Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாரிசில் ஒரு பெண்ணை இணங்க வைக்கும் பாலியல் வன்முறை முயற்சி ஒன்று சந்திக்கு வந்துள்ளது. அதுவும் ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்ணியம் பேசிய ஒருவரால், தலித்தியம் பேசிய ஒருவரால் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதுவும் புலம்பெயர் இலக்கிய வட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது.

 ஆனால் இதன் எதிர்வினையோ உப்புச்சப்பற்றது. ஏதோ கடமைக்கு கண்டிப்பதைத் தாண்டி, எதையும் இது வெளிப்படுத்தவில்லை. இந்தளவுக்கு சம்பந்தப்பட்ட அரவிந் அப்பாத்துரையை யாரோ ஒரு வழிப்போக்கன் போன்ற பாணியில், புலம்பெயர் இலக்கிய உலகம் கருத்துரைத்துள்ளனர். மானத்தை இழந்தவர்கள் எப்படி செயல்படுவார்களோ அப்படி ஒரு எதிர்வினை. 



புலம்பெயர் இலக்கியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலரும், தம்மை பெண்ணியல்வாதிகளாகவும், முற்போக்கு அரசியல்வாதிகளாகவும், தலி;த்தியல்வாதிகளாகவும், பலவாகவும் பல்வேறு வேஷம் போடுபவர்கள் பலரும் சேர்ந்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் முழுமை

 

"அர்விந் அப்பாதுரையின் பாலியல்...
தோழிகளே, தோழன்களே!
இந்த ஆணாதிக்க சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் ஒவ்வொரு மூலைகளிலும் ஒவ்வொரு கணங்களிலும் பெண்களின்மீதும் குழந்தைகள்மீதும் பாலியல் அத்துமீறல்களும் பாலியல் வன்முறைகளும் வதைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு புறத்தில் அரசியல், பொருளியல் அதிகாரங்கள், சாதி ஆதிக்கம், இன மேலாண்மை, ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இப் பாலியல் வதைகள் நிகழ்த்தப்பட்டால், மறுபுறத்தில் சமூக சேவை மற்றும் அகதிகளுக்கு உதவி என்னும் முகமூடிகளுடன் இப்பாலியல் வதைகள் தொடர்கின்றன.


தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரும் சட்ட ஆலோசரும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரும் 13, சரந னந யஙரநனரஉஇ 75010 Pயசளைஇ குசயnஉந என்ற முகவரியில் தனது மொழிபெயர்ப்பு அலுவலகத்தை நடத்தி வருபவருமான அர்விந் அப்பாதுரை தொடர்ச்சியாக பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறார் என்பதை உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.

 

அர்விந் அப்பாதுரையின் பாலியல் அத்துமீறல்களின் உச்சக் கட்டமாக 26.12.2005 அன்று இரவு 8.30 மணியளவில் அவரின் அலுவலகத்துக்கு மொழிபெயர்ப்பு உதவி கோரிச் சென்ற பெண்ணொருவர் மீது அவர் பாலியல் வன்முறைக்கு முயற்சித்துள்ளார். 15 நிமிடப் போராட்டத்திற்குப் பின்பு அப்பெண் அவரிடம் இருந்து தப்பித்து வந்ததுடன், இக்கொடுமையை அப்பெண் எமது தோழிகள் இருவர் மூலமாக எங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

 

தனது மொழிபெயர்ப்பாளர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தொடர்ச்சியாக இவ்விதமான பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்தி வரும் அர்விந் அப்பாதுரையை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் நாங்கள் தயாராகவிருக்கிறோம். இக் கொடுஞ்செயல் குறித்து அர்விந் அப்பாதுரையின் சக மொழிபெயர்ப்பாளர்களும் நமது கலை இலக்கிய நண்பர்களும் சமூக அக்கறையாளர்களும் அர்விந் அப்பாதுரைக்கு தொடர்ச்சியான கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

 

இக் கண்டனத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் உங்களின் பெயர் இணைப்போடு பின்வரும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்."

 

இதன் கீழ் பலர் கையெழுத்திட்டுள்ளனர். நீண்ட இழுபறியூடாக, வாதப்பிரதிவாதங்களுக்கு ஊடாக, சிலர் கையெழுத்திட மறுத்த நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. சரி பேப்பரில் முண்டுவிழுங்கி புரட்சி செய்த நீங்கள், நடைமுறையில் இதை எப்படி எதிர் கொண்டீர்கள்.



1.ஏன் இதை பொலிசில் முறையிடவி;ல்லை. சட்டப்படி இதை ஏன் நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லவில்லை.


2.சம்பந்தப்பட்ட நபரின் அலுவலகத்தின் உள்ளும், வெளியிலும் ஏன் ஒரு போராட்டத்தை நடத்தவில்லை. அத்துடன் சம்பந்தப்பட்டவர் அகதி அந்தஸ்து வழங்கு அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக இருப்பதால், அங்கு ஏன் ஆர்ப்பாட்டத்தைச் செய்யவில்லை.


3.பாரிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இந்த விடையத்தை (உதாரணமாக துண்டுப்பிரசுரம்) ஏன் எடுத்துச் செல்லவில்லை.



4.நீங்கள் ஒன்றாக கூடிக் குடித்து கூத்தடித்து கட்டிப்பிடித்து உருண்ட திரிந்த அரசியல் சீராழிவை, ஏன் நீங்கள் சுயவிமர்சனம் செய்யவில்லை.



5.சம்பந்தப்பட்ட நபர் முன்பும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிந்தும், ஏன் முன்பே இதை அம்பலம் செய்து அவருடன் இருந்த அரசியல் இலக்கிய மற்றும் கூடிக் குடிக்கும் உறவை முடிவுகட்டவில்லை.


6.இது போன்ற நபர்கள் புலம்பெயர் இலக்கிய உலகில், கொசுக்களாக உள்ள நிலையில், அதை இனம் கணமறுத்து கூட்டாக நீங்கள் ஒப்பமிட்டது ஏன்?



இப்படி பல கேள்விகள் இதன் பின் தொங்கிக் கிடக்கின்றது. இந்த கண்டன அறிக்கை சாதாரணமாக வெளியிடுவது போன்ற உள்ளடகத்தில் உள்ளது. இதை தமிழர்கள் எல்லோரிடமும் கேட்டிருந்தாலும், அவர்களும் கையெழுத்திட்டிருப்பார்கள்;. இதில் இருந்து மாறாக  இலக்கியவாதிகள் மட்டும் கையெழுத்திடும் அளவுக்கு, இதில் விசேடமாக எதுவும் இருக்கவில்லை. ஆனால் இலக்கியவாதிகள் மட்டும் கையெழுத்திட்டனர். அதையும் ஒரு இணையத்தில் மட்டும் போட்டனர். இப்படிச் செய்ததன் மூலம் தம்மைத்தாம் புனிதமாக்கிக் கொண்டனர். நகைச்சுவையிலும் நகைச்சுவை. விடையத்தை அவருடன் தொடர்புடைய  மக்களுக்கு மறைத்தனர். அத்துடன் அரவிந் அப்பாத்துரை இப்படி செய்ல்பட்டதற்கான சமூக காரணத்தை ஆராய்வதை மிக திட்டவட்டமாக மறுத்தனர்.

 

பாரிசில் நிதர்சினி என்ற குழந்தையை கற்பழித்து கொன்ற போது கண்டித்தவர்கள் யார்? யாழில் தரிசினி கற்பழிக்கப்பட்ட போது கண்டித்தவர்கள் யார்? அனைவரும் ஆணாதிக்கவாதிகள் தான்;. அங்கும் கண்டனம். இங்கும் அதே கண்டனங்கள். இயல்பான ஆணாதிக்க சமூக அமைப்பில், இதை ஆணாதிக்கவாதிகளே கண்டிக்கின்றனர். இது ஒரு விசித்திரமானது தான்;. இந்தியாவின் மலிவு வர்த்தக இதழ்களை வாசிக்கும் இலக்கிய வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை கண்டிக்கின்றனர். ஆனால் அந்த சஞ்சிகை ஆணாதிக்க வக்கிரத்தை உருவேற்று உள்ளடகத்தில் வெளிவருகின்றது. இதுவே இந்திய சினிமா. கண்டனங்கள் பொதுவான ஆணாதிக்க ஒட்டத்தில் அதன் போக்கில் வெளிவருகின்றன. அதையே இவர்கள் இலக்கியம் என்பார்கள். அர்விந் அப்பாத்துரையின் கதைகளை இவர்கள் வெளியிட்ட போது, அதன் உள்ளடக்கம் அப்படித்தான் இருந்தது. 

 

இவர்கள் முதலில் எதை மறைக்க முனைகின்றனர். அர்விந் அப்பாத்துரையுடன் கொண்டிருந்த உறவை காட்டிக் கொள்வதை மறுக்கின்றனர். பாரிஸ் இலக்கிய சந்திப்பில் குஷ்புவுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவந்த போது, அதை கொள்கையாலும் நடைமுறையாலும் ஆதரித்த இரத்த உறவையும் திடீரென மூடிமறைக்கின்றனர். இவர்கள் தமக்கு இடையில் கொண்டிருந்ததே ஒரு இலக்கிய அரசியல் உறவாகும். இதையே இவர்கள் முதலில் மூடிமறைக்கின்றனர். யாழ் பல்கலைக்கழக பேராசிரியரும் பொங்கு தமிழ் ஊடக வன்முறையைத் தூண்டும் குழுவில் தலைமையிலும் இருந்த கணேசலிங்கம், ஒரு குழந்தையை கற்பழித்து வந்தது நிகழ்ச்சி, குழந்தையின் தற்கொலை முயற்சியினால் அது தெரிந்தபோது புலிகள் எதைச் செய்தனரோ அதையே இவர்கள் செய்கின்றனர்.


அவருடன் ஒன்றாக நாள் கணக்காக கூடிக்குடித்து இலக்கியம் செய்த அந்த அரசியல் விபச்சாரத்தை இவர்கள் சுயவிமர்சனம் செய்யவில்லை. ஏன் பாலியல் பற்றி கூடிக் கதைத்து இதை நியாயப்படுத்தும் தர்க்கவாதத்தை இவர்கள் சுயவிமர்சனம் செய்வில்லை. சம்பந்தபட்ட நபர் தனது இணங்க வைக்கும் நடத்தை சார்ந்த வன்முறை உள்ளடங்கிய முயற்சியை நியாயப்படுத்துவதாக அறிகின்றோம்;. இவர்களின் அரசியல் ரீதியாக, இலக்கியம் ரீதியாக, இவர்களின் அடிப்படை கோட்பாட்டு ரீதியாக அது சரியானது. இங்கு இணங்க வைத்தல் என்ற எல்லைக்குள், இந்த இலக்கிய உலகம் அதை நியாயப்படுத்துகின்றது.

 

சித்தாந்த ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக இணங்கவைக்கும் பாலியலை இவர்கள் அங்கீகரித்து, அதற்குள் விபச்சாரம் செய்கின்றனர். இதனால் தான் அவரின் பாலியல் வக்கிரத்தை இலக்கியம் என்ற பெயரில், பிரசுரித்து அதை கொண்டாடியவர்கள். இன்றும் அதை விமர்சிக்கவில்லை. இந்த இணங்கவைக்கும் வாழ்க்கையை கதையாகவே இவர் எழுதியவர்.

 

நான் சமர் 25 இல் இக்கதையை விமர்சித்து இந்த ஒழுக்ககேட்டின் விளைவைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று இவர்கள் பெயருக்கு கண்டனம் விடுகின்றனர். அன்று நான் "மக்களின் எதிரிகளை இனங் காண்போம்" என்ற தலைப்பில் அதை எழுதியிருந்தேன். அதை அன்று நான் "இருண்ட "இருள் வெளி" யில் "அனுபவம் தனிமை" என்ற சிறுகதையில், அர்விந் அப்பாத்துரையின் வக்கிரத்தைப் பார்ப்போம்." "சினிமா எக்ஸ்பிரஸ் என்ற திரையுலக வாழ்க்கையை விமர்சனம் செய்யும் பத்திரிகையை புரட்டிப் பார்த்தால் கமல், ரஜனி, சிவாஜி, பாரதிராஜா, மற்றும் புதுமுகங்களின் புகைப்படங்களாவது அவள் கவனத்தை ஈர்த்தன. என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் படிக்க அவளுக்கு ஆர்வமும் இல்லை, இஸ்டமும் இல்லை. .......... "ஏன் எனக்கு சத்தமாகப் பேசி நித்திரையைக் குழப்புபவர்களை (பக்கத்து அறையில்)  போய் பார்த்து வாயை மூடுங்கள் என்று சொல்ல துணிச்சலில்லை" தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் "அடுத்தமுறை அப்படி நடக்கும் போது, நிச்சயமாக போய்ச் சொல்வேன்." அப்படி பேசிக் கொண்டிருக்கும் நபர்கள் கெட்டவர்களாக இருந்து தன்னை பலாத்காரம் செய்து விட்டார்கள் என்றால்? விஜிக்கு பயமாக இருந்தது..... விஜியால் தூங்க முடியவில்லை. அத்துடன் டீவியில் பார்த்த ஆபாசக் காட்சிகள் வேறு அவளுக்கு காம உணர்ச்சியைக் கிழப்பிவிட்டிருந்தன. திடீர் என விசித்திரமான எண்ணங்கள் விஜியின் மனதில் தோன்றின. பக்கத்து ரூமில் பேசிக் கொண்டிருக்கும் மூன்று பேரோடும் உடலுறவு கொள்ள வேண்டும் எனும் ஆசை அவள் மனதில் தோன்றியது. எப்படி அவர்களைக் கேட்பது? மெல்ல கட்டிலில் இருந்து எழுந்தாள் கதவை திறந்து பக்கத்துக் கதவைத் தட்டினாள். அந்த அறை ஒரே புகைமூட்டமாக இருந்தது. "என்ன வேண்டும் பெண்ணே?" என்றான் அவன். "உங்கள் மூன்று பேருடனும் உடலுறவு கொள்ள வேண்டும்" எனக் கூற விஜிக்குத் தைரியமில்லை" என்று தொடர்கிறது கதை. இதை இலக்கியம் என்ற பெயரில், இணங்கிப் போகும் விருப்பம் என்ற பெயரில் அன்று இந்த விபச்சாரத்தை இருள்வெளியில் தொகுத்திருந்தனர். முதலில் பலாத்காரம் செய்துவிடுவார்கள் என்ற நினைப்பு, பின்னால் அவளின் விருப்பமாகவே வெளிப்படுகின்றது.

 

இங்கு எப்படி காமம் உணர்ச்சி வருகின்றது. தொலைக்காட்சி, நடிகர்களின் கவர்ச்சி இதைத் தூண்டுகின்றது. பக்கத்து அறையில் இருந்த மூன்று பேரும் கற்பழித்துவிடுவார்கள் என்ற பயம், அடுத்த நிமிடமே மூன்று பேருடனும் உறவு கொள்ள வேண்டும் என்று இணங்கிப் போகும் வக்கிரத்தையே, இலக்கியம் என்ற பெயரில் இந்தப் பன்றி அன்று எழுதியது. இலக்கியம் என்ற பெயரில் அதை அன்று தொகுத்தவர்கள், அதை வாசித்து வாழ்வை அதற்குள் இட்டுச் சென்றவர்கள் இன்றும் இலக்கியத்தின் பெயரில் கையெழுத்திட்டுள்ளனர்.  


படத்தை பார்த்து காமத்தில் காமம் கொள்ளும் வக்கிரத்தை சொன்னதையிட்டு, பெண்கள் அன்றும் இன்றும் மௌனமாக அங்கீகரித்தனர். உங்கள் எழுத்துக்கள், சந்திப்புகள், அதற்குக் கூடிக் குலாவி சுகிக்கப் போன போதே, அர்விந் அப்பாத்துரை இணங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தவறல்ல. குற்றவாளி அரவிந் அப்பாத்துரையல்ல. அவரை வழிகாட்டிய உங்கள் கோட்பாடுகளும், இலக்கிய விபச்சாரமும் தான் அதைத் தூண்டியது என்பது வெள்ளிடைமலை.



அன்று அப்பெண் மூன்று ஆணுடன் உடலுறவு கொள்ள எண்ணினாள் என்றால், நீலப்படக் காட்சியை அங்கீகரித்துள்ளது. அன்று அப்பெண் நீலப்படம் பார்த்ததுடன் ரஐனி, கமல் படத்தைப் பார்த்து ஏற்பட்ட அந்த வக்கிரமான காம உணர்ச்சியை இலக்கியத்தின் பெயரில் அன்று இவரால் கூறமுடிந்தது. பெண்கள் மீதான கொச்சைப்படுத்தலை, பெண்கள் தன்மானம், முதுகெலும்பு அற்றவர்களாக, பெண்களை நீலப்பட ஆணாதிக்க செக்ஸ் பிண்டமாக வருணித்து அலட்சியப்படுத்தியது. இந்த ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்திய போது அவர்களுக்கு அன்று கோபம் வந்தது. இலக்கிய இரசனை தெரியாதவன் என்றீர்கள்! பெண்ணின் சுதந்திரத்தில் தலையிடுவது என்றீர்கள்.

 

அன்றும், இன்றும் அப்படியே அவர் நடைமுறையில் செய்ய ஆசைப்படுகின்றார். அப்படியிருக்க இலக்கிய ஜம்பவான்களே, இப்ப ஏன் வேப்பிலை கட்டிக் கொண்டு சாமியாடுகின்றீர்கள்.  உங்கள் இலக்கியப் படி நடைமுறையில் இது தவறா? அவர் முயற்சி செய்து பார்த்திருக்கின்றார். நீங்கள் இதுவரை செய்யாததையா, அவர் புதிதாக செய்தார். உங்களில் எத்தனை பேர் இதையே தொழிலாக கொண்டவர்கள் உள்ளனர்! உங்களில் எத்தனை பேர் விபச்சாரிகளிடம் செல்லவே, இந்தியா முதல் பல நாடுகளுக்கு செல்லுகின்றீர்கள்;. மானம் கெட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து இலக்கியத்தின் பெயரில் கண்டிக்கின்றனர். நல்ல நகைச்சுவைதான். நீங்கள் அன்றாடம் நடைமுறையிலும் இலக்கியத்திலும் செய்ய முனைந்ததை, அவரும் நடைமுறையில் செய்ய முனைந்தார் அவ்வளவே. இலக்கியத்தில் இதை கூறுவது சரி, வாழ்வில் அல்ல என்ற தத்துவம் இங்கும் புளுக்கின்றது. உங்கள் இலக்கியமும், இலக்கிய இரசனையும், அதை நியாயப்படுத்தும் தத்துவங்களும் இதை கோருகின்றது. பின் ஏன் கண்டனங்கள், கோமளித்தனங்கள். 

 

குற்றவாளி அர்விந் அப்பாத்துரையல்ல. நீங்கள் தான்;, உங்கள் இலக்கியமும் இலக்கிய ரசனையும் தான்;. அர்விந் அப்பாத்துரை குறித்த பெண் தனக்கு இணங்கிப் போவாள் என்ற அனுமானத்தில், முயற்சி செய்கின்றார். ஒரு பெண்ணின் வெளிப்படையான சுதந்திரமான செயல்பாட்டை, தனக்கு இணங்கிப் போகும் நடைமுறையாக கருதி முயன்று பார்த்தார். இங்கு அவர் முயற்சி செய்து பார்க்கின்றார். இது இணங்கிப் போகும் எல்லைக்குள், அப்பெண்ணை கொண்டுவர முனைகின்றார். இணங்கிவிட்டால் அது பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை என்ற கோட்பாட்டு அடிப்படையில், அவரின் அத்துமீறல்கள் மட்டுப்படுத்தப்படுகின்றது. இதைத் தான் அவர் உங்கள் கோட்பாட்டின்படி செய்தார்.

கண்டனத்தில் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் "ஒரு புறத்தில் அரசியல், பொருளியல் அதிகாரங்கள், சாதி ஆதிக்கம், இன மேலாண்மை, ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இப் பாலியல் வதைகள் நிகழ்த்தப்பட்டால், மறுபுறத்தில் சமூக சேவை மற்றும் அகதிகளுக்கு உதவி என்னும் முகமூடிகளுடன்.." திரிவதாக. என்ன மோசடி.


ஏன் வசதியாக வசதி கருதி சிலவற்றை மறந்து போகின்றீர்கள்;. இலக்கியவாதிகளே இலக்கியம் மூலம் பாலியல் வதைகளில் ஈடுபட முடியாதோ? கையெழுத்திட்ட சிலர், அதையே தொழில் முறையாக கொண்டு, இலக்கியம் பேசி செய்கின்றனர். மானம் கெட்டவர்களே! முற்போக்கு பேசி இதைச் செய்ய முடியாதோ? உங்கள் இலக்கிய வரலாற்றில் சிலர் இதைச் செய்திருக்கின்றார்கள், செய்கிறார்கள். இலக்கியத்தின் பெயரிலும், உலகம் முழுக்க பெண்கள் மீதான வன்முறை பற்றி பல வரலாறுகள் உண்டு.

 

நீங்கள் தர்க்கித்து பாதுகாக்கும் மற்றொரு வாதம், பெண் தானாகவே இணங்கிப் போனால் எல்லாம் சரி என்கின்ற ஒரு வாதம். என்ன பெண்ணியம்! என்ன அரசியல்! என்ன முற்போக்கு!


பெண் அல்லது ஆண் இணங்கிப் போதல் என்ற வார்த்தையின் உள்ளடக்கம் என்ன? இங்கு இணங்க வைக்கப்படுவது கூட வன்முறை சார்ந்ததே. இணக்கம் என்பதும், இணங்க வைப்பதும் சமூக ரீதியானது. இங்கு மோசடிகள், நேர்மையினம், கபடம் என்று, மனித இனத்தில் மிக  இழிந்த ஒரு பொறுக்கியின் தளத்தில் இவை இயங்குகின்றது. சந்தையில் பொருட்களை இணங்கி வாங்குவது போன்றது. இங்கு உண்மையில் இணக்கம் இருப்பதில்லை. அதேபோல் இணங்கி உறவு கொள்வது. உண்மையில் சேர்ந்து இணங்கி வாழ்பவர்களும், இந்த மாதிரியான பொறுக்கித்தனத்துக்கும் இடையில் மயிர் இடைவெளியே உள்ளதால், இலக்கியவாதிகளால் பொறுக்கித்தனம் நியாயப்படுத்தப்படுகின்றது. அர்விந் அப்பாத்துரை இணங்கி உறவு கொள்ள முயன்று தோற்றவர். இணங்க வைப்பதில் அவர் தொடர்ச்சியாக கையாண்ட வழியில் வெற்றி பெற்றதாக நம்பிய முயற்சியில் தோற்றபோதே, அதை தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள்.



இந்த இலக்கியவாதிகள் இணங்கிப் போகும் வடிவம் பற்றி பல கதைகள் எழுதியவர்கள் தான்;. இணங்க வைத்தல் என்பதில் பொறுக்கித்தனமான மோசடித்தனமே உண்டு. இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்;. புலிகள் தலைமை சுடு என்றால் சுட இணங்கிப் போகும் தன்மை, தற்கொலை போராளியாக இணங்கிப் போகும் தன்மை எவையும், சமூக நோக்கில் இருந்து பார்ப்பதில்லை. அந்த மனிதன் சுயமான வாழ்வியல் அறிவில் இருந்து இணங்கிப் போவதில்லை. இப்படித் தான் இணங்கிப் போதல் என்பது, வாழ்வில் பல கோணத்தில் நிகழ்கின்றது.

 

சினிமாவில் நடிக்க இணங்கிப் போகும் நடிகைகள், வேலைக்காக உயர் அதிகாரியுடன் இணங்கிப் போகும் பெண்கள், வெளிநாட்டுக்கு ஆட்களை கடத்துபவர்களுக்கு இணங்கிப் போகும் அபலைகள், வீட்டில் பெரியவர்களுக்கு இணங்கிப் போகும் வீட்டில் உள்ள பெண்கள், சாமியாருக்கு இணங்கிப் போகும் பக்தியுள்ள பெண்கள், உயர்சாதிய நிலப்பிரவுக்கு இணங்கிப் போகும் தாழ்ந்த சாதிப் பெண்கள் அல்து கூலிப் பெண்கள், காதலனுக்கு இணங்கிப் போன காதலித்து கைவிடப்பட்ட பெண், இலக்கியத்தின் பெயரில் இணங்கிப் போன பெண், இப்படி இணங்கிப் போகும் ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் அபலைகளே. ஆணாதிக்கம் என்ற பலமான சமூக அமைப்பில், பலவீனமான பெண்கள் இணங்கிப் போனால் அல்லது இணங்க வைக்கப்பட்டால் அதற்கான சமூக காரணத்தை கேள்விக்குள்ளாக்காது நுகர விரும்புபவர்கள் தான், இந்த இலக்கியவாதிகள். உலகெங்கும் பலமுள்ளவர்கள் முன்னால், பெண்கள் இணங்கிப் போகின்றனர். இந்த ஆணாதிக்க அமைப்பின் கட்டமைப்பில் இப்படித்தான் உள்ளது. கணிசமான திருமணங்கள் கூட இணங்கிப் போகும் வடிவத்தில் நிகழ்கின்றன. இணங்கிப் போதல் கூட, காலத்தால் பெண் வன்முறை சார்ந்ததாக உணர்வதை நாம் கண்டுகொள்ள மறுக்கின்றோம். இது எமது அற்பத்தனமாகும். குறித்த காலத்தில் தமது அறியாமை, மற்றும் தமது பலவீனத்தை பயன்படுத்தி ஆண்கள் தமது பாலியல் வக்கிரத்தை தீர்த்ததை பல பெண்கள் காலத்தால் உணருகின்றனர். புலம்பெயர் இலக்கியத்தில் அப்படி பல பெண்கள் உணர்ந்தனர். இங்கு எதிர்மறையிலும் கூட பெண்கள் உணர்ந்துள்ளனர். இலக்கியத்தின் பெயரில் அரசியல் பெயரில் தவறாக வழிநடத்தப்பட்டு, தமது பாலியல் தேவையை ஆண்கள் நுகர்ந்ததை, காலத்தால் பல பெண்கள் உணருகின்றனர். பெண்களை தவறாக வழிநடத்தி, பெண்ணை இணங்க வைப்பது அன்றாடம் நடக்கின்றது. பெண்கள் காலத்தால் அனுபவத்தால் இதை உணர்ந்து கொள்கின்றாள். இதை தன் மீதான வன்முறையாகவே அவள் கருதுகின்றாள்;. இணங்கவைத்து காதலித்து கைவிடப்படும் ஒவ்வொரு பெண்ணும் கூட, இதை தெளிவாக உணருகின்றாள்;. இணங்கவைக்கும் கருத்தியல் ரீதியான மோசடியான வன்முறை, நேரடி வன்முறையை விட மிக பாரதூரமானது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. இலக்கியவாதிகள் தமது சொந்த சுயநலம் சார்ந்த கோட்பாட்டுக்கு இணங்க, கருத்தியல் ரீதியாக இணங்க வைக்கும் மோசடியான வன்முறையை ஆதரிக்கின்றனர். 

 

இணக்கம், இணங்கிப் போதல் போதையில், இசைவெறியில் கூட நிகழ்கின்றது. இதை டிஸ்கோவில் சாதாரணமாக காணமுடியும். இதுவே இலக்கியத்திலும்; நடக்கின்றது. இதற்கு வெளியில் குறிப்பாக ஒரு ஆணும் பெண்ணும் இணங்கி சேர்ந்து வாழும் போது, அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் உண்டு. இது இன்றி மனிதன் இல்லை. பொதுவாக இலக்கியம் மற்றும் அரசியல் பேசும் சிலர் இந்த முரண்பாட்டை பயன்படுத்தி, பெண்களை நுகரும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனர். முரண்பாட்டின் ஒரு தொங்கலில் தொடங்கி பெண்ணை தமக்கு இணங்க வைக்கும் நுகர்வுக் கண்ணோட்டத்துக்குள்; கொண்டு வந்து, தமது தேவைக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்குகின்றனர். இதைத் தான் சாமிமாரும் செய்கின்றனர். மனிதனின் பலவீனங்கள் மீதான உளவியல் ரீதியான சிதைவை, தமது சொந்த வக்கிரத்துக்கு பயன்படுத்துவது, சமூக இயக்கத்தில் பொதுவாக காணப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் என்ற கோட்பாட்டைக் கொண்டு, இதைத் தர்க்கரீதியாக இலக்கியவாதிகள் தமக்கு சார்பாக பயன்படு;த்துகின்றனர். 

 

பெண்கள் தாங்களாக இயங்கி இணங்கிப் போதல் என்பது கூட ஆணாதிக்க பாலியலையே நியாயப்படுத்துகின்றது. பெண்ணின் அறியாமையை, ஆணாதிக்க அமைப்பின் பாதிப்பால் ஏற்படும் துயரத்தையும், அவர்களின் பலவீனத்தை இணங்கவைத்து பாலியல் ரீதியாக நுகர்வது ஆணாதிக்கம் தான்;. இதற்குள் ஒரு வன்முறை உண்டு. இலக்கியத்தின் பெயரில், வாழ்வு சார்ந்த ஒழுக்கம் பற்றி கேள்விகள் ஊடாக, பெண்ணை இணங்க வைத்து பாலியல் ரீதியாக உறவு கொள்வதும் பாலியல் வன்முறை தான்.

 

இணங்கவைத்தல் என்பது இந்த சமூக அமைப்பில் மோசடிகளால், நேர்மையீனத்தால், நயவஞ்சகத்தால், பலத்தால், அதிகாரத்தால், சமூக ஆளுமையால் எப்போதும் அப்பாவிகள் மீது பெருமளவில் நிகழ்கின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் குழந்தைகள் அதிகளவில் இணங்க வைக்கும் இந்த வன்முறைக்குள் பாதிக்கப்படுகின்றனர். இது சந்தை முதல் பெண்ணின் உடலை நுகர்தல் வரை இதுவே இன்றைய எதார்த்தமாகும்.

 

ஒரு பெண் இணங்கிப் போதல் என்பது கவர்ச்சி, பின் தங்கிய அறிவியல், சமூகப் பார்வை இன்மை, பலவீனங்கள், சொந்த பாதிப்புகள், உளவியல் சிக்கல்கள், நம்பிக்கை மோடிகள் குறிப்பாக இதை தீர்மானிக்கின்றது. இதைச் சமூகம் பொதுவான நுகர்வு பண்பாடாக உருவாக்குகின்றது. திரும்பிய இடமெல்லாம் பாலியல் ஊடாகவே உலகம் காட்டப்படுகின்றது. பாலியலே முதன்மையான செய்தியாக, மனித இருத்தலின் மையக் கூறாக காட்டப்படுகின்றது. இங்கு இணங்கிப் போதல் இயல்பானதாக, நியாயமானதாக காட்டப்படுகின்றது. விளம்பரம்  முதல் சினிமா வரை இதையே செய்தியாக காட்டுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் நுகர்வின் எல்லைக்குள் இணங்கி உறவு கொள்வதை, இந்த புலம பெயர் இலக்கிய குஞ்சுகள் பெண்ணியம் என்கின்றனர். ஒரு பெண் இணங்கி சேர்ந்து வாழ்தல் என்பது வேறனாது. மாறாக வாழ்வுக்காக அல்லாது குறித்த உறவுக்காக உறவு கொள்ளும் நுகர்வு வேறு. இங்கு இணக்கம் என்பது ஏகாதிபத்திய நுகர்வுக்குட்பட்டது.

 

நாங்கள் பொருட்களை பயன்படுத்தும் போது, அது வாழ்க்கை ப+ராவும் பாவிக்கும் கண்ணோட்டத்தில் அதை நுகர்வது ஒருவகை. இதற்கு மாறாக கணநேரத்தில் நுகர்ந்த பின் அதை தூக்கி எறியும் கண்ணோட்டமும் உண்டு. இரண்டும் இந்த உலகில் உள்ளது. இதுவே பெண் பற்றிய ஆணின் பார்வையையும், ஆண் பற்றிய பெண் பார்வையையும் சரி, வாழ்வில் பாலியல் கருத்துகளையும் தீர்மானிக்கின்றது.

 

இணங்க வைப்பதற்காக அன்றாடம் மூளைச்சலவை செய்யும் ஆணாதிக்க ஆண்கள் சமூகம் தான் இது. தமிழ் மக்களை தேசியத்தின் பின் இணங்கவைக்க, எப்படி குறுந் தேசியம் முனைகின்றதோ, அப்படித்தான் இதுவும். இந்த முயற்சியில் பெண்கள் விழிப்புறும் போது, பலர் தோற்றுப் போகின்றனர். அர்விந் அப்பாத்துரையும் குறித்த பெண் இணங்கிப் போவாள் என்ற இலக்கிய ஜம்பவான்களின் கணிப்பீட்டுடன் முயன்றவர். அவள் மறுக்க, அதை வன்முறை என்று இவர்கள் கூப்பாடு போடுகின்றனர். இங்கு உங்களைப் போல் இணங்க வைப்பதில் அத்துமீறல் நடந்தது. அவள் மறுக்க, அவன் விட்டுவிடுகின்றான். கற்பழிக்க முனையவில்லை. இங்கு இணங்க வைப்பதில் ஒரு அத்துமீறல் இருந்துள்ளது. உங்கள் கோட்பாட்டுப்படி இணங்க வைப்பது வன்முறை இல்லை என்றால், இணங்க வைக்கும் அந்த முயற்சியும் வன்முறையல்ல. குறிப்பாக இதே அர்விந் அப்பாத்துரை இப்படி முன்பும் ஈடுபட்டவர் என்றால், அங்கு இணங்கிப் போகும் வழிமுறை வெற்றிபெற்றுள்ளது என்றே அர்த்தமாகும். அதனால் தான் அவருடன் நீங்கள் ஒன்றாக கூடி இலக்கியம் பேசியதுடன், கூடிக் குடித்தீர்கள்.

 

இங்கு ஆணாதிக்க அமைப்பு சார்ந்த இணங்க வைக்கும் கோட்பாட்டை, இந்த கண்டன அறிக்கை தனக்குள் ஆதரித்து நிற்கின்றது. அதனால் இணங்க வைப்பவர்கள் கையெழுத்திட முடிந்தது. மறுதளத்தில் இணங்க வைக்கும் முயற்சிகளின் போது பெண் பாதிப்படைகின்றாள். அவள் கொதித்துப் போகின்றாள்;. தனிப்பட்ட நம்பிக்கையை மோசடியாக பயன்படுத்திய போது, அந்தப் பெண்ணின் பாதிப்பு கடுமையானது.


இந்த வன்முறை முயற்சியை கண்டிக்கும் போது, ஆணாதிக்க அமைப்பின் நோக்கங்களை தோலுரித்துக் காட்டவேண்டும்;. "ஒரு புறத்தில் அரசியல், பொருளியல் அதிகாரங்கள், சாதி ஆதிக்கம், இன மேலாண்மை, ஆயுதங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இப் பாலியல் வதைகள் நிகழ்த்தப்பட்டால், மறுபுறத்தில் சமூக சேவை மற்றும் அகதிகளுக்கு உதவி என்னும் முகமூடிகளுடன்.." என்று விடையத்தை திரித்து மோசடி செய்வது நிகழ்கின்றது. ஏன் அர்விந் அப்பாத்துரை இப்படி செயல்பட்டார், என்ற அடிப்படையான காரணத்தை திட்டமிட்டு ஆராயவே மறுக்கின்றது. உங்கள் மனிதவிரோதக் கோட்பாடுகள் இதற்கு எப்படி துணை போனது என்பதையே, மூடிமறைக்கின்றது. இலக்கிய வட்டத்திற்குள்ளான இச் சம்பவத்தை  கூட, அவர்கள் சொல்ல முற்படவில்லை. இங்கு தான் இந்த கண்டனத்தின் பின்னால் உள்ள வேஷம் அம்பலமாகின்றது. சமூகத்தின் பல கூறுகள் மீது வலிந்து கண்டனம் தெரிவித்தவர்கள், ஏன் இலக்கியத்தின் மீது முற்போக்கின் மீது இது போன்ற முயற்சிகளை கண்டிக்கவில்லை. மாறாக ஒப்புக்கு மாரடிக்கின்றனர். இந்த இலக்கியவாதிகளின் அன்றாட முயற்சிகளும் நடைமுறைகளும் இதற்குள் தான் உயிர் வாழ்கின்றது.

 

இந்த இலக்கியவாதிகளுடன் கூடித்திரிந்த போது அர்விந் அப்பாத்துரையின் அரசியல் என்னவாக இருந்தது. அதை அவர் எக்சில் 2 இல் எழுதியிருந்தார். "ஜாதி வேற்றுமை பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்து போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிமாணங்களிலும் பெண்ணியம் தலித்தியமும் வௌ;வேறு போராட்டங்கள்." என்றார். இதை நாம் அன்றே விமர்சித்தோம். இவர் தன்னை ஒரு தலித்தியல்வாதியாக, பின்நவீனத்துவ வாதியாக காட்டியவர். புலம்பெயர் இலக்கியவாதிகளுடன் இப்படித் தான் புரண்டு எழுந்தவர். தனது மக்கள் விரோத எழுத்தை, கம்யூனிச விரோதமாக இவர்களுடன் கூடி எழுதிய அர்விந் அப்பாத்துரை "தத்துவரீதியில், கம்ய+னிசம் என்பது சம உரிமைக்கான போராட்டம். இது முக்கியமான பொருளாதார, சமத்துவத்திற்கான போராட்டம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ...... மார்க்சிய வாதிகள் பெண்ணியப் போராட்டத்தில் பங்கு பெறுவோருக்கு துணை நிற்கக் கூடும் இதைத் தவிர்த்து கம்ய+னிசத்திற்கும் பெண்ணியப் போராட்டத்திற்கும் என்ன நேரடித் தொடர்பு இருக்கின்றது என்பது ஒரு "பூடகம்" என்கின்றார்." இப்படி சுயநலம் கொண்ட ஒரு கம்யூனிச விரோதியாக இருந்ததை, நாம் அன்றே அம்பலம் செய்தோம். சொந்த ஏகாதிபத்திய ஆணாதிக்க நுகர்வுக் கலாச்சாரத்தை நியாயப்படுத்த, பெண்ணியத்தை திரிக்க வேண்டியேற்பட்டது. இதனால் கம்ய+னிசத்தை ஒடுக்கவேண்டிய நிலையேற்பட்டது. அதை கோட்பாட்டு ரீதியாக கொச்சைப்படுத்த வேண்டிய நிலை எற்பட்டது. இதனால் புலம்பெயர் இலக்கியவாதிகளின் சஞ்சிகைளில் இவை வெளிவந்தன. கண்டன அறிக்கை இதை எதையும் பேசாது மூடிமறைக்கின்றது.

 

பெண்ணியம், பெண் தலித்தியம் என்று எல்லாம் கூறிக் கொண்டு என்ன செய்தார்கள், செய்கின்றார்கள் என்பதை இங்கு எதார்த்தத்தில் நாம் காண்கின்றோம்;. இலக்கியச் சந்திப்புகள் மற்றும் சமூக இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு என்ன நடந்தது என்பதை, கடந்தகாலத்தில் நாம் நெருங்கிவைத்து அணுகிப் பாhக்கமுடியும்;. யார் இந்தக் கோட்பாடுகளை சொன்னாலும், தாம் தெரிவு செய்துகொண்டு ஆணுடன் இணங்கி வாழ்ந்தவர்கள் தவிர, இணங்க வைத்து நுகர்ந்த பெண்களின் குமுறல்களை இட்டு இதில் கையெழுத்திட்டவர்களுக்கு ஒரு துளி கூட அக்கறையிருப்பதில்லை. அங்கும் ஒரு மோசடி, கயமத்தனம், ஏமாற்றுதல் இருந்தது என்பதை, இந்த வன்முறை எதிர்ப்பாளருக்கு தெரிவதில்லை. ஆனால் இவை அனைத்தையும் முதுகுக்குப் பின்னால், அரட்டை அடிப்பவர்கள் தான் நீங்கள்.

 

குறிப்பாக அர்விந் அப்பாத்துரையுடன் இந்தப் பெண் இணங்கிப் போயிருந்தால், அது பெண்ணியம் என்பது இவர்கள் கோட்பாடு. இப்படி சோரம் போதல் கோட்பாட்டிலேயே உள்ளது. இந்த இலக்கிய வாதியான அர்விந் அப்பாத்துரையும் கூட ஒரு வன்முறை எதிர்ப்பாளாராக காட்டியவர். 3.10.1999 அன்று பாரிஸ் இலக்கிய கும்பல் நடத்திய வன்முறை ஒன்றின் போது, இவர் தனியாகவே அதை பற்றி திரித்து கண்டன துண்டுபிரசுரம் வெளியிட்;டவர். பாரிசின் பல இலக்கிய முயற்சியில் இவர்தான் போசகர். இவரின் மண்டபம் இலக்கியவாதிகளின் தங்குமிடமாக இருந்தது. அண்மையில் குஷ்புவுக்கு ஆதரவாக இலக்கிய சந்திப்புச் சார்பாக அறிக்கை செய்தவர்களில் இவரும் ஒருவர். கணேசலிங்கத்தின் கற்பழிப்பை கண்டித்தவர்.

 

இப்படி மற்றைய இலக்கிய ஜம்பவான்களுக்கு குறைந்து நின்று குலைக்கவில்லை. நன்றாகவே குலைத்தவர். அவரின் கடந்தகால பாணியில் மற்றைய இலக்கியவாதிகள், வாலையாட்டியபடி விசுவாசமாக அவரைப் பார்த்து குலைக்கின்றனர். அவர் தம்முடன் இலக்கியத்தில் பெயரில் கூடிக் குலைத்ததையும், கூடிக் குடித்ததையும் மட்டும் மூடிமறைத்தபடி எதைத் தான் கண்டிக்கின்றனர்? தெரிந்தால் சொல்லுங்கள்.

18.01.2006