03262023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை.அந்த கலையை முறையாக ஒவ்வொரு பெற்றோரும் பயன்படுத்தினால் நாளைய தலைமுறை வீட்டுக்கும்,நாட்டுக்கும்,ஏன் உலகத்திற்க்கே எடுத்துகாட்டாக விளங்குவார்கள்.

 

அதற்கு முக்கியமானது என்ன?என்ன தேவை?நம் பிள்ளைகளுக்கு தேவை ஒன்றே ஒன்று தான் அது கனிவான அன்பு.


பெற்றபிள்ளை மேல் அன்பு இருக்காது பாசம் இருக்காதா என்று என்னை யாரும் திட்டவேண்டாம்.பெற்றோம் வளர்த்தோம் என்று இருக்க கூடாது.என் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும்.அதிக மதிப்பெண் பெறனும்.என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்களே தவிர என் பிள்ளை நல்ல குடிமகனாக இருக்க வேண்டும்,அவனால் அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் பலருக்கும் முன் உதாரனாமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சொற்பம் தான்.
இதிலும் சிலர் குழந்தையை இப்படி வளார்க்க வேண்டும் என்று நினைப்பார்களே தவிர அதற்க்கான முயற்சி எடுக்காமல் அப்படி செய் இப்படி செய் என்று அவர்களை அதட்டினால் ஏதும் நடக்காது.
இது பிள்ளைகளின் தவறு இல்லை.பெற்றொரின் தவறு.
என்னிடம் ஒரு தோழி கேட்டார்,உன் பிள்ளையை யார் போல் வளர்ப்பாய்?ஏதேனும் கொள்கை படி வளர்ப்பாயா என்று....
நான் என் அவனை அவனாக வளார்ப்பேன்.யாரையும் பின்பற்ற போவதில்லை.அவரை போல் இவன் குணம்.அவரை போல் இவன் இருக்கிறான் என்பதை விட இவனை போல் நாம் இருக்க வேண்டும்.இவன் குணம் யாருக்கும் இல்லை.வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் அது இவனிடம் தான் அனைத்தும் கற்க வேண்டும்.என்று அனைவருக்கும் என் மகன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று பல முயற்சிகள் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளேன்.


நாம் செய்ய வேண்டியது குழந்தைகளோடு நாம் மீண்டும் குழந்தையாக வளர வேண்டும்.

 

http://www.arusuvai.com/tamil/forum/no/8442