03242023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கொழுப்பை குறைக்க எரிப்பு சிகிச்சை

உடம்பில் சேர்ந்து விட்ட அளவுக்கு அதிகமான கொழுப்பை நெருப்பில் வாட்டி குறைக்கும் ஒரு புதுமையான சிகிச்சை முறை ஹாங்காங்கில் செய்யப்படுகிறது. வெப்பத்தின் மூலம் குணப்படுத்துவது என்பது சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் சுமார் 2000-3000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலை நாடுகளில் கூட, உடம்பை ஒல்லியாக்குவதற்காக, சூடான களி மண் அல்லது சாக்லேட்டை உடம்பில் பூசி கட்டிவைக்கிறார்கள்.

 

ஆனால், உடம்பை எரிப்பது என்பது, புதுமையான சிகிச்சை முறை என்கிறார் ஹாங்காங்கில் உள்ள The life of life heating Spa என்னும் அழகுமையத்தின் உரிமையாளர் KAREN CHU முதலில் பெய்ச்சிங்கில் தான் இந்த சிகிச்சை பயன்படுத்தப்பட்டதாம். ராணுவ மருத்துவமனைகளில் தசை வலி கண்ட படைவீரர்களுக்கு இந்த உடம்பு எரிப்பு சிகிச்சை தரப்பட்டது. கொழுப்புச் சத்தைக் குறைப்பதற்கான 90 நிமிட சிகிச்சையின் துவக்கத்தில் உடம்பு முழுவதும் நன்றாகத் தேய்த்து, Spa எனப்படும் ஆவிக்குளியல் தரப்படுகிறது.

 

பிறகு, புரோட்டா மாவு பிசைவது போல கொழுப்புச் சேர்ந்துள்ள வயிறு, பிருஷ்டம் போன்றபாகங்கா பிசையப்படுகின்றன. தோலில் மூலிகை மருந்துகள் கலந்த களிம்பு பூசிப்படுகிறது. இந்தக் களிம்பில் எருமைக்கொம்பு பொடி, சீன ஆஞ்செலிகா, வின்செங், கம்பளிப்பூச்சி காளான் போன்ற மருந்துகள் கலந்துள்ளன. பிறகு வயிற்றைச் சுற்றிலும் செல்லோபோன் டேப் சுற்றப்பட்டு, அதன் மீது இரண்டு பெரிய ஈரமான துவாலைகளைச் சுற்றுகிறார்கள். துவாலை மீது எரிசாராயத்தை தெளிந்து, தீவைத்து விடுவிறார்கள். வயிற்றைச் சுற்றிலும் தீ கொழுந்து விட்டு எரிந்து, உடம்புக் கொழுப்பை குறைப்பதை படுத்தபடியே நாம்பார்க்கலாம் பயப்படாமல் இவ்வாறு ஒன்றரை நிமிடத்திற்கு அல்லது சூட்டை உடம்பு தாங்கும் வளர தீ எரிக்கப்படுகிறது. நீண்ட நேரம் தீ எரியுமானால் நல்ல பலன் கிடைக்குமாம், தீ எரியத்தொடங்கியதும் முதலில் வெப்பமே தெரிவதில்லை. பிறகு, உடம்பைச் சுற்றியுள்ள ஈரமான துவாலை சூடாகி, செக்கச் செவேல் என்று எரியும் போது தான் நமது உடம்பு சூட்டை உணர்கிறது. சிகிச்சை முடிந்து துவாலையை அகற்றினால் கொப்புளமோ, தாயமோ இல்லை. வயிறு மட்டும் லேசாக சிவப்பாக இருக்கிறது. கொஞ்சம் வலியும் இருந்தது. ஆனால், 90 நிமிட சிகிச்சையில் 11 சென்டிமீட்டர் கொழுப்பு குறைந்து விட்டது. இவ்வாறு எரிக்கப்படும் கொழுப்பு எங்கே போகிறது? கொழுப்பு உருகி, நிண் நீர் சுரப்பி மூலம் வெளியேறி விடுகிறது என்கிறார் மருத்துவர்.

 

http://tamil.cri.cn/1/2006/02/20/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.