செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துகிறவர்கள் இளைஞர்கள், இளைஞிகள் தான். மணிக்கணக்கில் அவர் கள் செல்போன்களில் நண் பர்களுடனும் காதலனுடனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ். அனுப்புவதிலும் அதை பார்ப்பதிலும் கூடுதல் நேரத்தை செலவிடு கிறார் கள்.

ஸ்பெயின் நாட்டு கிரினேடா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி ஒரு ஆய்வு நடத்தினார்கள். 18 முதல் 25 வயதுக்கு உள்பட இளைஞர்களிடம் 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின்படி 40 சதவீத வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் தினம் 4 மணி நேரத்துக்கும் மேலாக செல்போனை பயன்படுத்து வதாக தெரிய வந்துள்ளது.

உடல் ரீதியாக இவர் களுக்கு எந்த பாதிப்பும் ஏற் படவில்லை. ஆனால் அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவது அவர்களது மனநிலையை பாதிக்கிறது. போதை மருந்துக்கு அடிமை யாவது போல் செல்போன் களுக்கு இவர்கள் அடிமையாகி விடுகிறார்கள்.

மன உளைச்சல், விரக்தி, ஏமாற்றம், கோபம் போன்றவை அதிகரிக்கிறது. எஸ்.எம்.எஸ்., `மிஸ்டு கால்' போன்றவற் றுக்கு பதில் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் பதட்டம் அதிகமாகிறது.க நேரம் செல்போன் பயன்படுத்தினால் மன நிலை பாதிக்கும்
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1173101476&archive=&start_from=&ucat=2&