lankasri.com ஆண்-பெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள் பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

டெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்-பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1192292010&archive=&start_from=&ucat=2&