lankasri.comசாப்பிடும் அளவை குறைக்காமலேயே, உடல் எடையை குறைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. ஹார்வர்டு புளோரி கழகத்தை சேர்ந்த மைக்கேல் மதாய், எலிகளிடம் இது தொடர்பாக சோதனை நடத்தினார். எலிகளில், கொழுப்பு செல்கள் அவற்றின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவது எப்படி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


எலிகளில் ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம் என்ற பொருள் நீக்கப்பட்டு விட்டால், மற்ற எலிகளைப் போலவே, அவை உணவு உட்கொண்டாலும், அதில் உள்ள கலோரி வெகுவிரைவில் எரிக்கப்பட்டு, சக்தியாக்கப்பட்டுவிடுகிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எனவே, ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம்களை செயலிழக்கச் செய்வதன் மூலம், வழக்கம் போல உணவு உட்கொண்டாலும், உடல் எடையை குறைக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம்களை செயலிழக்கச் செய்யக் கூடிய மருந்துகள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. ஆனால், இவை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இதுவரை பரிந்துரை செய்யப்பட்டு வந்தன.


தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சோதனை முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும் வகையில் இருந்தால், ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம்களை செயலிழக்கச் செய்யும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உருவாகும். இதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1209621305&archive=&start_from=&ucat=2&