உடல் பாகங்களில் உள்ள செல்களில் இருந்து உயிர் அணுவை உருவாக்கும் குளோனிங் முறையை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இப்போது ஜெர்மனி விஞ்ஞானிகள் எலும்பு மச்சையில் இருந்து குழந்தைகளை விந்து அணுவை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

காட்டிசன் பல்கலைக்கழகம் ஹானேபா மருத்துவ கல்லூரி ஆகியவை சேர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 5 வருடத்தில் உயிர் அணுவை உருவாக்கி விடுவோம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எலும்பு மச்சையில் ஸ்டெம் செல்கள் இருக்கின்றன. இவற்றை பல வகையான செல்களாக மாற்றுகின்றனர். பின்னர் அதை விந்து அணுவாக மாற்ற முடியும் என்று கண்டுபிடித்து உள்ளனர்.

இது விந்தணு குறைபாடு உள்ள ஆண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றும் விஞ்ஞானிகள் கூறினார்கள்.

குளோனிங் முறையில் குழந்தைகளை உருவாக்க ஏற்கனவே தடை உள்ளது. இந்த ஆராய்ச்சிக்கும் தடை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1176624177&archive=&start_from=&ucat=2&