காய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.


1. கீரை, முட்டைக்கோஸ் ஏன் சாப்பிடணும்?

சில உணவுகளில் உள்ள கிருமி நாசினிகளையும், தேவையற்ற ரசாயனங்களையும் பிரித்து உணவை ஜீரணிக்கச் செய்வதால்

2. பூண்டு, வெங்காயம் ஏன் சாப்பிடணும்?

ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இவற்றிலுள்ள சல்பைட் சத்து ஜீரண சக்தியைத் தருவதுடன் வயிறு உபாதைகளையும் போக்கும்.

3. தக்காளி, பச்சை திராட்சை ஏன் சாப்பிடணும்?

நுரையீரல் புற்று நோய் நீங்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்படுகின்றது.

4. கேரட், மாம்பழம் ஏன் சாப்பிடணும்?

இவற்றிலுள்ள பீடா கரோடின், ஆல்பா கரோடின் என்னும் ரசாயன சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை.

5. சிவப்பு திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஏன் சாப்பிடணும்?

இருதயப் பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. இதய ரத்தக்குழாயில் ரத்தம் கட்டுவதைத் தடுக்கிறது.

6. ஆரஞ்சு, எலுமிச்சை ஏன் சாப்பிடணும்?

இவையும் புற்றுநோய் உட்பட நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவை. பெண்கள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.

 

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=8406