06032023
Last updateபு, 02 மார் 2022 7pm

சர்ஐசக் பிட்மன்

இன்று உலகெங்கும் உபயோகத்தில் இருக்கும் ஸார்ட்-ஹாண்ட் என்ற சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் சர்ஐசக் பிட்மன் என்ற ஏழை ஆங்கில ஆசிரியர். தனது சுருக்கெழுத்து முறையில் அலுவலகங்களில் வேலை முறைகளில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். அந்த காலத்து ஆண்கள் ஏனோ சுருக்கெழுத்தில் அவவளவாக ஆர்வம் காட்டவில்லை. பெண்கள் ஆர்வமாக இதை படித்ததன் விளைவு பல அலுவலகங்களில் செக்ரட்டரிகளாக மாறிவிட்டார்கள்.

 

ஐசக் பிட்மன் ஒரு எழுத்தாளராகத் தான் தன் வாழ்வைத் தொடங்கினார். பின்னர் தனது சொந்த முயற்சியில் கல்வி கற்று பள்ளியின் ஆசிரியர் ஆனார். அவருக்கு படிப்பின் மேல் மிகுந்த ஆர்வம் இருந்தது.

 

1837-ம் ஆம்டு இது தொடர்பாக புத்தகம் ஒன்றை வெளியிட்டார் பிட்மன். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது ஆசிரியப் பணியை கைவிட்டார். சுருக்கெழுத்து உடனே அவருக்கு வாழ்வை வாரி வழஹ்கிவிடவில்லை. வேலையை விட்டபின் 20 வருடங்கள் எவ்வித நிரந்தர வருவாயும் இன்றி உழைத்தார். ஒரு ஷில்லிங் பணத்துக்காக யாருக்கு வேண்டுமானாலும் தனது சுருக்கெழுத்தை போதிக் கத்தயாராய் இருந்தார்.

 

1897-ல் இவர் இற்குகம் போது இவரது புகழ் உலகம் முழுவதும் பரவி இருந்தது. உலகின் பல நாடுகளஇல் பிட் மனின் சுருக்கெழுத்து முறையே நடைமுறையில் உள்ளது. சில நாடுகளில் தங்களுக்கென்று தனியாக சில முறைகளை வைத்திருந்தாலும் பிட்மனின் முறைக்கு அழிவேயில்லை.

 

http://tamil.cri.cn/1/2005/10/18/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.