அற்புதமான எலி ஒன்றை அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் உருவாக்கியுள்ளனர். இநத எலி மறு அவதாரம் எடுக்கக் கூடியது. ஆம். இந்த எலியின் வாலை நறுக்கினால் வால் மீண்டும் வளர்கின்றது. காலை வெட்டினால் அது மூட்டுக்களோடு சேர்ந்து மீண்டும் வளர்கின்றது. இதயத்தை இயங்க விடாமல் உரைய வைத்தால் அது மீண்டு துடிக்கத் தொடங்குகின்றது.

 

இத்தகைய அற்புத எலியின் மறு அவதாரம் எடுக்காத ஒரே உடல் உறுப்பு அதன் மூளை மட்டுமே. அமெரிக்காவின் உயிரிமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் உள்ள விஸ்ட்டர் ஆய்வுக் கழகத்தின் நோய்த் தடுப்புத் துறை பேராசிரியர் எல்லென் ஹீபர் காட்ஸ் அம்மையார் தமது இந்த ஆராய்ச்சி பற்றிக் கூறுகையில் ஏதாவது ஒரு நாள் மனிதர்களுக்கு இந்த உடல் உறுப்பு மறு அவதாரம் எடுக்கும் ஆற்றலை வழங்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார். இந்த நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்?பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலியின் கருவில் உள்ள ஈரல் செல்களை, சாதாரண எலியின் உடம்புக்குள் ஊசி மூலம் செலுத்தும் போது அந்தச் சாதாரண எலிக்கும் உடல் உறுப்பு மீண்டும் வளரும் ஆற்றல் கிடைத்துவிடுவதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இவ்வாறு உறுப்புக்கள் மீண்டும் வளரும் செயல்பாட்டை சுமார் ஒரு டசன் ஜீன்கள், மனிதனிடத்திலும் காணப்படுகின்றது என்கிறார் எல்லென் ஹீபர் அம்மையார். ஆனாலும் இது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முழுமை பெறவில்லை. எலியின் இதயம், கால்கள், வால், காதுகள் போன்ற உடல் உறுப்புக்களை துண்டித்தோ, சேதப்படுத்தியோ பார்த்தோம்.

 

அவை மீண்டும் வளர்ந்தன. அதன் கரு செல்களை ஊசி மூலம் இன்னொரு எலியின் உடம்பில் செலுத்தியபோது அதனுடைய மீண்டும் வளரும் ஆற்றல் ஆறு மாதங்களுக்கு மேலும் நீடித்தது என்றும் எல்லென் ஹீபர் கூறுகிறார். பரிசோதனைக்கு வரும் எலியின் காதில் அடையாளத்திற்காகப் போடப்படும் சிறு துளை கூட தழும்பு கூட இல்லாமல் ஆறிவிட்டதாம். இதற்கு என்ன காரணம்? பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தானாகக் குணமாகும் திறன் பெற்ற எலி எம் ஆர் எல் என்ற மரவுவழியில் வந்தது. இத்தகைய எலிகளிடம் செல்பகுப்பு அதிக வேகத்தில் நடைபெறுகின்றது. அதனுடைய செல்கள் வேகமாக மடிந்து வேகமாகத் திரும்ப வளர்கின்றன. இதனால் தான் மீண்டும் வளரும் திறன் கிடைக்கின்றது என்று சொல்லலாம். ஒரு எலியின் சராசரி ஆயுள் இரண்டு ஆண்டுகள். இப்போது பரிசோதிக்கப்பட்ட எலிக்கு 18 மாதம்தான் ஆகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் உயிர் வாழமானால் இதே மரபணுக்களான ஜீன்கள் நீடித்த ஆயுளைத் தரக் கூடும். அப்படியானால், மனிதர்களுக்கு மரணபயம் இல்லாமல் போகும் அல்லவா?

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.