உழைத்து வாழும் மக்களுக்கு எதிராக இயங்கிய ஒரு துரோகியன் மரணமும், எகாதிபத்திய அஞ்சலிகளும்.
வெளிவரவுள்ள நூலில் இருந்து
ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். அவரின் நூலான ~~தி குலாக் ஆர்சிபிலாகோ|| மூலம் 1960 களின் இறுதியில் ஸ்டாலின் எதிர்ப்பு கட்டமைக்கப்பட்டது. இவர் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்து பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க முனைந்தமையால் 1946 முதல் எட்டு வருடம் சிறையில் இருந்தவர். ஸ்டாலின் மரணத்துடன் நடந்த முதலாளித்துவ மீட்சியில் தப்பி ~~ஜனநாயகவாதி||யானவர். இவர் இராண்டம் உலக யுத்தத்தில் சோவியத் நாசிகளுடன் சமரசம் செய்து சரணடைந்து இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அத்துடன் நாசி ஆதாரவு அனுதபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், துரோகி என்று கண்டிக்கப்பட்டு தண்டிக்ப்பட்டவர்.
ஸ்டாலினை தூற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அமெரிக்காவுடன் தேன்நிலவை தொடக்கிய சமாதான சக வாழ்வு நாயகன் குருசேவின் துணையுடன், 1962 இல் தனது நூல்களை பதிப்பிக்க தொடங்கினான். ஒரு கைதியின் வாழ்க்கை என்ற ''ஐவான் டெனிசோவிச" என்ற 'வாழ்வின் ஒரு நாள்" என்பது அவர் பதிப்பித்த முதல் நூலாகும். இதையே குருசேவ் ஸ்டாலின் எதிர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினான். சோல்ஜெனித்சின் நூலான ~~தி குலக் ஆர்சிபிலோகோ|| என்ற அவரது நூலுக்கு 1970 இல் ஏகாதிபத்திய ஆதாரவுடன் நேபால் பரிசு பெற்றது. இவர் ஏகாதிபத்திய நாடுகளின் பிரபலமான ~~ஜனநாயகவாதி||யாகி, சோவியத் எதிர்ப்பிரச்சாரத்தின் கள்ளத் தந்தையானன். 1974 இல் சோவியத் குடியுரிமையை துறந்து சுவிட்சர்லாந்திலும், பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அவர் ஒரு நாஜி அனுதாபி, ஆதரவாளன் என்பது மறைக்கப்பட்டு, உழைப்பு முகாம் பற்றிய செய்திகள் முதல், பல பத்து லட்சம் படுகொலை செய்திகள் வரை உயிருட்டப்பட்டது. இவன் பல கூட்டங்களின் முக்கிய பேச்சாளன் ஆனான். இவன் வியட்நாம் மீதான அமெரிக்கா ஆக்கிரப்பில், அமெரிக்கா தோற்று ஒடிய பின்பு, மீன்டும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற கோரிய கம்யூனிச எதிர்ப்பு ~~ஜனநாயக|| வாதியானன். இந்த ஸ்டாலின் எதிர்ப்பு ஜனநாயகவாதி 40 ஆண்டுகால போர்ச்சுக்கலில் இருந்த பாசிச ஆட்சியை, இடதுசாரி இராணுவ அதிகாரிகள் கவிட்ட போது, உடனடியாக அமெரிக்கா தலையீட வேண்டும் என்று கோரினான். அவனின் உரையில் போர்ச்சுக்கலில் இருந்து ஆபிரிக்கா காலனிகள் விடுதலையடைவதை, அச்சத்துடன் தூற்றியே ~~ஜனநாயக||வாதியாவன். சோவியத்தில் பல பத்து லட்சம் கொல்லப்பட்டது முதல் கட்டாய உழைப்பு முகம் பற்றிய கற்பனைகளை கட்டிவிட்டதுடன், வியத்நாமில் பல பத்தாயிரம் அமெரிக்கர் பிடிக்கபட்டு அடிமையாக்கப்பட்டு கட்டாய உழைப்பு முகங்களில் வதைபடுவதாக தொடுத்த எதிர்புரட்சிகர பிரச்சாரத்தில் தான், கம்யூனிச எதிர்ப்பு ''ராம்போ" போன்ற சினிமாக்கள் உற்பத்தியானது.
அவதூறு மூலம் சோவியத் மக்களை கொன்று, அவர்களின் முதுகில் எறி மார்க்சியத்தை கழுவில் எற்றினர்
ராப்ர்ட் கான்குவஸட் என்பவன் 1961 செய்த கணக்குப் படி 1930 ஆரம்பத்தில் சோவியத்தில் 60 லட்சம் பட்டினி சாவாக காட்டினான். இவன் மீண்டும் இதை 1986 இல் அதை 140 லட்சமாக உயர்த்திக் கொண்டான். இவனின் கணக்கு படி 1937 களையெடுப்பு தொடங்க முன்பு குலாக்களான நிலப்பிரபுகளின் கொல்லப்பட்ட எண்ணிக்கை 50 லட்சம் என்றான். களையெடுப்பு தொடங்கிய பிறகு அதாவது 1937-1938 இல் இவ் எண்ணிக்கை 70 லட்சமாக்கினான். பின்பு 1939 இல் உழைப்பு முகாமில் 120 லட்சம் என்று கணக்கை கூட்டிக் கொண்டான். இந்த 120 லட்சம் பேரும் அரசியல் கைதி என்கின்றான். இந்த அரசியல் கைதிகளை உள்ளடக்கிய கிரிமினல் கைதிகள் மொத்தமாக, 250 முதல் 300 லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்கின்றான். ராப்ர்ட் கான்குவஸட் கணக்கு படி 1937-1939 காலகட்டத்தில் 10 லட்சம் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்கின்றான். ஆனால் பாரிசில் வெளிவரும் அம்மாவில் எழுதிய கள்ளக் குழந்தையாக உருவாகிய கம்யூனிச எதிர்ப்பு நாயகன் 15 லட்சம் கொல்லப்பட்டதாக, கதையை உருவாக்கி, கள்ளத் தந்தையான குருவையே மிஞ்சிவிடும் சீடர்களாகி விடுகின்றனர். இக்கால கட்டத்தில் ராப்ர்ட் கான்குவஸட் கணக்கு படி மேலும் 20 லட்சம் பேர் பட்டினியில் இறந்து விட்டனர் என்கின்றான். 1937-1939 களையெடுப்புக்கு பின் கைதியாக 90 லட்சம் சிறையில் இருந்தனர் என்கின்றான். இதை பின் சரிக்கட்ட 1939 -1953 க்கும் இடையில் 120 லட்சம் கைதிகளை கொன்று விட்டனர் என்று கூறி, புள்ளிவிபரத்தை விரிவாக்கினன். மொத்தமாக அவன் 1930 முதல் ஸ்டாலின் காலம் வரை 260 லட்சம் பேர் (2.6 கோடி பேர்) கொல்லப்பட்டனர் என்றான். 1950 இல் 120 லட்சம் பேர் சிறையில் இருந்தனர் என்கின்றான்.
இதைப் போலவே அலெக்சாண்டர் சோல்ஜெனித்சினும் புள்ளிவிபரத்தை வெளியிட்டான். 1932-33 பஞ்சத்தால் 60 லட்சம் பேர் இறந்தனர் என்றும், 1936 -1939 க்கு இடையில் வருடம் பத்து லட்சம் பேர் இறந்தனர் என்ற கணக்கு காட்டினான். அலெக்சாண்டர் சோல்ஜெனித்தின் கணக்குபடி கூட்டுபண்ணை உருவாக்கம் தொடங்கியது முதல் ஸ்டாலின் இறந்த கால கட்டம் வரை மெதத்தமாக 660 லட்சம் பேரை (6.6 கோடி பேரை) கம்யூனிஸ்ட்டுகள் கொன்று விட்டனர் என்கின்றார். இது தவிர இரண்டாம் உலகப் போரில் 440 லட்சம் பேர் கொல்லப்பட்டதுக்கும் ஸ்டாலினே பொறுப்பு என்கின்றான். மொத்தத்தில் 11 கோடி மக்கள் சோவியத்தில் கொல்லப்பட்டதாக கூறுகின்றான். அதாவது சனத்தொகையுடன் இது எப்படி பொருந்தும் என்பது கம்யூனிச எதிர்ப்பு அறிவுத்துறையினருக்கு அவசியமற்றவை. அதே நேரம் 250 லட்சம் பேர் சிறையில் இருந்தாக வேறு கணக்கு காட்டினன். இந்த அவதூற்றுக்கு எந்தவிதமான ஆதாரமோ, மூலமோ கிடையாது. இதை மூலமாக்கி ஆதாரமாக்கும் கனவுடன், ஸ்டாலின் அவதூற்றைச் தொடர்ந்து செய்ய கோர்ப்ச்சேவ் இரகசிய கட்சி ஆவணங்களை திறப்பதன் மூலம், கட்டமைத்து வந்த கம்யூனிசத்துக்கு எதிரான அவதூற்றை நிறுவவிரும்பினர். கோர்ப்ச்சேவ் - ரீகனின் வேஷைத்தனத்தில் உருவான, புதிய சுதந்திர செய்தி ஊடகம் கட்டமைக்கப்பட்ட படுகொலை அவதூறுகளை விரிவாக்கியது. இந்த புதிய சுதந்திர செய்தி ஊடகத்தின் கோரிக்கையை ஏற்று, ஸ்டாலின் எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்புக்காக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் ஆவணப்பகுதி, ஆய்வுகாக சுதந்திரமாக திறக்கப்பட்டது. இந்த ஆவணம் திறக்கப்பட்டதன் மூலம், கட்டுக் கதையாக உருவாக்கிய கொல்லப்பட்டோ, சிறையில் அடைக்கப்டடோர் பற்றிய தரவுகளை உறுதி செய்யும், என்று எல்லா ~~ஜனநாயக|| மற்றும் கம்யூனிச எதிர்ப்பு போலி மார்க்சிய வாதிகளும், ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளும் சாதித்தனர். இந்த ஆவணக் காப்பாகத் தரவுகள் பிரசுரமாக தொடங்கியவுடன், இந்த புள்ளிவிபர கட்டுக் கதையாளர்கள், அதைப் பற்றி வாய் திறப்பதை மறந்து போனர்கள். ஜெம்ஸ்கோவ், டௌஜின், ழெவன் ஜீக் ஆகிய ருசிய வரலாற்று ஆசிரியர்கள் மத்திய கமிட்டியின் ஆவணக் காப்பகத்தை ஆதாரமாக கொண்டு, 1990 இல் அறிவியல் ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியிடத் தொடங்கினர். இந்த ஆய்வு அறிக்கை வெளிவரத் தொடங்கியவுடன், கம்யூனிச எதிர்ப்பு, ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரி நாயகர்கள் தமது சொந்த முகம் அம்பலமாகத் தொடங்கவே, வேண்டுமென்றே அதைக் கண்டு கொள்ள மறுத்தனர். உண்மையில் எகாதிபத்திய ஜனநாயகவாதிகள் முதல் மாhக்சிய வேடம் போடும் இடதுசாரி பாதகை கீழ் பிழைப்பு நடத்தவோருக்கு, ஸ்டாலின் எதிர்ப்பு கம்ய+னிச எதிர்ப்புகான மூலம், ஆதாரமற்ற புள்ளிவிபரங்களை முன்வைத்து சர்வதேச மூலதனத்தின் ஆதரவுடன் அறிவு துறையினராக இயங்கிய இந்த மூவருமேயாகும். இவர்கள் தான் இந்த புள்ளிவிபர அவதூறுகளின் கள்ளத் தந்தைகள் ஆவர். இதில் இருந்தே பலரும் புள்ளிவிபரங்களை தொகுக்கின்றனர். இந்த கம்யூனிச, ஸ்டாலின் எதிர்ப்பு அவதுறை விரிவாக்க இடதுசாரி பாதகை ஒரு புதிய வடிவமாக உள்ளது. சிவப்புக் கொடியை ஆட்டியபடி எப்படி எதிர்ப்புரட்சி கம்யூனிசத்துக்கு எதிராக இயங்குவது போல், இடதுசாரி மாக்சிய பாதைகையின் கீழ் பழைய ஏகாதிபத்திய புள்ளிவிபரங்களை சரிபார்த்து அவதுறை அடிப்படையாக கொண்டு தொகுக்கின்றனர்.