09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஆதிமனிதன் இறத்தது எவ்வாறு

ஆதிகால மனிதன் எவ்வாறு இறந்தான்?பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன்றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்குமனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீ.ருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர்.

 

டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924யில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோதான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூசித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக்கொல்லவில்லை. ஒரு பெரிய பறவை தான். வேட்டையாடிக் கொன்றது என்று பத்தாண்டுகளுக்கு முன்பு லீ பெர்ஜர், தமது சக ஆராய்ச்சியாளர் ரோன் கிளர்க்குடன் சேர்ந்து நிரூபித்தார். ஆதிமனிதனின் புதைபடிவுகள் கிடைத்த இடத்தில் இருந்த சிறிய குரங்குகளின் புதைபடிவுகளில் இருந்து அவை பறவையைல் தான் கொல்லப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டது. ஆகவே குரங்கு போன்று இருந்த ஆதிமனிதனும் பறவையால் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர். ஆனால் பறவை தாக்கிதான் ஆதிமனிதன் இறந்தான் என்பதை, அவனுடைய மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதம் மூலம் இவர்களால் நிரூபிக்க முடியாமல் இருந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் கழுகுகள், ஆதிமனிதனை வேட்டையாடிய பறவை போல் இருப்பதை எடுத்துக்காட்டும் ஓஹேயோ அரசினர் பலகலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை லீ பெர்ஜர் படித்தார். கழுகுகள் மேலே இருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து, தங்களது கூரிய கால்விரல்களால் குரங்குகளின் மண்டை ஓட்டை குத்திக்கிழிப்பதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்ததில், கண் துளைளுக்குப் பின்னால், ஒரே மாதிரியான துளைகளும், வெட்டுக்களும் தெரிந்தன. இதைப்படித்த பெர்ஜர் டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண்துளைகளுக்குப் பின்னால் வெட்டுக்காயம் ஏற்பட்ட சேதம் தெரிந்தது. ஆகவே, ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது.

 

http://tamil.cri.cn/1/2006/02/06/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.