Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கதிர்காமர் கொலையை அடுத்து இலங்கை அரசியல் என்றுமில்லாத ஒரு அதிர்வுக்கு உட்;பட்டுள்ளது. இந்திய பிரதமராக இருந்த ராஐPவ் கொலையை விடவும், கதிர்காமர் கொலை சர்வதேச நெருக்கடியை புலிகள் மேல் அதிகமாக்கியுள்ளது.

 மறுபக்கத்தில் புலிகள் "நாங்கள் இந்த நடவடிக்கையை (கொலையை) கடுமையாக கண்டனம் செய்கின்றோம்... இந்த கொலையுடன் விடுதலைப் புலிகளை சம்பந்தப்படுத்துவது மிகவும் தவறானது மற்றும் அது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும்... விடுதலைப் புலிகளுக்கு அவரைக் கொல்லவேண்டிய தேவை இல்லை" என்ற கூறியுள்ளனர். புலிகளோ வழமைபோல் இந்தக் கொலைக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். உத்தியோகபூர்வமற்ற நிலையில் புலிகளின் அணிகள் இந்த கொலைக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இதைக் காட்டி பல மிரட்டல்களை தொடர்ந்து விடுகின்றனர்.

 

இதற்கு அப்பால் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராக ஒரு பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பேரினவாதத்துக்கு இதுவே ஒரு அரசியல் வெற்றியாகியுள்ளது. பேரினவாதிகளோ இந்த வெற்றியை கொண்டாடுகின்றனர். தமிழ் குறுந்தேசியவாதிகளின் கற்பனையான வக்கிரமான மனப்பிரமைகளை கடந்து, தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகள் அனைத்தும் இது போன்ற கொலைகள் மூலம் சிதைக்கப்படுகின்றது.


பேரினவாத சக்திகள் சமாதானத்துக்கு எதிரான புலிகளின் வழமையான தொடர்ச்சியான நடவடிக்கை என்று காட்டுகின்றனர். இதை சர்வதேச பயங்கரவாதமாக சித்தரித்து, ஏகாதிபத்திய தலையீட்டை புலிக்கு எதிராக ஊக்குவிக்கின்றனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது இரங்கல் உரையில் "இலங்கையின் ஜனநாயக வாழ்வை அழித்து சிதைக்க முற்படும் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேசம் நேசக்கரம் நீட்ட வேண்டும்." என்றார். ஒரு தவறான அரசியல் கொலை, எப்படி சர்வதேச ரீதியாக பேரினவாதத்துக்கு சார்பாக மாற்றப்படுகின்றது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.

 

அடுத்த ஜனதிபதியாக முயலும் மகிந்த ராஜபக்ச மேலும் தனது உரையில் "செப்ரெம்பர் 11ல் நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல், லண்டன் குண்டு வெடிப்பு, ராஜீவ் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்க போன்றவர்களின் படுகொலைகள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் வரிசையில் இன்று லக்ஸ்மன் கதிர்காமரும் பலியாகியுள்ளார். உலகிற்கு பயங்கரவாதம் பொதுவான பிரச்சினையாகியுள்ளது. அதற்கு எதிரான போராட்டத்தில் இலங்கையுடன் கைகோர்க்குமாறு சர்வதேசத்தைக் கேட்டுக்கொள்கிறேன்…. மக்களின் ஜனநாயக வாழ்வைச் சிதைக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக சகலரும் ஒன்றுபட வேண்டும். கிழக்கோ மேற்கோ இதற்கு எதிராக அணிதிரள வேண்டும்." என்றார். உண்மையில் இந்த உரையை சாரமாக கொண்டே எல்லாப் பேரினவாதிகளும், எல்லா இராஜதந்திர முயற்சிகளும் மிக நுட்பமாக நகர்த்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவல்ல இந்த முயற்சி, இலங்கை பேரினவாத வரலாற்றில் மிகபெரிய சாதனையை, ஒரு தவறான ஒரு அரசியல் கொலைய+டு உருவாக்கியுள்ளது. பேரினவாதத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைக்கு இது ஒரு சர்வதேச அங்கீகாரத்தை, புலிக்கு எதிராக உருவாக்கியுள்ளது.


ஏகாதிபத்தியமோ இதை ஒரு சர்வதேச பயங்கரவாதமாகவும், புலிகளின் கீழ்த்தரமான தொடர் நடவடிக்கையாகவும் காட்டுகின்றனர். தமது அஞ்சலிகள் ஊடாகவும், மறைமுகமான நடவடிக்கைகள் மூலமும் இலங்கை விவகாரங்களில் அதிகளவில் தலையீட்டை நடத்துகின்றனர். புலிகளை நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு மீளவும் கொண்டு வந்துள்ள நிகழ்வு இதன் ஒரு பகுதியே. ஐ.நா புலிகளுக்கு எதிராக தனது கொடியை அரைக் கம்பத்தில் பறக்கமிடுமளவுக்கு நிலைமை சென்றுள்ளது. அந்தளவுக்கு சர்வதேச ரீதியான தலையீட்டுக்கு இது வழிகாட்டியுள்ளது.

 

ஐ.நா உலகெங்கும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கொடிகளை, புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்தியது. அதை அனுமதிக்க மறுத்த புலிகள், ஐ.நா கொடியை பலாத்காரமாக அகற்றினர். இந்த சம்பவத்தை ஐ.நா. வன்மையாகக் கண்டித்துள்ளது. உண்மையில் ஒரு தவறு அடுத்த தவறை உருவாக்கியது. ஐ.நா தனது அறிக்கையில் "இச்சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும் எனவும், இதில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் மீது புலிகள் அமைப்பு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐ.நா, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. வின் தொண்டு அமைப்புக்கள் மீது இவ்வாறான நாகரீகமற்ற செயல்களில் ஈடுபட்டது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது." இதன் மூலம் உலகெங்கும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான போக்கு வலுப்பெற்று வருகின்றது. ஏகாதிபத்தியத்தின் எந்;த நடவடிக்கையையும் நியாயப்படுத்தும் வகையில், இது போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் வழிகாட்டுகின்றன.

 

இந்தக் கொலையை கண்டித்து ஐ.நா அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் "கொபி அனான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார். இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இக்கொலையை புரிந்தோர் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அனான் நம்புகிறார்" என்ற அறிக்கையில் மேலும் அவர் "லக்ஷ்மன் கதிர்காமர் மிகவும் மதிக்கப்பட்ட இராஜதந்திரி எனவும் தேசிய ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர் எனத் தெரிவித்துள்ள கொபி அனான் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நிலைப்பாட்டைத் தொடருமாறும் கோரியுள்ளார்." என்ற ஐ.நா அறிக்கைக்கு ஏற்ப இலங்கை பேரினவாத அரசாங்கம் மிகவும் நேர்த்தியாகவே புலிகளுக்கு எதிராக காய்களை நகர்த்தியுள்ளது.

 

மீண்டும் யுத்தம் என்ற கோசங்களையும், படுகொலைகளையும், அரசியல் நேர்மையற்ற செயல்தளத்தில் இயங்கும் புலிகளின் செயல்தளத்தை தனிமைப்படுத்தம் வகையில், பேரினவாதிகள் தமது சொந்த பேரினவாத நோக்கம் வெளிவராத வகையில் சர்வதேச ரீதியாக காய்களை நகர்த்துகின்றனர்.

 

இதன் தொடாச்சியாக இந்த நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க ராஜாங்க அமைச்சர் தனது அனுதாப அறிக்கையில் "இலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை எனக்கு அளவற்ற சோகத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. இவ்வாறான இரக்கமற்ற கொலை ஒரு பயங்கரவாத செயல். இதனை அமெரிக்க அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய கொலைக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் தீர்ப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்" என்றார். அவர் மேலும் "அவர் ஒரு கட்டுப்பாடு கண்ணியங்கள் மிக்க கனவானாக இலங்கையின் சமாதானத்திற்காக அதிகம் தன்னை அர்ப்பணித்தவர். அவரைக் கௌரவப்படுத்துவது என்பது சமாதானத்தையும் யுத்த நிறுத்தத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதாலேயே சாத்தியமாகும் எனவும் அவர் அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்." யுத்த நிறுத்தத ;தையும், சமாதானத்தையும் கதிர்காமர் நேசித்தார் என்றும், அதை அரசு கடைபிடிக்க முயல்வதன் மூலம் புலிகளின் யுத்த கோசங்கள் தனிமைப்படுத்தி உலகளவில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு கம்பளம் விரித்துள்ளார்.

 

இந்த நிலையில் சமாதானம் மற்றும் யுத்த நிறுத்தத்தில் நம்பிக்கை உள்ளதாக புலிகள் திடீரென மீண்டும் அறிவித்தனர். மீண்டும் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தையை நோக்கி திடீரேன ஓடுகின்றனர். புலிகளின் தவறான கண்மூடித்தனமான படுகொலை அரசியல் நடவடிக்கைகள், முட்டுச் சந்தியில் தமிழ் மக்களை பலியிடவே தொடர்ச்சியாக வழிகாட்டுகின்றது. ஏகாதிபத்தியங்களும், மற்றைய பிராந்திய வல்லரசுகளும் தமது இரங்கல் உரை மூலம் சொல்லும் செய்திகள், புலிகளின் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரானவையாக இருப்பதை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கமுடியாது.

 

கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பியரி பெட்டிகிரே தனது இரங்கல் செய்தியில் "கனடா மக்கள் சார்பாக கதிர்காமர் குடும்பத்தினருக்கும் இலங்கை மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையின் அமைதி நடவடிக்கைக்கு கதிர்காமர் ஓய்வின்றி உழைத்தார். இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும்" என்றார். ஜப்பானியப் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமி "இந்தப் பலாத்கார நடவடிக்கையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஜப்பானிய அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக அவரது குடும்பத்திற்கும் இலங்கை மக்களுக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." என்றார். இந்தியா இதை "கொடூரமான பயங்கரவாதச் செயல்; அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றது. மேலும் தமது இரங்கல் உரையில் "மறைந்த அமைச்சர் இந்தியாவின் நீண்ட கால நண்பரும் சிறந்த பண்புகளும் ஆற்றலும் கொண்ட வெளிநாட்டமைச்சருமாவார். இத்தகைய கொடூரமான செயலுக்குப் பொறுப்பான பயங்கரவாதிகள் நீதியின் பால் கொண்டுவரப்பட வேண்டும்." என்றனர். மேலும் "இந்தியா இலங்கை இடையிலான உறவை மேம்படுத்த பெரிதும் பாடுபட்டவர் கதிர்காமர். அவருடைய மறைவால், இந்தியா மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது. இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர் அவர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த தளராமல் உழைத்தவர்" என்ற இரங்கல் உரை தொடருகின்றது. மரணச் சடங்கில் மரபுக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சரையே இந்தியா அனுப்பி வைத்ததன் மூலம், புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்குரிய ஒரு அரசியல் சமிக்கையைக் கூட விடுத்துள்ளனர்.


மறுபக்கம் இலங்கை விவாகாரங்களில் இந்தியத ; தலையீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. புரட்சி பேசும் மார்க்சிஸ்ட் கட்சி தனது புரட்சிகர வேஷத்தை கலைந்த நிலையில் தனது அனுதாபத்தை வெளியிட்டனர்.

 

தம்மைத் தாம் மார்க்சியவாதியாக காட்டும் Nஐ.வி.பியோ தமது போலியான சிவப்பு வேஷங்களைக் களைந்து நிர்வாணமாக வெளிப்பட்டனர். அவர்கள் தமது சிவப்பு கோசத்தால் "நீங்கள் எமது நண்பர், தேச பக்தன், நீங்கள் மரணமடைந்த பின்னரும் வாழ்வீர்;கள்" என்றனர். ஒரு பேரினவாதத்தின் கண்ணீராக, துன்பவியலாக இப்படித்தான் வெளிப்படமுடியும். Nஐ.வி.பி தமது பேரினவாத இழப்பை தொடர்ந்து "எமது தேசத்தின் உண்மையான மைந்தன் வீழ்ந்து விட்டான். எமது மதிப்புக்குரிய லக்ஸ்மன் கதிர்காமர் மீது வைக்கப்பட்ட இலக்கு இனவாத எதிர்ப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மனித உரிமை என்பவற்றின் மீது நம்பிக்கை கொண்டோர்; மீது வைக்கப்பட்ட இலக்காகும்." என்கின்றனர். தொடர்ந்தும் அவர்கள் "இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளிலே மிகவும் நேர்மையானவராகவும், இரட்டைக் கருத்தில் பேசாதவராகவும், சூழ்ச்சி அரசியல் போக்கு அற்றவராகவும் இருந்தார். ஜே.வி.பி இனரும், கதிர்காமர் அவர்களும் வௌ;வேறு அரசியல் பின்னணியைக்; கொண்டவர்கள். இருந்தபோதிலும் நாம் அவருடன் மிகவும் வெளிப்படையான வகையிலும், நேர்மையுடனும், நாட்டின் உண்மையான நேசிப்புடனும் மிக இறுக்கமான உறவை வளர்த்திருந்தோம். தமிழராகப் பிறந்த போதிலும் இன வெறுப்பற்றவராகவும் முழு நாட்டையும் நேசிப்பவராக இருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாம் தோற்றுவித்தபோது அவரை நாம் நாட்டின் அதி உயர் பதவியை வகிக்க வேண்டுமென கோரியது ஒன்றும் இரகசியமானது அல்ல. நாம் அவருடன் பல தடவைகள் சந்தித்துள்ளோம். ஓவ்வொரு தருணத்திலும் அவரது நேர்மை வளர்ந்து சென்றதை நாம் வெகுவாக அவதானித்துள்ளோம். ஜே.வி.பி இனராகிய நாம் நல்ல நண்பர் ஒருவரை இழந்துள்ளோம். நாடு ஓர் உண்மையான தேச பக்தனை இழந்துள்ளது." என்;றனர் மேலும் அவர்கள் "நண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்." என்றனர். Nஐ.வி.பிக்கும், கதிர்காமருக்கும் இருந்த இலட்சிய ஒருமைப்பாடு பேரினவாதமாகவும், உலகமயமாதலாகலுமாகவே இருந்தது ஆச்சரியமானதல்ல.


இந்தவகையில் தான் Nஐ.வி.பியின ; கண்ணீர் துளிகள் இப்படி சொல்லவைக்கின்றது. முழுநாட்டையும் நேசித்தார் என்றால், அதன் அரசியல் அர்த்தம் தான் என்ன. மக்களை தமிழர் சிங்களவர் வேறுபாடு இன்றி சூறையாட ஏகாதிபத்திய கால்களை நக்கி தவமிருந்தார் என்பது தான்;. உண்மையான தேசபக்தனை இழந்துள்ளதாக கூறும் Nஐ.வி.பி, அந்த தேசபக்திதான் என்ன? நாட்டை ஏகாதிபத்தியத ;திற்கு கூவி விற்பதே அந்த தேசபக்தி. இதைத் தாண்டி எதையும், நாட்டுக்காக கதிர்காமர் செய்யவில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்று சொல்லும் Nஐ.வி.பி, அந்த ஜனநாயகம் என்பது மக்களை சுரண்டிச் சூறையாடுவதையே தேசத்தின் உண்மையான மைந்தனின்; இழப்பாக காட்டுகின்றனர். Nஐ.வி.பிக்கும் கதிர்காமருக்கும் என்னே அரசியல் ஒற்றுமை. பேரினவாதி; கடிவாளங்களை கொண்டு இயக்குவதில் கொண்டுள்ள ஐக்கியத்தில் இருந்தே, தேச இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள் என்று Nஐ.வி;.பியினர் புலம்புகின்றனர்.

 

இப்படி எல்லாம் வெளுத்துப் போன பேரினவாத அஞ்சலிகள், அறிக்கைகள் ஒருபுறம். மறுபுறம் கொலையைச் செய்தவர்களின் குறுந்தேசிய அரசியலுக்கு ஏற்ப அரசியல் அற்ற வெற்று தூற்றுதல்கள் மறுபுறம். இந்த கொலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? கொலைக்கும், இலங்கையில் வாழும் மக்களின் நலனுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளில் இருந்தே இதைப் புரிந்து கொள்ள கொள்ளமுடியும்.


கதிர்காமர் ஒரு மக்கள் நலன் சார்ந்த தலைவரா என்ற ஒரு கேள்வியைக் கேட்பின் நிச்சயமாக இல்லை. மக்கள் நலன் என்பது உலகை ஆளும் வர்க்கங்களின் நோக்கத்துக்கு வெளியிலேயே எப்போதும் காணப்படுகின்றது.

 

கதிர்காமர் தமிழரா சிங்களவரா என்ற அடிப்படையான இனவாதக் கேள்வியை விடுத்து, அவரின் அரசியல் என்ன என்ற கேள்வியே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உலகமயமாதல் அமைப்பில் கதிர்காமர் செய்ததெல்லாம் மக்கள் விரோத அரசியலையே. ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களை இலங்கையில் பேணிப் பாதுகாக்கும் ஒரு மக்கள் விரோத அரசியலையே அவர் விசுவாசமாகச் செய்தவர். இதில் அவர் சிங்களவர் தமிழர் என்ற எந்த பாகுபாட்டையும் காட்டியவர் அல்ல. ஆனால் பேரினவாத அரசில் அங்கம் வகித்தன் மூலமாக தனது பொதுச் செயல்பாட்டால், தமிழ் மக்களின் மீதான பேரினவாத ஒடுக்கு முறைக்கு தன்னால் இயன்றவரை துணைபோனவர். ஒரு இனவாதியாக இருந்தவர். இதற்கு வெளியில் அவர் எதையும் மக்களுக்காக செய்யவில்லை.


உலகளாவிய ஏகாதிபத்திய நலன்கள் எதுவோ, அதற்காகவே அவர் விமானம் ஏறி உலகம் பூராவும் சுற்றியவர். இந்த வகையில் இலங்கையின் இனப்பிரச்சனை விடையத்திலும் அவர், ஏகாதிபத்திய போக்குடன் தன்னை இணைத்துச் செயல்பட்டார். இங்கு அவர் சிங்களவருக்காக இயங்கவில்லை. மாறாக உலகமயமாதலில் அங்கமாக இருந்த பேரினவாத அரசில் ஒரு அங்கமாக செயல்பட்டவர். ஏகாதிபத்திய சந்தை பொருளாதாரத்தின் உலகளாவிய நலன்களுக்கு ஏற்ப, இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை பயங்கரவாதமாக காட்டியவர். இதற்கு புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைளே பக்கத ;துணையாக அமைந்தன.

 

அண்மைய காலத்தில் உள்நாட்டில் யுத்த நிலைமைகளின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்கள் முதல் சர்வதேச நிகழ்ச ;சிகளில் இயல்பான தன்மைக்கு ஏற்ப்பத்தான் அவர் செயல்பட்டார். இந்த உலகமயமாதல் அமைப்பில் எந்த வெளிநாட்டு அமைச்சரும் இதற்கு வெளியில் செயற ;படமுடியாது. உண்மையில் கதிர்காமரின் நடத்தைக்கு ஏற்ப, புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைகள் அரங்கேறிவந்தன. இதை கதிர்காமர் நேர்த்தியாக பயன்படுத்தி ஒரு இராஜதந்திரியாக மாறினர். புலிகளின் மக்கள் விரோத நடத்தைகள் இல்லை என்றால், கதிர்காமர் இல்லை. Nஐ.வி.பி கூறுவது போல் "நண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்." என்ற புலம்;பலும் உருவாகியிருக்க முடியாது. இதனடிப்படையில் Nஐ.வி.பி இன்று முன்வைக்கும் அரசியலும் கிடையாது. இதைக் கொண்டு தான் Nஐ.வி.பி இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம் என்ற தமது பேரினவாத அரசியலையும் கூட பிரகடனம் செய்ய முடியாது. இவர்களின் அரசியல் கூட, புலிகளின் மக்கள் விரோத அரசியலில் இருந்தே புளுத்துக் கிளம்புகின்றது.


மறுபக்கம் புலிகள் கூறுவது போல், அவர் புலிகளின் சர்வதேச தடைக்கு காரணமானவர் என்று வலிந்து காட்டும் கட்டமைப்புக்கு அவர் விசேடமானவர் அல்ல. புலிகளின் சொந்த நடவடிக்கைகள் தான், புலிகளின் தடைக்கு காரணமாக அமைகின்றன. இது கதிர்காமரின் புகழுக்குரிய ஒரு அரசியல் இராஜதந்திரமல்ல. சர்வதேச நிகழ்ச்சி போக்குகளும், புலிகளின் மக்கள் விரோத போக்குமே தடையை ஏற்படுத்தியது.

 

கதிர்காமர் அரசியல் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக ;கும் எதிராக இருந்தது. உலகமயமாதல் நிகழ்ச்சிப ;போக்கில் நாட்டை விற்பதில் அவர் சளையாத ஒரு கல்விமானாக இருந்தவர். உலகளாவிய ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையில், அவரின் மொத்தச் செயல்பாடு அமைந்து இருந்தது. மிகப் பிரதான முரண்பாடாக இருந்த இனப்பிரச்சனையில், உலகமயமாதலை ஏற்றுக் கொள்ளும் ஒரு நாடு என்ன செய்யுமோ அதையே கதிர்காமர் செய்தார்.

 

இந்தக் கொலையை கண்டிக்கும் புலியெதிர்ப்பு அணியினர் மிகப் பெரிய கல்வியாளரை புலிகள் கொன்று விட்டனர் என்று புலம்பமுனைகின்றனர். புலிகளின் கொலைக் கலாச்சாரத்தையும், தொடர் படுகொலைகளையும் உள்ளடங்கிய இந்த தொடர் கொலையில், கல்வியாளான் என்பதாலும் இதை கண்டிப்பதாக புலியெதிர்ப்பு அணியினர் ஒரு விதத்தில் காட்ட முனைகின்றனர். உண்மையில் சமூகத்தைப் பிளக்கும் சமூக விரோதக் கல்வி, மக்களுக்கு எதிராகவே உள்ளது. இது சிறப்பாகவே கதிர்காமரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது அறிவின் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களையும், தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர் மறுத்து நின்றார். தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுத்து நின்ற அவர், சமூகங்களிள் சமூகப் பிளவுகளை பாதுகாப்பதிலேயே தனது கல்வியை பயன்படுத்தியவர்.

 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சாராக இருந்த இவர், புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் தமிழ் மக்களின் அடிப்படை தேசிய உரிமைகளை எதிர்த்து செயல்படுவதிலே ஒரு பேரினவாதியாக செயல்பட்டவர். புலிகளின் மக்கள் விரோத அரசியலையும், தமிழ்மக்களின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையையும் ஒன்றாக காட்டி அதை அழித்தொழிப்பதில் தனது அறிவைப் பயன்படுத்தியவர். இதைத்தான் ஜே.வி.பியும் செய்தது, செய்கின்றது. இதற்கு வெளியில் கதிர்காமர் சுயாதீனமாக செயல்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என எந்தத் தீர்வையும் முன்வைக்காத ஒரு பேரினவாதக் கட்சியின் முதுகெலும்பாக இருந்தவர். அதேநேரம் சிங்கள தமிழ் வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களின் நலன்களையும், உலகமயமாதல் அமைப்பில் ஏகாதிபத்தியத்துக்கு கூவி விற்பதில் தனது விற்பனைத் திறனைக் காட்டியவர்.

 

இந்த வகையில் அவர் இலங்கையில் வாழும் அனைத்து மக்களினதும் விரோதியாவார். மக்களின் முதுகெலும்பை முறித்தவர். புலிகளின் பாசிச நடவடிக்ககைகளின் பெயரில், ஏகாதிபத்திய கால்களில் வீழ்ந்து கிடந்து நக்கியவர். உலகளவில் அனைத்து மக்கள் விரோத அரசுகளுடனும் சேர்ந்து கூத்தாடியவர்.


ஒரு மக்கள் விரோதியை மக்கள் தமது சொந்த அதிகாரத்துக்கான போராட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டியவர்களின் கதிர்காமரும் ஒருவர். மக்கள் நீதிமன்றங்கள் மக்கள் விரோத சமூக விரோதிகளை தண்டிக்கும் அதிகாரத்தைக் கொண்ட போராட்டங்கள், அல்லாத ஒரு நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை மக்கள் விரோத நோக்கில் அமைந்துள்ளது. இது இரண்டு தளங்களில் மக்களுக்கு எதிராக மாறிவிட்டது.

 

1.இந்தக் கொலை மூலம் ஏகாதிபத்திய தலையீட்டை இலங்கையில் அதிகரிக்க வைத்துள்ளது. இலங்கையில் உள் விவகாரங்கள் மேலும் சர்வதேசமயமாகி விட்டது. ஏகாதிபத்திய நுகத்தடியைக் கொண்டு அனைத்து மக்களின் வாழ்வியலையும் கேள்விக்குள்ளாக்கும் நகர்வுகள் தொடங்கிவிட்டன. கதிர்காமர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஆட்சிக்காலத்தில் உயிருடன் இருந்த காலத்தில் செய்த பணியைவிட, அவரின் மரணம் ஏற்படுத்திய விளைவே மிகப்பாரதூரமானது. அவரின் மரணம் பேரினவாதத்தின் அளவற்ற நெகிழ்ச்சியற்ற போக்கை வலுப்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியாக ஒரு பாரிய பிரச்சாரத்தை புலிக்கு எதராக இது ஏற்படுத்திய அதே கணத்தில், தமிழ் மக்களின் போராட்டத்தை இது மழுங்கடித்துள்ளது.

 

2.இந்தக் கொலை புலிகள் (அவர்கள் இதை உத்தியோக ப+ர்வமாக மறுத்த போதும்) செய்ததன் மூலம், தமது தொடர்ச்சியான மக்கள் விரோத அரசியலை மெருகூட்டியுள்ளனர். தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி, இது போன்ற தனிப்பட்ட வக்கிரமான பழிவாங்கல்களை செய்வதன் மூலம், தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆழமாக சிதைத்துள்ளனர். குறுந்தேசிய வெறிக்கு ஏற்ப, இது போன்ற கொலைகள் மூலம் சாதிப்பது அனைத்து மக்களின் அடிமைத்தனத்தைத் தான்.

 

இதை செய்துவிட்டு மறுப்பதன் மூலம், செய்யக் கூடாததை செய்ததை ஒப்புக் கொள்வதாகும். அதை தொடர்ந ;தும் செய்ய துணைபோவதாகும். நேர்மையற்ற வகையிலான செயல்பாடுகள் எப்போதும் மக்களுக்கு எதிரானதாகவே மாறுகின்றது. இது போன்ற "துரோகிகளை" ஒழித ;துவிட்டால் தமிழீழம் கிடைக்கும் என்ற வாதப்பிரதிவாதங்கள் அர்த்தமற்றவை. இந்த வாதங்கள் சரியென்றால் அல்பிறட் துரையப்பாவை கொன்ற போதே தமிழீழம் கிடைத்து இருக்க வேண்டும். மாறாக புலிகளின் "துரோகிப்" பட்டியல் ஆலமரம் போல் விருட்சம் விட்டு பெருகித் தான் செல்லுகின்றது. புலிகள் கூறும் "துரோகிகளை" உருவாக்குவதே புலிகளின் அன்றாட நடவடிக்கை தான். முடிவாக பல ஆயிரம் பேர் இப்படி கொல்லபபட்டதிலும், கொல்லப்படுவதிலும் முடிகின்றது.

 

இங்கு தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் ஒரு புறம், மறுபக்கம் புலிகளின் குறுந்தேசிய போராட்டம் மறுபுறம். ஒரு யுத்த நிறுத்தம், சமாதானம், அமைதி பற்றிய ஒரு அரசியல் உடன்பாடு உள்ள ஒரு நிலையில், அதை கையெழுத்திட்டவர்கள் அதை நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும்;. இல்லாத ஒரு நிலையில் நடக்கும் இதுபோன்ற கொலைகள் மிகவும் கோழைத்தனமானது, நேர்மையற்றதுமாகும். முதுகில் குத்துவதைத் தாண்டி எதையும் இந்த அரசியல் கொண்டிருக்கவில்லை. அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இது அர்த்தமற்றதாக்கி விடுகின்றது. இன்று இலங்கையில் தொடரும் கொலைகள், கடத்தல்கள் முதல், அனைத்து மக்கள் விரோத நடவடிக்கையும் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையையே அர்த்தமற்ற ஒன்றாக மாற்றிவிடுகின்றது. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் புலிகள், இதுபோன்ற தொடர் நடவடிக்கை மூலம் தமது குறுகிய இராணுவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துவதற்கு அப்பால், மக்களுக்கென எதையும் பெற்றுத் தரப்போவதில்லை என்ற உண்மையை யாரும் வரலாற்றில் நிராகரிக்க முடியாது. கொல்லப்பட்டவன் எவ்வளவு மிகப் பெரிய மக்கள் எதிரியாக இருந்தாலும், மக்களின் வாழ்வியலும் சம்பந்தப்படாத வகையிலான உதிரி நடவடிக்கைகள் உண்மையில் மக்களையே அடிமைப்படுத்துகின்றது. இதைத் தான் இந்தக் கொலை சாதித்துள்ளது.

19.08.2005