![]() உலகில் hybrid embyro உருவாக்கத்துக்கு எதிராக கிறிஸ்தவ மற்றும் மதம் சார் அமைப்புக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் மனித முட்டைக்கு ஆய்வுசாலைகளில் கடும் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையிலும்.. மனித முளையங்கள் இவ்வாய்வின் பின் அழிக்கப்படுவது குறித்தும் சர்ச்சைகள் இருந்து வந்துள்ள நிலையிலும் பிரித்தானிய அரசின் இச்சட்டவாக்கம் உலகுக்கு முன்மாதிரியாக அமைகின்றது..! இந்த அனுமதி உயிரியல் தொழில்நுட்பத்துறையில் மருத்துவரீதியான முளையவியல் மற்றும் உறுப்புக்களின் ஆக்கம் தொடர்பான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட உதவும். இருப்பினும்... இந்த வகையில் மனிதக் குழந்தையை உருவாக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |