03232023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

எலி மரபணுக்களின் மீதான ஆய்வு

எலிகளுக்கோ உடம்பெல்லாம் மயிர். நமக்கோ உடம்பில் அவ்வளவாக அடர்த்தியான மயிர் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் மரபணு ஒற்றுமை மட்டும் இருப்பது அறிவியல் அறிஞர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. மரபணு ஒற்றுமை இருப்பதால், எலிகளும் நோய்க் கூறுகளைக் காட்டுகின்றன. மேலும் எலிகளின் மரபணு அமைப்பை உருவாக்கும் 20000 ஜீன்கள் ஒவ்வென்றும் வரிசைப்படுத்தப்பட்டு விட்டன. எலிகள் மற்றும் மனிதர்களின் மரபழுக்களின் டி என் ஏ வரிசை மட்டுமே இதுவரை இவ்வளவு துல்லியமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சரி, இந்த யூரோமவுஸ் திட்டம் எவ்வாறு நிறை வேற்றப்படும்?

 

யூரோமவுஸ் திட்டத்தின் கீழ் BLACK-6 எனப்படும் எலியின் மரபணு பயன்படுத்தப்படுகிறது. இந்த BLACK-6 எலிகளின் கருவை, விந்ஞானிகள் வெளியே எடுத்து, அதில் உள்ள ஒரு ஜீனை சிதைத்து அல்லது திருத்தி, பிறகு மரபணு திருத்தப்பட்ட கருவை திரும்பவும் கருப்பைக்குள் வைத்து புதிய எலிவகையை உருவாக்குவார்கள். அவை ஒவ்வொன்றிலும் சிதைக்கப்பட்ட ஒற்றை மரபணு மட்டுமே இருக்கும். இதே முறைப்படி எலியின் 20000 ஜீன்களும் சிதைக்கப்படும். கடைசியில், ஒவ்வொன்றும் வித்தயாசமான, சிதைக்கப்பட்ட ஜீனைக் கொண்ட, எலியின் 20000 ஜீன்கள் கிடைக்கும். இவ்வாறு மரபணு சிதைக்கப்படுவதால், எலியின் தோற்றத்திலும் பழக்கவழக்கங்களிலும் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது ஆராயப்படும். இவ்வாறாக எலியின் ஒவ்வொரு ஜீனும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து, அதிலிருந்து, அதற்கு நிகரான மனித ஜீன் என்ன செய்கிறது என்பதைக் கண்டறிவார்கள். அதே வேளையில், வெவ்வேறு மரபணு சேர்க்கைகளினால், வெவ்வேறு மனிதர்களிடம் என்ன விளைவு உண்டாகிறது என்பதையும் விஞ்ஞானிகள் அறிய விரும்புகின்றனர். ஏனென்றால் மனிதர்களைப் பாதிக்கும் முக்கிய நோய்கள் ஒற்றை ஜீனால் ஏற்படுவதில்லை. ஜீன்களில் குழுக்களால் சேர்க்கையால் உண்டாகின்றன. மேலும், சுற்றுச்சூழல் காரணங்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

 

ஆகவே, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகளை உருவாக்குவதற்கு எலி ஆராய்ச்சி மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. இப்போது தான் எலியின் ஆய்வில் இருந்து நம்மைப்பற்றிக் கற்கத் தொடங்கியுள்ளோம். பாஸ்ட்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஒரு எலியின் மீது மனித செவியை வளர்த்துள்ளனர். இதனால் அந்தப் பெருச்சாலிக்கு மாதகம் எதுவும் ஏற்பட வில்லை. இதே நூட்பத்தைப் பயன்படுத்தி, மனிதர்களுக்காக மூக்குகளையும், செவிகளையும் மீண்டும் வளர்ப்பதே இதன் நோக்கம்.

 

சரி, எலியைப் பற்றி சில குட்டித் தகவல்களை தெரிந்து கொள்ளலாமா?

 

ஆண்எலி, எப்போதுமே தனது குஞ்சுகளை அன்போடு அரவணைத்துக் கொள்ளுமாம். தந்தை எலியின் இதமான அரவணைப்பில் உள்ள குஞ்சு எலிகளுக்கு தாய் எலிபாலூட்டுமாம்.

 

எலிகள் ஒரு தடவையில் 6 முதல் 12 குஞ்சுகளைப் பெற்றெடுக்கும். நல்ல ஆரோக்கியமான எலியாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் பிரசவிக்கும்.

 

பிரிட்டனில் கடந்த ஆண்டில் பிராணிகள் மீது 27 லட்சத்து 90000 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவ்வற்றில் 85 விழுக்காடு பரிசோதனைகள் எலிகளின் மீது நடத்தப்பட்டுள்ளன.

 

http://tamil.cri.cn/1/2005/11/29/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.