02082023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

தையல் கற்கலாம் வாங்க(பகுதி-1)

நமது இணையதளத்தில் "தையற்கலை" என்கிற பிரிவு ஏற்கனவே இருந்தாலும் , ஆரம்பத்திலிருந்து தையற்கலையை முறைப்படி கற்க வேண்டுமென்ற ஆவலுடன் நம்மிடத்தில் கோரிக்கை வைத்த உறுப்பினர்களுக்காக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தையல் தெரிந்தவர்களூக்கு இது மிக சுலபமாக தெரிந்தால் அடுத்து அடுத்த பகுதியை பார்ககவும்

 தையல் கற்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை முதலில் பார்ப்போம்
 

 

  1. முதலில் தையல் மெஷினில் நூல் போடுவதை பழக வேண்டும் (எல்லா  மெஷின்களிலும் நூல் போடுவது ஒரே மாதிரி இருந்தாலும் , சில மெஷின்களில் கொஞ்சம் மாறுபடும்.)

Image

2ஒரு பேப்பரில் படத்தில் பார்ப்பது போல் கோடு போட்டு

Image

   3.துணியில் அடித்து பழகுவதற்கு முன் பேப்பரில் அடித்து பழகுங்கள். தையல் நேராக வருவதற்கு நாளாகும்.அதுவரை பேப்பரிலேயே அடித்து பழகிவிட்டு துணியில் அடிக்க ஆரம்பியுங்கள்.
   
   4.அதே போல் எதை தைக்க போகிறோமோ அதை பேப்பரில் அளவெடுத்து வரைந்து, வெட்டி பழகிய பிறகு தான் துணியில் வெட்ட வேண்டும்.( இல்லாவிடில் துணி கடைக்கு ஏறி, இறங்க வேண்டியது தான் !! எந்த கடையில் குறைந்த விலையில் துணி கிடைக்கும் என்று.. )  வெட்டிய  அந்த பேப்பரையே துணியின்
  மேல் போட்டு அதே அளவிலேயே துணியை வெட்டலாம்.

   5. அளவெடுத்து வரையும் போது தையலுக்கென்று 1 அல்லது 1 1/2 இன்ச் இடம் விட்டு வெட்ட வேண்டும்.

   6. பேப்பரில் வெட்டுவதற்கு தனி கத்திரியும் , துணியில் வெட்டுவதற்கு வேறு கத்திரியும்  பயன்படுத்துங்கள். துணியில் வெட்டுவதற்கு தரமான கத்திரியாக இருக்க வேண்டும். துணிவெட்டும் கத்திரியை பேப்பருக்கு பயன்படுத்தினால் சீக்கிரம் நாசமாகி விடும்
  

    7ஒரு துணியை இன்னொரு துணியோடு சேர்த்து தைக்கும் போது (எ.கா . கைகளை இணைக்கும் போது)  pin வைத்து குத்தினால் குழையாமல் இருக்கும்.

 

 மறக்காமல் அடுத்து அடுத்த பகுதியை பார்ககவும்.

அப்போது தான் உங்களுக்கு இலகுவாக இருக்கும்

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=475&Itemid=66