தாவரங்களைப் பயன்படுத்தி மாசுக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற முடியுமா என்ற ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில், சீன ஆய்வாளர் குழு ஒன்று மரபணு திருத்தப்படும்—அதாவது Genetically modified தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உலோகமாசைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

 

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் உயிரியல் கல்லூரி பேராசிரியர் Ru Bing Gen தலைமையிலான அறிவியல் அறிஞர்கள், மரபணு திருத்தப்பட்ட புகையிலையையும், கடற்பாசியையும் பயன்படுத்தி, மண்ணிலும், தண்ணீரிலும் பாதரசம் போன்ற கனமான உலோகங்களினால் ஏற்படும் நச்சுத்தன்மையை நீக்க முடியும் என்று கூறுகின்றனர்.

 

மனிதர்கள் மற்றும் இதர பாலூட்டிகளின் ஈரலில் உற்பத்தியாக்க கூடிய Metallothonein என்னும் புரதம், கனரக உலோகங்களை வெகு எளிதில் கரைத்து விடுகிறது.

 

எலியிடம் இருந்து எடுக்கப்பட்ட இந்த மரபணுவை புகையிலை மற்றும் கடற்மாசிக்குள் செலுத்தி, அந்தத் தாவரங்களில் Metallothonein புரதத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதை Ru Bing Gen தலைமையிலான ஆய்வாளர்கள் நிலை நாட்டியுள்ளனர். இதே போன்ற மரபணுவை அரிசி ரகத்துக்குள் செலுத்தி, அரிசியின் மரபணுவை திருத்தினால், அந்த நெல்நாற்று மண்ணிலும் நீரிலும் கலந்துள்ள கனரக உலோக மாசுவைக் கிரசித்துக் கொள்ளுமாம்.

 

ஆனால், இப்படி கிரசிக்கப்படும் உலோக மாசு அரிசியில் பிரதிபலிக்காதாம். இந்த கண்டுபிடிப்பு இன்னும் பெரிய அளவில் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட வில்லை.

 

இதற்கிடையில், இறால் பண்ணை போன்ற கடல்பண்ணைகளால் உருவாகக் கூடிய நீர்மாசை அகற்ற Evch Evma என்னும் நீர்த்தாவரம் ஒன்றை வளர்க்கும் முயற்சியில் ச்சிந்தேள நகரில் உள்ள சியா மேன் பல்கலைக்கழக விஞ்ஞானி Nian Zhi ஈடுபட்டுள்ளார்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.