அதிhச்சிக்குள்ளாக்கின்றது. இவரினால் வழிகாட்டப்பட்ட மாணவர் சமூகத்தின் உறங்கு நிலை இதை ப+சிமொழுக விரும்புகின்றதா என்ற கேள்வியை நியாயமாக எழுப்புகின்றது. பதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலத்தை இட்டு, சமூக கட்டமைப்புகள் எதையும் பிரகடனம் செய்யவில்லை. எல்லா போலித்தனமான அரசியல் கூத்திலும், விவாதக் கருத்துகளிலும், தமது சொந்த அரசியல் வேடங்களையும் பிழைப்புகளை மூடிமறைக்கின்றனர். இதுதான் இன்றைய எமது அரசியலாக எம்முன் எஞ்சிக் கிடக்கின்றது.
03.09.2005