1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?
2. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?
3. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?
4. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?
5. தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?
6.உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
7. வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?
8.ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

விடைகள்:
1.வெங்காயம், 2. தபாற் பெட்டி, 3.தேங்காய், 4. சிலந்தி, 5. தண்ணீர், 6. அகப்பை, 7. மழை மேகம், 8. முட்டை.

 

http://fleshcia.spaces.live.com/blog/cns!AF9156EA3CC641BD!146.entry